துளித்துளியாய்
பொழியத்தொடங்குகிறது
இரவு!
இலையெல்லாம்
பனிவாசம்!
முற்றத்து உயிர்கள்
சேகரித்து
கூடடைத்து
கதவு சாத்துகிறது
இருள்.
கணுக்கால் வரை
உயர்ந்த
நீர்ம இரவில்
நினைவை கப்பல் செய்து
நீந்த விடுகிறேன்
அலைக்கழித்துக் கவிழ்த்துவிடுகிறது
மௌனத்தின் இசை!
நினைவுக்கப்பலில்
சவ்வுடாய் பரவுகிறாய் நீ!

- மைதிலி கஸ்தூரி ரெங்கன்