அத்தனை ஒய்யாரமா உட்காந்துருக்க
மணியக்கா திண்ணையில

காதல் நனைத்த
கண்ணால பேசற

தூரத்துல கேட்கற அந்த பொத்திவைச்ச மல்லி பாட்டு
கரகரப்பு காரமில்லாம காதுலயே கேட்கறாப்புல இருக்கு

குரல உயர்த்தி யாரையோ கூப்படற
உன் திசை காத்துலகூட காதல்தூசி பறக்குது

அனிச்சையாய் தலைமுடி சரி செய்துகிட்டேன்
மனசெல்லாம் அல்லி மொட்டெடுக்குது

இனி என்னனு
பார்க்காத போல கடந்த நொடியில
என் கைய புடிக்கும் போது
திக்குன்னு முழிச்சுகிட்ட என்னைய
நான் ஒன்னும் சொல்ல முடியல....

திரும்பவும் அதே சாயல்ல படுத்துப் பார்க்கறேன்
காதலா கூட வேணாம்
சும்மாவாச்சும் வந்து போ மாமா...

- இந்து

Pin It