goatsஒருகையில் தொரட்டிக்கம்பு
ஒருகையில் தூக்குவாளி
விந்தி விந்தி நடப்பார் வீரையா
விடிஞ்சது தொட்டு அடஞ்சது வரைக்கும்
ஆடுகளைக் கட்டியலையும் அன்றாடப் பொழப்பு
அவர் வயிறு நிறைவதை விடவும்
ஆடுகள் வயிறு நிறைவது தான் அவருக்கு முக்கியம்
அறுபதைக் கடந்த பின்னும் அசராமக் கொழை ஒடிப்பார்
அஞ்சாறு வருசம் முந்தி பொஞ்சாதி தவறிப்போக
வெசனத்துல உடைந்து போனார்
நோவு கண்ட ஆட்டுக்காக நோன்பிருந்து நேர்ந்துகொள்வார்
ஏசப்பா மாதிரி எப்பொழுதும் குட்டி ஆட்டைச் சுமந்து போவார்
அமட்டுவார் அடிக்கமாட்டார் ஆடுகள் மேல்
அப்படியொரு பேரன்புயார் கண்பட்டதோ
மேகாட்டு மேய்ப்பனுக்கு கிழக்கிருந்து வந்தது கெட்டநேரம்
ரோட்டுக்குப் போன ஆடொன்றைக் காருகாரங்கிட்ட
காப்பாத்த காலெடுத்து ஓடுகையில்
அளவைக் கல்லில் தடுக்கி அங்கனயே
ஆவிவிட்டார் ஆடுகளைக் கதறவிட்டு

- ஸ்ரீதர்பாரதி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.