 |
தா.சந்திரன்
‘தமிழர்களை வேட்டையாடி விளையாடும் தமிழ் சினிமா’
பாலியல் வக்கிரங்களையும். வன்முறையையும் புதுப்புது பரிமாணங்களில் சொல்வது தமிழ் சினிமாத் துறையினருக்கு கை வந்த கலை, சமூகத்தின் மேல் அக்கறை கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, சமூகத்தை சீர்கெட வைப்பதற்காகவே கங்கணம் கட்டிக் கொண்டு படமெடுப்பதே கடமை என்றாகிவிட்டது, சமீபத்தில் இப்படிப்பட்ட வரவு வேட்டையாடு விளையாடு
இந்தப் படத்தின் இயக்குநர். தமிழ் இயக்குநர்களின் கனவுலகமாகிய ஹாலிவுட் ரேஞ்சுக்கு வன்முறையை சொல்லியிருக்கிறார், மனநோய் கொண்ட கிராமத்திலிருந்து வந்து மருத்துவத்தில் உயர் படிப்புப் படித்து. வெளிநாடுகளில் சென்று பணியாற்றுகிற - இன்னும் தங்களது துறையில் வளரத் துடிக்கிற இரு இளைஞர்களின் பாலியல் வக்கிரங்களால் கோரமாகக் கொல்லப்படும் கொலைகளும். அதைத் துப்பறியும் காவல் துறையும் என்பதாகப் படமாக்கப்பட்டுள்ளது,
அந்த இளைஞர்கள் கொலை செய்வதை கொடூரமாகச் செய்கிறார்கள் என்றும் கொலைக்கு முன்னால் பெண்களை கற்பழித்து விடுகிறார்கள் என்றும் ஒரு முறை படத்தின் ஆரம்பத்திலேயே காட்டியும் விடுகிறார்கள், கதாபாத்திரங்கள் மூலம் சொல்லியும் விடுகிறார்கள், அதோடு அந்த விசயங்களை முடித்துக் கொள்வதில்லை, மாறாக திரும்பத் திரும்ப நான்கைந்து முறை மிகவும் மனதை பாதிக்கிற வகையில் வக்கிரமாக அந்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது, நான் படத்தை பார்த்துக் கொண்டிருந்த போது இருக்கைக்கு அருகிலிருந்த ஒரு குடும்பத்தினரில் இருந்த இரு குழந்தைகள் மீண்டும். மீண்டும் அந்தக் காட்சிகள் வரும் பொழுதெல்லாம் “அப்பா பயமா இருக்குப்பா. போலாம்பா” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள், அக்குழந்தைகளின் தாயும். “எப்படி இந்த மாதிரி எல்லாம் எடுக்கற சீன்களை சென்சார் போர்டு அனுமதிக்கிறாங்க” என்று கணவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார், (இதெல்லாம் நடந்தாலும். அந்தக் குடும்பம் முழுப் படத்தையும் பார்த்து விட்டுத்தான் போனது என்பது தமிழ் சமூகத்தின் அவலங்களில் ஒன்று),
இப்படத்தில் அனைத்து விதமான காட்சிகளும். மனதில் ஒன்றும்படியும். பாதிப்பை ஏற்படுத்தும்படியும் மிகச் சரியாகவே காட்சிப்படுத்துப் பட்டிருந்தது, நாயகனும். அவனின் மனைவியும் பாடும் ஒரு பாடலும். படத்தின் வன்முறையைப் போலவே நம்மைப் பாதிக்கக்கூடிய ஒரு விசயம்,
இரு இளைஞர்களாலும் நடத்தப்பட்டதாகக் காட்டப்பட்ட பாலியல் வக்கிரங்களும். கொடூரமாகக் கொல்லப்படும் விதமும் திரும்பத் திரும்பக் கூறப்படாமல் இருந்திருந்தால் அதாவது அப்படிப்பட்ட காட்சிகள் காட்டப்படாமல் இருந்திருந்தாலும். எந்த விதத்திலும் படத்தின் வேகம் குறைந்திருக்காது, மாறாக எந்த விதத்திலும் மனதுக்கு அழுத்தம் தராமலேயே திரைக்கதை நகர்ந்திருக்கும், ஆனால் நமது தமிழ் சினிமாவிற்கே இன்னும் சொல்லப் போனால் தமிழ் சமூகத்திற்கே இருக்கிற பெரிய நோய், எதைச் சொன்னாலும் சாதாரணமாகச் சொல்லாமல். மிகவும் உணர்ச்சி வசப்பட்டோ அல்லது உணர்ச்சி வசப்பட வைக்கிற அளவுக்கு. அளவுக்கு மீறி அதை விரிவாக்கியே சொல்வது தான், இதனால் தான் பாசத்தைச் சொன்னாலும் குடம் குடமாக கண்ணீர் சிந்துவதும். கொலையைச் சொன்னால் குடம் குடமாக இரத்தம் சிந்துவதும். தமிழ் சினிமாவின் சகிக்க முடியாத அம்சமாகிவிட்டது,
வெளிப்படையாகத் தெரிகிற இந்தக் காட்சிகள் தரும் அதிர்ச்சியை விட நுணுக்கமாகத் திணிக்கப்பட்டிருக்கிற அரசியல் பெரும் அதிர்ச்சி தருகிறது, கதையில் வில்லன்களாகக் காட்டப்பட்டிருக்கும் இரு இளைஞர்களும் ஓரினப் புணர்ச்சியாளர்கள் என்று சித்தரிக்கப்படுகிறார்கள், அவ்வாறு அவர்கள் இருப்பதை கேவலப்படுத்தக் கூடிய வகையிலான ஒரு வசனத்தின் மூலம் தெரியப்படுத்துகிறார் இயக்குநர், அவ்வாறு வெளிப்படுத்துவதன் மூலம் ஓரினப் புணர்ச்சி என்பது தவறானது. அசிங்கமானது என்று சமூகத்தில் நிலவுகிற பொதுவான மனோநிலையை மேலும் நியாயப்படுத்துகிறார், அதாவது சமூகம் பாலியல் உறவுகள் சம்பந்தமாக ஏற்கனவே வைத்திருக்கிற கட்டுப்பாடான உறவு முறைகளைத் தவிர மற்றவை அனைத்தும் முறைகேடானவை என்ற அர்த்தத்தில் கற்பு நெறி தவறாத என்கிற அர்த்தத்தில்,
இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது அவ்வாறு ஓரினப் புணர்ச்சியாளர்களாக அறியப்படுபவர்களது பெயர்கள் தூய தமிழ்ப் பெயர்கள்ட - இளமாறன். அமுதன் என்பது, இதைத் திட்டமிட்ட அரசியலாகத் தான் கருத வேண்டியிருக்கிறது, காரணம். சமூகம் அங்கிகரித்த ஒழுங்கிற்கு எதிராக சமஸ்கிருத மயமாக்கலை எதிர்த்துத் தமிழ் பெயர் வைத்துக் கொள்வதென்பது
தமிழகத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய அரசியல் நடவடிக்கைகளில் ஒன்று, எனவே. மதத்தால் உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறை பாலியலை மீறுவதையும் சமஸ்கிருத மயமாக்கலை மீறுவதையும் ஒரே பார்வையில் வைத்துப் பார்ப்பதற்கான ஏற்பாடு இது, இந்த நுண்ணரசியல் மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று,
இதோடு அவ்விரு இளைஞர்களும் காவல்துறையினரால் ஒரு நாள் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்படுகிறார்கள், அந்தக் காட்சியில் அரவாணி ஒருவரைப் பயன்படுத்தி அவ்விளைஞர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாகக் காட்டப்படுகிறது, இதுவும் மூன்றாவது பாலினத்தைக் கேவலப்படுத்தும் முயற்சியே, இதுவும் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று, இந்த சித்திரவதையே கொலை செய்யவும். வக்கிர எண்ணங்கள் உருவாகவும் ஒரு காரணம் என இயக்குநர் சொல்கிறார், மிகவும் கொடூரமாகக் காட்டப்பட்ட காட்சிகளை நியாயப்படுத்த இந்த காவல்துறை சித்திரவதை தேவைப்படுகிறது, ஆனால். மதம். சாதி. அரசு இவற்றின் பெயரால் உருவாக்கியுள்ள அதிகாரத்தையும். அவ்வதிகாரத்தின் கட்டுப்பாடுகளையும் கட்டிக் காக்கிற காவல் துறையை பெருமைப்படுத்தவே படம் எடுத்துள்ள இந்த இயக்குநருக்கு எப்படியாவது காவல்துறையை காப்பாற்றி விட வேண்டுமேன்ற ஆசை, எனவே. மூன்று கொலைகளுக்கு மட்டுமே காவல்துறை சித்திரவதை பொறுப்பு என்றும். மற்ற கொலைகளைச் செய்யக் காரணம் அந்த இரு இளைஞர்களும் வக்கிரமான மனநோய் பிடித்தவர்கள் என்பது தான் என்றும் நியாயப்படுத்துகிறார், அதற்காக கிராமத்தில் சிறுவயதிலேயே தங்களது ஆசிரியையே கற்பழித்துக் கொன்றவர்கள் என்று ஒரு காட்சியை உருவாக்கியிருக்கிறார்,
இங்கே வேறொரு நுணுக்கமான விசயம் கவனிக்கத்தக்கது, அந்த இளைஞர்கள் இருவரும் கிராமத்திலிருந்து வந்தவர்கள் எனக் குறிப்பிடுவது தான், ஐ,ஐ,டி. ஐ,ஐ,எம், போன்றவற்றில் இட ஒதுக்கீடுக்கான போராட்டம் நடைபெறும் வேளையில் கிராமத்து மாணவர்களை. தமிழில் பெயர் வைத்துக் கொண்டுள்ள மாணவர்களை மனப்பிறழ்வு கொண்ட. கொலைகாரர்களாக சித்தரிக்க முயற்சித்திருக்கும் இப்படம் ஏன் தமிழ்நாட்டில் வன்மையாகக் கண்டிக்கப்படவில்லை என்பது நமது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழ் சமூகத்தின் முன்பாக வைக்கப்படவேண்டிய அழுத்தமான கேள்வி,
அது மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கு ஒவ்வாத இருளான காட்சியமைப்புகளோடு. நாயகத்துவத்தை மையப்படுத்தும் படங்களை உருவாக்கிய பெருமை மணிரத்தினத்திலிருந்து தொடங்குகிறது, அடுத்தவனைக் கொல்வது மற்றும் சித்திரவதை செய்வது எப்படி என்று அணு அணுவாகப் பாடம் நடத்துகிற செல்வராகவன். கௌதம் போன்றவர்களின் குரு மணிரத்னம், இப்படத்தின் இயக்குநர் கௌதம்மேனன் தனது படம் மணிரத்னத்தின் சாயலில் இருப்பதாக நமக்கு உணர்த்த வேண்டிய கதாநாயகி மூலமே அதைப் பேசிவிடுகிறார், அப்படிப்பட்ட மணிரத்னம் படத்தில் இப்படிப்பட்ட காட்சிகள் வந்தால் கிளம்புகிற எதிர்ப்பு இப்படத்திற்கு எழவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது,
கற்பு என்பது பெண் அடிமைத்தனத்தை உறுதிப்படுத்த ஆரியர்களால் உருவாக்கப்பட்ட மதம் சார்ந்த ஒழுங்குமுறை எனவும். எனவே அது முற்றிலுமாக அகற்றப்பட்டு பெண் உடல் ஆணின் அதிகாரத்திற்குக் கட்டுப்படாத. சுதந்திரமாக இயங்கக் கூடியதாக அமைந்திட வேண்டும் எனக் குரல் கொடுத்த பெரியாரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில். கற்பைப் பற்றிப் பேசியதற்காக குஷ்பு நடிக்கக்கூடாது என்ற குரல் தமிழகத்தில் ஒலித்த அளவில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இந்தப் படத்திற்கு எதிராக எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,
அரசியல் கட்சிகளில் ராமதாசின் பா.ம.கவும் திருமாவின் விடுதாலை சிறுத்தைகளும் குஷ்புவிற்க்கு எதிராக கண்டனம் தெரிவத்ததோடு. போராட்டங்களையும் நடத்தினார்கள் இயக்குநர்களில் தங்கர்பச்சன். சீமான் போன்றவர்களும். ஏழுத்தாளர்களில் பாமரன் போன்றவர்களும். குறிப்பாக தமிழ்முரசு ஏடும் இப்பிரச்சனைக்கு விதம் விதமாக எதிர்ப்புத் தெரிவித்தனர். ஓருபிரபல நடிகை சொன்ன ஒரு கருத்து கலாச்சாரத்திற்கு எதிராக கடும்பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறிய இவர்காளல் எல்லோரும். குஷ்புவை விட பிரபலமான நடிகர் கமலகாசன் நடித்து முழுத் திரைப்படமாக்கப்பட்டது ஒரு படத்தின் மையமே தமிழர்களை இழிவுபடுத்தியிருப்பதற்கு எந்த எதிர்பார்பையும் காட்டாதது வியப்பையும் விளாக்கையும் எழுப்புகிறது..
தமிழுக்காவும். தமிழர்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் கவிஞர் தாமரைதான் இப்படத்திற்க்கு பாடல்கள் எமுதியுள்ளார் .அவரது கணவர் தியாகு தமிழ் தேசிய ஆர்வலர். இவர்களும் இப்படத்திற்கு எவ்வித விமர்சனத்தையும் வைக்கவில்லை,
மேலே கூறிய உதாரணங்கள் இப்படத்திற்கு விமர்சனமோ. கண்டனமோ வராதது குறித்து சில வினாக்களை எழுப்புகிறது, அதாவது தமிழ் சமூகத்தில் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும். அதன் ஆழமான அரசியலை உற்று நோக்காமல். மேம்போக்கான முறையில் எதிர்க்கும் கருத்துப் பிடிப்பற்ற, முன்பே தீர்மானித்து வைத்துக் கொண்டு அணுகுகிற சாரமற்ற விமர்சனப்போக்கு தான் தமிழகத்தில் விமர்சனம் என்பதன் அர்த்தமா?
அந்தந்த கால கட்டத்தில் நிலவுகிற அரசு அதிகாரத்தைத் திருப்திப்படுத்த எடுக்கக்கூடிய உள்நோக்கம் கொண்ட அரசியல் விமர்சனங்கள் தான் தமிழகத்தில் விமர்சனம் என்பதன் அர்த்தமா?
ஒற்றையாய் ஒரு எதிரியை மட்டும் அர்த்தப்படுத்திக்கொண்டு. அதை மட்டும் எதிர்த்து அதற்கு இணையான மற்ற எதிரிகளைக் கைவிட்டு விடுவது தான் தமிழகத்தில் விமர்சனம் என்பதன் அர்த்தமா?
எளிதாகக் கொலைகாரர்களைக் கண்டுபிடிக்கிற விதமாக திரைக்கதை அமைத்த இயக்குநர் இது போன்ற பல கேள்விகள் எழுப்பக் காரணமாகிவிட்டார், இது போன்ற முயற்சிகளை இனிவரும் காலத்திலேனும் தமிழகம் முறையாக எதிர்க்கும் என நம்புவோம்,
குறிப்பு :
1, சாதி மறுப்பு. சமய மறுப்பு. கலாச்சாரம் போன்றவற்றில் மிகவும் முற்போக்கானவராக தன்னை தமிழகத்திற்குக் காட்டியிருக்கும் கலைஞர் கமலஹாசன் இது போன்ற வசனங்களைப் பேசி கொஞ்ச நஞ்சம் தமிழகத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் முற்போக்கு எண்ணங்களுக்கு சாவுமணி அடிக்கிற வேலையை கைவிடவேண்டும் என்பது முதல் வேண்டுகோள்,
2, தமிழ் திரைத் துறையினரை ஒரே ஒரு அரசாணை மூலம் தமிழ்ப் பெயர் வைத்துத் தான் தீரவேண்டும் எனக் கட்டாயப்படுத்தாமல். தடவிக் கொடுப்பது போல் தமிழில் பெயர் வைத்தால் பரிசுப் பணம் தரப்படும் என அறிவிக்கிற அளவுக்கு இறங்கி வந்து அன்பு நடவடிக்கை எடுத்திருக்கும் தமிழக அரசின் அந்தப் பாசத்தைப் புரிந்து கொண்டு. இது போன்ற வில்லன் கதாபாத்திரங்களுக்கு தூய தமிழ்ப் பெயர் வைத்ததற்கு மேலும் அதிகப்படியான பரிசு தரவேண்டுமென கௌதம்மேனன் போன்ற இயக்குநர்கள் கோரிக்கை வைக்கவேண்டாம் என்பது இரண்டாவது வேண்டுகோள்,
|