கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
உலோகம், ரப்பர் இரண்டும் கலந்த கலவையில் உருவான புதிய தயாரிப்புதான் உலோக ரப்பர். இதை ‘ஸ்மார்ட் ஸ்கின்’ என்று அழைக்கிறார்கள். மெல்லிய தோல்போன்று இருக்கும் இந்த உலோக ரப்பர் வெகுஜால வேலைகளை செய்யுமாம்.
ஒரு சிறு மில்லிமீட்டர் தடிமன் அளவிலான இந்த உலோக ரப்பர் பளபளப்பான காகிதம் போன்ற தோற்றம் கொண்டது. இதை சுருட்டலாம், மடக்கலாம், இரண்டாக மடித்து பைக்குள் வைத்துக்கொள்ளலாம். சுமார் 200 டிகிரி செண்டிகிரேடு வெப்ப அளவுகொண்ட நெருப்பில் அல்லது கொதிக்கும் நீரில் போடலாம். அதன்மீது பெட்ரோல் தீ வைக்கலாம். தனது இயல்புநிலையை இழக்காது; கருகாது; உருகாது; உடையாது. அதே நேரத்தில் மின்சார கடத்தியாகவும் செயல்படக்கூடியது.
தீயில் கருகும்பொருள் அல்லது பல துண்டுகளாக மடக்கப்படும் பொருள் மின்கடத்தியாக இருக்கமுடியாது. மாறாக இந்த உலோக ரப்பர் மின்சாரத்தைக்கடத்தும் தன்மையைக்கொண்டுள்ளது. அற்புதமான சக்திகள் நிறைந்த இந்த இரப்பர் செயற்கைத்தசைகள், இறக்கை விமானம், ஆடைகள், கம்ப்யூட்டர் பாகங்கள் போன்றவை செய்யும் நவீன தொழில்நுட்பத்தில் பயன்படுகிறது. அபாயகரமான பணிகளில் ஈடுபடும் எந்திர மனிதனை தயாரிக்கமுடியும். கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை சிறிய அளவில், குறைந்த எடையில் தயாரிக்கமுடியும்.
ஆனால் உலோக இரப்பர் தயாரிக்கும் பணி மிகவும் கடுமையானது. இந்தப்பணியை பெரும்பாலும் ரோபாட்டுகள்தான் செய்கின்றன. நேர் மின்னூட்டம் செய்யப்பட்ட உலோகத்தின் அயனிகலவை, எதிர் மின்னூட்டம் செய்யப்பட்ட எலாஸ்டிக் பாலிமர் கலவை இவற்றுடன் அச்சாக கண்ணாடி தகட்டினையும் பயன்படுத்துகிறார்கள். தற்போது சோதனை முறையில் உலோக ரப்பர் தயாரிக்கப்பட்டாலும் தொழில் ரீதியாக தயாரிக்கும் காலம் தொலைவில் இல்லை.
நன்றி: கலைக்கதிர்
தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
பழங்கள் காய்கறிகள் போன்றவற்றை பைகளிலும், டப்பாக்களிலும் அடைத்து சீல் செய்து கடைகளில் விற்கிறார்கள். இந்த பொட்டலங்களுக்குள் தீமை செய்யும் Salmonellosis, ஈகோலி பாக்டீரியாக்கள் இருப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழிப்பதற்காக பொட்டலங்களை சீல் செய்வதற்கு முன்னால் உள்ளே இருக்கும் வாயுவை உறிஞ்சி எடுத்துவிட்டு ஓசோன் வாயுவை அடைக்கும் நடைமுறை இப்போது வழக்கத்தில் இருக்கிறது. ஓசோன் வாயுவிற்கு பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் உண்டு.
பர்டியூ பல்கலைக்கழக ஆய்வாளர் கெவின் கீனர் என்பவர் ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளார். நம்முடைய சுற்றுப்புறத்தில் நிரம்பி இருக்கும் ஆக்சிஜன் வாயுவை எளிய முறையில் அயனியாக்கம் செய்து ஓசோன் வாயுவாக மாற்றும் முறைதான் அது. பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பொட்டலங்களில் அடைத்து சீல் செய்தபிறகும்கூட உள்ளே இருக்கும் தீமைசெய்யும் பாக்டீரியாக்களை அழிக்கும் தொழில் நுட்பம் இது. உணவின் மூலம் கடத்தப்படும் நோய்க்கிருமிகள் ஆரம்ப நிலையிலேயே அழிக்கப்பட்டுவிடுவதால் ஒரு பயனுள்ள தொழில்நுட்பமாக இது கருதப்படுகிறது.
இரண்டு உயர் மின் அழுத்த, குறைந்த வாட் கம்பிச்சுருள்களை சீல் செய்யப்பட்ட பொட்டலங்களுக்கு வெளியே வைக்கும்போது ஒரு காந்தப்புலம் உருவாகிறது. இந்த காந்தப்புலம் பொட்டலங்களுக்குள் இருக்கும் ஆக்சிஜன் வாயுவை அயனியாக்கம் செய்து ஓசோன் வாயுவாக மாற்றிவிடுகிறது. 30 வினாடிகளில் இருந்து 5 நிமிடநேரத்தில் பாக்டீரியாக்களை அழிக்கும் பணி முடிவடைந்துவிடும். இறுதியில் அயனியாக்கம் செய்யப்பட்ட ஆக்சிஜன் வாயுவும் அதனுடைய பழைய நிலைக்கு திரும்பிவிடும். 30 வாட் முதல் 40 வாட் வரையிலான மின் ஆற்றலில் இந்தக் கருவி செயல்படுவதால் சிக்கனமானது. பொட்டலத்தின் வெளிப்புறம் மிகச்சிறிய அளவிற்கே வெப்பமடைவதால், உள்ளே இருக்கும் உணவுப்பொருளின் சுவை மாறிப் போய்விடுவதில்லை.
கீனரின் கண்டுபிடிப்பில் ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட பொட்டலங்களை பிரிக்காமலேயே பாக்டீரியா நீக்கம் செய்யமுடியும் என்பதுதான் சிறப்பு. “ஒரு பாட்டரியை மின்னேற்றம் செய்வதுபோன்ற எளிய முறை இது” என்கிறார் கீனர். ஆக்சிஜனை அயனியாக்கம் செய்வதற்காக எந்த மின்வாய்களும் பயன்படுத்தப்படுவதில்லை. கண்ணாடி, பிளாஸ்டிக் போன்ற நெகிழ்வுப்பைகளுக்குள் அடைக்கப்பட்டவற்றைக்கூட இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாக்டீரியா நீக்கம் செய்ய இயலும். இன்னும் சொல்லப்போனால் சீல் செய்யப்பட்ட மருந்துகளில் இருந்துகூட பாக்டீரியா நீக்கம் செய்ய இந்த கண்டுபிடிப்பு உதவுகிறது.
அதெல்லாம் இருக்கட்டும். நம்முர் சாமானியனுக்கு இந்த கண்டுபிடிப்பு உதவுமா?
ஒரு கட்டுச்சோற்று பொட்டலத்தையோ, தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட பிரியாணி பொட்டலத்தையோ நீண்ட நாட்கள் பாதுகாக்க இந்த கண்டுபிடிப்பு உதவும் என்றுதான் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.
தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
பணிபுரியும் இடத்தில் இரைச்சல் தவிர்க்க இயலாதது. இரைச்சலினால் செவிப்புலன் பாதிக்கப்படும் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் அதற்கான பாதுகாப்பு சாதனத்தை பலரும் பயன்படுத்துவதில்லை. தற்போது இரைச்சலை அளக்கும் கருவி ஒன்று புழக்கத்திற்கு வந்துள்ளது. இந்தக் கருவி இரைச்சலான சூழலில் மனிதர்களை எச்சரிக்கை செய்கிறது.
ஐரோப்பிய யூனியனில் பணி இடத்தில் வெளிப்படும் இரைச்சலின் அளவு வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது 87 டெசிபல் ஒலிஅளவு மட்டுமே அனுமதிக்கப்படும். 87 டெசிபல் ஒலிஅளவை இரைச்சல் மீறும்போது நிறுவனங்கள் எச்சரிக்கப்படும். ஒலி அளவை மேலும் குறைக்க இயலாத சூழ்நிலை இருக்குமானால் தொழிலாளிக்கு காதுகளைப் பாதுகாக்கும் சாதனம் வழங்கப்படும்.
தொழிலாளிகளை மிரட்டும் இரைச்சல் சிக்கலில் இருந்து பாதுகாப்பளிக்க ‘இரைச்சல் மீட்டர்’ ஒரு புதிய தீர்வாக வந்துள்ளது. ஹாலந்து நாட்டில் ஒரு பாதுகாப்பு மேலாளரால் உருவாக்கப்பட்ட இந்த இரைச்சல் மீட்டர் இரைச்சலின் அளவு எல்லை மீறும்போது தொழிலாளியை எச்சரிக்கின்றது. ஒரு கிரெடிட் கார்டு அளவிலான இந்த இரைச்சல் மீட்டரை உடையில் பொருத்திக்கொள்ள முடியும். இரைச்சலான சூழலில் தொழிலாளி நுழைந்த உடனேயே இரைச்சலின் அளவைக்காட்ட ஒரு விளக்கு எரியத்தொடங்கும்.
80 டெசிபல் அளவிற்கு கீழான இரைச்சலுக்கு பச்சை விளக்கும், 80 முதல் 100 டெசிபல் வரையிலான இரைச்சலுக்கு மஞ்சள் விளக்கும், 100 டெசிபலுக்கு மேற்பட்ட இரைச்சலுக்கு சிகப்பு விளக்கும் எரியுமாறு இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்னும் சொல்லப்போனால் இந்த சாதனம் தொழிலாளிக்கு இரைச்சலைக் கேட்க மட்டுமின்றி பார்க்கவும் உதவிசெய்கிறது.
- தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
மனிதனின் இரத்தக் குழாய்களுக்குள் நீந்திச் செல்லும் நுண்ணிய ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பலகலைக்கழக நுண் பெளதிகம் மற்றும் நானோ பெளதிக ஆய்வுக்கூடத்தில் இந்த ரோபோக்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இரத்தக்குழாய் அடைப்புகளின் காரணமாக செய்யப்படும் சிக்கலான அறுவை சிகிச்சைகளில் இந்த ரோபோக்கள் உதவிகரமாக இருக்குமாம். இரத்தக் குழாய்களுக்குள் ஊசிமூலம் இந்த ரோபோக்களை செலுத்தி செயல்பட வைக்க இயலும்.ஒரு மில்லிமீட்டரில் கால்பங்கு பெரியதான இந்த ரோபோக்களை piezoelectricityஐப் பயன்படுத்தி இயங்கச் செய்ய முடியும் என்கிறார்கள் நுண் எந்திரவியல் மற்றும் நுண் பொறியியல் அறிஞர்கள். சிலவகையான படிகங்கள், பீங்கான்கள் இவற்றின் மீது அழுத்தம் கொடுக்கும்போது மின்னோட்டம் தூண்டப்படுகிறது என்பதுதான் piezoelectricity தத்துவம். இந்த தத்துவத்தை பயன்படுத்தியே நம்முடைய வீட்டில் எரிவாயு அடுப்பை பற்றவைக்கும் கேஸ் லைட்டர்களை இயக்குகிறோம்.
அறுவை சிகிச்சைகளில் சாதாரணமாக catheters எனப்படும் குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவை உண்டாக்கும் காயங்களும் தழும்புகளும் பெரிய அளவில் இருக்கும். மேலும் நுண்ணிய பகுதிகளை இந்த catheter குழாய்கள் சென்றடைய முடிவதில்லை. இனிமேல் இதுபோன்ற நுணுக்கமான அறுவை சிகிச்சைகளுக்கு இந்த நுண்ணிய ரோபோக்கள் பயன்படும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
தகவல்: மு.குருமூர்த்தி
- மனம் என்பது என்ன?
- பயோ-மிமடிக்ஸ் - பூக்களும் பூச்சிகளும் வழங்கும் புதிய தொழில்நுட்பங்கள்
- நினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன?
- வண்ண விளக்குகளின் ரகசியம்
- இசை மருத்துவம்
- பழங்கள் பழுப்பதும் பூக்கள் உதிர்வதும் ஏன்?
- ஒளிரும் கிண்ணம்
- காரோட்டிகள் கண் அயர்ந்தால் என்ன ஆகும்?
- அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ
- செயற்கைக்கால் மம்மி
- தொப்புள் கொடியில் இருந்து இதய வால்வு.
- இரத்தத்தை தூய்மையாக்க ஒரு கருவி
- வேண்டும்போது வேண்டிய அளவு வாசனை..
- இறந்தவர் உடலை பாதுகாக்க
- வெடிகுண்டுகளை முகர்ந்து பார்க்கும் எலக்ட்ரானிக் மூக்கு
- பாலத்தின் உறுதியை அறிவது எப்படி?
- மாதவிலக்கு இரத்தத்தின் மருத்துவ குணம்
- அழுத்தமும் ஓட்டமும் தடையும்
- உயிர்
- உடலுக்கு எரிபொருள் எது?