தமிழகத்தில் 1980 ஆம் ஆண்டு ஆரிய பார்ப்பனான ராமகோபாலன் என்ற ஆர்எஸ்எஸ் குடுமியின் தலைமையில், இந்து முன்னணி என்ற பயங்கரவாத அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட பின்னர், 1982 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் அது நடத்திய மண்டைக்காடு கலவரம், 1998 ஆம் ஆண்டு கோவையில் நடத்திய கலவரம் ஆகிவற்றைத் தொடர்ந்து இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்த இந்தக் கும்பலுக்கு பொருளாதார உதவிகளை வாரிக் கொடுக்கும் கூட்டமாக வணிகம் செய்யும் நாடார் சாதியையும், குஜராத்தி மார்வாடி சேட்டுகளும் மாறிப் போயினர். 

vinayagar sathurthi rally

தமிழ்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான சாதி மக்களில் இந்த இரண்டு சாதிக்கு மட்டும் தான் இந்து என்ற உணர்வு பீறிக்கொண்டு வருகிறதா?? இவர்கள்தான் இந்து மதத்தை தூக்கி நிறுத்த வந்த கூட்டமா? அதிலும் தாழ்த்தப்பட்ட மக்களை விடவும் கீழான மக்களாய் ஒரு காலத்தில் தாங்கள் வைக்கப்பட்டதை மறந்து நாடார் சாதியினருக்கு அப்படி என்ன பிடிப்பு இந்துமதத்தின் மீது?

இதை எல்லாம் ஆராய்ந்தால்,வெறும் குழப்பமும், எண்ணிலடங்கா புதிர்கள் மட்டுமே மிஞ்சும். உண்மையான காரணத்தை கள நிலவரத்தோடு ஆராய்ந்தால், உண்மையான காரணி விளங்கும். நாடார், மார்வாடி, இஸ்லாமியர் ஆகியோரை ஒரே நேர் கோட்டில் நிறுத்தினால், இவர்களுக்குள் உள்ள வேற்றுமைகள் ஏராளம். ஆனால் இந்த மூவரையும் இணைக்கும் இணைப்புப் புள்ளி அல்லது ஒற்றுமை என்பது "தொழில்" என்ற மூலமே ஆகும். 

இந்த "தொழில்" என்ற மந்திரச் சொல் தான் நாடார்களையும், மார்வாடிகளையும் இஸ்லாமியர்களுக்கு எதிராக காவிகள் பக்கம் இழுத்துச் செல்லும் மூல காரணம் ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த நாடார் சமூகம், கடைகள் மற்றும் சிறு வணிகத்தில் கால் பதித்த போது, அவர்கள் சந்தித்த போட்டியாளர்கள் இஸ்லாமியர்கள். அதே போல 80களின் இறுதியிலும், 90களின் தொடக்கத்திலும் மார்வாடிகள் கோவையில் இறக்குமதியாகி, தங்களின் தொழிலை வேர் பரப்ப முயற்சி செய்த போது, அவர்களும் சந்தித்த போட்டியாளர்கள் இஸ்லாமியர்கள்.

இதற்கு காரணம் இஸ்லாமியர்கள் ஒன்று, இரண்டு நூற்றாண்டுகளாக வணிகம் செய்பவர்கள் அல்ல, நூற்றாண்டுகளாக கடல்வணிகத்தையும், இன்னும் பிற வணிகத்துறைகளிலும் கை தேர்ந்த நிபுணர்களாக விளங்கினர். ஆக இப்படி இருக்கும் சூழலில் 40, 50 ஆண்டுகளாக வணிகத்தில் இறங்கிய நாடார்களுக்கும், தமிழ்நாட்டில் வியாபாரத்திற்காக படை எடுத்த குஜராத் மார்வாடிகளுக்கும் இயற்கையாகவோ, எதேச்சையாகவோ பூர்வாகமாக வணிகத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமியர்கள் தொழில்போட்டியாளர்களாக ஆகிப் போயினர். 

இந்தப் பனி யுத்தத்தை மோப்பம் பிடித்த பார்ப்பன ஆர்எஸ்எஸ் கும்பல், குஜராத் மார்வாடிகளையும், ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களையும் விட கீழான மக்களாக நடத்திய நாடார்களையும் ‘நாம் எல்லாம் இந்துக்கள்’ என்ற பெயரில் ஆரத் தழுவி, "துலுக்கர்கள் ஒழிக" என்ற கோசத்தை மெல்லிய குரலில் ஓதியது. ஏற்கனவே தொழில் போட்டியில் புகைந்து கொண்டிருந்த இஸ்லாமியர் எதிர்ப்பு மனநிலை, இந்த வன்ம கோசத்தை அலாதியாய் ரசித்தது.

இதன் தொடர்ச்சியாய் தான் வருடா வருடம் நடக்கும் விநாயகர் சதுர்த்தியை மார்வாடிகளும், நாடார்களும் இந்துவாய் தங்களை கற்பனை செய்துகொண்டு கொண்டாட ஆரம்பித்தனர். இந்து பக்தி வியாபாரிகளுக்கு விநாயகர் சதுர்த்தி தவிர வேறு எந்த இந்துப் பண்டிகைகளுக்கு இந்து என்ற உணர்வோ, பூரிப்போ வராது. கட்டாயம் அப்படி வர வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால், "துலுக்கன் ஒழிக" என்ற கோசத்தை காது பிளக்க எழுப்ப வேண்டும். கூடவே நடக்கும் ஊர்வலத்தை வம்படியாக மசூதிகள் இருக்கும் தெருக்களில் எடுத்துச்சென்று கலவரம் செய்வோம் என்ற சத்தியப்பிரமாணம் எழுதித் தர வேண்டும். தந்தால் லட்ச லட்சமாய் பணம் கொட்டும். நவதுவாரத்தில் இந்து என்ற உணர்வு பீறிடும்.

விநாயகனைத் தவிர, இங்கே உள்ள முனியாண்டியை, கருப்பராயனைத் தூக்க எல்லாம் வடநாட்டுப் பார்ப்பனர்கள் உத்தரவு தர மாட்டார்களே!! இந்தத் தொழில் பக்தி தான் ஊர் கடை வைத்திருக்கும் அண்ணாச்சி முதல் சரவணா ஸ்டோர் வைத்திருக்கும் பெரு முதலாளி வரை ஆர்எஸ்எஸ் , இந்து முன்னணி கும்பலுக்கு பொருளாதாரத்தை அள்ளித்தர வைக்கும் சூட்சுமம். மாரியாத்தாளுக்கு நோம்பி சாட்டி, வசூலுக்குச் சென்றால் தமிழனை சாடி அனுப்பும் மார்வாடியை, கலவரம் செய்ய பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட விநாயகர் சதுர்த்திக்கு அள்ளி வீச வைக்கும் வியாபார பக்தி. இந்த வியாபார பக்தர்கள் மனதை குளிரவைக்கத் தான், "துலுக்கர்கள் கடையில் பொருட்களை வாங்காதீர்" என இந்து முன்னணி கும்பல் போடும் சந்தைப்படுத்தல் கோசம். எலி அம்மணமாக ஓடுவதற்கான ஒற்றைக் காரணம் இதுவே.

ஆக பார்ப்பனிய காவிக் கும்பலுக்கும் இந்த கூலிப்படை வியாபாரம் என்பது இரு பக்க லாபம். ஒரு பக்கம் இஸ்லாமியர்களை எதிரியாய் சித்தரித்து, உண்மை எதிரியான பார்ப்பனியத்தை காப்பாற்றி விடலாம். இன்னொரு பக்கம் இப்படி வரும் வருமானத்தில் உழைக்காமல் தங்களுக்குத் தேவையான சொத்துக்களை சேர்த்துக் கொள்ளலாம். ஆக ஒரு தேசியம் மட்டுமல்ல, எந்த ஒரு மதமும் கூட பெருமுதலாளிகளின் நலன்களுக்காக கட்டமைக்கப்படும் போலி பிம்பமே!!

- மனோஜ் குமார், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

Comments

16 comments

16
Ragupathy
கட்டுரையாளர் நாடார்கள் மீது புழுதி வாரி தூற்றியுள்ளார். தமிழகத்தில் இன்றும் சுயமரியாதை திருமணங்களை நடத்தி வரும் நாடார்கள் மீது கட்டுரையாளரின் கோபம் பார்ப்பணீய கோபமோ என தோன்றுகிறது. சரவணா ஸ்டோர்ஸ் போன்ற நிறுவனங்கள் நிதி அளிக்கிறார்கள் என்பது உண்மையாக இருக்கலாம். அதே சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் திமுகவுக்கு நிதி அளிக்கவில்லையா? ஆளும் வர்க்கம் வணிகர்களுக்கு கொடுக்கும் இன்னல்களுக்கு பயந்து கேட்பவர்களுக்கு எல்லாம் வாரி கொடுக்கும் அவல நிலை எல்லா வணிகர்களுக்கும் உண்டு. ஆனால் கட்டுரையாளர் மிக லாவகமாக அதை நாடார்களுக்கு எதிராக திருப்புகிறார்.

மோடி வந்ததில் இருந்து வணிகர்களுக்கு பாதிப்பு என வெள்ளையன் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி விவாதத்தில் கூறுகிறார். எனவே நாடார்கள் பாஜக வுக்கு பணம் கொடுக்கிறார்கள் எனில் அது ரவுடிகள் வசூலிக்கும் மாமூல் தானே தவிர இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல... ஆனால் மார்வாடிகள் எப்படி எந்த சூழலில் கொடுக்கிறார்கள் என தனி கட்டுரை எழுதுங்கள்.
நாடார்கள் தாழக்கிடந்த நிலையில் வளர்ந்து விட்டார்கள் என்ற பார்ப்பணிய கோபத்துடன் எழுதுகிறார். அதே நேரம் நாடார்களை தங்கள் வலைக்குள் இழுக்க பெரும் முயற்சி எடுக்கிறது. அதனால் தான் எந்தவொரு மக்கள் செல்வாக்கும் இல்லாத நிலையில் ராதாகிருஷ்ணன், தமிழிசை போன்றவர்கள் பாஜகவுக்கு தொடர்ந்து முகமாக இருக்க முடிகிறது. அவர்களை வைத்து நாடார் இன மக்களை எளிதாக அணுகலாம் என அவர்கள் கணக்கு போடுகிறார்கள். அவர்கள் பெரு முதலாளிகளை மட்டுமே அணுக முடியும்.... மக்களை அணுக முடிந்திருக்கிறதா? நீங்கள் ஒட்டு மொத்தமாக நாடார்களை குறை சொல்வதில் பார்பணிய உள்நோக்கம் இருக்கிறது. நீங்கள் எதை வலியுறுத்த வேண்டும் என்றால் நாடார்களை வலைகுள் இழுக்கும் பாஜக விடம் இருந்து அவர்களை எப்படி விழிப்புணர்வு அடைய வைக்கலாம் என்பது தான். அதை விட்டு விட்டு நாடார்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக திருப்ப நீங்கள் எடுக்கும் முயற்சி ஒரு போதும் நடக்காது.
nizamudeen
Well said, keep writing.
Raj
Stupidly written article. He doesn't know the history or hidden the truth.
செ.நடேசன்
’ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் ஒரு வர்க்கத்தின் முத்திரை குத்தப்பட்டுள்ளது’என்றாஅர் மாவோ. வணிக நலன் என்ற தூண்டிலில் நாடார்களையும், மார்வாடிகளையும் சிக்கவைத்துள்ளது இந்துத்வா கும்பல்!
மலர்
பார்ப்பணீயத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மக்கள் நாடார்கள். பல நூறு ஆண்டுகளாக அடிமைப்பட்ட இனம் ஏதோ கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் வந்த பாதையை மறந்து விடும் என நினைத்தீர்களா? அவ்வளவு இழிவானவர்கள் நாடார்கள் அல்ல... இன்று முன்னேறிய சில நாடார்கள் தங்களது சுய நலத்துக்காக தமிழினத்துக்கே துரோகம் செய்கிறார்கள். அவர்களில் சிலர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு உழைக்கும் நாடார் மக்களால் புறந்தள்ளப்பட்டு விட்டார்கள். துரோகிகள், பிழைப்புவாதிகள் மேலும் மேலும் அடையாளம் காணப்படுவார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் தமிழ் மக்களால் புறக்கணிப்பு செய்யப்படுவார்கள். அப்படி இருக்கும் போது நாடார்களை ஒட்டுமொத்தமாக காவிமயமாக நீங்கள் சித்தரிப்பது உள்நோக்கம் உடையது. பார்ப்பணிய மனோபாவம் கொண்டது.
Tamil selvan
அப்படிப்பார்த்தால் முஸ்லிம்மதத்திற்கு தெரிய பெரும்பாளானோர் நாடார்கள் தானே??!
Tamilan
Stupid and baseless article.
குமார்
தமிழகத்தில் நாடார்களில்தான் கிறிஸ்தவர்கள் அதிகம்... அதனால்தான் சில இந்து நாடார்கள் ஆர்.எஸ்.எஸ்க்கு ஆதாரவாக உள்ளார்கள்... மற்றபடி நாடார்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரி அல்ல
S.T.GURUSAMY
கட்டுரையாளரிடம் நேர்மையான ஆய்வுத்தன்மை இல்லை. பொத்தாம் பொதுவான செய்தியைக் கூறுகிறார். நாடார்களின் வணிகம் என்பது முகமதியர்களின் இந்திய வருகைக்கு முன்பே என்று உண்மையைச் சொன்னால் தகுந்த ஆதாரம் கேட்பீர்கள், அதனால் உங்கள் வழியிலேயே பதில்... நாடார்கள் 40, 50 ஆண்டுகளாக வணிகம் செய்கிறார்கள் என்பது நகைப்புக்குரிய செய்தி. ஒவ்வொரு ஊரிலும் உள்ள கருவாட்டுப் பேட்டை, நெல்பேட்டை என்ற பேட்டைகள் சொல்லும் நாடார்களின் வணிக வயதை. ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களைவிட கீழான... என்ற செய்தியைக் கூறுகிறீர்கள். உண்மையில் நாடார், மறவர்(தேவர்), கம்மாளர் (ஆசாரியார்), பள்ளர், பறையர், இல்லத்துப் பிள்ளைமார் என்று 18 சாதியினரை மேலாடை அணியக்கூடாது என்று திருவிதாங்கூர் சமஸ்தானம் அறிவித்தபோது அனைத்து சாதியினருக்குமாக போராடி வென்றவன் நாடார். அதனால் தான் தங்களுக்காக போராடியவனுக்கு நன்றி கூற மனமில்லாமல் தங்களை உயர்சாதியாகவும் நாடார்களை கீழ்சாதியாகவும் சித்தரிக்க முயல்கிறது. நாடான் நன்றிக்காக காத்துக்கிடப்பவன் அல்ல, அது அவன் கடமை மக்களை காக்கும் நிலையில் இருந்தவன்... மன்னன். தன் கடமையைத்தான் செய்தான். இனிமேலாவது நிறைய நல்ல வரலாற்று புத்தகங்கள் படித்து கட்டுரை எழுதுங்கள். நாடார் மன்னரும் நாயக்க மன்னரும் என்ற புத்தகம் கிடைத்தால் தவறாமல் படியுங்கள்.
pratheep
neenga nalla karuthukal ah sollurathu la thappu illa , but oru caste ah pathi theriama pesina neengalum pinvilaivukal ah santhika neridum,. ( Nadar are Kshatriya ) neenga history ah pathi Sariya theriama ethaum velieda vendam,
Athisum
நாடார் இனத்தை பற்றி முழுவதும் தெரியாமல் தவறாக கட்டுரை ஏழுதுவதற்கு கன்டனம்தெறிவிக்றேன்
M.A.Dharmar
நாடார்கள் முதலில் சாணான் என்று பேசப்பட்டது கடுமையான உழைப்பால் உயர்ந்தவர்கள்.முன்பொரு காலத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் போக முடியாது இப்போது அதே கோவிலில் ராஜ மரியாதையுடன் நடத்தபடுகிறார்கள் இவர்களை காவிக்கும்பல் தனது தேவைக்கு பயன்படுத்துகிறார்கள்.
Mathan
நாடார் இனத்தை பற்றி முழுவதும் தெரியாமல் தவறாக கட்டுரை ஏழுதுவதற்கு கன்டனம்தெறிவிக் றேன்
abu backer
nadaar,s are one of the best community in tamil nadu,,i found ,some of them are more polite and better than my fellow islamic people
Gowrikanthan
கட்டுரை அவதானிபுக்குரிய மூன்று கருத்துக்களைக் கொண்டுள்ளது.
• இந்துத்துவ அரசியல்வாதிகள் பிற மதப்பிரிவினர்களுக்கு எதிரான வெறுப்பியக்கத்தை தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதற்கான பிரதான காரணம் வர்த்தகப் போட்டியே என்ற கருத்து. இப்போட்டிக்கு அழுத்தம் கொடுக்கின்றது. தேர்தல் களம் எனும் மாட்டுத்தொழுவத்துள் கட்டபட்டிருக்கும் அரசியல் கட்சியெனும் மாடுகள்(முதல்த்தலைமுறை இடதுசாரிக்கட்சிகள் உட்பட) இவ்வழியில் சிந்திக்க மறுக்கின்றன. இந்துத்துவப் போதையென்பது வாக்குவங்கிகளைப் பெருக்கிக் கொள்வதற்கான ஒரு உத்தியென்பதே இவர்களின் வாதமாக உள்ளது. சமூகத்தின் வரலாறு என்பது வர்க்கப்போராட்டத்தின் வரலாறே என்றும் ஒவ்வொரு சமூகக் கருத்துக்கும் பின்னால் ஒரு வர்க்க நலன் உண்டு என்ற உண்மையை இக்கட்டுரையாளர் வலியுறுத்துகிறார் போல்தெரிகிறது. இப்பார்வை வளர்த்தெடுக்கப்படவேண்டும்.
• இந்துவவாதிகளின் செயற்பாடுளுக்கான அடிக்கட்டுமான காரணங்களை புரியவைப்பதை குறிக்கோளாகக் கொண்ட ஒரு ஆய்வுக்கட்டுரை இந்துக்களின் மீதான வெறுப்பைக் கக்குவதாகவே அமைந்துள்ளது. ஸ்ரீ லங்கா அரசும், டெல்லியரசும் ஈழத் தமிழர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாகப் பார்ப்பதுபோல், அமெரிக்க, அவுஸ்ரேலியா, ஐரோப்பிய அரசுகள், ருஷ்யா, மியாமர், இச்றேல், இந்தியா ஆகிய அரசுகள் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாகப் பார்ப்பதுபோல் கட்டுரையாளர் அனைத்து இந்துக்களையும் பயங்கரவாதிகளாகப் பார்க்கின்றார். பார்ப்பனியம் எனும் பதத்தைத்தான் அம்பேத்கர் பயன்படுத்திவந்தார் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். பார்ப்பனியர் என்ற சாதிப்பிரிவையல்ல, பார்ப்பனியம் என்ற தத்துவவியலையே குறிப்பிட்டார். பார்ப்பனியம் என்ற சமூகக் கட்டுமானத்தைப் பாதுகாப்பது எவராக இருந்தாலும் அவர்கள் இந்திய ஜனநாயகத்தின் எதிரிகளே.
• பார்ப்பனியத்திற்கு எதிரான வெறுப்பையும், கோபத்தையும் உருவாக்கவேண்டிய கட்டுரை நாடார்களுக்கு எதிரான வெறுப்பையும், கோபத்தையும் ஏற்படுத்துவதில் முடிவடைந்துள்ளது. இது பற்றி இக்கட்டுரைக்கான பின்னூட்டங்களில் காணலாம். ஆகவே நான் அதுபற்றி எதுவும் கூறுவதைத் தவிர்க்கிறேன். ஆனால், ஒரே ஒரு கேள்வி. நாடார் சாதிப்பிரிவினரிடயே வர்க்க. சமூக மேல்நிலையாக்கம் ஒன்று நடைபெறுவதுபோல் அனைத்து சாதிப்பிரிவினரிடையேயும் நடந்துதான் வருகின்றது. தலித்துகள் மத்தியில் இவ்விதமானதோர் அணி தோன்றிவளர்ந்து வருவது தெரியவில்லையா? இவ் அணியினர் தமது சொந்த சாதிக்கு ஏற்படுத்திவரும் அவமானங்கள் சொல்லிமாளாதவை. இதற்காக இச்சாதிப்பிரிவை ஏளனப்படுத்தலாமா? பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டத்தில் தலித்தியம் வகித்துவரும் பங்கை குறைத்து மதிப்பிடலாமா?
Milton
The author doesn't know anything about Nadar community. To satisfy some body this article was written against Nadars. Nadars are not fanatic in any thing neither politics, religion nor cast. If they are fanatic they will be ruler of TamilNadu like Pondicherry and Kerala. Nadars are God fearing, not religious fanatics. We advise the author to study old documents regarding Nadar community and he has to apologise openly to the Nadar Community for the false news he documented in this website. If he need any evidence let him write to me at my e mail id

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.