2015-லிருந்து 2020 வரை சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒதுக்கிய தொகை அதன் பார்ப்பனிய ஆதரவை வெளிப்படுத்துகிறது.

சமஸ்கிருதம் - ரூ. 2,532 கோடி;

உருது - ரூ.837 கோடி

இந்தி - ரூ. 426 கோடி

தமிழ்- ரூ. 113 கோடி

கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒடியா மொழிகளுக்கு சேர்த்து ஒதுக்கிய தொகை வெறும் ரூ.31 கோடி. மக்கள் பேச்சு வழக்கில் இல்லாத பார்ப்பனிய வேதமத சடங்குகளுக்கு மட்டுமே பயன்படுத்தும் மொழிக்கு ரூ.2,532 கொடி ஒதுக்கியுள்ளனர். மக்கள் பேசாத மொழி; பார்ப்பனர்கள் கோயிலில் மட்டும் பேசும் மொழி சமஸ்கிருதம்.

இந்நிலையில் கடந்த மே-15, ஆம் தேதி மத்திய மேல்நிலை கல்வி வாரியம் சி.பி.எஸ்.சி-க்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சி.பி.எஸ்சி பள்ளிகளில் 9-ம் வகுப்பில் மும்மொழித் திட்டத்தை அமல்படுத்த வற்புறுத்துகிறது அந்த சுற்றறிக்கை. இரண்டு இந்திய மொழிகளோடு அந்நிய மொழியை கற்பிக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் மாநில மொழி, ஆங்கிலம் இரண்டைத் தவிர மூன்றாவது மொழியாக இந்தி அல்லது சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது.

சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்பட்ட கூடுதல் தொகையால் வேத பார்ப்பனர்கள்தான் அனைத்துப் பள்ளிகளிலும் நிரம்பி வழிவார்கள். எனவே சமஸ்கிருதத்தை கட்டாயமாகத் திணிக்கும் நோக்கத்திலேயே இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அகில இந்திய கல்வி பாதுகாப்பு குழு பொதுச்செயலாளர் தருண் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் இதைக் குறிப்பிட்டு அந்த சுற்றறிக்கை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.