lighting_bowlதுருக்கி நாட்டு வடிவமைப்பாளர்கள் ஒரு கிண்ணத்தை வடிவமைத்துள்ளார்கள். சமையலறையில் நீலநிற ஒளியில் சாதுவாக குளித்துக்கொண்டிருக்கும் அந்தக்கிண்ணம் பார்க்க அழகானது மட்டுமல்ல. நீண்டநாட்களுக்கு பழங்களை கெட்டுப்போகாமல் பாதுகாத்து வைப்பதற்கும் உதவுகிறது.
இது எப்படி சாத்தியமாகிறது?

கிண்ணத்தின் மேலிருக்கும் வட்டவடிவ விதானத்திலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களின் நீலநிற ஒளி பழங்களை நீண்ட நாட்களுக்கு அழுகவிடாமல் பாதுகாக்கிறது. இதுமட்டுமில்லாமல் புற ஊதாக்கதிர்கள் ஈகோலி வகை பாக்டீரியாக்களையும் எத்திலீன் வாயுவையும் செயலிழக்கச்செய்கிறது. ஈகோலி பாக்டீரியாக்கள் குடல் நோயை உண்டுபண்ணக்கூடியவை என்பதும், எத்திலீன் வாயு பழங்களை அழுகச்செய்துவிடும் என்பதும் நாம் அறிந்ததே.

இந்த சாதனத்தை மின்னேற்றம் செய்து பயன்படுத்தக் கூடியவிதத்தில் வடிவமைத்துள்ளது ஒரு கூடுதல் சிறப்பு.

- மு.குருமூர்த்தி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.