sky paintingசாம்பல் நிற மேகங்களைக் குழைத்து
மான் மறை குதிரை யானை என
வரைந்து கொண்டிருந்தது காற்று
இன்னும் சில
பொம்மைகளுக்கு நடுவில்
உருவமற்றுக் கிடந்த
இளங் கபில நிற மேகத்தைப் பற்றியும்
யோசித்துக் கொண்டிருந்த
அக் காற்றை
ஓரமாய் நின்று
வேடிக்கை பார்க்கும்படி
தள்ளி விடும்
எனது கூர்மையான விழிகள்
ஓவியத்தை
விசித்திரமாய் வரையத் துவங்குகின்றன
இறுதியில்
உங்களிடம் காண்பிப்பதற்காய்
அதனை அழைக்கிறேன்;
நிலவுக்குப் பின்னால்
நகம் கடித்த படி
வெட்கப்படுகிறது ஓவியம்.

- ஏ.கே.முஜாரத்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.