Post mortemவாழ்வின் நிறைவு மரணம் எனப்படுகிறது. மரணம் ஏற்பட்டவுடன் இதயத்துடிப்பு நின்று, மூச்சடைத்து, மூளை செயலிழந்து விடுகிறது. இதுவே உடல் ரீதியான மரணம் எனப்படுகிறது.

மூன்று அல்லது நான்கு மணிநேரம் கழிந்த பின்னர்தான் மூலக்கூறு ரீதியான மரணம் ஏற்படுகிறது. இறந்தவரின் உடலை அடக்கம் செய்யவோ தகனம் செய்யவோ பல சந்தர்ப்பங்களில் காலம் தாழ்ந்துவிடுகிறது. இதுபோன்ற சமயங்களில் மனித உடலின் மாண்பைப் பாதுகாக்க Mortuary Box என்னும் குளிர்சாதனப்பெட்டி பயன்படுகிறது.

இறந்தவரின் உடலை வீட்டிலேயே 2 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் வைத்து பாதுகாக்க முடியும். இதற்கு Mobile Mortuary Box என்னும் சாதனம் பயன்படுகிறது.

இறந்தவர் உடலை பலநாட்கள் பாதுகாக்க வேண்டியிருந்தால் மருத்துவமனையில் உள்ள Fixed Mortuary Boxல் வைத்து பாதுகாக்கலாம். 0 டிகிரி செல்சியஸ் முதல் 8 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை இந்த பெட்டிகளில் பராமரிக்கப்படும்.

இறந்தவரின் உடலை விமானம் அல்லது கப்பல் மூலமாக எடுத்துச் செல்லவேண்டுமானால் tinfoil பயன்படுத்தி 'சீல்' செய்துதான் அனுப்ப முடியும். இந்த நடை முறைக்கு embalming என்று பெயர்.

Embalming வசதிகள் பெரிய மருத்துவமனைகளிலும், பெருநகரங்களிலும் கிடைக்கின்றன.

நன்றி: கலைக்கதிர்
தகவல்:மு.குருமூர்த்தி