கூட்டத்தில் இருங்கள் 

கூட்டத்தில் இருங்கள் 

கூட்டத்தில் இருந்தால்தான் 

குதூகலம் 

கூட்டத்தில் இருந்து கொண்டிருங்கள் 

கூட்டத்தில் இருந்து கொண்டிருங்கள் 

கூட்டத்தில் இருந்து கொண்டிருந்தால்தான் 

கொண்டாட்டம் 

கூட்டத்திலேயே இருங்கள் 

கூட்டத்திலேயே இருங்கள் 

கூட்டத்திலேயே இருக்கையில்தான் 

கேளிக்கை 

தனியே இருப்பின் 

தவிப்பு 

தனியே இருந்தால் 

தத்தளிப்பு 

தனியே இருக்கையில் 

தகிப்பு 

தன்னந்தனியே இருந்தால் 

திண்டாட்டம்தான் 

சும்மா(வும்) 

கூட்டத்திலேயே இருங்கள் 

சுமந்து கொண்டும் 

கூட்டத்திலேயே இருங்கள் 

கூட்டத்திலிருந்து பிரிந்துவந்தால் 

சும்மாவிடாது கூட்டம் 

கூட்டத்திலிருந்து தனித்து நின்றால் 

கூட்டம் கொன்றே போடும் 

கூட்டத்திலேயே இருக்கலாம் 

கூட்டத்தை ஏமாற்றி 

கூட்டமே 

கூடிப்பேசித் தலைவனாக்கிவிடும் பிறகு 

கூட்டத்தை மேய்த்துத் தண்ணீர்குடித்து 

குஷாலாக வாழலாம் அப்புறமப்புறம் 

‘டிட்டோ’.