Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida

ஞாநி கட்டுரைகள்

1.ஏன் 49 ஓ போடச் சொல்கிறோம்?

2. தேர்தல் முறையை ஒரேயடியாக மாற்ற வேண்டும்!

3. இருவரின் 'இலவசக்' கூட்டணி

4. ஜாதிகள் இருக்குதடி பாப்பா!

5. வாக்குறுதிகளை நம்ப முடியுமா?

6. யாருக்கு ஓட்டு போடுவது?

***********
பொதுக்கல்வியே போதுமா..?:
அ. ராமசாமி


மனிதன் கேள்வி - பதில்கள்

ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்! - 27:
ச. தமிழ்ச்செல்வன்

முட்டுச்சந்தில் மத்திய அரசு: ரவி

தமிழின் பெயரால் தழைக்கும் குப்பைகள்! - எம்.ஏ.சுசீலா

எந்த இழை இவள்: பா. உஷாராணி

பாழ்நிலம்: உஷா பால்மர்

பகடை - ம. காமுத்துரை

ஏப்ரல் இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: [email protected]
hotmail.com
சிறுகதை
எழுத்து வடிவம்: உஷா பால்மர்
தமிழ்: ரமேஷ்

பாழ்நிலம்

ராஜராஜன் வாழ வேணும் என் சாமி ராஜாங்கம் ஆள வேணும் வரும பொழப்பெல்லாம் என் சாமி வாழக்கொழிச்சிப் போக வேணும் வந்த சனமெல்லாம் சாமி வாயாற வாழ்த்த வேணும் சக்காளத்தி செனத்தியாரெல்லாம் சாமி சவுத்துப் போக வேணும் கல்லச்சைப் பிடித்தகை வலமாக மூணுசுத்தும் உடலசைவோடு வந்து ஒருக்கை முந்தானையில் கண்களையும், மூக்கையும் சதா துடைத்தபடி, வாழ்க்கையின் வன்மங்களையும் காயங்களையும் சோறோடு சேர்த்து ஊட்டின என் அம்மாதான். இவள் நெல் குத்தும் போதும் அரிசி புடைக்கும் போதும் கதிரறுக்கும் போதும் இப்படித்தான் அழுவா. எங்க ஊரில் என்னம்மாவ யார்னா திட்ட நினைச்சாங்கனா “ஆண்டவன் அளந்துதான் வச்சிங்கிறான் பார்த்தையில்ல. நாங்களா குருட்டுப் பிள்ளையப் பெத்திருக்கம்?'' இந்த மாதிரி பேசின உடனே எந்த சராசரி அம்மாதான் சும்மாயிருப்பா?

பள்ளிக் கூடத்தில் வாத்தியார் பாடம் சொன்னா அது சம்மந்தமா எதிர் கேள்விகள் நிறையக் கிளம்பும். ஏதோ ஒண்ணு ரெண்டு கேட்டும் தொலச்சிடுவேன். அப்புறம் அடிப்பாங்க பாரு சாமீ...... இதனால் கூட என்னை எல்லாரும் ஒதுக்கி வச்சிடுவாங்க. அந்த கேம்பஸ்குள்ள என்ன பிரச்சனைனாலும் சில குரும்புக்கார பசங்களைத் தேடுவாங்க அதுல நானும் ஒருத்தனாச்சே அதெல்லாம் விடுங்க.

இப்ப நான் சென்னை சென்ட்ரல்ல என் அம்மா தயாரிச்சுக் கொடுத்த சிலவற்றோடு நடக்கிறேன் திசை தெரியாமத்தான். ஜனங்க குறுக்கும் நெருக்குமாக போக மனசுக்குப் பட்ட தெசைல இப்ப நா போறேன். ஆமா வழிய வழிய எண்ணை. சுருக்கம் விழுந்த பேண்ட், சட்ட. இடது கைல மஞ்சள் பை வலது கைல ஸ்டிக் இப்படி இருந்தா யார்தான் கைட் பண்ணுவா? எங்க ஊர் அடையாளம் அநேகமா நானாத்தான் இருக்கனும் போர்ட்டர் தான் என்னை பஸ் ஸ்டாண்டுக்கு கூட்டி வந்திருக்காரு. அவரோட நைனா பாஷை எனக்கு ரொம்ப புதுசு எதோ அப்படி இப்படி சொல்லி என்னோட அட்ரஸுக்கு ஆட்டே பேசிவிட்டாரு பாருங்க அப்பா அப்பத்தான் திகில் கொஞ்சம் விலகிச்சு.

அம்மா துவச்சுக் கொடுத்தனுப்பின ரெண்டு செட் பேண்ட் ஷர்ட்டும் கைசெலவுக்கு கொடுத்த எழுபது ரூபாயும் தேச்சுவிட்ட எண்ணையும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளைக்குத்தாங்க வரும். இப்ப மணி ராத்திரி 12.30 பரவாயில்லியே தாம்பரம் ரயிலுக்குள்ள இருக்கேன் பாதுகாப்பாய். இது கடைசி ரயிலுன்னு தெரியாது. அப்படியேத் தெரிஞ்சிருந்தாலும் ஏறாமலா இருந்திருப்பேன்? மன மாற்றத்துக்கு எங்கயாவது போயாகனுமே. இப்போதைக்கு இவங்களையெல்லாம் நண்பர்கள்னு சொல்லிக்கலாம். டெலிபோன் ஆப்ரேட்டர் வேலையும் இல்லாமப் போன எனக்கு இருக்க இடம் கொடுத்தாங்களே...

கலை ஞானத்தால சம்பாதிக்கறவங்க பொருட்களை வித்து சம்பாதிக்கிறவங்க எல்லாரோடையும் நெருங்கவிடாமத் தடுக்கறது வாத்தியார்மார் சொல்லிக் கொடுத்த பாடம்தானுங்க. இவனை கிளாஸ்மேட்ங்கிறத விட உயிர் நண்பன்னுதான் சொல்லுவேன். பார்த்து ரொம்ப நாளாச்சு எப்படியோ பல்லாவரம் ஸ்டேஷன் பாக்கியம் பண்ணியிருக்கு. மொதக் கொழந்த செத்தே பொறந்துச்சு. இப்ப ரெண்டாங் கொழந்த. வத்திக்குச்ச வித்தே குடும்பத்தக் காப்பாத்தனும்னா கஷ்டம் தானங்க. இவனாலே முடியுதே “டே கோவிந்தா நல்லாருக்கியா மச்சி?'' “நல்லாருகேங்க கணேசா'' எங்கள் தொலைவை சரிசெய்ய கட்டியணைத்தபோது பொல பொலவென கண்ணீர் ஏன்? எதற்கு? அது எங்களுக்கு மட்டும் தான் தெரியும்.

நேரம் கழிய சாவகாசமான தன்னைச் சரி செய்தபடி என்று சொல்ல முடியாது. திக்கித் திணறி ‘பாய்போடு' கலா என்றதும், ஊம் உட்காருங்க கணேசா அந்த சொல்லில் பலம் அஸ்தமிக்கின்றது. நா உட்கார்ந்த உடனே மீண்டும் கவர் ஒட்டும் அதே பரபரப்பு. இவனைக் குறித்த என் மன அரிப்பு; டே நம்மல்லாம் அப்படியா பழகினோம்? நா கொஞ்சம் படுக்கணும் என்பதாக அவன் சைகை எனக்குத் தோன்றியது. மடியில் தலை வைத்தவனைத் தொட்டுப் பார்த்தேன். பருமன் தொலைந்திருந்த தேகத்தில் என்னென்னவோக் குடியேற்றம். இப்ப எனக்கு அம்மாவப் பார்க்கனும் போலத் தோணுது. ஐயையோ ரயிலுக்கு நேரமாயிடுச்சே. டிக்கெட் ஊகூம் அதைத் தேடி வாங்கறதுக்குள்ள அடுத்த ஷிப்ட் ரயிலே வந்துடும் போல... யப்பா வெக்கத்தாங்க முடியல. இந்தப் பாழ் நிலத்துல ஆன்மா கனவோடு மட்டும் தான் இருக்கனுமா? கூட்ட நெரிசல் கார்டு விசில் அடிச்சிட்டாரு. சாதாரண நாளிலே தரும்புரியிலே வெக்கை கொளுத்தும். இது மே மாசம் ஆச்சே சொல்லவா வேணும்! இன்னைக்கு முப்பது ரூபாய் தான் லாபம் எல்லாரும் ஒயிட் பினாயிலத்தான் கேட்கிறாங்க அப்பக்கூட அப்படி இப்படி பத்துபாட்டில் வித்தேன். இதிலும் ஒரு கூத்து. அதான்டா ஒன்னு பாக்கி. சரக்குப் போட போகனும் தொன்னூறு ரூபாய் தான் கையிலிருக்கு என்கிற என் முகவரியை இவன் எப்படித்தான் கண்டு பிடிச்சானோ தெரியல. நாளைக்கு வரைக்கும் பொறுத்துக் கோட கணேசா. இன்னைக்கு எனக்கும் டல் மூனு பார்ட்டிய பிடிச்சேன். ஒன்னு தான் ஓ.கே.ஆச்சு. குடிச்சிட்டியா. கப் கொடுத்துட்டு சுண்டல்ல கைய போடு பார்ப்போம்.''

இந்த கிருஷ்ணமூர்த்திய சாதாரண எல்.ஐ.சி. ஏஜென்ட் ன்னு நினைக்காதிங்க. ஆபத்துல உதவுறவன் தான் நண்பன்னா எனக்கு ஆபத்தே இல்லாம பார்த்துகறானே. அப்படியில்லாமலா இவன சாமின்னு நான் சொல்லுவேன்? பார்க், கோவிலு, ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு, லைப்ரரி, சினிமா தியேட்டர், வீடுன்னு நான் ஆசைப்பட்ட இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு போவான்; இப்ப நாங்க உட்கார்ந்து இருக்கிறத ராஜகோபால் பார்த்தான் எங்களுக்கு சொர்க்கம். யாரு எங்க போனாலும் ஒரு மணிக்கெல்லாம் சொல்லி வைச்சது போல் வந்திடுவோம். வாட்ச்சுமேன் அண்ணா, தயிர்கார அக்கா, சுக்கு காபி தம்பி, சுண்டல் கார பாட்டி இவங்களுக்கும் சேர்த்தே நாங்க வாழ்ரதா உணருவோம். அவங்களும் அப்படிதான் நினைப்பாங்க.

பிளாட்டோ, அரிஸ்டாட்டில், மா.வோ மார்க்ஸ், லெனின், தாஸ்தோ எஸ்கி, மார்கிவிஸ், காஸ்ட்ரோன்னு சரியா ரெண்டு மாசத்தில் அரைகுறையாவது தேடி படிச்சோமே. இந்த திருப்தியோடு தான் நான் பிரிஞ்சிருக்க முடியாத கிருஷ்ணாவுக்கு பஸ்ஸிலிருந்து பை சொல்றேன். “டே கணேசா ஒங்க பிரின்ஸிய நான் கேட்டதா சொல்லுடா. செலவுக்கு காசு இல்லன்னு தத்தி மாதிரி இருக்காத லெட்டர் போடு பஸ் மூவாயிடுச்சி கைய உள்ள வச்சிக்க மச்சான். ''

இப்பதான் பாழ்நிலத்தில் மழை துவங்கியிருக்குன்னு நினைக்கிறேன். “நடுச்சாமத்தில் எழுந்து கோட்டான் மாதிரி கத்துது பாரு. இழவெடுக்க.'' இது அப்பா அம்மா ஞாபகங்கிறது அந்த ஆயால்ங்களுக்கும் தெரியும். ஆனாலும் அடிக்கிறங்களே! என்ன ரூமுக்குள்ள கட்டிப்போட்டு கதவு பூட்ரதால படுக்கிறதுக்கு முன்னால ஆய் போக விட்டு கழிவிட்டு, உப்பு கரைஞ்ச வெந்நீர்ல வாய் கழுவிவிட்டு, அடுப்பு சாம்பல நெத்தியில் வைச்சு சாமி கும்பிட்டு வயித்து ஓரம் கிடத்திகிட்டு பாட்டும் கதையுமா சொன்னபடி வயித்த தடவுவதும், தலைய வருடுவதுமான சுகத்தில் நான் கண் சொருகி போக சீலத்துணி போர்த்தி அணைப்பாலே என் அம்மாவா மாறமுடியுமா யாராவது?

பாட்டு, பேச்சு, எழுதுதல், படித்தல் எல்லா பரிசையும் ருக்கு டீச்சர் டேபிளில் வெச்சு ஆசிகேட்பேன் பாருங்க. அழுமூஞ்சியா வந்த என்ன மடியில உட்கார வெச்சு சாக்லேட் கொடுத்து, எழுத படிக்க சொல்லி கொடுத்தவங்களாச்சே. அஞ்சாவது படிக்கிற இப்பக்கூட எனக்கு ஆஸ்டல் பிடிக்கலேங்க சிரங்கு, காய்ச்சல், அம்மைன்னு மினி ஆஸ்பிடல் மாதிரி படுத்து கிடக்கிறோமே. ஹெட் மிஸ்ட்ரஸ் சும்மா சொல்லக்கூடாது. அரசாங்கத்தால ஒதுக்க முடியாத பணத்தை அதாங்க அவங்க சம்பளத்தில் இருந்து செலவு பண்ணுவாங்க. அமெரிக்ககாரணா நடிச்சதுக்காக எல்லாரும் என்னை பராட்டுறாங்க. மூணு மாசமா டயலாக் சொல்லி கொடுத்து பேண்ட், சர்ட் எடுத்துட்டு வந்து மேக்கப் போட்டுகிட்டு மேடையில் ஏத்தின சமையல்கார அக்கா யாருக்குங்க தெரியும். என் வாழ்க்கையில் முதல் பேண்ட்டும் முதல் நாடகமும் இது தான்கிறத நீங்களும் தெரிஞ்சிக்கணுமே.

மன உளச்சல் தாங்க முடியாதப்ப இரண்டாயிரத்தில் கிடச்ச சுப்பையா, 2003ல் கிடைச்ச கிருஷ்ணா, 2005ல கிடைச்ச தமிழ் சன்னர் இந்த நட்பு வரிசைய நினைச்சு என்னை சரிப்பண்ணிப்பேன்ங்க. இப்ப முடிய பிடிச்சி இழுக்கிறானே இந்த குட்டி பையன் என் மாமா மகளோட குழந்தை எனக்கும் அவளுக்கும் நாலு வயசு வித்தியாசம். எங்க ஊர்ல பொண்ணுங்கள சின்ன வயசிலே கட்டி கொடுத்திடுவாங்க. 16 வயசில கல்யாணம் கட்டிகிட்டதுதான் வனிதாவோட புரட்சி. சின்ன வயசிலயிருந்தே எனக்கு ஒண்ணுனா தனக்கானதா நினைப்பா. மாட்டு மேய்ச்சலுக்கு எங்க மாட்டையும் ஓட்டிக்கிட்டு என்னையும் கூட்டிட்டு போய் பம்பரம் சுத்தறது, கோலி சுண்டறது, மரம் ஏறரது தேங்காய் உரிக்கிறது இப்படியெல்லாம் கத்து கொடுத்ததவிடுங்க. சாப்பிட்ட தட்டக்கூட கழுவ விடமாட்டா இப்பக்கூட இவ என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட் தான்.

திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டுல குடிச்சிட்டு இப்படி நீசு நினைவத்து கிடக்கிறானே இந்த சின்னசாமி. இவன் நல்ல கூத்து பாட்டுக்காரன். இந்த பனிரெண்டு மணி சாமத்தில இருமி கக்கிற சத்தம் யார சும்மாவிடுங்க. என்னானு டீக்கடையில விசாரிச்சது தான் சாக்கு.

‘உங்காளு உங்காளு'ன்னு என்ன பாசமா ஒதிங்கினங்க நானும் காசுக்குத்தான் வீட்டுக்கு போய்கிட்டு இருக்கேன் இந்த சமயத்தில இவன எப்படி ஆதரிக்கிறதுன்னு மண்டைய சொரிஞ்சுகிட்டு நின்னப்ப வாங்கின அதே கடையில திண்பண்டங்களக் கொடுத்து வாங்கின நாற்பது ரூபாய் வச்சி தருமபுரி பஸ்ல ஏறிக்கிட்டோம். அஞ்சாவது வரைக்கும் ஒன்னா படிச்சதுகாக இதக்கூட செய்யலனா ச்சு! இப்ப காலை நாலு மணி ஆகுது. அவன மல்லாபுரம் பஸ்ல வைச்சிட்டு கொஞ்சம் ரிலாக்ஸா நடந்து வந்துகிட்டு இருந்தாங்க. டேய் கணேசாங்கற குரல் பனிக்காத்து மாதிரி என்ன நடுங்க வைச்சது. அது சக்திவேல் அண்ணாதாங்க. என்னண்ணா இந்த நேரத்தில். பூக்கடையில “முனிராஜ் போயிட்டான்டா'' என்று சகஜமாக சொன்னதால் நிஜமாகவா சொல்றீங்க “அடப்போடா'' இனிமே என்னால என்ன பேச முடியும்.

கையில வேற காசு இல்ல. ராஜன்னா கடைக்கும் சாவுகிராக்கி மாதிரி இந்த நேரத்தில போகக் கூடாதுங்கிறது எனக்கும் தெரியுங்க. அதனாலத்தான் பதினோறு மணி வரைக்கும் இந்த பாத்ரூம் பக்கத்திலே புட்டம் கடுக்க உட்கார்ந்து இருந்திட்டு போறேன்.

சின்ன வயசில எனக்கு தெரிஞ்ச பெஸ்ட் அறிவாளி அவர்தான். வயசிலயும் என்னவிட இரண்டு மடங்கு பெரியவராச்சே பெங்களூர் ஒயிட்பீல்டுல ஆறாவது வரைக்கும் மெட்ரிக்குலேஷன் படிச்சவர். என் கூடத் தான் அஞ்சாவது வரை தமிழ் மீடியத்திலேயும் படிச்சாரு. நாங்க அஞ்சாவது படிக்கிறவரைக்கும் எல்லா நாளும் புதுசு புதுசா இருக்கும். அவருக்கு தமிழிலே பேசத்தான் கற்று கொடுப்பேன். இங்கிலீஸ் புரிஞ்சிக்கிறது, கன்னட, ஹிந்தி பாட்டு கதையும்னு நிறைய சொல்லி தருவாறு, நிஜவ நொடி அல்லி நன்னாகு நல்லேன். பிரித்தியரங்கு செல்லிதே., யாரிவலு யாரிவலு சுஸ்மலி கன்னவளுராமனல்லி தொட்டதல்லி கம்மனந்து அரலிதளு, இப்படி எஸ்.பி.பி.போன்ற மனுஷங்களோட பாட்ட பாடி பரிசு கிடைச்சதின்னா அவருக்குதான் முதல் நன்றி.

எஸ்.டி.டி. பூத் ராஜன்னா இரண்டு மாசத்துக்கு முன்னால அவர பார்த்த ஞாபகத்த சொன்னாரு. அவருக்கிட்ட காசு கேட்ட உடனே என் கூடயே கிளம்பி வந்தாரு பாருங்க. எங்க தொடக்கப்பள்ளியோட முடிவு நாட்கள் ரொம்ப மர்மங்கிறது மட்டும் என் நினைப்பு. அந்த கட்டத்திலே சனிக்கிழமை ஆச்சுன்னா இறைவரமுன்னு தான் தோணுது. ஏதாவது ஒரு பாட்டை எழுதிக் கொடுத்து மனப்பாடம் செய்ய சொல்லிட்டு அவர் மட்டும் தனியா ரூம் சாத்திக்கிவாரு. அவர் முட்டியில் காயம் இருக்கிறத தெரிஞ்சுக்கிட்ட நான் அவர பார்க்கிறப்பல்லாம் குடைஞ்சிகிட்ட இருந்தேன். மாடிப்படி சந்துல எனக்கு மட்டும் அவரோட சித்தி நெருக்கத்தையும், அப்பா விலகலையும் சொல்லி வைச்சிருந்தாரு. அப்புறம் வீட்லர்ந்து வெளியேறி கடைகடையா தெருதெருவா அலைஞ்சார்னு கேள்வி.

இப்ப நான் கோடம்பாக்க பங்க் கடையில தான் நிக்கிறேன். என் வாழ்க்கையில கடந்து போன தருணங்களெல்லாம் இப்படி தான் கடக்க முடியாததும் மர்மம் நிறைஞ்சதும் இருக்கிங்கிறது இந்த அண்ணாச்சி தெரியும். என்ன ரொம்பவும் கண்காணிக்கிற அண்ணாச்சி அன்னைக்கு மட்டும் ரொம்ப நேரம் நிக்க வைச்சிட்டாரு. “அண்ணாச்சி கிங்க்ஸ் கொடுங்கண்ணா''. “நீ ஏன் ஐயா நாளுக்கு நாள் இப்படி ஆகிற ஏதாவது காதல் கீதல்'' வானம் தன்னை ஒற்றை இடியாக விழுந்துவிட்டு இலேசான நடுக்கத்தோடு தூறலையும் தொடங்கி இருந்தது.Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com