lock 250
“உன் கடவுளை உள்ளே வைத்துப்
பூட்டுவது எதற்கு,
எவரும் களவாடுவதைத் தடுக்கவா?” என்றேன்.
“என் கடவுளின் மேல் கைவைக்கும் துணிச்சல்
இங்கு எவனுக்கும் இல்லை” என்றான்.
“பின் எதற்கு பூட்டு?”
“‘யாருமில்லாதபோது
அவர் தப்பித்து விடக் கூடாது!”

சேயோன் யாழ்வேந்தன்

Comments

3 comments

3
Murugesan
அருமை ! நல்ல சிந்தனை ! வாழ்த்துக்கள் ! தோழரே!
neethimalar
sirappaka ullathu

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.