கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
இசையின் உதவியால் நோயின் தீவிரத்தைக் குறைப்பது என்பது பன்னெடுங்காலமாக அறியப்பட்டுள்ளது. கர்நாடக சங்கீதத்தில் சில ராகங்களுக்கு குறிப்பிட்ட சில நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதாக சொல்லப்பட்டாலும் விஞ்ஞானபூர்வமான நிரூபணம் இல்லை. ஆனால் இசை மருத்துவத்துறையில் இன்றளவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நல்ல இசை மனதையும், எண்ணங்களையும் அமைதிப்படுத்துகிறது. எனவே, இரத்த அழுத்தம், மன அழுத்தம், மன இறுக்கம், தூக்கமின்மை, சீரற்ற இதயத்துடிப்பு போன்ற நோய்கள் இசைமருத்துவத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
ஆல்சீமர் நோய் எனப்படும் அறிவுத்திறன் வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மொசார்ட்டின் பியானோ இசை ஒலி நாடாக்களை தினசரி ஒரு மணிநேரம் கேட்க வைத்தனர். பின்னர் நோயாளிகளின் அறிவுத்திறன், நினைவாற்றல் ஆகியவற்றை பரிசோதித்தபோது 25 முதல் 50 சதவீதம் வரை அதிக மதிப்பெண் பெறுவது கண்டறியப்பட்டது. மத்தளம், டிரம்ஸ் போன்ற தோல் கருவிகள் மனக்கிளர்ச்சியை அதிகப்படுத்தி தசைநார்களை தளரச் செய்கிறது. போர்க்களங்களிலும், தீமிதி சடங்குகளிலும், அலகு குத்திக் கொள்ளும் போதும் கொட்டுவாத்தியங்கள், தாரை, தம்பட்டை போன்ற தோல் கருவிகளைப் பயன்படுத்துவதால் மனக்கிளர்ச்சி ஏற்பட்டு உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு புதிய வேகம் உண்டாகிறது.
மெலடோனின் என்பது மூளையில் சுரக்கும் ஒரு வேதிப்பொருள். நல்ல இசையைக் கேட்கும்போது மெலடோனின் அதிக அளவில் சுரப்பதால் மன அழுத்தம், மன இறுக்கம், கோபம், எளிதில் உணர்ச்சி வயப்படுதல் போன்ற பல நிலைகளைக் கட்டுப்படுத்தும் சக்தி இந்த மெலடோனுக்கு உண்டு.
ஆனால் எல்லா இசையும் நோயைக் குறைப்பதில்லை. மனதுக்கு மகிழ்வான, மென்மையான இசைக்கு மட்டுமே நோய்களைக் குணப்படுத்தி மனதை அமைத்திப்படுத்தும் ஆற்றல் உள்ளது. ராக், மெட்டல் ராக் போன்ற துரித இசைகள் மனக்கிளர்ச்சியை உண்டு பண்ணுவதோடு, இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்துகின்றன. மன இறுக்கம், இரத்தக்கொதிப்பு, இருதய நோய்கள், தூக்கமின்மை போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தகைய கொடுமையான இசையைக் கேட்காமல் இருப்பது நல்லது.
நன்றி: கலைக்கதிர்
- தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
வாயுநிலையில் உள்ள தாவர ஊக்கியான எத்திலீன் பழங்களை பழுக்கச்செய்கிறது; பூக்களை உதிரச்செய்கிறது. பழங்கள் மற்றும் பூக்களின் வாழும் காலத்தை விரைவுபடுத்தும் இந்த எத்திலீன் வாயு தாவரசெல்களில் அதற்கான தூண்டுதல்களை ஏற்படுத்துகிறது.
தாவரங்களின் வாழ்க்கைப்பயணம் முழுவதும் எத்திலீன் வாயு உடன்செல்கிறது. தாவரநாற்றுகளின் ஒளிநாட்டம், புவிநாட்டம், வேர்நாட்டம் பண்புகளுக்கு எத்திலீன் காரணமாக இருக்கிறது. விதை முளைத்தலைத் தூண்டுகிறது; தடைகளைத் தாண்டி தாவரத்தை வளரச் செய்கிறது; வேர்களின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துகிறது; குறிப்பாக வேர்த்தூவிகளை வளரச்செய்கிறது; நைட்ரஜனை வேர்முண்டுகளில் நிலைப்படுத்தும் செயல்களில் துணைநிற்கிறது. ஒரு பழக்கூடையில் ஒர் அழுகிய பழத்திலிருந்து வெளிப்படும் எத்திலீன் வாயு அருகில் உள்ள பழங்கள் அழுகுவதை விரைவுபடுத்துகிறது. இதனால்தான் பழங்களையும் பூக்களையும் விற்பவர்கள் அன்றாடம் தரம்பிரித்து அழுகிப் போனவற்றை அகற்றி விடுகின்றனர். அதே சமயம் நோய்க்கிருமிகளையும் பாதகமான சுற்றுச்சூழலையும் தாங்கி நிற்கும் வலிமையையும் இந்த எத்திலீன் வாயுதான் தாவரத்திற்கு அளிக்கிறது. அதிகப்படியான எத்திலீன் உற்பத்தி விளைபொருட்களில் நாசத்தை ஏற்படுத்துவதால் எத்திலீன் உற்பத்தியை கட்டுப்படுத்தும் ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொள்கின்றனர்.
தாவரங்களில் காணப்படும் EIN2 என்ற புரதம் எத்திலீனின் முயற்சிகளை முறியடிக்கவல்லது என்று ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. அழுகுதல் மற்றும் உதிர்தல் காரணமாக ஏற்படும் பயிர் இழப்பைக் குறைப்பதற்கு இந்த ஆய்வுகள் துணை செய்கின்றன.
- தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
துருக்கி நாட்டு வடிவமைப்பாளர்கள் ஒரு கிண்ணத்தை வடிவமைத்துள்ளார்கள். சமையலறையில் நீலநிற ஒளியில் சாதுவாக குளித்துக்கொண்டிருக்கும் அந்தக்கிண்ணம் பார்க்க அழகானது மட்டுமல்ல. நீண்டநாட்களுக்கு பழங்களை கெட்டுப்போகாமல் பாதுகாத்து வைப்பதற்கும் உதவுகிறது.
இது எப்படி சாத்தியமாகிறது?
கிண்ணத்தின் மேலிருக்கும் வட்டவடிவ விதானத்திலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களின் நீலநிற ஒளி பழங்களை நீண்ட நாட்களுக்கு அழுகவிடாமல் பாதுகாக்கிறது. இதுமட்டுமில்லாமல் புற ஊதாக்கதிர்கள் ஈகோலி வகை பாக்டீரியாக்களையும் எத்திலீன் வாயுவையும் செயலிழக்கச்செய்கிறது. ஈகோலி பாக்டீரியாக்கள் குடல் நோயை உண்டுபண்ணக்கூடியவை என்பதும், எத்திலீன் வாயு பழங்களை அழுகச்செய்துவிடும் என்பதும் நாம் அறிந்ததே.
இந்த சாதனத்தை மின்னேற்றம் செய்து பயன்படுத்தக் கூடியவிதத்தில் வடிவமைத்துள்ளது ஒரு கூடுதல் சிறப்பு.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
களைப்பு மிகுதியால்தான் காரோட்டிகள் ஒரு விநாடி கண் அயர்ந்துவிடுகிறார்கள். மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் ஒரு கார் இந்த ஒரு விநாடி நேரத்தில் 28 மீட்டர்கள் சென்றுவிடும். அதாவது டிரைவர் இல்லாமல் ஒரு கார் 28 மீட்டர்கள் ஓடினால் என்னென்ன நடக்குமோ அத்தனையும் நடந்துவிடும். டிரைவர்களை எச்சரிக்கை செய்வதற்கு புதிய கருவிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.
மெர்ஸிடிஸ் பென்ஸ் கார் நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் வடிவமைத்த கருவியில் ஓர் அகச்சிவப்புக்கதிர் காமிரா நிரந்தரமாக ஓட்டுனரின் தலையை நோக்கி வைக்கப்பட்டிருக்கும். ஓட்டுநரின் கண் இமைக்கும் நேர இடைவெளிகளை இந்த காமிரா பதிவு செய்து கொண்டிருக்கும். ஓட்டுநரின் கண் இமைத்தலில் மாறுபாடு இருக்கும்போது ஒலி எழுப்பி ஓட்டுநரை இந்தக்கருவி எச்சரிக்கை செய்யும்.
மற்றொரு முறையில் ஓட்டுநர் காரை இயக்கும் முறைகள் பதிவு செய்யப்படும். ஓட்டுநரின் இயக்க முறையில் ஏதேனும் மாறுபாடு தெரியும்போது ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யப்படும். நீண்ட தூரம் காரோட்டிச் செல்லும் ஓட்டுநர்களின் சோர்வைப் போக்க தொலைக்காட்சி பெட்டிகளை வைக்கலாம் என்றுகூட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் கார் உரிமையாளர்கள் ஓட்டுநர்களுக்கு முன்பாக தொலைக்காட்சிப் பெட்டி வைப்பதற்கு உடன்படுவார்களா என்பது சந்தேகமே.ஜப்பானிய டயோட்டா கார் உற்பத்தியாளர்கள் கண் அயர்ந்து போகும் ஓட்டுநரை எச்சரிக்கை செய்ய வேறுவிதமான கருவியை வடிவமைத்திருக்கின்றனர். விரைந்து செல்லும் காரின் முன்புறம் சாலையில் வரையப்பட்டிருக்கும் வெள்ளைக் கோடுகளை ஒரு காமிரா பதிவு செய்து காரில் உள்ள கம்ப்யூட்டருக்கு அனுப்பும். காரின் இயக்கம் தாறுமாறாக இருக்குமானால் கம்ப்யூட்டர் ஒலி எழுப்பி ஓட்டுநரை எச்சரிக்கை செய்யும்.
சோர்வு என்பது ஒரு சிக்கலான உளவியல் மற்றும் உடலியல் சார்ந்த பிரச்சினையாக இருக்கும் வரையில், பாதுகாப்பான சாலைப் பயணம் என்பதும் சிக்கலானதாகத்தான் இருக்கும்.
தகவல்: மு.குருமூர்த்தி
- அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ
- செயற்கைக்கால் மம்மி
- தொப்புள் கொடியில் இருந்து இதய வால்வு.
- இரத்தத்தை தூய்மையாக்க ஒரு கருவி
- வேண்டும்போது வேண்டிய அளவு வாசனை..
- இறந்தவர் உடலை பாதுகாக்க
- வெடிகுண்டுகளை முகர்ந்து பார்க்கும் எலக்ட்ரானிக் மூக்கு
- பாலத்தின் உறுதியை அறிவது எப்படி?
- மாதவிலக்கு இரத்தத்தின் மருத்துவ குணம்
- அழுத்தமும் ஓட்டமும் தடையும்
- உயிர்
- உடலுக்கு எரிபொருள் எது?
- காற்றாடி விமானம்
- எச்சரிக்கை! செல்பேசி
- இன்பம் தரும் மின் அதிர்ச்சி
- புற்றுநோய் அறியும் எண்ணியல் (Digital) முறை
- மசாலா பூச்சிக்கொல்லிகள்
- சோப்பு வேண்டாம் தண்ணீரில் முக்கி எடுத்தால் போதும்!
- கூந்தல் வேர்களும் அதிசய மருந்துகளும்
- மூலக்கூறுகளை வருடும் மைக்ராஸ்கோப்