ஒவ்வொரு வீட்டின்

ஜென்மாந்திர உறவு

மரங்களின் மீது

கழுத்து திருகியோ, தலைகீழாகவோ

தொங்கிக்கொண்டிருக்கின்றன

உயிருள்ள உடல்கள்

 

எங்கிருந்து கற்றார்கள்

ஒவ்வொரு வார்த்தைகளும்

பனிக்கத்தியென

அத்தனை கூர்மையாய்

உயிரை வெளித்தள்ளும் குளிர்மையுடன்

 

வெம்மையும் வெக்கையும்

தாங்காமல்

வேட்கையுடன் வெளியெங்கும்

கற்றியலைந்தும்

போதிமரமொன்றும் தெரியவில்லை

 

வன்மங்களின் கதவுகளெல்லாம்

மரணத்தின் வாசல்களாக

எதையும் எப்போதும்

திரும்பியோ திறந்தோ

பார்க்காதவர்கள்

எதைத்தான் அறிவார்கள்

Pin It