"சிங்களவன் போட்ட குண்டில்
50 பேர் பலியானார்கள்.
500 பேர் புலியானார்கள்"  -  பேரா.ஹாஜா கனி
 
              ஒவ்வொரு தேசிய இனமும் தன் அடையாளங்களையும், தன் பண்பாட்டு விழுமியங்களையும் காப்பாற்ற போராடத் துணிந்திருக்கும் இவ்வேளையில் தமிழ்த் தேசிய சிந்தனை மென்மேலும் தன்னகத்தே செழுமை அடைந்து விரிவடைவதை நாம் காண்கிறோம். நடந்து முடிந்திருக்கும் ஈழப்போரும், அதில் தமிழர்கள் அடைந்த பின்னடைவும் தமிழ்த் தேசிய சிந்தனையினை மேலும் கூர்மைப்படுத்தி இருக்கிறது. ஒரு தேசிய இனம் தனக்கான அடையாளங்களைப் பாதுகாக்க முனைவதும், தன் மொழியின் அடிப்படை சாரத்தினை அறிவியல் உச்சங்களில் ஏற்றி வாழ வைப்பதற்கான தகவமைப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதும் இயல்பானதே. இந்நிலையில் இனம் குறித்த வரையறைவியலில் தவறான பிரச்சாரங்களைப் போதிப்பதன் மூலம் பெருகி வரும் தமிழ்த் தேசிய ஓர்மையினை - மதம், சாதி போன்ற சமூக உள்ளடுக்கு முரண்களை முன்னிறுத்தி முறியடிக்க முயன்றிருக்கும் ஆபத்தானவர்கள் கருத்து நிலையின் துவக்கத்திலேயே வீழ்த்தப்பட வேண்டியவர்கள் ஆகிறார்கள்.
 
              பூர்வகுடி மக்களிடையே அயலார் ஊடுருவல் வழியாய் உருவாகும் சாதி, மதம் போன்ற சமூகக் குழுக்கள் நாளடைவில் அந்த மக்களிடையே உருவாகி இருக்கவேண்டிய உரிமை சார்ந்த ஓர்மை உணர்விற்கு மிகப்பெரிய சவாலாக‌ மாறுகின்றன. இந்த மண்ணில் பூர்வ குடிமக்களாகிய தமிழர்கள் மீது ஆரியர் உள்ளிட்ட அயலார் படையெடுப்புகள் மூலமாகவே சாதிக்குழுக்கள், மதப்பிரிவுகள் தோன்றின என்பதற்கான அனைத்து சாட்சியங்களும் ஏற்கனவே பல ஆராய்ச்சியாளர்களால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. தமிழர் மெய்யியல் வரலாற்றில் சாதிக்கு இடமில்லை என்பதும், இந்த பரந்துபட்ட நிலப்பரப்பில் காலத்தால் பழைமை உடையதாகக் கருதப்படும் சமண, பெளத்த மரபுகளுக்கு மூத்தது தமிழர் மெய்யியல் என்பதும் ஆசீவகம் என்றும், தமிழர் அணுவியம் என்றும் அழைக்கப்படும் இந்த சிந்தனை தமிழர்களுக்கான மெய்யியல் அடையாளமாய் இருந்திருக்கிறது என்பதும் புத்துலக சிந்தனையாய், ஆய்வாய் உருவாகி வருகிறது. (ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம் – பேரா.க.நெடுஞ்செழியன், மனிதம் வெளியீடு). 
 
இச்சூழலில் இந்த மண்ணின் பூர்வகுடித் தமிழர்களான முஸ்லிம்களை தமிழ்ச் சமூகத்திலிருந்து பிரித்தெடுக்கும் நாசகார வேலையை, அ.மார்க்ஸ் போன்ற மூன்றாம் தர பிழைப்பு ஆய்வாளர்கள் செய்யத் துவங்கி உள்ளார்கள். மொழி, இனம், குடும்பம் போன்ற அனைத்துமே கற்பிதம் என உச்சாணிக் கொம்பில் ஏறிக்கொண்டு உரத்துப் பேசும் அ.மார்க்ஸ்க்கு மதம் மட்டும் சமீப காலமாக  இனிக்கும் காரணியாக மாறிப் போனதன் உண்மை அனைவரும் அறிந்ததே. அ.மார்க்ஸ் போன்றவர்கள் மதத்தினை முன்வைத்து இயங்கி இனத்தினைப் பிரிக்கும்  விஷமிகள்; மத அடிப்படைவாதிகளை விட அபாயமானவர்கள்.
 
              முஸ்லிம்கள் இந்த மண்ணின் பூர்வீகத் தமிழர்கள் என்பதும் அவர்கள் தமிழ்த் தேசிய தன்னுரிமைப் போராட்டத்தில் தங்களுக்குரிய பங்கினை நிறைவாகவே செய்து வருகின்றனர் என்பதனையும் யாராலும் மறுக்க இயலாது. மதம், சாதி போன்றவை தமிழ் இன வரலாற்றில் இடையில் தோன்றிய  முரண்கள் ஆகும். மேலும்  இந்து மதம் கடைப்பிடிக்கும் வர்ணாசிரமக் கோட்பாடுகளுக்கு எதிராகவே தமிழர்களின் பூர்வீக மெய்யியல் வரலாறு இருந்திருக்கிறது. எனவே இந்து மதத்தில் நிலவும் சாதீய ஏற்றத்தாழ்வும், இதர சமூகக் காரணிகளுமே தமிழர்கள் முஸ்லிம்களாக, கிருத்துவராக மதம் மாறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பதும் உண்மை. எனவே பூர்வீகத் தமிழர்களான முஸ்லிம்களை தமிழ்த் தேசிய ஓர்மைச் சிந்தனைக்கு எதிராக முன்னிறுத்துவதன் அரசியல் - இன எதிரிகளிடம் எவ்விதக் கூச்சமுமில்லாமல் நக்கிப் பிழைக்கும் பிழைப்புவாதிகளைச் சார்ந்தது.
 
           தமிழ்த் தேசிய சிந்தனை மரபின் அளவுகோல் முழுக்க முழுக்க சமூக அறிவியலை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. ஆனால் மதங்களின் அளவுகோல் அவ்வாறல்ல. குறிப்பாக இந்து மதத்தின் அளவுகோல் சாதீய ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கிய வர்ணாசிரமக் கோட்பாடுகளின்படி அமைந்தது. இந்து மத மேலாண்மையை போதிக்கும், பெரும்பான்மை மதவாதச் சின்னமான ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளை எதிர்த்துத்தான் தமிழ் தேசிய அமைப்புகளின் அரசியல் இருந்து வருகிறது. 1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதித் தகர்ப்பில் ஈடுபட்ட இந்து மத மேலாதிக்கத்தினை ஒற்றைக்குரலாய் எதிர்த்த தமிழர்களின் குரலே இன்றளவும் தமிழ்நாட்டினை மதவாதம் பெருகாத பூமியாய் நிறுத்தி வைத்திருக்கிறது. எனவே தமிழ்த் தேசிய சிந்தனை என்பது மதங்கள் வழி சார்ந்தது அல்ல என்பதும் மதங்களின் மேலாதிக்கத்தினை எதிர்த்து மிகவும் உக்கிரமாக போர் தொடுக்கும் சக்தி என்பதும் இந்த மண்ணில் மதச் சிறுபான்மையான  இஸ்லாமியர்களுக்குத் தோழமையான  குரல் என்பதனையும்  உணர்வு மிக்க தமிழர்களாகிய இஸ்லாமிய உறவுகள் புரிந்தே வைத்துள்ளனர். தமிழர்கள் மதத்தில் இந்துவாக, முஸ்லிம்களாக, கிருத்துவர்களாக இருக்கலாம்; ஆனால் இனத்தில்  தமிழர்களாக இருக்கிறார்கள்.
 
             இஸ்லாமியர்களில்  தமிழ்த் தேசிய சிந்தனையை உள்வாங்கி தன் இனம் உணர்ந்து இனம் காக்கப் போராடும் வீரர்கள் ஏராளம். ஈழப் போரின் கடைசி கட்ட காலத்தின் தமிழினத்தின் அறம் சார்ந்த உணர்வின் உச்சமாய் நின்ற முத்துக்குமாரின் ஈகைக்கு முன்பாகவே, 1995 ஆம் ஆண்டு சிங்களப் பேரினவாதி சந்திரிக்கா யாழ்ப்பாணத்தின் மீது போர் தொடுத்தபோது - சுரணையற்ற தமிழனை சூடேற்ற - அன்றும் ஒரு முத்துக்குமார் இருந்தான். அவன் தான் அருமை தமிழின வீரன் அப்துல் ரவூப். அன்றைய காலகட்டத்தில் தமிழினத்தினை அழித்தொழிக்கும் சிங்களர்களின் பிள்ளைகள் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு விளையாட்டுப் போட்டிக்கு இந்திய அரசால் அழைக்கப்பட்டிருந்தனர். இந்திய அரசின் இந்த இரண்டகத் துரோகம் தாங்காமல், இனம் காக்க, தன் சொந்த சகோதர சகோதரிகளின் துயரம் பொறுக்காமல்.., தமிழினத்தினை உசுப்ப தன்னைத் தானே எரித்துக் கொண்டு இந்த மண்ணில் விதையாய் விழுந்த தமிழன் அப்துல் ரவூப்பினை - அ.மார்க்ஸ் போன்ற - 'சிறுபான்மை உரிமைகளுக்காக எழுதுகிறேன்' என்ற போலி முகமூடியில் - திடீரென்று வானில்  இருந்து குதித்து, இனத்தினைப் பிரிக்கும் பிழைப்புவாதிகளுக்குத் தெரியாது.
 
மாவீரன் அப்துல் ரவூப்பின் தந்தை - அருமை அப்பா அசேன் முகமது இன்றளவும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவர். அது மட்டுமல்ல தமிழினத்தின் போராளியாக இருந்து கடும் பொடாச் சட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியில் சிறைப்பட்ட தமிழ் முழக்கம் சாகுல் அமீது நாம் தமிழர் அமைப்பின்  நிர்வாகிகளுள் ஒருவர். நாம் தமிழர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூத்தன் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர்.
 
                தமிழர்களுக்கு என தரணியில் ஒரு நாடு கட்டி ஆண்ட எம் இனத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனை சந்திக்கச் சென்ற  - கவிதை உலகின் போர்க்குரல் - இன்குலாப்  இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழக முதல்வர் கருணாநிதி அளித்த விருதை திருப்பி அனுப்பிய பெரும் தமிழர் இன்குலாப்பினை இவர்களால் சீரணிக்க முடியாது. இன்னும் ஏராளமான, லட்சணக்கணக்கான இஸ்லாமிய தமிழின வீரர்களை எம்மால் அடையாளம் காட்ட இயலும். 
 
         திருத்துறைப்பூண்டி கலை இலக்கிய இரவில் இந்து மதத்தின் போலித் தன்மைகளை எடுத்துக் காட்டி பேசிய செந்தமிழன் சீமான் மீது  இந்துத்துவா வெறியர்கள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டதும், அந்தக் கலவரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் ஒருவர் கொல்லப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. கோவையில் நடந்த தோழர் மதிமாறனின் புத்தக வெளியீட்டு விழாவில் சீமான், இந்து மத போலித்தன்மைகளை தன் பேச்சால் அடித்து நொறுக்கியபோது பொறுத்துக் கொள்ள முடியாத இந்து மத வெறியர்கள் மிகப்பெரிய கலவரத்தில் ஈடுபட்டதும், பெரியார் திக தோழர்கள் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்து மத வெறியர்களை ஓட ஓட விரட்டியதும் அனைவருக்கும் தெரியும். பெரியாரின் பேரன்களாக தமிழ்த் தேசியப் பரப்பில் செயல்பட்டு வரும் லட்சக்கணக்கான தமிழின இளைஞர்கள் சாதி, மத மறுப்பாளர்களாய் களம் கண்டு வருகிறார்கள் என்பதும்… இவர்கள் தான் மதம் கடந்து, சாதி வென்று இனம் காக்க தமிழ்த்  தேசியம் வென்றெடுக்கும் நம்பிக்கையாய்த் திகழ்கிறார்கள்  என்பதும் அ.மார்க்ஸ் போன்ற நேர்மையற்றவர்களால் பொறுக்க முடியவில்லை.

பால் தாக்கரேவினை செந்தமிழன் சீமான் சபை நாகரீகத்திற்காக 'பெருமகன்' என விளித்ததை வைத்து சொல் அரசியல் பேசும் இவர்கள், ராசபக்சேவினை இலங்கையில் எப்படி விளித்தார்கள் என்பது குறித்து யாருக்கும் தெரியாது. ஒருவேளை அ.மார்க்ஸ் உள் மனச்சான்றோடு  ராசபக்சேவினை கடுமையாக விமர்சித்துப் பேசி இருந்தால் அவரது இலங்கைப் பயணம் இவ்வளவு இலகுவானதாக இருந்திருக்காது; அவர் திரும்பி வந்திருக்கவும் முடியாது. அங்கு வாய்மூடி, 'மெளனம் சம்மதம்' என்று வந்துவிட்டு இங்கு பம்மாத்து வேடங்களைக் காட்டுவது அ.மார்க்ஸின் தற்போதைய பாணி. 

இவரைப் போன்றவர்கள் போராளிகளை அழித்த பிறகான சிங்கள அரசின் தலைவர் ராசபக்சேவின் நடவடிக்கைகள் - இன்றளவும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, முஸ்லீம்களுக்கு எதிராகவும் இருப்பது குறித்து வாய்மூடி கள்ள மெளனம் காக்கிறார்கள். சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இழைத்து வரும் கொடுமைகளை முஸ்தீன் அவர்கள் கீற்று இணையத் தளத்தில் தெரிவித்துள்ளது இச்சமயத்தில் கவனிக்கத்தக்கது. தமிழனின் அறிவுசார் பெருஞ்சொத்தான யாழ்ப்பாண நூலகம் அழிவிற்கும், எண்ணற்ற இளைஞர்களும், இளம் பெண்களும் விடுதலைப்புலிகளாக கருதப்பட்டு முள்வேலி வதை முகாம்களில் அடைக்கப்படிருப்பதற்கும், உலக மகா போர்குற்றங்களுக்கும் காரணமான ராசபக்சே  பற்றி இவர்கள் பேசுவதில்லை. காஷ்மீருக்குச் சென்று மனித உரிமை ஆய்வு செய்யும் இவர்கள் இலங்கைக்குச் சென்று விட்டு வந்து சிங்கள பேரினவாதத்தினைப் பற்றி பேசாமல் தன்னின விடுதலைக்காக போரிட்டு வீழ்த்தப்பட்ட விடுதலைப்புலிகளை  இன்றளவும் வன்மத்துடன் திட்டித் தீர்க்கிறார்கள். காரணம் என்னவென்றால் விடுதலைப் புலிகள் ஒரு சமூகத்திற்கான, ஒரு இனத்திற்கான விடுதலை வீரர்கள். ஆனால் இவர்களோ… அறிவுஜீவிப் போர்வையில் புத்தகம் போடவும், கூட்டம் நடத்தவும் தன்னையே விற்று, வார்த்தை அரசியல் பேசும்  பிழைப்புவாதிகள்.

                ஏற்கனவே தோழர் கார்க்கி அவர்கள் அ.மார்க்ஸ்க்கு எழுப்பிய வினாக்களுக்கு இதுவரை பதிலளிக்காமல் கள்ள மெளனம் காத்து… கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கண்டதையும் வாந்தி எடுக்கும் அ.மார்க்ஸின் போலி முகமூடி மேன்மேலும் கிழித்தெறியப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் சென்னை லயோலா கல்லூரிக்கு அருகில் உள்ள AICUF அரங்கில் ஈழத்தினைப் பற்றியும், தமிழர்களைப் பற்றியும் தரக்குறைவாகப் பேசிய அ.மார்க்ஸினை நோக்கி அந்த அரங்கில் இருந்த உணர்வுமிக்க  தோழர்கள் சிலர் ஜனநாயக முறையில் வினாக்களை முன் வைத்தனர். வளர்மதி என்ற தோழர்  மேடைக்குச் சென்று அ.மார்க்ஸின் பேச்சுக்கெதிரான தனது வினாவினை முன்வைத்தபோது, எவ்வித பதிலும் தெரிவிக்காத அ.மார்க்சும், அந்தக் கூட்டத்தினை நடத்தியவர்களும் வளர்மதியை தடுத்து சட்டையைப் பிடித்து இழுத்து மேடையை விட்டு வலுக்கட்டாயமாக இறக்கி விட்டுள்ளனர். இது தான் அ.மார்க்ஸ் பேணி வரும் கருத்துச் சுதந்திர லட்சணம்.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கெதிரான அவதூறுகளைப் பரப்பும் அ.மார்க்ஸுற்கு எதிராக அவர் கலந்துக் கொள்ளும் கூட்டங்களில் தமிழின உணர்வாளர்கள் மற்றும் முற்போக்காளர்கள் ஆற்றும் எதிர்வினைகளை - முஸ்லீம்களுக்கு எதிரான ஒன்றாக - அ.மா மிகவும் விஷமத்தனமாய் கற்பிதம் செய்கிறார். அ.மாவிற்கு எதிராக நிகழும் எதிர்வினைகள் - சிறுபான்மையினரின் உரிமைகள் சார்ந்த அவரின் நடவடிக்கைகளுக்கானதில்லை. மாறாக அவர் சிங்களப் பேரினவாதத்தின் மறைமுக ஆதரவாளராய், ஊதுகுழலாய் மாறி செய்யும், பரப்பும் செயல்களுக்கானது. இது போன்ற நடவடிக்கைகள்தான் சென்னை AICUF அரங்கில் நடைபெற்றது. ஆனால் அ.மார்க்ஸ் தன்னையும், சிங்களப் பேரினவாதத்தினையும் எதிர்த்தால் உடனே அதனை முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகளாக மாற்றி மோசடித்தனம் செய்கிறார்.
 
தமிழர்கள் மீது நிகழ்ந்த பெருங்குற்றங்களைக் கேட்காத அ.மார்க்ஸ் - தான் தோழனாக காட்டிக் கொள்ள விரும்பும் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை எதிர்த்துக்கூட ராஜபக்சேவினைத் தாக்கிப் பேசவில்லையே.. ஏன்..? இலங்கையில் முஸ்லிம்களை வாழ்விடங்களை விட்டு அகற்ற முக்கியக் காரணமாக இருந்த கருணா, பிள்ளையான் போன்றவர்களைப் பற்றி வாய் திறக்க மறுக்கும் இந்த அ.மார்க்ஸ், இனப்படுகொலை நடந்த ஒரு நாட்டில்… இதுவரை பத்திரிக்கையாளர்கள் கூட அனுமதிக்கப்படாத ஒரு பூமியில்.. எல்லாவித சுதந்திரத்தோடு வலம் வருகிறார் என்றால்.. யாருடன் கூட்டு… எந்த குரலுக்காக இந்த ஒத்து ஊதும் பாட்டு என்று தெரியாமலா இருக்கிறது..?
 
 நாம் தமிழர் போன்ற தமிழ்த் தேசிய அமைப்புகள் அ.மார்க்ஸினை மிரட்டுவதாக அவரே கதை கட்டிக் கொண்டு.. இனம் சார்ந்த பிரச்சனையை மதம் சார்ந்ததாக ஆக்க முயற்சிக்கும் அ.மார்க்ஸின் அரசியல் அருவருப்பானது. சிங்களப் பேரினவாதத்தினை தமிழ்த் தேசிய அமைப்புகள் எதிர்த்துப் பேசினால் அ.மார்க்சுக்குப் பொறுக்காது. உடனே தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு எதிராக முஸ்லிம்களைத் திருப்பி விடும் விஷமத்தினை அவர் செய்யத் துவங்குவார். தமிழர்கள் எதன் பொருட்டும் ஒன்றாகக் கூடாது.. மதம், சாதி என அவர்கள் வேறுபட்டு நிற்கவேண்டும் என்ற சிங்களப் பேரினவாதத்தின் ஆசையின் வடிவமாய் அ.மார்க்ஸ் செயல்படுகிறார். எனவே தமிழ்த் தேசிய சிந்தனை மரபிற்கு முரணான சமூகமாய் முஸ்லிம்களை முன்நிறுத்தும் அ.மார்க்ஸ் போன்றவர்களின் போக்கு கற்பிதமாகப் புனையப்பட்டவை ஆகும். இயல்பான  தமிழ்த் தேசிய தன்னுரிமைப் போராட்டத்தின் தவிர்க்க முடியாத சக்திகளாய் தமிழ் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்; இருப்பார்கள்.
 
நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ்த் தேசிய அமைப்புக்கள் இந்த மண்ணின் பூர்வக்குடித் தமிழர்களான முஸ்லிம்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருந்து இந்து மத மேலாதிக்கத்தினை விரட்டும் படையாக செயல்படும். இந்த மண்ணின் பூர்வகுடித் தமிழர்களான முஸ்லிம் பெருமக்கள் இதுபோன்ற சதிகளை முறியடித்து மத மேலாதிக்கத்தினைத் தகர்க்கும் பணியினை இனத் தன்னுரிமைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக செய்து வரும் தமிழ்த் தேசிய சிந்தனை மரபினை வலிமைப்படுத்த வேண்டும் என்பதில்தான் எதிர்கால தமிழ் இனத்தின் மேன்மையும், பெருமையும் அடங்கியிருக்கிறது.        

- மணி.செந்தில் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

33 comments

33
தமிழன் பாலா
அ.மார்க்ஸ் எப்போதும் இப்படித்தான். ராசபக்சே ஆதரவு இல்லாட்டி இவர் எப்படி இலங்கைக்கு போயிட்டு வந்தாராம்?

சும்மா முஸ்லிம்க்கு ஆதரவா இருக்கேன்னு டூப் அடிக்கிறது. அ.மார்க்ஸிக்கு புத்தகம் போட *** **** ****? இவர் புத்தகம் எல்லாம் அவ்வளவா விக்கிது? இவர் என்ன கருணாநிதியா. கட்சிக்காரன் கிட்ட புத்தகத்த கொடுத்து விக்க சொல்ல.
செய்யது மரைக்காயர்
இது என்னடா வம்பாக இருக்கிறது. தமிழ்நாட்டு முஸ்லீம்கள் யாரும் தமிழர்கள் இல்லை என்று திரும்பத் திரும்ப சொல்லி வருகிறோம். ஆனால், இவர்கள் திரும்ப திரும்ப எங்களை தமிழர்கள் என்று அடையாளத்தை எங்கள் மீது திணிப்பதிலேயே திவீரமாக இருக்கிறார்கள்.
மரைக்காயர்கள்,லெப்பைகள்,ராவுத்தர்கள் என்று யாருமே தமிழர்கள் இல்லை.
நாங்கள் தமிழ் மொழி பேசக்கூடிய அரபியர்கள். எங்கள் மொழியில் பெரும்பான்மையான அரபிச்சொற்களும் சிறிதளவு தமிழ் சொற்களும் உள்ளன. இதே
போல இலங்கையில் இருக்கும் முஸ்லீம்களும் தமிழர்கள் அல்ல. அவர்களை மூர்கள்
என்றுதான் சொல்லுவார்கள்.
தயவு செய்து இந்த விக்கிபக்கத்தை பார்க்க வேண்டுகிறேன். இங்கே எந்த இடத்திலும் இலங்கை முஸ்லீம்கள் தமிழர்களாக இருந்து மதம் மாறியவர்கள்
என்று பார்க்கமுடியாது. இவர்கள் அனைவரும் அரபியர்கள். இலங்கையில் செட்டில் ஆன அரபியர்கள்.

http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Muslims

The Moors trace their ancestry to Arab traders who settled in SriLanka some time between the eighth and fifteenth centuries. The Tamils
of Sri Lanka, throughout history, have attempted to categorize the SriLankan Moors as belonging to the Tamil race. It is claimed that this was a bid to eliminate the minority community from having its own unique identity.

இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பிருந்தே இலங்கையில் அரபு குடியேற்றம் இருந்திருக்கிறது என்பதற்கான ஆதாரப்பூர்வமான தகவல்கள் உண்டு. தமிழ்நாட்டில் இருக்கும் முஸ்லீம்களும் தமிழர்கள் அல்ல. நாங்களும்
அரபியர்கள்தாம். தமிழர்கள் தொடர்ந்து எங்களை தமிழர்கள் என்று முத்திரை குத்தி எங்களது சுய அடையாளத்தை அழிக்கும் வேலையில் வெகுகாலமாக இருந்து வந்திருக்கிறார்கள். நாங்கள் தமிழர்கள் அல்ல. நாங்கள் அரபியர்கள்.

இத்தகைய அடையாள அழிப்பு அரசியலை கீற்று தளமும் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
சிங்கள அரசால் அநீதி இழைக்கப்படும் இலங்கை முஸ்லீம்களுக்கு ஆதரவு அளிப்பதை நன்றியுடன் நினைவு கூர்வோம். ஆனால், அவ்வாறு எங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு நாங்கள் எங்கள் அடையாளத்தை அழித்து கொண்டு தமிழர்கள் என்றுதான் அடையாளப்படுத்தி கொள்ளவேண்டும் என்ற முன் நிபந்தனை உங்களிடம் இல்லை என்று நம்புகிறோம்
vijay
ஏம்பா, அ.மார்க்ஸ் இவ்வளவு பொய் சொல்றாரு..?
suryanarayanan
தன்னை யாராவது விமர்சித்தால் அவர்கலை திட்டுவது, பழி சுமத்துவதுதான் அ.மார்க்சின் முதல் வேலையாக இருக்கும். அதிலிருந்து அவர் எப்போதும் திருந்துவதாகத் தெரியவில்லை
அமீர் அப்பாஸ்
இப்போது எல்லாம் பார்ப்பன வெறியர்கள்,
*****.. செய்யது மரைக்காயர் போன்ற முஸ்லிம் பெயர்களில் , ராவணன் போன்ற பெரியாரிஸ்டுகள் பெயரில் அவதூறுகளை கருத்துக்களாக சொல்வது பெருகி வருகிறது.

மறைந்து இருந்து கொல்லும் ராமன்பிரானின் ****** இவர்கள் என்பதை அடிக்கடி உறுதிப் படுத்துகிறார்கள்.
rajan
Some questions....
Marx went out freely to Elam for what purpose?
At the time of war where he was gone?
None sense. we expected like these guys only come after after the scenes(of war)
Does he has any reasion to speak now? yes. he also asort of benificiory from rajepacksae and indu bacshaes
richard
சீமான் பால் தாக்கரே சகட்டுமேனிக்கு மும்பையில் திட்டிப் பேசியிருக்க வேண்டும் என்று அ.மார்க்ஸ் எதிர்பார்க்கிறார். ஆனால், அதற்காக ராஜபக்சேவை கொழும்புவில் அ.மார்க்ஸ் திட்டிப் பேசியிருப்பார் என்று நீங்கள் நினைத்தால் உங்களைப் போல் அப்பாவி யாரும் இருக்க முடியாது. அவருக்குத் தெரியாதா எங்கே கூவ வேண்டும், எங்கே அடக்கி வாசிக்க் வேண்டும் என்று. இலங்கையில் ராஜபக்சேவின் கைப்பாவைகளாகச் செயல்படும் அந்தோனி ஜீவா, டக்ளஸ் தோள்களில் கை போட்டுபட இலங்கை முழுவதும் ராஜமரியாதையுடன் பவனிவரும் தந்திரம் அ.மார்க்சுக்குத் தெரியும். இந்தியா வந்தவுடன் நடுநிலையாளன் என்ற பம்மாத்துக்காக ராஜபட்சேயைத் திட்டுவது போல் திட்டிவிட்டு, மொத்தத்திற்கும் காரணம் புலிகள் தான் என்று தனது வழக்கமான புலிஎதிர்ப்பு அர்ச்சனையைப் பாட அவருக்குத் தெரியாதா என்ன? எம்புட்டு காலமாக அ.மார்க்சோட நடுநிலைமையை நாங்க பார்த்திருக்கிறோம். இந்து அடிப்ப்டைவாதம்னா வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார். அதே இஸ்லாமிய அடிப்படைவாதம்னா கண்டுக்காம போயிருவார். லீனாவுக்கு ஒன்னுன்னா களத்திலே குதிப்பார். சல்மான் ருஷ்டி, தஸ்லிமாவை டீல்லே விட்டூர்வார். அரசியல்லே இதெல்லாம் சகஜம்பா....
அகம்
புலி வேசம் போடும் காகித புலிகளுக்கு எல்லாம் பேரா.மார்கஸ் அவர்கள் கவணம் செலுத்தாமல் இருப்பதே நலம்.

உலகலாவிய சிந்தனை உள்ள மனித போராளி மார்க்ஸ், அவரின் பார்வை எல்லைகள் தாண்டியது , இனம் ,மதம் கடந்து மனிதாபமானம் மட்டுமே எல்லையாக கொண்டு செயல் படுபவர், அவதூறு அரசியல் இல்லாதவர்.

ஏனையது எல்லாம் தானும் உருப்படியாக இந்த சமுகத்திற்கு எதுவும் செய்வது இல்லை , மற்றவனையும் செய்யவிடுவது இல்லை..
அகம்
it is a common sense that any one can visit to srilanka if you have valida passport and currency for flight ticket...
இரணியன்
ஒவ்வொரு தேசிய இனமும் தன் அடையாளங்களையும், தன் பண்பாட்டு விழுமியங்களையும் காப்பாற்ற போராடத் துணிந்திருக்கும் இவ்வேளையில் ///

முதலில் இந்த அபத்ததிலிருந்து துவங்குவோம். இவர்களுக்கு ஈழப்போராட்டத்தின் தோல்விக்கு பிறகே தெரிகிறது மற்ற இனவிடுதலைக்கான போராட்டங்கள் இந்த லெட்சனத்திலிருக்கிறது இவர்களின் உலக அறிவு.

இந்த மண்ணின் பூர்வகுடிகள் என எல்லோரையும் ஒரே குடைக்குள் நிறுத்தும் திட்டம் தந்திரமிக்கது என்பது எல்லோருக்கும் தெரியும் . தலித் பூர்வகுடி இஸ்லாமியன் பூர்வகுடி என போசும் இந்த நாம் தமிழர் கட்ட்ட்சியினர் தலித் இஸ்லாமியருக்கு இன்றைக்கு நேரும் பிரச்சினைக்கு எவ்வித குரலும் கொடுக்கமாட்டனர். இவர்கள் கணியன் பூங்குன்றனார் காலத்தில் இருப்பவர்கள். கனியன் குரலையும் ஒழுங்காக புரிந்துக்கொள்ளாதவர்கள்.

அவர்களுக்கு நாம் ஒன்றை சொல்லுவோம். அய்யா கனவான்களே.. இது கணியன் காலமல்ல.. இனக்காவல் போர்வீரர் ****** கருணாநிதி காலம். இந்த் போர்வீரரின் காலத்தில் நீங்கள் சொல்லும் தமிழினம் என்னவிதமாக இருக்குது முதலில் பாரும். பழம்பெருமையில் மயங்கியது மக்களை மயக்கியதும் போதுமய்யா..

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இன்றும் அப்பாவி முஸ்லிம்கள் அலைக்கழைக்கப்படுகின்றனர். இது குறித்து நாம் தமிழர் என்றைக்காவது பேசியிருக்குமா..

தமிழ்நாட்டில் தினந்தோறும் தலித்கள் ஆதிக்கச்சாதியினரினால் கேவலப்படுத்துப்படுவதை பட்டியலிடவேண்டுமா என்ன அது குறித்து இவர்கள் என்றைக்காவது பேசியிருக்கிறார்களா என்ன?
..

இந்துத்துவத்தின் பருப்பு தமிழகத்தில் வேகாததற்கு இவர்கள் அடுக்கும் காரணங்கள் பிரமாதம் .. மறந்தும் கூட பெரியார் பேர் வந்துவிடக்கூடாது என்று திறமையோடு எழுதும்போதே புரிந்துக் கொள்ளவேண்டாமா இவர்களின் முற்போக்கு தமிழ்த்தேசியத்தை.

திருத்துறைப்பூண்டியில் சீமான் பேசியதால் ஒருவர் இந்துத்துவா சக்திகளால் கொல்லப்பட்டார் என்று எழுதுகிறார். மீனவர் பற்றி எழுதுபோது செல்லப்பன் என பேரோடு எழுதுகிறார். சீமான் பேச்சிய விளைவால் கொல்லப்பட்ட அந்த தோழரின் வீட்டிற்கு தன் பேச்சால் கொல்லப்பட்ட ஒருவரின் வீட்டிற்கு இதுவரை உங்கட தலைவர் போய் பார்த்திருக்கிறாரா.. குறைந்தபட்சம் சீமானுக்காவது கொல்லப்பட்டவரின் பெயர் தெரியுமா..

மீனவர் செல்லப்பனை இலங்கை ராணுவம் கொன்றுவிட்டதால் இவர்கள் பொங்கி எழுகிறார்கள்.. இல்லை என்றால் அதுவும் இருக்காது.

பால்தாக்கரேயை சபை நாகரீகத்திற்காக பெருமக்னார் எனக்குறிப்பிட்டாராம்.. கேக்கிற கேனையனா இருந்த ... பால்தாக்கரே என்ன சீமான் பேசும் கூட்டமேடையில் அமர்ந்திருந்தாரா என்ன.. ஈழத்திற்காக பால்தாக்கரே யுடனும் கூட்டுவைக்கத் தயாராகிவிட்டபோது இங்கிருக்கும் ஒடுக்கப்பட்ட, சிறுபாண்மையினர், விளிம்பு நிலை மக்களின் குரல் உங்களுக்கு எங்கே விளங்கப்போகிறது.

ராஜபக்சே அமார்க்ஸ் தரக்குறைவாக பேசாததை சொல்வதன் மூலம் சீமான் பால்தாக்கரேயை புகழ்ந்து விளித்தற்கு ஈடாக வைத்துவிடுவது நல்லாயிருக்கு.. அமா செய்தது சூழலேற்ப பேசியதுபோல சீமானும் பேசினாரா.. என்ன நீங்களே காட்டிக்கொடுக்கிறிங்க.. மும்பை பயணம் உங்களுக்கு சுலபமாக இதுதான் காரணமா என்ன என்று நாங்கள் கேட்க வேண்டிருக்கிறது.

ஈழப்போர் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாயிற்று.. ஊருக்கு ஊர் மேடை போடுவதை தவிர்த்து என்ன செய்திருக்கு நாம் தமிழர். கட்சியில் முஸ்லிம்கள் இருப்பதை நீங்கள் பட்டியலிடுவதை விட பாஜக அதிகமாக பட்டியலிடுவர். பட்டியல் எந்த கட்சிகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம் அல்லது புதிதாக தயாரித்துக் கொடுக்கலாம் அம்மக்களின் நியாயமான கோரிக்கைக்களை நீங்கள் முன்னெடுத்த போராட்டங்களை ஒன்றை சொல்லமுடியுமா..

கேக்கிற கேனையனா இருந்தா..
தமிழ்மாறன்
சகோதரர் சையது மரைக்கார் கொடுத்த விக்கி பக்கத்தில் இன்னும் நிறைய ஆதாரங்கள்
இருக்கின்றன.

[...]the first Mohammadans of Ceylon were a portion of those Arabs of the House of Hashim, who were driven from Arabia in the early part of
the 8th. century by the tyranny of the Caliph, Abdel Malik bin Marwan, and who proceeding from the Euphrates southwards made settlements in
the concan in the southern parts of the peninsula of India, on the island of Ceylon and Malacca. The division of them that came to Ceylon formed eight considerable settlements along the Nort-East, North and Western coast of that island; viz., one at Trincomalee, one at Jaffna,
one at Colombo, one at barbareen, and one at Point de Galle.[...]

இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் தங்கியுள்ள அரபியர்கள் எட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அப்டெல் மாலிக் பின் மர்வன் என்ற காலிபாவால்
துரத்தப்பட்டு இங்கே வந்து தங்கியவர்கள். கேரளாவிலும் தமிழகத்திலும்,
இலங்கையிலும் தங்கியுள்ளவர்களது பூர்வீகம் அரபியாதான். Before the end of
the 7th century, a colony of Muslim merchants had established themselves in Ceylon. Fascinated by the scenic splendour and captivated by the traditions associated with Adam's Peak, Muslim
merchants arrived in large numbers and some of them decided to settle in the island encouraged by the cordial treatment they received by the
local rulers. Most of them lived along the coastal areas in peace and prosperity, maintaining contacts, both cultural and commercial, with Baghdad , Hadramout , Oman and other Islamic cities.[1]

தமிழகம் வந்தாரை வரவேற்று வாழ வைக்கும் பூமி. அரபியர்களையும் அவ்வாறே வாழவைத்திருக்கிறது என்பதில் பெருமை கொள்ளுகிறோம்.
செய்யது மரைக்காயர்
அமீர் அப்பாஸ், நீங்கள் வஹாபிஸ்டு என்று நினைக்கிறேன். உங்களுக்கு ஒரு அறிவுரை. தயவு செய்து உங்கள் கருத்துக்கு எதிர்கருத்தாக பல முஸ்லீம்கள் இங்கே இருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளுங்கள். அவர்களிடம் நாகரிகமாக
உரையாட கற்றுகொள்ளுங்கள். உங்கள் கருத்துக்கு எதிராக யாரேனும் வைத்தால் பழைய குருடி கதவை திரடி என்று பாப்பான், ஆர்.எஸ்.எஸ் என்று ஆரம்பிக்க
வேண்டாம். நீங்கள் தமிழராக இருந்து சமீபத்தில் மதம் மாறியிருக்கலாம். வரவேற்கிறேன். ஆனால், எல்லா முஸ்லீம்களும் இதே போல தமிழர்கள்தான் என்று
நினைத்துகொள்ளவேண்டாம். மரைக்காயர்கள், ராவுத்தர்கள், லெப்பைகள், செய்யதுகள் ஆகியோர் அரபுகள். கருத்துவேறுபாடு என்பது இருக்கலாம், ஆனால் வரலாற்றை நான் மறைப்பேன், பொய் கூறுவேன் என்று இறங்க வேணாம்.
செளகத் அலி
இரணியன் கட்டுரையை ஒழுங்காக படிக்காமல் உளறுவது அபத்தமாக இருக்கிறது. பெரியாரின் பேரன்களாக தமிழ்த் தேசியப் பரப்பில் செயல்பட்டு வரும் லட்சக்கணக்கான தமிழின இளைஞர்கள் சாதி, மத மறுப்பாளர்களாய் களம் கண்டு வருகிறார்கள் என்பதும்… இவர்கள் தான் மதம் கடந்து, சாதி வென்று இனம் காக்க தமிழ்த் தேசியம் வென்றெடுக்கும் நம்பிக்கையாய்த் திகழ்கிறார்கள் - என்ற வரிகளை படிக்கும் போது இரணியன் கண்களில் மஞ்சள் காமாலை படிந்து விட்டது போல.முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த மண்ணின் மக்கள். தமிழர்கள். இதில் பிரிவினை போதிக்கும் அனைத்தும் பேரும் பிஜேபி ஆட்களே. அவர்களுக்குதான் எங்களை பாகிஸ்தானுக்கு விரட்டும் நோக்கம் இருக்கும். முஸ்லிம்கள் பெயரில் எழுதினால் முஸ்லிம்களாக முடியாது. அரேபியாவில் எவ்வளவு பேர் கிளம்பி வந்து இங்க ஊடு கட்டுனாங்க என்பதற்கு செய்யது என்ற பெயரில் எழுதும் இராம கோபாலன்களுக்கு பட்டியல் தெரியுமா.போற போக்குல அல்லி உட்ட்டுட்டு போறது. சீமானின் நாம் தமிழர விட நாங்க அக்மார்க் தமிழன்யா. அ.மார்க்ஸ் பொழைப்புக்காக பேசிட்டு போறத சிரியஸா நினைச்சி கட்டுரை எழுதரது தப்பு. மணி செந்திலுக்கு வேற வேலை இல்ல போல.
பழனிவேல்
பாஸ்போர்ட்டும், டிக்கெட் எடுக்க காசும் இருந்தா போதுமாமே, அகம் சொல்றாரு... பிறகு ஏம்ப்பு, மனித உரிமையாளர் எலின் சாண்டருக்கு இலங்கை போக முடியவில்லை.. உலகளாவிய அதிகாரம் படைச்ச ஐ.நா. சபைக்காரங்க இலங்கையில நுழைய விடாம ஏன் வெளியேத்த்தபடுறாங்க... அவங்க கிட்ட காசு இல்லையா, இல்லை பாஸ்போர்ட் இல்லையா...? காரனம் ரொம்ப சிம்பிள் தம்பி... அவங்க நேர்மையா இருக்காங்க.. ராஜபட்சேயை போர்க்குற்றவாளின்னு சொல்லி விசாரிக்கனும்ங்கிறாங்க... அதனால் அனுமதி இல்லை. அ.மார்க்ஸ் எப்படின்னா தனக்கு ஸ்பான்சர் பண்றவர்களுக்கு விசுவாசமா நட்ந்துக்கிறாரு. அதனாலே எத்தனை தடவை வேணும்னா இலங்கை போயிட்டு வரலாம். அ.மார்க்ஸ் யாருக்கு கையாள் என்பது எல்லோருக்கும் தெரியத்தான் செய்யுது.. இன்னும் பச்சபுள்ளையாவே இருக்காதீங்க அகம்!!
Mohammed
செய்யது மரைக்காயர் என்ற பெயரில் உள்ள பதிவின் விசமத் தனம் புரிகிறது...
kaniselvan
பொய் சொல்வது, அடுத்தவர் எழுதிய சிந்தனைகளை தன் பேரில் நோட்ஸ் போடுவது போன்ற இழிசெயல்களை முதலில் அ.மார்க்ஸ் விடுவதுதான் அவர் வயதுக்கு நல்லது. இவரைப் பின்பற்றி இவரது சீடர்களும் இந்த வேலைகளில் இறங்கியுள்ளனர். லீனா மணிமேக்லை பிரேமின் எழுத்தைத் திருடியது அண்மையில் அம்பலமாகியது. இத்தகைய செய்ல்கள் எல்லாம் மெத்தப் படித்த மேதாவி என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொள்ப்வர்களுக்கு அழகல்ல.
emeneswaram sharfudeen
செய்யது மரைக்காயர் என்ற பெயரில் உள்ள பதிவின் விசமத் தனம் புரிகிறது
Sohail
Dear Sir,
Please read the links and the information below. Sri Lankan Muslims are not Tamils. They are Arabs settled in this partof the world. Please read and inform yourself before commenting..

http://www.sailanmuslim.com/news/the-origins-and-affinities-of-the-sri-lankan-moors/
their Arab ancestry is a matter of pride for them and provides them
the basis on which to claim a distinct ethnic identity. We will here attempt to show that the core or nucleus of the Sri Lankan Moor
community comprises the descendants of Arabian merchants and settlers hailing from Iraq and the Arabian peninsula who arrived in the country
during the mediaeval period, and perhaps earlier to form considerable settlements in various parts of the island, and especially the coastal
areas.

Oral tradition, genealogical records, anthropological data and linguistic, epigraphic and literary evidence will be adduced to
support this view which was elaborated by the Moorish scholar
I.L.M.Abdul Azeez in his famous treatise on the origins of the Moors . Abdul Azeez’s thesis sought to disprove P.Ramanathan’s assertion
that the Moors were Tamils by race on the basis of their spoken language as well as on account of certain customs relating to marriage such as strīdānam, the ālatti ceremony, the wearing of kūrai and the tying of the tāli. Abdul Azeez’s arguments were largely based on Moorish oral tradition relating to their earliest settlements and the etymology of the term Sōnahar.

http://www.tamilcanadian.com/page.php?cat=52&id=1963

http://www.islamonline.net/servlet/Satellite?c=Article_C&cid=1239888607338&pagename=Zone-English-Family%2FFYELayout

The misnomer that Moors are ethnologically Tamils, first found
expression in a speech delivered by Hindu-Tamil Political leader Sir Ponnanbalam Ramanathan, in the heyday of colonial British divide and
rule policy. Ramanathan based his contention primarily on the facts that Tamil was the spoken language of the Moors, that certain customs
were common to Moors and Tamils (particularly in relation to marriage) and the etymology of the word ‘sonahar’(commonly used Tamil word to
denote Moors). Vehemently opposing this contention was renowned Moorish Scholar and editor of Muslim Guardian I L M Abdul Azeez:

“In 1885, in the Ceylon Legislative Council, and in 1888, in the Royal Asiatic Society (Ceylon Branch), Mr Ramanathan, ……announced that the
Ceylon Moors were Tamils in nationality and Mohammedans in religion. Though there is nothing humiliating in being Tamil in race, the
persistent attempt of that gentleman in attributing to the Moors an origin which they do not claim, in spite of their assertion to the
contrary, is annoying, if not offending; and it becomes very necessary that his statement should be examined and his references sifted before
his conclusions are adopted.”

It has been proven beyond doubt that the Moors of Sri Lanka are “the descendants of those Arabian colonists, who settled in Ceylon many centuries ago. Alexander Johnston has recorded that:

"…the first Muslims who settled in the country, were, according to the tradition which prevails among their descendants, a portion of those
Arabs of the House of Hashim who were driven from Arabia in the early part of the eighth century by the Umayyad Caliph Abd-al Malik bin
Marwan, and who proceeding from the Euphrates southward, established settlements in the Concan, the southern parts of the Indian peninsula,
Sri Lanka and Malacca. He adds that the division of them that came to Sri Lanka formed eight considerable settlements.”

Similar sentiments have been expressed by other historians of the country including Dr. Lorna Dewaraja in "The Muslims of Sri Lanka, 1000 years of ethnic harmony 900-1915 AD", Dr. M I M Shukri and Professor K M De Silva.

With reference to the etymology of the term Sonahar Hussien comments;

“The appellation given to the Moors by themselves as well as by others also indicate their Arab origin. The Moors have traditionally referred
to themselves as S?nahar in their peculiar dialect of Tamil, the pure Tamil form of which, S?nagar, refers to a native of Arabia (S?nagam).”

Refuting the argument that Moors are Tamils because their mother tongue is Tamil, Hussein says:

"Although it is likely that it was Arabic that was the spoken language of the early Arab settlers of the country, and perhaps of the early
Moors whom they sired, it is today largely Tamil, and to a lesser extent Sinhala, that has become the ‘home language’, so to say, of the present-day Moor community. Arabic is today employed by them only as their liturgical language in their prayers and other religious observances. Tamil is by far the predominant speech of the Moors.

Read more:
http://www.islamonline.net/servlet/Satellite?c=Article_C&cid=1239888607338&pagename=Zone-English-Family%2FFYELayout#ixzz0xAkyKhxJ
ராஜகிரி கஸ்ஸாலி
புலிகள் செய்த வரலாற்று தவறை மீண்டும் மீண்டும் மறைக்கப் பார்கிறீர்களே ஏன்...?
ஈழத்து தமிழ் சொந்தங்கள் எம் தொப்புள் கொடி உறவுகள் தாம் அதில் எந்த மாற்றமும்
இல்லை. ஒரு அமைப்பு செய்த சில தவறை சுட்டி காட்டும் போது அதை ஏற்க மறுப்பது
என்ன நியாயம்..? உலகில் மனித சமுகம் எங்கு எல்லாம் பாதிக்கபடுகிறதோ அங்கு எல்லாம்
இனம், மொழி, மதம் ஆகியவற்றை கடந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்போம்..
அப்துல்ரஹீம்
லயோலா கல்லூரி ஐகப் அரங்கில் நடந்த விஷயம் குறித்து திரித்து எழுதும்போதே மணிசெந்தில் யார் என்பதும் அவரது நோக்கம் என்ன என்பதும் தெளிவாகிறது. ‘என்ன நடக்க்து இலங்கையில்’ என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் பேராசிரியர் அ.மார்க்ஸ் தான் இலங்கைக்குப் போய்வந்த அனுபவங்கள் குறித்துக் கூறிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட பேச்சின் முக்கால்பகுதி முகாம்களில் அவதிப்படும் தமிழர்களைப் பற்றியும் இலங்கை அரசின் இனவாதம் குறித்தும் தமிழர்களின் குரலை ஒலிப்பதற்கு ஒரு பிரதிநித்துவம் இல்லாமல் போனது குறித்துமே இருந்தது. பிறகு, புத்தளம் முகாமிற்குத் தான் சென்று வந்தது குறித்து அ.மார்க்ஸ் பேசும்போது, முஸ்லீம்கள் மீது புலிகள் நிகழ்த்திய படுகொலைகள் பற்றியும் பேசினார். உடனே நாம்தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் எழுந்து, அமார்க்ஸ் பேசக்கூடாது என்று கலாட்டா செய்தனர். ‘’முதலில் அவர் பேசட்டும், பிறகு உங்கள் கருத்துகளை நீங்கள் சொல்லுங்கள்”” என்று அங்கிருந்த முஸ்லீம்களும் நடுநிலையாளர்களும் சொன்னார்கள். ஆனால் அப்படி சொன்னவர்களை ஒருமையில் அழைத்து திட்டத்தொடங்கினார்கள் நா.த இயக்க இளைஞர்கள். அப்போது வளர்மதி என்பவர், ‘’அமைதியாக இருங்கள். அ.மார்க்ஸ் அறிவுஜீவி என்ற பெயரில் ஏமாற்றுபவர். அவரை நான் எக்ஸ்போஸ் செய்கிறேன்” என்று அந்த இளைஞர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார். ஒருவழியாக அந்த இளைஞர்களை மற்றவர்கள் அமைதிப்படுத்தி மீண்டும் மார்க்ஸ் பேசத்தொடங்கினார். சிறிதுநேரத்திலேயே அந்த இளைஞர்கள் கலாட்டாவைத் தொடங்கினர். அ.மார்க்ஸ் முகத்துக்கு நேரே சென்று அவ்ர் வயதையும் பணியையும் பொருட்படுத்தாமல் ‘’தேவடியாமகனே” என திட்டினர். பிறகு கூட்டத்திலிருந்தவர்கள் எல்லாம் தமிழினத்துரோகிகள் என்றும் பொட்டைகள் என்றும் திட்டி வெளியேறி விட்டனர். திட்டு அ.மார்க்ஸ்க்கும் அங்கிருந்த தமிழ்நாட்டு தமிழர்களுக்கு மட்டும் விழவில்லை. இலங்கைத்தமிழர்களான ரவீந்திரன் உள்பட பலரையும் டெலோ என்றும் துரோகி என்றும் திட்டினர். மார்க்ஸ் பேசி முடித்தபிறகு மேடையேறிய வளர்மதி சில கேள்விகளை முன்வைத்தார். ‘’முஸ்லீம்கள் மீது வன்முறையைப் பிரபாகரன் ஏவவில்லை. கருணாதான் ஏவினார் என்று ஒரு ஆங்கிலப்புத்தகம் இருக்கிறது. இதை அ.மார்க்ஸ் படிக்கவில்லை. அவர் ஒரு அரைகுறை” என்று கண்டமேனிக்குத் திட்டிப் பேசினார். மணிசெந்தில் திரிப்பதைப் போல அவரை யாரும் சட்டையைப் பிடித்து இழுத்து மேடையை விட்டு இறக்கவில்லை. இதை வளர்மதியே ஒப்புக்கொள்வார் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் கூட்டத்திற்குச் சம்பந்தமில்லாமல் வளவளவெண்டு பேசிக்கொண்டிருந்ததால், அரங்கத்தை ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, சீக்கிரத்தில் முடியுங்கள் என்று கூட்டப்பொறுப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர். பிறகு பொழிலன் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட பலரும் அ.மார்க்சிடம் கேள்விகள் கேட்டனர். இறுதியாம் மார்க்ஸ் எல்லாக்கேள்விகளுக்கும் பதில் சொன்னார். உடனே வளர்மதி எழுந்து ‘’டிபைன் பாசிசம், பிரபாகரன் பாசிஸ்டா, ராஜபக்சே பாசிஸ்டா?’’ என்று குழந்தைப்பிள்ளைத்தனமாக கேள்வி கேட்டார். இதென்ன தமிழ்ச்சினிமாவா ஒருவர் ஹீரோ, மற்றவர் வில்லன் என்று சொல்ல. ராஜபக்‌ஷே, பிரபாகரன் இருவருமே பாசிஸ்ட்தான். கூட்டம் முடிந்தபிறகும் தான் பேசவேண்டும் என்று வளர்மதி கேட்டதை மட்டும் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் ‘’கலாட்டா செய்த இளைஞர்களை நான் அழைத்துவரவில்லை” என்று அவராகவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். அப்படி அவரை யாரும் குற்றம் சாட்டியதாகவும் தெரியவில்லை. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு நான் கண்ணால் பார்த்த நிகழ்ச்சி. இதையே மணிசெந்தில் திரிக்கிறார். ஆனால் கீற்று கூட்டத்தில் என்ன நடந்தது என்பதையும் நான் பார்த்தேன். சீமானை விடுதலை செய்யச்சொல்லி கருணாநிதிக்கு எதிராகக் கருத்துரிமை கூட்டம் நடத்துகிறார்கள் மணிசெந்தில் முதலிய நாம்தமிழர் இயக்கத்தினர். ஆனால் இவர்கள் புலிகளையோ சீமானையோ விமர்சிக்கும் கருத்துரிமையை வழங்கவில்லை. இவர்களுக்குக் கருணாநிதியை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது என்று தெரியவில்லை. கருணாநிதி இடத்தில் சீமான் இருந்திருந்தால் என்னைப் போன்றவர்கள் எழுதுவதற்கு உயிரோடுகூட இருக்கமாட்டோம். பால்தாக்கரேவைச் சீமான் மரியாதையாக அழைப்பாராம், அசின் மட்டும் இலங்கைக்குப் போகக்கூடாதாம், என்னப்பா நியாயம் இது? இந்த தமிழ்த்தேசியவாதிகள் தலித் மக்களுக்காகவோ முஸ்லீம்களுக்காகவோ இதுவரை என்ன செய்து கிழித்திருக்கிறார்கள்? இப்போதுகூட உத்தபுரம் பிரச்சினை நடந்திருக்கிறது. பிள்ளைமார் நெடுமாறன் வாயிலிருந்து தலித்களுக்கு ஆதரவாக முத்து உதிரவில்லையே! ‘’மீனவனை அடித்தால் சிங்கள மீனவனை உதைப்போம்” என்று சொல்லும் சீமான், ‘’தலித்துகளை விலக்கும் பிள்ளைமார்களை உதைப்போம்” என்று பேசுவாரா? இந்த தமிழ்த்தேசியக்கூத்து எல்லாம் உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு அ.மார்க்ஸ் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் எங்கள் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாக இயங்கி வருபவர் அவர். ஆனால் தமிழ்த்தேசியவாதிகள்... ? இலங்கை இனப்படுகொலைக்காக விசனவசன வியாபாரம் செய்யும் வைகோதான் நரேந்திரமோடியையும் குஜராத் படுகொலைகளையும் பாராளுமன்றத்திலேயே ஆதரித்துப் பேசியவர். இங்கு நான் பெரியார் திகவை தமிழ்த்தேசிய லிஸ்டில் சேர்க்கவில்லை. ஏனென்றால் பெரியாரும் அவர் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்களும்தான் தலித் மக்களுக்காகவும் சிறுபான்மையின மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருபவர்கள். மேலும் பெரியார்திக தங்களைத் தமிழ்த்தேசிய இயக்கம் என்று சொல்லிக்கொள்வதும் கிடையாது. நிகழ்ச்சி நடத்துவதற்காகவும் தங்கள் மீதன குற்றச்சாட்டுப் பழியிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக பெரியார் திகவைத் துணைக்குச் சேர்த்துக்கொள்வதும் பிறகு ‘திராவிட தேசியம் பொய்” என்று பேசுகிற நயவஞ்சகமும் த.தேக்களுக்கே உரியது. மணிசெந்தில் அதெல்லாம் கூட விடுங்கள், இந்துமக்கள்கட்சி அர்ஜூன்சம்பத்தோடு கைகோர்த்துக்கொண்டு மேடையில் பேசிக்கொண்டு எப்படி வெட்கமில்லாமல், ‘’முஸ்லீம்களும் தமிழர்கள்தான், அவர்களுக்காக பேசுகிறோம்” என்று வெட்கமில்லாமல் சொல்லமுடிகிறது?
விஷ்ணுபுரம் சரவணன்
நண்பர் மணிசெந்திலுக்கு.,

உங்களின் கட்டுரை குறித்து பகிர்வல்ல இது.

கட்டுரையின் ஒரு தகவல்பிழையை சுட்ட விரும்புகிறேன். இடதுசாரிகள் பல போராட்டங்களில் தங்கள் உயிரையும் துறந்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

///திருத்துறைப்பூண்டி கலை இலக்கிய இரவில் இந்து மதத்தின் போலித் தன்மைகளை எடுத்துக் காட்டி பேசிய செந்தமிழன் சீமான் மீது இந்துத்துவா வெறியர்கள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டதும், அந்தக் கலவரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் ஒருவர் கொல்லப்பட்டதும் அனைவரும் அறிந்ததே///

இதனை படித்ததும் சற்று குழப்பமானது. தாக்குதலில் அந்த தோழர் காயம்தான் பட்டார். இறக்கவில்லை. வழக்கு நடக்கிறது என்பதாக என் தெரிந்தது. தோழர்கள் இரா. காமராசுவிடமும் அந்த விழாவில் சீமானுக்கு முன் பேசிய அய்யா அ.ப.பாலையன் அவர்களோடு பேசி உறுதி செய்ததில் அந்த தோழர் தாக்கப்பட்டு பெரும்காயமடைந்தார் என்பதே நடந்தது.

ஓர் ஆச்சரியமும் எனக்கு வந்தது. இது இன்னும் உங்கள் நினைவில் இருப்பதை நினைத்து. ஒருவேளை சீமான் தொடர்பு உள்ளதால் இருக்ககூடும்.
இந்திரசித்து
அப்துல் ரஹீம் என்ற பெயரில் அ.மார்க்சு நண்பரொவர் விரிவாக விளக்கமாக உளரிக் கொட்டிருப்பதிலிருந்து ஒன்று புரிகிறது. இவர்கள் எதன் பொருட்டும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது.இந்து மக்கள் கட்சி அர்ஜீன் சம்பத் மேடை ஏறியது தஞ்சாவூர் கூட்டத்தில் . அதற்கு சீமான் போகவே இல்லை. விவரம் கேட்டு விட்டு வில்லங்கமாய் எழுதலாம். ஒரே கேள்வியை புரட்டி போட்டு கேட்பதால் பெரிய அறிவாளி அண்ணாசாமி கிடையாது. அதே கேள்விய இப்படி கேட்கலாம். தலித்துக்கள் அதிகமா தளபதிகளா இருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்த ஏன் அ.மார்க்ஸ் ஆதரிக்கல?( ஆதாரம் லும்பினியில் தீபச்செல்வன் பேட்டி) தலித் மக்கள் அதிகமா இருக்கறா விடுதலை சிறுத்தைகள ஏன் அ.மார்க்ஸ் ஆதரிக்கல? புதிய தமிழகம், மக்கள் தமிழகம்னு ஏன் தலித் கட்சிகள அ.மார்க்ஸ் ஆதரிக்கல? அப்ப அ.மார்க்ஸ் தலித் அரசியல் எதிரியா? இன்றும் தமிழ்நாட்டில் இருக்கும் முஸ்லீம் அமைப்புகளை கேளுங்கள். முஸ்லீம்கள் தமிழரா,இல்லையான்னு. ஐகப் அரங்குல அ.மார்க்சு பேசுனத எதிர்த்து கேட்பது கேட்பவனின் கருத்துரிமை இல்லையா? .அ.மார்க்ஸ் போல அறிவாளிகள கேள்வியே கேட்க கூடாதா.? கேட்டா குழந்த தனமா? நல்ல சொல்றீங்கப்பா ,டீடெய்லு. இதுக்கு நடுவுல இந்த விவாதத்துல சம்பந்தமே இல்லாம விக்கிபீடியாவில் இருந்து கட்அண்டு பேஸ்ட் அடிக்கும் சில இராமகோபாலன்கள் முஸ்லிம்கள தமிழன் இல்லன்னும் தரம் பிரிக்கப்பாக்குது. சாக்கிரதை. திராவிடம் பொய்ன்னு பேசுறதுல மார்க்சுக்கு இன்னா பிரச்சனை.? அவர் அதை உண்மைங்குறாரா? .இதுக்கு பதில் சொல்றோம்னு மார்க்சு புத்தகத்த படிக்க சொல்லிபுடாதீங்க. ஏற்கனவே இராத்திரி கெட்ட கெட்ட கனவா வருது. லீனா மணிமேகல கூட்டத்துல பாலியல் பத்தி பேசுவதற்கு முதல்ல உங்க விட்டு பெண்கள அழைச்சி வந்து பேசுங்கன்னு கேட்ட ம.இ.க தோழர்கள அ.மார்க்சு ஆதரிச்சரா.? என்ன? .சும்மா ஏதோ சுரண்டி சுரண்டி கரண்டி உருவாக்குகிற மாதிரி பேசி ,எழுதி பரபரப்பா இருக்க நினைக்குற அ.மார்க்ஸ்க்கும் உண்மைக்கும் ரொம்ப தொலைவு.
செய்யது மரைக்காயர்
ஆஹா... இலங்கை முஸ்லீம்களை தமிழர்கள் என்று சொல்லக்கூடிய ஒரு முஸ்லீமை “முஸ்தீன்” என்ற பெயரில் கண்டுபிடித்தாகிவிட்டதல்லவா? இனி புகுந்து விளையாட வேண்டியதுதான். எந்த முஸ்லிம் மறுத்தாலும் பாப்பான், இராமகோபாலன் என்று குத்தி தள்ளிவிட்டால் போகிறது. .. அய்யா... ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரை கூட்டிவந்து “நாங்கள் தமிழர்கள்” என்று சொல்லச் சொல்லுங்களேன் பார்ப்போம். அப்புறம் அவர்கள் இலங்கையில் தலைநிமிர்ந்து நடந்துவிடமுடியுமா என்று பார்த்துவிடலாம். இப்போதுதான் ஒரு ஏகப்பிரதிநிதித்துவம் கவிழ்ந்து விழுந்தது. இப்போது இன்னொரு ஏகப்பிரதிநிதித்துவம் கோரி இன்னொரு கூட்டம் எங்கள் வாயை அடைத்து, எங்களுக்கு பதிலாக பேச கிளம்பியுள்ளது போலும்.
முத்து
//அப்துல்ரஹீம்
லயோலா கல்லூரி ஐகப் அரங்கில் நடந்த விஷயம் குறித்து திரித்து எழுதும்போதே மணிசெந்தில் யார் என்பதும் அவரது நோக்கம் என்ன என்பதும் தெளிவாகிறது.//

அதெல்லாம் இருக்கட்டும் அப்துல் ரஹீம், முதலில் ஏன் உங்க சொந்த பெயரில் எழுதாமல் பிலால் அகமது என்ற பெயரில் கட்டுரையும், அப்துல் ரஹீம் என்ற பெயரில் பின்னூட்டமும் போடுகிறீர்கள். ஒரு இஸ்லாமிய விவாதம் என்றால் அதற்கு ஏற்பே பெயரை மாற்றிக்கொள்வது பச்சோந்தி தனமாக இல்லையா. கோட்சே முஸ்லீம் பெயரை பச்சைக்குத்திக்கொண்டு காந்தியை கொன்ற மனநிலை சார்ந்த புத்தி இது. உங்கள் சொந்த பெயரில் எழுத முடியாவிட்டால் உங்கள் குழந்தை பெயரிலோ, ஒரு தமிழ் பெயரிலோ எழுத வேண்டியது தானே. இப்படி இடத்துக்கு ஏத்த மாதிரி இஸ்லாமிய பெயரை பயன் படுத்தி ஏன் அ.மார்க்ஸை பெரிய இஸ்லாமிய கடவுளாக கட்டமைக்க முயற்சிக்கிறீர்கள்.
Uthayam
பழைய பதிவுகளில் உள்ள பின்னூட்டங்களைப் பார்த்தால் கனி மரைக்காயர், இப்போது செய்யது மரைக்காயர் இந்த கொசு தொல்லைக்கு கீற்று ஒரு முடிவு கட்ட வேண்டும். இவர்கள் முஸ்லிம்கள் மேல் கொண்ட காழ்ப்புணர்ச்சியால் பல்வேறு பெயர்களில் அவதாரமெடுக்கிறார்கள். இவர்களின் நோக்கம் நமக்கு தெளிவாக புரிகிறது. இந்த கடைந்தெடுத்த கயவாளித்தனத்தை செய்வதில் கை தேர்ந்தவர்கள் யார்? என்பது நமக்கெல்லாம் தெரியும். கீற்று தளம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்யது மரைக்காயர்
இலங்கை கொசுவான நான் பேசுகிறேன். இப்போதுதான் வஹாபிஸத்துக்கு எதிராக இஸ்லாமியர் இயக்கம் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று அறிகிறேன். ஆகவே நிறைய கொசுக்களை நீங்கள் வருங்காலத்தில் எதிர்கொள்ளலாம். வாழ்த்துக்கள்.
அப்துல் பாரி
சுத்த சுயம்புவான கலக்காத இனம் ஒன்று இருப்பதர்க்கு சாத்தியமுள்ளதா? எங்கிருந்தோ வந்தார்கள் என்று ஒப்பாரிவைக்கின்ற இந்துத்துவா திவீரவாதிகளுக்கு அவில் தருகிற வேலையை சோகையில் செய்கிறார் என்று நினைக்கிறேன் இதுமாதிரி கருத்துகள் இங்கே வேறுவிதமான விளைவுகளி ஏற்படுதுவதர்க்கு வாய்ப்பிருக்கிறது
நட்பு சக்திகளுக்கு முரண் வருவதும் பகை சக்திகள் அதை பயன்படுத்திக்கொள்வதும் காலமாய் நட்க்கின்ற ஒன்று பின் உணர்ந்து ஒன்றாவதும் உண்டு இது கூடும் காலம் கல்லெரியாதீர்கள்
devanathan
அப்துல்ரஹீம் என்ற பெயரில் எழுதும் அ.மார்க்சின் சீடரும், வலையுலகின் துப்பறியும் புலியாக பார்ப்பன நர்சிம்முக்கு முட்டுக்கொடுத்த புரட்சி வீரருக்கு... நெடுமாறன் தலித் மக்களுக்காக பேசுவது இருக்கட்டும், தலித் ரட்சகராக தன்னைக் காட்டிக் கொள்ளும் அ.மார்க்ஸ், டக்ளஸ் தேவானந்தாவால் சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட தலித் இளைஞர் திருநாவுக்கரசுக்காக என்றாவது குரல் கொடுத்திருக்கிறாரா? அர்ஜூன் சம்பத்தோட தமிழ்த் தேசியவாதிகள் சேருவது இருக்கட்டும்... இலங்கையில் தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் ஒடுக்குகிற ராஜபட்சேவுக்கு ஆதரவான வகையில் செயல்படுவதும், இலங்கை அரசு என்.ஜீ.ஓ.க்களீன் உதவியில் உலக நாடுகள் சுற்றிவரும் அ.மார்க்ஸ் பற்ரி என்ன சொல்கிறீர்கள்? 'ராஜபட்சே ஒரு போர்க் குற்றவாளி, அவரும் அவரது சகோதரரும் தண்டிக்கப்பட வேண்டும்' என்று கூறும் தைரியம் உங்க அறிவுஜீவிக்கு இருக்கிறதா? இதையெல்லாம் நீங்க துப்பறிஞ்சு சொல்ல மாட்டீங்களா?
கும்மி
லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் என்னும் பிரிவுகள் எல்லாம் அரசின் ஆவணங்களுக்கே ஒழிய, இஸ்லாமியர்களுக்கு அல்ல. இஸ்லாமியர்கள் தமக்குள் ஷாபி என்றும் ஹனபி என்றும் வேறுபாடு பார்ப்பார்களே அன்றி, லெப்பை என்றும் ராவுத்தர் என்று பார்க்கமாட்டார்கள். குடும்பப் பெயர் என்னும் அளவிலேயே அவை இருக்கின்றன.
|
-
யானைகளை பராமரிக்கும் வேலை செய்பவர்கள் மாவுத்தர் என்று அழைக்கப்பட்டனர்; அதேபோல் குதிரைகளை பராமரிக்கும் வேலை செய்பவர்கள் ராவுத்தர் என்று அழைக்கப்பட்டனர். படகுகளில் வியாபாரம் செய்தவர்கள் மரக்கலாயர் (மரக்கலம் + ஆயர்) என்று அழைக்கப்பட்டு, அது மருவி, மரைக்காயர் ஆகிவிட்டது. இஸ்லாமிய மதபோதகர்கள் அடிக்கடி லபைக்கும் என்னும் வார்த்தையை உபயோகித்ததால், அவர்களின் சுட்டுப்பெயர் மருவி, லெப்பை ஆனது. |
-
இந்தப் பிரிவுகள் அனைத்தும் செய்யும் தொழிலின் அடிப்படையில் வந்த பெயர்கள். செய்யும் தொழிலின் அடிப்படையில் சாதீய விழுமியங்களை புகுத்திய கும்பலின் அடிவருடி, இங்கே இஸ்லாமிய பெயரில் உளறிக்கொட்டியுள்ளார். மேலும், இஸ்லாமியர்கள் அரேபியாவிலிருந்து வந்தேறியவர்கள் என்று ஒரு வந்தேறி கூறியுள்ளது.
|
-

தமிழக இஸ்லாமியத் தலைவர் திரு P. ஜெயினுல் ஆபிதீன் தனது வலைத்தளத்தில் கூறியுள்ளார் பாருங்கள்.
|
-
http://www.onlinepj.com/books/arthamulla_kelvikal/
|
இந்தச் சுட்டியில், கேள்வி எண் 14 க்கு உரிய பதிலை பாருங்கள். "தமிழக முஸ்லிம்கள் அனைவரும் இந்த மண்ணில் பிறந்தவர்கள். இந்த மண்ணில் பிறந்தவர்களின் வழித்தோன்றல்களாக உள்ளனர் என்பதை நாம் அறிவோம்" என்று கூறுகின்றார்.
|
தமிழர்களின் பழக்கவழக்கங்கள் பலவும், மதம் மாறியபின்பும், இஸ்லாமியர்களால் விடாமல் பின்பற்றப்பட்டு வருகின்றன. குலதெய்வ கோயில்களும், அங்கு வழிபாடுகளும் நடைபெறுவதன் நீட்சிதானே தர்காக்களும், அங்கிருக்கும் நடைமுறைகளும். இல்லை, அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடைமுறையா? திருச்சியை அடுத்த பிரான்மலை உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெறும் தீமிதி உற்சவம், அரேபியாவின் எந்தப் பகுதியில் பின்பற்றப்படுகின்றது? இதுபோல் இன்னும் பல தமிழர்களின் பழக்கவழக்கங்கள், இஸ்லாமியர்களால் பின்பற்றப்படுகின்றன.
|
-
இஸ்லாமியர்களைப் பற்றி ஒன்றும் அறியாமல், இஸ்லாமியப் பெயரில் வந்து துவேஷத்தை வளர்க்கும் கும்பலுக்கு இருக்கும் உரிமையை விட இந்த மண்ணில் இஸ்லாமியர்களுக்கான உரிமைகள் அதிகம். ஏனெனில், அவர்கள் இம்மண்ணின் மைந்தர்கள்.
unarvukal
ஈழத்து தமிழ் பேசும் முஸ்லீம்கள் தமிழர்களைத் தாக்கினார்களா?

ஆம் முஸ்லீம்கள் தமிழர்களைத் தாக்கினார்கள், அதுவும் மிகவும் கொடூரமானமுறையில் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து தாக்கி, கிழக்கு மாகாணத்தில் பல தமிழ்க்கிராமங்களை அழித்தார்கள், அம்பாறை மாவட்டத்தில் சேனைக்குடியிருப்பு, நாலாம் கொலனி, துறைநீலாவணை, சத்துருக்கொண்டான், வீரமுனை, பிள்ளையாரடி, தானாமுனை, செங்கலடி,ஏறாவூர், குடியிருப்பு, குருக்கள் மடம், களுவாஞ்சிக் குடி, பெரிய கல்லாறு, கல்முனை, காரைதீவு போன்ற இடங்களிலெல்லாம் எப்படி முஸ்லீம் ஊர்காவல் படையின் ஜிகாதிகள் தனியாகவும், சிங்கள இராணுவத்துடன் இணைந்து தமிழர்களைப் படுகொலை செய்தார்கள் என்பதைச் சர்வதேச மனிதவுரிமைச் சங்கம் கூட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய கிராமங்கள் பலவற்றில் தமிழ்ப்பெண்களைக் கற்பழித்தும், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஒருவருமில்லாமல் படுகொலை செய்து தமிழ்க் கிராமங்களை அழித்தவர்கள் முஸ்லிம்கள். அம்பாறை மாவட்டத்தில், சில கிராமங்களில் ஒரு தமிழர்கள் கூட இல்லாமல் அழித்தவர்கள் தமிழ் பேசும் முஸ்லீம்கள். இதற்கான ஆதாரங்கள் இணையத்தில் Google இல் நிறைய உண்டு, நான் சொல்வதை மட்டும் நம்பத் தேவையில்லை.

எந்தக் கிராமத்தில் முஸ்லீம்களை மட்டும் தெரிவு செய்து தமிழர்கள் அழித்தார்கள்?, இன்றும் கிழக்கில் மட்டுமல்ல, 95% தமிழர்கள் மட்டும் வாழும் வடக்கில் கூட முஸ்லீம் கிராமங்கள் உண்டு, மூதூருக்கு முஸ்லீம்களை அழிக்கப் போனதாக ஈழத்தமிழர்களில் உள்ள வெறுப்பில் சிங்கள அரசாங்கத்துக்காகப் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள் பல வலைப்பதிவாளர்கள்.

முஸ்லீம்களை அழிக்க விரும்பினால் மூதூருக்கு ஏன் போக வேண்டும், யாழ்ப்பாணத்தில், மன்னாரில், தாராபுரத்தில், எருக்கலம்பிட்டியில், வவுனியாவில், விடத்தல் தீவில் எல்லாம் செய்ய முடியாதா?, சும்மா பம்மாத்துக் கதை விடுகிறார்கள், தமிழைப் பேசிக் கொண்டே தமிழினத்தின் முதுகில் குத்துகிறார்கள்.

முஸ்லீம் மக்கள் வந்தேறு குடிகளா?

முஸ்லீம்கள் வந்தேறு குடிகளென அவர்களே வாதாடும் போது, தமிழ்மணத்தில் உள்ள ஒருவர் மட்டும் அவர்கள் வந்தேறு குடிகள் இல்லையாம், தம்மை அரபுக்களின் வழிவந்தவர்களென பெருமைப்படும் இலங்கை முஸ்லிம்களை, இல்லையென மறுதலிக்கும் இவர் இதை இலங்கை முஸ்லீம்களிடம் சொன்னால் மூக்கையுடைத்து விடுவார்கள்.
இலங்கையிலுள்ள தமிழ் பேசும் முஸ்லீம்கள் அனைவரும் தமிழர்கள் தான் என்று வாதாடி, முஸ்லீம்களைத் தமிழர்களாக தம்மோடு இணையுமாறு, இன்று நேற்றல்ல 1880 இல் சேர் பொன்னம்பலம் இராமநாதன் கேட்டது மட்டுமல்ல, அவர் Royal Asiatic Society யின் முன்பு "The Ethnology of the Moors of Ceylon என்ற கட்டுரையைச் சமர்ப்பித்தார். அதில் சேர் இராமநாதன் வாதாடியது என்னவென்றால், எப்படித் தமிழர்கள் இந்துக்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் இருக்கிறார்களோ, அதே போல் தான் முஸ்லீம்களாகவும் இருக்கின்றார்கள் என்றும், மொழி, கலை, கலாச்சார, பண்பாடு, பெரும்பாலான தமிழ் முஸ்லீம்களின் ஒருவமைப்பு எல்லாவற்றையும் ஆதாரம் காட்டி, இலங்கை முஸ்லீம்கள், தென்னிந்தியாவின் தமிழர்கள், ஒரு சில அரேபிய வியாபாரிகளின் திருமணத் தொடர்பு ஏற்பட்டுக் கலப்பேற்பட்டிருந்தாலும், பெரும்பான்மையானவர்கள் கலப்பற்ற, இஸ்லாத்தைத் தழுவிய தமிழர்கள் என்றும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார் சேர் இராமநாதன். ஈழத்தமிழர்கள் மதரீதியில் பிளவு படுவதை 1880 யிலேயே ஈழத்தமிழ்த்தலைவர்கள் விரும்பவில்லை.

ஆனால் சேர் ராமநாதனின் இந்த தமிழ்ச்சகோதரத்துவத்தை மலே முஸ்லீம்களுடன் சேர்ந்து கொண்டு எதிர்த்தார்கள் இலங்கையின் "தமிழ்" முஸ்லீம்கள். கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் ஒற்றுமையிருப்பதை மறுக்காத முஸ்லீம்கள், தாங்கள் தமிழர்களல்ல என்பதை மிகவும் உறுதியாகக் கூறியதுடன், இதற்குக் காரணம் ‘inevitable process of acculturation of a minority people’ என்று கூறினார்கள்.முஸ்லீம்கள் தமிழைப் பேசுவதற்குக் காரணம், இலங்கையின் துறைமுகங்களிலும், தென்னிந்தியத் துறைமுகங்களிலும், தமிழ் தான் வர்த்தகத்தின் மொழி( lingua franca’ of commerce) அதனால் தான் தமிழைப் பேசுகிறோம் என்று சேர் இராமநாதனுக்குத் *** பதிலளித்தார்கள் "தமிழ்" முஸ்லீம்கள். அதே வேளையில் தம்முடைய உடலில் தமிழ் இரத்தக் கலப்புள்ளதையும் அவர்கள் மறுக்கவில்லை, ஆனால் அவர்களில் சிலருக்கு தமது உடலிலுள்ள சிறியளவு அரபு, அல்லது ஆப்கானிகளின் இரத்தம், தமிழை விட முக்கியமானது.

இலங்கை முஸ்லீம்கள் தொப்பி பிரட்டிகளா?

ஓம், தொப்பி பிரட்டிகள் தான் முஸ்லீம்களைத் "தொப்பி பிரட்டிகள்" என்று இலங்கையில் அழைப்பதற்குக் காரணம், அவர்கள் எங்கு போகிறார்களோ, அங்கு சூழ்நிலைக்கேற்றவாறு, சுயலாபத்துக்காக அடையாளத்தையும், விசுவாசத்தையும் மாற்றிக் கொள்ளக் கூடியவர்கள் என்பது தான். நான் சொல்லுவதென்னவென்றால் தமிழர்கள், இலங்கையின் தமிழ் பேசும் முஸ்லீம்கள் சுயநலத்துக்காகவும், சலுகைகளுக்காகவும் அவர்கள் தமது தமிழடையாளத்தை மறுதலித்தார்கள் என்பது தான் சரியானதாகும்.

யாழ்ப்பாணத்தில் தம்மைத் தமிழர்கள் எனவும், சிங்களப்பகுதிகளில் தாம் சிங்கள ஆதரவு முஸ்லீம்கள் எனவும், எங்கெல்லாம் ஒரு ரூபாய் கிடைக்குமோ, அங்கெல்லாம் தொப்பியைப் பிரட்டியவர்கள் இவர்கள், தாம் தமிழர்களல்ல என மறுத்தவர்கள் இவர்கள். நாங்களாவது முஸ்லீம்களை தமிழர்கள், எங்களின் சகோதரர்கள் என அரவணைக்கத் தயங்குவதில்லை. ஆனால் சிங்களவ்ர்கள் இன்றும் "மரக்கல மினுஸ்"* அதாவது கள்ளத்தோணியில் வந்தவர்கள் என்று தான் அழைக்கிறார்கள். அதைக்கூட முஸ்லீம்கள் பெருமையுடன் ஏற்றுக் கொண்டார்கள்.

இலங்கை முஸ்லீம்களும் தாம் முஸ்லீம்கள் அதாவது அரபுக்கள் மட்டும் தான் என்று ஒரு அடையாளத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் பிரச்சனையே இல்லையே, அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு கதை, கொழும்பில் ஒரு கதையென தொப்பியைப் பிரட்டுவதால் தான் இந்தப் பிரச்சனையே. அவர்களின் சந்தர்ப்பவாததைத் தான் இலங்கைத் தமிழர்கள் வெறுக்கிறார்கள், தமிழநாட்டில் அவர்கள் தமிழர்கள் என்றால் இலங்கையில் மட்டும் எப்படி அரபுக்களானார்கள், வெறும் சுயலாபத்துக்கான சந்தர்ப்பவாதம் தானே, எந்த இலங்கைத் தமிழர்களும், முஸ்லீம்களைத் தமிழராகும் படி கேட்கவில்லை, நானும் கூடக் கேட்கவில்லை, அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலைத் தான் நான் வெறுக்கிறேனே தவிர முஸ்லீம்களையல்ல.

முஸ்லீம்களின், தாம் தமிழரல்ல எனும் தமிழெதிர்ப்பைத் தான் சிங்கள அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதனால் தான் சிங்கள ராணுவம், Muslim Home Guards ஐ உருவாக்கினார்கள். கிழக்கு மாகாணத்தில் "தமிழ்" முஸ்லீம்கள், சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து, எத்தனை தமிழ்க்கிராமங்களைப் பூண்டோடழித்துப் படுகொலை செய்து, தமிழர்களைத் தமிழ்க்கிராமங்களை விட்டு வெளியேற்றினார்கள், எத்தனை தமிழ்ப்பெண்களைக் கற்பழித்தார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து, புலிகளுக்கெதிராக உளவு பார்த்தற்காக, பிரபாகரன் முஸ்லீம்களை வெளியேற்றிய போது, யாராவது முஸ்லீம்கள் கொல்லப் பட்டார்களா? எந்த முஸ்லீம் பெண்ணாவது கற்பழிக்கப்பட்டாரா. சத்துருக்கொண்டான் கிராமத்தில் முஸ்லீம்கள் என்ன செய்து, தமிழர்களே இல்லாமல் செய்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்

நான் ஒன்றும் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவதற்காக இதைச் சொல்லவில்லை, பிரபாகரன் கூட யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியதற்காக பகிரங்க மன்னிப்புக் கேட்டார், எந்த முஸ்லீமும் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்டார்களா?

முஸ்லீம்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தார்கள்.

ஆம், காட்டிக் கொடுத்தார்கள், ஈழவிடுதலையின் ஆரம்பகால கட்டத்தில் தமிழர்களுடன், தமிழைப் பேசிக்கொண்டு தாயும், பிள்ளையும் போல், தமிழ்மண்ணில் வாழ்ந்து கொண்டே தமிழர்களுக்கெதிராக யாழ்ப்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்துக்கு உளவு பார்த்தார்கள், அதனால் சிங்கள இராணுவத்துக்கு வெற்றியையும், பல இளந்தமிழர்களின் சாவுக்கும் காராணமாக இருந்தார்கள், அதனால் ஈழவிடுதலைப் போரைக் காக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால். பிரபாகரன் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றினார்.

அப்படி பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்களை வெளியேற்றும் போதும், முஸ்லீம்களின் உயிருக்கோ, மானத்துக்கோ, உடைமைக்கோ எந்த விதப்பாதிப்பையும் ஏற்படுத்த ஈழத்தமிழர்களின் பெருந்தன்மையும், சகோதரவுணர்வும் இடங்கொடுக்கவில்லை. 2003 இல் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியதற்குப் பிரபாகரன் பகிரங்க மன்னிப்புக் கேட்டு விளக்கமளித்த போது, முஸ்லீம் தலைவர்கள் பலரும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டைக், கண்ணியத்தை, சகோதரவுணர்வை மெச்சியதை இத் தருணத்தில் நினைவு கூர்வது நல்லது.

மூதூரில் முஸ்லீம்களைக் கொல்வது தான் விடுதலைப் புலிகளின் நோக்கமென்றால், இந்தியப் பிரிவினையின் போது முஸ்லீம்கள் இந்துக்களைக் கொன்றது போல், குஜராத்தில் முஸ்லீம்களைக் கொன்றது போல், யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்களை வெளியேற்றும் போது விடுதலைப் புலிகள் முஸ்லீம்களைக் கொன்றிருக்க முடியாதா? மூதூருக்குப் போய்த்தான் கொல்ல வேண்டுமா, சொல்லுகிறவன் சொன்னா சொந்தப் புத்தி எங்கு போனது.

ஈழத்தமிழர்களின் மேலும், திராவிட இயக்கங்களிலும், விடுதலைப் புலிகளிலுமுள்ள காழ்ப்புணர்வால், ஈழவிடுதலைப் போரைக் கொச்சைப்படுத்தி, வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைக்கச் சிலர் முனைவதை ஈழத்தமிழர்கள் அனுமதிக்க மாட்டோம், இப்படிச் செய்து, தமிழனென்று தம்மை அழைத்துக் கொண்டு ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தும் ஈனத்தனத்தை தமிழர்களின் சரித்திரம் ஒரு போதும் மன்னிக்காது
இரணியன்
கட்டுரை எழுதினால் மட்டும் போதாது.. கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லவும் தெரிந்திருக்கவேண்டும் கட்டுரையாளருக்கு..
வல்லரசு
ம க இ க பற்றி இதே கீற்று இணையத்தளத்தில் நிறைய ஆய்வாளர்கள் பல கேள்விகள் கேட்டு வேக வைத்து சமைத்து காட்டீனார்களே. அப்ப இரணியன் ஏன் பதில் சொல்லையாம். ?
அது சரி இரணியனுக்கு அவரு பெயர கேட்டா கூட பதில் சொல்ல முடியாம திருப்பி கேள்விதான் கேப்பாரு. அவருக்கு கேட்க மட்டுதான் தெரியும்
mohamed
maraikayarkar yandra peayaril polikalai kandaria vendum .annalum muslimkal tamilarkalukaka poraduvadilai yandra karudhu tamilnadilum nilavivarugiradhu. keetru.com nadathiya islamiyarmidhana adakumurai yandra karudharangil.idhu yadherolithathu. tamil unarvalargal ondrai sindhika vendum. muslimgal thangaludaiya urimy marukapatumpothe poorada munvaruvadilai. sorpamana illaigargale anaithu poratagalayum nadathukirargal. muslim, dalit orrumai aduttha thalaimuraiil nichayam vettriperum.
insha allah

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.