முன்பொரு நாள்
நான் ரசித்துக் கேட்ட
பாடலை
இப்போது யாரோ சிலர் முணுமுணுக்கிறார்கள்...

முன்பொரு நாள்
நான் ரசித்த கவிதையை
இப்போது யாரோ ஒருவர்
சிலாகிக்கிறார்கள்...

முன்பொரு நாள்
நான் குளித்த
நிலவினில் இப்போது
யாரோ சிலர்
குளிக்கிறார்கள்...

முன்பொரு நாள்
நான் நனைந்த
மழையினில் இப்போது
யாரோ சிலர் நனைகிறார்கள்...

முன்பொரு நாள்
என்னோடு உரையாடிய
தூரிகைகளோடு
இப்போது யாரோ சிலர்
வண்ணம் தூவுகிறார்கள்...

என்றாலும் என் வலியெல்லாம்.,

தனித்திருக்கிறேன்
என்பதால் அல்ல...

தவித்திருக்கிறேன் என்பதை
இன்னும்கூட
உணராதவர்களுக்காகவே
தனித்திருக்கிறேன் என்பதே...

- கார்த்திகா

Pin It