கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
ஜப்பானில் உள்ள BSI-TOYOTA Collaboration Center (BTCC) அண்மையில் ஒரு சக்கர நாற்காலியை உருவாக்கியுள்ளது. இந்த சக்கர நாற்காலியின் இயக்கத்தை மூளையின் அதிர்வலைகளைக் கொண்டே கட்டுப்படுத்த இயலும். மூளை தன்னுடைய கட்டளைகளை மின் துடிப்புகளாக வெளியிடுகிறது. இந்த மின் துடிப்புகள் வலிமை குறைந்தவை. மைக்ரோ வோல்ட்டுகளில் இவை அளக்கப்படுகின்றன. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் டார்ச் செல்லின் மின் அழுத்த வலிமை 1.5 வோல்ட். ஒரு மைக்ரான் என்பது ஆயிரத்தில் ஒரு பங்கு ஆகும். 125 மில்லி செகண்டுகளே நீடிக்கக்கூடிய மூளையின் அதிர்வுகள் கூட இந்த சக்கரநாற்காலியின் இயக்கத்தை கட்டுப்படுத்துமாம்.
மூளை-இயந்திர ஒருங்கிணைப்பு (brain-machine interface) துறையில் அண்மைக்காலமாக விரிவான ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. முதியோர்களும் உடல் ஊனமுற்றோரும் பிறரை உதவிக்கு அழைக்காமலேயே தங்களுடைய சக்கர நாற்காலியை கட்டுப்படுத்தி இந்த உலகத்துடன் உறவாட இந்த ஆய்வுகள் வழிசெய்கின்றன.
தற்போது உபயோகத்தில் இருக்கும் சக்கரநாற்காலிகள் மூளையின் அதிர்வுகளை ஏற்று செயல்பட சில வினாடிகள் எடுத்துக்கொள்ளும். ஆனால் இந்த புதிய சக்கரநாற்காலியில் blind signal separation, space-time-frequency filtering technology ஆகிய இரண்டு தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. ஒரு கூட்டு அதிர்வு பல்வேறு அதிர்வுக்கூறுகளாக பிரித்தறியப்படுகிறது. இதனால் மூளையின் கட்டளைகள் 125 மில்லிசெகண்டுநேரத்திலேயே உணர்ந்துகொள்ளப்படும். மண்டையின் மேல்தோலில் மின்வாய்களைப் பொருத்தி மூளையின் மின் தூண்டல்கள் ஏற்கப்படுகிறது. சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பவர் தன்னுடைய மூளை அதிர்வுகளை ஒரு மின்னணுப்பலகையில் அவரே காணமுடியும். காலப்போக்கில் உபயோகிப்பாளரின் பழக்கவழக்கங்களை இந்த கருவி உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ப செயல்படுகிறது என்பது வியப்பான செய்தி. 95 சதவீதம் துல்லியமான இந்த சக்கரநாற்காலி முன்னோக்கிச் செல்லுதல், வலதுபுறம் திரும்புதல், இடதுபுறம் திரும்புதல் ஆகிய இயக்கங்களை விரைவாகச் செய்கிறது.
ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட மின் தூண்டல்களின் உதவியால் கை கால் இயக்கங்கள் சார்ந்த கட்டளைகளை நிறைவேற்ற மட்டுமே இந்த சக்கரநாற்காலி தற்போது பயன்பட்டு வருகிறது. காலப்போக்கில் மூளையின் உணர்ச்சிகளையும் அதனால் வெளியிடப்படும் அதிர்வலைகளையும் உணரும் வகையில் இந்த சக்கரநாற்காலியில் வடிவமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். மருத்துவத்துறையையும் செவிலியர் பணியையும் ஒருங்கிணைத்து இந்த சக்கரநாற்காலி ஏற்கக்கூடிய கட்டளைகளை விரிவுபடுத்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
தூரத்தையும் காலத்தையும் கணிக்கும் மூளையின் திறன் அபாரமானது. எதிரே வரும் வண்டியின் தூரத்தையும் அது நம்மை அடைய எடுத்துக்கொள்ளக்கூடிய காலத்தையும் நமது மூளை வெகுவிரைவில் கணக்கீடு செய்து கொள்கிறது. அதற்கேற்ப நாம் வழியில் இருந்து ஒதுங்கிக்கொள்கிறோம். தூரம், காலம் இவையனைத்தும் தகுந்த மின்வாய்கள் மூலம் பிரித்தறியப்படுவதால் இந்த சக்கர நாற்காலியின் செயல்பாடு இதுவரை எந்தக் கருவியாலும் எட்டப்படாத 95 சதவீதம் துல்லியமானது.
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/06/090629101848.htm
தகவல்:மு.குருமூர்த்தி (
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்
இலைகளில் இயற்கையாக நடக்கும் ஒளிச்சேர்க்கையைப் பார்க்கும்போதெல்லாம் வேதியியல் வல்லுநர்களுக்குப் பொறாமையாக இருக்குமாம். ஓரறிவுகூட இல்லாத பயிரினங்கள் மிகச் சுலபமாக காற்றிலுள்ள கரியமில வாயுவை - நுரைப்பஞ்சு தண்ணீரை உறிஞ்சுவது மாதிரி உறிஞ்சி - அவற்றை சக்கரையாக மாற்றிக் கொள்வதைக் கண்டு அவர்களுக்கு வியப்பும் பொறாமையும்.
இயற்கையைக் காப்பி அடிக்கும் கலைக்கு பயோ மிமிக்ரி என்று பெயர். நேனோ டெக்னாலஜிபோல பயோ மிமிக்ரி அல்லது பயோ மிமட்டிக்ஸ் என்ற அறிவியல் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த யூகென் ஷாங் மற்றும் ஜாக்கி யின் என்போர் இலைகளின் ஒளிச்சேர்க்கையின் அடிப்படையில் காற்றிலுள்ள கரியமில வாயுவைத் திரட்டி மீத்தேன் என்கிற எரிவாயுவை (சாண எரிவாயு- வாகனங்களுன்கும் சமையலுக்கும் பயன்படுத்தலாம்) தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.
இவர்கள் கண்டுபிடிப்பில் மையமானது ஹெட்டிரோ சைக்ளிக் கார்பீன் என்ற கிரியா வூக்கியும் ஹைட்ரோ சிலேன் என்ற ஆர்கனோ சிலிக்கான் வகை ஆக்ஸி தணிப்பியுமாகும். கிட்டத்தட்ட கிரியாவூக்கியும் ஆக்ஸிதணிப்பியும் இலைகளின் ஒளிச்சேர்க்கை திட்டத்தை ஒத்தே செயல்படுகின்றன. இந்த செய்தியைக் கேட்டதும் ஒரு மன நிம்மதி கிடைக்கிறது. சீக்கிரமே மனிதன் மாசுபடுத்தாத எரிசக்தியை அடைந்து விடுவான் என்ற நம்பிக்கைதான் காரணம்.
- முனைவர். க. மணி (
பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
ஓர் ஆண்டில் இந்தியாவில் மட்டுமே 2 ஆயிரம் டன் பாதரசம் உலகின் வெவ்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உலகில் இன்று பயன்படுத்தப்படும் வெவ்வேறு விதமான 3 ஆயிரத்தும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்க பாதரசம் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. ஆனால் பாதரசம் ஏற்படுத்தும் பாதிப்புகள் சுற்றுச் சூழலில் மட்டுமல்ல, உடல் நலனிலும் தலைமுறை தலைமுறையாய் தொடர்பவை ஆகும் என்பது வேதனைக்குரிய உண்மை ஆகும்.
நீர்ம நிலையில் உள்ள ஒரே கன உலோகம் பாதரசம் ஆகும். பாதரசம் வெண்மை நிறமுள்ளதாக இருக்கின்றது. இது இங்குலிகத்தாதுவில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தூய்மையாக்கப்படுகிறது. இது பளுமானி, அழுத்தமானி, தெர்மாமீட்டர் ஆகியவற்றால் நீர்மமாக நிரப்பப்படுகின்றது. பூச்சி மருந்துகள், எலக்ட்ரானிக் உபகரணங்கள், பல்புகள் ஆகியவற்றின் உற்பத்தியில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது.
பாதரசம் பல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மெர்க்குரிக் அயோடைடு, தோல் நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மெர்க்குரிக் குளோரைடு கரைசலுடன் பொட்டாசியம் அயோடைடை சேர்க்க மெர்க்குரிக் அயோடைடு உருவாகின்றன.
பாதரசம் புற ஊதாக்கதிரின் மூலமாக செயல்படுகின்றது. பாதரச ஆவி விளக்கின் குமிழில் உள்ள பாதரச ஆவியில் மின்சாரத்தைச் செலுத்த நீல நிற ஓளியைத் தருகின்றது. இந்த விளக்கு மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படுகின்றது. மெர்க்குரிக் ஆக்சைடு கண் அழற்சிக்கு மருந்தாகப் பயன்படுகின்றது.
பாதரச கூட்டுப் பொருட்கள் மருத்துவ பலன்களைக் கொண்டுள்ளன. எனினும் பாதரசம் விஷத்தன்மை மிக்கது. பாதரசத்தால் தண்ணீரைக் குடித்தால் நரம்பு மண்டலம் பாதிப்படைகின்றது. மேலும் சுவாச மண்டலமும் சிறுநீரக மண்டலமும் மெல்ல செயல் இழக்கும் அபாயமும் உள்ளன. இந்த பாதிப்புகள் அடுத்த தலைமுறைக்கும் தொடர்கின்றன.
பாதரசம் போன்று எத்தனையோ ஆயிரக்கணக்கான வேதிப் பொருட்கள் நன்மையும் தீமையையும் கொண்டுள்ளன என்பதில் விஞ்ஞான உலகம் குழம்பிப் போய் உள்ளது.
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
அரும்பொருள் காட்சியகத்திற்குள் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு நுழைந்ததும் அழகிய இளவயது ஜப்பான் பெண் வந்து "நான் உதவட்டுமா? நான் இந்த மியூசியத்தின் வழிகாட்டி" என்றாள்.
அவளைக் கவனிக்கும்போது பேசுகிறாள். கவனிக்காமல் இருந்தாலும், முகத்தை திரும்பிக் கொண்டாலும் பேச்சை நிறுத்திவிடுகிறாள். குறும்புத்தனமாக யாராவது அவளைத் தொட்டுவிட்டால் முகம் சுளிக்கிறாள்.
இவள் பெயர் ஈவ்-1 (Eve-1). கொரியா ரோபாடாலஜிஸ்டுகள் தயாரித்துள்ள பெண் ரோபாட். மனித தலைமுடி, சருமம், நேர்த்தியான உடை... சட்டென்று யாருக்கும் அது எந்திரம் என்பது தெரியாது. முகத்தில் 15 வகையான பாவங்களை இவள் வெளிப்படுத்துகிறாள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க இவளை வீட்டுக்கு வாங்கிச்செல்லலாம்.
கலைக்கதிர், ஜூலை 2008
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- மருந்துப் பொருள் மாசுகளால் நடத்தை மாறும் மீன்கள்
- இதயத்திற்காக மரங்கள்
- செயற்கை வெளிச்சமும் ஒரு மாசே
- காட்டுத் தீயும் செயற்கை நுண்ணறிவும்
- அல்சைமர்ஸ் நோயை அதிகரிக்கும் ஒளி மாசு
- பத்து டிரில்லியன் டாலர் பயன் தரும் உணவுமுறை மாற்றம்
- கடலுள் மூழ்கும் நிலப்பகுதிகள்: காவிரிப் படுகையின் நிலை என்ன?
- பூநாரையும் லித்தியமும்
- எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய ஓர் உச்சி மாநாடு
- உயிர்ப் பன்மயத் தன்மையைக் காக்க ஓர் உச்சி மாநாடு
- மீத்தேனை உண்ணும் பாக்டீரியாக்கள்
- ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியன் லாரி கடல் மணல்
- பிளாஸ்டிக் கட்டுப்பாட்டை நோக்கி முன்னேறும் உலகம்
- நிலை தடுமாறும் நீலகிரி
- வெப்பத் தாக்குதலுக்கான உலகின் முதல் மாநாடு
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதினாறு மில்லியன் டாலர் இழப்பு
- கப்பல்கள் உடைக்கப்படும்போது...
- மாண்ட்ரீல் மாநாடு முடிந்து ஓராண்டிற்குப் பிறகு...?
- காலநிலை மாநாடு - வெற்றியா தோல்வியா? துபாயில் நடந்ததென்ன?