KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1.‘பராசக்தி’ கருணாநிதி, டாவின்சி கோட் படத்துக்குத் தடை விதிக்கலாமா?

2. ஆயிரம் பொய் சொல்லி அரசியல் கல்யாணம்! தேர்தல் சொல்லும் பாடம்!

3. 2011-ல் ஆட்சியைப் பிடிப்பாரா விஜயகாந்த்?!

4. ஜான்சி ராணி, கண்ணகி, கொஞ்சம் ஜால்ராக்கள்

5. கண்ணகியைப் பின்பற்றச் சொல்லுகிறதா கலைஞர் அரசு?

6. ஏன் இவ்வளவு ஆவேசம்? ஏன் இந்த பயம்?

***********
புதுப்பேட்டை – சினிமா விமர்சனம்

ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!:
ச. தமிழ்ச்செல்வன்


தி டாவின்சி கோடும் மாதவி சிலையும்:
அ. ராமசாமி


கனவு நெடுஞ்சாலை:
பாஸ்கர் சக்தி


மனிதன் கேள்வி - பதில்கள்

அவரவர் வாழ்க்கை:
கு.சித்ரா


ஏப்ரல் இதழ்

மே இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: [email protected]
hotmail.com
கட்டுரை
ஞாநி

1.‘பராசக்தி’ கருணாநிதி, டாவின்சி கோட் படத்துக்குத் தடை விதிக்கலாமா?

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கும் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கும் என்ன ஒற்றுமையோ தெரியவில்லை. இருவரும் இரண்டு பெரிய பட்ஜெட் திரைப் படங்களைத் தங்கள் மாநிலங்களில் காட்ட விடாமல் செய்து விட்டார்கள்.

மோடி அரசாங்கத்தை பயன்படுத்தாமல் தன் பாரதிய ஜனதா கட்சியைக் கொண்டு மிரட்டலால் தடுத்திருக்கும் †¢ந்திப் படம் அமீர் கானின் ஃபனா. கருணாநிதி சட்டப்பூர்வமாக அரசு உத்தரவு மூலம் தடை செய்திருக்கும் படம் ‘தி டாவின்சி கோட்‘. (குஜராத்தில் டாவின்சி கோடுக்கு தடையில்லை. தமிழ்நாட்டில் ஃபனாவுக்கு தடையில்லை.)

மோடி, கருணாநிதிகளின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட மும்பையில் தற்போது இருக்கும் வசதியினால் இங்கு ஒரே மட்டிஃப்ளெக்ஸ் தியேட்டரில் இரண்டு படங்களையும் பார்த்துவிட்டேன்!

இதில் விசித்திரம் என்னவென்றால் மோடியும் கருணாநிதியும் இந்த திரைப்படங்களைத் தடை செய்திருப்பதை இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆதரித்துக் கொண்டிருக்கிறது. டாவின்சி கோட் படத்துக்கு அதிகாரப் பூர்வமாக தடை விதித்திருக்கும் இன்னொரு மாநிலம் காங்கிரஸ் ஆளும் பஞ்சாப்.

டாவின்சி கோட் திரைப்படம் கிறித்துவர்களின் மத உணர்ச்சியைப் புண்படுத்துவதாகக் கூறப்பட்டதாலோ என்னவோ, இந்துத்துவ சிற்பியான மோடி அந்தப் படத்துக்கு தன் மாநிலத்தில் தடை விதிக்கவில்லை. ஆனால் அவர் தடை செய்திருக்கும் அமீர்கானின் ஃபனா கதை என்னவோ மோடிக்கு பிடிக்கக்கூடிய கதைதான்.

தனி காஷ்மீர் கோரி பயங்கரவாதத்தில் ஈடுபடும் முஸ்லிம் பாத்திரத்தில் அமீர்கான் நடித்திருக்கிறார். அமீர்கானின் காதலி-மனைவி கஜோல் * அவரும் முஸ்லிம் பாத்திரம்தான்) படத்தின் இறுதியில் கணவன் பயங்கரவாதி என்று தெரிந்ததும் தானே அவனை சுட்டுக் கொல்கிறார்.

இருந்தபோதும் மோடியும், பாரதிய ஜனதாவும் படத்தை குஜராத்தில் திரையிட விடாமல் தடுத்ததற்குக் காரணம், அமீர்கான் என்ற நிஜ மனிதர் நர்மதை அணையால் இடம் பெயர்க்கப்பட்ட விவசாயிகள் ஆதிவாசிகள் சார்பாக குரல் கொடுத்ததுதான். நர்மதை அணை திட்டத்தை விமர்சித்து என்ன சொன்னாலும் அது குஜராத்துக்கு எதிரானது என்பது மோடி தரப்பின் வாதம். அமீர்கானையும் மேதா பட்கரையும் கண்டித்து மோடி ஒரு நாள் உண்ணாவிரதமே இருந்தார். அமீர் மன்னிப்பு கேட்டாலொழிய ஃபனா படத்தை திரையிட விடமாட்டோம் என்று குஜராத் பாரதிய ஜனதா அறிவித்தது.

அமீர்கான் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். அணையால் வீடு, வாசல் நிலத்தை இழந்த ஏழைகளுக்கு மறு வாழ்வு தரும்படி தான் கோரியது எப்படி தவறாகும் என்று அமீர் பதில் கேள்வி எழுப்பினார். பாரதிய ஜனதா மாதிரி கட்சிகளுக்கு மக்கள் தேர்தல் நேரத்தில் பதில் தரவேண்டும் என்று சொன்னார் அமீர்கான்.

ஃபனா படத்தை குஜராத்தில் இதுவரை காட்டாததால் பல கோடி ரூபாய் நஷ்டம் தயாரிப்பாளர் யாஷ் சோப்ராவுக்கு மட்டும் அல்ல; குஜராத் அரசுக்கும் கணிசமான வரி இழப்பு. ஃபனா விஷயத்தில் அமீருக்கு ஆதரவாக மெல்ல மெல்ல அமிதாப் பச்சன், ‹ரித்திக் ரோஷன், அனில் கபூர் என்று †¢ந்தி திரையுலகப் புள்ளிகள் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். குஜராத்தில் திருட்டு டிவிடி ஜேஜே என்று விற்றுக் கொன்டிருக்கிறது. தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா மோடியை சந்தித்துப் பேசினார். தாமதமாகவேனும் ஃபனா குஜராத்தில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் படம் †ஹவுஸ்புல் !

டாவின்சி கோட் படத்துக்கு கருணாநிதி அரசு தடை விதித்திருப்பதற்குக் கூறிய காரணம், அந்தப் படம் கிறித்துவர்களின் மத உணர்ச்சியை புண்படுத்துவதால் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் ஏற்படலாம் என்ற கவலையாம்.

இப்போதும் டாவின்சி கோட் புத்தகம் தமிழ்நாட்டில் விற்றுக் கொண்டிருக்கிறது. கிறித்துவர்கள் அதிகம் வாழும் நாடுகளான அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் ஐரோப்பாவிலும் டாவின் சி கோட் புத்தகமும் சரி, படமும் சரி தடை செய்யப்படவில்லை.

படம் ஒரு கற்பனைக் கதை. சுமார் இரண்டாயிரம் வருடங்கள் முன்பு வாழ்ந்த ஒரு மனிதர் ஏசு கிறிஸ்து. (கடவுளின் மகனான ஏசு பூமியில் மனிதனாக அவதரித்தார் என்பதுதான் மதக் கோட்பாடும் கூட.) அவரைப் பற்றிப் பல கற்பனைக் கதைகள் வந்திருக்கின்றன. காஷ்மீரில் ஏசு இருந்தார் என்று கூட ஒரு கதை உண்டு. சித்தரான போகர்தான் ஏசு என்று ஒரு கதை இருக்கிறது. ஏசுவின் சீடரான தாமஸ் சென்னையில் வாழ்ந்தபோது அதே சமயம் மயிலாப்பூரில் வாழ்ந்த திருவள்ளுவரின் நண்பராக இருந்தார் என்று இலக்கியவாதி க.நா.சுப்ரமணியம் ஒரு நாவலே எழுதியிருக்கிறார். ஏசு பற்றிய பல கற்பனைக் கதைகளில் இன்னொன்று டாவின்சி கோட். அவ்வளவுதான்.

டாவின்சி கோட் படத்தில் எங்கேயும் ஏசு இழிவுபடுத்தப்படவில்லை. அவர் மனைவி என்று படம் சொல்லும் மேரி மக்தலீன் ஒரு பாலியல் தொழிலாளி என்று கிறித்துவ குரு பீடங்கள் சொல்லுவதையும் படம் மறுக்கிறது. ஏசுவுக்கு குடும்பம் இருந்ததா இல்லையா என்பதை படத்தின் கடைசி வரை எதிரெதிர் தரப்பின் வெவ்வேறு நம்பிக்கைகளாகவே காட்டியிருக்கிறது. எப்படியிருந்தாலும், ஏசு மனித குலத்துக்கே பெரும் உந்துதலாக அமைந்த தெய்வீகமானவர் என்றுதான் படத்தில் சொல்லப்படுகிறது.

உண்மையான கிறித்துவர்கள் யாரும் இந்தப் படத்தால் மனம் புண்பட நியாயம் இல்லை. ஏசுவின் பெயரால், பிரார்த்தனை, அற்புதம் என்று சொல்லிக் கொண்டு ஏழை கிறித்துவர்களிடம் வசூல் நடத்தி பென்ஸ் கார்களில் வலம் வரும் பேரின்பப் பெருவிழா, ஜெப கோபுர அமைப்பாளர்கள்தான் அசல் கிறித்து பக்தரை புண்படுத்துபவர்கள்.

பொதுவாக தமிழகத்தில் கிறித்துவர்களிடையே சகிப்புத்தன்மையும் விமர்சனத்தை எதிர்கொள்ளும் பக்குவமும் அதிகம். எழுபதுகளில் நான் படித்த சென்னைக் கிறித்துவக் கல்லூரியில், ‘ஜீசஸ் க்ரைஸ்ட் சூப்பர் ஸ்டார்’ என்ற உலகப்புகழ் பெற்ற ஆங்கில இசை நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது. அதில் ஏசு அற்புதங்கள் செய்பவர் என்ற திருச்சபையின் கருத்து கிண்டல் செய்யப்படும். எண்பதுகளில் மதுரை அரசரடியில் இருக்கும் இறையியல் கல்லூரியில் பாதிரிப் படிப்புக்கு தயாராகும் மாணவர்களைக் கொண்டு அந்த வளாகத்திலேயே நான் நடத்திய சிறு நாடகம் ஏசுவை ஆயுதப் புரட்சிக்கு தூண்டிய சமூக தீவிரவாதியாக பைபிள் மேற்கோள்களைப் பயன்படுத்தி சித்திரித்தது. யாரும் ஆட்சேபிக்கவில்லை.

இப்போது ஒரு சாதாரண மர்மப் படமாக வந்திருக்கக் கூடிய டாவின்சி கோடுக்கு கருணாநிதி அரசு தடை விதித்திருப்பது ஆபத்தான அறிகுறியாகும். தமிழக கிறித்துவர்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் மத அடிப்படைவாத சக்திகளுக்கு ஊக்கம் தருவதாக இந்தத் தடை அமையும்.

சரித்திரத்தின் விசித்திரம் என்னவென்றால் கருணாநிதியை 54 ஆண்டுகள் முன்னால் தமிழகமே தலை நிமிர்த்தி கவனிக்கக் காரணமாக இருந்ததே அவருடைய பகுத்தறிவு ஆவேச வசனங்கள் மிகுந்த பராசக்தி படம்தான். தணிக்கையின் கெடுபிடியை மீறி அந்தப் படம் வெளிவந்தது. கோவில்கள் கூடாது என்பதல்ல. அவை கொள்ளைக்காரர்களின் கூடாரங்களாக இருக்கக்கூடாது என்பதுதான் அந்தப் படத்தில் கருணாநிதியின் முன்வைத்த பகுத்தறிவுத் தத்துவம். டாவின்சி கோடின் கதையும் அதேதான். கொள்ளையர்களின் கூடாரமாக இருக்கும் திருச்சபைகள்தான் அசல் ஏசுவை மறைத்து அவர் வாரிசுகளை ஒழித்துக் கட்டப் பார்க்கிறது என்பதே டாவின்சி கோடின் அடிநாதம்.

தவறான இந்தத் தடைக்கு கருணாநிதி எதிர்பாராத இன்னொரு தரப்பிலிருந்தும் ஆதரவு வருவது அரசியலின் விசித்திரங்களில் ஒன்று - இன்னும் தடை விதிக்கவில்லையே என்று சென்ற வாரம் ஜெயா டிவியில் கோபப்பட்டவர் வைகோ !