நினைத்த நேரத்தில்
உன்னைக் காண முடிவதில்லை.

நினைத்த நேரத்தில்
உன் குரலைக் கேட்க முடிவதில்லை.

நினைத்த நேரத்தில்
உன் விரல்களோடு கைகோர்க்க முடிவதில்லை.

நினைத்த நேரத்தில்
உன்னை முத்தமிட முடிவதில்லை.

நினைத்த நேரத்தில் உன்னோடு சண்டை
போட முடிவதில்லை.

நினைத்த நேரத்தில்
உன்னைப் பிரிந்து
செல்ல முடிவதில்லை.

பாலத்திற்கு அடியில்
ஓடும் தண்ணீரைப் போல
நினைவுகளின்
அடியில்
வாழ்க்கை
நழுவிச் சென்று கொண்டிருக்கிறது.

- அமீர் அப்பாஸ்