மரணத்தை சுமந்தலைகிறோம்
மாற்றி யோசிக்க
மறதி தேவைப்படுகிறது

அவர் இவர் என எவருக்கும்
உச்சு கொட்டும் கவலையை
மிக கவனமாக
கடந்து போகிறோம்

காலத்தின் கற்களிடையே
சிற்பமென ஒரு சிந்தனை
மரணத்தை செதுக்கிக்
கொண்டேயிருக்கிறது

நுட்பத்தைக் கடந்து
கடலை மிட்டாய் இனிப்போடு
மரணம் கவனி

அவரவர் மரணத்தில்
அரக்க பறக்க செய்யும் ஒன்றும்
நிகழ்வதில்லை

மாறாக அப்படி ஒரு ஜம்பமாய்
ஒரு நீண்ட நெடுந்தொலைவு
தூக்கம்

- கவிஜி