Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
அணங்கு
Bookmark and Share


அரச பயங்கரவாதம், அறிவு பயங்கரவாதம், அமைதியின் பயங்கரவாதம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 

இறுதி யுத்தத்தில் இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாதத்தால் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையின் கொடூரத்தை அவ்வப்போது சிறுசிறு அடையாள போராட்டங்கள் மட்டும் நடத்தியும் மௌனமாகவும் கடந்து வந்துவிட்ட தமிழ் பேசும் இந்தியர்களின் ஈழத் தமிழர்களின் மீதான ரத்த பாசத்தையும் நாடகங்களையும் சண்டைக் காட்சிகளையும் பார்த்துக் கொண்டிருந்தோம். ஈழ உறவுகளின் துயரனைத்தும் என் தலைமுறையின் மீதான மொத்த பழியாக என் மேல் சுமத்தப்பட்டு கழுவேற்றப்பட்டவளாக உணர்கிறேன்.

Bookmark and Share
விரிவு...
 

சிறைப்பட்டிருத்தல்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

இரவில் ஒரு சின்னச் சத்தங்கேட்டாலும் நெஞ்சு விறைக்கத் தொடங்கிடும். இப்ப இருக்கிற நிலையில பயப்பிடாமலுக்கு இருக்கேலுமே? என்னவும் நடக்கலாம். ஆர் கேக்கிறது? ஒவ்வொரு கட்டத்திலயும் தப்பி வந்து கடைசியில ஏதோவொரு கட்டத் துக்குள் சிக்கிச் சீரழிஞ்சிடுவனோ ஆருக்குத் தெரியும்? எந்தப் பக்கந் திரும்பினாலும் தடுப்புகள். அந்தத் தடுப்புகளுக்குள்ளால தான் திரிய விதிக்கப்பட்டவளாய் நான். எவனின்ரை பார்வையும் பிடிச்சு விழுங்கிற மாதிரித்தான் இருக்கு. அம்மா கொஞ்சம் பெருமப்பட்டுத்தான் சொல்லுவாள். எண்பத்தேழாமாண்டில சனமெல்லாம் இடம்பெயர நானும் பிள்ளையும் தனிச்சிருந் தனாங்கள். அவங்களால எந்தக் கரைச்சலு மில்லை. அவங்கள் தங்கடை பாடு. நாங்கள் எங்கடைபாடுஅப்ப நான் ஆறு வயதும் நிரம்பாத சிறுமி. ஆனால் இப்ப.... பாக்கிறவை யெல்லாம் அம்மாவிடம் உன்ர மகள் ஒரு வாகனம் மாதிரி வந்திட்டாள்என்கினம். மற்றது அப்ப இருந்த மாதிரியில்ல இப்போ தைய நிலமை. பாக்கிற பார்வை யிலேயே பிடிச்சு விழுங்கியிடுவாங்கள் போலயிருக்கு.

Bookmark and Share
விரிவு...
 

வீழ்ந்து போனதொரு தேசம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

வரலாறு எம்மைச் சுற்றி தன்னை நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது. அலையலையாய்ப் படிவுண்ட அதன் பக்கங்களுக்குள் ஒரு மீள முடியாத் துயரத்தின் சாட்சியாய் நாம் விசனித்திருக்கிறோம். ஒரு தேசம் தூர்ந்துகொண்டிருக்கிறது, எமதனைவரின் கனவுகளினூடு. தொடர்ந்தும் வரலாறு இந்தத் தருணத்தை எழுதிக்கொண்டிருக்கிறது. நாமனைவரும் எழுதிக்கொண்டிருக்கிறோம். இணையத்தின் மின்னதிர்வுகளின் வழி, பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானலைகள், தொலைக்காட்சிகளினூடு: சரி, பிழைகள் அலசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏமாற்றம், தோல்வி, கோபம், சந்தோஷம், கெக்கலிப்பு எல்லாவிதமான உணர்வுகளும் அரசியல் ஆய்வுகளினூடு வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்வதற்கு ஏதேனும் மீதமிருக்கிறதா என்ன? அரசியற் கட்டுரைகள் ஒரு மர்மத்தைத் துப்பறியும் ஆர்வத்துடனும், சுவாரசியத்துடனும் இந்த வீழ்ச்சியை ஆராய்கின்றன, சம்பவங்களை பட்டியலிடுகின்றன. இறந்து, தொலைந்து போனவர்கள், காயப்பட்டவர்கள் முகாம்களிலிருப்பவர்களைக் கணக்கிடுகின்றன. துப்பறியும் தொடரொன்றின் தவிர்க்க முடியா வாசகர்கள் போல பிறிதனைவரும் படபடப்புடன் பின்தொடர்கின்றனர். இதொரு தீவிர நம்பிக்கையின் வீழ்ச்சி; எங்களுக்கானதொரு தேசம் பற்றிய கனவொன்று எங்கள் முன் கலைந்து கொண்டிருக்கிறது. வரலாறு அதன் மர்மங்களுடன் எப்போதும் போல கடந்து கொண்டிருக்கிறது மிக மிக அமைதியாக எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல்.

Bookmark and Share
விரிவு...
 


பக்கம் 1 - 5

அதிகம் பேர் படித்தது


தொடர்புடைய படைப்புகள்


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.anangu.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

http://thamizhdesam.keetru.com/

http://kannottam.keetru.com/

Aganazhigai

மேலும்...


About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Google chrome, Windows 2000/XP