தாம்பத்ய இரவை
எளிமையாக
பார்க்காதே
அறிவு கொண்டு
புணர நேர்ந்தால்
தோற்றுப் போக நேடும்.
எது வெற்றி?
எது தோல்வி?
நீடிக்கும் குழப்பங்களின்
உச்சியில் தான்
விடிகிறது பொழுது.
பகல் மறைத்த
உடல்களைக் கொண்டு
அலைகிறோம்
இரவுகளில் வெளிப்பட பயந்து
முனங்கலோ, இருமலோ
தூக்கத்தை கிழிக்கும்
ஆயுதமாய் மாறலாம்
இமை திறந்த வெளிகளில்
ஊற்றென வெளிவரும்
கண்ணீரை பதிந்து வை
வேறொருவன் படித்துப் பார்க்க
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அ. இலட்சுமி காந்தன் கவிதை
- விவரங்கள்
- அ. இலட்சுமி காந்தன்
- பிரிவு: புதுவிசை - அக்டோபர் 2005