sad man 400

உன்னைப் பொருத்தவரை

அந்தச் சம்பவம்

ஒரு கவிதையாவதற்குரிய

அத்தனை அம்சங்களையும் பெற்றிருந்தது.

ஆனால் சம்பந்தப்பட்ட அவன்

உன்னிடம் எதிர்பார்த்தது

ஆறுதலான ஒரு வார்த்தை மட்டுமே.

 

- சேயோன் யாழ்வேந்தன்

Comments

2 comments

2
அன்புள்ள கீற்று ஆசிரியருக்கு,
"பொறுத்தவரை" என்று பிழைதிருத்தம் செய்யும்படி, மூன்று மின்னஞ்சல்களை அனுப்பியிருக்கிறேன். நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலில் உள்ள கட்டுரையிலிருந்தே, கீழ்க்காணும் பத்தியை மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

//இறுதியாக என் பேரன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரிய இனிய நண்பர் பேரா. மறைமலை இலக்குவனார் (இலக்கணச் செம்மல் பேரா. சி இலக்குவனார் அவர்களின் இன்னொரு மகனார்) நடு நிலையில் நின்று சொல்லும் கருத்து :

‘பொறுத்தவரை என்பதே இலக்கணத்திற்குப் பொருந்திவரும் என்பது வாதம்.
கேட்டான்>கேட்ட>கேட்ட வரை
பார்த்தான்>பார்த்த>பார்த்த வரை
என்பது போலப் பொருத்தான்>பொருத்த> எனக் கூற இயலுமா?
எனவே பொறுத்த என்பதே சரி என்பர்.

உங்களுக்கு நேரம் இருந்தால், தமிழறிஞர்களைக் கேட்டுத் தமிழைப் பிழையின்றி எழுதத் தெரிந்துகொள்ளுங்கள். அதை விடுத்து, பிழையைச் சுட்டிக்காட்டியபிறகும், வாரக்கணக்கில் அதைத் திருத்திக்கொள்ளாமல் தமிழை அவமதிக்காதீர்கள்.
மாறா அன்புடன்
சேயோன் யாழ்வேந்தன்
அன்புள்ள கீற்று ஆசிரியருக்கு,
எனக்கு மட்டுமல்ல, தமிழுக்குப் "பொருத்தமானது", "பொறுத்தவரை"தான்.
நீங்கள் அனுப்பிய பதில் அஞ்சலில் உள்ள கட்டுரையின், கட்டுரையாளரைப் பொறுத்தவரை, "பொருத்த வரை" அவருக்கு விருப்பமானதாக இருக்கலாம். சில்லரை என்று எல்லாப் பேருந்துகளிலும் எழுதப்பட்டிருக்கிறது என்பதற்காக, அதுதான் சரியான சொல்லென்று எடுத்துகொள்ள முடியுமா? ஊடகங்களால் கட்டமைக்கப்படும் பிழைகள் எல்லாம் சரியாகிவிடுமா? கட்டுரையாளரே சொல்கிறார், "பொருத்தவரை" என்பது ஊடகங்களால் பெருவாழ்வு பெற்றிருக்கிறது என்று. ஊடகங்கள் தங்கள் தவற்றைத் திருத்திக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.