கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சான்றுச் சட்டம் ஆகியவற்றின் பெயர்கள் இந்தியைப் போல சமஸ்கிருதத்தில் மாற்றப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பெயர் ‘பாரதிய நியாய சங்ஹீத’.

 குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பெயர் ‘பாரதிய நாகரிக் சுரக் ஷ சங்ஹீத’.

இந்திய சான்றுச் சட்டத்தின் பெயர் ‘பாரதிய சக்ஷயா’.

இந்நிலையில் அரசியல் கட்சிகள், தலைவர்கள், வழக்கறிஞர்கள், சட்டத்துறையினர் என மக்களிடம் எழுந்த எதிர்ப்பலையால் இன்று அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவிக்கிறார் அமைச்சர் அமித்ஷா.

முன்பு அமித்ஷா சொன்னார் இது ஆங்கிலேயரின் சட்டம், நம் நாட்டிற்கு உரிய வகையில் திருத்தம், மாற்றம் செய்ய வேண்டும் என்று.

இன்று சொல்கிறார் இச்சட்டங்களில் பெரிதாக ஒன்றும் மாற்றம் இல்லை என்று.

அப்படியானால் ஏன் இந்தத் திருத்த மசோதா ?

ஆளும் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ். நோக்கம் குற்றவியல் சட்டங்கள் சரியாக இருக்கிறதா, இல்லையா என்பதன்று.

அவை சமஸ்கிருதமயப் படுத்திட வேண்டும். மீண்டும் ‘மனு’ வைக் கொண்டு வந்து நிறுத்திட வேண்டும் என்பதுதான்.

இன்று மசோதாவைத் திரும்பப் பெறுவதாக அமித்ஷா சொல்லலாம். ஆனால் அவர்கள் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவர்கள்.

இன்று புலி வேடம் போட்டுத் தோற்றவர்கள், நாளை நரி வேடத்தில், புறக்கடை வழியாக சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவார்கள்.

இதில் இருந்து மக்களும், நாடும் தப்ப வேண்டும் என்றால் ஒரே வழிதான் இருக்கிறது.

2024 பொதுத் தேர்தலில் பா.ஜ.கவைத் தோற்கடிக்க வேண்டும், தோற்கடிப்போம்!

கருஞ்சட்டைத் தமிழர்

Pin It