2018-2022 வரையிலான காலகட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA) சட்டத்தில் 8947 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் வெறும் 252 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதிலாக அளித்த பதிலில்,

2018 – 1,421 பேர்

2019 – 1,948 பேர்

2020 – 1,321 பேர்

2021 – 1,621 பேர்

2022 – 2,636 பேர்

கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக ஜம்மு காஷ்மீரில் 2,633 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 2,162 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வழக்குகள் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 252 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். அமலாக்கத் துறையை வைத்து எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதைப் போல, உபா சட்டத்தை வைத்து சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்களை ஒடுக்கிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. இச்சட்டத்தின் தேவையை கேள்விக்குள்ளாக்குகிறது இந்த புள்ளி விவரங்கள்.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.