மனிதம் கடந்த
சக்தி ஏதுமில்லாத சிவா
தன் இளநீர் வண்டியை
சாக்கைப் போட்டு மூடி
காவலரைப் பற்றியும் பயமின்றி.
சாலையோர மரத்தடியில் விட்டுச் செல்கிறான்
பக்கத்தில் ஓர் அறையில்
தங்க நகை சூடி அமர்ந்திருந்த
சக்தியை உள்ளே வைத்து,
வெளிப்பக்கம் பூட்டிச் சொல்கிறான் பூசாரி.

- சேயோன் யாழ்வேந்தன்

Comments

2 comments

2
Siva
பூட்டப்படாத வீடுகள்
பொன்னை தேக்கி வைக்காத சமூகம்
நீட்டப்படாத கைகள்
நெஞ்சில் பிறர்பொருள் நினையா நிலை
நாட்டப்படும் நாளில்
சக்தி கோயில் திறந்திருக்கும்
Siva
பூட்டப்படாத வீடுகள்
பொன்னை தேக்கி வைக்காத சமூகம்
நீட்டப்படாத கைகள்
நெஞ்சில் பிறர்பொருள் நினையா நிலை
காட்டப்படும் இரக்கத்தில்
கஞ்சி இலவசம் நாடா மக்கள்
நாட்டப்படும் நாளில்
நம் சக்தி கோயில் திறந்திருக்கும்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.