அவளுக்கும் எனக்குமிடையே
உரைப்பதற்கோ கேட்பதற்கோ
சொற்களாக ஒன்றுமில்லை,
அளிக்கவோ பெறவோ
பருப்பொருளாய் ஏதுமில்லை,
நோக்கவோ மறைக்கவோ
சிறப்பாய் எதுவுமில்லை..

இல்லையில்லையென
மறுக்கையிலேயே
சொற்களாய் திரட்டவியலாத
ஏதோவொன்று
உள்ளிருந்து உரைக்கிறது...
உள்ளது உள்ளதுவென

- கா.சிவா