கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்
மண்டை ஓட்டுக்குக் கீழே, மூளையின் பரப்பில் பட்டானி அகலத்திற்கு எலெக்ட்ரானிக் சிப்பங்களைப் பதிக்கும் அறுவைச் சிகிச்சைகள் பரவலாகிக் கொண்டு வருகிறது. பார்க்கின்ஸன், டிஸ்டோனியா போன்ற மூளை நரம்பு சம்மந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த இத்தகைய சிப்பங்கள் மூளையில் பதிக்கப்படுகின்றன. இதன் உதவியால் தக்க அளவு மின்தூண்டலை வேண்டும்போது வழங்குவதன் மூலம் நரம்பு சம்மந்தமான நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது.
கட்டுப்பாடில்லாமல் அதனிஷ்டத்திற்கு நரம்புசெல்கள் துடிப்பதால் உடல் அஷ்டக் கோணல்களாக முறுக்கிக் கொள்ளும் நோய்க்கு டிஸ்டோனியா என்று பெயர். இந்நோயை சிப்பத்தைப் பதிப்பதின் மூலம் மிக எளிதில் சமாளித்துவிடலாம். மிதமான மின்தூண்டலை, குறிதவறாமல் நரம்பு செல்களுக்கு வழங்குவதன் மூலம் மனநோய், மையநரம்பு மண்டலப் பிரச்சனைகள் போன்றவற்றைச் சரிப்படுத்தலாம். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக நரம்பியல்துறை மூளையின் ஆழத்தில் சிப்பங்களைப் பதிக்கும் அறுவைச் சிகிச்சைகளைப் பற்றி ஆய்வு செய்துவருகிறது. இது வெற்றி பெற்றால், நினைவாற்றலை அதிகப்படுத்தலாம், தீய பழக்கங்களை மறக்கடிக்கலாம்.
மூளையில் "இன்ப மையம்' என்றொரு இடம் இருக்கிறது. அந்த இடத்தைத் தூண்டினால் மனதில் திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படும். இதைப்பற்றி 2008 இல் " Pleasure center" என்றொரு நூல் வெளிவந்தது. எழுதியவர் அஸிஸ் என்பவர். பணம் பணமென்று அலைந்து வாழ்க்கையின் சுவாரசியமான காலங்களை இழக்கும் வாலிப வயோதிகர்களுக்காக "இன்பம் தூண்டும்" சிப்பங்களை வடிவமைக்க ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை முயன்றுவருகிறது.
ராபர்ட் ஹீத் என்றொரு சைக்கியாட்ரிஸ்ட் 1960 இல் ஒரு வினோத அறுவைச்சிகிச்சை செய்தார். ஓரினச்சேர்க்கைப் பிரியரான "கே' ஆணின் மூளையில் (ஆ19 பரிசோதனை என்று அதற்குப் பெயரிட்டார்) மின் தூண்டலை தேவைப்படும்போது வழங்கியதும் அவரது ஆவல் தணிந்ததாம். அதன்பிறகு அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. இப்போதைய "ஹைடெக்" தொழில் நுட்பம் சிப்பம் பதிக்கும் சிகிச்சையை 95 சதம் வெற்றிக்கு இட்டுச்செல்லும் என நம்பலாம்.
தக்க புள்ளியல் மின்தூண்டலை "லேப்" செய்தால் உள்ளத்தில் பேரின்பம் பெருக்கெடுக்கும். செக்ஸ் - சர்க்யூட் - சிப்பங்கள் தயாராகிக் கொண்டுள்ளன.
- முனைவர் க.மணி
- விவரங்கள்
- பிச்சுமணி
- பிரிவு: தொழில்நுட்பம்
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி தற்போது ஆண்டுக்கு 7.9 மில்லியன் மக்கள் புற்றுநோயால் மரணமடைகிறார்கள் என்றும், இது 2030 ஆண்டில் ஆண்டுக்கு 12 மில்லியன் மக்களாக உயரும் என்றும், தற்போது ஆண்டுக்கு 11.3 மில்லியன் மக்கள் புதிதாக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், இது 2030ம் ஆண்டில் 15.5 மில்லியனாக உயரும் என்றும் தெரிவித்து உள்ளது.
இரத்த ஆய்வு வாயிலாக இரத்தில் உள்ள கொழுப்பு, சர்க்கரை அளவுகளை அறிவது போல, நமது மரபணுக்களை சாதரணமான பார்வையில் ஒருவருக்கு புற்று நோய் வருங்காலத்தில் வர வாய்ப்பு உள்ளதா என முன்னதாகவே கண்டறியும் புதிய முறை ஒன்று சில ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்துவிடும்.
மேரிலாண்ட் பலகலைகழகம் விஞ்ஞானி கே.ஜெ.ரேய் லியின் எண்ணியல் குறியிடு பகுப்பாய்வு முறை (Digital signaling processing techniques) மூலம் மரபணுக்களிலிருந்து தகவல்களைப் பெற்று, அதில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளதா என நமக்குத் தெரிவிக்கும். புற்றுநோய் ஏற்படும்போது புற்றுபாதிக்கப்பட்ட செல்கள் முற்றிலும் மாறுபட்ட புரதத்தையும் மூலக்கூறுகளையும் வெளியிடும் இவைதான் இந்நோய்க்கான முன்அறிகுறியாகும்
கே.ஜெ.ரேய்-லியின் உயிரியல்குறியிடுகள் செல், மூலக்கூறுகள், மரபுமுறைகள் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களை காண்பிக்கும். புற்றுநோயை உருவாக்கும் உயிரியல்குறியிடுகளை சரியாக நாம் கணிக்க இயன்றால் இந்நோய் வருவதை முன்கூட்டியே கண்டறியலாம். பரிசோதிக்கலாம், மருத்துவம் செய்யலாம்.
மேரிலாண்ட் பலகலைகழக விஞ்ஞானி கே.ஜெ.ரேய் லி என்பவர் கண்டுபிடித்து உள்ள குறுமஅமைப்பு(MICRO ARRAY TECHNOLOGY) முறை, மரபணுவில்(DNA) உள்ள பொறுக்கப்பட்ட(random) உயிரியல் விவரங்களை கணினி படிக்கதக்க உணர்தகவல்களாக மாற்றி தரும். அவரது குழு சார் முறை (ensemble dependence model) மரபணு தகவல்களை அல்லது புரதத்தை (mass spectrograph)மாஸ் ஸ்பெக்டரோகிராப் வாயிலாக உயிரனுக்கும் புரதத்துக்கும் உள்ள தொடர்பு ஆராய்ந்து, வித்தியாசமானவைகளை குழுவாக பிரித்து (different cluster ) பார்க்கிறது. மேலும் அவைகளின் நடத்தை (behaviour) மற்றும் ஒருங்கான செயல்பாடுகளை (interaction) ஆய்வு செய்து பார்க்கிறது. ஒவ்வொரு குழுவுக்கும் குறிப்பான உயிரணுவும் அவற்றிடைய திட்டவட்டமான உறவும் இருக்கும்.
இந்த கே.ஜெ.ரேய் லி சார்பு முறையை கொண்டு சாதாரணமானவைகளையும் புறறு பாதித்த மாதிரிகளை வகைபடுத்த முடியும். அதற்குப்பின் இது உண்மை புற்றுநோய் தகவல்களுடன் ஒப்பிட்டு, புற்றுநோய்க்கான உயிரியல் குறிப்புகளை (cancer biomarkers) கண்டறிகிறது.. கே.ஜெ.ரேய் லி சார்பு முறை உடல்நலத்துக்கும், உயிரணு உணர்ச்சி பட்டியலுக்கும்(global gene expression profile) உள்ள தொடர்புகளை கண்டுஅறிகிறது. இதன் மூலம் நுரையீரல், மார்பகம் கருப்பபை, புரஸ்டட் ஆகியவற்றில் புற்று நோய் உருவாகும் வாய்ப்பை 98 விழுக்காடு சரியாக கணிக்க உதவும். இந்த முன்னதாக புற்றுநோய் கண்டறியும் முறை இன்னும் 10 அல்லது 20 ஆண்டுக்குள் நடைமுறைக்கு வந்துவிடும். இன்னும் 5 அல்லது 10 ஆண்டுக்குள் வழக்கத்தில் உள்ள உயிரியல்முறை பரிசோதனைக்கு துணையாக எண்ணியல் பரிசோதனை (Digital testing)முறை நடைமுறைக்கு வந்துவிடும்.
நன்றி: the institute monthly
கூடுதல் விவரங்களுக்கு: www..ieee.org/theinstitute
அனுப்பி உதவியவர்: பிச்சுமணி
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்
கொத்து மல்லி, லவங்கம் போன்ற வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி மருந்தினை முர்ரே இஸ்மான் (பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம்) என்பவர் தயாரித்திருக்கிறார்.
வாசனை திரவியங்களில் இருக்கும் எஸ்ஸென்சியல் ஆயில் எனப்படும் வாசனை எண்ணெய்கள் பூச்சிகளை, புழுக்களை, லார்வாக்களை அவற்றின் முட்டைகளை கொல்லக்கூடியன. இவற்றைப் பூச்சிக்கொல்லி மருந்துகளாகப் பயன்படுத்துவதில் புத்திசாலித்தனம் இருக்கிறது. முதலில் இவற்றைப் பயன்படுத்துவதற்கு சட்டபூர்வமான அனுமதி வாங்குவது சுலபம். ஏனெனில், இவை மனிதர்களுக்கு ஊறு விளைவிக்காதவை என்பது ஏற்கனவே தெரிந்தது. இரண்டாவது இது செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளைவிட இயற்கைக்குப் பாதுகாப்பானது. எது இயற்கைக்குப் பாதுகாப்பானதோ அது மனிதனுக்கும் பாதுகாப்பானது என்பது உண்மை.
பூச்சிகள் சீக்கிரமே மருந்துகளுக்கு சமாளிப்புத் தன்மைகளைப் பெற்றுவிடுவதால், செயற்கை மருந்துகளை அடிக்கடி மாற்ற வேண்டியுள்ளது, அந்தப் பிரச்சனை இயற்கை மருந்துகளுக்குக் கிடையாது. இதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. செயற்கை மருந்துகளை ஒருதரம் தெளித்தால் ஒருமாதத்திற்கு கவலையில்லாமல் இருக்கலாம்; இயற்கை மருந்துகளை அடிக்கடிப் பயன்படுத்த வேண்டியிருக்கும். சீக்கிரமே ஆவியாகி இவை காற்றில் கரைந்து விடுவதே காரணம். இதை ஏதாவது ஒரு முறையில் தடுக்க முடிந்தால் இயற்கை மருந்துகளுக்கு ஈடு இருக்காது.
- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்
"நீங்க என்ன பாத்திரம் கழுவுற சோப் உபயோகிக்கிறீங்க? இப்படி பாத்திரம் பளபளப்பாக பிசுக்கில்லாமல் புத்தம் புது சில்க் துணிபோல இருக்கிறதே!''
"சோப்பா! சும்மா தண்ணீரிலே கழுவினாலே போதும் ஒரு சொட்டு எண்ணெய்ப் பிசுக்கு இல்லாமல் பாத்திரம் புத்தம் புதிதாகிவிடுகிறது... இது புதுவித பாத்திரம் எண்ணெயில் அப்பளம் பொரித்தாலும் பாத்திரத்தில் எண்ணெய் ஒட்டுவதில்லை'' என்று பதில் வந்தால் அதை நம்ப கஷ்டமாக இருக்கிறது அல்லவா!
உண்மைதான், இன்டியானா பல்கலைக்கழக பண்டவியல் துறை அறிஞர்கள் பிளாஸ்ட்டிக், உலோகம் போன்ற பொருள்களுக்கு மேலே, முடியைவிட 1000 மடங்கு மெலிதான ஒரு கெமிக்கல் பூச்சு கொடுக்கிறார்கள். அது எண்ணெயை பாத்திரத்தில் ஒட்ட விடாமல் பார்த்துக்கொள்கிறது.
வெறும் தண்ணீரில் கழுவினாலே போதும், சோப்பு அரப்புத் தூள் எதுவுமில்லாமல் எண்ணெய்ப்பிசுக்கு வழுக்கி ஓடிவிடுகிறது. பாத்திரத்தின் பரப்பில் பாலி எத்திலீன் கிளைக்கால் என்ற தண்ணீர் உறிஞ்சும் பொருள் பூசப்படுகிறது, அதற்கு மேலே டெஃப்ளான் போன்ற ஒரு பூச்சு கொடுக்கப்படுகிறது. இதனால் பாத்திரத்தின் பரப்பு தண்ணீருக்கு உறவாகவும் எண்ணெய்க்குப் பகையாகவும் மாறிவிடுகிறது. எண்ணெய் ஒட்டுவதேயில்லை. காந்தல், கரி, பிசுக்கு எது இருந்தாலும் குழாயில் காட்டினாலேபோதும் தேய்க்காமலே கழன்றோடிவிடுகிறது. இது வேலையை சுலபமாக்குவதுடன், சுற்றுச் சூழலை பாதிக்கும் சோப்பின் தேவையைக் குறைக்கிறது. இது போன்ற கண்டுபிடிப்புகள் வெகு சீக்கிரமே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவிடுகிறது.
- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்
- கூந்தல் வேர்களும் அதிசய மருந்துகளும்
- மூலக்கூறுகளை வருடும் மைக்ராஸ்கோப்
- தன்கையே தனக்கு எதிரி
- மரத்திலிருந்து பிளாஸ்டிக்
- பார்வையற்றவர்கள் ஓட்டுவதற்கு கார்
- வளையும் ஒலிபெருக்கி
- மூளை வளருகிறது - நாம் தான் அதை தடை செய்கிறோம்
- நேனோ ரேடியோ - தூசி தட்டினால் பாட்டு நின்று விடும்
- மூளை சொல்படி நகரும் சக்கர நாற்காலி
- கெமிஸ்ட்டுகளின் பொறாமை
- பாதிப்பை ஏற்படுத்தும் பாதரசம்...
- கைடு வேலை பார்க்கும் ரோபோ
- மருந்துப் பொருள் மாசுகளால் நடத்தை மாறும் மீன்கள்
- இதயத்திற்காக மரங்கள்
- செயற்கை வெளிச்சமும் ஒரு மாசே
- காட்டுத் தீயும் செயற்கை நுண்ணறிவும்
- அல்சைமர்ஸ் நோயை அதிகரிக்கும் ஒளி மாசு
- பத்து டிரில்லியன் டாலர் பயன் தரும் உணவுமுறை மாற்றம்
- கடலுள் மூழ்கும் நிலப்பகுதிகள்: காவிரிப் படுகையின் நிலை என்ன?
- பூநாரையும் லித்தியமும்