KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. குதர்க்கமும் நானே, குழப்பமும் நானே!

2. 1...2..3...ஷாக்! (அத்தியாயம்-1)

3. 1...2...3...ஷாக்! (அத்தியாயம்-2)

4. “நல்ல வேளை... என்னை இந்திய அரசு கைது செய்யவில்லை!”

5. அறுபது கொண்டாடுகிறது இந்தியா!

6. கனவு காணுங்கள்!

7. அறிந்தும் அறியாமலும்..! (16)

8. அறிந்தும் அறியாமலும்..! (17)

9. அறிந்தும் அறியாமலும்..! (18)

10. அறிந்தும் அறியாமலும்..! (19)

11. அறிந்தும் அறியாமலும்..! (20)

12. அறிந்தும் அறியாமலும்..! (21)

13. அறிந்தும் அறியாமலும்..! (22)

***********

தொலைந்து போனவன்: பாஸ்கர் சக்தி

ஏப்ரல் 06 இதழ்

மே 06 இதழ்

ஜூன் 06 இதழ்

ஜூலை 06 இதழ்

செப்டம்பர் 06 இதழ்

நவம்பர் 06 இதழ்

ஜனவரி 07 இதழ்

ஜூன் 07 இதழ்

ஜூலை 07 இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: [email protected]
hotmail.com
கட்டுரை
ஞாநி

அறிந்தும் அறியாமலும்..! (20)

இந்தத் தொடரின் தொடக்கத்தில் சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டு ஒரு கேள்வியை எழுப்பியிருந்தோம். அந்தக் கேள்விக்கான பதிலைத் தான் இனி தேடப் போகிறோம். அந்த நிகழ்ச்சிகள் என்ன? அந்தக் கேள்வி என்ன? நினைவுபடுத்திக்கொள்வோமா?

கிரிக்கெட் மட்டை வாங்கித் தர மறுத்த அப்பாவைக் கொன்றான் மகன்; ‘என்னை விபசாரத்தில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்திய என் அப்பா, அம்மா மீது நடவடிக்கை எடுங்கள்’ என்று கோரினார் இளம் நடிகை; கின்னஸ் சாதனை செய்வதற்குத் தனக்குப் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று தற்கொலை செய்துகொண்டான் ஒரு சிறுவன். இந்த நிகழ்ச்சிகள் உணர்த்துவது என்ன?

17 வயதுப் பெண்ணுக்கு முகமெல்லாம் பரு. ‘காரணம், அவளுக்கு ஏதோ ஆண் சகவாசம் இருப்பதுதான். எனவே, படிப்பே தேவையில்லை’ என்று தன் மகளைக் கல்லூரியிலிருந்து நிறுத்திய அப்பாவை உங்களுக்குத் தெரியுமா?

சொந்த மகளைத் தன் இச்சைக்கு இணங்கக் கட்டாயப்படுத்தும் அப்பாவிடம் இருந்து மகளைக் காப்பாற்றப் போராடிக்கொண்டு இருக்கும் அம்மாவை உங்களுக்குத் தெரியுமா?

மாயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அறிவுக் கூர்மையும் அபிலாஷைகளும் நிரம்பிய கல்லூரி மாணவி. வயது 19. அவளுடைய பிரச்னை என்ன? கேரியர் கைடன்ஸிக்காக அவள் சந்தித்த ஓர் 50 வயது உயர்அதிகாரியுடன் ஏற்பட்ட நட்பை, அவர் படுக்கையில் கொண்டு போய் முடித்தார். ஏற்கெனவே திருமணமான அந்த அதிகாரிக்கு, இப்போது மாயா அலுத்துவிட்டது. கேரியர் கைடன்ஸ் தேடும் இன்னொரு பெண் அவருக்குக் கிடைத்துவிட்டாள். ஆனால், மாயாவால் அவரை மறக்கவும் பிரியவும் முடியவில்லை. மாயாவுக்கு இது ஏன் நடந்தது? அவளுக்கான தீர்வுதான் என்ன?

இது போல், இன்னொரு வீட்டில் இப்போது துள்ளித் திரிகிற 5 வயது சாயாவுக்கு நாளை மாயாவின் நிலை வராமல் இருக்கவும், நம் வீட்டு 20 வயது அழகேசன் நாளை அந்த உயர் அதிகாரி போல் ஆகாமல் இருக்கவும், தடுப்பு மருந்து ஏதும் உண்டா? உண்டு!

அதுதான் வாழ்க்கைக் கல்வியின் பத்துக் கட்டளைகள்!

நுட்பமும், ஆழமும், விரிவும் நிரம்பிய அந்தப் பத்துக் கட்டளைகளைச் சற்றே எளிமைப்படுத்திப் பட்டியலிடுவோமா?

இன்னொரு முறை இந்தப் பத்துக் கட்டளைகளையும் படித்துப் பாருங்கள்.

இவை வாழ்க்கையில் பெட்ரூம் முதல் போர்டு ரூம் வரை தொடர்ந்து பயன்படக் கூடியவை என்பது புரியும். இவை உணர்த்தும் பத்து ஆற்றல்கள்தான், வாழ்க்கைக் கல்வியின் ஆதாரமான அடிக்கல்கள்.

முதல் நான்கு கட்டளைகளை (self awareness, inter personal relation ships,effective communication,empathy) சமூகம் சார்ந்த திறன்கள் (social skills) என்று வகைப்படுத்துகிறோம்.

அடுத்த நான்கும் (critical thinking, creative thinking, problem solving, decision making) சிந்திக்கும் ஆற்றல் (thinking skills) தொடர்பானவை.

கடைசி இரண்டும் (coping with stress, coping with emotions) சூழலுக்கு ஈடுகொடுத்துத் தாக்குப்பிடிக்கும் ஆற்றல் (negotiating skills) தொடர்பானவை. இவை எல்லா மனிதர்களுக்கும், எப்போதும் தேவையானவை. ஆனால், இவற்றை வளர்த்துக் கொள்வது திடீரென்று ஓரிரவில் செய்துவிடக்கூடிய விஷயம் அல்ல. குழந்தைப் பருவத்திலிருந்தே இவற் றைப் பழகவும், பழக்கவும் வேண்டும்.

இது எதுவும் புதுமையானதோ, அந்நியமானதோ அல்ல. ஏற்கெனவே நாம் கையாண்டு வருபவைதான். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், தினசரி நடவடிக்கைகளில் இவற்றை நாம் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம் என்பது தெரியும். சில சமயம் சரியாகவும், சில சமயம் தவறாகவும், பல சமயம் அரைகுறையாகவும் பயன்படுத்திக் கொண்டு இருக்கக்கூடும்.

குழந்தைகளுக்கு இவற்றைச் சொல்லித் தருவது எப்படி? பெற்றோர்கள் வீட்டில் அன்றாடம் ஒவ்வொரு நடவடிக்கையின்போதும், இவற்றை அவர்களுக்கு உணர்த்தலாம். ஆசிரியர்கள், மாணவர்களிடம் குழுக் குழுக்களாக பயிலரங்குகளில் விதவிதமான விளையாட்டுகள் மூலம் கற்றுத் தர முடியும்.

ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போம். ஓர் ஆடு கடும் வெயிலில் நிழலும் உணவும் தேடித் திரிந்தது. வழியில் இன்னொரு ஆடு தன்னைப் போலவே பசியில் சோர்ந்து படுத்துக் கிடந்ததைப் பார்த்தது. இரண்டுமாக சேர்ந்து இரை தேடுவோம் என்று பேசிக்கொண்டு புறப்பட்டன. ஒரு மரத்தில் உண்ணு வதற்கான இலைகள் இருந்தன. ஆனால் எட்டவில்லை. கீழிருந்த ஒரு பெரிய கல்லைப் பார்த்த ஆடு, அதில் ஏறி எம்பிப் பார்த்தது. அப்போதும் எட்டவில்லை. இன்னொரு ஆடு தன் மீது ஏறி நின்று, இலையைத் தின்னச் சொல்லியது. அதன்படி ஒரு ஆடு தின்று முடித்ததும், அது மற்ற ஆட்டுக்கு தன் முதுகைக் காட்டி உதவியது. இரு ஆடுகளும் பசி தணிந்து மகிழ்ச்சியடைந்தன.

இந்தக் கதையில் ஆடுகள் வாழ்க்கைக் கல்வித் திறன்களை அற்புதமாகப் பயன்படுத்தியிருப்பதைக் கவனியுங்கள்.

தனக்குப் பசிக்கிறது; உணவும் நிழலும் தேவை என்பது தன் தேவையை உணர்ந்த நிலை. இன் னொரு ஆடும் தன்னைப் போலவே பசியில் இருக்கிறது என்பதைக் கவனித்தது ‘எம்ப்பதி’. அத்துடன் உறவாட ஆரம்பித்தது ‘இன்டர் பர்சனல் ரிலேஷன்ஷிப்’. இருவருமாக இரை தேடலாம் என்ற கருத்தைப் பகிர்ந்துகொண்டது ‘கம்யூனிகேஷன்’. மரத்தில் இலைகள் எட்டாமல் இருந்தது ‘பிராப்ளம்’. அதை அவிழ்க்க முதலில் யோசித்தது ‘க்ரிட்டிகல் திங்க்கிங்’. கல்லையும், பின்பு ஒன்றின் முதுகை மற்றதும் பயன்படுத்தியது ‘க்ரியேட்டிவ் திங்க்கிங்’. விளைவுதான் ‘பிராப்ளம் சால்விங்’. உணவும் நிழலும் கிடைக்காமல் அலைந்ததில் ஏற்பட்ட மன அழுத்தத்தை லேசாக்கிக்கொள்ளவும், வருத்த உணர்ச்சியைக் கையாளவும் தவறியிருந்தால், இவை எதுவும் சாத்தியம் இல்லை.

ஆடுகளைவிட எக்ஸ்ட்ராவாக அறிவும் ஆற்றலும் உள்ள நாம் எத்தனை அற்புதமாக வாழ முடியும்!

நான் யார் என்று உணர்வதுதான் முதல் படி.

நான் என்பது என் உடல். என் உள்ளம். இரண்டையும் எப்படி உணர்வது?