ஒரு குளத்தில்

தூரெடுத்த இருவர்

அதன் ஆழத்தை நீந்தி மூழ்க முடியாமல்

அதன் வனத்தில் சுற்றித் திரிகிறார்கள்

 

கிளைகளற்ற வனத்தில்

தூளிகட்ட முடியாமல்

தீர்க்கதரிசிகளின் உதவியோடு

சிதைந்தவொரு மரத்தைப்

பெண்ணாக்குகிறான்

 

அது வளர்ந்து

சமூக களத்தில்

சில சொற்களை வீசி

அரசியலாக்குகிறது

 

மீண்டும் மீண்டும்

ஆபாச சொற்களை வீசி

அரசியாகிப் போகலாமென நினைத்தவள்

 

தன் புறத்தை துறந்தும்

அகத்தை அம்பலப்படுத்துவதையும்

சமூகமே விரும்பாததால்

மரபுக்கே

திரும்பிவந்த

மரமாகிப் போனாள்.

Pin It