என்னை நகலெடுத்துப்போன
பரிதியின் விரல்களில்
நான் தொலைந்துபோன பட்சத்தில்
என் பழைய நிழலிலொன்று
அகப்படுமென தேடித்திரிந்தேன்
அந்தி தீரும் நிலையில்
நிழலுருவங்கள் நிஜங்களை
தேடி நிமிர்ந்துகொண்டதில்
என் நிஜங்களை நிழலாக்கி
கொண்டேன்

            ***

வெட்கம்

நிர்வாண குளியலுக்கு
எழுந்து நின்ற
நீர்வீழ்ச்சியில்
ஆடையாய்
ஒதுங்கிக்கொண்டவளின்
கைகளில் அகப்பட்டுக்கொண்டது
நீரின் வெட்கம்

            ***

தீர்ந்த கதை

சுட்ட வடையெல்லாம்
நட்சத்திரமாய்
போனதில்
தீர்ந்த கதையென
அம்புலியின் மரத்தில்
அமர்ந்துகொண்டது
ஒரு யுகத்திற்கான சோகம்

- சன்மது

Pin It