தமிழ்நாட்டில் போக்குவரத்தை விரைவு படுத்துவதற்காக என்று கூறிக்கொண்டு நெடுஞ் சாலைகளை நான்குவழிச் சாலைகளை அமைக்க வெளிநாட்டு உயர் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மேம்பாலங்கள் அமைத்து வருகிறார்கள். (விரைவாக ஊர் செல்ல முடிகிறதா?!)

அவ்வாறு விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகர் மேம்பாலம் அமெரிக்க தொழில்நுட்பமான உள்பூட்டு (இண்டர்லாக் சிஸ்டம்) முறையில் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் விருதுநகரி லிருந்து சாத்தூர் செல்லும் ஊர்திகளுக்குத் திறந்துவிடப்பட்டது. ஆனால் அண்மையில் பாலத்தின் வலதுபுற பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்து 25 அடி நீளத்துக்கு சீரழிவு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக மேம்பாலத்துக்குக் கீழே சரக்கூர்ந்துகள் செல்லும் சாலை அருகே 30 அடி நீளத்துக்கு மண் சரிந்து பாலத்திலிருந்து உள்பூட்டு (இண்டர்லாக்) கற்கள் சரிந்து விழுந்துள்ளன. இதுகுறித்து ‘ஆய்வு’ செய்யப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெறுவதாக செய்தி. இந்த மேம்பாலம் கட்ட மூன்று கோடியும், இணைப்புச் சாலைக்கு சில கோடி உருவாக்களும் செலவிடப்பட்டுள்ளது. (இதனால் பயனடைந்தவர் யாரோ).


ஆயிரம் ஆண்டுகளாக நிமிர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோயிலைப் பாருங்கள். தமிழனின் கட்டடக் கலையின் தொழில் நுட்பத்தை நினைத்துப்பாருங்கள். தமிழில் பொறியியல் கல்வி கற்க முடியாதா? எண்ணிப் பாருங்கள்.

 

 

 

 

 

 

Pin It