ஆந்திராவை இரண்டாகப் பிரித்து, தெலங்கானா மாநிலத்தை உருவாக்க மத்திய அரசு கொள்கை அளவில் இசைந்திருக்கும் வேளையிலும், அது தொடர்பான சிக்கல்கள் இன்னும் நிறையவே இருக்கின்றன.
இன்றைய ஆந்திர மாநிலத்தில் ஆந்திரம், தெலங்கானா, ராயலசீமா ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன. பேசும்மொழியால், பண்பாட்டுப் பொதுமையினால் அவை மூன்றும் ஒத்த போக்குடையவைகளே. எனவே தெலங்கானா தனி மாநிலப் போராட்டம், தேசிய இனப் போராட்டம் அன்று. எனினும் தெலங்கானா பகுதி பிற பகுதியினரின் பொருளாதாரச் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளது என்பதும், ரெட்டியார், தேஷ்முக் போன்ற ஆதிக்க சாதியினரின் பிடியில் உள்ளது என்பதும் உண்மை.






