|
எங்களைப் பற்றி... |
|
|
தமிழில் ஒரு என்சைக்ளோபீடியாவை உருவாக்க வேண்டும் என்பதே கீற்று இணையதளத்தைத் தொடங்கியதன் நோக்கமாகும்.
தமிழரின் இலக்கியம் மட்டுமல்லாது, இன்று இன்றியமையாதவையாய் விளங்கும் அறிவியல், மருத்துவம், சினிமா, மற்றுமுள்ள எல்லாமும் தமிழில் இணையத்தில் யாவரும் படிக்க, கீற்று ஒரு கருவியாய், தமிழ் களஞ்சியமாய் விளங்கும்.
அச்சுத்துறை வளர்ந்தபோது, போற்றுதலுக்குரிய தமிழர்கள் சிலர், இந்தியாவின் பரண்களாய் ஒதுக்கப்பட்டிருக்கும் கிராமங்களின் பரண்களிலிருந்து சுவடிகளைத் தேடி எடுத்து தமிழை அச்சில் ஏற்றினர். இப்போது இணையம் வேகமாக வளர்ந்து வளரும் நிலையில், புத்தக வடிவில் இருக்கும் தமிழ்ச் செல்வங்களை இணையத்தில் ஏற்றும் கடப்பாடு நமக்கு உள்ளது.
இந்த பெரும் இலக்கை எட்டுவதற்கு வாசகர்களின் பங்களிப்பையே கீற்று இணையதளம் பெரிதும் நம்பியுள்ளது. இது வாசகர்களால் வாசகர்களுக்காக நடத்தப்படும் ஒரு இணையதளமாக விளங்கும். இலக்கியப் படைப்புகள், மருத்துவ தகவல்கள், அறிவியல் செய்திகள், அரசியல் கட்டுரைகள், புத்தக விமர்சனம், சினிமா விமர்சனம் என கீற்றுவின் அனைத்து பக்கங்களுக்கும் வாசகர்கள் தங்கள் படைப்புகளை அனுப்பலாம்.
குறைவான எண்ணிக்கையில் புழக்கத்தில் இருக்கும் சில அரிய புத்தகங்கள் வாசகர்கள் வசம் இருப்பின், உரியவர்களின் அனுமதி பெற்று கீற்றுவுக்கு அவற்றை அனுப்பலாம். செறிவான சிற்றிதழ்களையும், இணையத்தில் பிரசுரிக்க அனுப்பி வைக்கலாம்.
கீற்று இணையதளத்தில் மேலும் என்னென்ன புதிய பகுதிகளை சேர்க்கலாம், இருக்கும் பகுதிகளை எப்படி மெருகேற்றலாம் என்பன போன்ற ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.
இணைய உலகில் தமிழில் கிடைக்காத பொருள்களே இல்லை என்னும் நிலையை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்குவோம்.
கீற்று ஆசிரியர் குழு
|
|
|
|
|
|
|
|