கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
துருக்கி நாட்டு வடிவமைப்பாளர்கள் ஒரு கிண்ணத்தை வடிவமைத்துள்ளார்கள். சமையலறையில் நீலநிற ஒளியில் சாதுவாக குளித்துக்கொண்டிருக்கும் அந்தக்கிண்ணம் பார்க்க அழகானது மட்டுமல்ல. நீண்டநாட்களுக்கு பழங்களை கெட்டுப்போகாமல் பாதுகாத்து வைப்பதற்கும் உதவுகிறது.
இது எப்படி சாத்தியமாகிறது?
கிண்ணத்தின் மேலிருக்கும் வட்டவடிவ விதானத்திலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களின் நீலநிற ஒளி பழங்களை நீண்ட நாட்களுக்கு அழுகவிடாமல் பாதுகாக்கிறது. இதுமட்டுமில்லாமல் புற ஊதாக்கதிர்கள் ஈகோலி வகை பாக்டீரியாக்களையும் எத்திலீன் வாயுவையும் செயலிழக்கச்செய்கிறது. ஈகோலி பாக்டீரியாக்கள் குடல் நோயை உண்டுபண்ணக்கூடியவை என்பதும், எத்திலீன் வாயு பழங்களை அழுகச்செய்துவிடும் என்பதும் நாம் அறிந்ததே.
இந்த சாதனத்தை மின்னேற்றம் செய்து பயன்படுத்தக் கூடியவிதத்தில் வடிவமைத்துள்ளது ஒரு கூடுதல் சிறப்பு.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
களைப்பு மிகுதியால்தான் காரோட்டிகள் ஒரு விநாடி கண் அயர்ந்துவிடுகிறார்கள். மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் ஒரு கார் இந்த ஒரு விநாடி நேரத்தில் 28 மீட்டர்கள் சென்றுவிடும். அதாவது டிரைவர் இல்லாமல் ஒரு கார் 28 மீட்டர்கள் ஓடினால் என்னென்ன நடக்குமோ அத்தனையும் நடந்துவிடும். டிரைவர்களை எச்சரிக்கை செய்வதற்கு புதிய கருவிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.
மெர்ஸிடிஸ் பென்ஸ் கார் நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் வடிவமைத்த கருவியில் ஓர் அகச்சிவப்புக்கதிர் காமிரா நிரந்தரமாக ஓட்டுனரின் தலையை நோக்கி வைக்கப்பட்டிருக்கும். ஓட்டுநரின் கண் இமைக்கும் நேர இடைவெளிகளை இந்த காமிரா பதிவு செய்து கொண்டிருக்கும். ஓட்டுநரின் கண் இமைத்தலில் மாறுபாடு இருக்கும்போது ஒலி எழுப்பி ஓட்டுநரை இந்தக்கருவி எச்சரிக்கை செய்யும்.
மற்றொரு முறையில் ஓட்டுநர் காரை இயக்கும் முறைகள் பதிவு செய்யப்படும். ஓட்டுநரின் இயக்க முறையில் ஏதேனும் மாறுபாடு தெரியும்போது ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யப்படும். நீண்ட தூரம் காரோட்டிச் செல்லும் ஓட்டுநர்களின் சோர்வைப் போக்க தொலைக்காட்சி பெட்டிகளை வைக்கலாம் என்றுகூட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் கார் உரிமையாளர்கள் ஓட்டுநர்களுக்கு முன்பாக தொலைக்காட்சிப் பெட்டி வைப்பதற்கு உடன்படுவார்களா என்பது சந்தேகமே.ஜப்பானிய டயோட்டா கார் உற்பத்தியாளர்கள் கண் அயர்ந்து போகும் ஓட்டுநரை எச்சரிக்கை செய்ய வேறுவிதமான கருவியை வடிவமைத்திருக்கின்றனர். விரைந்து செல்லும் காரின் முன்புறம் சாலையில் வரையப்பட்டிருக்கும் வெள்ளைக் கோடுகளை ஒரு காமிரா பதிவு செய்து காரில் உள்ள கம்ப்யூட்டருக்கு அனுப்பும். காரின் இயக்கம் தாறுமாறாக இருக்குமானால் கம்ப்யூட்டர் ஒலி எழுப்பி ஓட்டுநரை எச்சரிக்கை செய்யும்.
சோர்வு என்பது ஒரு சிக்கலான உளவியல் மற்றும் உடலியல் சார்ந்த பிரச்சினையாக இருக்கும் வரையில், பாதுகாப்பான சாலைப் பயணம் என்பதும் சிக்கலானதாகத்தான் இருக்கும்.
தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
மனிதனின் இரத்தக்குழாய்களுக்குள் நீந்திச்செல்லும் நுண்ணிய ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பலகலைக்கழக நுண் பெளதிகம் மற்றும் நானோ பெளதிக ஆய்வுக்கூடத்தில் இந்த ரோபோக்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுவருகிறது.
இரத்தக்குழாய் அடைப்புகளின்காரணமாக செய்யப்படும் சிக்கலான அறுவை சிகிச்சைகளில் இந்த ரோபோக்கள் உதவிகரமாக இருக்குமாம். இரத்தக்குழாய்களுக்குள் ஊசிமூலம் இந்த ரோபோக்களை செலுத்தி செயல்படவைக்க இயலும்.ஒரு மில்லிமீட்டரில் கால்பங்கு பெரியதான இந்த ரோபோக்களை piezoelectricity ஐ பயன்படுத்தி இயங்கச்செய்ய முடியும் என்கிறார்கள் நுண் எந்திரவியல் மற்றும் நுண் பொறியியல் அறிஞர்கள். சிலவகையான படிகங்கள், பீங்கான்கள் இவற்றின் மீது அழுத்தம் கொடுக்கும்போது மின்னோட்டம் தூண்டப்படுகிறது என்பதுதான் piezoelectricity தத்துவம். இந்த தத்துவத்தை பயன்படுத்தியே நம்முடைய வீட்டில் எரிவாயு அடுப்பை பற்றவைக்கும் கேஸ் லைட்டர்களை இயக்குகிறோம்.
அறுவை சிகிச்சைகளில் சாதாரணமாக catheters எனப்படும் குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவை உண்டாக்கும் காயங்களும் தழும்புகளும் பெரிய அளவில் இருக்கும். மேலும் நுண்ணிய பகுதிகளை இந்த catheter குழாய்கள் சென்றடைய முடிவதில்லை. இனிமேல் இதுபோன்ற நுணுக்கமான அறுவை சிகிச்சைகளுக்கு இந்த நுண்ணிய ரோபோக்கள் பயன்படும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
செயற்கையான முன்னங்கால் பொருத்தப்பட்ட ஒரு எகிப்திய மம்மி கெய்ரோ மியூசியத்தில் தற்போது உள்ளது. விஞ்ஞானிகள் இந்த மம்மியை ஆராய்ந்து வருகிறார்கள். தோலினாலும் மரத்தினாலும் செய்யப்பட்ட வலது முன்னங்காலை இந்த மம்மிக்கு உரியவர் வெறும் அழகுக்காக மட்டும் பொருத்திக்கொண்டிருக்கவில்லை. ஒரு எகிப்தியனுக்குரிய பெருமையோடு நிமிர்ந்து நடக்கவும் அந்த செயற்கை உறுப்பை பயன்படுத்தியிருக்கிறார் என்பதுதான் இன்றைய அறிவியல் செய்தி. கெய்ரோ மம்மியின் செயற்கைக்காலில் உள்ள தேய்மானத்தில் இருந்து நாம் இதைத் தெரிந்துகொள்ளமுடிகிறது. மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த செயற்கை முன்காலை மேலும் ஆராய்ந்து வருகிறார்கள்.
இதைப்போன்றதொரு செயற்கைக்கால் பிரிட்டிஷ் மியூசியத்தில் ஏற்கனவே பாதுகாக்கப்பட்டு வருகிறது. 1881ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த செயற்கை முன்காலுக்கு அதனை சேகரித்தவரின் பெயரை இணைத்து Greville Chester Great Toe என்று பெயரிட்டுள்ளார்கள். பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ள இந்த செயற்கை முன்கால் பேப்பர்கூழ், துணி, கோந்து மற்றும் களிமண் இவற்றால் செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ள செயற்கை முன்காலிலும் தேய்மானத்தின் அடையாளங்கள் காணப்படுகின்றன. ஆனால் இந்த செயற்கைக்கால் மடங்கும் தன்மை இல்லாமல் இருப்பதால் இதனைப்பயன்படுத்தியவர் வெறும் அழகுக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கவேண்டும் என்று தெரிகிறது. இறந்தவர்களின் உடலை மம்மியாக பதப்படுத்தும்போது மதச்சடங்குகளின் நோக்கில் எந்தவொரு ஊனமும் மறைக்கப்படவேண்டும். ஊனத்தைமறைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த செயற்கைக்கால் பொருத்தப்படவில்லை என்பதும் அழகிற்காக மட்டுமே பொருத்தப்பட்டது என்பதும் நமக்கு வெளிச்சமாகிறது.
இந்த இரண்டு செயற்கைக்கால்களின் காலமும் கி..மு.1000 க்கும் 600 க்கும் இடைப்பட்டு இருக்கவேண்டும்.
மான்செஸ்டர் விஞ்ஞானிகள் இப்போது வலது முன்னங்கால்களை இழந்தவர்களை தேடிப்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். எதற்கென்று கேட்கிறீர்களா? கெய்ரோ மம்மி அணிந்திருக்கும் செயற்கைக்காலின் நகலைக்கொண்டு அதன் செயல்பாடுகள் எப்படி இருந்திருக்கும் என்று ஊகித்தறியத்தான்!
இந்த இரண்டு முன்னங்கால்களில் ஏதோ ஒன்று மட்டும் அன்றாட வாழ்க்கையில் பயன்பட்டிருக்கவேண்டும். எது எப்படியாயினும் இந்தக்கண்டுபிடிப்பு தற்கால மனிதர்களுக்கு சுவையானதுதானே!
- மு.குருமூர்த்தி
- தொப்புள் கொடியில் இருந்து இதய வால்வு.
- இரத்தத்தை தூய்மையாக்க ஒரு கருவி
- வேண்டும்போது வேண்டிய அளவு வாசனை..
- இறந்தவர் உடலை பாதுகாக்க
- வெடிகுண்டுகளை முகர்ந்து பார்க்கும் எலக்ட்ரானிக் மூக்கு
- பாலத்தின் உறுதியை அறிவது எப்படி?
- மாதவிலக்கு இரத்தத்தின் மருத்துவ குணம்
- அழுத்தமும் ஓட்டமும் தடையும்
- உயிர்
- உடலுக்கு எரிபொருள் எது?
- காற்றாடி விமானம்
- எச்சரிக்கை! செல்பேசி
- இன்பம் தரும் மின் அதிர்ச்சி
- புற்றுநோய் அறியும் எண்ணியல் (Digital) முறை
- மசாலா பூச்சிக்கொல்லிகள்
- சோப்பு வேண்டாம் தண்ணீரில் முக்கி எடுத்தால் போதும்!
- கூந்தல் வேர்களும் அதிசய மருந்துகளும்
- மூலக்கூறுகளை வருடும் மைக்ராஸ்கோப்
- தன்கையே தனக்கு எதிரி
- மரத்திலிருந்து பிளாஸ்டிக்