lovers walking

பிரதிபலிப்புகள் அடங்கிய
கனவொன்றுக்குள் உன் நினைவாகி
நிகழ்கிறேன்....!

எனதான கனவுகளை
உனதாக்கியும் நிறைக்கிறேன்....!

மௌன திசைகளிலெல்லாம்
உன் வார்த்தைகளை என் வழிகாட்டலாக்கி
நுகர்கிறேன்....!

ஓசையின்றி ஒளிரும் உன் புன்னகைகளில்
ரகசியம் கவர்கிறேன்....!

பெரும் ஊடலின் நிசப்தத்தில்
திமிறிய ஒற்றை முத்தமாய்
உன் காலடி செய்கிறேன்....!

தோள் உரச நடந்த பொழுதுகளை
களவாடி சொர்க்கம் சேர்க்கிறேன்....!

மதுவுக்கு பிந்தைய பொழுதுகளின்
மயக்கமாய்,
உன் கைகளோடு என் கைகளில்
ரகசியம் கலைகிறேன்....!

ஆனது ஆகட்டுமென ஒரே ஒரு முறை
தழுவி, பூமியில் இன்னுமொரு அதிசயம் பார்க்கிறேன்.....!

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.