தமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலையும் கருத்து ரீதியாக எதிர்கொண்டு பதில் கூறாமல், அவரது பிறப்பை இனங்கண்டு, அவரை ‘கன்னடர்’ எனத் தூற்றுகின்றனர்.

seeman_340பெரியாரை மட்டுமின்றி, தமிழினத் துரோகிகளாக விளங்கும் கருணாநிதி, தங்கபாலு உள்ளிட்ட பலரையும் ‘தெலுங்கர்கள்’ எனத் தூற்றி, அவர்கள் செய்த துரோகங்கள் அனைத்தும் அவர்களது பிறப்பினால் மட்டுமே வருவது போலப் பேசுகின்றனர். ‘தமிழ்ச்’ சாதியில் பிறந்த ப.சிதம்பரம், பா.ம.க. இராமதாசு, தனியரசு, தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் தமிழராய்ப் பிறந்துவிட்ட காரணத்தினாலேயே என்ன செய்து கிழித்துவிட்டனர் என அவர்கள் யாரும் அலசி ஆராய முற்படுவதில்லை.

ஒருவரின் நடைமுறைச் செயல்பாடுகளில் உள்ள தமிழினத் துரோகச் செயல்களைப் பட்டியலிட்டு விமர்சிக்காமல், அவர் பிறந்த சாதி எது என ஆராய்ச்சி செய்து தூற்றுகின்ற ‘மனுதர்மப்’ போக்கு சிலரால் முன்வைக்கப்படுகிறது. மனுதர்மப் பார்வையுடன் பேசித் திரியும் இப்போக்காளர்களை, தமிழ்த்தேசியர்கள் என பொதுமைப்படுத்தி அடையாளப்படுத்துபவர்கள் உள்நோக்கம் கொண்டவர்களாகவே இருக்க முடியும்.

ஏனெனில், ஆரியப் பார்ப்பனிய மனுதர்மத்தையும், சாதியையும், அதன் இன்றைய கருத்தியல் வடிவமான இந்தியத் தேசியத்தையும் தன் பிறப்பிலேயே மறுதலிப்பது தான் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியல் ஆகும். தமிழ்–தமிழினம் என பேசிக் கொண்டு திரிபவர்கள் எல்லோரும் தமிழ்த் தேசியர்கள் என பொதுமைப்படுத்தி அடையாளப்படுத்தத் தொடங்கினால், தமிழினத் துரோகி கருணாநிதியைக் கூட எளிதில் “தமிழ்த்தேசியர்” என அடையாளப்படுத்தி விடலாம்.

ஆக, வெறும் மொழிப்பற்றையும், இனப்பற்றையும், ஒரு விடுதலைக் கருத்தியலாகக் கருதுவது முற்றிலும் தவறானது. தமிழ்த் தேசியம் என்ற விடுதலைக் கருத்தியல் வெறும் மொழி - இனப் பற்று கொள்வதை மட்டும் கொண்டதல்ல. மாறாக,  முழுமையான மொழி – இன விடுதலைக்குப் பாடுபட மக்களை அணிதிரட்ட முன்வைக்கப்படும் கருத்தியலே தமிழ்த் தேசியம் ஆகும்.

திராவிடக் கருத்தியலை கடுமையாக எதிர்க்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியாரின் சமூகப் பங்களிப்பை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், அவரது தவறான கருத்துகளை சுட்டிக் காட்டி திறனாய்வு செய்கின்றது. இந்தி எதிர்ப்பை மேற்கொண்ட பெரியார், தமிழகத்தில் தமிழை முதன்மைப்படுத்துவதை விட்டுவிட்டு ஆங்கிலத்தை முதன்மைப்படுத்தினார். பகுத்தறிவுவாதம் என்ற பெயரில், தமிழர்களின் மரபார்ந்த அறிவியலையும், அறத்தையும் கொச்சைப்படுத்தி மேற்கத்தியவாதத்தை முன்வைத்து செயல்பட்டார். இவ்வாறு பெரியாரின் செயல்பாடுகள் மீது திறனாய்வுகளை முன்வைக்கும் நாம், ஒருபோதும் பெரியாரைக் 'கன்னடர்' என பிறப்பு அடிப்படையில் ஆய்ந்து, இத்திறனாய்வுகளை முன்வைப்பதில்லை.

வரலாற்றுப் போக்கி்ல் தமிழகத்தில், அயல் இனத்தாரின் படையெடுப்பால் பல்வேறு அயல் இனத்தவர்கள் குடியமர்த்தப்பட்டது உண்மையே. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இக்குடியேற்றத்தால், இங்கு வசிக்கத் தொடங்கிய அயல் இனத்தார் பல்வேறு சமூகங்களாக, தமிழ்ச் சமூகத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர்.

தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளை வீட்டு மொழியாகக் கொண்டும், தமிழைத் தம் வாழ்வியல் மொழியாகவும் ஏற்றுக் கொண்டவர்கள் இவர்கள். பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வரும் இவ்வகைச் சமூகத்தினர், தங்களது தாயகத்துடன் முற்றிலும் தொடர்பை இழந்து, தமிழகத்தைத் தம் தாயகமாக ஏற்றுக் கொண்டவர்கள்.

அதேபோல், தம் வழிபாட்டு மொழியாக உருது, ஆங்கிலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், முகமதியர், கிறித்துவர்களை   'கவனத்துடன்'  கையாள வேண்டுமென்கிறது நாம் தமிழர் கட்சியின் ஆவணம். இது இந்துத்துவத்திற்கு நெருக்கமானப் போக்காகும்.    ஈழ விடுதலையை வலியுறுத்துவது, இந்திய இறையாண்மையை ஏற்றுக் கொள்வது, முகமதியர்கள் மற்றும் கிறித்துவர்களை சந்தேகப் பட்டியலில் வைப்பது ஆகிய நாம் தமிழர் கட்சியின் மூன்று செயல்திட்டங்களை மட்டும் நாம் இணைத்துப் பார்த்தால், இம்மூன்றையும் தங்களது செயல்திட்டமாக ஏற்றுக் கொண்டு ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டுள்ள, இந்திய மற்றும் இந்துத்துவ வெறியர்களின் கூடாரமான இந்து மக்கள் கட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் குறைவான வேறுபாடுகளையே நாம் காண முடியும்.

நாம் முன்வைக்கும் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியல், எம்மதத்தவரையும் விலக்கி வைப்பதாகவோ, சந்தேகப் பட்டியலில் வைப்பதாகவோ இயங்கும் கருத்தியல் அல்ல. அனைத்து மதத்தவரையும் உள்ளடக்கிய தமிழ்த் தேசிய இனத்திற்கு விடுதலையைப் பெற்றுத் தரும் கருத்தியலே ஆகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழகத்தில் எழுந்த பல போராட்டங்களிலும், இவ்வாறு போலித் தமிழ்த் தேசியர்களால் வேறுபடுத்திப் பார்க்கப்படும் சமூகத்தினர் தங்களது பங்களிப்பைச் செய்துள்ளனர். வீட்டில் தெலுங்கு பேசினாலும், தமிழைத் தம் வாழ்வியல் மொழியாக ஏற்றுக் கொண்ட ஒடுக்கப்பட்ட சமூகமான அருந்ததியர்களின் அமைப்பான ஆதித்தமிழர் பேரவையினர், ஈழ விடுதலையை முன்வைத்துப் போராடுகின்றனர். பல முசுலிம் மற்றும் கிறித்தவ மத அமைப்புகள் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி போராடியிருக்கின்றன. அதேபோல, தெலுங்கு நாயுடு, நாயக்கர் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் இன்றும் தமிழர் உரிமை பேசும் பல்வேறு அமைப்புகளில் உறுப்பு வகிக்கின்றனர்.

இச்சமூக மக்களின் பங்களிப்புகளை ஏற்றுக் கொண்டு, அவர்களை அரவணைத்து, தமிழ்த் தேச விடுதலை என்ற உயரிய இலட்சியத்தின்பால் அவர்களை அணிதிரட்ட வேண்டியதே உண்மையான தமிழ்த் தேசியர்களின் கடமை. ஆனால், அதைச் செய்யாமல் அச்சமூக மக்களையும், இயக்கங்களையும் அவர்களது பிறப்பு வழி சாதியைக் கண்டுபிடித்து, அதன் காரணமாகவே அவர்கள் மீது வெறுப்பைக் கக்குவது தமிழ்த் தேசிய விடுதலைக்கு எதிரானது.

தம் வீட்டு மொழியாக அயல் மொழியைக் கொண்டிருந்தாலும், சமூக மொழியாக தாய்தமிழை ஏற்றுக் கொண்ட இச்சமூக மக்களை ஒட்டுமொத்தமாக ‘வடுகர்’ எனக் குறிப்பிட்டு, அவர்களை பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையில் வைத்து எதிர்க்க வேண்டும் என்ற கருத்தை அறிஞர் குணா முதலில் முன்வைத்தார். தமிழ்ச் சமூகத்தின் வானியல் அறிவு குறித்த பல சீரிய ஆய்வுகளை முன்வைத்த, அறிஞர் குணாவின் இப்பார்வை தவறானது. ஒரு தேசிய இனத்தின் தாயகப்பகுதியில் பல நூற்றாண்டுகளாக தங்கி, அம்மக்களோடு பிணைந்த உளவியலையும், வாழ்வியலையும் பெற்ற மக்களை முழுவதுமாக வெளியேற்றுவது பாசிசமே ஆகும்.

இப்பாசிசக் கருத்தை ஏற்றுக் கொண்ட தமிழர் களம், நாம் தமிழர் கட்சி, பா.ம.க. உள்ளிட்ட அமைப்புகளும், “எழுகதிர்” அருகோபாலன் போன்ற சிலரும் தான் “தமிழ்த் தேசியம்“ என்ற பெயரில் இத்தவறான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ஆரியத்தின் தென்னாட்டுக் கிளையான திராவிடத்தை மட்டுமே இவர்கள் குறிவைத்து சாடுகிறார்களே ஒழிய, தமிழர்களின் முதன்மையான எதிரியான ஆரியப் பார்ப்பனிய இந்தியத் தேசியத்தை விட்டுவிடுகிறார்கள்.

‘தமிழனை தமிழனே ஆள வேண்டும்’ என்று கூறும் இவர்கள், தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவியில் தம்மை அமர வைக்கக் கோருகிறார்கள். இந்திய அரசுக்குத் தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் கங்காணிப் பதவியான தமிழக முதல்வர் பதவியில், ‘தமிழ்ச் சாதியில்’ பிறந்த இவர்களை அமர்த்தக் கோரும் பதவி அரசியலைத் தான் இவர்கள், ஏதோ இனவிடுதலை அரசியல் போல் முன்வைத்து படம் காட்டுகிறார்கள். இதற்குப் பதில், அப்பட்டமாக, “எங்களை முதல்வராக்குங்கள்” என தே.மு.தி.க., ம.தி.மு.க., போன்ற தேர்தல் கட்சிகளைப் போல் இவர்கள் பரப்புரை செய்யலாம். அதைவிடுத்து, தமிழர் - தமிழ்த் தேசியம் என பேசுவதெல்லாம் வெறும் ஓட்டுகளுக்காகவே ஆகும்.

தமிழ்நாட்டு முதல்வர் பதவியில், “மானத்தமிழன்” அமர்ந்தாலும், மார்வாடி அமர்ந்தாலும் அதன் விளைவாக தமிழ் இனத்திற்கு ஏதும் கிடைக்கப் போவதில்லை. தமிழீழச் சொந்தங்களை அழித்தொழிக்கும் இலங்கைப் போரை நிறுத்த வேண்டுமென கொண்டு வரப்பட்ட தீர்மானம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தக் கோரும் தீர்மானம், இலங்கை மீது பொருளியல் தடை கோரும் தீர்மானம் என ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு இந்திய அரசின் குப்பைத் தொட்டிக்குள் விழுந்த தீர்மானங்களைப் போல, அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து வெறும் தீர்மானங்கள் மட்டுமே போடுவதைத்தான் தமிழக சட்டமன்றம் செய்ய முடியுமே தவிர, ஒருக்காலும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் அரசியல் விடுதலையைப் பெற்றுத் தர முடியாது.

ramadas_220பெ.தி.க., ம.தி.மு.க., போன்ற அமைப்புகள் “திராவிடம்” என்ற தவறான சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு செயல்பட்டாலும், நடைமுறையில் அவர்கள் தமிழீழ விடுதலைக்கும் தமிழக உரிமைகளுக்கும் செய்த பங்களிப்புகளையும் நாம் மதிக்க வேண்டும். அவர்களது தவறான கருத்தியலின் காரணமாக, அவர்களது உண்மையான ஈகங்கள் பெருமையிழப்பதை நாம் தோழமை உணர்வுடன் சுட்டிக்காட்ட வேண்டும். பெரியாரின் ‘திராவிட’ கருத்தியலை ஏற்றுக் கொள்ளும் இவ்வமைப்பினர், அவர் முன்வைத்த தனித்தமிழ்நாடு என்ற இலக்கை தங்களது வேலைத் திட்டமாக இன்னும் ஏன் அறிவித்துச் செயல்படவில்லை என்பதும் நமது கேள்வியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு, தமிழ் – தமிழினம் என முழங்கி செயல்படும் அமைப்புகள் மற்றும் உணர்வாளர்களின் தத்துவ அடித்தளத்தையும், நடைமுறை வேலைத் திட்டங்களையும் தான் நாம் விமர்சிக்க வேண்டுமே தவிர, அவர்களது பிறப்புவழிச் சாதியை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துத் தூற்றுவது மனுதர்மப் போக்கே ஆகும். இதுவே, இப்போலித் தமிழ்த் தேசியர்களுக்கு பெரும் வேலையாகி  விட்டது.

சாதியை முன்வைத்து வெளியிடப்படும், இவ்வகை பதவி சுகம் தேடும் போலித் தமிழ்த் தேசியவாதிகளின் கருத்துகளை, உண்மையான “தமிழ்த் தேசியம்” எனக் கூறி, தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்களும், இந்தியத் தேசிய வெறியர்களும் உள்நோக்கத்துடன்  வெளியிட்டு அவதூறு செய்து மகிழ்கிறார்கள்.

திராவிடத்திற்கு மாற்றாக, தமிழ்த் தேசியக் கருத்தியலின் வலிமையை கருத்தியல் ரீதியாக எடுத்துரைக்க வேண்டுமே தவிர, தமிழ்ச் சமூகத்தின் இழிவான சாதியை வைத்து அதை நிறுவக் கூடாது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, 1956ஆம் ஆண்டு இந்திய அரசால், மொழிவழி மாநிலமாக தமிழகம் உருவாக்கப்பட்டதற்குப் பிறகு தமிழகத்திற்குள் குடியேறி, பொருளியல் – பண்பாட்டு ஆதிக்கங்கள் புரியும், தெலுங்கர்கள், மார்வாடி-குசராத்தி சேட்டுகள், மலையாளிகள் உள்ளிட்ட அனைத்து அயல் இனத்தாரையும் வெளியேற்ற வேண்டும் எனக் கோருகிறது. தற்போது, தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் குடியேறி வரும் வடவர்களையும், மலையாளிகளையும் வெளியேற்றக் கோருவதும் இந்த அடிப்படையில் தான்.

தமிழீழத் தாயகப்பகுதிகளில் சிங்களவரைக் குடியேற்றி, தமிழ் மக்களை சிறுபான்மையாக்க முயலும் சிங்கள அரசின் இனவெறியைக் கண்டிக்கும் அதே அடிப்படையில் தான், த.தே.பொ.க., தமிழ்நாட்டுத் தமிழர்களை சிறுபான்மையாக்கும் விகிதத்தில் மிகை எண்ணிக்கையில் குடியேறும் வடவர்கள், மலையாளிகள் உள்ளிட்ட அயல் இனத்தாரை வெளியேற்றக் கோருகிறது. திராவிட இயக்கமான ம.தி.மு.க., போன்ற அரசியல் கட்சிகள் சிங்களக் குடியேற்றத்தைக் கண்டிக்கின்றனவே தவிர, தமிழகத்தில் மலையாளிகளையும், வடவர்களையும் வெளியேற்றக் கூடாது என்பதையும் நாம் விமர்சிக்கிறோம்.

தமிழகத்தில் மிகை எண்ணிக்கையில் உள்ள அயல் இனத்தாரை வெளியேற்றுகின்ற அதே வேளையில், தமிழக எல்லையோரங்களில் உள்ள பிற தேசிய இன மக்கள் மொழிச் சிறுபான்மையினராகக் கருதப்பட்டு, அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் நாம் கூறுகிறோம்.

இது உலகெங்கும் இன்றைக்கும் உள்ள 'விசா நடைமுறையைப் போன்றதாகும். ஆனால், அறிஞர் குணா பாதையில், தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்து குடியேறி, தமிழ் மக்களாக வாழுகின்ற சமூகத்தினரை வெளியேற்றவது என்பது நடைமுறைச் சாத்தியம் இல்லாத பாசிசத் தன்மையுடன் முன்வைக்கப்படும் திட்டமாகும். ஒரு தேசிய இனத்தின் தாயகத்தில் முழுவதுமாக ஒரே இனம் தான் வாழ வேண்டும் என்ற இனத்தூய்மையாக்கல் கொள்கை ஒருக்காலும் சாத்தியம் ஆகாது.

ஏனெனில், ஒரு தேசிய இனத் தாயகத்தின் எல்லைப் பகுதிகளில், அண்டைத் தேசிய இன மக்கள் குடியேறுவதும், பிறநாட்டினர் சிறு அளவில் குடியேறுவதும் இன்றைய நடைமுறையில் தவிர்க்க இயலாது. ஆனால், ஒரு தேசிய இனத்தின் தாயகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவே, பிற தேசிய இன மக்கள் குடியேறலாமேத் தவிர, அத்தேசிய இன மக்களை விட அதிகளவிலான பிற தேசிய இன மக்கள் குடியேறக் கூடாது என கட்டுப்பாடு விதிப்பது பாசிசமாகாது. இந்த அளவுகோல் வேறுபாடுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சிங்கள ஆதிக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொள்ள வேண்டுமென தமிழீழ மக்களைத் திரட்ட, தமிழீழத் தமிழர்களால் வழங்கப்படுகின்ற கருத்தியலே, அவர்களால் ‘தமிழ்த் தேசியம்’ என முன்வைக்கப்படுகிறது. அதே போல், இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியாக உள்ள தமிழ்நாடு தம்மை விடுவித்துக் கொண்டு தனித் தமிழ்த் தேசமாக மலர வேண்டும் என்பதே தமிழகத்தில் ‘தமிழ்த் தேசியம்’ ஆக இருக்க முடியும்.

ஆனால், இந்திய அரசியலமைப்பையும், இறையாண்மையையும் ஏற்றுக் கொண்டு நடைபெறும் தேர்தல்களில் பங்கேற்பதும், தமிழ் இனத்தை இந்திய அரசுக்குக் காட்டிக் கொடுக்கும் மசோதா மன்றமாகத் திகழும் தமிழக சட்டமன்றத்திற்குப் போட்டியிடுவதும் தான் ‘தமிழ்த் தேசியம்’ என நாம் தமிழர் கட்சி, தமிழர் களம், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சியினர் பேசுகின்றனர்.

தேர்தல் அரசியல் மூலம் பெறுவதற்கு தமிழ்த் தேசியம் என்ன இடஒதுக்கீடு போன்ற சீர்திருத்தக் கொள்கையா என்று கூட இவர்கள் சிந்திப்பதில்லை. ‘அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு’ எனப் பேசி தேர்தல்களில் பங்கேற்று மக்களை ஏய்த்த தி.மு.க.வின் வழித்தோன்றல்களாகவே இவர்கள் மக்களிடம் தென்படுவார்கள். ம.தி.மு.க., பா.ம.க., கொ.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், நாம் தமிழர் கட்சி, தமிழர் களம் என எத்துணை அமைப்புகள் வந்தாலும் இதற்கு விதிவிலக்கல்ல.

தேர்தல்களில் வெற்றி பெற்று பதவிகள் பெறலாம், தமிழ்ச் சமூகத்திற்கு சில கூடுதல் உரிமைகளைக் கூடப் பெற்றுத் தரலாம் என்றாலும், ஒருபோதும் தமிழ்த் தேசிய விடுதலையைப் பெற்றுத் தர முடியாது. ஏனெனில், தமிழ்த் தேசியம் என்பது நாம் கேட்டுப் பெற வேண்டிய சலுகையல்ல; அது ஒர் தேசிய இனத்தின் விடுதலை இலக்கு. அதனை மக்கள் எழுச்சிப் போராட்டங்களே பெற்றுத் தரும், அதில் தேர்தல் கட்சிகளுக்கு இடமில்லை.

(கட்டுரையாளர் க.அருணபாரதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர்)

Comments

59 comments

59
sankaran
சீமானின் பேச்சுகளுக்குப் பின்னே இருப்பது நாற்காலி ஆசை என்பதை கட்டுரை போட்டு உடைத்திருக்கிறது. இனி நாம் தமிழர் கட்சியினர், அருணபாரதி தமிழரா என்ற சாதி ஆராய்ச்சியில் இறங்கி விடுவார்கள் என நினைக்கிறேன்.
இரா.புவனேந்திரன்
பெரியாரே என்ன சொல்லிருக்கார் என்னுடைய கருத்துகளுக்கும் விமர்சனம் இருந்தால் தான் நான் கண்ட கனவு பழிக்கும் என்று
கன்.மோகன்
உணர்ச்சிகளை விலக்கி அறிவார்ந்த பார்வையோடு தமிழ்த் தேசியத்தின் மீதான குழப்பங்களையும் முகமூடிகளையும் களையும் காலைக்கதிர்போல் தெறிக்கின்றன தோழர் அருணகிரியின் நெற்றிக்கண் வரிகள். நலம் பேணும் வலுவான விவாதங்கள்தான் நல்லதொரு தீர்வுக்கான அடித்தளத்தை உருவாக்கும். பொறுத்திருந்து பார்ப்போம் வரும் விமர்சனங்களை.......
salanan
இந்த கட்டுரை ஓரளவுக்கு சரியான புரிதலோடு எழுதப்பட்டதாக தோன்றுகிறது.
சீமானுக்கு தமிழுணர்வை விட நாற்காலி ஆசை தான் இருக்கிறது. தமிழகத்தில் தமிழ் இன உணர்வும் மாநில உணர்வும் வளராததற்கு திராவிட கட்சிகள் மட்டும் காரணமல்ல. தமிழர் அமைப்புக்களும் தான். மாநிலத்தின் முக்கிய நகரங்களில் மட்டும், அதுவும் எங்கோ ஒரு மூலையில், குசு விடுவது மாதிரி, சில நூறு பேர் மட்டும் கலந்து கொள்ளும் கூட்டங்களை நட்த்துவதால் என்ன பயன்? யாருக்கு பயன்?. சாதி கட்சிகளும் திராவிட கட்சிகளும் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு வீடு பாக்கியில்லாமல் ஏறி பரப்புரை செய்கிறார்கள். நோட்டீஸ் வினியோகிக்கிறார்கள். அவர்கள் வலுவோடு இருப்பதற்கு இதுவும் காரணம். தமிழ் அமைப்புக்களை சேர்ந்தவர்களும் குக்கிராமங்களில் கூட வீடு வீடாக ஏறி பரப்புரை செய்ய வேண்டும். அதற்கு முன் தமிழகத்தை சேர்ந்த புத்திஜீவிகளிடம் (மெத்தப்படித்த அறிவாளிகள், அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், பண செல்வாக்கு கொண்டவர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டில் குடியேறிய தமிழர்கள் ஆகியோர்) ஆதரவை அணுகி பெறுவது இன்றிமையாதது. கர்நாடகத்தில் “சரோஜினி மகிஷி கமிட்டி” மற்றும் “கோகக் கமிட்டி” ஆகியவற்றை நியமித்து அவை அளித்த பரிந்துரைகளின் பேரில் கன்னடத்தை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. மராட்டிய மாநிலத்தில் “ஸ்தானிய லோக் அதிகார் சமிதி” என்னும் அமைப்பின் மூலம் மராட்டியர்களுக்கு மத்திய அரசு நிறுவனங்களில் கூட வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. அகில இந்தியாவிலேயே இன உணர்வும் மாநில உணர்வும் இல்லாத மக்கள் இருப்பது தமிழ் நாட்டில் தான். நதிநீர் பிரச்சினைகள், அணை பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை, ஈழத்தமிழர் பேரழிவு ஆகிய பல பெரும் பிரச்சினைகளை சாதி என்னும் வட்டத்தை விட்டு வெளியே வந்து தான் எதிர்கொள்ளவேண்டும் என்று தமிழகத்து மக்களுக்கு புரியவில்லை. அவர்களுக்கு புரிய வைக்கவேண்டியது தமிழ் அமைப்புக்களின் கடமை.
Sakya Mohan
கட்டுரையாளர் அருணபாரதி தனது தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பாக கருத்தை வைத்திருப்பது விளங்குகிறது. திராவிஷம் எனும் திராவிடம் நிலையிலிருந்து "தமிழ் தேசியம்" என்ற நிலைக்கு இடம் மாறியிருக்கும் சூத்திர ஆளுமை சாதிகளின் ஒட்டுமொத்த குரலாக பதிவு செய்திருக்கிறார். அருணபாரதியின் "தமிழ் சாதி" எனும் சொல்லாடல் மூலம் தமிழ்த் தேசப் பொதுவுடைமை என்பது சூத்திர ஜாதியத்தை தவிர்க்க இயலாத தமிழரின் ஜாதிய உளவியலை வெளிப்படுத்துகிறது. குணாவின் தமிழ் பாசிசத்திற்கும் அருணபாரதியின் தமிழ் பாசிசத்திற்கும் ஏதும் வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை. மேலும், 'ஈழம் எனும் ஹிந்து சாம்ராஜ்ஜிய நிறைவேறாத கனவு' தமிழ் வெள்ளாள சூத்திர ஜாதிகளை கசக்கிப் பிழிகிறது. அத்தனை அரசியல்வாதிகளையும் தோலுரிப்பதாக விரியும் கட்டுரையில், அருணபாரதி எனும் தமிழருக்கு சூத்திரர்களின் ஜாதிவெறியொழுகும் கொடூர முகம் வெளிப்படுத்த முயற்சியே இல்லாத மொழிவழி-பொதூடைமை சிந்தனை சாதிவழி-தீண்டாமையை ஆதரிக்கும் தமிழர் உளவியலாகவே உள்ளது. எத்தனை முறை அருணபாரதி போன்ற தமிழ்-ஜாதியர் இழிவாக ஒதுக்கினாலும், அடம்பிடிக்கும் குழந்தையாக இன்னும் தொல்.திருமாவளவன் பேசும் "தமிழ் தேசியம்", நாம் தமிழர் சீமான் தேவ சூத்திர ஜாதியர் கையில் எடுத்த "பாசிச" உறைவாளைப் போன்றது தான்.
raja
That is he want to oppose dravidam, and periyar followers (but not periyar) it was first started by Periya valll Chandrasekar Sangrachary.He only try to draw a line between periyar and periyar followers.Now each one Seeman,Maniarasn follow that voice.

Once Maniarasan said Sri Ramapiran is the ancient god of tamilians.........
Think this line and their thoughts while reading the passage.
Senthilnathan
அய்யா அருணபாரதி அவர்கள் எழுதிய குழப்பம் மிகுந்த கட்டுரையில் நாமதமிழர் ஆவணத்தில் இரண்டுவிதமான விமர்சனங்களை முன்வைத்து இருகின்றார்.

ஒன்று பெரியாரை இழிவு படித்திவிட்டது ஆவணம்.

இரண்டாவது தமிழ்தேசிய அரசியலை முன்னெடுப்பவர்கள் ஒட்டு அரசியலை செய்யலாமா ?

முதலாவது. பெரியாரை விமர்சிப்பது சரியா ? தவறா ?. இதை தமிழ்தேச பொதூடமை கட்சியின் தலைவரிடமே கேட்டு இருக்கலாமே. நீங்கள் தமிழ் தேசிய போது உடமை கட்சியின் செயற்குழு உறுப்பினர் தானா ? என்பது எனக்கு சந்தேகமாய் இருக்கின்றது. ஏன் என்றால் உங்கள் கட்சியின் பொதுசெயலாளர் தோழர் மணியரசன் பெரியாரை விமர்சிக்காத மேடைகளே கிடையாது. பெரியாரை விமர்சித்து "பெரியாருக்கு பின் பெரியார்" என்ற தலைப்பில் தோழர் மணியரசன் எழுதிய விமர்சனங்களை முதலில் படித்து பாருங்கள். பிறகு நாம்தமிழர் கட்சியின் ஆவணத்தை விமர்சிக்கலாம். பெரியாரை மணியரசன் விமர்சித்தால் அது தமிழ் தேசிய அரசியல். சீமான் விமர்சித்தால் அது பிழைப்புவாத அரசியலா ? என்ன ஒரு உங்கள் அரசியல் நேர்மை.

இன்னும் ஒரு கோபம்கொப்பளிக்கும் விமர்சனம்.

>>>
பெரியாரை மட்டுமின்றி, தமிழினத் துரோகிகளாக விளங்கும் கருணாநிதி, தங்கபாலு உள்ளிட்ட பலரையும் ‘தெலுங்கர்கள்’ எனத் தூற்றி, அவர்கள் செய்த துரோகங்கள் அனைத்தும் அவர்களது பிறப்பினால் மட்டுமே வருவது போலப் பேசுகின்றனர். ‘தமிழ்ச்’ சாதியில் பிறந்த ப.சிதம்பரம், பா.ம.க. இராமதாசு, தனியரசு, தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் தமிழராய்ப் பிறந்துவிட்ட காரணத்தினாலேயே என்ன செய்து கிழித்துவிட்டனர் என அவர்கள் யாரும் அலசி ஆராய முற்படுவதில்லை
>>>

ஒரு கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருக்கும் நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் எவளவு கீழ்த்தரமாக இருக்கின்றது?. நீங்கள் ஒருவேளை 2405 -௨௦௧௨ அன்று செங்கிப்பட்டியில் நடந்த சீமான் தலைமையில் கூட்டத்திற்கு வந்திருந்தாள் விளங்கி இருக்கும் என்று நினைகின்றேன். சீமான் தெளுங்கலரை, கன்னடத்தாரை, மலையாலத்தாரை எதிர்ப்பதால் திருமாவளவனோ, சிதம்பரத்தையோ நல்லவர்கள் என்று சொல்லவில்லை. முதலில் தமிழ் இனத்தை திராவிட கலப்பில் இருந்து மீட்ப்போம். பிறகு இந்த இனத்திற்குள்ளே இருக்கும் இனதுரோகிகளை நாங்களே சரிசெய்து கொள்கிறோம்.

செயற்குழுவில் இருக்கும் நீங்கள் கற்ற தமிழ் தேசியம் இதுதானா ?. இல்லை உங்களுக்கு தமிழ் தேசியம் பற்றி தெரியவில்லை என்றால் போய் உங்கள் போதுசெயலாளரிடம் பாடம் கற்றுகொள்ளுங்கள்.

இரண்டாவதாக சொல்லுவது ஒட்டு அரசியல்.

எனக்கு விபரம் தெரிந்த நாள்முதல் தமிழ்தேசிய பொதூடமை கட்சியை அதன் செயல்பாடுகளை கட்டு கொண்டிருக்கின்றேன். ஏறக்குறைய முப்பதாண்டுகால பாரம்பரியம் இருக்கின்றது. அதன் பிறப்பிடம் என்று நீங்கள் சொல்லி கொள்ளும் செங்கிப்பட்டியில் வசிப்பவன் என்பதால் தமிழ்தேச பொதூடமை கட்சிபற்றி நன்றாக அறிவேன். முப்பதாண்டுகால அரசியல் வரலாற்றில் நீங்கள் சாதித்தது என்ன ?. என்ன பெருந்திரளான தமிழ்தேசிய மக்களை திரட்டி இருக்கின்றீர்கள்.

தேர்தல் நேரத்தில் ஒட்டுபோடவேண்டாம் என்று தமிழ் தேசியம் பேசுவீர்கள்... பிறகு வாய்கால் சரியில்லை.... வயிறு சரியில்லை என்று தேர்தலில் நின்று ஒட்டு போட்டு ஜெயித்தவன் வாசலில் மனுகொடுக்க காத்துகொண்டு இருப்பீர்கள். இது எவளவு பெரிய மடமை.

கடவுளை நம்பாதவர்கள் பூசாரிகளிடம் வரம்கேட்டு நிர்ப்பது மடமையல்லவா ?... தேர்தல் பாதை திருடர் பாதை என்று வியாக்கியானம் பேசுபவர்கள் இந்த முப்பது ஆண்டிற்குள் என்ன செய்து இருக்கவேண்டும் ?. அனைத்து தமிழ்மக்களையும் திரட்டி தனித்தமிழ்நாடு அமைத்து இருக்கலாமே... அதற்க்கு தலைவராக அருணபாரதி பெரிதாய் மதிக்கும் பெரியாரையே வைத்து இருக்கலாமே....

எனவே நீங்கள் உங்கள் கட்சியின் கொள்கையை படியுங்கள். பிறகு மன்ற கட்சியின் ஆவணத்திற்கு விளக்கம் தரலாம்.
கா பா இராசகுரு
"தன் இனத்துக்கான ஒரு பெரிய கட்டமைப்பை கையிலெடுக்காமல், இன மீட்சி - வலையிலும் முகநூலிலும் தான் இருக்கும்."

"அப்ப தீரர் சத்தியமூர்த்தி வெள்ளகாரனுக்கு கங்காணியா?"

"கங்கானி வேலை ஒரு தமிழன் பார்த்தா என்ன? எங்கள் வேறவன் தான் கங்கானிக்கனுமா? "
சம்பூகன்
பெரியார் மீது கட்டுரையாளர் வைக்கும் இரண்டு குற்றச்சாட்டுகளும் அர்த்தமற்றது.

1.ஆங்கிலத்தைத் திணித்தார்: ஆம்... இந்தியை நீக்கி ஆங்கிலம் படிக்கச் சொன்னார். இந்தி ஆரியப்பண்பாட்டுப் படையெடுப்பு மொழி; ஆங்கிலம் அறிவியல் மொழி; அறிவியலை வழங்கிய மொழி;உலகை ஆளும் மொழி. தமிழன் ஆங்கிலம் படித்ததால் தான் இன்று நீங்களும் நானும் இந்த இணையத்தில் தமிழ் தேசியம் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். தமிழன் வீட்டுப் பிள்ளைகள் அமெரிக்காவில், இங்கிலாந்தில் கணிப்பொறியாளனாக பொருள் ஈட்டுகிறான். தமிழ் மட்டும் படித்திருந்தால் வேலை இல்லாத்திண்டாட்டத்தில் பெரும் பஞ்சமே ஏற்பட்டிருக்கலாம். தமிழை ஒரு பாடமாக ஒழுங்காக, முறையாக, தெளிவாக நம் பிள்ளைகளுக்குச் சொல்லித்தந்திருக்கவேண்டும். அதனைச் செயாதது தவறு என வாதிடலாம். ஆனால், ஆங்கிலம் வேண்டாம் என்பது தமிழர்களின் வளர்ச்சிக்கு எதிரான கருத்து. தமிழன் வாழ்ந்தால்தான் தமிழ் வாழும். தமிழன் வாழவேண்டுமானால் ஆங்கிலம் படிக்க வேண்டும்.

2. மரபார்ந்த அறிவியலையும் அறத்தையும் பகுத்தறிவுவாதத்தால் கொச்சைப்படுத்தினார்: இது மேலெழுந்தவாரியான குற்றச்சாட்டு. பகுத்தறிவைப் பயன்படுத்தச் சொன்னார். நிகழ்கால உலகில் நடக்கும் அறிவியலை எடுத்துக்காட்டினார். இன்றைய உலகப்போட்டிக்கு தமிழ் மரபார்ந்த அறிவியல் போதாது என்றார். குறிப்பாக குடும்பக்கட்டுப்பாடு; மக்கள் தொகை கட்டுப்பாடு. இதில் தமிழர் மரபுசார்ந்த அறிவியல் பார்வை அல்லது கருத்து என்ன? ``ஆண்டவன் கொடுக்கிறான் அதனால் பிள்ளை பெற்றுக்கொள்கிறேன்,நம்ம கையில என்னங்க இருக்கு?’’ என்று தமிழன் தனது கடவுள் மூட நம்பிக்கையால் பத்துப் பதினைந்து பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு துன்பப்பட்டதை மாற்ற விரும்பினார். மனித வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழவேண்டியது; இரண்டு பிள்ளைகள் போதும் என்று கூறினார். பிள்ளைகள் பிறக்காததற்குக் காரணம் முன்வினைப்பயன் என்றும், விதிப்படிதான் நடக்கும் என்று கோவில், குளம் சுற்றி தமிழனை, நீ பெற்றால்தான் பிள்ளையா? வசதி இல்லாத குடும்பப் பிள்ளைகளை எடுத்து உன் வளர்த்து ஆளாக்கி மகிழ்ந்திடு என்றார். இதன்மூலம் தமிழ்ப்பெண்களின் உடல் நலம் காத்தார்; உள்ள நலம் பேணச் செய்தார். மரபார்ந்த தமிழர் அறத்தை ஒழித்து ஆரியம் சமஸ்கிருத ஆபாச மந்திரத்தை ஏற்று வாழ்ந்த தமிழனை, மானமிழக்காதே தமிழா... புரோகிதம் மறு! உன் மொழி இல்லாத திருமண முறை ஏன்? தன்மானமும்,இன மானமும் ஆண்-பெண் உரிமையும் கொண்ட சுயமரியாதைத் திருமணம் செய் என்றார். தமிழரின் பண்டைய மணமுறையை மீட்டார்.
ஆதி மனிதன் தமிழன் என்றால், அவன் நிச்சயம் பகுத்தறிவைப் பயன்படுத்தியவனே. அந்தப் பகுத்தறிவைப் பயன்படுத்து என்பது தமிழருக்கு எதிரானதா?
தமிழனுக்கு கல்வி, மருத்துவம் கொடுத்து; ஜாதியை ஒழித்ததில் மேற்கத்திய வாதத்தின் பங்கும் உண்டு. மேற்கத்தியவாதம் இல்லை என்றால் இன்னும் கிராமங்களில் ஊரும் சேரியுமாக பிரிந்து ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு சாகவேண்டியதுதான். எந்த மரபும் எக்காலத்திலும் அப்படியே இருந்துவிட முடியாது. பழந்தமிழச்சி ரவிக்கை அணியாதவளாக இருந்த மரபினள். காலத்தின் தேவையால் அதனை மீறவில்லையா? தமிழர் மரபில் தேவையானவற்றைக் கடைப்பிடிக்க பெரியார் தடுத்ததில்லை.பொங்கல் திருநாள் தமிழரின் மரபார்ந்த விழா. அதனை பெரியார் கொண்டாடவில்லையா?ஊக்கப்படுத்தவில்லையா?
தமிழரின் வரலாற்றில் காலத்தின் தேவையாக வந்த வழிகாட்டி பெரியார்தான். பகுத்தறிவால் கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளி வாழ தமிழனுக்கு அறிவு சொன்னவர். ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்று மல்லுக்கட்டியவர் அல்ல; யாரும் அவரை உரசிப்பார்க்கலாம்.அவர் ஒன்றும் தன்னை மகான், புனிதமானவன் என்று சொல்லிக்கொண்டவர் இல்லை. அரைக்க அரைக்க மணக்கும் சந்தனம். உரசுங்கள்...ஒளிர்வார் பெரியார்!
Morthekai
நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் நல்ல விவாதங்களைத் தூண்டியிருக்கிறது. தொடரட்டும். அதே நேரத்தில் நமக்குள் முட்டிக்கொள்ளத் தூண்டக்கூடாது. மற்றக் கட்டுரையைப் போல தனிப்பட்ட தாக்குதல்களைச் செய்யாமல், அருணபாரதி அவர்கள் ஒரு நல்லக் கட்டுரையை கொடுத்திருக்கிறார்கள். ஒரே ஒரு காரியத்தைமட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

நாற்காலி நம்மிடம் இல்லாமல்தானே நம்மை இழந்தோம், இழந்து வருகிறோம். எந்த வழியென்றாலும் பரவாயில்லை, நமக்கு நாற்காலிதான் முக்கியம் என்று நாம் தமிழர் கட்சி சொல்லவில்லை. வழியும் முக்கியம் என்பதால்தான் இக்காலக்கட்டத்துக்குப் பொருத்தமான தமிழ் தேசியத்தைக் கையில் எடுத்திருக்கிறது. இது காலத்தின் கட்டாயமேயொழிய சந்தர்ப்பவாதமாக தெரியவில்லை.

அதிகாரம் மத்தியில் குவிந்திருப்பது உண்மையே. ஆனால், (கொஞ்சமாக இருந்தாலும்) இருப்பது இல்லாதிருப்பதைவிட சிறந்தது தானே! கீழிருந்து போராடுவதைவிட இடையிலிருந்துகொண்டு போராடுவது சிறந்ததுதானே?!
Tamil Murugesan
இந்த பொதுவுடைமை வாதிகள் தாங்களும் குழம்பி பிறரையும் குழப்பி விடுவார்கள்...ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் தாய்மொழி மாறாது...தேசிய இனத்தை மாற்ற முடியாது என்கிறார் பெ.மணியரசன் ....ஆனால் இவர் மாற்றிச் சொல்கிறார்...தமிழ் தேசியம் பேசுபவர்கள் ஓட்டு அரசியலுக்கு வருவது தவறா...அப்படியானால் இதுவரை திராவிடம் செய்தது என்ன? ஆயுதப் போராடமா? தெலுங்கனை தெலுங்கன் எனச் சொல்லாமல் தமிழன் என்று சொல்ல வேண்டுமா??
thiravidan
அற்புதம் சம்பூகன்! அருமை அருமை....தலைவர் பெரியார் வாழ்க!
ulakathamilar
சீமானின் ஆவணம் இவ்வளவு கருதுப்போரை உண்டாக்கி இருப்பது மிக்க மகிழ்ச்சி. நான் ஒரு இலங்கை தமிழனாக இருப்பதால் சில விழயங்களை உங்களிடம் இருந்து அறிய விரும்புகிறேன். தமிழகத்தில் வாழ்கின்றவர்களில் எவ்வளவு வீதமான மக்கள் தங்களை திராவிடராகம உணர்கின்றனர்? எவ்வளவு வீதமான மக்கள் தங்களை
தமிழராக உணர்கின்றனர்? இவ் இரண்டுமே இல்லை என்று எவ்வளவு வீதமான மக்கள் உணர்கின்றனர்? இங்கு வரும் பல கட்டுரைகள் வசிக்கும் போது தமிழர்களை ஆரியர்கள் அடிமை படுத்துகிறார்கள் என்று உள்ளது.
இப்போது உள்ள சூழ்நிலையில் ஆரியர்கள் எவ்வாறு தமிழரை அடிமை படுத்துகிறார்கள் என்று அறிய
விரும்புகிறேன். சாதி சமயம் தவிர்ந்த காரணங்களை அறிய விரும்புகிறேன். நிர்வாகம் சம்மந்தமான காரணங்களை அறிய விரும்புகிறேன்.
சம்பூகன்
பின்னூட்டம் இட்ட உலகத்தமிழர் உள்ளிட்ட ஈழ மற்றும் பிற நாடுகளில் பிறந்து வாழும் உலகத் தமிழர்களுக்கு....
தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழ் அர்ச்சனை மொழியாக இல்லை;(திராவிட இயக்கம் தமிழை அர்ச்சனை மொழியாக்கப் போராடுகிறது)திராவிட இயக்க ஆட்சிகளால் தமிழர்கள்(பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட,சிறுபான்மையினர்)அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர். ஆனால்,மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் நிர்வாகத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் மத்திய கல்வி நிறுவனங்களில் இன்னமும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய ஒடுக்கப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க பல வழிகளிலும் தடையாக இருக்கிறது.தமிழகத்தில் கலைஞர் ஆட்சி பொது நுழைவுத் தேர்வை அகற்றியது. ஆனால்,இப்போது மத்திய அரசு கொண்டுவர முயலுகிறது. இதனை எதிரித்தும் தி.க.தான் போராட்டம் நடத்தியது;விடாது போராடும். ஆனால்,நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழ் தேசியம் பேசும் எந்தக்கட்சியும் இந்த கல்விக்கு எதிரான இந்திய அரசின் இந்தப் போக்கை இதுவரை கண்டிக்கவில்லை; கண்டுகொள்ளவில்லை. அவர்கள் யார் தமிழர்கள் என்பதைக் கண்டுபிடிக்க ரத்த சோதனை நடத்த யோசித்துக்கொண்டிருக்கிறார்கள் போல...
செம்மொழிக்கு மத்திய அரசின் ஆதரவைப் பெற்றால் உடனே செம்மொழி சோறு போடுமா? என்று பார்ப்பன தினமலர் பத்திரிக்கை எழுதுகிறது. பார்ப்பனர் சோ வும் தமிழ் என்றாலே எரிந்து விழுகிறார். தமிழர்,ஈழத்தமிழர் என்றால் உடனே புலி ஆதரவாளர்கள் என குற்றம் சாட்டுகிறார். திருமணங்களில் தமிழ் இல்லை. வடமொழி ஆபாச மந்திரங்களை உச்சரித்து திருமணம் செய்யப்படுகிறது. பெரியாரும் திராவிட இயக்கமும் தாய் மொழியாம் தமிழில் திருமணங்களை நடத்தும் வழக்கத்தால் தமிழனின் தன்மானம் மீட்கப்பட்டது.
தமிழனின் குலச் சாமிகள் ஆண்டுக்கொருமுறை காணும் கண்காட்சிப் பொருளாகி,பார்ப்பனக் கடவுளான விநாயகன் முன்னிலைப்படுத்தப்படுகிறான்.மாற்று ம்தத்தவரைச் சீண்ட பயன்படுத்தப்படுகிறான்.
உலகத்தமிழரே...இது போதுமா? இன்னமும் வேண்டுமா?
சாதி சமயம் தவிர்த்த என்று குறிப்பிடுகிறீர்களே அது ஏன்? ஜாதியும் சமயமும் தமிழகத்தில் அரசியலை நிர்வாகத்தை ஆளுபவை.
சாதி அல்ல;ஜாதி என்று குறிப்பிடுங்கள்.தமிழில் ஜா என்ற எழுத்தே இல்லை.பின் எப்படி ஜாதி இருந்திருக்கும்.
ulakathamilar
சாதியும் சமயமும் நம்பிக்கை சம்பந்தமான விடயங்கள்.
நிர்வாக விடயங்களில் எவ்வாறு அவை வருகின்றன. உதாரணதுக்கு தமிழருக்கு அதிக புள்ளிகள் தேவையா
மேற்படிப்பு படிப்பதற்கு. குறிப்பிட்ட ஒரு சமுகத்துக்கு இடஒதுக்கீடு என்பது சரியானதா அல்லது தகுதி
அடிப்படையில் இருக்கவேண்டுமா.
ULAKATHAMILAR
திராவிடர் ஆரியர் என்ற சொற்கள் ஆங்கிலயர் காலத்திலேயே பாவனைக்கு வந்த சொற்கள் இப்போது அந்த சொற்களுக்கு இருக்கும் அர்த்தம் என்ன. பார்ப்பனரும் ஆரியரும் தமிழரை அடிமைப்படுத்துகிறார்கள் என்று பல
இடங்களில் வாசிக்க முடிகிறது. இப்போது ஆரியர் என்று சொல்லும் போது எந்த இனத்தை குறிக்கிறீர்கள். ஆரியரை இனம்காணுவது எப்படி? திராவிடர் என்று சொல்லும் போது கன்னடர், தெலுங்கர், மலையாளி,
தமிழர் போன்றவர்களை குறிக்கிறது. ஏன் தமிழர்கள் மாத்திரம் திராவிடம் என்ற சொல்லுக்கு முக்கியத்துவம்
கொடுக்கிறார்கள்?
குன்றத்தூரில் இருந்து நல்லன்
ஆங்கிலம் அறிவியல் மொழி; அறிவியலை வழங்கிய மொழி;உலகை ஆளும் மொழி. தமிழன் ஆங்கிலம் படித்ததால் தான் இன்று நீங்களும் நானும் இந்த இணையத்தில் தமிழ் தேசியம் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

// சம்பூகன் இதுவே தவறான வாதம்.
பரத்
சம்பூகனாரே, திராவிட இயக்க ஆட்சிகளால் தான் தமிழர்கள் அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர் என்கின்றீர், அதே திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளால் தான் இங்கு தமிழினத்திற்கான அரசியல் சீரழிந்து மதுவும், சினிமாவும் திணிக்கப்பட்டு, இளைஞர்கள் அடிமையானதும், தாங்கள் கூறுவது போல் தமிழ்நாட்டுக் கோவில்களில் கூட தமிழ் அர்ச்சனை மொழியாக இல்லை என்ற நிலை நடக்கிறது. இது குறித்த தங்கள் விமர்சனம் என்ன?

ஆரியப் பார்ப்பனர்கள் தம்மை பார்ப்பனர்களாகவும், ஆரியர்களாகவும், இந்தியத் தேசியர்களாகவும் தான் அறிவித்துக் கொள்வார்களே அன்றி ஒருபோதும் தமிழர் என அடையாளப்படுத்திக் கொள்ள முனைய மாட்டார்கள். இது தங்களது பின்னூட்டத்திலேயே தெரிகிறது. அப்படியென்றால், பெரியார் “திராவிடர்கள்” எனக் குறிப்பிடுவது “பார்ப்பனரல்லாத தமிழர்களைத் தான்” என இன்றைக்கும் சப்பைக்கட்டுக் கட்டுபவர்கள் குறித்த உங்கள் விமர்சனம் என்ன?

திராவிடன், இந்தியன், ஆரியன் என எந்தப் பெயர் கொடுத்தாலும் அதை முழுமனதோடு ஏற்றுக் கொள்ளும் பார்ப்பான், “தமிழன்” என்றால் தான் அதற்குள் வரமாட்டான். ஆக, திராவிடன் எனக் கூறி ஒருஇனத்தின் பெயரையே கால் நூற்றாண்டு காலத்திற்கு மறைத்துவிட்ட திராவிட இயக்கங்கள் குறித்து உங்கள் விமர்சனம் என்ன?
சம்பூகன்
நண்பர்கள் குன்றத்தூர் நல்லான்,பரத் ஆகியோருக்கு...கீற்றில் இடம்பெற்றிருக்கும் பண்ணையூரான் எழுதிய `பெரியார் என்னும் மூலவித்து’ கட்டுரை படியுங்கள்.உங்களுக்கு அதில் பதில் உள்ளது.பித்தம் தெளிய வாய்ப்புண்டு.சில காலம் முன்பு வரை தமிழ் தேசியம் பற்றி அழுத்தமாய்ப் பேசி வந்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெரியார் பற்றிய பார்வை எடுத்தாளப்பட்டுள்ளது.அவசியம் படியுங்கள்.அதற்கு பதில் சொல்லுங்கள்.
தங்கவயல் அறிவன்
தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி மார்வாடி எதிர்ப்புப் போராட்டம், மலையாளி எதிர்ப்புப் போராட்டம் என்றெல்லாம் நடத்தியிருக்கிறது. அப்போது என்ன பிறப்பு அடிப்படையில் பிரித்தார்களா? அல்லது வேறு ஏதாவது வரையறை வைத்திருக்கிறார்களா? த.தே.பொ.க. தெலுங்கர்களைக் தொடுவதே கிடையாது. அது என்ன மர்மமோ தெரியவில்லை.
ஏம்பா... ஈழத்தில் 3 லட்சம் பேர் கொல்லப்பட்டபோது அவர்கள் தமிழர்கள் என்று சிங்களனும் நீங்களும் நானும் அடையாளம் கண்டது எப்படி?
கர்நாடகத்தில் ஆயிரக்கணக்கில் அடிபட்ட போது அவர்களைத் தமிழர்கள் என்று அடையாளம் கண்டது எப்படி?
மும்பயிலிருந்து விரட்டியவர்களைத் தமிழர்கள் என்று எப்படி அடையாளம் கண்டீர்கள்?
சொல்லுங்க அருண பாரதி! நாங்க செத்தபோது பாசிசம் வந்து பிடுங்கவில்லை. நாங்கள் கற்பழிக்கப்பட்டபோது வாய்க்குள் கொழுக்கட்டை இருந்தது! நாங்கள் நாசமாய் போனபோது மாக்சியம் என்று எதுவும் வரவில்லை! கொல்லப்பட்டபோது, சிதறடிக்கப்பட்டபோது என்ன அடையாளத்தின் அடிப்படையில் என்பதை சற்று விளக்கமாகச் சொல்லுங்கள். அப்புறம் பார்ப்போம் எவன் பாசிஸ்டு என்று!
30 ஆண்டுகள் நசுக்கலுக்குப் பிறகுதான் ஒரு பிரபாகரன் தமிழின விடுதலைக்காக ஆயுதம் ஏந்துகிறான். உடனே வல்லாதிக்க உலகம், இந்தியா, இலங்கை போன்ற இழி பிறவிகள் அவனை பயங்கரவாதி, பாசிஸ்டு, இனவெறியன் என்றது. பிரபாகரனைக்கூட அருணபாரதி பாசிஸ்டு என்றுதான் சொல்லுவார். பிரபாகரனைச் சொன்னால் போட்டு சாத்திடுவானுக! குணாவைச் சொன்னா சொறிஞ்சிக்கிட்டு இருப்பானுக என்ற அசட்டு நம்பிக்கையில் அருணபாரதி போன்றவர்கள் வாய்க்கு வந்ததை வாந்தியெடுத்திருக்கிறார்கள்.
அன்னியரின் ஆதிக்கம் தமிழகத்தில் எங்குமில்லாத அளவில் தலைவிரித்து ஆடுகிற நேரத்தில் தமிழ்த் தேசிய அமைப்புகளுக்குள் எழுந்து வருகிற ஒற்றுமையை அருணபாரதி போன்றவர்கள் கெடுத்துவிடுவார்கள் என்றே கருதுகிறேன்.
தேர்தலில் வாக்குப் பொறுக்குகிற கட்சிகளின் மீது கடுமையான திறனாய்வு செய்கிற அருணபாரதி அவர் சார்ந்திருக்கிற அமைப்பு உட்பட தேர்தலில் பங்கேற்காத புர்ர்ர்ச்சிகர அமைப்புகள் சாதித்ததை கொஞ்சம் பட்டியலிடுங்களேன் பார்ப்போம். தேர்தலில் பங்கேற்கும் தி.மு.க.வுக்கும் பங்கேற்காத தி.க.வுக்கும் இருக்கிற அட்டகாசமான புரிதலைப் பாருங்கள்! தேர்தலில் பங்கேற்கும் பாரதீய சனதாவுக்கும் ஆர்.எஸ்.எஸ்சுக்கும் இருக்கிற புரிதலைப் பாருங்கள்! இந்தியத் தேசியக் கட்சிகளும் திராவிடத் தேசிய கட்சிகளும் அப்படிப்பட்ட ஒரு அட்டகாசமான புரிதலோடு நகர்கின்றன. ஆனால், தமிழ்த் தேசியர் “நண்டுத் தொழிலை”யே தொடர்ந்து செய்து வருகின்றனர். அருணபாரதியின் கட்டுரையே அதற்குச் சான்று!
இடையில் பின்னூட்டம் செருகியிருக்கிற ஒருவர், திராவிடக் கட்சிகள் வீடு வீடாக ஏறி இறங்கி பரப்புரை செய்வதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டங்கள் குசு விடுவது போல இருப்பதாகவும் ஆதங்கப்பட்டிருந்தார். கறிச்சோறும், 250 ரூபாயும் கொடுத்து கூட்டுகிற கூட்டத்தைக் கூட்டம் என்கிறாரா? தமிழ்த் தேசியர்களிடம் பித்தலாட்டம் இல்லை! திராவிடத் தேசியமோ, இந்தியத் தேசியமோ முழுக்க முழுக்க பித்தலாட்டமும் போக்கிலித்தனமும் நிறைந்தவை. எண்ணிக்கை சிறியது என்பதற்காக இலக்குகள் இல்லாதவர்களில்லை தமிழ்த் தேசியர். திராவிடத் தேசியம் பெற்றெடுத்த கயவர்கள், கருணாநிதிகள், கனிமொழிகள், அழகிரிகள், செயலலிதாக்கள் போன்றன தமிழ்த் தேசியர் நடுவில் தோன்றவில்லை. ஆகவே, பொறுப்பற்ற இம்மாதிரியான “அக்கரையோடு” எழுதுபவற்றை சற்று கவனத்தோடு எழுதினால் நல்லது.
காவரிக் கலவரத்தை நேரிடையாகப் பார்ந்து நொந்து நூலானவன் நான்! ஈழம் அதன் இறுதியில் முள்ளிவாய்க்காலில் நடந்தவைகளைக் காட்சிகளில் கண்டு, கேட்டு, அழுது புலம்புகிறவன் நான். அவைகளை நினைத்தாலும் நாடி நரம்பெல்லாம் துடிக்கிறது. இப்படித் துடிக்கிறவன் பேசுகிறதெல்லாம் பலருக்குப் பாசிசம் போலத்தான் தெரியும். நாங்கள் தமிழர்கள்....செத்ததும் துடித்ததும் எங்கள் ரத்தம்! எங்களுக்குத் துடிக்கத்தான் செய்யும். நின்று நிதானமாக சீனத்துச் சரக்கை புதுச்சேரியில் நின்று அடித்துக் கொண்டால் வலி தெரியாது. இந்த மாக்சிய மண்ணாங்கட்டியை உலகத்தையே சுரண்டிக் கொண்டிருக்கும் சீனாவுக்குச் சொல்ல வேண்டியதுதானே! பக்கத்திலிருக்கிற மலையாளக் காம்ரேடுக்குச் சொல்லிப் பார்க்க வேண்டியதுதானே!
சேரலத்திலும், கர்நாடகத்திலும் ஆந்திராவிலும் பொதுவுடமைப் பின்னணியில் நின்று உன்னை ஒருவனும் தமிழனா தமிழன் இல்லையா என்று பார்ப்பதில்லை. 1956க்குப் பின் முன் என்று பகுப்பதில்லை. நீ பேசும் மொழி, உன் நிறம், உன் தாலி, உன் சாதி பச்சையாக அவ்வளவுதான்! மற்றவையெல்லாம் எழுத நன்றாகத்தான் இருக்கும். ஆனால் வாழ வக்கற்றது.
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கண்டதை எழுதுவது, ஆதாரமற்றவைகளை எழுதுவது போன்றவற்றை அருணபாரதி தவிர்த்தால் நல்லது.
Arivan
கன் மோகன், உணர்ச்சிகளை விலக்கி கட்டுரை எழுதலாம். களமாட முடியாது.
வெற்றித்தமிழன்
பெரியார் என்ற தனிமனிதர், தன்னை தான் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள், தமிழர் தலைவர் என்று போற்றிக் கொண்டிருந்த போதுதான் தான், ஒரு கன்னடியன் என்று அறிவித்தார். அதற்குப் பிறகும் கூட, அவரைத் தமிழனாகவும் தமிழர் தலைவனாகவும் பார்ப்பவர்கள், அடிமை மனம் கொண்ட கருத்துக் குருடர்களே.

தமிழர்களைத் தமிழர்கள் என்று அழைத்தால், 3 விழுக்காட்டு மனுநெறியாளர்கள் தமிழர்களின் தோளின்மேல் ஏறிக்கொண்டு மேலாண்மை செய்வார்கள் என்று சொல்லிக்கொண்டே, 15 விழுக்காட்டு பிறமொழியாளர்கள் தமிழர்களின் தலைமேல் மிதித்துக்கொண்டு தொடர்ந்து நாட்டாமை செய்யும் வகையில், தமிழர்களுக்குத் திராவிடர் என்ற முத்திரை குத்திய பெரியாரின் அயோக்கியத்தனம், ஏற்கனவே அம்பலப்படுத்தப்பட்ட ஒன்று, மேலும் 1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது, தமிழறிஞர்களின் பின்னால் நின்று கொண்டு, தமிழ்நாடு தமிழர்க்கே என்று முழங்கிய பெரியார், இந்திப் போராட்டத்தின் முடிவிலேயே, திராவிட நாடு திராவிடர்க்கே என்று முழங்கிய அவரது திராவிடக் கருத்தியல் பாசமும் இப்பொழுது தமிழ்நாடு எங்கும் நாறிக்கொண்டுதான் இருக்கிறது. 1956 மாநிலப் பிரிவினைக்கு பின்பும் கூட, தனது கம்பெனியின் பெயரை திராவிடர் கழகம் என்பதிலிருந்து, தமிழர் கழகமாக மாற்றாத அவரது மொழியின வெறியை, அறிவுள்ள தமிழர்கள் அனைவரும் அறிந்தே உள்ளனர். எனவே பெரியாருடைய திராவிடக் கருத்தியல் ஆராய்ச்சியை, இப்போது பெரிதாகச் செய்யத் தேவையில்லை.
வெற்றித்தமிழன்
பெரியாராவது, யோக்கியமாக, ஒரு கட்டத்தில் தன்னைக் கன்னடியன் என்று அடையாளப்படுத்திக் கொண்டார். ஆனால் கருணாநிதி, தொடர்ந்து தெலுங்கு ஆண்டுப் பிறப்பிற்குத் தமிழ்நாட்டில் அரசு விடுமுறை விடுவதன் மூலமும், கிருட்டிண தேவராயரின் 500 வது பிறந்தநாள் விழாவை அரசு விழாவாகக் கொண்டாடியதின் மூலமாகவும், தனது அன்பிற்குறிய மணவாடு ராசசேகர ரெட்டி மறைந்தபோது, தமிழ்நாட்டு அரசுக்கு விடுமுறை விட்டதின் மூலமாகவும், தோன்றிய காலம் அறியமுடியாத அளவிற்குத் தொன்மை படைத்த, நம் தமிழ்மொழியை, திருவள்ளுவர் ஆண்டு 2037-இல் வெறும் ஆயிரம் ஆண்டு பழைமையது என்று தன்னுடைய தில்லி எசமானனுக்கு முன்மொழிந்து, அதனால் தன்னுடைய தாய் மொழியான தெலுங்கும், அக்கா மொழியான கன்னடமும் தக்க முறையில், தமிழோடு கூடவே செம்மொழிகள் ஆவதற்கு வழிவகைகள் செய்ததன் மூலமும், தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை என்றால் அவற்றை மூடுவதன் மூலமும், அதே வேளையில் தெலுங்குப்பள்ளிகளில் ஆசிரியர் இல்லை என்றால் உடனே ஆசிரியர்களை அமர்த்துவதன் மூலமும், தனது தாய்க்கு தெலுங்கு மொழி பேசத் தெரியும் என அறிவித்ததன் மூலமும், மருத்துவர் முத்து லட்சுமி ரெட்டி தனது நெருங்கிய சொந்தக்காரர் என்று அறிவித்ததன் மூலமும், தன்னுடைய மகனுக்குத் தில்லி பட்டினத்தில் முடி சூட்ட, தில்லிக்கு ஒடிய கருணாநிதி, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைத் தடுக்க ஒன்றும் செய்யாததன் மூலமும், தன்னைத் தெலுங்கன் என்று மெய்ப்பிததுள்ளார். அவர் மேற்கண்ட தமிழினத் துரோகச் செயல்களை, மனதாரத் தெலுங்கனாகவும், வாய் அளவில் தமிழனாகவும் வாழ்ந்ததாலேயே செய்தார் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். இதை மறுக்கிறவர்கள் உண்மையான காரணங்கள் வேறாக இருப்பின், அவற்றை வெளிப்படுத்தலாம்.

அவரவர் நாட்டில் அவரவருக்கே இறையாண்மை என்பது உலக முறை. அந்த அடிப்படையில், வந்தேறித் தெலுங்கரான கருணாநிதிக்கும், அவருடைய குஞ்சு குளுவான்களுக்கும் தமிழ்நாட்டில் நாடாளும் உரிமையும், தமிழ்நாட்டை கெடுக்கும் உரிமையும் கிடையாது. எனவே கருணாநிதியின் உரிமையையும், பச்சைத் தமிழர்களான திருமாவளவன், ராமதாசு போன்றோரின் உரிமைகளையும் ஒப்பிடுதல் சரியன்று. வந்தேறி தெலுங்கர்கள் 400 ஆண்டுகள் ஆகியும், உள்ளுர் மக்களோடு அவர்கள் ஒன்று படாததற்கு காரணம், அவர்கள் இந்த மண்ணைத் தொடர்ந்து ஆண்டு வருவதே ஆகும். அதே வேளை, வெறும் 60 ஆண்டுகளில், ஆட்சி அதிகாரம் இல்லாத காரணத்தால் சித்தூர், திருப்பதி, நெல்லூர் தமிழர்கள் தெலுங்கர்களாகக் கரைந்து போனார்கள். எனவே ஆதிக்கத் தெலுங்கர்கள், தமிழர்களை ஆள்வதற்குத் தமிழர் வேடம் போட்டால் "அவசரத்தனமான புரட்சியாளர்கள்" வேண்டுமானால், 400 ஆண்டுகால ஆதிக்கக்காரர்கள் என்று காரணம் காட்டி அவர்களை தங்களுடைய புரட்சிக்குத் தளபதிகளாக அமர்த்திக் கொள்ளலாம். ஆனால் உண்மையான தமிழர் இறையாண்மைக் கொள்கையாளர்கள், அவர்களைத் தமிழர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது. பிறப்பு வழி ஆராய்ச்சிப்படிப் பார்த்தால், இவ்வுலகில் அனைவரும் தமிழரும், தமிழர் வழிவழியினருமே. நடப்புப்படி வரையறுத்தால், தமிழை வாழ்வியல் மொழியாகக் கொண்டிருப்பவரும், வாழ்வில் தமிழிய நெறியைக் ( இயற்கை போற்றும் நெறி, அறிவியல் போற்றும் நெறி, அறம் போற்றும் நெறி, உயிரி நேயம் போற்றும் நெறி, பொதுமை போற்றும் நெறி ஆகியவற்றைக் ). கடைபிடிப்பவரும், தமிழர் எதிர் கொள்ளும் சிக்கல்களில், தமிழர்க்கு நலம் பயக்கும் தீர்வின் பக்கம் நின்று போராடுபவரும் தமிழர் என ஏற்கத்தக்கவர் ஆவார். மற்றபடி, தமிழ்க்குடியில் பிறக்க நேர்பவர் ஆயினும் அவர், பிறப்புவழித் தமிழரே அன்றி, வாழும் தமிழர் அல்லர்.
வெற்றித்தமிழன்
வாழ்வியல் மொழியென்பது, வாழ்வில் அனைத்துக் கூறுகளிலும் பயன்படுத்தப் படுவதாகும். வீட்டில் ஒரு மொழியாகவும் வீதியில் ஒரு மொழியாகவும் வேறுயிடங்களில் வேறுமொழிகளாகவும் ஒருவர் கொள்வாராயின் அவருக்கு வாழ்வியல் மொழி, ஒரு மொழியன்று. அவருக்கு வாழ்வியல் மொழிகள், பல மொழிகளாகும். எனவே அவரால் தவிர்க்க முடியாத தாய்மொழியாம் வீட்டு மொழியை, அவரது தேசிய இன மொழியாக கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஒரு தெலுங்கர், ஆதித் தமிழர் வேடம் போட்டாலும், அவர் தெலுங்கை விட்டுவிட்டு அவர் வாழும் தமிழராக தன்னை மாற்றிக்கொள்ளாதவரைக்கும், அவர் சிறுபான்மைத் தெலுங்கு தேசிய இனத்தவரே. அவருக்கு தமிழ்நாட்டில் சிறுபான்மைத் தேசிய இன உரிமைகள் அனைத்தும் உண்டு. மேலும் பலர், தமிழ்நாட்டில் உள்ள பிறமொழியாளர்கள், தமிழ்நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தி வருபவர்கள் என்பதை, "உடனடிப் புரட்சியின்" மேலுள்ள மோகத்தால் மறந்து விடுகிறார்கள்.

இறையாண்மை உள்ள தமிழ்நாட்டில் ஒருவருக்கு, எம்மதத்தையும் பின்பற்ற உரிமையுண்டு. ஆனால் தமிழ்நாட்டில் வழிபாட்டு மொழியாக சமற்கிருதமோ, அரபியோ, அல்லது ஆங்கிலமோ இருக்க முடியாது. துருக்கி முகம்மதியனுக்கு, வழிபாட்டு மொழியாக துருக்கி இருக்கின்றபொழுது, தமிழ்நாட்டு முகம்மதியனுக்கு ஏன் தமிழ்மொழி வழிபாட்டு மொழியாக இருக்கக் கூடாது? தமிழ்த்தேசியர்கள், தமிழ்நாட்டில் தமிழைத் தவிர்த்து, சமற்கிருதமும் வழிபாட்டு மொழியாக இருக்கக் கூடாது என்று கூறுகின்ற பொழுது, அவர்களை இந்துத்துவாக்காரர்களோடு இந்த "உடனடிப் புரட்சியாளர்கள்" ஏன் இணைத்து பேசுகிறார்கள்.? இந்த "உடனடிப் புரட்சியாளர்கள்" மிகவும் வசதியாக, மேற்குறித்த முகம்மதிய, கிருத்துவ, இந்துத்துவா பிரிவினர், தமிழர்களைப் பொருத்தவரையில் ஆதிக்க வரலாறு கொண்டவர்கள் என்பதை மறந்து விடுகின்றன அல்லது மறைத்து வருகின்றன. உண்மையான தமிழ்த்தேசியத்தைப் பொருத்த வரையில், எம்மதத்தவருக்கும் முதன்மை அடையாளம் தமிழர் என்பதே. எம்மதத்தவரும் உண்மையாக இருக்க வேண்டியது தமிழ்த்தேசம் ஒன்றிற்கே.
வெற்றித்தமிழன்
எனவே, சுருக்கமாக தொகுத்துரைப்பின், தமிழ்த்தேசத்தில் நெடுங்காலமாக வாழும் உழைக்கும் மக்கள் எம்மொழியினராயினும், எம்மதத்தவராயினும் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டியதில்லை. ஆனால் வரலாற்று முறையில் தமிழ்நாட்டை ஆட்சி செய்த, செய்கின்ற பிறமொழியாளர்களும், அவர்தம் வழிவழியினரும் தமிழக ஆட்சியிலிருந்தும், தமிழ்நாட்டு கட்சித் தலைமைகளிலிருந்தும் உறுதியாக நீக்கப்படவேண்டும். அவர்களும் கூட தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டியதில்லை. ஆனால் 400 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள், அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான நிலங்கள் போக, மீதி மீட்கப்படவேண்டும்.ஒரு நாட்டின் விடுதலை என்பது தேர்தல் மூலம்தான் என்பதோ, அல்லது புரட்சியின் மூலம்தான் என்பதோ, அல்லது "25 ஆண்டுகால உடனடிப் புரட்சியின்" மூலம்தான் என்பதோ அல்லது ஒரே உத்தி என்பதோ அல்லது ஒன்றிரண்டு இணைந்து என்பதோ, மேம்போக்காகப் போகிறபோக்கில் தீர்மானித்து விடமுடியாது. எனவே தமிழர் தேச விடுதலையைக் குறிக்கோளாக கொண்டிருப்பவர்கள், தாங்கள் சரியென்று நம்பும் உத்தியை முன்னெடுத்து இலக்கு நோக்கி செல்லட்டும். இனிவரும் காலம்தான், சரியான உத்தியை அடையாளம் காட்டும். வெல்க மெய்த்தமிழ்த்தேசியம். ஒழிக பொய்த்தமிழ்த்தேசியம், அது புரட்சி வேடம் பூண்டிருக்கிறபோதும்.
அருணபாரதி
//தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பவர்கள் ஒட்டு அரசியலை செய்யலாமா?//

தமிழ்த்தேசியம் என்பதே தமிழர்களின் அரசியல் விடுதலையைப் பெற்றுத் தருகிற விடுதலை முழக்கம். இவ்விடுதலை அரசியலை அப்படியே, ஓட்டுப் பொறுக்கும் அரசியலுக்கு பயன்படுத்துவது அப்பட்டமான சந்தர்ப்பவாதம்.

'தமி்ழ்-தமிழினம்-திராவிட நாடு விடுதலை' என்று பேசி ஓட்டுப் பொறுக்கித் துரோகமிழைத்துத் தன் பதவி அரசியலைத் தொடங்கியது தான் தி.மு.க. தற்போது, அதையே நாங்களும் செய்கிறாம் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் முழங்குகிறீர்களே, உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு?
அருணபாரதி
திரு. தங்கவயல் அறிவின் அவர்களே..!

//தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி மார்வாடி எதிர்ப்புப் போராட்டம், மலையாளி எதிர்ப்புப் போராட்டம் என்றெல்லாம் நடத்தியிருக்கிறது. அப்போது என்ன பிறப்பு அடிப்படையில் பிரித்தார்களா? அல்லது வேறு ஏதாவது வரையறை வைத்திருக்கிறார்களா? த.தே.பொ.க. தெலுங்கர்களைக் தொடுவதே கிடையாது. அது என்ன மர்மமோ தெரியவில்லை//

ஆம். நாங்கள் தனி வரையறை தான் வைத்துள்ளோம்.

ஒவ்வொரு தேசிய இனத்தின் தாயகங்களும், அவரவர்களுக்கு என்று உறுதிப்படுத்தும் விதமாக அரைகுறையாகப் பிரிக்கப்பட்ட, 1956ஆம் ஆண்டு இந்திய அரசின் மொழிவழி மாநிலப்பிரிவனைக்குப் பின்னர் தமிழகத்தில் குடியேறிய அனைவரையும் நாம் வெளியார் என வரையறுக்கிறோம். அதில், தெலுங்கர்களும் உண்டு என்று எமது வெளியீடுகளையும், போராட்டங்களையும் பார்ப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள். உள்நோக்கத்துடனும், அரைகுறையாகப் பார்ப்பவர்களும் அதை உணர்ந்து கொள்ள மறுப்பார்கள்.

ஒருவர் எந்த தேசிய இனத்தில் பிறந்துள்ளார் என்பதைப் பார்த்து தான் நாம் தமிழரா, தெலுங்கரா என அடையாளம் காண்போம் என்பது சரியே. ஆனால், இங்கு தெலுங்கர் என்ற பெயரில் பலரையும் தவறாக இணைத்துக் கொள்வதைத் தான் தவறு என்கிறோம்.

இங்கு 'தெலுங்கர்கள்' என்றும் 'கன்னடர்' என்றும் அடையாளப்படுத்தப்படுவர்கள் இருவகையினர் உள்ளனர்.

ஒருவகையினர், ஆந்திராவிலிருந்தும், கர்நாடகாவிலிருந்தும் வந்து இன்றைக்கும் தமிழகத்தில் பொருளியல் ஆதிக்கங்களைப் புரிபவர்கள். இன்றைக்கும் தமது தாயகமான ஆந்திரத்தோடும், கர்நாடகத்துடன் ஏதோ ஒருவகையில் தொடர்பில் இருப்பவர்கள். தமது கல்வி மொழியாகவும், வாழ்க்கை மொழியாகவும், சமூக மொழியாகவும் தெலுங்கு மற்றும் கன்னடத்தையே அறிவித்துக் கொண்டவர்கள். இவர்களை தெலுங்கர்கள் என்றும் கன்னடர் என்றும் வரையறுப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. இவ்வாறு தான் மார்வாடிகளையும், மலையாளிகளையும் அயலார் என்ற வரையறைக்குள் கொண்டு வருகிறோம்.

ஆனால், இன்னொரு வகையினர், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மன்னராட்சிகளால் இங்கு குடியேற்றப்பட்ட தெலுங்கு மற்றும் கன்னட சமூகத்தினர் ஆவர். இவர்கள் தமது தாயகத்துடன் தொடர்புகளை இழந்து, கல்வி மொழியாகவும், சமூக மொழியாகவும் தமிழை ஏற்றுக் கொண்டவர்கள். அவர்களது, தாயகத்துடன் சிறிதும் இன்றும் தொடர்பில்லாமல், தமது தாய் மொழியை எழுதவும் படிக்கவும் தெரியாமல், வீட்டில் பேசுகின்ற மொழியாக மட்டுமே அதைக் கடைபிடிப்பவர்கள் ஆவர். பல நூற்றாண்டுகளாக இங்கேயே இருந்துவிட்டதனால், அவர்கள் தமிழகத்தை தன் தாயகமாகவும், தாய்மொழியாகத் தமிழையும் ஏற்றுக் கொண்ட உளவியலைப் பெற்றுள்ளனர். இவர்களை வெளியார் என அழைக்கத் தேவையில்லை என்கிறோம். இவர்களிடையே காணப்படும் சாதி உணர்வு என்பது, தமிழகத்திலுள்ள இதர சாதிளை சேர்ந்தவர்ளிடம் காணப்படும் அதே உணர்வே தான் தவிர, அவர்கள் தம்முடைய தாயகமாக ஆந்திரத்தையோ, கன்னடத்தையோ கருதிக் கொள்வதில்லை. எனவே தான், இவர்களை தெலுங்கர்கள், கன்னடர்கள் என அழைக்கத் தேவையின்லை என்கிறோம்.
அருணபாரதி
//30 ஆண்டுகள் நசுக்கலுக்குப் பிறகுதான் ஒரு பிரபாகரன் தமிழின விடுதலைக்காக ஆயுதம் ஏந்துகிறான். உடனே வல்லாதிக்க உலகம், இந்தியா, இலங்கை போன்ற இழி பிறவிகள் அவனை பயங்கரவாதி, பாசிஸ்டு, இனவெறியன் என்றது. பிரபாகரனைக்கூட அருணபாரதி பாசிஸ்டு என்றுதான் சொல்லுவார். பிரபாகரனைச் சொன்னால் போட்டு சாத்திடுவானுக! குணாவைச் சொன்னா சொறிஞ்சிக்கிட்டு இருப்பானுக என்ற அசட்டு நம்பிக்கையில் அருணபாரதி போன்றவர்கள் வாய்க்கு வந்ததை வாந்தியெடுத்திருக்கிறார்கள்.
அன்னியரின் ஆதிக்கம் தமிழகத்தில் எங்குமில்லாத அளவில் தலைவிரித்து ஆடுகிற நேரத்தில் தமிழ்த் தேசிய அமைப்புகளுக்குள் எழுந்து வருகிற ஒற்றுமையை அருணபாரதி போன்றவர்கள் கெடுத்துவிடுவார்கள் என்றே கருதுகிறேன். தேர்தலில் வாக்குப் பொறுக்குகிற கட்சிகளின் மீது கடுமையான திறனாய்வு செய்கிற அருணபாரதி அவர் சார்ந்திருக்கிற அமைப்பு உட்பட தேர்தலில் பங்கேற்காத புர்ர்ர்ச்சிகர அமைப்புகள் சாதித்ததை கொஞ்சம் பட்டியலிடுங்களேன் பார்ப்போம்.//

தம்மை மாகாண முதலமைச்சர் பதவி தேடி வந்த போதும், “எமக்கு வேண்டியது பதவி அல்ல! விடுதலை” என்று முழங்கிய தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களதுப் பெயரைச் சொல்லி ஓட்டுப் பொறுக்கி பதவி சுகம் காண நினைப்பவர்களுக்கு, நான் எந்த கோணத்தில் பார்த்தாலும் பாசிஸ்டாகத் தான் தெரிவேன்!
kulothungan
ஒன்று தெளிவாக புரிகிறது. வெறும் காகிதத்தில் கப்பல் ஓட்டுகிறவர்கள் பெரியாரை விமர்சனம் செய்தே பெரியாள் ஆகிவிடலாம் என்ற நினைப்பில் நிறைய பேர் இருக்கிறார்கள். நல்லா பண்ணுங்க. சீக்கிரம் ஆட்சியை பிடிச்சுரலாம்.
வாழ்க புர்ர்ர்ச்ச்சியாளர்கள்..
ரத்த சோதனையில் உறுதி செய்யப்பட்ட தமிழர்கள்..
VARANDIYAVELAN
யாரும் யாரையும் வெளியேற்ற வேண்டாம். ஆனால் தொடர்ந்து தமிழனை அன்னியந்தான் ஆளவேண்டும். தமிழன் தொடர்ந்து அடிமையாகத்தான் வாழவேண்டும் என்பது என்ன நியாயம்? தமிழகத்தில் மட்டும்தான் தமிழன் தன்னைப்பற்றி பேசவே மற்றவர்களிடம் யாசகன் போன்று நிற்க வேண்டிய நிலை உள்ளது. குணா சொல்வதிலோ, மற்றவர்கள் சொல்வதிலோ என்ன தவறு இருக்கிறது. கர்நாடகத்தில் ஒரு லிங்காயத்தோ, ஒக்கலிகாவோதான் முதல்வராக முடிகிறது. தமிழகத்தில் மட்டுமே தமிழன் அல்லாத பரதேசிகள் எல்லாம் வந்து லட்சம் கோடிகளை கொள்ளையடித்து தமிழர்களை அடிமைப்படுத்துகிறார்கள். கட்டுரையாளர் இன்னும் 100 ஆண்டுகள் அவர்கள் வாரிசுகளுக்கு தமிழன் அடிபணிய வேண்டும் என்கிறாரா?
நான் தமிழன்
அய்யா அருணபாரதி இந்த நிலை மற்ற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு ஏன் பொருந்தவில்லை? மற்ற மாநிலஙலில் ஏன் நூறு ஆண்டுகள் ஆனாலும் தமிழன் தமிழனாகவே பார்க்கப்படுகின்றான்? அவன் வாழ்வியல் மொழியாக அந்த மாநில மொழியை ஏற்றுக் கொண்டிருந்த போதும்
நான் தமிழன்
அமெரிக்காவிற்குப் போய் அங்கே வாழ்வியல் மொழியாக ஆங்கிலம் பேசுகிறோம் வீட்டு மொழியாக தமிழ் பேசுகிறொம் எனவே நானும் ஆங்கிலேயனே என்று சொன்னால் வெள்ளைக்காரன் வாயால் சிரிக்கமாட்டான். பின்னாடி சுடுவான்.
Arivan
சரி, வாக்குப் பொறுக்க வேண்டாம். பொலிட்பீரோ வைத்து சர்வாதிகாரிகளை உருவாக்குவோமா? “வாக்குப் பொறுக்குவது” என்று ஒரு பெயரை நீங்களாகத் திணித்துக் கொண்டு தேர்தலைக் கொச்சைப்படுத்துகிறீர்கள். தேர்தல் என்பது மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் மக்களாட்சி முறை இல்லையா? இப்போதைய திருட்டுக் கட்சிகள் செய்கிற தில்லு முல்லுகளை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த மக்களாட்சி முறையையும் ஊற்றி மூடிவிடாதீர்கள். தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி எம்மாதிரியான ஆட்சி முறையைக் கொண்டுவரும் என்று சற்று விளக்குங்களேன். தேர்தல் பாதை திருட்டுப் பாதை என்பது நொள்ளக் கண்ணன்களின் பார்வை. திருடர்கள் தேர்தல் பாதைக்கு வந்து விட்டார்கள். திருடர்களை ஒழிக்க வேண்டுமேயன்றி தேர்தலை ஒழிப்பது என்பது மன்னராட்சிக்கும், சர்வாதிகாரிகளின் ஆட்சிக்கும் வழி வகுத்துவிடும்.
அருணபாரதி அண்ணே, ஒரு தெலுங்கரைத் தெலுங்கர் என்று சொல்வதில் என்னைய்யா பிரச்சனை? ஏண்ணே, ஒரு தெலுங்கரை தே...பயலை என்றா சொல்லுகிறோம்? திருடா என்றா சொல்லுகிறோம். அந்த இனம் அவ்வளவு கேவலமான இனமா? இன அடையாளத்தை மறைப்பதில் சூழ்ச்சி இருக்கிறது. கருணாநிதியைத் தெலுங்கர் என்பதா தமிழர் என்பதா? பொருளியல், சுரண்டலியல், ஒழுக்கவியல் ஆகியனதான் இனத்தை அடையாளப்படுத்தும் என்றால் நித்தியானந்தா தெலுங்கராகிவிடுவார். அமெரிக்காவின் மோனிக்கா லெவின்ஸ்கியும் தெலுங்கச்சி ஆகிவிடுவாள்.
கருணாநிதி தன்னை ஒரு தமிழர் என்ற முகத்திரை போட்டுக் கொள்வதிலும் தெலுங்கர் என்ற அடையாளத்தை மறைப்பதிலும் நோக்கம் உள்ளது. 1956க்கு முன்னால் வந்தாலும் திராவிடத்தனம், தெலுங்கினப் பற்று மாறவில்லையே!
அளவுக்கு அதிகமாக பொதுவுடமைச் சரக்கு அடித்தால் இப்படித்தான், எதையாவது வம்படிக்குச் சொல்லி தமிழனுக்குக் காயடிக்கப் பார்ப்பது. கர்நாடகத் தமிழர்களின் தாயகமே அந்த மண்தான். ஈழத் தமிழர்களின் தாயகமும் ஈழம்தான் இலங்கைதான். இங்கே வந்த தெலுங்கராவது வந்தவர்கள், வந்தேறிகள்! அவர்களுக்காக நீர் இந்த மண்ணில் சொல்லும் வரலாற்றுக் கணக்கெல்லாம் எங்கைய்யா போச்சிது? வறட்டு மாக்சியத்தை வரைமுறையில்லாமல் தின்று வாந்தியெடுக்கிறீர்கள். உம்மை யாரு பாசிஸ்டு என்று சொன்னது. உங்களைப் போன்றவர்கள் வறட்டியம் தட்டுகிறீர்கள்.
அது என்ன சார், 1956 கணக்கு? 1956க்குப் பின் தமிழ்நாட்டுக்கு வந்த ஒரு சரவணாநாயுடு நல்ல தமிழப் பற்று கொண்டிருந்தால் தமிழரா? தெலுங்கரா?
கட்டிலுக்காக காலை வெட்டாதீர்!
மா.சாந்தகுமார்
தோழர் அருணபாரதி அவர்களே!

”தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கர்கள் தமிழகத்தைத் தாயகமாகவும், தாய் மொழியாகத் தமிழையும் ஏற்றுக் கொண்ட உளவியலைப் பெற்றுள்ளனர்.”
என்று கூறுகின்றீர்கள்.

அப்படியானால் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை கூறுங்கள்.

1. தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கர்கள் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையானால், தமிழர் தாயகத்தின் எல்லைப்
பகுதிகளை ( தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு, கொள்ளேகாலம், கோலார், பெங்களுர், திருப்பதி, திருக்காளத்தி, சித்தூர் முதலிய பகுதிகளை ) ச் சுற்றி
உள்ள மாநிலத்தவர் பிடுங்கிய போது, தமிழ்நாட்டில் அப்பொழுது இருந்த திராவிடத் தெலுங்கு கன்னடத் தலைவர்கள் நீங்கள் சொல்வதைப்போல தமிழர்
என்ற உளவியலை பெற்றிருந்த நிலையில், எந்த வலுவான போராட்டமும் நடத்தி தடுக்காமல் வேறு என்ன பிடுங்கிக் கொண்டிருந்தார்கள்?

2. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட உளவியலைத் தெலுங்கர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையானால், 400 ஆண்டு காலத்திற்குப்
பிறகும் வீட்டில் தங்கள் தாய்மொழியாகக் கருதும் தமிழில் பேசாமல், தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாது போனதாக கூறப்படுகிற ஆந்திர
மொழியான தெலுங்கில் பேசுவதேன்? எல்லைப் பகுதிகளில் மட்டுமல்லாமல் உள்நாட்டுப் பகுதிகளிலும் தெலுங்குப் பள்ளிகள் பெருவாரியாக நடத்தப்படுவதேன்?

3. 400 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டில் ஆதிக்க வாழ்வு வாழ்ந்த தெலுங்கர்களைத் தோழர் அருணபாரதி போன்றோர் தமிழர்களாக ஏற்றுக் கொள்ள
முன்வந்திருக்கின்ற போது, அவர்களில் 99 விழுக்காட்டினர் தங்களைத் தமிழர் என்று ஒத்துக்கொள்ளவி்ல்லையே, ஏன்? அருப்புக்கோட்டை, சங்கரன்கோயில்,
கோவில்பட்டி போன்ற பகுதிகளில் தேர்தல் சுவரொட்டிகள் தெலுங்கில் வெளியிடப்படுகின்றன என்றால் அது, அங்குள்ள தெலுங்கர்கள் தங்களைத்
தமிழர்களாகக் கருதி வாழ்கிறார்கள் என்று பொருளா?

4. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்குத் தலைமை தாங்குகின்ற தெலுங்கர்கள், தங்கள் கட்சிகளின் பெயர்களில் தமிழ், தமிழர் என்று முனனொட்டுகள்
இல்லாமல் பார்த்துக்கொள்வதிலிருந்துத் தெலுங்கர்கள் தங்களைத் தமிழர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது புரியவில்லையா? அவர்கள் தமிழர்களுக்குத்
தலைமை தாங்குவதில்தான் குறியாய் இருக்கிறார்கள் என்பதும் புரியவில்லையா?
ஆறுமுகம்
”தமிழினத் துரோகிகளாக விளங்கும் கருணாநிதி, தங்கபாலு உள்ளிட்ட பலரையும் ‘தெலுங்கர்கள்’ எனத் தூற்றி, அவர்கள் செய்த துரோகங்கள் அனைத்தும் அவர்களது பிறப்பினால் மட்டுமே வருவது போலப் பேசுகின்றனர் ” - தமிழ் உணர்வு இருந்திருந்தால் தாங்கள் அந்த பதவியில் தமிழன் கொல்லப்படுவதை கண்டு கொண்ட அமைதியாக இருந்திருக்க மாட்டார்கள் துணை போயிருக்க மாட்டார்கள். தமிழன் வாக்கை பெற்று பதவியில் அமர்ந்தவர்கள் தமிழனுக்கு துணை போகாமல் இந்தாலிகாரிக்ககு துணைபோவதற்க்கு காரணம் அடிப்படை உணர்வின்மையே அதனால்தான் அவர்கள் செயல்கள் இழிவானதாக கருதப்படுகிறது. ”‘தமிழ்ச்’ சாதியில் பிறந்த ப.சிதம்பரம், பா.ம.க. இராமதாசு, தனியரசு, தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் தமிழராய்ப் பிறந்துவிட்ட காரணத்தினாலேயே என்ன செய்து கிழித்துவிட்டனர் என அவர்கள் யாரும் அலசி ஆராய முற்படுவதில்லை” - ப.சிதம்பரம் தமிழ் சாதியில் பிறந்ததால் போற்றப்பட்டார் என கட்டுரையாளர் கூறுகிறாரா? யார் போற்றியது. மற்றவர்கள் தமி‌ழின் படுகொலையை தடுக்கும் இடத்தில் இ‌ல்லையே. தமிழனை காப்பாற்ற இயலாத ”திராவிடம்” தேவ‌ைே‌ய இல்லை. மலையாள தெலுங்கு திராவிடர்கள் தான் கொலைக்கு துணைபோனதே! ”திராவிட” உணர்வு இருக்குமானால் தமிழின படுகொலை நடந்திருக்குமா? திராவிட உணர்வு தமிழனுக்கு மட்டும் தான் வேண்டுமா? ஏன் தொடர்ந்து அ‌டிமையாக இருக்கவா? போதும் திராவிடத்தின் பெயரில் தமிழனை ஏமாளியாக்கியது.
அருணபாரதி
//அய்யா அருணபாரதி இந்த நிலை மற்ற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு ஏன் பொருந்தவில்லை? மற்ற மாநிலஙலில் ஏன் நூறு ஆண்டுகள் ஆனாலும் தமிழன் தமிழனாகவே பார்க்கப்படுகின்றான்? அவன் வாழ்வியல் மொழியாக அந்த மாநில மொழியை ஏற்றுக் கொண்டிருந்த போதும்//

மொரீசியஸ் நாட்டில் தமிழர்கள் அங்கேயே தங்கி பல நூற்றாண்டுகளாகிவிட்டதால், அங்குள்ள பல பதவிகளில் தமிழர்கள் உள்ளனர். மலேசியா, கனடா போன்ற பல இடங்களிலும் தமிழர்கள் அரசியல் பதவிகளை அடைந்து அங்குள்ள மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஏகாதிபத்திய காலனி ஆட்சியின் போது அங்கு கொண்டு செல்லப்பட்டவர்கள். இவர்கள் அங்கு மொழிச் சிறுபான்மையினராக விளங்கி வந்தாலும், காலப்போக்கில் அந்நாட்டின் குடியுரிமைப் பெற்ற மக்களாகவே கருதப்படுவர்.

புலம் பெயர்ந்த தமிழ் மக்கள், தமது நாடு போர்ச் சூழலில் இருப்பதை உணர்ந்து பிற நாடுகளுக்கு வெளியேறிவர்கள் ஆவர். பல்வேறு நாடுகளிலும் உள்ள இத்தமிழர்கள், தமது தாயக விடுதலைக்குப் பிறகு மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும் என்பதையே உளவியலாகக் கொண்டிருப்பவர்கள். இவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்லர். இந்தியாவெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள், திபெத்தியர்கள், பாலஸ்தீனியர்கள் உள்ளிட்ட தாயகமற்ற மக்களை புகலிடம் கோரி வருபவர்களாகவேக் கருதி அவர்களுக்கு சமமான குடியுரிமை அளித்து நாம் பாதுகாக்க வேண்டும்.

ஆனால், வடநாட்டிலிருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிலிருந்தும் வருபவர்கள் தங்களது சொந்தத் தாயகத்தில் உள்ள ஆதிக்கங்களை எதிர்த்துப் போராடாத உளவியலைப் பெற்றே தமிழகத்திற்கு வந்து குவிகின்றனர். இவர்கள் தமிழகத்திலுள்ள தமிழர்களின் கொஞ்ச நஞ்ச வேலைவாய்ப்புகளையும் பறிப்பதோடு, பொருளியல் ஆக்கிரமிப்பாளர்களாகவும் விளங்குகின்றனர். இவர்களை முழுவதுமாக வெளியேற்ற வேண்டும் என்பதையே தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்தி வருகின்றது.

இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களில் மட்டுமல்ல, இந்தியாவாலும் தமிழர்கள் தமிழர்களாகவே பார்க்கப்படுவதற்கு இந்திய அரசின் இனவெறித் தன்மையே காரணம். இதை முறியடிக்க, இந்தியத்துடனுனான தொடர்புகளை தான் நாம் துண்டிக்க வேண்டும். இந்தியத்துடன் சமரசம் செய்து கொண்ட அண்டை மாநிலங்களுடன் நாம் போராட வேண்டும். ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு இந்திய அரசு நடத்துகின்ற தேர்தல்களில் பங்கேற்பதன் மூலம் இந்திய அரசுக் கட்டமைப்பை பலப்படுத்தும் வேலையை தான் இங்குள்ள சிலர் செய்ய முற்படுகின்றனர்.
Dr. V. Pandian
அருணபாரதி அவர்களே! உங்களின் கருத்துக்கள் மூலம், பெரியாருக்கு வரிசு ஒன்று தமிழ் தேசப் பொது உடைமைக் கட்சியில் உருவாகியுள்ளது போலவே தெரிகிறது. செங்கிப்பட்டியைச் சேர்ந்த செந்தில் நாதன் பொறுத்தமான இடத்திலிருந்து, பொறுத்தமானக் கேள்விகளைக் கேட்டுள்ளார்.
கங்காணி, கங்காணி என்று சொல்லிக் கொண்டே, கங்காணிகளிடம் கோரிக்கை வைத்துக் கொண்டு வீதி ஆர்ப்பாட்டம் ஏனையா செய்கிறீர்கள்? உங்களுடைய களம் புரட்சிக் களம் தானே! உங்களது கட்சியும் "சூழ்நிலைக் கைதிகளாகி தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது" என்பது தான் உண்மை. சனநாயகத்தைப் பயன்படுத்தியும், விடுதலை பெற முடியும். அது உங்களுக்குப் புரியாது. 2007 ஆண்டுகூட "கிழவனல்ல கிழக்குத் திசை" என்று புத்தகம் எழுதியவர் தான் உங்கள் தலைவர் மணியரசன். பெரியாரிசம், (இந்திய) கம்யூனிசம் இரண்டுமே தனது சீடர்களின் சிந்திக்கும் அறிவை மழுங்கடிக்கும் போதைப் பொருள். அதனால் தான் மணியரசன் ஐயாவால் கூட முறையாகச் சிந்திக்க முடியவில்லை. நீர் எம்மாத்திரம்? பாவம் ஒரு சிறுபிள்ளை!. சனநாயகத்தைப் பயன்படுத்தி விடுதலையும் பெறமுடியும். உங்களது கட்சியின் பல கொள்கைகள் தமிழர் விரோத கொள்கைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இனி தமிழர்களை ஏமாற்ற முடியாது!
//முதலாவது. பெரியாரை விமர்சிப்பது சரியா ? தவறா ?. இதை தமிழ்தேச பொதூடமை கட்சியின் தலைவரிடமே கேட்டு இருக்கலாமே. நீங்கள் தமிழ் தேசிய போது உடமை கட்சியின் செயற்குழு உறுப்பினர் தானா ? என்பது எனக்கு சந்தேகமாய் இருக்கின்றது. ஏன் என்றால் உங்கள் கட்சியின் பொதுசெயலாளர் தோழர் மணியரசன் பெரியாரை விமர்சிக்காத மேடைகளே கிடையாது. பெரியாரை விமர்சித்து "பெரியாருக்கு பின் பெரியார்" என்ற தலைப்பில் தோழர் மணியரசன் எழுதிய விமர்சனங்களை முதலில் படித்து பாருங்கள். பிறகு நாம்தமிழர் கட்சியின் ஆவணத்தை விமர்சிக்கலாம்//

தோழர் பெ.மணியரசன் பெரியாரை விமர்சிப்பதற்கும், நாம் தமிழர் கட்சியினர் பெரியாரை விமர்சிப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன. பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, கடவுள் மறுப்புக் கோட்பாடு, சாதி ஒழிப்பிற்கு எதிரான போராட்டம் என பெரியார் தமிழ்ச் சமூகத்திற்கு செய்த பங்களிப்புகளை பாராட்டி நன்றி செலுத்தும் அதே வேளையில் தான், அவரது இனம், மொழி குறித்த மாறுபட்ட கருத்துகளை நாம் விமர்சிக்கிறோம். இதை தோழர் பெ.மணியரசன் அவர்களது பேச்சிலும், பெரியாருக்குப் பின் பெரியார் நூலிலும் காணலாம். தோழர் பெ.மணியரசன் அவர்கள் தொடங்கி, இயக்கத்தின் கடைக்கோடித் தோழர்கள் வரைக்கும் இதே கருத்துள்ளவர்கள் தாம். இதைத்தான் நாங்கள் பேசியும் எழுதியும் வருகிறோம்.

ஆனால், இயக்குநர் சீமானின் தம்பிகளோ, “பெரியாரை கன்னடர்“ என சாதி கண்டுபிடித்த இழித்தூற்றுவதைத் தான் நாங்கள் விமர்சிக்கிறோம்.

ஆனால், “பெரியார் எங்களுக்கு பாடம்”, “பிரபாகரன் பேச்சையும், அண்ணன் கொளத்தூர் மணியின் பேச்சையும் கேட்பேன்” என்றும் இயக்குநர் சீமான் இதழ்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருக்க,

நாம் தமிழர் ஆவணம் பக்கம் 43இல் பின்பற்றப்பட வேண்டிய தலைவர்கள் என “புரட்சிப் பெரியார்” என்று பெரியாரை அடையாளப்படுத்தப்பட்டிருக்க,

நாம் தமிழர் தம்பிகளோ இணையத்தில் “பெரியார் கன்னடர்” என முழங்கிக் கொண்டிருக்க...

நாம் தமிழரின் பெரியார் குறித்த உண்மையான மதிப்பீடுகள் தான் என்ன என தோழர் செந்தில்நாதன் அவர்களாவது உறுதிபட விளக்க முடியுமா? ஏன் உங்களிடம் இவ்வளவுக் குழப்பங்கள்..?
//பெரியாரை மணியரசன் விமர்சித்தால் அது தமிழ் தேசிய அரசியல். சீமான் விமர்சித்தால் அது பிழைப்புவாத அரசியலா ? என்ன ஒரு உங்கள் அரசியல் நேர்மை//

சாதி ஒழிப்பிற்குப் போராடிய பெரியாரையே, சாதியை வைத்து இழித்துப் பேசுகி்ன்ற நாம் தமிழர் கட்சித் தம்பிகள் பிழைப்புவாத அரசியல் செய்யாமல் வேறென்ன செய்கிறார்கள்? தாங்கள் ஓட்டுப் பொறுக்கி பதவி சுகம் அனுபவிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற மமதைக்கு அவர்கள் வந்து விட்டார்கள் என்றேத் தோன்றுகிறது.
Dr. V. Pandian
தமிழ்த்தேசப் பொது உடைமைக் கட்சித் தோழர்களிடம் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில் சொல்கிறேன், அந்தக் கட்சியில் உள்ள மாற்று சமூகத் தோழர்களில் (தெலுங்கு, கன்னடம்) ஒரு சதவீதத்தினர் வேண்டுமானால் உண்மையில் தமிழ் தேசிய விடுதலையில் விருப்பமும், ஆர்வமும் உள்ளவராக இருக்கலாம். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்களே! தெலுங்கு, கன்னட சமூகத்தினருக்குப் பொதுவாகவே, தமிழ் தேச விடுதலையில் ஒருவித அச்சம் உள்ளது. அவர்களது அந்த அச்சம், வரலாற்றின் அடிப்படையில் காரணத்தோடு உருவான அச்சம். எனவே, அத்தகைய சமூகத்தினரின் துணையோடு விடுதலைக்குப் போராடுவதென்பது, செக்கு மாட்டை வண்டியில் பூட்டி பயணம் செல்வதற்கொப்பாகும்.
தமிழ்த்தேச விடுதலை இயக்கங்களில் தன்னைத் தமிழராக மனதார உணர்ந்தவரும், வீட்டிலும் முழுமையாகத் தமிழ் பேசும் மக்களை மட்டுமே இணைத்துக் கொள்ள வேண்டும்.
நீண்டகாலமாகத் தமிழகத்தில் வாழும் எவரையும் நாம் வெளியேற்றச் சொல்லவில்லை. அப்படி கற்பிதம் செய்து எழுதும் அருணபாரதியின் எழுத்து ஒரு விஷமம். ஒரு பின்னூட்டம் சொல்கிறது, இனி நாம் அருணபாரதியின் சாதியைக் கேட்போம் என்று. ஆமாம். தயங்காமல் கேட்கிறோம். அருணபாரதி தமிழரா அல்லை நாயுடுவா, ரெட்டியா, கவுடாவா...............? ஏனென்றால், அவரது கட்டுரை அவ்வளவு விஷமத்தனம் கொண்டதாக உள்ளது. ஒரு உண்மைத் தமிழனால் இப்படி ஒரு கட்டுரை எழுதியிருக்க முடியாது.
க.அருணபாரதி
//பெரியாரை மட்டுமின்றி, தமிழினத் துரோகிகளாக விளங்கும் கருணாநிதி, தங்கபாலு உள்ளிட்ட பலரையும் ‘தெலுங்கர்கள்’ எனத் தூற்றி, அவர்கள் செய்த துரோகங்கள் அனைத்தும் அவர்களது பிறப்பினால் மட்டுமே வருவது போலப் பேசுகின்றனர். ‘தமிழ்ச்’ சாதியில் பிறந்த ப.சிதம்பரம், பா.ம.க. இராமதாசு, தனியரசு, தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் தமிழராய்ப் பிறந்துவிட்ட காரணத்தினாலேயே என்ன செய்து கிழித்துவிட்டனர் என அவர்கள் யாரும் அலசி ஆராய முற்படுவதில்லை >>> ஒரு கட்சியின் செயற்குழு உறுப்பினராக இருக்கும் நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் எவளவு கீழ்த்தரமாக இருக்கின்றது?. நீங்கள் ஒருவேளை 2405 -௨௦௧௨ அன்று செங்கிப்பட்டியில் நடந்த சீமான் தலைமையில் கூட்டத்திற்கு வந்திருந்தாள் விளங்கி இருக்கும் என்று நினைகின்றேன்.//

“ஓட்டுப் போடாதவர்கள் செத்த பிணங்களுக்குச் சமம். அவர்களை சுடுகாடுகளில் அடக்கம் செய்யக் கூட அனுமதிக்கக் கூடாது” - இதை பேசியது, இந்தியத் தேசிய வெறியர்களோ, ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா வெறியர்களோ அல்ல. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் தான் செங்கிப்பட்டிக் கூட்டத்தில் இப்படி பேசியுள்ளார்.

ஓட்டுப் போட எப்படி உரிமையுள்ளதோ, அதைப் போல ஓட்டுப் போட மறுப்பதும் உரிமை. இது தான் சனநாயகம். ஆனால், எப்படியாவது ஓட்டுப் பொறுக்கிப் பதவி சுகம் அனுபவிக்க வேண்டுமென்று நினைக்குமளவிற்கு பதவி வெறித் தலைக்கு ஏறிய இயக்குநர் சீமான் அவர்ளோ, ஓட்டுப் போட மறுக்கும் சனநாயக உரிமையை வெறுப்பதில் வியப்பில்லை. இந்த முத்துக்களைத் தான் “செங்கிப்பட்டியில் சீமான் முழங்கிவிட்டார்” என்று கூறி வியக்கிறார் செந்தில்நாதன்.
இந்தியத் தேசிய வெறியர்களான காங்கிரசு - பா.ச.க. கூட சொல்லத் தயங்கும் வார்த்தைகளை, வெறியுடன் கொட்டும் இயக்குநர் சீமான் தமிழ் மக்களுக்கு என்னவகை சனநாயகத்தை வழங்குவார் என்று செந்தில்நாதன் தான் கூற வேண்டும்.
க.அருணபாரதி
//சீமான் தெளுங்கலரை, கன்னடத்தாரை, மலையாலத்தாரை எதிர்ப்பதால் திருமாவளவனோ, சிதம்பரத்தையோ நல்லவர்கள் என்று சொல்லவில்லை. முதலில் தமிழ் இனத்தை திராவிட கலப்பில் இருந்து மீட்ப்போம். பிறகு இந்த இனத்திற்குள்ளே இருக்கும் இனதுரோகிகளை நாங்களே சரிசெய்து கொள்கிறோம். செயற்குழுவில் இருக்கும் நீங்கள் கற்ற தமிழ் தேசியம் இதுதானா?. இல்லை உங்களுக்கு தமிழ் தேசியம் பற்றி தெரியவில்லை என்றால் போய் உங்கள் போதுசெயலாளரிடம் பாடம் கற்றுகொள்ளுங்கள்//

நாங்கள் பாடம் கற்றுக் கொள்வதெல்லாம் இருக்கட்டும், முதலில் ஒருவரை தமிழர் என்றும் திராவிடர் என்றும் எப்படி வரையறுக்கிறீர்கள்? திராவிடர் என்பது கருத்து அடிப்படையில் வருவதா அல்லது சாதி பார்த்து வருவதா? இதை முதலில் விளக்குங்கள்.
க.அருணபாரதி
//இரண்டாவதாக சொல்லுவது ஒட்டு அரசியல். எனக்கு விபரம் தெரிந்த நாள்முதல் தமிழ்தேசிய பொதூடமை கட்சியை அதன் செயல்பாடுகளை கட்டு கொண்டிருக்கின்றேன். ஏறக்குறைய முப்பதாண்டுகால பாரம்பரியம் இருக்கின்றது. அதன் பிறப்பிடம் என்று நீங்கள் சொல்லி கொள்ளும் செங்கிப்பட்டியில் வசிப்பவன் என்பதால் தமிழ்தேச பொதூடமை கட்சிபற்றி நன்றாக அறிவேன். முப்பதாண்டுகால அரசியல் வரலாற்றில் நீங்கள் சாதித்தது என்ன ?. என்ன பெருந்திரளான தமிழ்தேசிய மக்களை திரட்டி இருக்கின்றீர்கள். தேர்தல் நேரத்தில் ஒட்டுபோடவேண்டாம் என்று தமிழ் தேசியம் பேசுவீர்கள்... பிறகு வாய்கால் சரியில்லை.... வயிறு சரியில்லை என்று தேர்தலில் நின்று ஒட்டு போட்டு ஜெயித்தவன் வாசலில் மனுகொடுக்க காத்துகொண்டு இருப்பீர்கள். இது எவளவு பெரிய மடமை. கடவுளை நம்பாதவர்கள் பூசாரிகளிடம் வரம்கேட்டு நிர்ப்பது மடமையல்லவா ?... தேர்தல் பாதை திருடர் பாதை என்று வியாக்கியானம் பேசுபவர்கள் இந்த முப்பது ஆண்டிற்குள் என்ன செய்து இருக்கவேண்டும் ?. அனைத்து தமிழ்மக்களையும் திரட்டி தனித்தமிழ்நாடு அமைத்து இருக்கலாமே... அதற்க்கு தலைவராக அருணபாரதி பெரிதாய் மதிக்கும் பெரியாரையே வைத்து இருக்கலாமே.... எனவே நீங்கள் உங்கள் கட்சியின் கொள்கையை படியுங்கள். பிறகு மன்ற கட்சியின் ஆவணத்திற்கு விளக்கம் தரலாம்.//

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தேர்தல்களிலும் பங்கெடுப்பதலில்லை. வெற்றி பெற்றவர்களிடமும் மனு கொடுக்க நாங்கள் காத்திருப்பவர்களும் அல்ல. இதற்கு நீங்கள் தக்க ஆதாரத்தை முன் வைக்க வேண்டும்.

மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றத் தான் தமி்ழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட்டங்களை முன்னெடுக்கிறது. இதில் எவ்வித சமரசமும் கிடையாது. தேர்தல்களில் பங்கெடுக்காத மாவோயிஸ்டுகளும் மக்களுக்கான கோரிக்கைகளை ஆட்சியாளர்களிடம் வைக்கின்றனர். இப்படிப் போராடுவதும் தவறு என்றால், நாம் தமிழர் கட்சியினர் எந்த கோரிக்கையும் முன்வைக்காமல் எப்படி போராட்டங்களை நடத்துவது என உலக மக்களுக்க சொல்லித் தருவார்களா?

ஓட்டுப் பொறுக்கி அரசியலில் இறங்கி பதவி சுகம் தேடாத, பணம் - பதவி ஆசைகளுக்கு சோரம் போகாத, மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகாத, தமிழ்நாடு விடுதலை என்ற இலட்சியத்திற்கு கிஞ்சித்தும் சமரசமாகாத கருத்தியல்களுடன் இயங்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களையும், தோழர்களையும் நாங்கள் வென்றெடுத்துள்ளொம். நாம் தமிழர் கட்சியில் இலட்சம் பேர் இருந்தாலும், நாங்கள் சொன்ன அத்தனை கருத்தியல்களையும் ஏற்றுக் கொண்ட ஓரிருவரையாவது சுட்ட முடியுமா? வளர்ச்சி என்பது எண்ணிக்கையில் அல்ல, எண்ணங்களில் தான் உள்ளது. தமிழக இளைஞர்களை ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்குப் பயன்படுத்தி பதவி அடைவதுதான் உங்கள் சாதனை என்றால், நீங்கள் எங்களுடன் போட்டியிடவே தகுதியற்றவர்கள் ஆவீர்கள்.

தமிழ்த் தேசியம் என்பது தமிழ் இனத்தின் விடுதலையைப் பற்றிப் பேசுகின்ற கருத்தியல். இக்கருத்தியலைத் திரித்து, ஓட்டுப் பொறுக்கப் பயன்படுத்தும் நாம் தமிழர் கட்சியினருக்கு தமிழ்நாட்டு விடுதலை குறித்தும், தமிழ்நாட்டு உரிமைகள் பறிக்கப்படுவது குறித்தும் சிறிதும் அக்கறை கிடையாது. ஏனெனில், தேர்தலில் பங்கேற்பதன் மூலம் இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொள்ளும் நீங்கள், இச்சிக்கல்களுக்குக் காரணமாக விளங்கும் இந்திய அரசை எப்படி எதிர்ப்பீர்கள் என்பதே கேள்விக் குறி. ஆக, எப்படி முதல்வர் பதவியைப் பிடிப்பது என்பதில் தான் உங்களுக்கு அதிக அக்கறை உள்ளது என்பதே தெளிவு. தேர்தலின் மூலம் ஒருபோதும் விடுதலை பெற முடியாது. பணமும், பதவியும் வேண்டுமென்றால் பெறலாம்.

நாம் தமிழர் கட்சியின் சாதனை என்ன என்பதை காண முப்பதாண்டு காலம் நாம் காத்திருக்கத் தேவையில்லை. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இவர்களது இலட்சணம் தெரிந்துவிடும்.
க.அருணபாரதி
//2007 ஆண்டுகூட "கிழவனல்ல கிழக்குத் திசை" என்று புத்தகம் எழுதியவர் தான் உங்கள் தலைவர் மணியரசன். பெரியாரிசம், (இந்திய) கம்யூனிசம் இரண்டுமே தனது சீடர்களின் சிந்திக்கும் அறிவை மழுங்கடிக்கும் போதைப் பொருள். அதனால் தான் மணியரசன் ஐயாவால் கூட முறையாகச் சிந்திக்க முடியவில்லை. நீர் எம்மாத்திரம்? பாவம் ஒரு சிறுபிள்ளை!. சனநாயகத்தைப் பயன்படுத்தி விடுதலையும் பெறமுடியும். உங்களது கட்சியின் பல கொள்கைகள் தமிழர் விரோத கொள்கைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இனி தமிழர்களை ஏமாற்ற முடியாது!//

2007இல் தோழமை பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட 'கிழவனல்ல கிழக்குத் திசை' என்ற நூல் தோழர் பெ.மணியரசன் எழுதிய நூல் அல்ல. அது பெரியாரின் பேச்சு மற்றும் எழுத்துகளையும், ஓவியர் புகழேந்தி அவர்களது ஓவியங்களையும் கொண்ட ஓர் தொகுப்பு. அந்நூலில் இடம் பெற்ற பெரியாரின் பேச்சுகளையும், எழுத்துகளையும் தொகுக்கும் வேலையை மட்டும் தான் தோழர் பெ.மணியரசன் செய்தார்.

பெரியாரிடமுள்ள நல்ல கருத்துகளையும், குறையுள்ள கருத்துகளையும் ஓரு வாசகர் தெரிந்து கொள்ளும் வகையில் தான் அதை தொகுத்தக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, பெரியார் ராஜாஜியிடம் கொண்டிருந்த நெருக்கம் குறித்தும், திராவிடர் கழகத்தை உட்கட்சி சனநாயக முறை கொண்ட அமைப்பாக அவர் நடத்தாத குறித்தும், இன்னபிற பெரியாரின் சிந்தனை பலவீனங்கள் குறித்தம் வாசகர்கள் தெரிந்து கொள்ளும்படி அது தொகுக்கப்பட்டுள்ளது.

மேலும், வர்ண சாதி ஒழிப்பு, பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பெண்ணுரிமை போன்றவற்றில் பெரியாரின் பாராட்டத்தக்க கருத்துப் பங்களிப்பையும் போராட்டங்களையும், த.தே.பொ.க.வும், தோழர் பெ.மணியரசன் அவர்களும் இன்றும் பாராட்டுகிறார்கள். இதற்கு அண்மையில் வெளியிடப்பட்ட “பெரியாருக்குப் பின் பெரியார்“ நூலே சான்று.

மொழி, இனம் குறித்த பெரியாரின் முற்றிலும் தவறான நிலைபாடுகளை கொஞ்சமும் சமரசம் இன்றி தோழர் பெ.மணியரசன் விமர்சித்து வருகிறார். திராவிடம் என்ற கருத்தியலை, அதன் அரசியல் வடிவத்தை நூற்றுக்குநூறு எதிர்த்து வருகிறார். நுனிப்புல் மேய்வது போல் திரு. பாண்டியன் அவர்கள், தோழர் பெ.ம. குறித்து விமர்சிப்பது சரியல்ல. ஒரு நூலில் என்ன இருக்கிறது என்று கூட ஆராயாமல் பேசுமளவிற்கு முனைவர் வே.பாண்டியன் அவர்களுக்கு ஏதோ கண்ணை மறைக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.
க.அருணபாரதி
//தமிழ்த்தேசப் பொது உடைமைக் கட்சித் தோழர்களிடம் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில் சொல்கிறேன், அந்தக் கட்சியில் உள்ள மாற்று சமூகத் தோழர்களில் (தெலுங்கு, கன்னடம்) ஒரு சதவீதத்தினர் வேண்டுமானால் உண்மையில் தமிழ் தேசிய விடுதலையில் விருப்பமும், ஆர்வமும் உள்ளவராக இருக்கலாம். ஆனால், அவர்களில் பெரும்பாலோர் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்களே! தெலுங்கு, கன்னட சமூகத்தினருக்குப் பொதுவாகவே, தமிழ் தேச விடுதலையில் ஒருவித அச்சம் உள்ளது. அவர்களது அந்த அச்சம், வரலாற்றின் அடிப்படையில் காரணத்தோடு உருவான அச்சம். எனவே, அத்தகைய சமூகத்தினரின் துணையோடு விடுதலைக்குப் போராடுவதென்பது, செக்கு மாட்டை வண்டியில் பூட்டி பயணம் செல்வதற்கொப்பாகும். //

த.தெ.பொ.க. தெளிவாகவும், ஒளிவு மறைவின்றியும் உரத்துச் சொல்கிறது. இருநூறு முந்நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் குடியேறி, தமிழ்நாட்டையே தாயகமாக கொண்டு வாழும் தெலுங்கு பேசும் மக்களும், கன்னடம் பேசம் மக்களும், உருது பேசும் மக்களும், தமிழர்களைப் போல் சமௌரிமையுள்ள தமிழ்த் தேசக் குடிமக்கள் ஆவர். எனவே, அம்மக்கள் த.தே.பொ.க. கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, அதன் அமைப்பு விதிகளுக்கு ஏற்ப களப்பணி ஆற்ற வந்தால், அவர்களை இருகை நீட்டி வரவேற்கக் காத்திருக்கிறோம்.
ஏற்கெனவே, மேற்படி சிறுபான்மை மொழி பேசும் யாராவது எங்களுடன் இருந்தால் அது எங்கள் கொள்கைக்கு ஏற்ற நடைமுறைதானே தவிர முரண்பட்டதல்ல.

வரலாற்று வழியில் வந்து குடியேறி தமிழ்த் தேசக் குடிமக்களாக நூற்றாண்டுகளாக வாழும் மக்கள் வேறு தாய்மொழியைக் கொண்டிருந்தாலும், அவர்கள், தமிழை கல்வி மொழியாகவும், ஆட்சி மொழியாகவும், ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் த.தே.பொ.க. முன் வைக்கும் நிபந்தனை.

எனவே, பாண்டியனார் எங்களிடம் சாதி குறித்து துப்பறியும் வேலை செய்யும் அவசியமே தேவையில்லை.

மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்ட 1956 நவம்பர் 1க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய அனைத்துப் பிறமொழியினரையும், வெளிமாநிலத்தவர்களையும் வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி ‘வெளியாரை வெளியேற்றவாம’ என்ற இயக்கத்தை த.தே.பொ.க. தொடர்ந்து நடத்தி வருகிறது.

தமிழ்த் தேச விடுதலையில் அக்கறையில்லாத, தமிழ்த் தேச விடுதலையை தனது இலட்சிய இலக்காக வைத்துக் கொள்ளாத, தேர்தல் அரசியலில் விருப்பம் வைத்துள்ள, தன்முனைப்பும் தமிழினத்தின் பேரால் தமிழ் மொழியின் பேரால், சுயதம்பட்ட விளம்பர வேட்கையும் கொண்ட உதிரிக் கருத்தியலாளர்கள், சுயசாதி பெருமைக் கோட்பாட்டில் திளைக்கிறார்கள். இவ்வாறாக இவர்கள் பார்ப்பனியத்தின் பங்காளியாகிவிடுகிறார்கள். தமிழ் இனத்திலுள்ள ஒடுக்கப்பட்ட சாதிகளை, உள்மனதளவில் தன் சாதிக்குக் கீழானதாக்க் கருதும் போக்கும் இவர்களிடம் இருக்கும்.

ஒரு விடுதலை இயக்கத்திற்கு அனைத்து வகை சனநாயக சக்திகளையும் இணைத்து, முதன்மை எதிரியை வீழ்த்தக் களம் காண வேண்டும் என்ற அக்கறை இருக்கும். சுயசாதி தம்பட்டக்காரர்களுக்கு, அந்த அக்கறை தேவைப்படாது. இருக்கின்ற, மக்கள் சக்திகளை திரித்துப் பிரித்து, இந்திய ஏகாதிபத்தியத்தின் பக்கமும், பார்ப்பனியத்தின் பக்கமும், அவர்கள் விரட்டிவிடவே அவர்களின் தாந்தோன்றித் தன்முனைப்பு தொலை நோக்கு இலட்சியமற்ற தமிழின ஆர்வமும் பயன்படும்.
Dr. V. Pandian
அருணபாரதி அவர்களே! "கிழவனல்ல கிழக்குத் திசை" என்ற நூலில் பெரியாரின் பல பலகீனங்களை சுட்டிக் காட்டியதாக சப்பை கட்டுக்கட்டும் நீங்கள், "பெரியாருக்குப் பின் பெரியார்" என்ற நூலில் காணப்படும் தகவல்களை "கிழவனல்ல கிழக்குத் திசை" நூலில் சேர்க்கத் தவறியதேன்? "பெரியாருக்குப் பின் பெரியார்" நூலில் காணப்படும் செய்திகள் ஐயா மணியரசனாரின் புதிய கண்டுபிடிப்புகள் என்று மேலும் புளுக மாட்டீர்கள் தானே! அதோடு நீர் சொல்வது போல அந்த நூல் எழுதப் பட்டிருந்தால் அதற்கானத் தலைப்பாக "பெரியாரை அறிவோம்" என்பது போன்ற ஒரு தலைப்புத்தான் இருந்திருக்கும். அவர் "கிழக்குத் திசையா"? இதன் பொருள் தெரியுமா உமக்கு? இது எவ்வளவு பெரிய அபத்தம்! இது தான் நீங்கள் அவரின் குறைகளை எடுத்துக் காட்டிய லட்சணமா?

அடுத்து, பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்தியல்களை உமது கட்சியும், ஐயா மணியரசனாரும் ஏற்கின்றீர்களா? இப்படிச் சொல்ல வெட்கமாக இல்லை உங்களுக்கு? பெரியார் தனது 72 வது அகவையில், 30 வயதையும் அடையாத மணியம்மையாரை திருமணம் செய்தது எதனால்?

தமிழர்களை என்று அவர் திராவிடர் என்று அழைத்தாரோ அன்றே தமிழரது முதல் முள்ளிவாய்க்கால் நிகழ்ந்து விட்டது.

பெரியாரின் மொழி, இனக் கொள்கைகள் தவறானவை. அவரிடம் சனநாயகம் இல்லை. அவரது திராவிடக் கருத்தியல் தமிழினத்தை வீழத்தி இருக்கிறது. இதையெல்லாம் ஆமோதிக்கும் உமது கட்சி, பெரியாரைப் பறக்கனிக்காமல் இருப்பதன் மர்மம் என்ன? விஷம் கலந்த பாலை வெளியில் கொட்டுவோமா அல்லது அதிலுள்ள பாலுக்காக தினமும் சிறிதளவு உட்கொள்வோமா? தமிழினத்திற்கு Slow Poison கொடுக்கிறீர்களா?

*********

நுனிப்புல் மேய்வது நாங்களல்ல. நான் முன்பே குறிப்பிட்டபடி, தமிழனை அழித்த இரண்டு விடயங்கள் பெரியாரிசம் என்ற திராவிடக் கருத்தியலும். கம்யூனிசம் என்ற பிராமண மயமாக்கப்பட்ட கருத்தியலும். இவற்றால் ஆட்கொள்ளப் பட்டவர்கள் தங்களது சிந்தனைத் திறத்தை இழந்து விடுகிறார்கள். செக்கு மாடுகளாகிச் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
Dr. V. Pandian
அருணபாரதி அவர்களே! நான் கீழே இணைத்திருக்கும் வரிகள் உம்முடையது.

........// தமிழ்த் தேச விடுதலையில் அக்கறையில்லாத, தமிழ்த் தேச விடுதலையை தனது இலட்சிய இலக்காக வைத்துக் கொள்ளாத, தேர்தல் அரசியலில் விருப்பம் வைத்துள்ள, தன்முனைப்பும் தமிழினத்தின் பேரால் தமிழ் மொழியின் பேரால், சுயதம்பட்ட விளம்பர வேட்கையும் கொண்ட உதிரிக் கருத்தியலாளர்கள், சுயசாதி பெருமைக் கோட்பாட்டில் திளைக்கிறார்கள். இவ்வாறாக இவர்கள் பார்ப்பனியத்தின் பங்காளியாகிவிடுகிறார்கள். தமிழ் இனத்திலுள்ள ஒடுக்கப்பட்ட சாதிகளை, உள்மனதளவில் தன் சாதிக்குக் கீழானதாக்க் கருதும் போக்கும் இவர்களிடம் இருக்கும். ஒரு விடுதலை இயக்கத்திற்கு அனைத்து வகை சனநாயக சக்திகளையும் இணைத்து, முதன்மை எதிரியை வீழ்த்தக் களம் காண வேண்டும் என்ற அக்கறை இருக்கும். சுயசாதி தம்பட்டக்காரர்களுக்கு, அந்த அக்கறை தேவைப்படாது. இருக்கின்ற, மக்கள் சக்திகளை திரித்துப் பிரித்து, இந்திய ஏகாதிபத்தியத்தின் பக்கமும், பார்ப்பனியத்தின் பக்கமும், அவர்கள் விரட்டிவிடவே அவர்களின் தாந்தோன்றித் தன்முனைப்பு தொலை நோக்கு இலட்சியமற்ற தமிழின ஆர்வமும் பயன்படும்.//...............

நான் என்ன சொன்னேன். உங்களது கட்சியல் இருப்பவர்களில் தெலுங்கு, கன்னட வழிவந்த உருப்பினர்களில் பெரும்பாலோருக்கு உண்மையில் தமிழ் தேசியத்தில் ஆர்வம் இல்லை என்றும், அவர்களை வைத்துக் கொண்டு தேசியவிடுதலைக்குப் போராடுவது "செக்கு மாட்டை வண்டியில் பூட்டி, பயணம் போவதற்கொப்பாகும்" என்றும் சொல்லி இருந்தேன். அதற்குத்தான் மேற்குறிப்பிட்ட உங்களின் பதில் இவ்வாறாக அமைந்துள்ளது. இதைத்தான் ஐயா மணியரசனார் அவர்கள் "நெருப்புக் கோழித் தந்திரம்" என்று சொல்வார். ஐயா மணியரசனார் சொன்னது, திராவிட இயக்கங்களில் இருக்கும் நெருப்புக் கோழிகளைத்தான். ஆனால், தமிழ்த் தேசப் பொது உடைமைக் கட்சியிலேயே நெருப்புக் கோழிகள் இருப்பது அவருக்குத் தெரியாது பாவம்! எங்களுக்கே அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த அளவுக்கு நெருப்புக் கோழிகள் தா. தெ. பொ. க. வில் இருக்கின்றனவே என்ற செய்தி.

எங்களைப் பொருத்தமட்டில் 400 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னட வழி ஆளும் வர்க்கம் வெரும் சிறுபாண்மை மக்களில்லை. அவர்கள் ஒரு ஆதிக்க இனம். அவர்களைத் தமிழராக, நிபந்தனையில்லாமல் நாங்கள் ஏற்கத் தயாரில்லை. அவர்களை நாங்களும் "தமிழக மக்களாக" ஏற்கிறோம். ஆனால், அவர்களை நாங்கள் "தமிழர்களாக" ஏற்க வேண்டுமானால், அவர்கள் வீட்டிலும் முழுமையாகத் தமிழ் பேச வேண்டும். அவர்கள் தங்களைத் தமிழர்களாக மனதார ஏற்கவேண்டும். தமிழினத்தை அழித்த பெரியாரை அவர்கள் முற்றாகப் புறக்கனிக்க வேண்டும்.

இல்லையேல் அவர்கள் சிறுபாண்மை இனமாக வாழட்டும். அவர்களின் தனி மனித உரிமைகள் மதிக்கப்படும். ஆனால், அவர்கள் எங்களை ஆள முடியாது. அண்டை மாநிலங்களிலுள்ள தமிழர்கள் பெரும்போலோர் அந்த மண்ணின் மக்கள். ஆனல், அவர்கள் அங்கு ஒரு M.L.A. வாகக் கூட அனுமதிக்கப் படுவதில்லை. ஆனால், தமிழகத்தில் உள்ள தெலுங்கு, கன்னடர்கள் "முழுவதுமே" தமிழகத்தில் "வந்தேறி" எங்களை ஆண்டு, ஆதிக்கம் செலுத்தியவர்கள் இன்றும் செலுத்திக் கொண்டிருப்பவர்கள். இவர்கள் ஆண்டு காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு உரிமைகளை நாங்கள் இழந்தது தான் மிச்சம். இன்று முல்லைப் பெரியாரிலாவது ஓரளவுக்கு நல்ல தீர்ப்பு வந்ததென்றால் அதற்கு இந்தத் திராவிடர்கள் காரணமல்லை. தன்னெழுச்சியாக நடந்த எளிய தமிழர்களின் போராட்டம் தான்.

தமிழகத்தைச் சுற்றி திராவிட தேசங்களை வைத்துக் கொண்டு, தமிழகத்திலும் திராவிடர்களை ஆள அனுமதிப்பது போன்ற ஒரு செயல் மிகவும் ஆபத்தானதும், அபத்தமானதுமாகும். தமிழர்கள் தொடர்ந்து நாசமாய்ப் போய்க்கொண்டிருப்பது இதனால் தான்.
பள்ளியில் தமிழில்லை. அரசு சாராயம் விற்கிறது. தமிழர்கள் அகதிகளாக்கப் பட்டிருக்கிறார்கள். அகதிகளும் வதை படுகிறார்கள். தமிழரின் நிலம் மாற்றான் கைக்கு மாறுகிறது. வேண்டாம் திராவிடம். அரசியலில் வேண்டாம் திராவிடர்.

எங்களது விடுதலைப் போராட்டத்தில் "அனைத்து வகை" சனநாயக சக்திகளையும் நாங்கள் இணைத்துக் கொள்ள மாட்ட்டோம். ஏனென்றால் தமிழத்தேசியம் செக்கு மாடாகி விடக்கூடாதல்லவா? தா. தே. பொ. க. தன்னை வேண்டுமானால் "திராவிட தேசப் பொது உடைமைக் கட்சி" என்று அழைத்துக் கொள்ளட்டும்.

இந்த நெருப்புக் கோழியோடு எனது உரையாடல் முற்றுப் பெறட்டும்!
வெற்றித்தமிழன்
திரு அருணபாரதி அவர்களே
சாதிக்கும் இனத்துக்கும் உள்ள் வேறுபாட்டை முதலில் விளக்க வேண்டும்!
இந்த வேறுபாட்டைக் கூட சரியாகப் புரிந்துகொல்ல வில்லையா? அல்லது புரிந்துகொல்லாதது போன்று களத்தில் இரங்கியது நீங்கள் குழமபியா? அல்லது பிறரைக் குழப்பவா?
கவிபாஸ்கர்
முனைவர் பாண்டியன் அவர்களே, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் யாருடனும் சாதி பார்த்து பழகுவதில்லை. அவ்வாறு பழகுவதை வெறுத்து ஒதுக்க வேண்டும் என்று கருதுபவர்கள். ஆனால், இவ்வளவு நாள் எங்களுடன் பழகிய நீங்கள், இப்படி சாதி பார்த்துப் பழகியிருப்பீர்கள் என நாங்கள் கொஞ்சமும் நினைக்கவில்லை. தோழர் அருணபாரதியின் சாதி என்ன என நீங்கள் கேட்பது எங்கள் மனதைப் புண்படுத்துகிறது.
கோபிநாத்
தமிழர்கள் சாதிக்கு அப்பார் பட்டவர்கள் என்பதை நினைவுக் கொள்ளவும்.
கோபிநாத்
அய்யா செந்தில்நாதல் அவர்களே செங்கிபட்டியில் இருக்கும் நீங்கள் தமிழ்த் தேசியத்தை பற்றி தெரியாமல் இருப்பது நகைப்புக்குறியதாக இருக்கு. தேர்தல் பாதையில் நிற்கும் நீங்கள் டில்லி அரசுக்கு மணு மட்டும் கொடுக்க முடியும் ஆட்சிக்கு வந்தால்லும் கூட.தமிழ்த் தேசியம் என்பது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்தேசியன்
தமிழர்களை பிரிப்பதற்கு தான் சாதி பயன்படும். முனைவர் பாண்டியனார் அதை விரும்பினால் அதை அவர் தொடரட்டும்.
இத்தகையோர் முதலில் தமிழ்நாட்டை தமிழன் ஆளவண்டும் என்பர். பின்பு மருத்துவர் கூறுவதுபோல் எங்கள் சாதிக்காரன் ஒருவன் கூட முதலமச்சர் பதவிக்கு வரவில்லை என்பர். இவர்களுக்கு தமிழ்நாட்டை ஆரிய டெல்லி ஆளுவது பிரச்னை இல்லை.
கோபிநாத்
பாண்டியன் அவர்கள் த.தெ.பொ.க வுடன் நெருங்கி பழகியவர் என்று பதிவு செய்துள்ளார் என்பது விந்தையாக இருக்கிறது. ஒரு ஆரம்ப கால கட்சி தோழருக்கு இருக்கும் புரிதல் கூட உங்களுக்கு இல்லை என்பது உங்கள் பதிவு மூலம் தெளிவாக தெருகிறது.
தமிழ்ச்செல்வன்
கிழவனல்ல கிழக்கு திசை நூலில் ஒரு சில குறைகளை தவிர்த்து பெரியார்க்கு பின் பெரியார் எழுதப் பட்டிருக்கிறது. ஒரு நூலுக்கும் இன்னொரு நூலுக்கும் இடையில் சில படிப்பினைகள் இருக்க கூடாது என்று பாண்டியன் நினைக்கிறாரோ? பாண்டியன் பிறக்கும் போதே தமிழ்த் தேசிய சிந்தனையுள்ளவாரக பிறந்தவரா நீங்கள் ? கிழவனல்ல கிழக்கு திசை நூல் தொகுக்கப் படும் போது நீங்கள் ஒரு தி.மு.க. பற்றாலராமே? அறிவு பரினாமவளர்ச்சிக்கு பாண்டியன் மட்டுமே சொந்தக்காரரோ?
Dr. V. Pandian
கவிபாஸ்கர் அவர்களே! எனக்கு நான் தமிழன் என்ற இன உணர்வு மட்டுமே உண்டு. சாதிப்பற்று ஏள்ளளவும் இருந்ததுமில்லை, இருக்கப் போவதுமில்லை. ஆனால், மாற்றினத்தாரை அடையாளம் காண இனி நாங்கள் தெரியாத நபர்களின் சாதியைக் கேட்போம். ஏனென்றால், இன்னுமொரு முள்ளிவாய்க்காலை தமிழினம் சந்திக்கக் கூடாதல்லவா? மற்ற தமிழத்தேசிய ஆற்றல்களை தோழமையோடு விமர்சிக்காமல் எதிரிபோல் பாவித்து விஷத்தைக் கொட்டி இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளதால், இப்போதும் அருணபாரதியின் உண்மை சாதியை அறியவே விருப்புகிறேன். அவரை நான், ஈ. வி. கெ. எஸ். இளங்கோவனோடு வைத்துத் தான் பார்க்கிறேன்.

தமிழத்தேசப் பொது உடைமைக் கட்சியின் பெரியார் நிலைப்பாட்டையும், தமிழர் யார் என்ற நிலைப்பாட்டையும் முற்றாக நாங்கள் நிராகரிக்கிறோம். எனவே, மாற்றானின் சாதியைக்கேட்டு அவனை அடையாளங்காண்பதைத் தவறானதாகக் கருதவில்லை. அது தமிழர்களின் தற்காப்பு நடவடிக்கைகளில் ஒன்று. பட்டதெல்லாம் போதாதா?
Dr. V. Pandian
தமிழத்தேசியன் அவர்கள் தமிழர் கண்ணோட்டம் இதழில் காந்திரமானக் கட்டுரைகளை வரைபவர். அவரும் நெருப்புக் கோழித் தந்திரத்தைப் பயன்படுத்தவது நமக்கு வியப்பை அளிக்கிறது. என்னை மருத்துவரோடு இணைத்து பேசும் அளவுக்கு அவர் கீழத்தரமாகப் போயிருக்கக் கூடாது. தமிழத்தேசியன் என்ற பெயரில் இளவட்டங்கள் போட்ட பின்னூட்டமாகத்தான் அது இருக்கும் என நம்புகிறேன். இது உண்மையானால், தமிழத்தேசியன் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Dr. V. Pandian
தமிழ்ச்செல்வன் அவர்களே! மணியரசனாரின் உளச்சான்றையும், தைரியத்தையும் நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் பெரியார் தமிழ்த்தேசியத்தின் தந்தை என்று பட்டம் கொடுத்துவிட்டு இப்போது அதை நீக்கிய துணிச்சலை வரவேற்கிறேன். அவர் அப்படி நீக்கி இருக்காவிட்டால் வரலாறு அவரைக் கடுமையாகத் தூற்றும். ஆனால், இப்போதும் அவர் அரை கிணறுதான் தாண்டியுள்ளார். அவர் பெரியாரை முற்றாகப் புறக்கணிக்காமல் காலம் கடத்தினால், இப்போதே நங்கள் தூற்றுவது போல, எதிர்காலம் அவரை மிகக் கடுமையாகத் தூற்றும்.

"கிழக்குத் திசை" என்று பெரியாரை அவர் வர்ணித்தது ஒரு அபத்தம். என்னுடைய கேள்வி என்னவென்றால் "கிழவனல்ல கிழக்குத் திசை" என்ற நூலை அவர் "தொகுக்கும்" போது, "பெரியாருக்குப் பின் பெரியார்" என்ற நூலில் உள்ள செய்திகள் அன்றே அவருக்குத் தெரியுமா அல்லது தெரியாதா? தெரியாதென்றால் அவரது அறிவு பரிணாம வளர்ச்சியை நாங்கள் ஏற்கிறோம். தெரிந்தே அப்படி எழுதியிருந்தால் அது ஒரு அறிவு நாணயமற்ற செயல். இதற்கு மேல் சங்கடத்தை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை.

நான் என்றும் தி.மு.க. அனுதாபி இல்லை. ஆனால், அதன் பிராமண எதிர்ப்பு கூச்சலால் சற்றே நெகிழ்ந்தது உண்டு. அவ்வளவே!
Dr. V. Pandian
எனது பின்னூட்டங்களில் சில செய்திகளை கீற்று திருத்தி வெளியிட்டிருப்பது முறையன்று.
அந்தத் திருத்தங்கள் தேவையற்றது என்பது எனது தெளிவானக் கருத்து.
arul
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே
இங்கு பிறப்பினும் அயலான் அயலானே !

புரட்ட்சிக்கவி பாரதிதாசன்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.