அமெரிக்காவில் ட்ரெக்வான் ஆராய்ச்சிக் கூடமும் நாசா விண்வெளி மையமும் இணைந்து ஒருவர் பறந்து செல்லக்கூடிய சிறிய காற்றாடி விமானத்தை கண்டுபிடித்துள்ளனர். ஆங்கிலத்தில் springtail என்று அழைக்கப்படும் இந்த காற்றாடி விமனாங்களில் வானில் மணிக்கு 182 கிலோமீட்டர் வேகத்தில் கூட பறந்து செல்லலாம். 46 லிட்டர் அளவுள்ள டாங்கியில் நிறப்பிய எரிபொருளை கொண்டு 296 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். தரையிலிருந்து 11,000 அடி உயரம் வரை இந்த விமானத்தால் பறக்க முடியும். இத்தனை திறன் இருந்தும் இதனை சராசரியாக 400 அடி உயரத்தில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பயன்படுத்தப்போவதாக ட்ரெக் ஆராய்ச்சிக்கூட விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
காற்றாடி விமானத்தில் பயணிக்கும் நபருக்கு சில உடற்தகுதிகள் வேண்டும். அவர் உயரத்தில் ஐந்தரை அடியிலிருந்து ஆறரை அடிக்குள்ளும். எடையில் 50 கிலோவிலிருந்து 125 கிலோ வரை மட்டும் இருக்கவேண்டும். அப்போதுதான் விமானத்தை அதிக உயரங்களில் கட்டுப்பாடாக ஓட்ட முடியும்.
காற்றாடி விமானங்களின் முக்கியப் பகுதியாக இருப்பது 118 குதிரை சக்தி மிக்க சக்திவாய்ந்த மோட்டார் இயந்திரம். இதனை கொண்டு இதன் மேல் உள்ள இரு பெரிய காற்றாடிகள் சுழன்று இவை வானில் பறக்க ஆரம்பிக்கின்றன. வீடியோ விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் ஜாய்ஸ்டிக் கருவிகள் இந்த விமானத்தில் பயன்படுத்தப்படுகிறது. இடது பக்கமிருக்கும் ஜாய்ஸ்டிக் கருவியின் மூலம் விமானத்தின் உயரத்தையும், வலது பக்க கருவியின் மூலம் விமானத்தின் திசையையும் மாற்றி கட்டுப்படுத்தலாம். ஹெலிகாப்டர் எப்படி பறக்கிறதோ, அதே போல இவையும் ஒரே இடத்தில் அந்தரத்தில் பறந்தபடி நிற்க முடியும். பல வகைகளிலும் அளவுகளிலும் காற்றாடி விமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உயர்தர 120 ஆக்டேசன் பெட்ரோலை கொண்டு இயக்கக்கூடிய வகையில் முதல் காற்றாடி விமானங்கள் தயாரிக்கப்பட்டாலும் தற்போது சாதாரண பெட்ரோலையும், ஏன் டீசலை கொண்டும் இயங்கும் படி புதிய விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இயந்திரக்கோளாறு காரணமாக விமானம் நடுவானில் நின்று விட்டாலும் அதில் பயணிப்பவர் பயப்படத் தேவையில்லை. விமானத்திலிருக்கும் பாராசூட்டின் மூலம் அவர் தப்பித்து விடலாம். முதல் பாராசூட் வேலை செய்யவில்லையென்றால் கூட கவலையில்லை. இருக்கவே இருக்குகிறது இரண்டாம் பாராசூட். ஆம் இதில் இரண்டு பாராசூட்கள் உள்ளன.
இந்த விமானத்தை சோதனை முயற்சியாக முதலில் பயன்படுத்தும் போது ஒரு இராட்சத கிரேன் இயந்திரத்துடன் விமானம் கயிற்றின் மூலம் கட்டப்பட்டிருந்தது. விமானம் செயலிழந்தால் உடனே கிரேன் வழி கயிற்றின் மூலம் விமானம் தரையில் விழாமல் பாதுகாக்கவே இவ்வாறு செய்யப்பட்டது. கயிற்றின் மூலம் கட்டப்பட்டு இதுவரை 200 முறையும் கயிற்றில்லாமல் 20 முறையும் வெற்றிகரமாக காற்றாடி விமானங்கள் இதுவரை பறந்துள்ளன. இதன் பயன்கள் என்று பார்த்தால் தற்போதைக்கு போர் வீரர்களுக்கும், இயற்க்கை பேரழிவு காலங்களில் அவசரகால பாதுகாப்பு பணிகளுக்கும், தீயணைப்புப்படை வீரர்களுக்கும் காற்றாடி விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. வருங்காலத்தில் நீங்கள் கனவு காண்பதை போல் தனி நபர்கள் அலுவலகம் செல்வதற்கு பயன்படலாம்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- அரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை! குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க!!
- தா.பா. எனும் பன்முக ஆளுமை
- உன் 'டிகிரி' என்ன?
- மாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு
- அதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்
- அய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா?
- அருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்
- கதர்
- உலகத் தாய்மொழி நாள் - தமிழகம் கற்க மறந்த பாடம்!
- செங்களப் பேருழவர் தோழர் தா.பா சாய்ந்தார்!
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: தொழில்நுட்பம்
காற்றாடி விமானம்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.