இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் வேதகாலம் தொடங்கி, கணினி காலம் வரை பெரும்பான்மை மக்கள் மீது மாற்ற முடியாத, அகற்ற முடியாத ஆதிக்க சக்திகளாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களுக்கு, அவர்களின் ஆதிக்கம் நிலைத்து நிற்க, பார்ப்பனர் அல்லாத இனத்துரோகிகள்தான் பெரிதும் பயன்பட்டிருக்கிறார்கள். வரலாறு முழுதும் அதற்கான சான்றுகளைப் பார்க்கலாம். அந்த துரோகத்தின் தொடர்ச்சிதான் இந்த 'நாம் தமிழர்' ஆவணம்.

ambedkar_periyar_30131.05.12 பெரியார் முழக்கம் ஏட்டில் அந்த 'நாம் தமிழர் ஆவண'த்திலிருந்து ஒரு சில முக்கியமான வரிகளை மட்டும் அப்படியே வெளியிட்டு அதற்கு சிறு விளக்கம் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கே அலறித் துடிக்கிறது திடீர்த் தமிழர் கூட்டம். பெரியார் முழக்கத்தில் வந்த ஒரு சில செய்திகளுக்கு பதில் தருகிறோம் என்ற பெயரில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநிலப் பொறுப்பாளர் என்ற பெயரில் மணி.செந்தில் என்பவர் ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். ஆவணம் என்ற அந்தப் புளுகு மூட்டையின் மேலும் சில பக்கங்களையும், வரிகளையும் அவர் வெளியிட்டிருக்கிறார். முகநூல் பக்கங்களில் சில திடீர்த்தமிழர்கள் தம் பங்குக்கு பெரியாரை எப்படியெல்லாம் புகழ்ந்து எழுதியிருக்கிறோம் பாருங்கள் என்று சில பக்கங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்ட ஒரு சில பக்கங்களிலேயே ஒரு பக்கத்தை அடுத்த பக்கமே மறுக்கும் அளவுக்கு முரண்பட்ட தகவல்களும் அறிவுக்கும் வரலாற்றிற்கும் பொருந்தாத தகவல்களும் நிறைந்திருக்கின்றன. அவை பற்றி தேவைப்பட்டால் பின்னர் விரிவாக விளக்கலாம். முதலில் பெரியார் தி.க.வுக்குப் பதில் தருகிறோம் என்பதுபோல நினைத்து, ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் பொய் சொல்லிக் கொண்டிருக்கும் மணி.செந்திலின் விளக்கத்திற்கு வருவோம்.

திராவிடத்தின் தோற்றம் எது என்பதற்கு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்கள். ஆவணத்திலிருந்து...

“கால்நடைகளை ஓட்டிக்கொண்டு கால்நடையாக வந்து குடியேறிய மனுவாளர்கள் (ஆரிய பார்ப்பனர்கள்) நாகரிகச் செழுமை கொழுவிய சிந்துவெளி தமிழகத்தில் கால்வைத்த பின்பு, தமிழரின் மொழியும், பண்பாடும் திரிவும்-சிதைவும் உற்று பல்வேறு மொழிகளும், மொழியினங்களும் ஆயின. அவ்வாறு வந்தேறிகளின் மினுக்கத்தில் மயக்கமுற்ற இரண்டகத் தமிழர்கள் தம் மொழியை மனுவாளர்களின் சமஸ்கிருதக் கலப்பிற்கு இடம் தந்ததால் பிறந்தவையே திராவிட மொழிகள் (தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, மராட்டியம் முதலியன) அதனால் உண்டானவர்கள் திராவிடர்கள். (ப.எண் 9)

சிந்துசமவெளியில் மொகன்-ஜோ-தரோ, ஹரப்பா நாகரீகங்களின் காலம் எது என்பதை உலகப் புகழ்பெற்ற அகழ்வாராய்ச்சி நிபுணர் ஏ.டி.புசால்கர் உறுதிப்படுத்தியுள்ளார். அது கி.மு. 2800 -2500 ஆண்டுக்காலம் என்று அங்கு கிடைத்த பொருட்களை வைத்து ஆய்ந்து அறிந்துள்ளார். இதையொட்டி சர்.ஜான் மார்ஷல் என்ற ஆய்வாளர் உறுதிப்படுத்தியுள்ள தகவல் மிக முக்கியமானது. சிந்து சமவெளி நாகரீகச் சின்னங்கள் மறைந்து - நாகரீகங்கள் மறைந்து, சுமார் 1000 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் ஆரியர்களின் ரிக் வேதகாலம் தொடங்குகிறது என்கிறார். ரிக் வேதத்தின் காலம் கி.மு. 1500 என்கிறார். ஆரியர்கள் படையெடுப்பின் போது சிந்துசமவெளி நாகரீகம் அழியாமல் இருந்தது என்றே வைத்துக் கொண்டாலும்கூட ஆரியர்களின் படையெடுப்புக்காலம் கி.மு. 1500 என்பது வரலாற்று உறுதி.

'ஆரியர்கள் வந்த காலத்திலே மொழியும் பண்பாடும் திரிந்து கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகள் தோன்றின. அவற்றைப் பேசுபவர்கள் திராவிடர்கள் ஆனார்கள்' என்று ஆவணம் கூறுவது உண்மையானால் இந்த மொழிகள் தோன்றிய காலம் என்ன? சிந்து சமவெளிக்காலமான கி.மு.2800 ஆம் ஆண்டுகளா? ரிக் வேதகாலமான கி.மு.1500 ஆம் ஆண்டுகளா? அப்படியானால் அந்த மொழிகள் அவ்வளவு தொன்மை வாய்ந்தவையா? கி.பி. 9 ஆம் நூற்றாண்டில்தான் கன்னட மொழியில் முதல் இலக்கண நூலான கவிராச மார்க்கம் உருவானது. கி.பி. 450க்குப் பிறகு தான் கன்னட எழுத்துக்கள் ஹல்மிதிக் கல்வெட்டுக்களில் இடம்பெற்றன. கி.பி. 575க்குப் பிறகு தான் தெலுங்கு எழுத்துக்கள் கல்வெட்டுக்களில் இடம்பெற்றன. 8 ஆம் நூற்றாண்டில்தான் மலையாளம் தோன்றியது. ஆனால் மெளரியப் பேரரசை அழித்து உருவான பார்ப்பன புஷ்யமித்ரசுங்கனின் ஆட்சியில் சுமதி பார்க்கவா என்ற பார்ப்பனரால் தொகுக்கப்பட்ட மனுஸ்மிருதியிலேயே திராவிடம், திராவிடர் என்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மனுவின் காலம் முதல் நூற்றாண்டு.

கி.பி. 150 இல் தொகுக்கப்பட்ட மனுஸ்மிருதியில் திராவிடர் என்பதற்கு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

துவிஜாதிகளுக்கு தன் ஜாதி ஸ்த்ரீகளிடத்தில் பிறந்த புத்திராளுக்கு விதிப்படி காலத்தில் உபநயன முதலிய ஸம்ஸ்காரம் இல்லாமல்போனால் காயத்திரி யில்லாதவரான விராத்திய ஜாதிகளாய்ச் சொல்லப்படுகிறார்கள். - அத்தியாயம் 10. சுலோகம் 20

விராத்திய க்ஷத்திரியனுக்கு அவ்வித க்ஷத்திரிய ஸ்த்ரீயிடத்தில் சல்லன் பிறக்கிறான். அவனுக்கு அவனுக்கு மல்லன், நிச்சுவிநடன், கரணன், கஸன், திராவிடன் என அந்தந்த தேசத்தில் வெவ்வேறு பெயர்களுண்டு. - அத்தியாயம் 10. சுலோகம் 22

பெளண்டாரம், ஒளண்டாரம், திராவிடம், காம்போசம், யவநம், ஸகம், பாரதம், பால்ஹிகம், நீசம், கிராதம், தரதம், கசம் இந்தத் தேசங்களையாண்டவர்களனைவரும் மேற்சொன்னபடி சூத்திராளாய் விட்டார்கள். - அத்தியாயம் 10. சுலோகம் 44

சுருக்கமாகச் சொல்வதன்றால் மனு விதிக்கும் கட்டளைகளை நிறைவேற்றாதவர்களையும், எதிர்ப்பவர்களையும், அடிமைகளாக்கப்பட்ட சூத்திரர்களையும் திராவிடர்கள் என்று மனு தர்மம் கூறுகிறது. நாம் மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நான் சுட்டிக்காட்ட விரும்புவது மலையாளமும், தெலுங்கும், கன்னடமும் தோன்றியிராத காலத்திலேயே திராவிடம், திராவிடர் என்ற சொற்கள் பார்ப்பன எதிர்ப்புக் கருத்திலேயே பொருள் குறிக்கப்பட்டுள்ளன. எனவே தென்னிந்திய மொழிகளைப் பேசியதால்தான், அந்த மொழிகளால்தான் திராவிடர்கள் உருவானார்கள் என்று நாம் தமிழர் ஆவணம் சொல்வது வரலாற்று மோசடி; கருத்துப் பித்தலாட்டம்; அறிவுக்குருட்டுத்தனம்.

சிந்துச்சமவெளியை இந்துச்சமவெளியாகவும் சரஸ்வதி பள்ளத்தாக்காகவும் மாற்ற முயற்சிக்கும் பார்ப்பன பண்டாரங்களுக்கும் உங்களுக்கும் நன்றாக ஒத்துப்போகிறது என்பதைத்தான் புரிந்து கொள்ளமுடிகிறது. திராவிடர் என்பதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம்தான் உங்கள் ஆவணத்திற்கு அடிப்படை. அதுவே பித்தலாட்டம் என்று ஆகிவிட்டது. இந்த பித்தலாட்டத்தை அடிப்படையாக வைத்து எழுதியிருக்கும் முழு ஆவணம் எந்த எண்ணத்தில் எத்தகைய அறிவில் எழுதப்பட்டிருக்கும் என்பதை படிக்காமலேயே அனைவரும் புரிந்துகொள்வர். அடுத்து மணி.செந்திலின் வரிகள்

10 பொருள்களை தன்னகத்தே கொண்டு விரியும் ஆவணத்தின் முதற் பொருளாய் விரிகிறது தோற்றுவாய். தமிழ்-தமிழர்-தொன்மை, பழந்தமிழ்நாடே இந்தியா, தமிழர் ஆளுகை முடிந்த காலம், மனுநெறியர் வருகையும், திராவிடமும், தமிழர் வீழ்ச்சி என்ற பல்வேறு தலைப்புகளில் தமிழர் வரலாற்றினை துல்லியமாக ஆயும் ஆவணம்

கூர்ந்து கவனியுங்கள். தோற்றுவாய்க்கு அடுத்து வந்துள்ள தலைப்பு. மனுநெறியர் வருகை(!). எப்போதும் பார்ப்பன வரலாற்று ஆசிரியர்கள்தான் இப்படி எழுதுவார்கள், பார்ப்பனர்களால் தான் இப்படி எழுத முடியும். சீமான் சொல்வது போல சுத்தத்தமிழனால் இப்படிப்பட்ட வரிகளை எழுத முடியாது. வரலாற்றுப் புத்தகங்களில் முஸ்லீம்கள் படையெடுப்பு என்று தலைப்பு இருக்கும். ஆரியர்களுக்கு மட்டும் ஆரியர் வருகை என்று இருக்கும். அதுபோல மனுநெறியர் வருகையாம்...இதுபோன்ற வரிகளே உங்கள் ஆவணம் பார்ப்பன நலன்களுக்காக எழுதப்பட்ட ஆவணம் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

கலைச்சொல் என்ற பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளவை தமிழ் இலக்கியங்களிலும், அகராதிகளிலும் இருப்பவற்றை அப்படியே போட்டுள்ளோம். மற்றபடி பார்ப்பனர்களை உயர்த்திக் காட்டவில்லை என்று மணி.செந்தில் கூறுகிறார்.

முதலில் அந்தணர் என்பதற்குப் பொருள் தரும் ஒரு திருக்குறளைச் சொல்லியிருக்கிறார். நாம் அதே திருக்குறளில் வேறொரு குறளைப் பார்ப்போம்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீத்தல் அரிது

இந்தக் குறளில் கூறப்பட்ட அறவாழி அந்தணன் யார்? பரிமேலழகர் அறவாழி அந்தணன் என்பது மகாவிஷ்ணுவைக் குறிக்கும் என்கிறார். பெரும்புலவர் அறிஞர் மயிலை.சீனி. வேங்கடசாமி தரும சக்கரத்தைச் சுழற்றும் மகாவீரர் என்கிறார்.

அந்தணர் என்ற சொல் சமண மதத்து அருகனைக் குறிக்கும், மகாவீரரையும் குறிக்கும், இவர்களுக்கு எதிரான விஷ்ணுவையும் குறிக்கும். நீங்கள் காட்டும் திருக்குறளிலேயே மாறுபட்ட பொருளில் அந்தணர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதே. அனைத்துப் பொருள்களையும் போடாமல் ஒரு பொருளை மட்டும் போடுவது எப்படி அறிவு நாணயமுடையதாகும்?

உங்களுக்குத்தான் பார்ப்பனத் தொல்காப்பியனைப் பிடிக்குமே. அவனே சொல்லியிருக்கிறான், அந்தணன் என்றால் காதலர்களுக்கு இடையே தூது செல்பவன். அதாவது புரோக்கர், மீடியேட்டர் என்று தொல்காப்பியம் 1139இல் இருக்கிறது. அந்தத் தொல்காப்பியனை வழிமொழிந்து அந்தணன் என்றால் இடைத்தரகன் என்று பொருள் என கலைச்சொல் விளக்கம் தந்திருக்கலாமே?

அதேபோல பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்தில் அந்தணர் என்பதற்கு ஒரு விளக்கத்தை பாலைக் கெளதமன் என்ற ஒரு பார்ப்பனப் புலவனே பாடியுள்ளான்.

ஓதல், வேட்டல் அவைபிறர்ச்செய்தல்

ஈதல் ஏற்றல் என்றுஆறுபுரிந் தொழுகும்

அறம்புறி அந்தணர் விழிமொழிந்து ஒழுகி

ஞாலம் நின்வழி ஒழுக, 

ஓதுதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல், பிச்சை எடுத்தல், மன்னனை ஏமாற்றிப் பிடுங்குதல் என்று எத்தனையோ பொருள்களில் அந்தணர்களைப் பாடியுள்ளான்.

இவைகளும் உங்கள் சங்க இலக்கியங்களில்தானே உள்ளன. வேதங்களைக் கொண்டு மக்களைப் பிரித்தவன், வேள்விகள் நடத்தி தமிழ்மன்னர்களைத் தரிசாக்கியவன், இடைத்தரகன், யாகங்களில் உயிர்களைக் கொன்று திண்பவன் என்று அந்தணர் என்ற சொல்லுக்கு எத்தனையோ பொருள்கள் உள்ளனவே. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு ‘ஈவுஇரக்கங்கொண்ட அறநெறியாளன்’ என்று நம் இனத்தின் முதன்மை எதிரியை உயர்த்திக் காட்டுவது ஏன்?

அடுத்து பார்ப்பான் என்றால் ஆய்வாளனாம், இளைஞனாம். 70 வயதைத் தாண்டிய ஜெயேந்திர சங்கராச்சாரி இந்த வயதிலும் சங்கரமடத்தில் நடத்தும் காமவிளையாட்டுக்களை வைத்து எல்லாப் பார்ப்பானையும் எப்போதும் இளைஞன் என்று எப்படிச் சொல்ல முடியும்? இதே பார்ப்பான் என்ற சொல்லுக்கு தொல்காப்பியம் என்னென்ன பொருள்களையெல்லாம் கூறுகிறது என்பதை தோழர் கொளத்தூர் மணி பேசுகிறார் கேளுங்கள்.

காமநிலை உரைத்தலும், தேர்நிலை உரைத்தலும்,

கிழவோன் குறிப்பினை எடுத்தனர் மொழிதலும்,

ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும்,

செலவுறு கிளவியும் செலவழுங்கிளவியும்

அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய. 

என்ன பொருள்? ஒருவரின் காம உணர்வை அவன் விரும்பும் பெண்ணிடம் கூறுவது, பிரிந்து சென்ற தலைவன் வந்து கொண்டிருக்கிற தேர் வரும் நிலைகளைச் சொல்வது (அதோ உன் காதலர் வந்து விட்டார், கார் ஹார்ன் சத்தம் கேட்கிறது பார் என்பது போல), மாட்டை வைத்து நல்லது கெட்டது கூறுவது (தலையாட்டி விட்டது, சாணம் போட்டுவிட்டது, சிறுநீர் கழிக்கிறது - இது நல்லது கெட்டது என்று கூறுவது) செலவுறு கிளவி - இப்போது செல்லலாம் - அப்பா வெளியூர் போயிருக்கிறார். அம்மா கோவிலுக்கு போயிருக்கிறார். அவள் தனியாகத்தான் இருக்கிறாள் என்பது போல - செலவழுங்கிளவி - செல்லக் கூடாது என்ற செய்தி கூறுதல் (அவன் அண்ணன் கல்லூரியில் இருந்து விடுமுறையில் வந்திருக்கிறான். இன்று அந்த பக்கம் போய்விடாதே - உதை தான் விழும் என்பது போல...) இவைகள் தானய்யா தொல்காப்பியர் பார்ப்பனருக்குரிய வேலைகள் எனக் கூறுகிறார்.

என்று கடந்த 2010 டிசம்பர் 24 அன்று சென்னை பெரம்பூரில் நடத்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றியுள்ளார்.

சுருக்கமாக பார்ப்பான் என்றால் - நாகரீகமாகச் சொல்ல வேண்டுமென்றால் இடைத்தரகன் என்று தெளிவாக விளக்கியிருக்கலாமே? அதென்ன ஆய்வாளன்? எல்லாவற்றையும் விடக் கூத்து என்னவென்றால் இந்த பிராமணன் என்பதற்கு ஆவணமும் மணி.செந்திலும் கொடுத்துள்ள விளக்கம்.

பிராமணன் - பேரமணன்:

சமண மதத்தினை சாராதவர்களை அமணர்கள் என அழைப்பது வழக்கம். பிராமணன் என்பதற்கு பெரிய அமணன் என்று பொருள்பட பேரமணன் என அழைப்பது பொருள். உடனே பிராமணர்களை புகழ்கிறார்கள் என்ற கச்சேரி.

என்று சொல்லியிருக்கிறார்.

மயிலை.சீனி.வேங்கடசாமியின் “சமணமும் தமிழும்” என்ற நூலிலிருந்து சுருக்கமாக...

சமண மதம் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது. அவை சுவேதாம்பர சமணம், திகம்பர சமணம், ஸ்தானசுவாசி சமணம் என்பவையாகும். இதில் சுவேதாம்பர சமணர்கள் வெள்ளை ஆடையை அணிபவர்கள். திகம்பர சமணர்கள் திசைகளையே ஆடையாகக் கொள்பவர்கள். அதாவது ஆடையின்றி நிர்வாணமாக இருப்பவர்கள். அம்மணமாக இருப்பதால் அம்மணர்கள், அமணர்கள் எனவும் அழைக்கப்பட்டனர்.

சமணமும் தமிழும் நூலைத் தவிர பல சங்க இலக்கியங்களும் அமணர் என்ற சொல்லால் சமணர்களைத்தான் குறிப்பிடுகின்றனவே அன்றி சமணர் அல்லாதவர்களை எந்த நூலும் குறிப்பிடவில்லை.

...வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை...

...நீற்று மேனிய ராயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே...

...நீல மேனி அமணர் திறத்துநின்
சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே...

மேற்கண்ட திருஞானசம்பந்தன் பாடிய தேவாரப்பாடலிலும் அமணர்கள் வேத வேள்வியை நிந்தனை செய்யும் சமணர்கள் என்றுதான் கூறப்பட்டுள்ளது. இப்படித் தெளிவாக அமணர்கள் என்பதற்கு அவர்கள் கூறும் சங்க இலக்கியங்களிலேயே விளக்கம் இருக்கும்போது அவற்றை அப்படியே மாற்றி தவறான பொருளில் விளக்கம் தருவதுதான் பார்ப்பனப் புத்தி; பார்ப்பனரை உயர்த்திக்காட்டும் அறிவுநாணயமற்ற இனத்துரோகச்செயல்கள். இவற்றைத் தான் பெரியார் தி.க சுட்டிக்காட்டிக் கண்டிக்கிறது.

நாம் தமிழரின் பித்தலாட்ட அரசியல் பிழைப்புக்கு புரட்சியாளர் அம்பேத்கரையெல்லாம் சாட்சிக்கு அழைப்பதுதான் வேதனையாக இருக்கிறது.

தேர்தலரசியலை புறக்கணிக்கும் அமைப்புகள் கூட தேர்தலரசியலால் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஆட்சியாளர்களிடம் தான் கோரிக்கை வைக்க வேண்டியிருக்கிறது என்பதான உண்மை நிலையை உணர்ந்த பின்னர்தான் அண்ணல் அம்பேத்காரின் “எல்லா துயரப் பூட்டுகளுக்கும் ஒரே சாவி- அது ஆட்சி அதிகாரம் தான்” என்கிற பொன்மொழிக்கான அர்த்தம் புரிந்தது.

அம்பேத்கர் “எல்லா துயரப் பூட்டுகளுக்கும் ஒரே சாவி- அது ஆட்சி அதிகாரம் தான்” என்று மொட்டையாகத் தனியாகச் சொல்லவில்லை. அதன் தொடர்ச்சியை சேர்த்து ஏன் சொல்லவில்லை. அதன் அடுத்த வரிகள் என்ன தெரியுமா?

“ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்படும் வகுப்பினருக்கு இன்றைய தேவை வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அரசாங்கமே. இடஒதுக்கீட்டின் மூலமாகவே இந்தப் பிரதிநிதித்துவ அரசாங்கத்தை அடைய முடியும்.”

என்பவைதான் அடுத்த வரிகள். அதைப் பதிவு செய்யாததற்குக் காரணம் நாம் தமிழர்கள் இடஒதுக்கீட்டையும் எதிர்த்து எழுதியிருக்கிறார்கள். ஆவணத்திலிருந்து:

“சாதிவாரி ஒதுக்கீட்டினால், தமிழ்ச் சாதிகளுக்கிடையே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முரண்பாடுகள் முற்றி வருகின்றன.”

அம்பேத்கர் வலியுறுத்தும் சாதிவாரிப் பிரதிநிதித்துவத்தை நாம் தமிழர்கள் எதிர்க்கிறார்கள். அதோடு மட்டுமல்ல. அம்பேத்கரைப் பற்றி இவர்கள் குறிப்பிடும் அந்த வரிகள் இடம் பெற்றுள்ள கட்டுரை எப்படி முடிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

“அரசியல் புரட்சி என்பது சமுதாயப்புரட்சி, சமயப் புரட்சிகளுக்குப் பின்னரே நடைபெறுகிறது என்பதே வரலாறு.”

- தோழர் ஏ.பி. வள்ளிநாயகம் தொகுத்த “அம்பேத்கரின் அறைகூவல்” என்ற நூல்

“எல்லா துயரப் பூட்டுகளுக்கும் ஒரே சாவி- அது ஆட்சி அதிகாரம் தான்” என்ற அம்பேத்கரின் வரிகள் சமுதாய, சமயப் புரட்சிகள்தான் முதற்பணிகள் என்று கூறித்தான் முடிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் குடிஅரசுத் தலைவராகவே வந்துவிட்டார். ஆனால் உள்ளூரில் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் தலைவர் நாற்காலியில் உட்காரக் கூட முடியாத நிலைதான் இருக்கிறது. எல்லா கிராமங்களும் சேரியாக, குடியானத் தெருவாக - ஊராகப் பிரிந்துதான் இருக்கிறது. எனவேதான் சொல்கிறோம் மக்கள் புரட்சி, சமுதாயப் புரட்சி நடக்காமல் வெறும் அரசியல் புரட்சி நடக்காது.

எனவே நீங்கள் அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக பெரியாரையும் அம்பேத்கரையும் சங்கத்தமிழ் இலக்கியங்களையும் உங்கள் வசதிக்கு மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம். நாம் தமிழர் சார்பாக மிக முக்கியமான சவாலாக மணி.செந்தில் விடுத்திருப்பது என்னவெனில்,

இந்த நாட்டில் பதியப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆவணங்களில் பெரியார் திக உள்ளிட்ட எந்த கட்சியின் ஆவணம் நாங்கள் இந்திய இறைமையாண்மைக்கு எதிராக இருக்கிறோம் என வெளிப்படையாக அறிவித்து இருக்கிறது? துணிவிருந்தால் சொல்லுங்கள். பிறகு எதிரே நில்லுங்கள். ஆனால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருக்கிறார் என 5 முறை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை நினைவிற் கொள்க. இந்திய தேசியத்திற்கு சீமான் பகை சக்தியா, நட்பு சக்தியா என்பதற்கு அவர் பேசும் ஒவ்வொரு கூட்டமும் சாட்சி.

'நாங்கள் அரசியலுக்குப் போய்விட்டோம். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா..' என்று நாம் தமிழர்கள் சொல்லிவிட்டால் நிச்சயமாக அவர்களைப் பாராட்டலாம். அதைவிட்டு விட்டு அறியாமையில் பேசிக் கொண்டிருப்பது ஏன் என்று புரியவில்லை. முதலில் பெரியார் தி.க ஒரு அரசியல் கட்சி அல்ல. அதைக் கூடவா ஒரு மாநிலப் பொறுப்பாளருக்கு விளங்க வைக்கனும்?

பெரியார் தி.க அரசியல் கட்சி இல்லை என்பதால் அதை எவனிடமும் பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அதனால் எவனுக்கும் அடிமைச்சாசனம் எழுதித்தர வேண்டிய அவலமும் இல்லை. மற்ற அரசியல் கட்சிகளைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. இந்திய இறையாண்மைக்கு எதிராக நீங்கள் முழங்க வேண்டாம். அப்படி எல்லாம் உங்களை யாரும் நம்பவில்லை. தேவையே இல்லாமல் உங்கள் தோழர்களை இந்திய அரசுக்கு ஏன் அடிமை ஆக்கினீர்கள் என்றுதான் கேட்கிறோம். இந்திய இறையாண்மைக்குக் கட்டுப்படுவேன் என்று உறுதிமொழி எடுக்க மிரட்டியது யார்? யாரும் மிரட்டவில்லை என்றால் நீங்களாகவே வலிந்து அதைச் சொன்னது ஏன்?

'ஆவணத்தில் இந்திய இறையாண்மையைக் கேள்வி கேட்டவன் யார்? எதிரே நில்லுங்கள்' என்கிறார். “நமது குறிக்கோள்” என்ற தனது ஆவணத்தில் பதிவு செய்தவர் பெரியார். இதோ பெரியாரின் அந்த ஆவணத்திலிருந்து...

1. திராவிட நாடு (சென்னை மாகாணம்) சமுதாயம், பொருளாதாரம், தொழில்துறை, வியாபாரம் ஆகியவற்றில் பூரண சுதந்திரமும், ஆதிக்கமும் பெற வேண்டும்.

2. திராவிட நாடும் திராவிட நாட்டு மக்களும் திராவிட நாட்டவரல்லாத அந்நியர்களின் எந்தவிதமான சுரண்டல்களிலிருந்தும், ஆதிக்கத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டுக் காப்பாற்றப்படவேண்டும்.

இப்படித் தொடங்குகிறது பெரியாரின் ஆவணம். தொடர்ச்சியாக...

மேற்கண்ட இலட்சியங்களை ஒப்புக்கொண்டு, அவை நிறைவேறுவதற்காகத் திராவிடநாடு இந்திய (மத்திய) அரசாங்க ஆதிக்கத்திலிருந்து விலகித் தனிச் சுதந்திரத் திராவிட நாடாக ஆகவேண்டியது மிகவும் முக்கியமானது என்கின்ற திராவிட நாட்டுப் பிரிவினைத் தத்துவத்தை ஏற்றுக் கழக விதிமுறைகளுக்கு இணங்கிக் கையொப்பமிட்ட 18 வயது கடந்த ஆண், பெண் எவரும் திராவிடர் கழகத்தில் அங்கத்தினராக உரிமையுண்டு.

மிக முக்கிய அறிவிப்பு ஒன்றும் இந்த ஆவணத்தில் உண்டு. அது தான் திராவிடர் விடுதலைப்படை.

திராவிடரின் விடுதலைக்காகப் போரிடவும், சகலவித நடவடிக்கைக்கும் தயாராக இருக்கவும் இசையும் ஒரு மாகாண திராவிடர் விடுதலைப் படை (Dravidian Freedom Force) அமைக்க வேண்டும். அதற்கு ஊர்தோறும் கிளைப்படைகள் அமைக்க வேண்டும்.

இவ்வாறு 1945 ஆம் ஆண்டு மே 29 ஆம் நாள் திருச்சியில் அறிவிக்கிறார். அதன் பிறகு 1948 மே 9 ஆம் நாள் தூத்துக்குடியிலும் மேற்கண்டவற்றையே தீர்மானமாக அறிவிக்கிறார். தொடர்ந்து சாகும்வரை திராவிட நாடு (சென்னை மாகாணம்) விடுதலை, தமிழ்நாடு விடுதலை என மக்களைத் தயாரித்துக் கொண்டும் போராடிக்கொண்டும் இருந்தார் பெரியார்.

நாம் தமிழர்களே, வரலாற்றைப் படியுங்கள். இலக்கியங்களைப் படியுங்கள். பார்ப்பனர் அல்லாத, பார்ப்பன அடிமைகள் அல்லாதவர்களிடம் படியுங்கள். ஏதாவது குப்பைகளைப் படித்துவிட்டு வெத்துச் சவடால் அடிக்காதீர்கள். 'ஆவணத்தில் இந்திய இறையாண்மையை எதிர்த்தவர்கள் எதிரே நில்லுங்கள்' என்கிறார் மணிசெந்தில். பெரியாரின் அந்தக் கருத்துக்கள் தான் பெரியார் தி.க.வுக்கு ஆவணம். எதிரே நிற்கிறோம். பதில் சொல்லுங்கள். தமிழ்நாட்டில் எண்ணற்ற தமிழ்தேசியக்குழுக்கள் உள்ளன. அவர்கள் எல்லோருமே இந்திய இறையாண்மைக்கு எதிராக எதையும் செய்யாவிட்டாலும் ஆவணம் போட்டு வைத்திருக்கிறார்கள். த.தே.பொ.க, த.தே.வி.இ, த.ஒ.வி.இ இன்னும் எத்தனையோ இயக்கங்கள் உள்ளன எதிரே. பதிலைச் சொல்லுங்கள். திராவிடம் தடுக்கிறது என ஓடி ஒளிய வேண்டாம்.

சீமான் 5 முறை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாராம். அதனால் இந்தியாவுக்கு எதிரானவராம். அத்தனை முறையும் ஏன் விடுதலை செய்தார்கள்? இந்திய இறையாண்மைக்கு அவரால் எந்தப் பாதிப்பையும் உண்டு பண்ண முடியாது என்பதால் தானே விடுதலை செய்தார்கள்? அவரால் இந்திய இறையாண்மைக்குப் பாதிப்பு எனில் நிச்சயம் அவர் இன்றுவரை சிறையில்தானே இருந்திருக்க முடியும்? சீமான் இந்திய தேசியத்திற்கு எதிரானவரா? ஆதரவானவரா? என்பதற்கு அவர் பேசும் கூட்டங்களே சாட்சி என முடிக்கிறார் மணிசெந்தில். அப்புறம் எதற்கு ஆவணம்? உங்களை விட விரிவாக, ஆழமாக, அதிகமாக பெரியார் தி.க கூட்டங்களில் தனித்தமிழ்நாடு முழங்கப்படுகிறதே?

இத்தனை தமிழ்த் தேசியக் குழுக்கள் ஆவணத்தில் இந்தியாவை எதிர்க்கும் போது, 'ஈழத்தை நான் தான் வாங்கித் தரப்போகிறேன்' என வெத்து வேட்டு வெடித்துக் கொண்டிருக்கும் நீங்கள் ஏன் எதிர்க்க முடியவில்லை? எங்கே கோளாறு? அரசியலுக்குப் போனால் அப்படிச் சொல்லமுடியாது; புரிகிறது. அதைச் சொல்லக்கூட முடியாத அரசியலில் உங்களுக்கு என்ன வேலை? இந்தியாவை எதிர்க்கிறோம் என்று சொல்லக்கூட இயலாத அரசியலில் இறங்கி, நின்று, வென்று நீங்கள் ஈழத்தை வாங்கித்தரப் போகிறீர்களா? தி.மு.க, அதி.மு.க.வுக்குப் போட்டியாக சம்பாதிக்க முடியும். பதவிச்சுகங்களை அனுபவிக்க முடியும் அவ்வளவுதானே? அதைத்தான் உங்கள் ஆவணம் உறுதிப்படுத்துகிறது.

- அதிஅசுரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

51 comments

51
தமிழ்மணி
இதையெல்லாம் படித்துப் புரிந்து கொள்ளுமளவிற்கா அண்ணனின் தம்பிகள் இருக்கிறார்கள்? அடுத்த முதல்வர் கனவில் இருப்பவர்களுக்கு இது எதுவும் புரியாது?
Ravi
பெரியார் உளறியதைவிட மிக அதிகமாக உளரும் கூட்டம் திமுக என்றுதான் நினைத்தேன். ஆனால் பெ.தி.க என்று இன்று கண்டேன். உங்களுக்கு என்னதான் பிரச்சனை? இல்லாத பார்ப்பானை சாடுவதாக வியாபாரம் செய்கின்றீர்கள். உங்கள் பெரியாரே வேண்டும் போது பார்பானத்தான் கலந்தாலோசித்தார். நீங்கள் போற்றும் அம்பேத்காரை படிக்க வைத்தவர் ஒரு பார்பானரே. வெளிநாடு செல்ல உதவியதும் ஒரு பார்பனரே. தன்னை படிக்க வைத்த பார்பனரை நன்றியுடன் நினைத்து தன் பெயரில் அம்பேத்கர் (இது அந்த பார்பனரின் பெயர்) என்று பெயரும் சேர்த்துக் கொண்டார். மேலும் தனது இரண்டாவது மனைவியாக ஒரு பாப்பாத்தியைத்தான் அவர் மணந்து கொண்டார். ஆக நீங்கள் காட்டும் உதாரணங்கள் எல்லாம் செல்லாது. தமிழர் முன்னேற முதலில் நீங்கள் தமிழரை (அவர் எந்த ஜாதியாக இருந்தாலும்) மதிக்க கற்றுக் கொள்ளூங்கள். கடந்து போன காலத்தைப் பற்றி, அதுவும் சுமார் ஆயிரம் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முந்தைய விஷ்யங்களை எந்த வித ஆதாரங்களும் இல்லாதவைகளை எடுத்து வைத்துக் கொண்டு புலம்பாதீர்கள். மதரீதியாக ஜாதிரீதியாக நீங்கள் மக்களை புறந்தள்ளி சென்றால் மொழி அடிப்படையில் நீங்கள் கேட்கும் தேசியம் கிடைக்காது. சுடுகாட்டில்தான் முடியும். இன்று திராவிடம் என்று ஒரு மண்ணும் கிடையாது. மலையாளி இல்லாத கன்னடன் இல்லாத தெலுங்கன் இல்லாத ஒரு திராவிடம் இருக்குமா? அப்படியென்றால் திராவிடம் தமிழ்தானா? அப்படியென்றால் உங்கள் பெரியாரே திராவிடர் இல்லையே? அவர் கன்னடர் ஆயிற்றே? தமிழை காட்டு மிராண்டி மொழி என்று சொன்ன கன்னடர் தன் கன்னடத்தை அப்படி சொல்லவில்லையே. என்ன எழவுக்கு பெரியார் திராவிட கழகம் என்று வைத்தூள்ளீர்கள்.? பெங்களுரில் உங்களின் ஒரு கூட்டம் நடக்குமா? ஆந்திராவில் ஒரு கூட்டம் உண்டா? ஆக ஏமாந்தவன் தமிழந்தான். அவன் தலையில் உங்கள் பெரியார் மிள்காய் அரைத்து 60 வருடம் குப்பை கொட்டியது போல நீங்களும் குப்பை கொட்டுகிறீர்கள். போஙக்கப்பா போய் கொஞ்சம் உருப்படியா உழைத்து சம்பாதியுங்கள். எங்களுக்கு ஒரு வீரம்ணியே தாங்கல....நீங்கள் வேறு...
தேசியன்
கூட்டம் போட்டு பேசுகிறோம். தனித் தமிழ்நாடு பேசுகிறோம் பெரியாரின் பேச்சே ஆவணம் என்கிறது பெரியார் தி.க. உண்மையில் பெரியார் திராவிடர் கழகம் தோன்றிய பிறகு கொள்கை ஆவணம் என்று ஒன்று வெளியிடப்பட்டிருக்குமேயானால் நாம் தமிழர் கட்சியே உருவாகியிருக்காது. பெரியார் திக தோன்றிய நாள் முதல் ஆவணம் வெளியிடப்பட வேண்டும் என்று கூறப்பட்டாலும் சில தலைகள் சிறைக்கு போக அஞ்சி தடுப்பதை விரும்பாததை சில திராவிட ஜீவிகள் மறைப்பதை அதி அசுரன்பகிரங்கமாக எழுத முடியுமா? நாம் தமிழரின் பிறப்புக்கு காரணமே பெரியார் தி.க.வின் நேர்மையற்ற வெளிப்படையற்ற பொறுப்பற்ற செயல்பாடுதான்
Pasu.Gowthaman
நான் ஆழமான ஆய்வுகளுக்குள் செல்லவில்லை தோழர் அதிஅசுரன் போல.
காரணம் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் ஆத்திரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி, முட்டியை உயர்த்துவார்கள்.
ஆகவே நான் பெரியார் அவர்கள் கேட்ட கேள்வி ஒன்றினை மீண்டும் ‘ தூசி தட்டி ‘ எடுத்து ‘ எல்லாத் தமிழர்கள் ‘ முன்பும் வைக்கின்றேன். ‘ எந்தத் தமிழர்கள் ‘ வேண்டுமானாலும் நாணயத்துடன் பதில் சொல்லட்டும்.

“ தமிழர்களே !
அட, மானங்கெட்ட தமிழர்களே !
முதன் முதலில் தமிழனுக்கு
உத்தியோகத்தில் உரிமை வேண்டுமென்று
குரல் கொடுத்துப் போராடியவன்
ஒரு மலையாளி டி.எம்.நாயர்
அதற்காக ஒரு இயக்கத்தையே உண்டாக்கி
தன் பொருளையெல்லாம் இழந்தவன்
ஒரு தெலுங்கன் சர்.பிட்டி தியாகராயர்
தேவடியாள் மகன், தாசி மகன் என்று
இழிவு செய்யப்பட்ட தமிழர்களுக்காக
போராடியவன் கன்னடியனாகிய நான்
உங்கள் தமிழர் தலைவர்கள் எல்லாம்
அப்போது எங்கே போயிருந்தார்கள் ? ..... “

பெரியாரின் இந்தக் கேள்விக்கு இன்றுவரை
எந்தத் தமிழர்களிடமிருந்தும்,
எந்தத் தமிழ் தேசியர்களிடமிருந்தும்
நாணயமான, யோக்கியமான பதில் இல்லை.

வாய் இருப்பதால் எவனும் எதுவும் பேசிவிடலாம்தான்,
பேனா இருப்பதால் எவனும் எதுவும் எழுதிவிடலாம்தான்
மணி செந்தில் உட்பட.
இறையாண்மைக்கு எதிராக நின்றதால்தான்
‘ உங்க மூத்தவர் ‘ உள்ளே போனார்.
கோவையில் இராணுவ தளவாடங்களை மறித்தது
’விஜய’ த்தோடு செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்போல
இந்திய தேசியத்தோடு செய்துகொண்ட ஒப்பந்தமா?
ஏகாந்தன்
தமிழ இனதுரோகிகள் திரா(விடம்) பேசுபவர்கள் என்று தமிழர்கள் புரிந்துகொள்ள தொடங்கிவிட்டதின் அடையாளமே நாம் தமிழர்கட்சியின் ஆவணம். இதனக் கண்டு அதிஅசுரன் போன்ற திரா(விடம்) என்னும் பெரியார் போதையை முழுமையாக ஏற்றிக்கொண்ட திராவிடர்கள் உளற ஆரம்பித்துவிட்டனர்.
ஏகாந்தன்
"மனு விதிக்கும் கட்டளைகளை நிறைவேற்றாதவர்களையும், எதிர்ப்பவர்களையும், அடிமைகளாக்கப்பட்ட சூத்திரர்களையும் திராவிடர்கள் என்று மனு தர்மம் கூறுகிறது. நாம் மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நான் சுட்டிக்காட்ட விரும்புவது மலையாளமும், தெலுங்கும், கன்னடமும் தோன்றியிராத காலத்திலேயே திராவிடம், திராவிடர் என்ற சொற்கள் பார்ப்பன எதிர்ப்புக் கருத்திலேயே பொருள் குறிக்கப் பட்டுள்ளன. எனவே தென்னிந்திய மொழிகளைப் பேசியதால்தான், அந்த மொழிகளால்தான் திராவிடர்கள் உருவானார்கள் என்று நாம் தமிழர் ஆவணம் சொல்வது வரலாற்று மோசடி. கருத்துப் பித்தலாட்டம். அறிவுக்குருட்டுத்தனம்.".....அய்யா அதிஅசுரன் அவர்களே
திருஞானசம்பந்தனை திராவிடசிசு என்று சொல்வது ஏன்?.ஒருவேளை பெரியாரின் தளபதி வீரமணி திராவிடச்செல்வி ஜெயலலிதாவிற்கு கொடுத்த “சமூக நீதிகாத்த வீராங்கனை” என்ற பட்டம் போன்றதோ? ..அய்யா அதி அசுரரே உங்களின் அதி மேதாவித்தனத்தை இங்கே காட்டவேண்டாம்.
பரத்
//ஆவணத்தில் இந்திய இறையாண்மையை எதிர்த்தவர்கள் எதிரே நில்லுங்கள் என்கிறார் மணிசெந்தில். பெரியாரின் அந்தக் கருத்துக்கள் தான் பெரியார் தி.க.வுக்கு ஆவணம். எதிரே நிற்கிறோம். பதில் சொல்லுங்கள். தமிழ்நாட்டில் எண்ணற்ற தமிழ்தேசியக்குழுக்கள் உள்ளன. அவர்கள் எல்லோருமே இந்திய இறையாண்மைக்கு எதிராக எதையும் செய்யாவிட்டாலும் ஆவணம் போட்டு வைத்திருக்கிறார்கள். த.தே.பொ.க, த.தே.வி.இ, த.ஒ.வி.இ இன்னும் எத்தனையோ இயக்கங்கள் உள்ளன எதிரே. பதிலைச் சொல்லுங்கள். திராவிடம் தடுக்கிறது என ஓடி ஒளிய வேண்டாம்//

த.தே.பொ.க., த.ஓ.வி.இ. போன்ற தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு கட்சி ஆவணம் என்று தனியே உள்ளது போல், இந்திய இறையாண்மைக்கு எதிராக நிற்கிறோம் என்கின்றனரே பெரியார் தி.க.வினர்.. உங்களுக்கு அறிவிக்கப்பட்ட கட்சி ஆவணம் அல்லது கொள்கை அறிக்கை என ஒன்றுண்டா?

நாம் தமிழர்களாவது தங்களது கட்சியின் பகிரங்கப்படுத்தியிருக்கிறார்கள். நீங்களோ பெரியாருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, கட்சி ஆவணம் கூட வெளியிடாமல் இருப்பதை மறைப்பது ஏன்?

இந்திய இறையாண்மைக்கு எதிராக த.தே.பொ.க., த.ஓ.வி.இ., உள்ளிட்ட அமைப்புகள் எதையும் செய்யவில்லை என்று கூறும் பெ.தி.க., கூட்டம் நடத்துவதைத் தவிர இந்திய இறையாண்மைக்கு எதிராக என்ன செய்து கிழித்தது எனக் கூறமுடியுமா..?
அதி அசுரன்
//இந்திய இறையாண்மைக்கு எதிராக த.தே.பொ.க., த.ஓ.வி.இ., உள்ளிட்ட அமைப்புகள் எதையும் செய்யவில்லை என்று கூறும் பெ.தி.க., கூட்டம் நடத்துவதைத் தவிர இந்திய இறையாண்மைக்கு எதிராக என்ன செய்து கிழித்தது எனக் கூறமுடியுமா..?//

தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு விடுதலைக்கு உருப்படியாக யாரும் எதையும் செய்யவில்லை. பெ.தி.க உட்பட. ஆனால் பெரியார் தி.க கூட்டமாவது தொடர்ந்து நடத்துகிறது. அவ்வளவுதான்.
பரத்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
'ஆரியர்கள் வந்த காலத்திலே மொழியும் பண்பாடும் திரிந்து கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகள் தோன்றின. அவற்றைப் பேசுபவர்கள் திராவிடர்கள் ஆனார்கள்' என்று ஆவணம் கூறுவது உண்மையானால் இந்த மொழிகள் தோன்றிய காலம் என்ன?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அப்படியெனில், தோழர் அதிஅசுரன் அவர்களே, மலையாள, கன்னட மொழிகள் தோன்றியது தான் எப்படி? சமற்கிருதமும் தமிழும் திரிந்து தானே இம்மொழிகள் தோன்றின. இதை தங்களால் பகுத்தறிவோடு தாங்கள் மறுக்க முடியுமா?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@மெளரியப் பேரரசை அழித்து உருவான பார்ப்பன புஷ்யமித்ரசுங்கனின் ஆட்சியில் சுமதி பார்க்கவா என்ற பார்ப்பனரால் தொகுக்கப்பட்ட மனுஸ்மிருதியிலேயே திராவிடம், திராவிடர் என்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பார்ப்பான் தான் திராவிடம் என்ற சொல்லை முன்மொழிந்தான் என்பதை எப்படியோ ஒத்துக் கொண்டீர் என்பதில் மகிழ்ச்சி. பார்ப்பான் தமிழரை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக வேறு பெயரிட்டு அழைத்தால், அந்த இழிவுப் பெயரையே தங்கள் இனப்பெயராக கருதுவது தான் பகுத்தறிவா?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பெரியாரின் அந்தக் கருத்துக்கள் தான் பெரியார் தி.க.வுக்கு ஆவணம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடேங்கப்பா.. அதுக்குதான் இந்த பில்டப்பா..? பெரியாரின் 1945 ஆம் ஆண்டு மே 29 ஆம் நாள் திருச்சி தீர்மானம் தான் எங்கள் இயக்கத்தின் குறிக்கோள் என்று பெ.தி.க.வினர் எத்தனை கூட்டங்களில், அறிக்கைகளில் சொல்லியிருக்கிறீர்கள்? சும்மா ஒரு கட்டுரையில் போகும் போது அப்படியே அடித்துவிட்டு செல்கிறீர்.. நடக்கட்டும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
உங்களை விட விரிவாக, ஆழமாக, அதிகமாக பெரியார் தி.க கூட்டங்களில் தனித்தமிழ்நாடு முழங்கப்படுகிறதே
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சொல்லவேயில்ல..?!!

சாதி ஒழிப்பை வேலைத்திட்டமாக உள்ளடக்கிய தனித்தமிழ்நாட்டை முன்வைத்து, தமிழ்த் தேசிய இயக்கங்கள் பேசினால் கூட, “இங்கு எவன்டா தமிழன் என்று சாதிப் பெயர்களை சொல்லி முதலில் அதை ஒழியுங்கள்” என்று கூறி, தனித்தமிழ்நாடு என்ற இலட்சியத்தை மறக்க வேண்டுமென திசைத்திருப்பும் முதல் ஆளே பெ.தி.க.வினர் தான்.

பார்ப்பனர் தான் அந்தணன் என்போர் பின்வரும் கட்டுரையைப் படித்துப் பார்க்க ஒரு கட்டுரை.
http://www.keetru.com/anaruna/jul06/mathivaanan.php

பெ.தி.க. நண்பர்களே.. உங்களுக்கு சில கேள்விகள்..

தோழர் கொளத்தூர் மணி பேசுகிறார் கேளுங்கள் என்று ஒன்றை இக்கட்டுரையில் கூறுகின்றீரே.. தொல்காப்பியன் தான் பார்ப்பன அடிமையாச்சே.. அவன் போய் பார்ப்பான இந்தளவுக்கு கீழ்மைப்படுத்தி பேசியிருக்கிறான் என உறுதியாக நம்பும் தோழர் கொளத்தூர் மணி, “தொல்காப்பியரை பார்ப்பன அடிமை” என்று கூறுவது புளுக்குமுட்டை தானா? ஒருபுறத்தில், தொல்காப்பியன் கூறியதை ஆவணமாக காட்டுவதும், மறுபுறத்தில் அவனை பார்ப்பன அடிமை என்று பேசுவதும் தான் பெ.தி.க.வினரின் பகுத்தறிவோ?

பெ.தி.க. தோழர்களே, நாம் தமிழர் கட்சியினர், ஓட்டுப் பொறுக்கி அரசியலில் தான் இறங்கப் போகிறோம் என்று என்றைக்கோ அறிவித்து விட்டவர்கள். ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளின் அறிக்கையில், பார்ப்பானையும், இந்தியத்தையும் எதிர்த்துப் பேசுபவர்களை தேடுவது வீணற்றது தான். ஆனால், தனித்தமிழ்நாடு என்று கூட்டங்களில் விரிவாக, ஆழமாக, அதிகமாக கூட்டங்களில் முழங்குவதாக கூறும் பெ.தி.க.வினர், இந்திய இறையாண்மைக்கு எதிராக தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று கூறும் பெ.தி.க.வினரே..

இந்திய அரசு நடத்துகின்ற தேர்தல்களில் அவ்வப்போது ஏதாவதொரு ஓட்டுப் பொறுக்கிக் கட்சியை ஆதரித்து வருவது தான் உங்களது “இந்திய இறையாண்மை”க்கு எதிரான செயல்பாடா? தனித்தமிழ்நாடு என்று கூட்டங்களில் முழங்கிக் கொண்டு, ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளையும் தேர்தல்களில் ஆதரித்துக் கொண்டிருப்பது தான் பெ.தி.க. இலட்சியப்பற்றா?

நாம் தமிழர் கட்சி ஓட்டுப் பொறுக்கிக் கட்சியாகப் போகிறது என்று தங்களுக்கு தெரிந்த போது கூட, தங்கள் தலைவர் கொளத்தூர் மணி, தங்க ஊசி அறிக்கையில் என்ன சொன்னார் தெரியுமா? “விஜய்காந்த் போன்ற குழப்பவாதிகளைவிட சீமான் போன்றவர்கள் அரசியல் களத்துக்கு வரட்டுமே என்ற எண்ண ஓட்டமும் நமக்கு உண்டு” என்று சொன்னார்.

ஒருவன் எந்த இனம் என்பதை அவன் பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கிறீர்களா அல்லது நடைமுறையின் படி தீர்மானிக்கிறீர்களா? கருணா என்ற கருங்காலி ஈழத்தமிழ் இனத்தில் பிறந்தவன் தான் எனில், அவன் ஈழத்தமிழினத்தைச் சேராதவர் என்று அறிவிப்பது தான் பகுத்தறிவா? அதேபோல், ஒருவனை திராவிடர் என்று உருவகப்படுத்தி, அவனை பார்ப்பனரல்லாதவன் என்கிறீரே.. அவ்வாறு ஒரு இனத்தை அடையாளப்படுத்துவது அறிவியல் முறைப்படி சரிதானா?
vilamby
---------------------------------------------------------------------------------------------
“ தமிழர்களே ! அட, மானங்கெட்ட தமிழர்களே ! முதன் முதலில் தமிழனுக்கு உத்தியோகத்தில் உரிமை வேண்டுமென்று குரல் கொடுத்துப் போராடியவன் ஒரு மலையாளி டி.எம்.நாயர் அதற்காக ஒரு இயக்கத்தையே உண்டாக்கி தன் பொருளையெல்லாம் இழந்தவன் ஒரு தெலுங்கன் சர்.பிட்டி தியாகராயர். தேவடியாள் மகன், தாசி மகன் என்று இழிவு செய்யப்பட்ட தமிழர்களுக்காக போராடியவன் கன்னடியனாகிய நான். உங்கள் தமிழர் தலைவர்கள் எல்லாம் அப்போது எங்கே போயிருந்தார்கள் ? .....----------------------------------------------------------------------------------------

மேற்குறிப்பிட்ட பேச்சு பெரியாரின் பேச்சு என்று Pasu.Gowthaman என்றவர் எழுதி தமிழர்களின் பதிலைக் கேட்கின்றார். தமிழர்களை பெரியார் திட்டுவது போலவே இவரும் அவன், இவன் என்றே திட்டுகிறார். ------------

இங்கே நாம் காணவேண்டியவை சில. முதலில் பெரியாரின் நாகரிகமற்ற, கீழ்த்தரமானப் பேச்சு. இவன் பெரியாரல்ல! சிறியோன். கிடக்கட்டும்!-------------

இந்தச் சிறியோன் சொன்னது போல இங்கே வாழவந்த மலையாளியோ, தெலுங்கனோ, கன்னடனோ தங்களுக்காக உழைத்துக் கொண்டார்களே தவிர தமிழருக்காக அல்ல, அல்லவே அல்ல.---------------

தியாகராசர் 10,000 ரூபாய் ஒரு கோயில் திருவிழாவுக்குக் கொடுக்கிறார். ஆனால், மேடையில் அவருக்கு இடமில்லை. ஆனால், அவரிடம் வேலை பார்க்கும் பார்ப்பான் மேடையில் அமர்ந்திருந்தான். வந்ததே கோபம் தியாகராசருக்கு! உடனே தமிழனுக்காக அவர் கச்சைகட்டி வேலை செய்யத் தொடங்கினாராம். -----------------------------

ஈ.வெ.ராமசாமி தனது அப்பன் ஒரு பிராமணச் சிறுவனிடம் கைகட்டி, மன்னிப்புக் கேட்டு பேசியது பொறுக்காது தானே இந்தச் சிறியோன் வெகுண்டெழுந்தார். உடனே தமிழனுக்காக அவர் கச்சைகட்டி வேலை செய்யத் தொடங்கினாராம். ----------------------------------------

ஐயா, பெரியோன் என்ற சிறியோனே! காதில் பூ சுற்றியதெல்லாம் போதும். இப்போது நீ இப்படிப் பேசியிருந்தால் செறுப்படி கிடைத்திருக்கும் செறுப்படி!
-------------------------

பார்ப்பான் பார்ப்பான் என்று பார்ப்பாரப் பூச்சாண்டி காட்டி நீ செய்த கீழறுப்பு வேலை இப்போது கருணாநிதி என்ற உனது வாரிசின் வழியாக அம்பலமாகி விட்டது. விழித்துக் கொண்டான் தமிழன்.
vilamby
ஆரியன் - பிராமணன் - பார்ப்பனன் - மனுவாதி
-------------------------------------------------------------------------

தாங்கள் பிராமணர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள், தாங்களே உருவாக்கிய பிரம்மன் என்ற ஒரு கடவுளின் தலையில் தோன்றியதாகவும், கடைநிலை மக்கள் என்று அவர்களால் வர்ணிக்கப் பட்டவர்கள் பிரம்மனின் பாதத்தில் பிறந்தவனாகவும் சொல்லிக் கொண்டனர்.

நால்வருணக் கோட்பாட்டை ஏற்காத நாம், அவன் படைத்த பிரம்மனையும் ஏற்கவில்லை. எனவே நாம் அவர்களை பிராமணன் என்று அழைப்பதில்லை.

தமிழகத்தில் அவர்கள் தங்களை பார்ப்பனர் என்று அழைத்துக் கொண்டனர். ஆனால், அது ஒரு தமிழ்ப்பெயர். ஓலைச்சுவடிகளைப் படித்து மக்களுக்கு பொருள் சொல்லும் தொழிலைச் செய்தவர்கள் ஆதியில் தமிழர்களே!

அவர்கள் கணியர்களும் கூட. வாணிலைகளை "ஆய்ந்து" சுவடிகளின் மூலமாக எதிர் காலமுறைப்பவர்கள்.

பொதுவாக ஓலைச்சுவடிகளைப் "பார்த்து" சொல்வதால் அவர்களுக்கு பார்ப்பனர் என்று பொருள்.

இது நோவாத வேலை என்பதால் இந்தத் தொழிலை ஆரியர் கைப்பற்றி, அதிலிருந்த தமிழர்களை அவர்கள் வெளியேற்றினர். உண்மை இது தான்.

எனவே, அவர்களைப் பார்ப்பனர்கள் என்று அழைப்பதும் தவறு.

ஆரியர் என்றால் உயர்ந்தவர் என்று அவர்கள் சொன்னதால் நாம் அவர்களை ஆரியர் என்றும் அழைப்பதில்லை.

பிறகு எப்படி அவர்களை அழைப்பது?

அவர்கள் தங்களுக்கொரு நீதி, மற்றவர்க்கொரு நீதி என்று எழுதி வைத்துக் கொண்டு நம்மை ஏய்த்ததால் அவர்களை, அந்நூலின் பெயராலேயே அழைப்பதே பொருத்தம்.

ஆகவே, விடயம் தெரிந்த தமிழறிஞர்கள் அவர்களை

மனுவாதி

என்று அழைப்பது வழமை. அதுவே, நாம் தமிழர் ஆவணத்திலும் அது வெளிப்பட்டுள்ளது.
thiravidan
பெரியாரை பெரிதும் நேசிக்கும் நான், அவரும் நிச்சயம் விமர்சனத்திற்கு உட்பட்டவரே என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், தமிழ் தேசியவாதிகளாக தங்களைக் கூறிக்கொள்ளும் சனாதன சாதியவாதிகள், சீமான் போன்ற பார்ப்பன ****** மற்றும் அவரது எடுபிடிகள் மற்றும் பெரியாரின் திராவிட கருத்தாக்கத்தை விமர்சிக்கும் பேர்வழிகள், ஒரு சில விஷயங்களை கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். பல நூற்றாண்டுகளாக, நாய்களாகவும், மானமிழந்த கழுதைகளாகவுமே வாழ்ந்து வந்த தமிழர்களிடையே, சுயமரியாதையையும், தன்மானத்தையும், பகுத்தறிவையும் ஊட்டிய மாமனிதந்தான் ராமசாமி பெரியார். கிட்டத்தட்ட 70 ஆண்டுகள், யாருமே நினைத்துப்பார்க்க முடியாத ஒரு நீண்ட நெடிய போராட்டத்தை அவர் நடத்தினார். இன்று பெரியாரை வேண்டுமென்றே விமர்சித்து, சிறுமைப்படுத்த நினைப்பவர்கள், அவரின் ஒரு தாடி மயிருக்கு சமமான போராட்டத்தைக்கூட நடத்த முடியாதவர்களே. தமிழர்கள் யாருமே, கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு போராட்டத்தை அவர் தொடங்கி நடத்தினார். அவற்றில் சில நிறை - குறைகள் இருக்கலாம். ஆனால், அதற்காக போராட்டத்தையே கொச்சைப்படுத்துவதை எப்படி ஏற்க முடியும். பெரியார் மட்டும் நமக்கு இல்லாவிட்டால், தமிழர்களாகிய நாம் நிச்சயம் பன்றிகளாகத்தான் இன்றும் இருந்திருப்போம். நம்மிடையே, புரட்சி வேட்கையை உருவாக்கியவர் பெரியார். அவரைப் பழிப்பது தாயை பழிப்பதைவிட கேவலமானது என்பதை மனசாட்சியுள்ள தமிழர்கள் உணர்ந்தால் போதும். தமிழ் தேசியவாதிகள் என்று கூறிக்கொள்ளும் கைக்கூலிகள் உணராமல் போனால் கவலையில்லை.
Guest
கோவை கவுண்டபாள்யம் கூட்டம் வரை பெரியாரின் பேரன்,மார்க்ஸீன் மாணவன் என்று சொன்ன போது சிமானின் தமில் தேசியம் எங்கே போனது,இல்லை ’’தம்பி’’ படத்தில் முத்து ராமலிங்கதின் படத்தை வைத்தற்கு விளக்கம் சொன்னதை போல் எதாவது ஊளறீகொண்டே இறுப்பார்.சிமான் ஒறு ’’’காமெடி’’’ பிஸ்................................................
தமிழரசன் கலை
நாம் தமிழர் இயக்கம் தமிழ்த்தேசியத்திற்கு இன்னுமொரு துரோக நச்சு வடிவம்!
சீமான் தமிழ்த்தேசிய எதிரிகளைத் துதி பாடி தமிழகத்திற்கு அம்பலகாராகப் பார்க்கிறார்!
ஆனால் சீமான் அம்பலப்பட்டுக்கொண்டே இருக்கிறார்! விரைவில் உருத்தெரியாமல் அழிந்தும் போவார்!
அவரின் நாம் தமிழர் கட்சியும் அழிந்து போகும்!
அதி அசுரன்
// உங்களுக்கு அறிவிக்கப்பட்ட கட்சி ஆவணம் அல்லது கொள்கை அறிக்கை என ஒன்றுண்டா? நாம் தமிழர்களாவது தங்களது கட்சியின் பகிரங்கப்படுத்தியிருக்கிறார்கள். நீங்களோ பெரியாருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, கட்சி ஆவணம் கூட வெளியிடாமல் இருப்பதை மறைப்பது ஏன்?//

பரத் அவர்களே, பெரியார் ஆவணமாக அறிவித்ததைத் தான் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். எங்களுக்கு இன்றும் தலைவர் பெரியார் தான். அவரது ஆவணம்தான் எங்களுக்கும் ஆவணமாக இருக்கமுடியும். பெரியார் சொன்னவற்றை செய்து முடிக்கும்வரை அதுதான் ஆவணம். பெரியாரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு வேறு எவன் பின்னானும் போனால்தான் தவறு.

//அப்படியெனில், தோழர் அதிஅசுரன் அவர்களே, மலையாள, கன்னட மொழிகள் தோன்றியது தான் எப்படி? சமற்கிருதமும் தமிழும் திரிந்து தானே இம்மொழிகள் தோன்றின. இதை தங்களால் பகுத்தறிவோடு தாங்கள் மறுக்க முடியுமா? //

உண்மை. தமிழில் இருந்துதான் தெலுங்கு, மலையாள, கன்னட மொழிகள் தோன்றின. இந்த சிறு மொழி வரலாறை மறுக்க நான் என்ன திடீர்த் தமிழனா?

//பார்ப்பான் தான் திராவிடம் என்ற சொல்லை முன்மொழிந்தான் என்பதை எப்படியோ ஒத்துக் கொண்டீர் என்பதில் மகிழ்ச்சி. பார்ப்பான் தமிழரை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக வேறு பெயரிட்டு அழைத்தால், அந்த இழிவுப் பெயரையே தங்கள் இனப்பெயராக கருதுவது தான் பகுத்தறிவா?//

கன்னட, தெலுங்கு, மலையாள மொழிகள் தோன்றுவதற்கு முன்னரே திராவிடர் என்ற சொல் புழக்கத்தில் வந்துவிட்டது என்பதைக் குறிக்கவே மனுஅதர்மத்தைச் சொல்கிறோம். மற்றபடி மனுவில் குறிப்பிட்டதால் நாங்கள் திராவிடர்கள் என்று எங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை.

// இந்திய இறையாண்மைக்கு எதிராக தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று கூறும் பெ.தி.க.வினரே.. இந்திய அரசு நடத்துகின்ற தேர்தல்களில் அவ்வப்போது ஏதாவதொரு ஓட்டுப் பொறுக்கிக் கட்சியை ஆதரித்து வருவது தான் உங்களது “இந்திய இறையாண்மை”க்கு எதிரான செயல்பாடா?//

ஏற்கனவே சொல்லிவிட்டேன். இங்கு யாருமே தனித்தமிழ்நாடு விடுதலையைச் செயல்திட்டமாகக் கொண்டிருக்கவில்லை. கருத்து அளவில், கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

இதில் திராவிடர் இயக்கங்கள்தான் ஏதோ இந்தியாவுக்குக் கட்டுப்பட்டு இருப்பது போலவும், நாம் தமிழர்கள் ஆயுதப் பேராட்டத்தில் ஈடுபட்டிருப்பதைப் போலவும் சவடால் அடித்தவர்கள் - நான் 2016 இல் முதல்வராகவேன். அடுத்த நாளே தமிழீழம் வாங்கித் தருவேன் என்று வெற்றுச் சவடால் அடிப்பவர்கள், அடித்தவர்கள் இப்போது திடீரென இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்றக் கிளம்பியது ஏன் என்பதுதான் கேள்வி.

திராவிட இயக்கங்களுக்கு மாற்ற அரசியல் சக்தி என பீலா விட்டுவிட்டு அந்த திராவிட இயக்க்ங்களைவிட பலபடி கீழே இறங்கி ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டிருப்பது என் என்பதே கேள்வி?
அதி அசுரன்
//கூட்டம் போட்டு பேசுகிறோம். தனித் தமிழ்நாடு பேசுகிறோம் பெரியாரின் பேச்சே ஆவணம் என்கிறது பெரியார் தி.க. உண்மையில் பெரியார் திராவிடர் கழகம் தோன்றிய பிறகு கொள்கை ஆவணம் என்று ஒன்று வெளியிடப்பட்டிருக்குமேயானால் நாம் தமிழர் கட்சியே உருவாகியிருக்காது.//

நாம் தமிழர் உருவானதுக்கு அதன் மாநில இளைஞர் பாசறைப் பொறுப்பாளர் மணி.செந்தில் வேறு ஒரு காரணம் சொல்லியிருக்கிறார். எதாவது ஒரு கருத்துக்கு முதலில் வாருங்கள். பதில் கிடைக்கும்.
vilamby
அதி அசுரனே!

தொல்காப்பியத்தில் மனுவாதிகளின் இடைச்செறுகல்கள் உண்டு என்று பல அறிஞர்கள் நிறுவியுள்ளனர். தொல்காப்பியம் எரிக்கப் படாமல் பிழைத்ததே, இந்த இடைச் செறுகல்களால் தான் என்று பாவாணர் சொல்லுவார்.

அதோடு தொல்காப்பியத்தில் அந்தனர்கள் காதல் தூது சென்றனர் என்று இல்லை. அது பார்ப்பனர்களைத்தான். இப்படித் திரித்துக் கதை விடுவது திராவிடத்தின் வேலை. மனுவாதியும் இந்த வேலைகளைச் செய்வான்.

ஆரியனும், திராவிடனும் ஒன்னு அதை அறியாதவன் வாயில் மன்னு.

பார்ப்பனர்கள் என்ற பெயரே தமிழர்களிடமிருந்து பிறிக்கப்பட்ட சொல். அதன் பிறெகு மனுவாதிகள் எல்லாவிதமான தொழில்களிலும் ஈடுபட்டுப் பிழைத்தனர்.

எனவே ஒவ்வொரு சொல்லும் காலவழுவில், வரலாற்றின் மாறுதல்களால் பலவேறு பொருள் கொள்கின்றன.

நாம் இங்கு பேசுவது எது சம்பந்தப் பட்டது என்ற அடிப்படையில் மட்டுமே!

எனவே, திரித்துக் கூறுங்க, அதி அசுரனே! உங்களது சாயம் வெளுக்கும் காலம் கணிந்து விட்டது.
பரத்
/////////தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு விடுதலைக்கு உருப்படியாக யாரும் எதையும் செய்யவில்லை. பெ.தி.க உட்பட. ஆனால் பெரியார் தி.க கூட்டமாவது தொடர்ந்து நடத்துகிறது. அவ்வளவுதான்./////////

தனித்தமிழ்நாட்டுக்கான விடுதலைப் போராட்டம் தற்போது தமிழகத்தில் முழு அளவில் வீச்சுப் பெறவில்லை. தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்திய மற்றும் திராவிட மாயைகளில் சிக்குண்டு கிடக்கிறார்கள். முதலில், மக்களுக்கு தனித்தமிழ்நாடு கோர வேண்டியது ஏன் என்பதை உணர்த்தும் வகையிலும், ஒவ்வொரு சிக்கலிலும் இந்திய அரசு எப்படி தமிழினத்திற்கு எதிராக நின்று கொண்டு பணிபுரிகிறது என்பதை மக்களிடம் விளக்கி தனித்தமிழ்நாட்டு விடுதலைக்கான நேச சக்திகளையும், முன்னணி சக்திகளையும் உருவாக்குவது தான் இன்றைய தனித்தமிழ்நாட்டுக்கான உருப்படியான வேலைத் திட்டமாக அமைய முடியும்.

இதை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி உள்ளிட்ட தனித்தமிழ்நாட்டு விடுதலையை வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட கட்சிகள் செய்து வருகின்றன. தங்கள் இதழ்களிலும் அதை பதிவு செய்கின்றன. இவர்கள் தனித்தமிழ்நாடு இலட்சியத்தை வெளிப்படையாக கட்சித் திட்டத்தில் அறிவித்துள்ளார்கள். அதற்கு மக்களை அணிதிரட்டுவதே இன்றைய பணி என அவர்களது சக்திக்கேற்ப செயல்படுகிறார்கள். இந்திய அரச நடத்தும் தேர்தலை வெளிப்படையாக புறக்கணிக்கிறார்கள்.

ஆனால், பெ.தி.க. செய்வது என்ன?

இன்று வரை தனது கொள்கைகளை வெளிப்படையாக அறிவிக்கத் தயங்குகிறார்கள். அவ்வப்போது, பெரியார் வரிகளை எடுத்து போட்டு, அறிக்கைகளை எடுத்துப் போட்டு அது தான் எங்கள் கொள்கை என பம்மாத்து காட்டுகிறார்கள். நாங்களும் தனித்தமிழ்நாடு கேட்கிறோம் என்று கூறும் பெ.தி.க.வினர், அதை வெளிப்படையாக கட்சித் திட்டம் உருவாக்கி அதில் அறிவிக்கத் தயங்குகிறார்கள். ஏனெனில், இவர்களது நோக்கங்களில் தனித்தமிழ்நாடு என்றைக்கும் இருந்ததில்லை. கூட்டங்களில் முழங்குவதோடு சரி. அதற்கென கட்சி ஊழியர்களை உருவாக்குவதில்லை. இன்று ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள தி.மு.க. ஆ.இராசாவை வைத்து கூட்டம் நடத்தினார்கள். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வைத்து கூட்டம் நடத்தினார்கள். தி.மு.க. - அ.தி.மு.க. கட்சிகளை மாறி மாறி ஆதரித்து, இந்தியத் தேசியத்தார்கள்.

பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, பகுத்தறிவுப் பிரச்சாரம், சாதி ஒழிப்பு ஆகிய சீர்திருத்தங்களை முன்வைத்து கூட்டம் நடத்துவது, ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளை மாறி மாறி ஆதரிப்பது என தங்கள் சீர்திருத்தப் பாதைக்குத் தான் ஊழியர்களை சேர்க்கிறார்களே ஒழிய, தனித்தமிழ்நாட்டு இலட்சியத்திற்கு ஒரு துரும்பும் செய்ய முன்வருவதில்லை. அதில் அவர்களுக்கு விருப்பமுமில்லை.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி உள்ளிட்ட தனித்தமிழ்நாடு கோரும் கட்சிகள், வெளிப்படையாக எழுத்து மூலமாக தனித்தமிழ்நாடு எங்கள் இலட்சியம் என அறிவிப்பதைப் போல், பெ.தி.க.வினர் அறிவிக்கத் தயங்குவது ஏன்?

//////பரத் என்ற புனைப்பெயரில், சீமானின் தம்பி எழுதுகிறார்./////////
தோழர்களே, நான் புனைப்பெயரெல்லாம் கொண்டு எழுதவில்லை. எனது பெயரே பரத் தான். எனது தாய்-தந்தை வைத்தப் பெயர். ஒருவேளை, வேறு புனைப்பெயரில் நான் எழுதியிருக்க முடியும். ஆனால், பார்ப்பனப் பெயரை மறைத்துக் கொண்டு போலிப் பெயரில் எழுதுகிறேன் என அப்போதும் நீங்கள் குற்றம் சுமத்துவீர்கள். எனவே தான் எனது உண்மையான பெயரிலேயே எழுதுகிறேன்.

நாம் தமிழர் கட்சியினர், தி.மு.க., அ.தி.மு.க, கட்சிகளைப் போல் ஓட்டுப் பொறுக்கும் வேலைகளில் இறங்கப் போகிறோம் என என்றோ அறிவித்துவிட்டவர்கள். எனவே, அவர்களது கொள்கைத் திட்டத்தில் இந்திய அரசுக்கு எதிராக எதுவும் இல்லை என புலம்புவதில்லை பயனில்லை. தி.மு.க. - அ.தி.மு.க. - ம.தி.மு.க. -. வி.சி. - பா.ம.க. போல், நாம் தமிழரும் இனி ஓட்டுப் பொறுக்குவார்கள். பதவி சுகம் அனுபவித்துக் கொண்டு, ஈழத்தமிழர்கள் பற்றியும் கண்ணீர் விடுவார்கள். பெ.தி.க. இதில் யாரையாவது ஆதரித்து அறிக்கை விட்டு வேலை செய்யும்.

ஆனால், நான் தமிழ்த் தேசிய ஆதரவாளன். இந்தியப் பார்ப்பன அமைப்பு நடத்தும் தேர்தல்களை புறக்கணிக்க வேண்டுமென கருதுபவன். தமிழ்த் தேசிய அமைப்புகளில் உறுப்பு வைக்கவில்லை எனினும், பெ.தி.க.வின் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டவன். அதனால் தான் பெ.தி.க.வினரை பற்றிய விமர்சனங்களை முன் வைக்கிறேன்.

//////////////தனித்தமிழ் நாட்டிற்கு போராடும் நாம் தமிழர்கள், தங்களின் ஆவணத்திலே, இந்திய இறையாண்மைக்கு தோப்புகரணம் போடுவது ஏன்//////////////?
நாம் தமிழர் கட்சியினர் தனது கட்சித் தொடங்கிய ஆண்டே, தனித்தமிழ்நாடு கோரவில்லை என அறிவித்துவிட்டவர்கள். குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் இது குறித்து சீமானின் பேட்டி வெளியானது. படித்துப் பார்க்கவும். நாம் தமிழர் ஓட்டுப் பொறுக்கிகளை இனி விமர்சனம் செய்து பயனில்லை. தனித்தமிழ்நாடு இலட்சியத்திற்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என விவாதியுங்கள்..
ரவி 2
ஐயா அதி அசுரன் பெரியாருக்குப் பின் மணியம்மை தலைமையில் தி.கவினர் இந்திய தேசியத்துடன் செய்து கொண்ட சமரசத்தினை எஸ்.வி.ராஜதுரை பெரியார் மரபும்,திரிபும் நூலில் பதிவு செய்துள்ளார்.சுருக்கமாக சொன்னால் பெரியார் மறைவிற்குப் பின் மணியம்மை தலைமையில் தி.க தனித்தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டது.அப்போது தி.கவில் இருந்தவர்கள்தான் இன்று பெரியார் தி.கவில் இருக்கிறார்கள்.அதாவது இந்திய இறையாண்மையை தி.க ஏற்றுகொண்டதை ஒப்புக்கொண்டு தி.க தலைமைக்கு விசுவாசமாக இருந்தவர்கள்தான் விடுதலை ராசேந்திரனும், கொளத்தூர் மணியும். என்றைக்காவது உங்கள் பெரியார் தி.கவின் முதன்மையான குறிக்கோள் சுதந்திர தமிழ்நாடு அதற்கான செயல்திட்டம் இது என்று அறிவித்திருக்கிறீர்களா.இந்திய இறையாண்மையை ஏற்றுக்கொண்ட தி.மு.கவிற்கு ஆதரவாக பெரியார் 1971 தேர்தலில் செயல்பட்டாராதற்கு என்ன சொல்லப்போகிறீர்கள்.2009ல் நீங்கள் ஆதரித்த அதிமுக என்ன தமிழ்நாடு பிரிவினை என்பதை ஏற்றுக்கொண்ட கட்சியா. நாம் தமிழர் உட்பட தமிழ் தேசியர்கள் பெரியாரியவாதிகளின் பொய் பிரச்சாரங்களை அம்பலபடுத்தி வருவதால் கூடாரம் காலியாகி விடுமோ என்ற ப்யம்தான் அதிஅசுரன்களை அலறவைக்கிறது
thiravidan
ஐயா, விளம்பி, நீங்களெல்லாம் படிப்பறிவு பெற்று, இப்படி இணையதளத்தில் எழுதுகிறீர்கள் என்றால்(நீங்கள் ஒரு பார்ப்பனராக இல்லாத பட்சத்தில்), அதற்கு பெரியார் போன்றவர்கள்தானே காரணமேயொழிய, உங்களின் தமிழ் தேசிய குஞ்சுகள் அல்ல. பெரியார் மோசமாக பேசினார் என்றால், அவரின் போராட்டம் அப்படிப்பட்டது. அவரின் போராட்டத்தில், மிகச் சிறந்த அவை நாகரீகம் இருந்ததோடு, அது முற்றிலும் அகிம்சை முறையிலானது. பெரியாருக்கு முன்பு தமிழன் இருந்த நிலையை சற்று படித்து தெரிந்துகொள்ளுங்கள். மற்றவர்களைவிட, பெரியார் எப்படி வித்தியாசப்பட்டு நிற்கிறார் என்றால், பார்ப்பனியத்தின் எந்த ஒரு சிறு அம்சத்தையும் அவர் நுழையவிடவில்லை. பார்ப்பனியத்தின் எந்த மாற்று வடிவத்தையும் அவர் அனுமதிக்கவில்லை. தமிழர்களை தொடர்ந்து எச்சரித்து வந்தார். பல தமிழ் போராளிகள் என்று சொல்லிக் கொண்டவர்கள், சைவத்தையும், பல தமிழ் சைவ நூல்களையும், கம்பராமாயணம் போன்ற வைணவ நூல்களையும் தலைமேல் வைத்துக் கொண்டாடினார்கள். அதையே தமிழர்களின் அடையாளமாக்கவும் போராடினார்கள்.

தமிழனின் ஒவ்வொரு அடையாளத்தையும், தனது அடையாளமாக மாற்றிவிட்ட பார்ப்பானுக்கு இவர்கள், மேலும் பேருதவி புரிந்தார்கள். பெரியாரின் வாழ்வில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்திற்காக, அவர் பார்ப்பனர்களை எதிர்த்து போராடினார் என்று கூறுவது ஒரு அறியாமையே. பார்ப்பனர்கள் பெரியாருக்கு பல பதவிகளையும், பட்டங்களையும் தர தயாராக இருந்தார்கள். பெரியார் நினைத்திருந்தால், பார்ப்பனர்கள் மூலம் ஏராளமான நன்மைகளை அடைந்திருக்கலாம். உங்களின் வாதப்படியே வைத்துக்கொண்டாலும் கூட, ஒரு சிறு சம்பவத்திற்காக, 70 ஆண்டுகாலம் ஒரு பயங்கரமான போராட்டத்தை நடத்த எவனால் முடியும்? நீங்கள் செய்வீர்களா? வேண்டுமானால், பெரியார், அந்த பார்ப்பன சிறுவனை யாருக்கும் தெரியாமல் அடித்து துவைத்திருக்கலாம்.

பெரியாரின் போராட்டத்தை கற்பனை செய்துகூட பார்க்க முடியாதவர்கள்தான், அப்போராட்டத்தை இஷ்டத்திற்கு கொச்சைப்படுத்துகிறார்கள்.
madurai su. thalapathy
வெறுமனே ஜல்லி அடிப்பதை நிறுத்துங்கள். உன் தத்துவம் சரியா, என் தத்துவம் சரியா என்று மயிர் பிளக்க வாதம் புரிவதை விடுத்து உருப்படியாய் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசிப்போம்.

நம் மண்ணிலிருந்து மதுரை மாவட்டம், திருமங்கலத்திலிருந்து இலங்கைக்கு தொடர் வண்டிக்கான கான்கிரீட் ஸ்லீப்பர் கட்டைகள் ஏற்றுமதி செய்வதை தடுப்போம்.
போராட்டத்தில் பங்கு பெற தொலைபேசியில் அழையுங்கள். ஃபசெபோக், ட்நிட்டெர் மற்றும் வாய்ப்புள்ள இணையதளங்களில் செய்தியை பரப்புங்கள். தமிழ் விரோத நடவடிக்கைகளை நிறுத்துவோம்.

மதுரை திருமங்கலத்தில் உள்ள இராயலசீமா கான்கிரீட் ஸ்லீப்பர்ஸ் (பி) லிமிடெட் எனும் ஐதராபாத் நிறுவனம் இலங்கைக்கு தொடர் வண்டிக்கான கான்கிரீட் ஸ்லீப்பர் கட்டைகள் ஏற்றுமதி செய்வதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இது தொடர்பாக 4 சிங்கள அதிகாரிகள் சென்ற வாரம் மதுரை வந்து சென்றுள்ளனர்.

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசுக்கு உதவ, ராணுவம் மூலம் ஆளுமை செலுத்த, தொடர் வண்டி தடம் அமைக்க தமிழகத்தின் - மதுரை மாவட்டம், திருமங்கலத்திலிருந்து ஸ்லீப்பர் கட்டைகளை தயாரித்து இலங்கைக்கு அனுப்புவதா?

தமிழ் மண்ணிலிருந்து சிங்களருடன் பொருளாதார உடன்பாடா?

அதை பார்த்துக் கொண்டு நாம் சும்மா இருப்பதா?
உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்போம்.

இராயலசீமா கான்கிரீட் ஸ்லீப்பர்ஸ் (பி) லிமிடெட் நிறுவனமே!
இலங்கைக்காக போட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்!
தமிழகத்தை விட்டு, திருமங்கலத்தை விட்டு வெளியேறு!

நீங்களும் கண்டனம் தெரிவியுங்கள்.

இராயலசீமா கான்கிரீட் ஸ்லீப்பர்ஸ் (பி) லிமிடெ
இரயில்வே யார்டு, திருமங்கலம், மதுரை மாவட்டம்.

டெலெ 04549௨84984, 04549௨84981
செல்:9500992716, 9500992755,9500992700,9500992701

எ-மைல்: ர்ச்ச் டிரு@யஹோ.சொ.இன்
ஹெஅட் ஒஃப்ஃபிசெ: இன்ஃபொ@படில்க்ரொஉ
கோடங்குடி கருப்பய்யா
பரத் என்ற புனைப்பெயரில், சீமானின் தம்பி எழுதுகிறார். புனைப்பெயர் வைப்பதில் கூட பார்ப்பன தர்மத்தை செவ்வனே கடைபிடிக்கிறார்கள் - பார்ப்பன அடிமை தமிழர்கள்.

இதற்கு, சீமான், ராமகோபாலனின் இந்து முண்ணனியிலே சேர்ந்திருக்கலாம்.

பெ.தி.க வின் ஆவணம் பற்றி கேட்கிறார் பார்ப்பன அடிமை பரத். பெரியார் தி.க என்பது சித்தாந்த இயக்கம், அதன் தலைமைநிர்வாகிகள் 1970 தொடக்கம் தி.க வில் இருந்தவர்கள். மாவட்ட செயலாளராக தங்களது பொது வாழ்வை தொடங்கியவர்கள்.

அவர்களுக்கு, தங்களின் செயல்திட்டம் எது என்பதில் குழப்பமில்லை.

ஆனால், சினிமாக்கார சீமான் அப்படியில்லை. ஈழப்பிரச்னையில் தலையை நுழைத்து விளம்பரம் தேடி, தனது பதவி வெறிக்காக, அரசியல் பிழைக்கிறார்.

சினிமாவில், ஸ்ச்ரிப்ட் ரெடி செய்தால் தான், சூட்டிங் தொடங்க முடியும்.

அதே பழக்கத்தில், ஆவணம் ரெடி பண்ணியதை, நாம் தமிழர்கள் சாதனையாக பேசமுடியாது.

ஸ்ச்ரிப்ட் ரெடி பண்ண , அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் போல், இங்கு- பெங்களூர்.குணா கும்பல் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற புத்தகத்தின் மறுபதிப்பே - இந்த ஆவணம்.

இந்த கும்பலின் மொழியும், எழுத்து நடையும்,சீமானுக்கு புரியுமா? என்று தெரியவில்லை.

பெரியார் தி.க, அரசியல் விடுதலையை விட சமூக விடுதலைக்கு தான் முக்கியத்துவம் தருகிறது.

அப்படியே, தனி தமிழ் நாட்டிற்கு போராடும் நாம் தமிழர்கள், தங்களின் ஆவணத்திலே, இந்திய இறையாண்மைக்கு தோப்புகரணம் போடுவது ஏன்?
சீமானின் தம்பி
பெதிக மேடையில் தனித்தமிழ்நாடு குறித்து பேசுகிறார்களாம்.நல்லாத்தான்யா அளக்குறீங்க.எங்கே ஒரு காணொளி இணைப்பு கொடுங்க.துப்புண்டா?
தமிழரசன் கலை
பழையவர்களும் சரி புதியவர்களும் சரி நேரடியாகவோ மறைமுகமாகவோ பார்ப்பனிய இந்திய வல்லாதிக்கத்திற்கு துணை நிற்பவர்களே!

அப்படி இல்லையெனில் தமிழகத்தில் என்றோ புரட்சி வந்திருக்கும்! தமிழக மக்கள் புரட்சி வழியில் ஒன்றிணைய விடாமல் தடைகளாக இவர்கள் அனவரும் தன்னல பிழைப்பு அரசியல் இருப்பை தக்கவைத்து கட்சி வளர்த்து அறுவடை செய்யவே முயல்கிறார்கள்!

புதிய முளைப்பின் தன்னல தலைவர்களை இந்தியத்திற்கு கட்டுப்பட வைப்பது ஒன்றும், இந்தியத்திற்கு கடினம் இல்லை!
ஏனெனில் இங்கு எவருக்கும் தமிழ்த்தேசிய விடுதலையில் முனைப்பும் இல்லை, அக்கறையும் இல்லை!

தமிழ்த்தேசியப்புரட்சிக்கு வழிவகுத்து விடாமல் இந்தியத்திற்கு ஆதரவரய் துணை நின்று தமிழ்த்தேசியத்திற்கு தொடர்ந்து நேற்றையரும் இன்றையரும் இரண்டகம் செய்தே வருகிறார்கள்!

இவர்கள் அனைவரின் வஞ்சகக் கொட்டம் ஒடுக்கும் உண்மைத்தமிழ்த்தேசிய விடுதலைத் தலைமை உருவகப்படவே செய்யும்!
இது தமிழ்த்தேசிய விடுதலைக் காலத்தின் கட்டாயம்!
வரலாறுகள் அனைத்தும் முன்னோக்கியே!
Prabaharan
@பரத்

தமிழ்த் தேசிய ஆதரவாளன் என்கிறீர்கள். த.ஒ.வி.இ, த.தே.பொ.க, த.மா.லெ.க எல்லாம் தனித்தமிழ்நாட்டு கோரிக்கைக்காக போராடுகிறது என்று அவர்களை அதரிக்கிறீர்கள். உங்கள் பார்வையில் நாம் தமிழர் கட்சியின் ஆவணம் பற்றிய கருத்து என்ன.
Prabaharan
@பரத்

//பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, பகுத்தறிவுப் பிரச்சாரம், சாதி ஒழிப்பு ஆகிய சீர்திருத்தங்களை முன்வைத்து கூட்டம் நடத்துவது//

பார்ப்பன ஆதிக்கம் ஒழியாத, சாதி ஒழியாத தனித்தமிழ்நாட்டால் யாருக்கு என்ன பயன். அப்படி ஒரு நாடு தேவைதானா?

பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்காத, சாதி ஒழிப்பை கோராத அதேசமயம் தனித்தமிழ்நாடும் வேண்டாத நாம் தமிழர் கட்சியின் அறிக்கையை இப்படி தலைகீழாய் நின்று வக்காலத்து வாங்குவது ஏனோ?
பரத்
திரு. பிரபாகரன் அவர்களே, நாம் தமிழர் ஆவணம் பற்றிய எனது கருத்துகளை மீண்டும் கேட்டிருக்கிறீர்..

நான் ஏற்கெனவே எழுதியப் பதிவுகளிலிருந்தே அதை மீண்டும் பதிகிறேன்..

//////////////// பெ.தி.க. தோழர்களே, நாம் தமிழர் கட்சியினர், ஓட்டுப் பொறுக்கி அரசியலில் தான் இறங்கப் போகிறோம் என்று என்றைக்கோ அறிவித்து விட்டவர்கள். ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளின் அறிக்கையில், பார்ப்பானையும், இந்தியத்தையும் எதிர்த்துப் பேசுபவர்களை தேடுவது வீணற்றது தான்////////////

//////////////// நாம் தமிழர் கட்சியினர், தி.மு.க., அ.தி.மு.க, கட்சிகளைப் போல் ஓட்டுப் பொறுக்கும் வேலைகளில் இறங்கப் போகிறோம் என என்றோ அறிவித்துவிட்டவர்கள். எனவே, அவர்களது கொள்கைத் திட்டத்தில் இந்திய அரசுக்கு எதிராக எதுவும் இல்லை என புலம்புவதில்லை பயனில்லை. தி.மு.க. - அ.தி.மு.க. - ம.தி.மு.க. -. வி.சி. - பா.ம.க. போல், நாம் தமிழரும் இனி ஓட்டுப் பொறுக்குவார்கள். பதவி சுகம் அனுபவித்துக் கொண்டு, ஈழத்தமிழர்கள் பற்றியும் கண்ணீர் விடுவார்கள். ///////////////

பின்குறிப்பு: முதலில், நான் கூறியவற்றை ஒருமுறையாவது படித்துவிட்டு வாருங்கள்..

//////////////// பார்ப்பன ஆதிக்கம் ஒழியாத, சாதி ஒழியாத தனித்தமிழ்நாட்டால் யாருக்கு என்ன பயன். அப்படி ஒரு நாடு தேவைதானா? பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்காத, சாதி ஒழிப்பை கோராத அதேசமயம் தனித்தமிழ்நாடும் வேண்டாத நாம் தமிழர் கட்சியின் அறிக்கையை இப்படி தலைகீழாய் நின்று வக்காலத்து வாங்குவது ஏனோ?////////////////

பார்ப்பன ஆதிக்கம் ஒழியாத, சாதி ஒழியாத தனித்தமிழ்நாட்டால் யாருக்கு என்ன பயன் என்று கேட்டிருக்கிறீரே? அப்படியொரு தமிழ்நாட்டை யார் வேண்டுமெனக் கேட்டது? உங்கள் கற்பனைக்கு அளவே இல்லையா?

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். தனித்தமிழ்நாடு என்ற இலட்சியமே, இந்தியத் தேசியம் என்ற பார்ப்பன அரச வடிவத்திற்கு எதிரானப் போராட்டம் தான். பார்ப்பனர்களின் அரச வடிவமான இந்திய அரசை உடைத்து, தனித்தமிழ்நாட்டு உருவாக்க வேண்டுமென எந்தப் பார்ப்பானாவது விரும்புவானா? ஆனால், பெ.தி.க.வோ, பார்ப்பானை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு, அவர்களின் அரச வடிவத்தை பல்வேறு நிலைகளில் பாதுகாக்கிறது. அரசின் அதிகாரத்திலிருந்து பார்ப்பானை இறக்கச் சொல்லி மட்டும் பேசுகிறதே ஒழிய, பார்ப்பான் நீங்கிய அரச வடிவம் தனித்தமிழ்நாடு என்று கூறுவதில் பெ.தி.க.விற்கு என்ன தயக்கம்?

முதலில் சாதி ஒழிப்பு, அதன் பிறகு தான் தனித்தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டம் என்று கூறுவதோ, அல்லது முதலில் தனித்தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டம் அதன் பிறகு தான் சாதி ஒழிப்புப் போராட்டம் என்று சொல்வதோ, இரண்டுமே தவறானது. ஈழத்தில் இப்படித்தான் புலிகள் போராடினார்களா? தமிழீழ விடுதலைக்குப் போராடிய ஈழமண்ணில், சாதியக் கொடுமைகளின் எச்சம் இன்றும் உள்ளதே.. அவை காலப்போக்கில் தான் அழியுமே ஒழிய, சுவிட்ச் போட்டதும் நின்றுவிடுமா என்ன?
மற்றொன்று, தமிழ் மக்கள் மனதிலுள்ள சாதிய அழுக்கைப் போக்க, நீக்க இடஒதுக்கீடு போன்ற முற்போக்கான சீர்திருத்தங்கள் தேவையே ஒழிய அதுவே முழுமையான தமிழர் விடுதலையல்ல என்பதை பெ.தி.க.வினர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
சீமானின் தம்பி
இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல் படுகிறார்களாம் ஆதாரம் கேட்டால் ஆளைக்காணோம்.போகட்டும் ஆனால் பெரியார் கேட்ட தனித்தமிழ்நாடு என்பது ,''தமிழனுக்கு என்று ஒரு அரசு,தமிழர் உரிமைகளை தட்டிக்கேட்க உலகில் ஒரு நாடு என்பதெல்லாம் கிடையாது.சாதி ஒழிப்பிற்க்காக தனித்தமிழ்நாடு கேட்டார் அதுவும் ஒரு மாவட்ட அளவில் இருந்தால் போதும் என்றார்.மாவட்ட அளவில் வாங்கி மாவாட்டுவதா?அதில் மட்டும் சாதியை ஒழித்தால் போதுமா?என்ன ஒரு முட்டாள்தனம்?பெரியார் சொல்லிவிட்டால் எல்லாம் சரியா?இப்போது பெதிக மாவட்ட அளவில் போதும் என்கிறதா?மாநில அளவில் வேண்டுமா?திராவிடர் படை எங்கே?அதை எப்போது கட்டியமைக்க போகிறீர்கள்?அல்லது பெரியார் இப்படி சொன்னார்,அப்படி சொன்னார் என வெறும் வம்பளந்து விட்டு,வெட்டி வீண் சவடால் பேசிக்கொண்டு,தவறு செய்யும் மற்றவர்களுக்கு பல்லக்கு தூக்கிக்கொண்டு அண்ணனை மட்டும் நொட்டம் பேசுவதிலேயே பக்கம் பக்கமாக வரிகளை ஆராய்ச்சி செய்யும் இந்த குழுவின் நிலை சந்தேகத்திற்குறியதாய் இருக்கிறது.பெரியார் திகவின் இரண்டு குழுக்களுமே ஒரே கருத்தோடுதான் இருக்கிறீர்களா?
சீமானின் தம்பி
பெரியாரின் உண்மை தொண்டர்கள் என சொல்லிக்கொண்டு திரியும் ஒட்டுகுழுக்காரார்களே,
வைகோ தேவரின் குருபூசையில் வருடம் தோரும் கலந்து கொள்ளும் போது ஏதாவது பேசியிருக்கிறீர்களா?அவரை தேவர் சாதி வெறியர் என ஏன் சொல்லவில்லை?ஸ்டாலின் வருடாவருடம் போகும் போது எங்கே போனீர்கள்?அண்ணன் இம்மானுவேல் அய்யா நினைவிடத்திற்க்கு போனார் பாராட்ட மனமில்லை.ஆனாலும் போகாத இவர்களை தாங்கி பிடிப்பீர்கள்.வைகோ அத்வானியை தன் மாநாட்டிற்க்கு அழைத்து அவர் புகழ் பாடியபோது அவ்ரை ஏன் இந்துத்துவாவின் பகிழ்பாடி என ஏன் சொல்லவில்லை?கருணாநிதி வாஜ்பாய்க்கு பல்லக்கு தூக்கியபோது பார்ப்பன அடிமை என சொன்னீர்களா?ஏன் சொல்லவில்லை?எங்களுக்கு தெரியும் கருணாநிதியும்,வைகோவும் திராவிடர்கள் நாங்கள் தமிழர்கள்.உங்கள் அலறல் புரிகிறது.திராவிடத்தை கருவருக்க தமிழக வரலாற்றில் ஒரு மிகப்பெரிய இளைஞர் பட்டாளம் அண்ணன் தலைமையில் உருவாவதை உங்களால் தாங்க முடியவில்லை.உங்களுக்கே தெரியும் திராவிடத்தை கருவருக்கும் சூழல் மிகசிற்ப்பாக திராவிடர்களாலேயா உருவாக்க பட்டு விட்டது.திராவிடத்தை வேரறுப்போம்.திராவிடர்களை கருவருப்போம்!ஆமா அது என்ன தலைப்பு,இனத்துரோக? தமிழின துரோக என எழுத துப்பில்லை.திராவிட இன துரோக என எழுதிப்பார் தமிழர்கள் காரி உமிழ்வார்கள்.தமிழின துரோகம் என எழுதினால் தமிழனை ஒரு இனமாக ஒப்புக்கொள்ள வேண்டி வருமே என அச்சம்.உங்களுக்கும் சில வேளைகளில் மூளை வேளை செய்கிறது.அது திராவிடனை இனி ஒரு போதும் காப்பாற்றாது.
vilamby
-----------காந்தி ஒரு சேட்டு. இந்தியாவெங்கும் சேட்டுகள். -------------எனவே, காந்தி, இந்தியா மொழிவழி தேசங்களாகப் பிரிவதை ஏற்கவில்லை. எனவே, இந்தியாவுக்கு Dominion அந்தஸ்து தான் உண்மையிலேயே விரும்பினார். உண்மை சுதந்திரம் பெற்றால் மொழிவழி தேசங்களகப் பிரிந்திவிடும் என்று அஞ்சினார். எனவே தான் சத்யாகிரகம் என்ற பெயரில் ஆங்கிலேயனிடம் கெஞ்சிக் கெஞ்சி, ஒன்றுபட்ட இந்தியாவைக் தன்னிடம் கொடுக்கும்படிக் கேட்டார். சுபாசு போல அடித்துக் கேட்டால், பிரித்து சுதந்திரம் கொடுத்து விடுவான் பாருங்கள்!------------------------------------------------------------------

கன்னட ஈ. வெ. ராமசாமி ஒரு வடுகர். தமிழர்க்கு தனி நாடு வந்தால், இப்போது வடுகர்கள் கொட்டமடிப்பது போல முடியாது. எனவே, தமிழ்நாடு விடுதலை என்ற பெயரில், பெரியார், Dominion அந்தஸ்து மட்டுமே கேட்டார். தமிழ்நாடு விடுதலையில் ஈ.வெ. ராமசாமிக்கு எள்ள்ளவும் ஈடுபாடு இல்லை. அதே நிலைப்பாடு தான் திராவிடர் கழகங்களின் நிலைப்பாடும். காந்திக்கும் பெரியாருக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்த்தார்களா? -------------------------------------------------------------

தனித்தமிழ் நாடு வேண்டுமாம். ஆனால், தமிழ்தேசியம் கூடாதாம். இது திராவிட இயக்கங்களின் ஏமாற்றுப் பிரச்சாரம். இதன் பொருள் என்னவென்றால் தமிழ்நாடு விடுதலையில் இவர்களுக்கு உண்மையிலேயே ஈடுபாடு இல்லை! ஆதரிக்கவும் இல்லை! --------------------------------

தமிழர்களே! திராவிட இயக்கங்களிடம் இனியும் ஏமாற வேண்டாம்!!!!!
samboogan
/// தன்னை படிக்க வைத்த பார்பனரை நன்றியுடன் நினைத்து தன் பெயரில் அம்பேத்கர் (இது அந்த பார்பனரின் பெயர்) என்று பெயரும் சேர்த்துக் கொண்டார். ///
இது முற்றிலும் பொய்யான கருத்து.அம்பேத்கர் என்பது ஒரு மனிதனின் பெயர் அல்ல,டாக்டர் அம்பேத்கர் பிறந்த மாவட்டத்தின் பெயர் 'அம்பவடேக்கர்'என்பதாகும்.நந்த மாவட்டத்தின் பெயரே அம்பேதகர் பெயரில் இணைந்தது.இது அம்பேதகர் வாழ்க்கைவரலாற்றில் உள்ள து.பலரும் தவறுதலாகவே இப்பெயர்க்காரணத்தைக் கூறுகின்றனர்.
murugan
திராவிடரா தமிழரா குழப்பத்தில் இது என்ன புதுக்கரடி பெதிகவில் இரண்டு குழுக்களா? சீமானின் தம்பி,போதும் காமெடி.
தமிழரசன் கலை
''அம்பேத்காரை மட்டுமல்ல''
தொல்காப்பியர்,திருவள்ளுவரிலிருந்து.. இன்னும் பல!!
வரலாறுகள் தொடர்ந்து..
பார்ப்பானியச் சாதிய இந்தியம்'
தமிழியத் தொன்மையை வரலாற்றை இலக்கியங்களை தமிழ் மொழியைச் தனக்குச் சாதகமாக திரித்து குழப்பி பரப்பிவந்திருக்கிறது!
ஒரு பொய்யை திரும்ப திரும்பச் சொன்னால் மெய்யாகி விடும் என்பது இந்திய வல்லாதிக்க சமஸ்கிருதப் பார்ப்பனிய வக்கிரத்தின் நம்பிக்கை!
அந்த திரிபு வேலையில் வென்று சுவை கண்டும் வந்திருக்கிறது!
அதற்கு துணையாக பல இரண்டகர்கள் தமிழ்நாட்டில் வந்து போயிருக்கிறார்கள்!
அதில் இப்போது சீமானும் இணைந்து
தமிழ்த்தேசியத்திற்கு நாமம் போடப்பார்க்கின்றார்!
பிரபாகரன்
@பரத்
31-03-2012 அன்று பெ.தி.க கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் தோழர் கொளத்தூர் மணி உரை -
http://www.youtube.com/watch?v=P1OFLyKSiw8&feature=plcp
பார்த்து தெளிவுபெற்று பயனடையுங்கள்.
பிரபாகரன்
பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில், கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தனிதமிழ்நாட்டிற்கான இன்றைய தேவை என்ன என்பதை பட்டியல் இட்டு, தமிழ்நாடு தமிழருக்கே என்று கொள்கை முழக்கமிட்டிருக்கிறார்.

http://www.youtube.com/watch?v=P1OFLyKSiw8&feature=plcp

சீமானின் தம்பி அவர்களே, துப்புண்டா என்று கேட்டீர்களே, மல்லாந்து படுத்துக்கொண்டும் உங்கள் முகத்திலேயே உமிழ்ந்துக்கொண்டீர்கள். துடைத்துக்கொள்ளுங்கள்.
பிரபாகரன்
@சீமானின் தம்பி

//அதுவும் ஒரு மாவட்ட அளவில் இருந்தால் போதும் என்றார்.மாவட்ட அளவில் வாங்கி மாவாட்டுவதா?//

உங்க அண்ணன் சீமாரு, இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட்டு இங்கேயே மாவாட்டலாம்னு கூப்பிடுராரு .. அங்க போய் ஆட்டுங்க.

பிழைக்கத் தெரிந்த ஆளுங்கப்பா நீங்க.
tamil
பெரியார் சாமிய யெதவது சொன்ன திராவிட புசாரிகலுக்கு ரொம்ப கொவம் வருது
பரத்
த.தே.பொ.க., த.நா.ம.லெ.க., த.ஓ.வி.இ., உள்ளிட்ட தமிழ்த் தேசிய அமைப்புகளின் சார்பில் நடத்தப்படும் பெரும்பாலான கூட்டங்களில், தனித்தமிழ்நாட்டை வென்றெடுப்போம் என முழங்க்பபடுவதெல்லாம், பெ.தி.க.வினருக்கு வெறுப்பை தான் ஏற்படுத்தும் என நினைக்கிறேன். தனிதமிழ்நாடு குறித்து பெ.தி.க. பேசினால் மட்டுமே சரி, மற்ற யாருமே பேசவில்லை, பேசத் தகுதியற்றவர்கள் என்றும் கூறுவார்கள் போலிருக்கிறது. ஏதோ ஒரு கூட்டத்தில், தப்பித் தவறி தனித்தமிழ்நாடு பற்றி பெ.தி.க. தலைவர் பேசிவிட்டதை ஒருவர் சுட்டி எடுத்துப் போடுவதிலிருந்தே, உங்கள் இலட்சணம் தெரிகிறது.
seyed muhammed
ஆதி அசுரனின் கட்டுரை அருமை அருமை அருமை. பார்ப்பனியம் என்பது மாயை போலியானது என்ற புதிய "தமிழினவுணர்"வாளர்களின்"புதிய"கண்டுபிடிப்புக்கு பதில் சொல்லியிருக்கின்றார்.
கட்டுரைய படித்து விட்டு கருத்து எழுத முண்டியவர்கள் எல்லோரும் புதிய"தமிழினவுணர்"வாளர்கள் எனும் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். அடையாளம் தந்த மூர்க்கம் ஆவேசம் உண்மையை படிக்கவோ உணரவோ ஒப்புக்கொள்ளவோ வகை செய்யவில்லை. அந்தோ பரிதாபம்.
திராவிடம் என்பது மொழி வழி திரிபல்ல. பார்ப்பனர்கள் தங்களின் எதிரிகளாக யாரை எண்ணினார்களோ அவர்களை இழிவு செய்யும் பொருட்டு இட்ட ழைத்த பட்ட பெயர் திராவிடன் என சான்றுகள் மூலம் நிரூபித்துள்ளார். ஆனால் அடிமைகளால் பார்ப்பன தாசர்களால் ஏற்று கொள்ளமுடையவில்லை.
seyed muhammed
துவித ஜாதி எனும் இரு பிறப்பாளர்கள் தங்கள் வீட்டு பெண்களை அடிமைகளாகவும் காமம் தீர்க்க பயன்படும் தாசிகளாகவும் எண்ணுகிறார்கள்.இதன் விளைவு தன் குலத்தில் சோரம் போன பெண்களால் ஈனப்படும் பெண் குழந்தைகளை அவர்களின் வாரிசுகளை விபச்சாரி பெற்ற மக்களாய் அழைக்கிறார்கள்.அதற்கு அவர்கள் இட்ட நாமங்கள் ஒன்றல்ல இரண்டல்ல.பல பல.அதில் ஒன்று திராவிடன்,மற்றொன்று சூத்திரன் தஸ்யூ அசுரன்.இப்படி பற்பல நாமங்கள் நீண்ட பட்டியலாய் நீண்டாலும் வேசை மகன் எனும் இழிவு மட்டும் நீங்காது பார்த்து கொள்கிறார்கள் பார்ப்பனர்கள்.இந்தசமுக இழிவை நீக்காமல் நான் இறக்கிறேனே என கலைப்பட்டார் அய்யா பெரியார்.
என்னை தேவடியாள் மகன் என அழைப்பதால் எனக்கொன்றும் குறையாது என எண்ணும்"தமிழர்"களை,தன்னை வேசை மகன் என அழைக்கும் பார்ப்பனர்களை அந்தணர்கள் என அன்பொழுக அழைக்கும்"தமிழர்"களை என்ன்வென்பது.அறிவு ஊட்ட எதனால் அடிப்பது.
இன்றும் சூத்திர சாட்சிக்கு ஆதாரமாய் கோயிலுக்குள் கருவறைக்குள் நுழைய முடியாத அவலம் தொடர்கிறது.இது அடிமை தனம் உருவாக்கிய மனநிலை.அடிமைத்தனம் மனிதனை அடியாளாக்குகிறது.அடிமைகள் அடியாட்கள் கூலிக்கு மாரடிக்கும் கும்பல்.கும்பல்களுக்கு இலக்குமில்லை குறிக்கோளுமில்லை.அடிமைகளின் விடுதலைக்காக போராடும் கொள்கையாளர்களுக்கு எதிராக வரலாறு முழுவதும் கச்சை கட்டியவர்கள் வசை பாடியவர்கள் அடிமைகளே!
அடிமைகள் தங்களை மனிதர்களாக எண்ணாத வரை மனித அடையாளத்தோடு வாழ முயலாத வரை இந்த போராட்டம் ஓய்வதில்லை.ஒழிவதில்லை.
அன்பு
ஏண்டாப்பா பரத்து நாம் தமிழர் சீமான் தமிழக அரசியல் பத்திரிக்கையாளர் கணேஷ்குமாருக்கு கொடுத்த பேட்டி 45 நிமிஷமும் பதிவு செய்யப்பட்டிருக்காமே. அதில் வெளிப்படையாக சீமான் பெரியாரை கொச்சைபடுத்தியிருக்காராமே, பிறகு ஏன் மறுப்பு அறிக்கை விடனும். அடுத்த இதழில் முழு பேட்டி வரப்போகுதாமே இதெல்லாம் உண்மையா என செந்தமிழனிடம் கேட்டு சொல்லுங்க எதுவாக இருந்தாலும் பட்டவர்த்தனமாக இருங்க. பெரியார் தி.க வேணும், கொளத்தூர் மணியின் நட்பு வேணும் ஆனால் பெரியார் கூடாது. என்ன அது உங்க வெங்காய கொள்கை.
ஆறுமுகம்
திராவிடம் பெயரில் ஏன் கற்காலத்திக்கு செல்ல வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரியணையில் இருந்தது திராவிட கட்சி தானே. தமிழன் திராவிடன் தானே அவன் அருகில் கொத்து கொத்தாக ஒரு சிறுபான்னை சமுகம் கொன்று குவித்தபோது இந்திய திராவிடம் என்ன செய்தது? ஈழத்தில் உள்ளவர்கள் வேறு நாம் வேறு என்று பேரா....சிரியர் அன்பழகன் கோவையில் தமிழக தமிழனை அதை கண்டுகொள்ளமல் இருக்க செய்ய சொல்லவில்லையா? இதற்க்கு தான் திராவிடமா? 200 போர் பம்பாயில் செத்ததற்கே பாகிஸ்தான் மீது இந்தியா படையெடுக்கும் அளவுக்கு சென்றதே ஏன் 500 மீனவன் கொல்லப்பட்டதற்க்கு ஒன்றும் செய்யவில்லை? இனத்துரோகம் செய்தது யார்? பார்பன காங்கிரஸ்காரர்களுடன் கூட்டுவைத்து கொள்ளையடித்ததோடு இன்ப்படுகொலைக்கு துணைபோனது யார்? திராவிடமா? தமிழரா? தமிழன் கொத்து கொத்தாக செத்தபோது தனது இனத்தின் விடுதலைக்கு போராடாமல் தனது குடும்ப உருப்பினர்களுக்கு பதவிக்கு அழைந்தது திராவிடமா? தமிழரா? போர் நடந்தால் பொது மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்றது திராவிடமா? தமிழரா? ஏன், வைக்கோ உட்பட, விஜயகாந்த போன்றவர்கள் திராவிடத்தை அழைக்கின்றனர். அவர்கள் தெலுங்கர்களாக இருப்பதாலா? மலையாளி எம்.ஜி.ஆரை ஏற்றுக் கொண்டோம் தமிழனுக்கு உறுதுணையாக இருந்தார். தமிழ் தமிழன் என்று பேசி திரிந்தவரை தமிழின தலைவன் என்‌றோம் இனத்திற்க்கா உ‌யிரை தனது குடும்பத்தை தந்தவர் தான் உலகத் தமிழர்களின் ஒப்பற் தலைவன். இனம் அழிக்க படும் போது அதுறக்கு துணை போனதோடு தமிழின உணர்வை மழுங்கடிக்க தமிழின் பெயரிலேயே மாநாடு நாடத்தியவன் தமிழரா? திராவிடமா? திராவிடத்தின் பெயரில் ஏமாந்தது போதாதா? திராவிடத்தை விற்று பிழைக்கும் வியாரிகளின் இனத்துரோகத்தால் தான் தமிழன் வீழ்ந்தான் என்பது வரலாறு ஏனென்றால் 30 ஆண்டுகளாக தமிருக்கு தனி நாடு இருந்தது அதை துரோகத்தால் அடிமையாக்கியது இனத்துரோக அடிமை தலைவர்களே.
பரத்
///////////////ஏண்டாப்பா பரத்து நாம் தமிழர் சீமான் தமிழக அரசியல் பத்திரிக்கையாளர் கணேஷ்குமாருக்கு கொடுத்த பேட்டி 45 நிமிஷமும் பதிவு செய்யப்பட்டிருக்காமே. அதில் வெளிப்படையாக சீமான் பெரியாரை கொச்சைபடுத்தியிருக்காராமே, பிறகு ஏன் மறுப்பு அறிக்கை விடனும். அடுத்த இதழில் முழு பேட்டி வரப்போகுதாமே இதெல்லாம் உண்மையா என செந்தமிழனிடம் கேட்டு சொல்லுங்க எதுவாக இருந்தாலும் பட்டவர்த்தனமாக இருங்க. பெரியார் தி.க வேணும், கொளத்தூர் மணியின் நட்பு வேணும் ஆனால் பெரியார் கூடாது. என்ன அது உங்க வெங்காய கொள்கை.///////////////

வந்தா வந்துட்டுப் போகுது. நாம் தமிழர் கட்சி மேலும் அம்பலமாகப்போகுது. இதில், எனக்கென்ன நட்டம்?
அன்பு
திமுக அதிமுக என்றும் அதைவிட மேலும் தெளிவாக கருணாநிதி, ஜெயலலிதா என்றும் சொல்லுங்கள் ஆறுமுகம் அவர்களே திராவிடம் திராவிடம் என்று பசப்ப வேண்டாம். திமுகவிலும், அதிமுகவிலும் இருப்பது தமிழர் அல்லாமல் திராவிடம் என்றால் காங்கிரசில், இடது கம்யூனிஸ்டு கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் தமிழர்கள் ஆவர் அதன் தலைவர்களும் தமிழர்களே. அவர்கள் ஏன் துரோகம் செய்தனர். தமிழர் துரோகத்தில் திமுகவிற்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதைவிட அதிக அளவு காங்கிரசு சோனியாவிற்கும் , இடது கம்யூனிஸ்டுகளுக்கும் உள்ளது. பெரியார் சொன்ன திராவிடர் கோட்பாட்டை மறுத்து இன்று கட்சி நடத்துபவர்களே திமுக, அதிமுகவினர் ஆகவே நேரடியாக அவர்களை கூண்டில் நிறுத்துங்கள். அரசியலில் பொறுக்கித்தின்னும் அவர்களை பெரியாரின் கோட்பாட்டுக்குள் அடக்காதீர். அவர்களாவது அரசியலுக்கு வந்து சில காலம் கொள்கையோடு இருந்தார்கள். நாம் தமிழர் கொள்கையை இழந்து அரசியலுக்கு வருகிறார்கள். உங்களிடம் தமிழர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
raasan
திராவிடம் என்ற பெயரில் இனி பார்பனியத்தை எதிர்க்கவேண்டாம் தமிழாலேயே எதிர்போம்!
பெரியன்
/////அடுத்த முதல்வர் கனவிலே மிதப்பவர்கள்...////// என்று பல பேர் சீமானை மறைமுகமாக விமர்சிக்கிறார்கள்..... அண்ணன் கொளத்தூர் மணி உட்பட.... தமிழ் நாட்டில் ஒரு தமிழன் ஆட்சி அமைக்க நினைப்பது அவ்வளவு பெரிய தவறா? இப்பொழுதுதான் நடுநிலையாளர்களே யோசிக்கிறோம்..... ஏன் தமிழ் நாட்டைத் தமிழனே ஆளவேண்டும் என்கிற முழக்கத்தைக்கூட முன்வைத்து இதுவரை யாரும் அரசியல் கட்சி நடத்தவில்லை????? சீமான் அடுத்த முதல்வர் கனவு கண்டால் அதில் எந்தத்தவறும் இல்லை..... அந்த நோக்கம் இல்லாமல் இருந்தால் அதுதான் தவறு! அவர் கனவு நனவாக வேண்டும்.... வாழ்த்துக்கள்!
ஷாலி
அதி அசுரன் கட்டுரைசாரத்தை மிக எளிமையாக திரு.செய்யது முகமதவர்கள் விளக்கியுள்ளார்கள். அதாவது “பார்ப்பனர்கள் தங்கள் எதிரிகளாக யாரை என்னினார்களோ அவர்களை இழிவு செய்யும் பொருட்டு இட்டழைத்த பட்டப்பெயர் திராவிடன்.”

இது மொழிவழி திரிபல்ல.இதற்க்கு வரலாற்றில் முன்னுதாரணமும் உண்டு.இன்று இயேசு கிறிஸ்து என்று கூறுகின்றோம்.இப்பெயர் வைத்தது யார் தெரியுமா? இயேசுவை எதிர்த்து சிலுவையில் அறைந்த யூதர்கள் தங்கள் எதிரிக்கு வைத்த பெயர்தான் இயேசு கிருஸ்து.

எதிரிகள் வைத்த பெயாறாலே இன்றும் அறியப்படுகிறார்.இதை மாற்றவேண்டும் புதுப்பெயர் வைக்கவேண்டும் என்று போராடுவது அறிவார்ந்த செயலா? சீமான்கள் எதிர்க்கும் திராவிடமும் இந்நிலையிலேயே உள்ளது.

சீமான்களின் முதல்வர் கனவு பலித்து இங்கிருக்கும் மலையாள,கன்னட,தெலுங்கர்கள் அடித்து விரட்டப்பட்டு.மறுவினையாக மற்ற மாநிலங்களில் விரவிக்கிடக்கும் தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டு “நாம் தமிழ்நாடு” பிறக்க வாழ்த்துவோம்.
தமிழர்கள் என்று சொல்லிக்கொண்ட சேர சோழ பாண்டியர்கள் கூட ஒரே தமிழ்நாடக்க முடியவில்லை.செந்தமிழ்சீமான் ஆக்கிவிடுவார்.நம்புவார்கள் சீமான் அம்பிகள்.
Jegan
Unlike people who sit behind computer and find fault with seeman,seeman works hard on the ground for tamils,had he joined DMK or ADMK he could have earned milllions with his peaking skills,instead he took a different path,went to jail,lost his cinema career,all for the sake of tamils and here we are siting in the comfort of our homes judging him..
karuthalan
அதிஅசுரன் பணி சிறக்கட்டூம்
ramachandran mohan
very disgusting.we accept a foreigner to rule this country and all are united in abusing brahmins.
Mu Muthukumar
ஒரு அரசியில் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டுமானால் ஒப்புக்காக இந்திய இறையாண்மைக்கு கட்டுபடுகிறோம் என்று சொல்லத்தான் வேண்டும்,இது கூடவா பெரியார் திகவினருக்கு தெரியாது, இந்திய இறையாண்மைக்கு கட்டுப்பட mattom என்று சொல்லும் ஒரு அரசியல் கட்சியை காட்டுங்கள் பின்பு நாம்தமிழர் கட்சியை விமர்சிக்கலாம்..

தனது சுயநலனுக்காக திகவில் இருந்து பிரிந்து வந்த பெரியார் திக சீமானை விமர்சிப்பது உச்ச கட்ட நகைச்சுவை .

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.