1. தமிழ் ஈழத்தில் போராளிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் ஒரு தேக்க நிலை நீடிக்கிறதே ?

- கு. சிவநேசன், திண்டுக்கல் 

உண்மைதான். நம் தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஈழப் போராட்டத்தின் உண்மையான நிலையையும் அதன் நெருக்கடி களையும் சொல்லி மக்களிடையே விழிப்பூட்டி, அப்போராட் டத்திற்கு ஆதரவாக தமிழக மக்களின் உணர்வுகளைத் திரட்டுவதற்கு மாறாக, போராளிகளைப் பற்றியும், போராட் டம் பற்றியும் மிகையான பிம்பங்களை ஊட்டி வளர்த்ததன் விளைவாக போராளிகளின் இந்தப் பின் னடைவைச் சீரணிக்க முடியாமல் தமிழக மக்கள் சற்றே அதிர்ச்சிக்கும், திகைப் புக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். 

எனினும், செய்வதறியாது சோர்வுற்றிருந்த தமிழகம் இப்போது மெல்ல கண் விழித்திருக்கிறது. இழந்தது போகட்டும். இனி எஞ்சியிருக்கும் மக் களையாவது காப்பாற்ற வேண்டும் என்கிற விழிப்பு ஏற்பட்டிருக்கிறது. முள் வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு கிடக்கும் 3ஙூ லட்சம் தமிழர்களைக் காப்பாற்று என தமிழகத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கின்றன.  

ஆனால், இப்படி தமிழர்கள் ஒன்று சேர முயன்றால், ஆட்சியாளர்கள் குரல் வளையை நெருக்குகிறார்கள். இதைத் தட்டிக் கேட்கிற அளவுக்கு கட்சிகள், அமைப்புகள் முனைப் போடு இல்லை. அறிக்கைகளும், ஆர்ப்பாட்டங்களும் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. 

ஆளுங்கட்சியோ ஒரு கடுதாசியை எழுதிப் போட்டு விட்டு, தம் வேலையை முடித்துக் கொள்கிறது. இனத்தைப் பற்றி அக்கறை இல்லாத இனத்துரோகம் புரியும் ஆட்சியாக, கட்சியாக மாறிவிட்டது.  

இந்த நிலையில் தமிழீழ ஆதரவு நிலை கொண்ட கட்சிகள் குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்தியக் கம்யூனிஸ்ட் போன்ற பெருங்கட்சிகளும், பல்வேறு தமிழீழ விடுதலை ஆதரவு அமைப்புகளும் இணைத்து ஒரு மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் அல்லது இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டம் நடத்தவேண்டும்.  

இப்படி ஏதாவது நடத்தினால்தான் தமிழகம் கிளர்ந்தெழும். உலகில் உள்ள தமிழர்கள் கிளர்ந்தெழுவார்கள். வதை முகாம்களில் உள்ள 3ஙூ லட்சம் தமிழர்கள் காப்பாற்றப் படுவார்கள். இப்போது ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து குரல் கொடுக்கின்றன. இந்தியாவுக்குள் வர விசாமறுக்கப் பட்ட எலிம் ஷான்டர் என்னும் ஒரு வெள்ளைக்கார மருத்துவ பெண்மணியின் குரல் உலகத்தைத் திரும்பி பார்க்க வைத்திருக் கிறது. ஐ.நா. சபை எச்சரிக்கை விடுக்கிறது. இலங்கை ராணுவ அத்து மீறலை உலகம் கண்டிக்கிறது.  

இந்த நேரத்தில் நம் இனத்தைக் கொன்ற பாவிகளுக்குத் துணை போன இந்திய ஆட்சியாளர்களை, அதற்குத் துணை போனவர்கள், இவர்களுக்கு முட்டுக் கொடுப்பவர்களை அடையாளப்படுத்த நாம் ஓரணியில் திரளவேண்டும். மூன்றரை லட்சம் ஈழத் தமிழர்களின் விடியல் நம் சிறை நிரப்பும் போராட்டத்தால் மட்டுமே இப்போது சாத்தியம். தமிழர்கள் இப்போதாவது ஒன்று சேர்வார்களா என்பதுதான் கேள்வி. 

2. தமிழக முதல்வர் கருணாநிதி மீண்டும் மாநில சுயாட்சிக்கு குரல் கொடுத்திருக்கிறாரே?

- து. மாசிலாமணி, விருதுநகர் 

ஆம். கடந்த நாற்பது ஆண்டுகளாக அவ்வப்போது மாநில சுயாட்சி முழக்கத்தை அவர் முழங்குவதையும், எழுதுவதையும் நான் கண்டும் படித்தும் வந்திருக்கிறேன். ஐயா ஆதித்தனாரால் சின்ன அண்ணாஎன்று அழைக்கப் பட்டு, 1971 பங்களாதேஷ் விடுதலைப் போராட்டத்தின்போது தமிழகத்து முசுபூர் ரகுமான் என்று போற்றப்பட்டவர் இவர்.  

1961இல் சீன யுத்தம் மூண்டு, தில்லி அரசு, பிரிவினைவாத சட்டம் கொண்டு வந்தபோது, திராவிட நாடு கொள்கையை கைவிட்டது திராவிட முன்னேற்றக் கழகம். அதன்பின் தனக்கு நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் அதிலிருந்து மீளவும், தான் தமிழினத் தலைவர்என்பதைக் காட்டிக் கொள்ளவும், அவ்வப்போது ஊறுகாய் போல் தொட்டுக் கொள்ள இந்த முழக்கம் அவருக்குத் தேவைப்படுகிறது.  

தமிழ் மொழி பற்றியும், பார்ப்பன எதிர்ப்பு பற்றியும், பகுத்தறிவு பற்றியும், ஆரிய திராவிட மோதல் பற்றியும் பேச் செல்லாம் ஒரே இடி முழக்கம்தான். அட போங்க... 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் செத்து மடிந்தார்கள். அவர் களைக் காப்பாற்ற முடியவில்லை. கச்சத் தீவைப் பற்றி வாய் திறப்பதில்லை. காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு பற்றி செவி மடுப்பதில்லை. இதற்காக அமைப்பு ரீதியாக எந்தப் போராட்டமும் செய்யவில்லை. 1971இல் வெளிவந்த ராஜ மன்னார் குழு அறிக்கையையொட்டி, 1974இல் தி.மு.க. செயற்குழு எடுத்த முடிவுகள் மீதும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. இதற்காக தில்லியை நிர்ப்பந்திக்க தயாரா யில்லை. எமர்ஜென்சி காலத்தில் கல்வி பொதுப் பட்டிய லுக்குப் போனதை எதிர்த்து வாய் திறக்கவில்லை. பஞ்சாயத்து ராஜ் சட்டம் மூலம் நமது பஞ்சாயத்து நிர்வாகங்களில் தில்லி நேரடியாக தலையிட்டது. எதிர்த்து ஏதேனும் ஒரு சொல் உண்டா? மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் இந்திப் பெயர்களே, அதுவும் வட இந்தியத் தலைவர்கள் பெயரால், நேரு, ஜவஹர், இந்திரா, வாஜ்பாய், ராஜீவ்... என இவர்கள் பெயராலேயே வெளிவருகிறது. இவற்றை எதிர்த்து எந்தக் குரலும் இல்லை. தங்க நாற்கர சாலைகள் முழுதும் இந்தி எழுத்துப் பெயர் பலகைகள். பத்தும் பத்தாததற்கு இப்போது கபில் சிபல் வந்து நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் திறக்கவேண்டும் என்கிறார். விவரங்கெட்ட தங்கபாலு உடனே திறக்கவேண்டும்என்று அறிக்கை விடுகிறார். இவ்வளவையும் பற்றி முத்தமிழ் அறிஞரிட மிருந்து ஒரு பதிலும் இல்லையே.  

இதெல்லாம் இப்படியிருக்க தில்லி மைய மண்டபத்தில் அமர்ந்து எல்லா சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு இருக்கும் போது மாநில சுயாட்சியாவது மண்ணாங்கட்டி யாவது? எல்லாம் ஏமாற்றுவேலை அன்றி வேறென்ன?

Pin It