தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது மிகப்பெரும் அவமானம்! பல்கலைக்கழகத்திற்கு மனோன்மணியம் சுந்தரனார் பெயரை சூட்டியவர் கலைஞர். அவர் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் பாட வைத்தவர் கலைஞர். அந்தப் பாடலுக்கு அரசாணை வழங்கியவர் திராவிட மாடல் ஆட்சி முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலோடு தேசிய கீதத்தையும் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்திய போது ஏற்க மறுத்தவர் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின். ஆளுநர் தான் அவையை விட்டு வெளியேறினாரே தவிர தமிழ்த்தாய் வாழ்த்து முதலிடம் பெறுவதை வெளியேற்ற முடியவில்லை.

விஜய் ஆட்சிக்கு வந்ததும் பதவியேற்பு விழாவிலேயே 'வந்தே மாதரம்' முதன்மையிடம் பெற்றுவிட்டது. பேரவையில் ஆளுநர் உரையில் திராவிட மாடல் ஆட்சி தொடக்கத்தில் அனுமதிக்காத தேசிய கீதம் பாடலும் தமிழ் வாழ்த்துப் பாடலுடன் ஆளுநர் ரவி விருப்பம் போல் நிறைவேற்றப்பட்டு விட்டது.

உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்தாத இந்த ஆட்சியின் மவுன மொழி தான் இப்போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாம் இடத்திற்கு தள்ளி இருக்கிறது. ஆளுநரின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு கல்வி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை என்ற செய்தியைத் தவிர ஏன் கலந்து கொள்ளவில்லை? என்ற காரணத்தை வெளியிட துணிவின்றி மவுனம் சாதிக்கிறார்கள். பாஜக ஆட்சியை நேரடியாக எதிர்க்கத் தயாராக இல்லை என்பதையே இந்த மவுனம் உறுதிப்படுத்துகிறது. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வஞ்சிக்கும் ஏமாற்று நாடகம். முதலமைச்சரின் மவுன மொழிகளுக்கு சொற்களைப் பொருத்திக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்கள். ஜனநாயகத்தின் உரிமைகளுக்கு "சைலன்ட் மோடு" போட முடியாது.

தமிழ் வாழ்த்துப் பாடலில் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய "ஆரியம் போல் உலக வழக்கொழிந்து" என்ற பார்ப்பன சமஸ்கிருத எதிர்ப்பு வரிகளை பெருந்தன்மையுடன் கலைஞர் நீக்கினார் வாழ்த்துப் பாடலில் வசவு வேண்டாம் என்று கலைஞர் கூறினார். அந்தப் பெருந்தன்மை இப்போது ஆரியத்துக்கு இல்லை; அதிகாரத் திமிரோடு தமிழைப் புறந்தள்ளுகிறது!

இனி தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது விலக்கி வைத்த ஆரிய சமஸ்கிருத எதிர்ப்பு சொற்றொடரையும் இணைத்துப் பாட வேண்டும். இதுவே சமஸ்கிருத வார்த்தைகள் நிறைந்த 'வந்தே மாதரத்திற்கு' காட்டப்படும் எதிர்வினையாக இருக்கும்.

 - விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.