"அரசே என்ன இது? உங்கள் உடல் மூடப்பட்டு முகம் மட்டும் தெரிகிறது. அந்த மல்யுத்த வீரனுடைய முகம் மூடப்பட்டு உடல் மூடப்படாமல் இருக்கிறது. ஒன்றும் புரியவில்லையே"

"அட மங்குனி அமைச்சரே! உன் மூளைக்கு இதெல்லாம் புரியாது. இப்போது நான் எப்படி இருக்கிறேன் என்று எனக்குப் பின் வரும் தலைமுறைக்குத் தெரியவா போகிறது? இப்படி நோஞ்சானாக ஒரு மன்னன் இருந்தான் என்பதைவிட பராக்கிரமசாலியாக, மாபெரும் வீரனாக இருந்தான் என்று வரலாறு சொல்ல வேண்டும். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!"

இம்சை அரசன் திரைப்படத்தில் வரும் இந்தக் காட்சி போல இருக்கிறது 'நாம் தமிழர்' சீமானின் பேச்சும் போக்கும்.

seeman_2992009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்குப் பிறகு தொடங்கிய ஓர் அரசியல் கட்சிதான் 'நாம் தமிழர்'. திரைப்படங்களில் ஒரே பாடலில் பண்ணையாருக்கு எதிராக மக்களைத் திரட்டும் கதாநாயகன் போல செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழக அரசியலில் புரட்சி செய்யக் கிளம்பியிருக்கிறார்.

தமிழீழத்தை மீட்பதற்காக விடுதலைப் புலிகள் நடத்திய மாபெரும் போர் தற்போதைக்கு முடிவுற்ற சூழலில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியையும் (பிற்பாடுதான் கொடியில் சிறிது மாற்றம் செய்தனர்) தமிழர் பெருந்தலைவர் சி.பா. ஆதித்தனார் ஆரம்பித்த 'நாம் தமிழர்' இயக்கப் பெயரையும் 'எடுத்து'க்கொண்டு தமிழக அரசியலில் புரட்சி செய்யக் கிளம்பி இருக்கிறார் அண்ணன் சீமான் அவர்கள் (சொந்த புத்தி எதுவுமில்லை என்கிற விவாதத்திற்கெல்லாம் போக வேண்டாம்).

மேதகு பிரபாகரன் அவர்களின் பெயரையும் விடுதலைப் புலிகளின் பெயரையும் மேடைகளில் அவர் சொல்லும்போது எழும் கைத்தட்டல்களையும், சேரும் கூட்டத்தையும் நாம் தமிழர் கட்சி தவறாக மதிப்பீடு செய்துகொண்டது என்பது அக்கட்சியின் அடுத்தடுத்த செயல்பாடுகளில் அம்பலமாகிக் கொண்டேயிருக்கிறது.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது தமிழகத்தில் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியின் துரோகத்தை எதிர்த்து அதிமுகவுக்கு வாக்கு கேட்டு மேடைதோறும் முழங்கினார் சீமான். கே.ஏ.செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்களைவிட வார்த்தைக்கு வார்த்தை 'அம்மா' என்று உச்சரித்தார். 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்றார். 'ஈழத்தாய்' என்று ஜெயலலிதாவை வாயாரப் புகழ்ந்தார். 'அம்மா'வைப் புகழ்வது அண்ணன் சீமானின் உரிமை; அதற்குள் நாம் போகவில்லை. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 'அம்மா' அரியணை ஏறிய பின் தமிழீழப் பிரச்சனையில் 'ஈழத் தாய்' போல் செயல்பட்டாரா? 'இலை மலர்ந்தது! ஈழம் மலர்ந்ததா?' என்ற கேள்வியைக் கேட்பதற்கு நமக்கு உரிமை இருக்கிறது.

பழ.நெடுமாறன் அவர்களுக்கு கருணாநிதி மீது இருப்பது போன்ற பகை சீமானுக்கு இருக்க வாய்ப்பில்லை. ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஜெயலலிதா மீது இருப்பது போன்ற விசுவாசமும் சீமானுக்கு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் மக்கள் விரோதப் போக்குக்கு எதிராக ஒரு போராட்டம்கூட இதுவரை சீமான் நடத்தாதற்குக் காரணம் என்ன? பால் விலை, மின் கட்டணம், பேருந்து கட்டண உயர்வின்போது கூட தமிழக அரசைக் கண்டித்து தமது இடது கையைத் தூக்கிப் போராட்டம் நடத்தவில்லையே! பரமக்குடியில் தலித்துகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தோ அல்லது விழுப்புரம் மாவட்டத்தில் இருளர் பெண்களை ஜெயலலிதா அரசின் போலீசு பாலியல் வன்முறை செய்த கொடுமையையோ கண்டித்து போராட்டம் நடத்தவில்லை.

இந்த லட்சணத்தில்தான் "இது மற்றுமோர் அரசியல் கட்சி அன்று - மாற்று அரசியல் புரட்சி",

"நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல - புரட்சிவாதிகள்"

- என்கிற பிரகடனத்தை செய்திருக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சியின் ஆவணத்தைப் படிக்கும்போதே தலை சுற்றுகிறது. தேமுதிகவின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கட்சியின் கொள்கையைக்கூட நாம் புரிந்துகொள்ள முடியும். அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான கார்த்திக் பேசுவதைக்கூட நாம் புரிந்துகொள்ள முடியும். ஆனால் 'நாம் தமிழர் கட்சி'யின் ஆவணத்தைத்தான் நாம் புரிந்துகொள்ள முடியவில்லை.

முதலில், "இது மற்றுமோர் அரசியல் கட்சி அன்று" என்று சொல்வதுதான் புரியாத புதிராக இருக்கிறது. அதிமுக, திமுக, தேமுதிக போன்ற கட்சிகளைப் போலத்தான் பேனர்கள் வைக்கிறார்கள், சுவரொட்டி ஒட்டுகிறார்கள், மாநாடு போடுகிறார்கள், கொடி பிடிக்கிறார்கள், 'வாழ்க சீமான்' முழக்கமிடுகிறார்கள். ஆவணத்தின் நடத்தை விதிகள்கூட புதிதாகவோ அல்லது முற்போக்கானதாகவோ இல்லை. அப்புறம் எங்கிருந்து வந்தது மாற்று அரசியல் புரட்சி?

"நாங்கள் அரசியல்வாதிகள் அல்லர் - புரட்சிவாதிகள்" என்ற அறிவிப்பைப் பார்த்தவுடன் ஏதோ தமிழ்த் தேச அரசை அமைக்கப் படை அமைத்து ஆட்சியைக் கைப்பற்றப் போகிறார்களோ என்று பார்த்தால்...

"கட்சி பதிவு செய்த நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் கட்சி போட்டியிடும் என்று கட்சி உறுதி அளிக்கிறது" (பிரிவு 5 - பக்கம் 102)

இதுதான் புரட்சிவாதிகளுக்கான இலக்கணமாம்.

'புரட்சி வரப்போகிறது. புரட்சி வருகிறது' என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக உண்டியல் குலுக்கிக்கொண்டே சில தோழர்கள் சொல்வார்கள். அந்தப் புரட்சி இதுதானோ என்ன எழவோ தெரியவில்லை.

அட இதுகூட போகட்டும். தமிழ்நாட்டில் நிலவும் முரண்பாடுகள் என வரிசைப்படுத்துகிறார்கள். தமிழ்த் தேசிய இனத்திற்கும் இந்திய தேசிய இனத்திற்குமான முரண்பாடு, தமிழ்த்தேசிய இனத்திற்கும், திராவிட தேசிய இனத்திற்கும் முரண்பாடு... என்று பத்து வகை முரண்பாடுகளை வரிசைப்படுத்துகிறார்கள்.

இந்திய தேசிய இனம், திராவிட தேசிய இனம் என்று உண்டா என்பதை விளக்க வேண்டும். தேசிய இனத்திற்கான அடிப்படைக் கூறுகள் என்ன என்பதுகூடத் தெரியாமல் ஆவணம் வரிசைப்படுத்துகிறது.

சரி இதுகூட போகட்டும். "மேல்சாதி - கீழ்ச்சாதி, தீண்டாமைக்குள்ளானோர் - தீண்டாமை புரிவோர் இடையே முரண்பாடு"

"ஆணாளுமை- பெண்ணடிமை முரண்பாடு" - பக்கங்கள் 39, 40)

இந்த முரண்பாடுகள் மேற்கட்டுமான முரண்பாடுகளாம். 'ஆட்டுக்கும் நாலு காலு; மாட்டுக்கும் நாலு காலுன்னு பெரிய பெரிய தத்துவமெல்லாம் சொல்றீங்களே' என்று நடிகர் ஜனகராஜைப் பார்த்துச் சொல்வதைப்போல்தான் இருக்கிறது இந்த மேற்கட்டுமானம் கண்டுபிடிப்பு.

தீண்டாமை, காணாமை, அண்டாமை என்கிற சமூகக் கொடுநெறி இருந்ததை நாம் தமிழர்கள் அறிவார்களா? நாடார் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட காணாமைக்கு எதிராகத்தான் குமரி மாவட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை எதிர்த்து அய்யா வைகுண்டர் போராடினார் என்கிற வரலாறு நாம் தமிழர்களுக்குத் தெரியுமா? தொட்டால் தீட்டு என்கிற சமூகக் கொடுமை எப்படியெல்லாம் வடிவம் மாறி இப்போதும் தொடர்வதை நாம் தமிழர்கள் உணர்வார்களா?

நெல்லை மாவட்டம் குறிஞ்சான்குளத்தில் கோவில் வழிபாட்டு உரிமை கோரியதால் 5 தலித்துகள் கதறக் கதற கழுத்தறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். கடலூர் மாவட்டம் புளியங்குடியில் 3 தலித்துகள் தூங்கிக் கொண்டிருக்கும்போது கழுத்தறுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். மதுரை மாவட்டம் மேலவளவில் தேர்தலில் நிற்க முயன்றதற்காக பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த 7 தலித்துகளை வெட்டிக் கொன்றார்கள். மாவீரன் இமானுவேல் சேகரன் சமூக உரிமை கோரியதற்காகக் கொல்லப்பட்டார். எப்போதெல்லாம் தலித்துகள் தலைநிமிர முயல்கிறார்களோ அப்போதெல்லாம் பெரும் வன்முறை தலித்துகள் மீது திணிக்கப்பட்டது. தேனி, போடி கலவரமாகட்டும் மற்ற தென்மாவட்டங்களில் நடைபெற்ற கலவரமாகட்டும் எல்லாமே இப்படித்தான் வெடித்தன.

இதுவெல்லாம் மேற்கட்டுமானமாம்.

"இந்திய தேசியத்திற்கு அடிப்படை இந்துத்துவம். இந்துத்துவத்திற்கு அடிப்படை சாதியம். சாதியம்தான் இந்துத்துவத்தையும் இந்திய தேசியத்தையும் காப்பாற்றுகிறது"

புரட்சியாளர் அம்பேத்கர் மிக ஆழமாக ஆய்வு செய்து சாதி ஒழிப்புக்கான களத்தைத் தேர்வு செய்து களமாடினார். தந்தை பெரியார் அதற்காகத்தான் கடவுள் மறுப்புக் கொள்கையையும் இந்துத்துவ எதிர்ப்புக் கொள்கைகளையும் முன்வைத்து சாகும் வரை போராடினார். வடக்கே ஜோதிராவ் பூலே முதல் தெற்கே அய்யா வைகுண்டர் வரை வாழ்நாள் முழுக்க சாதி ஒழிப்புப் போராட்டத்தை நடத்தினார்கள்.

சாதிவெறியில் சேரிக் குடிசைகள் தீக்கிரையாயின. பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது. பொதுப்பாதையில் நடக்க முடியாது. கோவிலுக்குள் நுழைய முடியாது. பொது நீரோட்டத்தில் கலக்க முடியாது. சேரித் தமிழர்களின் வலியும் வேதனையும் 'நாம் தமிழர்' என்று சொல்லுபவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை என்பதால்தான் பன்னெடுங்காலமாக தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்கும் 'சாதியம்' மேற்கட்டுமானம் என்று சொல்ல முடிகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் இன்னமும் 'நாடு கட்டமைப்பு' என்கிற சாதியக் கட்டமைப்பு இருப்பதை அம்மாவட்டத்தில் பிறந்த அண்ணன் சீமான் அறிவாரா என்பது தெரியவில்லை. கரியமாணிக்கம் அம்பலமும் அவருக்குப் பின் வந்த அவரது மகன் ராமசாமி அம்பலமும் சிவகங்கை மாவட்டத்தையே தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொடுமையை 'நாம் தமிழர்'கள் அறிவார்களா? அங்கு தலித்துகளின் நிலை என்ன என்பதற்கு கண்டதேவி கோவிலே சாட்சி. இன்னமும் வடம்பிடிக்கவே முடியாத கொடுமையைச் செய்வதும் தமிழர்கள்தான். இதைத்தான் 'மேற்கட்டுமானம்' என்று சொல்கிறார்கள் போலும்.

இந்தியக் கட்டமைப்பு குறித்தும் இந்துத்துவ பாசிசம் குறித்தும் இவற்றுக்கெல்லாம் அடிப்படையான சாதியம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பல தொகுப்புகள் உள்ளன. அவற்றை எல்லாம் தயவுகூர்ந்து 'நாம் தமிழர்கள்' படிப்பதுதான் அறிவுடைமை. குறைந்தபட்சம் பாவலர் தணிகைச்செல்வன் அவர்களின் 'தேசியமும் மார்க்சியமும்' என்கிற நூலையாவது வாசிப்பது நல்லது.

இந்துத்துவத்தை உடைத்தால்தான் சாதியத்தை வேரறுக்க முடியும் என்பதை ஆய்வு செய்த பின்புதான் புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தத்திற்கு மாறினார். இந்துத்துவம் சக மனிதர்களை இழிவுபடுத்துகிறது; மனிதர்களாக அங்கீகரிக்க மறுக்கிறது என்பதால்தான் தமிழகத்திலும் கிறித்தவர்களாக, இசுலாமியர்களாக மதம் மாறினார்கள். கிறித்தவம் வந்த பிறகுதான் தலித்துகள் படிக்கவே ஆரம்பித்தார்கள். நல்ல உடை உடுத்த ஆரம்பித்தார்கள். நல்ல உணவு உண்ண ஆரம்பித்தார்கள். அதற்கு முன்பு வரை தலித்துகள் படிப்பதே மனுதர்மத்திற்கு எதிரானது என்ற நிலை இருந்தது. அந்த மனுதர்மத்தின் சட்ட வடிவம்தான் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம்.

இப்படியாக இந்துத்துவ பாசிச அடக்குமுறைக்கு எதிராகத்தான் தமிழகத்தில் தலித்துகள் தேவாலயங்களிலும் மசூதிகளிலும் தஞ்சம் புகுந்தார்கள். இந்த வரலாற்றுப் பின்னணி தெரியாமல் கிறித்தவ முரண்பாடு, இசுலாமிய முரண்பாடு என்று உளறுவதெல்லாம் இந்துத்துவத்திற்கு, மனுதர்மத்திற்கு, பார்ப்பனியத்திற்கு சாமரம் வீசுவதாகத்தான் அமையும். வரலாற்று அறிஞர்களும் சமூக அறிஞர்களும் இன்னும் சமூகத்தைச் சீர்திருத்த வந்த அறிஞர் பெருமக்கள் எல்லாம் இந்துத்துவத்தையும், அதற்கு அடிப்படையாக இருக்கிற சாதியத்தையும் வேரறுக்க வேண்டும் என்று பரப்புரை செய்துவிட்ட‌ பிறகு, அந்த இந்துத்துவ பாசிசம் குறித்து 'நாம் தமிழர்கள்' வாய் திறக்காததை திட்டமிட்ட சதியாகவே கருத முடிகிறது. கிறித்தவர்களும், இசுலாமியர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான் என்பதை ஒருபோதும் ராமகோபாலன்களும் அத்வானிகளும் மோடிகளும் ஏற்றுக்கொண்டதில்லை. இவர்கள் வழியில் சீமான்களும் ஏற்கவில்லை என்பதைத்தான் நாம் தமிழர் ஆவணம் பிரகடனப்படுத்துகிறது. குஜராத்தில் மோடி செய்த சிறுபான்மை இன அழித்தொழிப்பை இங்குள்ள 'சோ' கும்பலும் இந்துத்துவக் கும்பலும் 'புரட்சி' என்று சொல்வதைப் போலத்தான் நாம் தமிழரின் 'புரட்சிவாதிகள்' அறிவிப்பா?

இந்த ஆவணத்தின் உச்சக்கட்ட காமெடியாக அமைந்திருப்பது சமுதாய வழிகாட்டிகள், போற்றுதலுக்குரிய பெருமக்கள் (பக்கம் 43, 44) என்கிற பகுதிதான்.

மனுதர்மத்தைக் கட்டிக் காக்கவும், இந்துத்துவத்தைக் கட்டிக் காக்கவும், சாதியத்தைக் கட்டிக் காக்கவும் வாழ்நாள் முழுக்க செயல்பட்ட முத்துராமலிங்கத் தேவர், 'நாங்கள் இந்துக்கள் இல்லை' என்று கலகம் செய்த தலித்துகளுக்கெதிராக அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டார். இத்தகைய அடக்குமுறைக்கெதிராகக் களமாடியவர்தான் மாவீரன் இமானுவேல் சேகரன்.

இன்றைக்கே சாதியம் தலித்துகள் வாயில் மலம் திணிக்கிறது என்றால் 1960களில் சாதியம் எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இப்படித்தான் மாவீரன் இமானுவேல் சேகரன் சாதிய அடக்குமுறைக்கெதிராகக் களமிறங்கினார். இதைப் பொறுக்க முடியாமல்தான் இமானுவேல் சேகரன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலையின் முதல் குற்றவாளி முத்துராமலிங்கத் தேவர்தான். (அரசியல் - சமூகப் பின்புலத்தால் பின்னர் முத்துராமலிங்கத் தேவர் விடுதலை செய்யப்பட்டார்.) தலித்துகள் இன்றளவும் அக்கொடூரத்தை மறக்கவில்லை. ஆனால் 'நாம் தமிழர்'கள் படுகொலையானவரையும் போற்றுவார்களாம்; கொலைகாரனையும் போற்றுவார்களாம். இதுதான் நாம் தமிழர்களின் புரட்சியா?

ஒருமுறை அண்ணன் சுபவீ, தோழர் தியாகு ஆகியோர் முல்லைப் பெரியாறு நீர்ச்சிக்கல் குறித்து உசிலம்பட்டி வழியாக நடைபயணம் சென்றார்கள். வழியில் செக்கானூரணியில் நடைபயண விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் தமிழ் தமிழர் இயக்கத் தோழர்கள். "பொதுக்கூட்ட மேடைக்குப் போகும்முன் தேவர் அய்யா சிலைக்கு மாலை போட்டுவிட்டுத்தான் போக வேண்டும். இது இந்த ஊர் வழக்கம்" என்று ஊர் பெருசுகள் சொன்னார்கள். ஆனால் அண்ணன் சுபவீயும், தோழர் தியாகுவும் சிலைக்கு மாலை போட மறுத்து பொதுக்கூட்டத்தையும் ரத்து செய்துவிட்டுத் திரும்பினார்கள். பின்னர் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சுபவீ அவர்களும், தியாகு அவர்களும் பேசும்போது, "முத்துராமலிங்கத் தேவர் ஓர் ஆதிக்கத்தின் குறியீடு. ஆதிக்கத்தைத் தகர்ப்பதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். ஆகவே அந்த சிலைக்கு மாலை அணிவிக்க விரும்பவில்லை" என்று கூறினார்கள். சமூகத்தைத் தலைகீழாக மாற்ற விரும்புபவர்களுக்கு குறைந்தபட்சம் இந்தத் துணிச்சலாவது இருக்க வேண்டும். கொலைகாரனுக்கும் வீரவணக்கம்; கொலையுண்ட மாவீரனுக்கும் வீரவணக்கம் என்பது ஏமாற்று வேலையல்லாமல் வேறென்ன?

அடுத்தபடியாக, செயற்பாட்டுக் கொள்கைகள் என்கிற தலைப்பில் சொல்லப்பட்டுள்ள 11வது செயற்பாட்டைப் பாருங்கள். "சாதிய, சமய மேலாளுமையை ஒழிப்போம். சமத்துவமாய் வாழ வழிவகை செய்வோம். பிறப்புவழி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி உதவிகளையும் தொழில் தொடங்குவதற்கான உதவிகளையும் பெயரளவில் திட்டமிட்டுச் செய்வோம். சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். தமிழர் திருமண மண்டபங்கள், தமிழர் சுடுகாடு, தமிழர் இடுகாடு அமைப்போம்".

இப்படி, மொத்தம் 36 செயற்பாட்டுப் பணிகளைச் செய்யப்போவதாக அறிவித்திருப்பதில் இந்த 11வது செயற்பாட்டுக் கொள்கையை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள்; தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுப் பின்னணியை 'நாம் தமிழர்கள்' எப்படிப் புரிந்திருக்கிறார்கள் என்பது புரியும்.

சாதிய, சமய மேலாளுமையை ஒழிப்பார்களாம். சாதியும் சமயமும் இருக்க, ஆளுமையை மட்டும் ஒழிப்பார்களாம். எப்படி என்றுதான் புரியவில்லை. நாமோ, "வீடு நாறுகிறது. வீட்டிலிருக்கிற மலத்தை, (சாதி-சமயம்) அப்புறப்படுத்த வேண்டும் என்கிறோம். 'நாம் தமிழர்'களோ ஆளுமை செய்கிற அந்த நாற்றத்தை மட்டும் ஒழிக்கப் போகிறார்களாம்.

பிறப்புவழி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி உதவிகளையும், தொழில் தொடங்குவதற்கான உதவிகளையும் செய்வதாக அறிவித்துள்ளார்கள். அது என்ன பிறப்பு வழி ஒடுக்கப்பட்டவர்கள் என்று தெரியவில்லை. செருப்புத் தைக்கும் சக்கலியருக்கும் பிணம் எரிக்கும் வெட்டியானுக்கும் சவரம் செய்யும் நாவிதனுக்கும், துணி வெளுக்கும் வண்ணாருக்கும் கல்விக்கான உதவி செய்து மீண்டும் இதே தொழிலைச் செய்ய உதவி செய்யப் போகிறார்களா? இவர்கள்தான் பிறப்புவழி ஒடுக்கப்பட்டவர்கள் என்று 'நாம் தமிழர்' அடையாளம் காட்டுகிறதா? இதுதான் அந்த அடையாளம் என்றால் இராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்கும் 'நாம் தமிழரின்' இச்செயற்பாட்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அத்தோடு இல்லாமல் தமிழர் சுடுகாடு, தமிழர் இடுகாடுகளை அமைப்பார்களாம். இன்னமும் நாமக்கல் மாவட்டம் மொஞ்சனூரில் தலித்துகளின் பிணத்தை எடுத்துப் போகப் போராட வேண்டியிருக்கிறது. தமிழ்நாடு முழுக்க இந்தக் கொடுமைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதைப் பற்றியெல்லாம் 'நாம் தமிழர்கள்' கவலைப்படாமல் தமிழர் சுடுகாடு அமைக்கப் பாடுபடுவார்களாம். தமிழர்களிலேயே எந்தத் தமிழன்? என்ன சாதி? சாதியில் என்ன பிரிவு? பிரிவில் என்ன வகையறா? என்றெல்லாம் தமிழன் கொலைவெறியோடு சுற்றிக்கொண்டிருக்கிறான். இதனை ஒழிக்க முன்வராமல் தமிழர் சுடுகாடாம், தமிழர் இடுகாடாம். 23ஆம் புலிகேசி மன்னன் சாதிச் சண்டை போடுமிடம் என்று அமைத்ததுபோலத்தான் நாம் தமிழரின் இந்தச் செயற்பாடு.

முதலில் 'நாம் தமிழர்' என்று முழங்குபவர்களுக்கு தமிழகச் சூழலில் தமிழர்களுக்கு எது முதன்மையான பிரச்சனை, தமிழர்களை ஒன்றுசேர விடாமல் தடுப்பது எது என்கிற வரலாற்று, சமூக, அரசியல் அறிவு அவசியம். பன்னெடுங்காலமாக கூறுபோடுவது சாதியும், மதமும்தான். இவைதான் தமிழரின் வீழ்ச்சிக்கு மூலம். ஊர் என்றும், சேரி என்றும் இரண்டு குடியிருப்புகள் இன்னும் இருக்கத்தானே செய்கிறது. இதைவிட வேறு என்ன அவமானம் இருக்கிறது? தமிழர்களே ஊர்த்தெரு தமிழர்களாகவும், சேரித்தெரு தமிழர்களாகவும் பிரிந்து கிடக்கிறார்கள். சக மனிதன் சாதியின் பெயரால் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டு இழிவுபடுத்தப்படும் நிலைகண்டு கொதிக்காதவன் என்ன புரட்சி பேசி என்ன ஆகப்போகிறது?

விரட்டி விரட்டிக் கொல்லப்படுகிறார்கள்; சேரிப் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறார்கள்; சேரிகள் தீக்கிரையாக்கப்பட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாய் சொந்தக்காரர்களின் வீடுகளில் சென்று தங்குகிறார்கள்; நாயைப் போல் காவல்துறையால் நடுத்தெருவில் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்... சாதியின் பெயரால் தலித்துகள் மீது இத்தகைய அடக்குமுறைகள் திணிக்கப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் தலித்துகளின் விடுதலைத் தாகம் மட்டும் இன்னும் குறையவில்லை.

அனைத்து வகை ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை பெற தலித்துகள் இன்னமும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிங்களவனின் ஒடுக்குமுறைக்கெதிரான தமிழனின் விடுதலைப் போராட்டமும், சாதிவெறித் தமிழர்களுக்கெதிரான சேரித் தமிழர்களின் விடுதலைப் போராட்டமும் ஒன்றுதான். அங்கு சிங்களவன் தமிழனை சுட்டுக் கொல்கிறான். இங்கு தமிழனே இன்னொரு தமிழனை வெட்டிக் கொல்கிறான். பெயர்தான் மாற்றம்; ஆதிக்கம் ஒன்றுதான். விடுதலைப் போராட்டம் என்பதை சொந்த மண்ணிலிருந்துதான் தொடங்க வேண்டும். தலித்துகள் அனைத்து வகை ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலை பெற்றால்தான் தமிழர் விடுதலை சாத்தியமாகும். பிற மனிதனின் இழிவை, ஒடுக்குமுறையை ஒழிக்காமல் தமிழீழத்திற்காகப் போராடுவோம் என்று சொல்வதெல்லாம் ஏமாற்று வேலைதான். இது 'நாம் தமிழர்'களுக்கு மட்டுமல்ல; தமிழ்த் தேசியவாதிகள் அனைவருக்கும் பொருந்தும்.

முதலில் சாதி, மதம் குறித்த வரலாற்றைப் படிக்க வேண்டும். அப்புறம் அது புரிய வேண்டும். அப்புறம்தான் புரட்சி செய்ய மக்களைத் திரட்ட வேண்டும். அதைத்தான் புரட்சியாளர் அம்பேத்கர் கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய் என்றார். 'நாம் தமிழர்கள்' முதலில் கற்க வேண்டும். அப்புறம்தான் மற்றவை.

மீண்டும் வடிவேலு காமெடியோடவே இவ்விவாதத்தை முடிப்போம் -

"அய்யோ... இப்பவே கண்ணைக் கட்டுதே...!"

- வன்னிஅரசு

Comments

40 comments

40
neethimalar
தங்களது கட்டுரையின் விமர்சனங்கள் நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் பொருந்தக்கூடியது அல்ல. இங்குள்ள பெரும்பாலான சிறுபான்மையின கட்சிக்கும் பொருந்தும்.என்னுடைய கேள்வி என்னவெனில் தமிழர் தமிழர் என்று சிம்மக்குரலெடுத்து வீதியோர மேடைகளிலெல்லாம் முழக்கமிட்டுச் செல்லும் சீமான் யாரை தமிழர் என்று அழைக்கிறார்.
ஷாலி
என்னதான் ஆயிரம் உண்மைகளை அள்ளி இறைத்தாலும் நாம் தமிழர்களை மாற்றிவிட முடியாது. சித்தன் போக்கு சிவன்போக்கு என்று சீமான் புறம்போக்கிலேயே போய்க் கொண்டிருப்பார்கள்.வித்தையை மெத்தப்படித்து வினாக்களுக்கு விடைபகரும் வித்தியாபதிகள் ஆவண சிற்பிகள் அங்கு அனேகம். பின்னூட்ட அம்மிகொத்த இனி வந்துவிடுவார்கள்.வாங்க...வந்து கொத்திட்டு போங்க!
சம்பூகன்
புரட்சி என்ற சொல்லைக் கொச்சைப்படுத்திய நாடு ஒன்று உலகத்தில் உள்ளது என்றால் அது நம்ம கேடுகெட்ட தமிழ்நாடுதான்.சினிமாவில் கூத்தடித்தவன்,கூத்தடித்தவள்,மறுபடியும் ஒரு கூத்தடித்தவன் இங்கே புரட்சித்தலைவர்களாக,தலைவிகளாக,கலைஞர்களாக வலம் வரும் வெட்கங்கெட்ட நாடு இது.இப்போது அதே புரட்சி என்ற சொல்லை இந்த புதிய சினிமாக்காரர் தன்னைப் புரட்சியாளன் என்று சொல்லிக்கொண்டு கிளம்பியிருக்கிறார்.இந்தியாவில் உண்மையிலேயே புரட்சி செய்த தந்தை பெரியாரும்,அண்ணல் அம்பேத்கரும் தம்மைப் புரட்சியாளர்கள் என்று சொல்லிக்கொண்டதில்லை.ஆனால்,இந்த சினிமாப்புலிகள் தம்மை புரட்சியாளர்கள் என்று உளறிக்கொண்டிருக்கின்றன.விஜயகாந்தே தேவலாம் என்ற நிலையில்தான் சீமானின் செயல்பாடுகள் இருக்கின்றன.உதட்டில் ஒன்று,உள்ளத்தில் ஒன்றுமாய் அச்சு அசல் அரசியல் வியாபாரியாய் வலம் வரும் சீமானை அடையாளம் காண இந்தக் கட்டுரை பயன்படும்.இதற்கு மேல் அவருக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்கவேண்டாம்.
viyasan
தமிழர்கள் வந்து அம்மி கொத்தி விட்டுப் போகவேண்டியது தான் ஆனால் அந்த அம்மியில் அரைக்கிற வேலையைத் தொடர்ந்து தாங்களே செய்யவேண்டுமென்பது மட்டுமல்ல, அம்மியையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்து சொந்தமாக்கிக் கொள்ள விரும்புகிறவர்கள் தான் திராவிடம் என்ற பெயரில், தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரித்து, தலித்துக்களைத் தூண்டி விட்டு, நாம் தமிழர்கள் என இனவுணர்வோடு, தமிழ்நாட்டைத் தமிழரல்லாதாரின் ஆதிக்கத்திலிருந்து மீட்க புறப்பட்டுள்ள சீமானைப் போன்ற தமிழர்களைத் தூற்றுகிறார்கள். எல்லாம் அம்மி தங்களின் கைகளை விட்டுப் போய் விடுவோமெயென்ற கவலையேயன்றி வேறுதுவுமல்ல, இந்த முட்டாள் தமிழர்கள் அதைப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும், அல்லது தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் 'நாம் தமிழர்' என இணைவதை எதிர்க்குமளவுக்கு, இவர்களுக்குத் துணிச்சல் எப்படி வந்தது?
viyasan
சாதிப்பிரச்சனை தீர்க்க வேண்டியது தான், அதைத் தீர்ப்பதற்கு தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார ஆளுமை சாதியை எதிர்க்கும் தமிழர்களிடம் இருக்க வேண்டும். சாதியடிப்படையிலமைந்த கட்சிகள் சாதிப்பாகுபாட்டை வளர்க்குமே தவிர ஒழிக்காது. சாதி ஒழிக்கப்பட்டால் அந்தக் கட்சிகளும், தலைவர்களும் காணாமல் போய்விடுவார்கள், அதனால் சாதியொழிப்பு அவர்களின் நோக்கமல்ல. நாற்பது வருடங்களுக்கு மேற்பட்ட திராவிட ஆட்சியில் தான், 1967லிருந்தே எத்தனை சாதிக் கலவரங்கள் படுகொலைகள், கீழவெண்மணியிலிருந்து நேற்றைய உத்தபுரம் வரை நிகழ்ந்துள்ளன. ஆனால் இவை எல்லாம் திராவிடர்களே ஒருவருக்கொருவர் தம் சாதி வெறியினால் செய்த படுகொலைகள், உயிரோடு தீவைத்துக் கொளுத்தியது வரை. இதற்கு என்ன அர்த்தம்? எந்த திராவிட கட்சியாவது வாய்திறந்து தன் பகுத்தறிவுப் புலனாய்வு செய்ததா? அல்லது தன் கொள்கைகளைத் தான் புனர் ஆய்வு செய்ததா? ஒரு சாதியினரைக் கண்டித்தால் மற்ற சாதியினரின் ஓட்டை இழக்க நேரிடும், அதனால் திராவிடக் கட்சிகள் சாதிவெறியர்களை ஒன்றும் செய்யவில்லை. அப்படியிருக்க, சாதி ஒழிக்கப்பட வேண்டியது, அதற்கு முதற்படியாக, எங்களின் சாதிப்பிளவுகளை மறந்து நாம் தமிழர்களாக ஒன்றிணைவோம் என்பது தான் சீமானின் கொள்கை. அதற்கு ஒரு சந்தர்ப்பம் கூடக் கொடுக்காமல். தமிழரல்லாதவர்களின் தூண்டுதலால், நாம் தமிழர் கட்சியை எதிர்ப்பது வெறும் அபத்தம். சீமான் முத்துராமலிங்கத் தேவரையும், கெளரவித்தார், இமானுவேல் சேகரனையும் கெளரவித்தார் ஏனென்றால் அவர்களை அவர் தமிழர்களாக மட்டும் தான் பார்க்கிறாரே தவிர, சாதிக் கண்ணோட்டத்துடன் பார்க்கவில்லை. முத்துராமலிங்கத் தேவரை மதிக்காமல், இமானுவேல் சேகரனை மட்டும் போற்றினால் எப்படி தமிழர்களை நாம் தமிழர்களாக இணைக்க முடியும்? ஒன்று படவே முடியாமல், சாதியடிப்படையில் பிளவு பட்டுக் கிடக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களை ஒன்றிணைக்க ஒரு தமிழன் முயல்வதை தமிழர்கள் எல்லோரும் பாராட்ட வேண்டும்.

தமிழர்களை நாம் தமிழர்களாக இணைக்க விரும்பும் ஒரு தலைவன் சாதிக்கட்சி நடத்த முடியாது. அதை விட்டு, ஏதோ திராவிடர் ஆட்சியில் ஜாதிப்பிரச்சனை ஒழிந்து தமிழ்நாட்டில் தமிழர்களின் தலைமையில், சமத்துவ ஆட்சி நடப்பது போன்றும், சீமானின் கட்சிதான் எல்லாவற்றையும் கெடுத்து, சாதிப்பாகுபாட்டை வளர்க்கப் போகிறது போன்றும், பம்மாத்து விடும், இந்த சாதியொழிப்பாளர்களை நினைக்க சிரிப்புத் தான் வருகிறது. நாம் தமிழர்களின் ஆவணத்துக்கு வரும் விமர்சனங்கள் எல்லாம் வெறும் கும்பலில் கோவிந்தா தான். சாதியே வேண்டாம், தமிழர்களாக இணைவோம். தமிழ்நாட்டின் நலன்களைக் காப்போம், என்கிற நாம் தமிழர் கட்சியினர் தான் தமிழ்நாட்டில் நடைபெற்ற, நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சாதிக் கொடுமைகளுக்கெல்லாம் காரணமென்பது போன்று மாயாஜாலம் காட்ட முனையும் ஒரு சில தலித்துக்களையும், சாதியெதிர்ப்பாளர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்கிறவர்களின் எழுத்துக்களையும் பார்க்கும் போது, அவர்கள் தான் மிகவும் சாதி வெறி பிடித்தவர்கள் போன்ற உணர்வும், சாதியடிப்படையில்லாத நாம் தமிழர் போன்ற கட்சியின் வளர்ச்சி அவர்களின் நலன்களைப் பாதித்து விடுமோ என்று பயப்படுகிறார்கள் அல்லது அவர்களை தமிழ்நாட்டைச் சுரண்டி வாழும் தமிழரல்லாத திராவிடர்கள் தூண்டி விடுகிறார்கள் என்ற எண்ணமும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. நடந்து போன ஜாதிக்கொடுமைகளுக்கெல்லாம் சீமான் பொறுப்பா? இதையெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு மேல் ஆண்ட திராவிடக் கட்சிகளிடமல்லவா கேட்க வேண்டும், திராவிடத்தை விட்டொழிப்பதற்கு அதை விட வேறென்ன காரணம் வேண்டும். உண்மையான தமிழர்கள், தமிழுணர்வுள்ளவர்கள், சாதிப்பாகுபாட்டை வெறுப்பவர்கள் நிச்சயமாக நாம் தமிழர்களாவர் என்பது திண்ணம்.
Periyasamy
தமிழகத்தில் மேல்த்தட்டு சாதியினர் கீழ்த்தட்டு சாதியினரை ஒடுக்குவது எங்கும் இருக்கிறது. காலங்காலமாகவே இது இருந்து வருகிறது. ஆனால் அதை சாக்காக வைத்து மக்கள் ‘தமிழர்கள்’ என்னும் அடிப்படையில் ஒன்று திரளுவதை எதிர்க்கும் சக்திகளை புறக்கணிக்க வேண்டும். ஏனெனில், தமிழர் அல்லாதவர்கள் நம்மை அடிக்கும் போது இன்ன சாதி, இன்ன வர்க்கம் என்று பிரித்து பார்த்து அடிப்பதில்லை. 1983ல் கறுப்பு ஜூலையின் போது சிங்கள வெறியர்கள் ஈழத்தமிழர், இந்திய வம்சாவளித்தமிழர் என்று கூட பிரித்து பார்க்கவில்லை. அனைவரையும் தாக்கினார்கள். படுகொலை செய்தார்கள். 1992ல் நடந்த காவிரி கலவரத்தின் போது கன்னட வெறியர்கள் தமிழர்களை இன்ன சாதி என்று பிரித்து பார்த்து தாக்கவில்லை. அவ்வளவு ஏன்?. ஆக்கிரமிப்பு ராணுவத்தினர் தமிழ்ப்பெண்களை இன்ன சாதி என்று பிரித்து வைத்து பார்த்தா கற்பழித்தனர்?. முள்ளிவாய்க்காலில் செத்து கிடந்த நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களில் தலித்கள் உட்பட எல்லா சாதியினரும் தான் இருந்தார்கள். முல்லைப்பெரியாறு பிரச்சினையின் போது கேரள அரசியல் கட்சிகளின் குண்டர்கள் சாதி அடிப்படையில் பிரித்து வைத்து பார்த்தா தமிழர்களை அடித்து விரட்டினார்கள்? பின் ஏன் தமிழர் என்னும் அடிப்படையில் நம் மக்கள் திரளக்கூடாது?. ‘தமிழர்’ என்னும் அடிப்படையில் தானே நாம் மக்களை திரளச்சொல்கிறோம். ‘ஹிந்து’ என்னும் அடிப்படையில் திரளச்சொன்னால் தான் ‘சாதிய ஒடுக்குமுறை’ பூசி மெழுகப்படும். சம்பந்தப்பட்டவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கூறும் நல்லுலக மக்களிடம் பல்வேறு சாதிகள் மற்றும் பிரிவினைகள் இருந்த போதிலும் பொதுவாக தமிழர் என்னும் உணர்வு இருந்தது. சமூகத்தின் பல்வேறு தரப்பாரும் பங்களிப்பு செய்த சங்க இலக்கியத்தில் இந்த உணர்வினை காணலாம்.

தமிழகத்தில் சாதியை இயக்கங்களால் ஒழிக்க முடியாது. ஏனெனில் ஒவ்வொரு சாதிக்கும் தனிப்பட்ட கலாச்சாரம், பழக்க வழக்கம் (உணவு உள்ளிட்ட) ஆகியன உள்ளன. மேலும் தங்களுக்கென ஆண்ட வரலாறும் அடிமைப்பட்ட அல்லது அடிமைப்படுகிற வரலாறும் உள்ளதாக ஒவ்வொரு சாதியினரும் நம்புகிறார்கள். தாழ்த்தப்பட்ட சாதிகள் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. சாதி இருக்கிறது என்று சொல்பவர்களை விடவும் சாதி இல்லை என்று சொல்பவர்கள் தான் மோசமானவர்கள். அவர்களிடம் தான் நாம் உஷாராக இருக்க வேண்டும் என தாழ்த்தப்பட்ட மக்கள் நினைக்கிறார்கள். ஆகவே சமூக நோக்கம் கொண்ட இயக்கங்கள் சாதிகளுக்கிடையே சமத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் பேண உழைக்க வேண்டும். சாதி ஒழிப்பை காலம் பார்த்துக்கொள்ளும். இங்கே பிரச்சினை என்னவெனில் தமிழ்நாட்டில் வீரவன்னியராகவும் முக்குலத்தோராகவும் ஆதிதிராவிடர்களாகவும் இருப்பவர்கள் தமிழகத்தின் எல்லையை தாண்டினால் ஒட்டுமொத்தமாக ‘தமிழர்’ என்னும் அடையாளத்துக்குள் (அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்) வந்து விடுகிறார்கள். அந்த ‘தமிழர்’ என்னும் அடையாள அடிப்படையில் அவர்களுக்கு அநியாயங்கள் நேர்கின்றன (சில சமயம் தமிழகத்துக்குள்ளேயும்). அந்த அநியாயங்களை ‘தமிழர்’ என்னும் அடிப்படையில் தான் அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். இங்கே திராவிடம் என்பது எங்கே வந்தது? மேலும் தமிழ்நாடு என்பது மொழிவாரி அடிப்படையில் அமைந்த மாநிலம். அரைவேக்காடுகளையும் சில்லரைகளையும் போலித்தனத்தையும் கொண்டதே திராவிட இயக்கம். இவர்கள் மேடை நாடகத்துக்கும் சினிமாவுக்கும் வித்தியாசம் புரியாமல் கதை வசனம் எழுதியவர்கள் (இன்றளவும் அதை நினைத்து புளகாங்கிதம் வேறு!). காவிரி பிரச்சினை, ஒகெனக்கல் எல்லை பிரச்சினை, முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை, ஈழத்தமிழரின் பேரழிவு ஆகிய எல்லா பிரச்சினைகளும் இந்த திராவிட இயக்கத்தினரின் கொடுப்பினை. சுற்றியுள்ள மாநிலங்களும் நாடுகளும் தமிழர்களை எட்டி எட்டி உதைப்பதற்கும் ஏளனப்படுத்துவதற்கும் இந்த திராவிட இயக்கத்தினரின் அறுபது ஆண்டு கால அரசியலே காரணம். உச்ச கட்ட அநியாயம் முள்ளிவாய்க்காலில் நடந்தேறியது. அப்போது தன் குடும்பத்தினருக்கு மந்திரி பதவி கேட்டு இவர்கள் தலைவர் தில்லியில் பேரம் பேசிக்கொண்டிருந்தார். ஒரு லட்சத்துக்கும் மேல் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டதை தமிழ்நாட்டு மக்களிடம் மறைத்த குடும்பத்தினர் நடத்திய தொலைக்காட்சிகள் சினிமாவை காட்டி ஏமாற்றின (தெரிந்திருந்தால் மட்டும் தமிழக மக்கள் என்ன கிழித்திருப்பார்களோ!). அதிகாரம் கையில் இருக்கும் போது அகில உலகமே சந்தி சிரிக்கும்படியான ஊழல்களை செய்து தமிழ் மக்களுக்கு கேவலத்தை ஏற்படுத்துவது தான் இவர்களின் தொழில்.

ஆகவே தலித் மக்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ அவர்கள் தமிழர் என்னும் அடையாளத்துக்குள் வந்து தான் ஆக வேண்டும். ஏனெனில் தமிழின விரோதிகள் தமிழர்களை சாதி பார்த்து அடிப்பது இல்லை. தலித் என்னும் காரணத்துக்காக விட்டுவிடுவதும் இல்லை. யாழ்ப்பாண மேட்டுக்குடி தமிழர்களின் சாதி வெறியும் பிரதேச வெறியும் உலகறிந்தது. ஈழத்தமிழ் மக்கள் போராட்டம் உருப்படாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் கடைசியில் முள்ளிவாய்க்காலில் அவர்களோடு தலித்களும் தான் செத்துக்கிடந்தார்கள். இவர்கள் தலித் என்பதால் சிங்களர்கள் விட்டுவைத்தார்களா என்ன? மலையக தமிழர்களில் பெரும்பாண்மையினர் தலித்கள் தான். இவர்களுக்கும் தமிழீழப்போராட்டத்துக்கும் தொடர்பில்லை. என்றாலும் சிங்கள அரசு இவர்களை விட்டுவைத்ததா? இவர்களிடையே குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி இனசுத்திகரிப்பு அல்லவா செய்திருக்கிறது? இவர்கள் அவர்களுக்கு தமிழர்கள் மட்டுமே.

“திராவிடம்” , “திராவிடர்”, “சமூக நீதி”, “இட ஒதுக்கீடு”, “பார்ப்பனர் சூழ்ச்சி”, “ஆரியர் ஆதிக்கம்” ஆகிய வார்த்தை ஜாலங்களை வைத்து கடந்த ஐம்பது அறுபது ஆண்டு காலமாக தமிழ் பேசும் மக்களை காட்டியும் கூட்டியும் கொடுத்து அவர்களின் வாழ்வு, வளம் ஆகியவற்றை சூறையாடிய கும்பல் இந்த திராவிட கும்பல். இவர்கள் இன்னும் தொடர்ந்து தமிழ் நாட்டு மக்களின் தலையில் மிளகாய் அரைக்க வேண்டுமா?
நாங்களும் தமிழ் தான் என்று சொல்லி பார்ப்பனர்கள் ஓர் ஆயிரம் ஆண்டு காலம் இந்த மண்ணையும் மக்களையும் சுரண்டினார்கள். இப்போது பார்ப்பனரிடம் இருந்து தமிழர்களை காப்பாற்றுவதாக சொல்லி இந்த திராவிட கும்பல் தமிழ் மண்ணையும் மக்களையும் காட்டியும் கூட்டியும் கொடுத்து கடந்த அரை நூற்றாண்டு காலமாக வயிறு வளர்த்து வருகிறது. தமிழகத்தின் மண் வளம், நீர் வளம் மற்றும் காற்று ஆகியன கடுமையாக சூறையாடப்படுகின்றன. நம் எதிர்காலத் தலைமுறைக்கு என்ன விட்டுச் செல்லப்போகிறோம்?.
tharani
அட மானம் கெட்டவர்களே உஙள் தலைவன் திருனெல்வேளியில் மானாடு போட்டு தேவர் பிரந்த நாளை அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தீற்மானம் போட்டது ஏன்?அப்போது தேவர் சாதிவெரியராக தெரியவில்லையா?///////அனைத்து வகை ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை பெற தலித்துகள் இன்னமும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிங்களவனின் ஒடுக்குமுறைக்கெதிரான தமிழனின் விடுதலைப் போராட்டமும், சாதிவெறித் தமிழர்களுக்கெதிரான சேரித் தமிழர்களின் விடுதலைப் போராட்டமும் ஒன்றுதான். அங்கு சிங்களவன் தமிழனை சுட்டுக் கொல்கிறான். இங்கு தமிழனே இன்னொரு தமிழனை வெட்டிக் கொல்கிறான். பெயர்தான் மாற்றம்; ஆதிக்கம் ஒன்றுதான். விடுதலைப் போராட்டம் என்பதை சொந்த மண்ணிலிருந்துதான் தொடங்க வேண்டும். தலித்துகள் அனைத்து வகை ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலை பெற்றால்தான் தமிழர் விடுதலை சாத்தியமாகும். பிற மனிதனின் இழிவை, ஒடுக்குமுறையை ஒழிக்காமல் தமிழீழத்திற்காகப் போராடுவோம் என்று சொல்வதெல்லாம் ஏமாற்று வேலைதான். இது 'நாம் தமிழர்'களுக்கு மட்டுமல்ல; தமிழ்த் தேசியவாதிகள் அனைவருக்கும் பொருந்தும்.////சபாஷ்,சிஙளவனும்,இஙகே உள்ள தமிழனும் ஒன்னா? விரைவில் தலைவர் பிரபாகரனை சாதி வெறியர் என்ட்ரு நீஙள் சொல்லும் காலம் விரைவில் வரும்.
raja
அனானபட்ட சிபி(ம்)-மனுதர்ம கம்யுனீச்ட் பெரியார் வெனும்கிர நிலமைக்கு வந்துடாங.... இவங என்னா சின்ன பசங.

தலித்துகள் கை உயராமல் தமிழர்களின் கை உயராது !
vijay
அப்பொ ....உங்களுக்கு அம்மா கட்சியும் , அய்யா கட்சியும் தான் லாயக்கு ..அதையே கட்டிக்கொண்டு அழுங்கள்......அவர்கள் இன்னும் ௨௦௦ வருடத்தில் இந்த சாதிய பிரச்சனையை தீர்த்து விடுவார்கள்
Nivas.T
நான் தலித் நான் தலித்

எனக்கு இட ஒதுக்கீடு எனக்கு இட ஒதிக்கீடு

அம்பேத்கார் மட்டும் என் தலைவர் என்று சொன்னால் மட்டும் சாதியம் ஒழிந்துவிடுமா
VETRI CHELVAN
THAMIZH THESIYAM ORU SARIYAANA THATHTHUVAM, AMAIPPUMURAIYODU ILAINJARGALAI ONRINAIKKUM PODHU KANDIPPAAGA THIRU.VANNI ARASU AVARGALIN YIK KATTURAI NAAM THAMIZHAR YENA THISAI THIRUPPAP PADUM THAMIZH ILAINJARGAL ANAIVARAIYUM ONRU THIRATTAP PAYANPADUM !

VANNI ARASU AVARGALIN UZHAIPPUM MUYARCHIYUM THAMIZH THESIYA NALANIL AKKARAI ULLA ANAIVARAALUM PAARATTAP PADAVENDUM !

NAAM THAMIZHAR KATCHIYAIP PATRIYAA KETKINREERGAL ? ........... .......... RAAJAA VESHAM PODUM MUNBU NAMADHU GRAAMA NAADAGATHTHIL KOMAALI VANDHU MAKKALAI KADHAI SOLLI MAGIZHA VAIPPAARU ILLA ADHUTHAANGA NINAIVIRKKU VARUDHU !

KATRADHU MUDHALAAIGALUKKUM AALUM VAGUPPIRKKUM SEVAI SEIYYUM KATCHI ! AANAA NEETTI MUZHAKKURADHU PURATCHIYA PATHTHI !

ORU UNMAIYAANA PURATCHIKKU THAMIZHAGA ILAINJARGAL THAYAARAAGUMPOTHU INDHA SEEMAANIN SINGA GARJJANAI VARALAATRIN KUPPAITHTHOTTIYIL VEESAPPADUM !

ADHU MATTUMILLEENGA ...... SEEEMAAAN YAARUNU NEENGA THERINJIKKANUMAA ? MIGAVUM SULABAM !

AAM ! AVAR .... 1). INDHIYA DHESIYATHTHAI VEEZHTHTHUM NOKKAM KONDAVARAANU KELUNGA !

2). THAMIZH NAATTU VIDUDHALAIKKAAGA VELAI SEIVAARAAANU KELUNGA !

avarai nambi mosam pogum avarodu thol kodukkum ungal ullak kidakkaiyaana THAMIZH NAATTU VIDUDHALAIKKUM & INDHIYAA VALLAADHIKKATHTHIL IRUNDHUM THAMIZHAGAM VIDUDHALAI ADAIYAVUM PAADUPADATH THAYAARAAGA KOLGAI KOODA ILLAADHAVARTHAANGA THAMIZH NAATTU PURATCHI VEERAR SEEEMAAAN !

THAN INA ODUKKUMURAIKKU OTTUMOTHTHATH THEERVU THANITH THAMIZH EEZHAME YENAP PORAADUM MAAVEERAR PRABHAAGARANIN PEYARAI UCHARIKKAK KOODA UNGALUKKU URIMAI ILLAI YENA THAMIZH NAATTU ILAINJARGAL KETKUM KAALAM ...... KANDIPPAA VARUMNGA ! ADA ANDHAP PONNAANA NAAL VARANUMNGA !
ஷாலி
திராவிடத்தை சாட வந்த திரு.பெரியசாமி அவர்கள் போகிற போக்கில் ஒரு உண்மையை சட்டென்று உடைத்துப்போட்டார்.
//யாழ்ப்பாண மேட்டுக்குடி தமிழர்களின் சாதி வெறியும்,பிரதேச வெறியும் உலகறிந்தது.ஈழத் தமிழ் மக்கள் போராட்டம் உருப்படாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.//
ஐயாவின் வார்த்தைகள் அட்சர லட்சம் பெரும் அழியாத உண்மை.முள்ளிவாய்க்கால் கொள்ளிக்கு முற்றும் முழுதாக ராஜ பக்ஷயையோ,மன்மோகன் கருணாநிதியையோ குற்றம் கூற முடியாது.புலிகளின் வளர்ச்சியும் விழ்ச்சியும் அவர்களின் கைகளைக்கொண்டே நடந்தது. இறுதியாக,யாழ்ப்பாண மேட்டுக்குடி வெள்ளாள,கரையாள சாதி சகதியில் மாட்டி யார் பெரியவர் என்ற ஆதிக்கப்போட்டியே அழிவிற்கு இழுத்துச்சென்றது. வெற்றிப்படிகட்டி ஈழக்கோட்டையில் கொடி ஏற்ற வேண்டிய தமிழினம் சாதிக்கேட்டையில் விழுந்து சருகாகி உதிர்ந்து விட்டது. திரு.வியாசன் என்னை மன்னிப்பாராக!
Kalvi ARASAN
THAMIZHARGALAANA YENGALAI YENGE SENRU ADAGU VAIKKATH THUDIYAAI THUDIKKINREEGAL THIRU SEEMAAN AVARGALE ? YELLAA ARASIYAL KATCHIGALUM SEIVADHAIP POLATHTHAANE NEENGALUM SEIYYAP POGINREERGAL? IDHIL YENNA MAATRU ARASIYAL PURATCHI YENRU SOLGINREERGAL ?

YELLORUM YERKKENAVE SOLLIVANDHA PAZHAIYA ULUTHTHUP PONA ARASIYAL MURAITHAANE IDHU ? IDHIL YENNA PURTCHI IRUKKINRADHU ?

PURATCHIYAALARGAL THAM MUGATHTHAI VELICHAM POTTUK KAATTIK KOLVADHILLAI !

IDHUVARAI PURATCHIYAALARGAL YENBAVARGAL THAMADHU KARUTHTHUKKALAI MATTUME MAKKALIDAM KONDU SENRULLAARGAL ! THAMAKKUTH THAAME PURATCHIYAALARGAL YENE MAARTHATTIK KONDADHILLAI ! AAVESAMAANA PECHAALUM ALANGAARA THORANAIYAALUM " NAAM THAMIZHAR " YENUM
VAARTHTHAIYAALUM MAKKALAITH THIRATTI MAGUDAM SOOTTIK KOLLALAAM YENRU NINAIKKINREERGALO ?

ORI ORU KUDI MAGANUKKUM UNGAL KOLGAIYAAL URIMAI MEETTUTH THARA MUDIYAADHU ! SATTAMANRA PAARAALUMANRA MUDHALAALITHTHUVA AATCHI AMAIPPIL NAMADHU THAMIZH MAKKALAI MEENDUM MEENDUM ADIMAIP PADUTHTHAVE NEENGAL THUDIYAAI THUDIKKINREERGAL !

YERKKENAVE THAMIZH NAATTU VIDUDHALAIKKU NAAN PAADUPADA MAATTEN YENA BAGIRANGAMAAGA ARIVITHTHAVRDHAANE NEENGAL ? AANAAL ILAINJARGALAI THAANGAL YEDHO THAMIZH NAATTU VIDUDHALAIKKAAGAP PORAADAP POVADHU POLA DHISAI THIRUPPI,ANI THIRATTI VARUGINREERGAL !

IPPADIYE PONAAL ... THAMIZH NAATTU MAKKALIN VARALAATRU MEETTEDUPPU PAKKANGALIL IRUNDHU " NEENGAL " MUTRAAGAK KIZHITHTHU YERIYAPPADUVEERGAL !
viyasan
//யாழ்ப்பாண மேட்டுக்குடி தமிழர்களின் சாதி வெறியும்,பிரதேச வெறியும் உலகறிந்தது.ஈழத் தமிழ் மக்கள் போராட்டம் உருப்படாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.//
ஈழவிடுதலைப் போராட்டம் தோல்வியடைந்தமைக்குப் பல காரணங்கள் உண்டு நிச்சயமாக சாதிப்பிரச்சனை ஒரு காரணமல்ல. ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் யாழ்ப்பாண சைவவெள்ளாளர்களின் சாதி வெறி உலகறிந்ததென்பதுண்மை ஆனால் அது ஈழப்போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கவில்லை. ஏனென்றால் சாதியையொழிப்பது , தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய நோக்கமாகும். அதை அவர்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்கள். அதை விட சிங்களவர்கள் ஈழத்தமிழர்களைக் கொல்லும் போதும், துன்புறுத்தும் போதும் சாதி பார்த்துச் செய்யவில்லை. அது தமிழர்களைச் சாதிப்பாகுபாடுகளை மறந்து ஒன்று படச்செய்தது. அதனால் சாதித்திமிர் பிடித்த பெரும்பான்மைச் சாதியினரான சைவவெள்ளாளர்கள் கூட வெள்ளாரல்லாத பிரபாகரனைத் தலைவராக ஏற்றுக் கொண்டார்கள். உண்மையில் அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தைச் சாதிக்கண்ணோட்டத்துடன் பார்த்திருந்தால், பெரும்பான்மை மக்களின் ஆதரவில்லாமல், ஒரு விடுதலை இயக்கம் முப்பது வருடங்களுக்கு மேல் இயங்கியிருக்குமென ஒரு முட்டாள் கூடக் கூறமாட்டான். ஈழவிடுதலைப் போராட்டத்தின் பிற்பகுதியில் அதன் தோல்விக்கு முதல் காரணமாய் அமைந்தது, முழுஆதரவளிக்க வேண்டிய, எண்ணிக்கையில் பலம் வாய்ந்த தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் ஒற்றுமையின்மையும், அவர்களின் தலைவர்களின் உண்மையான தமிழர்களல்லாத பாரம்பரியமும், குடும்பபாசமும், சுயநலமும் தான். ஈழத்தில் எவ்வாறு, ஈழவிடுதலைப் போராட்டத்தின் போது எவ்வாறு, சாதி வெறிபிடித்த, பெரும்பான்மைச் சைவவெள்ளாளர்கள் சாதியை மறந்து, நாம் தமிழர்களாக, ஒரு வெள்ளாளரல்லாத தலைவனுக்கு ஆதரவளித்தார்களோ, அதே நிலை தமிழ்நாட்டிலும் தமிழர்கள் தம்மைத் தமிழர்களாக உணர்ந்தால் நிச்சயம் உண்டாகும், ஆனால் அப்படி ஓற்றுமை தமிழர்களிடம் ஏற்பட்டு விடாமல் தடுக்க கங்கணம் கட்டிக் கொண்டு தமிழரல்லாத திராவிடர்கள் தமிழ்நாட்டில் கண்ணில் எண்ணெய் விட்டுக் கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களைச் சாதிப்பாகுபாட்டை மறந்து ஒன்றுபட விடவே மாட்டார்கள்.
EELAPARAI.VCK HARUR-TALUK
சுலபமாகச் சொல்லப்போனால் ரஜினி நடித்து வெளிவந்திருக்கும் ஒரு சினிமாவின் முதல் காட்சியில், முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கும் ஒருவன், "ரஜினி என்னப்பா நடிக்கிறாரு? கண்றாவி" எனச் சொன்னால் அவனுக்கு எதிராக அந்த திரையரங்கில் ஒரு எதிர்ப்பலை எந்த வேகத்தில் கிளம்புமோ அந்த அளவுக்கு சீமானைப் பற்றி பேசும்போது கிளம்புகிறது.

திராவிடப்பற்று தமிழ்ப்பற்றாக மாறி, இப்போது தமிழ்ப்பற்று சீமான் பற்றாக மாறியுள்ள நிலையில், இந்த சீமான் பற்றானது சீமான் என்ன சொன்னாலும் சரி, ஏது சொன்னாலும் சரியென ஒரு மனநிலையை சீமானின் ஆதரவாளர்கள் மனதில் வளர்த்துவிட்டிருக்கிறது என்ற விஷயமே பயம் தருவதாய் உள்ளது.

தலைவனை எதிர்த்து கேள்வி கேட்க திராணி இல்லாமல் பயந்திருந்தால் அவர்களை அடிமைகளெனச் சொல்லலாம். தலைவன் மீதான பற்றால் கேள்வியையே சிந்திக்க முடியாதவர்களை என்னவென்று சொல்வது?

ஆரம்பகாலங்களில் தனக்கு மேடைகளே இல்லாத காலத்தில் மேடைகள் அமைத்துக் கொடுத்த பெ.தி.கவின் மேடைகளில் "பெரியாரின் பேரன் நான். பிரபாகரனின் மருமகன் நான். மார்க்ஸின் ஒன்றுவிட்ட சித்தப்பா மகன் நான்" என அரங்கதிர முழங்கி கைத்தட்டுக்களை அள்ளிச் சென்ற சீமான், சில மாதங்களுக்குப் பின்பு பெரியார் மீதான சாதிய அடிப்படையிலான சீமானின் குற்றச்சாட்டு ஒரு பேட்டியில் வெளிவந்திருந்தது. "பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர் இல்லை என்ற விமர்சனம் இன்றும் இருக்கிறது."என மிகத்தெளிவாய் ஒரு குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

தாழ்த்தப்பட்வர்களுக்காக ஒன்றுமே செய்யாத ஒரு வக்கற்ற கிழவனின் பேரானக சீமான் தன்னை முன்னிறுத்திக் கொண்ட காரணம் என்ன? ஏனெனில் அப்போது அவர் பேசியது பெ.தி.க மேடை. அதில் இருந்தவர்கள் கருப்புச் சட்டைக்காரர்கள்.

சில காலம் சென்று, மேடையேறிய பலனாக, தொண்டை புடைக்க கத்திய பலனாக, கட்சியும் ஆரம்பித்தாகிவிட்டது. திருமணம் ஆனவுடன் முதலிரவுதான் முதல்வேலை என்பதைப் போல், தமிழகத்தில் கட்சி ஆரம்பித்தவுடன் எது முதல் வேலை? பசும்பொன் சென்று சரணாகதி ஆவது! அங்கே சரணாகதி ஆகிய அடுத்த நொடி தன் தாத்தா எனச் சொல்லி பெரியாரை புகழடையச் செய்த சீமானுக்கு திடீரென சினிமாவின் இடைவேளைக் காட்சிகளில் வருவது போல் தன் தாத்தா கெட்டவரெனத் தெரிகிறது. உடனே மேற்கண்ட பேட்டியை கொடுக்கிறார். பெரியார் மீதும் அவர் செய்த திராவிட அரசியல் மீதும் கோபம் கொண்டு, திராவிடம் என்பது ஆரியத்தை விடவும் தமிழர்களுக்கு விரோதமானது எனவும் சித்தரிக்கிறார்.

'நாம் தமிழர்' கொள்கையில் 'நாம்' என்பதில் தமிழ் நாட்டில் உள்ள, தமிழை தாய்மொழியாய் கொண்டுள்ள பிராமணர்களும் அடங்குவார்களா? அவர்கள் திராவிடர்கள் அல்லாததால் அவர்கள் தமிழர்களும் கிடையாதே, அதனால் அவர்கள் அடங்கமாட்டார்களா? ஒருவேளை அவர்கள் அடங்கவில்லை என்றால் சீமான் செய்வதும் திராவிட அரசியல் தானே! பெரியார் செய்த அதே அரசியல் தானே? நாம் தமிழரில் 'தமிழர்' என்ற வார்த்தைக்கான வரையறையும் விளக்கமும் சீமானின் பேட்டிகளை விட குழப்பமாகவே உள்ளன.

ஈழத்தாய், இலையால் ஈழத்தை மலர வைக்கத் தகுதியுடைய ஒரே தெய்வத்தாய், தமிழச்சி ஜெயலலிதா இருக்கும் திசையை நோக்கி மேடைகளில் இருந்தபடியே கும்பிட்ட கடவுள் சீமான், தேர்தல் முடிந்த பின், தன் பேச்சுக்கள் செல்லுபடியாகாதது தெரிந்த பின், கீற்று பேட்டியில் சொல்கிறார், "தமிழர்கள் எல்லோரும் தங்கள் வீட்டு மூத்த பிள்ளையாக கருதுகிற பிரபாகரனை குற்றவாளி என்று சொல்லும் தைரியம் ஜெயலலிதாவுக்கு எப்படி வந்தது? அதைத்தான் ஆபத்து என்று நாங்கள் சொல்கிறோம். அந்த ஆபத்து இனியும் தொடரக் கூடாது என்று விரும்புகிறோம்."என்று. இதெல்லாம் மேடையில் 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்று சொன்னபோது செலக்டீவ் அம்னீஷியாவால் மறந்து போனார் போல! அடேயப்பா. ராமதாசிடம் ஆரம்ப காலத்தில் அரசியல் கல்வி கற்றதனாலோ என்னவோ குருவை மிஞ்சும் சீடனாக சீமான் வளர்ந்திருப்பதையே இது உணர்த்துகிறது!

தமிழகத்தில் சிறைக்கு சென்றோர் யாவருமே புரட்சியாளர்கள் தானே! வெளியில் வந்தவுடன் ஏற்கனவே பெரியாரையும், திராவிடத்தையும் சீமான் விமர்சித்ததை பல கருப்புச்சட்டைகள் பலமாக எதிர்த்து வருவதால் அதை சமாளிக்க உடனே ஒரு 'பெரியார்-எம்.ஜி.ஆர் வீர வணக்கக் கூட்டம்' போட்டுவிட்டார்! அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதை கவனித்தவர்களுக்குத் தெரியும், பெரியாரைப் பற்றி ஒருநிமிடம் பேசிவிட்டு எம்.ஜி.ஆரைப் பற்றி மீதிநேரம் முழுதும் புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளியிருந்தார். விஜயகாந்ததை கருப்பு எம்.ஜி.ஆர் எனச் சொல்லி எம்ஜிஆர் பெயரால் அரசியல் செய்வதைப் போல! ஒன்று மட்டும் நிதர்சனம். தமிழகத்தில் அரசியலில் வளர பெரியாரையும் எம்ஜிஆரையும் பிடித்துத் தொங்கியே ஆக வேண்டும்! சீமான் அழகாக அதையும் செய்கிறார்!

மேலும் பெரியார், எம்.ஜி.யார் வீரவணக்கக் கூட்டத்தில் சீமானின் அதிரடி வசனங்கள் ரஜினி, விஜய், அஜித், விஜயகாந்த் வசனங்களை விட நல்ல கைத்தட்டல்களும், விசில்களும் பெற்றன. போஸ்டர்கள் கூட கையை முறுக்கி, வானைக் காட்டி, முகத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் விஜயகாந்த் போல கர்ஜனைகள் காட்டி ஒரு அதிரடி ஆக்க்ஷன் ஹீரோவுக்கான அனைத்து 'பில்டப்'களையும் உள்ளடக்கியதாகவே இருந்தன.

மேடையில் நின்றவுடன் விசில் சத்தம் காதைப் பிளந்தது. வாழ்க கோஷங்கள் விண்ணைப் பிளக்கின்றன. மேடையில் பூ எறிகிறார்கள். தி.மு.க, அ.தி.மு.க கூட்டங்களில் கூட மேடையில் பூ எறியப்பட்டு நான் பார்த்ததில்லை. திரையரங்குகளில் மட்டுமே நடக்கும் கூத்து இது! இதையெல்லாம் கவனிக்கும்போது சீமானும் அவரைப் பிந்தொடர்பவர்களும் லட்சியமாகக் கொண்டுள்ள தமிழ் தேசியம் என்பது விசிலடிச்சான் குஞ்சுகளை உருவாக்கி, அதில் அமைக்கப்பெருவதாய் இருந்தால் அது தமிழனுக்கு இந்திய தேசியம் விளைவித்துக் கொண்டிருக்கும் தீமையை விட மோசமானதாகவே இருக்கும்.

ஜெயலலிதாவுக்கு ஆதரவு தர அவர் தயாராகி விட்டார் என்றே அந்தக் கூட்டம் தெள்ளத் தெளிவாய் காட்டியது. தமிழகத்தில் கூட்டணி மாற்றத்துக்கான எல்லா வில்லங்க வேலைகளையும் ஏற்கனவே காங்கிரசு செய்யத்துவங்கி விட்ட நிலையில் நாளை தீடிரென ஜெயலலிதாவும் காங்கிரசும் கூட்டணி போட்டால் என்ன செய்வார் என்பது அவருக்கே வெளிச்சம்!

எல்லாவற்றுக்கும் மேல் ஈழப்போர் உச்சகட்டத்தில் இருந்த போது ராகுல் காந்தியைச் சந்தித்து காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் பதவி கேட்டு இரந்து கெஞ்சிய நடிகர் விஜய்யை "விஜய் ஒரு மானமுள்ள தமிழன்" என சீமான் இப்போது விளித்திருப்பதுதான் ஹைலைட்! இவருடன் சேர்ந்து பணியாற்ற முடிவு செய்தால் அவர் எவராயினும் மானமுள்ள தமிழன் ஆகிவிடலாம் என்ற அளப்பெரிய கருத்தை உணர்த்தியுள்ளார்!

இப்படி அடுத்தடுத்த பேச்சுக்களாலும், பேட்டிகளாலும் சீமான் சந்தர்ப்ப அரசியலை மிக குறுகிய கற்று தெளிந்துவிட்டார் என்பது தெளிவாகவே நமக்குத் தெரிய வருகிறது.
ஷாலி
அன்றைய மன்னர்கள் தங்கள் எதிரியை சரிகட்டுவதர்க்கு அவர்களின் புதல்விகளை மணந்து சமரசம் செய்து கொள்வார்கள். இது எல்லா நாட்டு மன்னர்களும் பகையை தடுக்க கையாளும் ஒரு ராஜதந்திரம். யாழ்ப்பாண மேட்டுக்குடி சைவ சாதியினரின் பெண்ணை மனைவியாக்கிக்கொண்டு பிரபாகரன் அவர்கள் சாதி ஆதிக்கத்தை மட்டுப்படுத்தினார். ஒருவேளை ஒரு தலித் பெண்ணை பிரபாகரன் மணந்திருந்தால் வல்வெட்டிதுறையுடன் அவர் வாழ்க்கை முடிந்திருக்கும்.
புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருக்கும்பொழுது கூட தலித் இன தளபதிகள் வசம் கோயில்கள் கட்டுப்பாடு வராதவாறு கவனமாக சைவ ஆகம விதிகளை கடைப்பிடித்தனர்.
ஆக வெளியே உள்ள சிங்களவர்கள், கன்னடவர்கள்.தெலுங்கர்கள், மலையாளிகள் அனைவரும் நம்மை தமிழர் என்று ஒன்று படித்தியே அடிக்கிறார்கள். ஆனால் ஊருக்குள்ள தமிழர்கள்தான் நீ பறையன் பள்ளன் தேவன் என்று தமிழர்களை பிரிக்கிறார்கள். சாதி மறக்கடிக்கப்படாமல் தமிழர்கள் ஒன்றுபட சாத்தியமில்லை. சாதியை மறக்காத எல்லா தமிழர்களையும் சிங்களவர்கள் மலையாளிகள் கன்னடர்கள் தெலுங்கர்கள் நம்மை அடித்துவிரட்டி ஒன்றாக்குவார்கள். ஆட்சியும் செய்வார்கள். தமிழர்கள் ஒன்றுபட சாதி மறப்பு, சாதி மறுப்பு இன்றைய தேவை, பகுத்தறிவு பகலவன் பெரியார் ஒளியின் மூலமே சாதிஇருளை நீக்கமுடியும்
ஆதி பிரகாசு
தொடர்ந்து எழுதுங்கள்.அரசியலில் ஆர்வமுள்ள நடுநிலை இளைஞனுக்கு இதை காட்டவேண்டாம்.அவன் எங்கள் பக்கம் வந்துவிடுவான்.நீங்கள் இன்னும் காட்டமாக எழுதி நீங்களே கைதட்டி நிறைவடையுங்கள்.
குற்றம் சுமத்தவே எழுதப்பட்ட இக்கட்டுறை பச்சிளம் குழந்தைக்கும் புரியும். மேற்கோள்களை அதிகரித்து புத்திசாலித்தனமானது போல் காட்டமுயலவும்.
viyasan
//அன்றைய மன்னர்கள் தங்கள் எதிரியை சரிகட்டுவதர்க்கு அவர்களின் புதல்விகளை மணந்து சமரசம் செய்து கொள்வார்கள்//
மன்னர்கள் தங்களின் எதிரியை சரிகட்டுவதற்கு அவர்களின் புதல்விகளை மணந்து கொள்வார்கள். பிரபாகரன் மதிவதனியை மணந்த போது அவர் ஒரு மன்னரல்ல, தமிழுணர்வும், விடுதலை வேட்கையும் கொண்ட, இராணுவத்தால் தேடப்படும் வெறும் தமிழன் மட்டும் தான். காதலினாலும், தமிழுணர்வினாலும் தான் மதிவதனி அவரை மணந்து கொண்டார். அந்தக் காதலுக்குக் களங்கம் கற்பிக்கும் எவனும் நிச்சயமாக உண்மையான தமிழனாக இருக்க மாட்டான். பஞ்சம் பிழைக்க தமிழ்நாட்டுக்கு வந்த பரதேசிகளின் வாரிசுகளிலொருவனாகத் தானிருப்பான்.

திரு ஷாலி அவர்களுக்கொரு அன்பான வேண்டுகோள், நீங்கள் என்னைச் சீண்டுவதற்காக, பிரபாகரனை, அதாவது, , சாதிப்பேயை அகற்ற பாடுபட்ட ஒருவரை, தமிழர்களின் வரலாற்றிலேயே கொண்ட இலட்சியத்துக்காக தனது முழுக்குடும்பத்தையும் அர்ப்பணித்த ஒரு தலைவனையும் அவரது குடும்பத்தினரையும் சாதியடிப்படையில் ஆராய்வதை ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களனைவருமே விரும்ப மாட்டார்கள். அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்வோம். உங்களின் சிறுபிள்ளைத் தனமான வாதங்களுக்கும், உவமானங்களுக்கும் ஈழத்திலுள்ள சிறுகுழந்தை கூட இலகுவாகப் பதில் சொல்லி விடும். :-)
raja
ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சித்து நமக்குள் அடித்துக்கொண்டு இருக்காதீர்கள். இனி தமிழன் நமக்குள் அடித்துக்கொண்டு சாக வேண்டாம் . அனைவரும் ஓர் அணியில் திரண்டு புதிய பாதையில் தமிழகத்தையும் , இனத்தையும் காப்பாற்ற வாருங்கள், எந்த அமைப்பினரும் நமக்குள் விமர்சிக்கக் கூடாது. கேட்பாரற்று இனத்தை இழவு கொடுத்துக்கொண்டிரும் தமிழா , இன்னுமா உனக்குள் நான் பெரியவன் நீ பெரியவன் என்ற தன்னால யுத்தம்! போதும் இந்த அற்ப யுத்தம்
வண்டாரியான்
ஓ நீங்கள் கருணாநிதிக்கு கால் பிடிக்கும் கூட்டத்தினர் தானே! சோனியாவுக்கு பல்லக்கு தூக்குபவர்தானே! இரண்டு சீட்டு சேர்த்துக்கொடுத்தால் ராசபக்சே வாழ்க என்பவர்தானே! நாம்தமிழர்களை பற்றி கேலி கிண்டல் செய்யும் மேலும் ஒரு அரண்டு போன கூட்டத்தைப் பாருங்கள்.தொல்காப்பியருக்குப் பிறந்தவர் எம் தொல்தமிழருக்கு தலித் என்ற சாயம் பூசுகிறார் ஆதித் தமிழர் இன்று ஆதிதிராவிடராய் முனை மழுக்கப்பட்டிருப்பதை இவர்கள் என்றாவது பேசியிருப்பார்களா? ஈழப்படுகொலையின் தாக்கம் ஏற்ப்பட்ட தமிழர்களை "நாம் தமிழர்" என்று சீமான் ஒருங்கினைத்தப்பிறகு அந்த "நாம் தமிழர்" என்ற கருத்தாக்கம் தான் எந்த ஒரு சாதியினராய் இருந்தாலும் {திட்டமிட்டு எம்மக்களிடம் திணிக்கப்பட்ட சாதியத்தின்} அடையாளத்தை துறந்து என் முப்பாட்டன் உயர்த்திப்பிடித்த புலிக்கொடியை கைகளில் ஏந்தி தமிழகத் தெருக்களில் வருவது உமக்கு கலக்கத்தை ஏற்ப்படுத்துகிறதா? நானும் ஒருநாள் என் சேரித்தமிழனுக்கு சிலிர்ப்பூட்டிய சிறுத்தையை பார்த்து வியந்திருக்கிறேன். என் தேசியத்தலைவன் அழைத்துப்பேசிய போது உணர்ச்சியின் உச்சத்தை அடைந்திருக்கிறேன்.ஆனால் 2009 மே 17 க்கு முந்தய 15 யுகங்கள் {நாட்கள்} {நீங்கள் இம் மண்ணில் உயிரோடு தானே இருந்தீர்கள்} அதைத் தொடர்ந்த "தமிழர் இறையாண்மை மாநாடு" இந்த இடைவெளிக்குள் எம் தலித் தலைவனுக்கு இவ்வளவு {ஒரு இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட கூட்டத்தைக் கூட்ட} பலம் வந்தது எப்படி?சரியான தருணத்தில் தமிழர்கள் பத்தாயிரம் பேரை ஒன்று சேர்த்து களம் கண்டிருந்தால் உம்மை தலையில் வைத்து கொண்டடியிருப்போமே எங்கள் தலைவன் நீ என்று... ஓ கருணா,சோனியா வின் கண்னசைவிர்க்கு காத்திருந்தீர்களோ? முத்துக்குமரன் உயிர் வலிக்கச்சொன்ன தமிழ்ச்சாதி என்றவார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? முத்துக்குமரனின் இறுதி ஊர்வலம் முழுமை அடையாததில் உமது மகத்தான பங்கு எவ்வளவு என்று உம் மனசாட்சியைக் கேளுங்கள்...எம் தமிழரிடம் பார்ப்பன் சாதியை வகுத்தான்! வந்தேறி வடுகன் அதை திறம்பட கட்டிக்காத்தான் தன் இனத்திற்கான வலுவான அடித்தளத்தை அமைத்தான் {பெரியார் உட்பட}! இன்று அதைப் போற்றிப் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கும் நீங்கள் பேசுகிறீர்கள் நாம் தமிழர்களைப் பற்றி! ஊருக்கு வெளியே குடியிருப்புகளைக் கட்டி இங்கே வாழ்பவன் தாழ்த்தப்பட்டவன் என்று என் தமிழ்ச்சாதியிலிருந்து தனித்து அடையாளம் காட்டுவதை அப்படியே ஏற்றுகொண்டு உங்கள் பங்குக்கு ஒரு கொடியையும் ஏற்றி வைத்து பிழைப்பு நடத்தும் நீங்கள் பேசுகிறீர்கள் நாம் தமிழர்களைப் பற்றி! சாதி மறுத்து தமிழர் படை கட்டியமைத்து தன் சுயம் மறந்து புழுவாய் இருந்தவனை புலியென சீறச் செய்த எம் தமிழ்தேசியத் தலைவனுக்கே சாதிய அடையாளம் பூசிய பெருமைக்குச் சொந்தக்காரர்கள் அல்லவா நீங்கள்? எம் தமிழனை ஒன்று சேர விடாத உம் பெரும் முயற்சி விரைவில் முற்றுப்பெறும் அதை நாம் தமிழர்கள் செய்து முடிப்பார்கள் {அது வரைச் சாவாதிருங்கள்}
வண்டாரியான்
எங்கள் பகுதியில் "நாம் தமிழர்" பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்து ஒரு கிராமத்தை தேர்வு செய்தோம் அந்த கிராமம் முழுவதுமே ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்த மக்கள் வாழ்வதால் யாரை வைத்து முன்னெடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது ஈழ விடுதலை ஆர்வம் கொண்ட ஒருவரை பார்த்துப் பேசிய போது அனைத்துக்கும் நான் பொறுப்பு சிறப்பாக நடத்துவோம் வாருங்கள் என்றார். அதற்க்கு நாங்கள் அய்யா சாதியை மறுத்துப்பேச வேண்டிய வாய்ப்புகள் நிறைய இருக்கும் என்றோம். சிறிது யோசித்த அவர் சரியானதை எங்கள் ஊர் மக்களுக்குச் சொல்லுங்கள் என்றார். தீவிரமாக வேலைகளை செய்ய ஆரம்பித்தோம்.நாங்கள் நினைத்ததிற்கு மாறாக அவ்வூர் இளைஞர்களும்,பொதுமக்களும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர்.முதல் நாள் இரவு வீடு வீடாக உண்டியல் நிதி சேகரித்தோம் 60 க்கு மேற்ப்பட்ட இளைஞர்களும் எங்கள் பின்னால் வந்தனர் எங்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. ஆனால் மறுநாள் எல்லாமே தலைகீழாக இருந்தது. கூட்டமும் நடந்து முடிந்தது. ஓரிரு நாட்கள் கழித்து 18 வயது மதிக்கத்தக்க ஒரு பையன் என்னைத் தேடி வந்தான். அவன் என்னிடம் கூட்டம் நடப்பதிற்கு முதல் நாள் எங்கள் பகுதி எம்.எல்.ஏ அந்த ஊருக்கு வந்ததாகவும் ஊர்ப்பெரியவர்களிடம் என்னய்யா கூட்டம் நடத்துறீங்க?கள்ளனும் பள்ளனும் ஒண்ணா? பொண்ணு கொடுத்து பொண்ணு எடுங்கையா?என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.அதனால் தான் அத்தனை பேரும் பின்வாங்கி விட்டனர் என்றான்.பின்பு அந்தப் பையன் சொன்னான் நான் இதுவரை இந்தச் செய்திகளை கேட்டதே இல்லை. எவ்வளவு முக்கிய செய்திகளை எங்கள் ஊர் மக்களை கேட்க்க விடாமல் செய்து விட்டான் ஒற்றை வார்த்தையில் அத்தணையும் கெடுத்து விட்டானே?என்றவன் நிதானமாக ஒன்று சொன்னான் சாதியின் பெயரில் கட்சி நடத்துவோரை செருப்பால் அடிக்கவேண்டும் என்று! இனியும் எம்மக்களை பள்ளனாகவும்,பறையனாகவும்,தேவராகவும்,பிள்ளையாகவும் பிரிப்போர்க்கும் -பிரிக்கநினைப்போர்க்கும் எச்சரிக்கை!இனி என் அடுத்த தமிழ் தலைமுறை செருப்பால் அடிப்பேன் என்று சொல்லாது அடிக்கும் எச்சரிக்கை!
andrews
Please Please dont fight between us. we have common enemies.
செழியன்
நம்மிடம் பழகும் நண்பர்களோ அல்லது தெரிந்தவர்களையோ... அவர்கள் என்ன சாதியாக இருப்பார்கள் என தெரிந்துகொள்ள மனம் துடிக்கும் நபர்கள் இருக்கும் வரை...

பள்ளியில் அல்லது வேலைக்குச் சேரும் பொழுது நீ என்ன சாதி எனக் கேட்கும் வழக்கம் இருக்கும் வரை...

இறுதியாக கடவுள் நம்பிகை இருக்கும் வரை...

“ தமிழர்களை கண்டுகொள்வது சிரமமே
நான் தமிழன் என்று கூறுவதும் பொய்யே “
Guest
THIRU VIYAASAN, VANDAARIYAAN avargale ? adhu yeppadinga unmaiyai kelvi kettaale thamizhan, vadugan, dhraavidan nu MUTHTHIRAI KUTHTHUVADHAAL karuththukkalai yeppadiththaan vaikkamudiyum ? maatruk karuththaik koorinaale vandherigal yena avasarap pattu koorividaadheergal !

mudhalil matruk karuththukkalai vivaadhippom ! adharkkuththaane KEETRU THALAM AMAITHTHUTH THARUGINRADHU ? KATTURAIKKU BADHIL OVVORUVARUM OVVORU VIDHAMAAGATHTHAAN BADHIL THARUVAARGAL. ADHIL NYAAYAM IRUPPIN KALANDHU AALOSIKKALAAM ! ADHAI VITTU VITTU IVAR APPADI, AVAR IPPADI YENA NAMAKKUL NAAME THANITH THANITH THEEVUGALAAGA MAARIVIDA VENDAAM !

MAKKALAI ONRUPADUTHTHAVENDUM ! THAMIZH THESIYA VIDUDHALAIYAI SAADHIKKA VENDUM ! ADHARKKU SEEMAANIN KARUTHTHUKKAL MAATRAP PADA VENDUM ! AVAR UNMAIYIL THAMIZH NAATTU VIDUDHALAIKKUM PAADUPADA VENDUM YENRU NINAIKKAVUM KARUTHTHU KOORAVUM NAMAKKU URIMAI UNDU !

NAAN EEZHA VIDUDHALAIKKU MATTUME PAADUPADUVEN YENAK KOORUVADHUM THAMIZH NAADU MATTUM DELLIYIN ADIMAI YEDUPIDI ARASAAGA IRUKKATTUM YENAKKU VAAKKALIYUNGAL YENBADHUM YEPPADINGA SARIYAAGA IRUKKA MUDIYUM ?

THIRU VANDAARIYAAN KOORIYADHU POLA " M L A " kkal yellorum saadhi veri pidiththu thaane alaiginranar ? adhu mattumaa ? saadhiyai solli vaakku vaangubargal thaane anaiththu katchikkaarargalum ?

YENNA PUDHIDHAAGA NAAM THAMIZHAI SOLLI VAAKKU VAANGALAAM YENGINREERGALAA ? VERUM 10% MAKKALIDAM MATTUME ANAITHTHU ADHIKAARAMUM ALIKKUM SATTAMANRA AATCHI AMAIPPAITH THOOKKI YERIYAAMAL NAMADHU ANNAITH THAMIZH MOZHI AATCHIYIL YERAADHUNGA ! GAVARNAR nu oru delliyin kangaani NAMADHU THAMIZHAGA ARASAIYE KALAICHIDUVAARU !

INDHA SATTA MANRA AATCHI VADIVAMTHAAN NAM INAM ADIMAIP PATTUK KIDAPPADHARKKUK KAARANAM ! ADHUMATTUMAA ? THAMIZH NAATTIL ULLA YELLAA ARASIYAL KATCHIGALUM DELLI VALLAADHIKKATHTHAIK KANDIKKATH THUPPILLAADHA DELLIYIKKU VISUVAASAM KAATTA SAMAYAM PAARKKUM ARASIYAL KATCHIGALDHAAN ! SEEMAAN DELLI AATCHIYAALARGALAI YEDHIRPPADHU POLA UNGALUKKU THERIYUM ... AANAAL AVAR MUDHALAALIYA AATCHI AMAIPPAI VEEZHTHTHUM NOKKAM KONDAVAR ILLEENGA ! Kadandha 64 aandugalaaga thamizhaga makkal delliyin vallaadhikkaththaal solla mudiyaadha thunbaththai anubavikkinraargal ! ADHARKKU MAATRU THAMIZH THESA MAKKAL KAIYIL ANAITHTHU ADHIGAARAMUM VAZHANGUM THAMIZH THESIY MAKKAL JANANAAYAGAK KUDIYARASU AATCHIDHAANGA ! ( ammaa font padhivirakkam seiyyum murai theriyaadhadhaal aangila yezhuththukkalil n karuththukkalaik kooriyullen ! mannikkavum MUDINDHAAL AMMAA FONT PADHIVIRAKKAM SEIYYUM MURAIYAIK KATRUTH THAARUNGAL ! pesa : 98948 99510)
VETRI CHELVAN 98948 99510
THIRU SHAALI AVARGAL KOOTRAI OPPUKKOLLA IYALAADHU !

EEZHAM MALARVADHU INDHIYAAVIN YEGAADHIPATHTHIYA ARASUKKU ARASIYAL REEDHIYAAGA PINNADAIVAITH THARUM ! AAM ANAITHTHUTH THESIYA INANGALUM VIDUDHALAIYAIK KORUM ! YERKKENAVE THALAIYILL KAASHMEERUM,ASSAAMUM,NAAGAAVUM,PODOVUM PODHAADHAADHAA ?

AANAAL ANAITHTHUTH THESIA INANGALIN MOZHI,VARALAARU, KALAIGAL,PANBAATTAI AZHITHTHU ORE INDHIYATH THESAMAAGA MAATRATH THUDIKKUM INDHIYA AATCHIYAALARGALIN KANAVU PALIKKAADHU ! THANITH THANITH THESIYA ARASUGAL EEZHATHTHAIP PAARTHTHU VARAVENDIYA THEVAI ILLAI !

VARAADHA KAAVIRIYUM,THARAADHA MULLAIP PERIYAARUM, KATTAPPADUM PAALAATRIN ANAIYUM YEMADHU THAMIZH THESATHTHAIK KATTI YEZHUPPUM !

AAGAVE MULLI VAAIKKAALIL M INATHTHAIYUM PORAATTATHTHAIYUM MUDAKKA MUTRAAGATH THUNAI NINRA DHROGI KARUNAANIDHIYAI THAMIZHAGA UZHAIKKUM MAKKAL ORUPODHUM MARAKKA MAATTAARGAL ! SONIYAAVUM, MANMOHAN MAATHTHIRAM ALLA ANRU MUDHAL INRU VARAI ONRUPATTA ILANGAIKKUL ARASIYAL THEERVU YENA THAMIZHAGA MAKKALAI DHISAI THIRUPPUM VIJAYAKAANTH, C P I, C P I-M , B J P, CONGRESS, THI.MU.KA, A.D.M.K UTPADA ANAIVARUM anaiththuk katchigalum YENGAL THAMIZH INATHTHIN YEDHIRIGALTHAAN !
ஷாலி
திரு.வியாசன் கருத்தை திசைதிருப்புவதில் கைகாரராக இருக்கிறார். நான் தலைவர் பிரபாகரனின் காதலைப் பற்றியோ,தமிழுணர்வு பற்றியோ ஒன்றுமே எழுதவில்லை. எனது கருத்து,தலைவர் பிரபாகரன் சைவ குடும்பத்தில் மணந்ததின் மூலம் யாழ்ப்பாண மேட்டுக்குடி சாதி வெறியர்களை ஓரளவுக்கு மட்டுப்படுத்த முடிந்தது.இருந்தாலும் சைவ கோயில் நிர்வாகங்களில் தலித் இன தளபதிகள் வராதவாறு பார்த்துக்கொள்ளப்பட்டனர்.ஐயா, வியாசர்! ஏன் இந்த ஆத்திரம் மாற்றுக்கருத்தை சொல்பவர்கள் மீது ஏன் பாய்ந்து பிடுங்குகிறீர்.எனது வாதம் சிறுபிள்ளைத்தனமாக இருந்தால் அதை அலட்சியப்படுத்திவிட்டு உங்கள் அறிவார்ந்த வாதத்தை வைக்க வேண்டியதுதானே! எனக்கு பதில் சொல்லி நேரத்தை வினாக்கவேண்டாம்.கீற்று கட்டுரைக்கு உமது கருத்தை சொன்னால் போதும்.விழுகிற கருத்துக்களுக்கெல்லாம் வியாக்கியானம் செய்யவேண்டாம்.உமக்கு உள்ள உரிமை எல்லோருக்கும் உள்ளது.நாம் தமிழர்களுக்கு விமர்சனத்தை தாங்கும் பண்பு இன்னும் வரவில்லை.வியாசன் தமிழனாகவே இருக்கட்டும். நானும் தமிழன்தான் ஆனால் மனிதன்.
viyasan
திரு. ஷாலி அவர்களே,

நான் எங்கே ஐயா திசை திருப்பினேன், நீங்கள் தான் உங்களின் வார்த்தைகளையே மறந்து விட்டீர்கள் போல் தெரிகிறது. "அன்றைய மன்னர்கள் தங்கள் எதிரியை சரிகட்டுவதற்கு அவர்களின் புதல்விகளை மணந்து சமரசம் செய்து கொள்வார்கள்", அது போல் தான் பிரபாகரனும் ஒரு வெள்ளாளப் பெண்ணை மணந்து, பெரும்பான்மைச் சைவவெள்ளார்களைச் சரிக்கட்டினார் என்றீர்கள், அதற்கு நான், அந்த வெள்ளாளப் பெண் அவரைக் காதலுக்காக மணக்கும் போது அவர் ஒரு மன்னரேயல்ல, என்று உங்களின் உவமானத்திலுள்ள ஓட்டையைச் சுட்டிக் காட்டினேன் அதைப் போய்த் திசை திருப்புகிறேன் என்றால் எப்படி? தலித் என்ற வார்த்தைப் பிரயோகமே ஈழத்தமிழர்களுக்குத் தெரியாதவொன்று. தமிழ்நாட்டினுடைய சாதிப்பாகுபாடுகளுடனும், சாதிக்கொடுமைகளுடனும் இலங்கைத் தமிழ்ச்சமுதாயத்தை ஒப்பிடுவது மலையையும் மடுவையும் ஒப்பிடுவது போன்றதாகும். ஈழத்தில் யாரும், சலுகைகளுக்காக சாதிச்சான்றிதழைப் பத்திரமாக பாக்கட்டில் வைத்துக் கொண்டு சாதி ஒழிக என்று கூச்சல் போடுவதில்லை. அதனால் நீங்கள் சாதிக்குக் கொடுக்கும் முக்கியத்துவமும், சாதியைப் பற்றிய ஈழத்தமிழர்களின் கண்ணோட்டமும் முற்றில் வேறுபட்டது. சீமானை ஈழத்தமிழர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காக, தமிழ்நாட்டில் இன்று நடக்கும் சாதிக் கொடுமைகளையும் ஈழத்தில் அறுபதாண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவங்களையும் ஒப்பிடுவது வெறும் அபத்தம், மட்டுமல்ல,அப்படிச் செய்வது திராவிடவீர்ர்களின் கொள்கைகள் வங்குரோத்தடைந்து விட்டது என்பதைக் காட்டும் அடையாளமுமாகும். அது சரி, யாழ்ப்பாண மேட்டுக்குடி சாதி வெறியர்களை மட்டுப்படுத்த தான் பிரபாகரன் அவர்களிடமிருந்து பெண் எடுத்தார் என்றால், திராவிடத்தலைவரின் வாரிசுகளில் பலர் பார்ப்பனக் குடும்பங்களின் பெண் எடுத்தொருக்கிறார்களே, அது பார்ப்பனர்களை மட்டுப்படுத்தவா? பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பை அவர்களெல்லாம் கைவிட்டதைப் பற்றிப் பேசாத திராவிடத் திலகங்களெல்லாம், தமிழர்களனைவரும் சாதி வேறுபாடுகளை மறந்து நாம் தமிழர்களாவோம் எனும் சீமானை மட்டும் பார்ப்பன ஆதரவாளர் என்பது போலப் படம் காட்ட முனைவதேன். தமிழ்ப்பெண்களை விட்டு, பார்ப்பனப் பெண்களை மணந்து கொள்பவர்கள் எல்லாம் திராவிடர்கள், தமிழர்களின் தலைவர்கள், தமிழர்களின் நலன்களில் அக்கறை கொண்டவர்கள், ஆரியத்தை அழிக்க வந்த வீரவாட்கள், பார்ப்பனீயத்தைப் பழிதீர்க்க வந்த பயில்வான்கள், ஆனால் ஆரியன் என்ற சொல்லுக்கு அறிவு பூர்வமான கருத்தியல் விளக்கத்தை ஆவணத்தில் கொடுத்த காரணத்தால், சீமானும் நாம் தமிழர் கட்சியினரும் ஆரியர்களின் அடிவருடிகள், பார்ப்பன ஆதரவாளர்கள் அல்லவா? திராவிட வீர்ர்களின் வாதங்களெல்லாம் இப்படியான விதண்டாவாதங்கள் தான். அவர்களின் நோக்கமெல்லாம் தமிழர்களை ஒன்று சேராமல் தடுத்து, தமிழ்நாட்டின் ஆட்சியும், பொருளாதாரமும் தமிழரல்லாத திராவிடர்களின் கைகளில் இருப்பதை தொடர்ந்து உறுதி செய்வதும் அதை எதிர்க்கும் சீமான் போன்ற தமிழர்களை எப்படியாவது கழுத்தறுக்க வேண்டுமென்பது மட்டுமே.
ஷாலி
// நீங்கள் சாதிக்குக் கொடுக்கும் முக்கியத்துவமும், சாதியைப் பற்றிய ஈழத்தமிழர்களின் கண்ணோட்டமும் முற்றில் வேறுபட்டது. சீமானை ஈழத்தமிழர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காக, தமிழ்நாட்டில் இன்று நடக்கும் சாதிக் கொடுமைகளையும் ஈழத்தில் அறுபதாண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவங்களையும் ஒப்பிடுவது வெறும் அபத்தம், //

தலித்முரசு, மட்டகளப்பு கிழக்கு பல்கலைகழக முதுநிலை விரிவுரையாளர்,சி.ஜெயசங்கரிடம் நேர்காணலில் ஒரு கேள்வி கேட்கிறது. “ போர்சூழல் காரணமாக ஈழத்தில் சாதிகள் ஒழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது உண்மையா? “போர்ச்சூழல் காரணமாக ஈழத்தில் சாதிய வன்கொடுமைகள் குறைந்திருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.ஆனால் ஜாதி ஒழிந்துவிட்டதாக சொல்ல முடியாது.உதாரணமாக கூறினால்,ராணுவம் குண்டு வீசப்போகிரதென்றால் மக்கள் முதலில் தஞ்சம் அடையும் இடம் அருகிலிருக்கிற கோயில்கள்தான்.உயிர் பிழைக்க ஓடி தஞ்சம் புகும்போது கூட,சாதிப்படி நிலை வெளிப்படும். ஓடி தஞ்சம் அடையும் பார்ப்பனர்கள் கோயிலின் கர்ப்பகிரகத்திலும்,ஊரில் முற்பட்ட முன்னேறிய சாதியினர் அதற்கடுத்த பிரகாரத்திலும் இருப்பார்கள்.
கோயிலின் வெளியே உள்ள மரத்தடி சகடைகள் கொட்டகைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தஞ்சமடைவார்கள்.”
ஆதாரம். -----கீற்று 03 மே 2008.
ஈழத்து இன்றைய சாதி நிலையை, அட்ரஸ் தெரியாத அனாமத்து சொல்வது உண்மையா? பொய்யா? அல்லது நாடறிந்த பல்கலைகழக ஆசிரியர் சொன்னது உண்மையா என்பதை சக வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன்
eelamview
இலங்கைக்கு சென்று மகிந்தாவோடு கொஞ்சிக் குழவிய விடுதலைச் சிறுத்தை திருமாவளவனைக் காட்டிலும் சீமான் எவ்வளவோ மேல்
kulothungan
எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. மூன்று தலைமுறைக்கு சேர்த்து வைத்த சொத்தை ஆண்டு வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்று தான் தனக்கென்று வாழாமல் சாதியாலடிமைப்பட்டு கிடக்கும் தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க தன் தள்ளாத வயதிலும் போராடிய தன்னலம் இல்லாத் தந்தை பெரியாரை விமர்சிப்பதில் பார்ப்பனர்களை தவிர வேறு யாரும் ஈடுபட்டதில்லை. அவருடைய நாத்திக கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட அவரு இல்லன்னா நாங்கள்ளாம் கல்வியிலோ வேலைவாய்ப்பிலோ முன்னேறி வந்திருக்க முடியாதுங்கன்னு வாய்விட்டு சொல்பவர்கள் பலபேர். அவருடைய போராட்டக்களம் மிகப்பெரிது. காந்தியாரிடமும் ராஜாஜியிடமும் கருத்து வேறுபாடுகள் பல இருப்பினும் அவர்கள் இறந்தபின் அவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்ததில்லை. அந்த கண்ணியத்தை இப்போது இருப்பவர்களிடம் எதிர்பார்க்க முடியாதுதான். இவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களை வைத்து திராவிட இயக்கத்தையும் பெரியாரையும் மதிப்பிடுகிறார்கள். இவர்களில் 100க்கு 90 பேர் பெரியாரின் வரலாறையும் அவரின் போராட்டக்களங்களையும் சரியாக படித்து அறிந்து கொள்ளாதவர்கள்.. போகட்டும். தேவையற்ற விமர்சனங்களை விடுத்து தமிழினம் ஒன்றுசேர ஆக்கபூர்வமான கருத்துக்களையும் விவாதங்களையும் முன்னெடுப்போமாக.. தமிழக மக்களின் மனங்களில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ஒரே கேள்வி.. தமிழ்த்தேசியத் தலைவர்கள் 10 பேர்.. திராவிடத் தேசியத் தலைவர்கள் 10 பேர்.. இரண்டுங்கெட்டான் நிலையில் 10 தலைவர்கள்.. சாதியக்கட்சித் தலைவர்கள் 150 பேர்.. இந்தியத் தேசியக் கட்சித் தலைவர்கள் 10 பேர்..
இவர்களில் யார் பின்னே அணிவகுப்பது (?) என்ற குழப்பத்தில் தான் அவர்கள் மானாட மயிலாட, தமிழே தெரியாத தமிழகத்தின் செல்லக்குரலுக்கானத் தேடல்னு மலையாளப் பெண்ணை தேர்ந்தெடுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கப் போயிடுராங்க.. அவங்களுக்குத் தெரிந்த புரட்சி கல்யாண் ஜூவல்லரி புரட்சிதான்.. அவங்களுக்குத் தெரிந்த புரட்சிக்காரன் நம்ம இளைய (?) திலகம் பிரபுதான்...
viyasan
//தலித்முரசு, மட்டகளப்பு கிழக்கு பல்கலைகழக முதுநிலை விரிவுரையாளர்,சி.ஜெயசங்கரிடம் நேர்காணலில் ஒரு கேள்வி கேட்கிறது.//

தலித்முரசு ஒரு நேர்காணலை நடத்தினால் அவர்கள் எப்படியான பதிலை எதிர்ப்பார்க்கிறார்கள், என்பதை அறிந்து, அதற்கேற்றவாறு பதில் சொல்லத் தெரியாத முட்டாளல்ல விரிவுரையாளர் ஜெயசங்கர். தலித் என்ற சொல்லையே கேள்விப்பட்டிராத, பெரியார் என்றால் யாரென்றே இலங்கையிலிருக்கும் போது தெரிந்திருக்காத இலங்கைத் தமிழர்கள் பலர், எப்படியாவது எழுத்தாளர் என்ற அங்கீகாரத்தை பெற்றிட வேண்டுமென்ற ஆர்வத்தில் தலித்துகளின் படைத்தளபதிகளாக பெரியாரின் சீடர்களாக, தம்மை இணையத்தளங்களில் காட்டிக் கொள்ளவில்லையா, அது போல் தான் அதுவும். : )விரிவுரையாளர் ஜெயசங்கரின் கருத்துக்களை மறுத்து ஈஸ்வரன் என்ற இன்னொரு ஈழத்தமிழர் ஆங்கிலத்தில் பதிலளித்திருந்தாரே, அதை ஷாலி அவர்கள் பார்க்கவில்லைப் போலும்.
ஷாலி
ஆர்யாசக்கரவர்த்திகள் சைவ வியாசன்கள்,செந்தமிழ் சீமான்கள் மட்டுமே இன்றைய நிலவரத்தில் அறிவாளிகள்.மற்றவர்கள் அனைவரும் முட்டாள்கள்.தலித்முரசுக்கு தகுந்தவாறு பேசிய ஜெய்சங்கரும் முட்டாள்தான். ஆம்! இப்ப குடா நாட்டில் சாதி இல்லை எல்லா சைவ சாதிக்கட்டுமானம்களும் புலம் பெயர் நாடுகளில் புனருத்தானம் செய்துவிட்டார்களாம்.சாதிசங்கம்.சைவக்கோயில்களில் ஆகம விதிகள் அமர்களமாக நடைமுறைப்படுத்தப்படுகிறதாம்.அமெரிக்க,பிரித்தானிய,கனடிய புலம்பெயர் நாடுகளில் சுடலை மாடன்,முனீஸ்வரருக்கு கோயில் ஒன்றும் இல்லை.சைவவியாசன் இந்தக்குறையை தீர்த்துவைப்பாராக
Guest
இனி கீற்று வலை தளத்தை பார்கவே கூடாது என முடிவு செய்துவிட்டேன்.எந்த நேரம் பார்த்தாலும் சீமான்,நாம் தமிழர் குறை தான் உங்கள் எல்லாருக்கும்.சும்மா பொழுதன்னைக்கும் வெட்டிக்கதை பேசிக்குட்டு,பின்னூட்டம் எழுதிக்கிட்டு இருக்குற உங்கள் எல்லாரையும் விட சீமானுக்கு நல்ல சமூக அக்கறை இருக்கு.ஏன் பேசுற நீங்க எல்லாம் தமிழினத்துக்காக களத்துல இறங்கி போராடறது..இந்த மாதிரி ஊடகத்துல கதை கதையா எழுதி,பின்னோட்டம் போட்டுக்குட்டு, ஒரு சதவிகித தமிழனுக்கு கூட உங்களால பிரயோஜனம் கிடையாது.சும்மா நீங்க எல்லாம் டீக்கடை பெஞ்சுக்குதான் லாயக்கு..எதுக்கு இந்த விளம்பரம்,இதெல்லாம் ஒரு பொழப்பா...போங்கயா நீங்களும் உங்க வலைதளமும்...
viyasan
திரு. ஷாலி அவர்களே,

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் சைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை என்பதில் நம்பிக்கையுடையவர்கள். பார்ப்பனீயத்தை எதிர்க்கப்புறப்பட்ட பெரியார், , தமிழர்களின் கடவுள் நம்பிக்கையையும், எந்தளவுக்கு சைவசித்தாந்தமும், தமிழ் ஆழ்வார்களின் திருமாலியமும் தமிழர்களின் கலாச்சாரத்துடன், வாழ்வுடனும் பின்னிப்பிணைந்துள்ளது என்பதை உணரத்தவறி விட்டார். தமிழர்களின் சமயங்களைப் பார்ப்பனர்களிடமிருந்து பிடுங்கி, அவர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து தமிழாக்கியிருந்தால், சாதிப்பாகுபாடு ஒரளவாவது ஒழிந்திருக்கும். சில வருடங்களுக்கு முன்னால் நானும் திருமாவளவன் அவர்களின் பெரிய விசிறி தான். எனக்கும் பல தலித்தின நண்பர்கள் தமிழ்நாட்டிலுள்ளனர். அவர்களுடன் பல தமிழ்நாட்டுச் சேரிகளுக்கும், சிறுகிராமங்களிலுள்ள அவர்களின் கோழிக்கூட்டை விடச் சிறிய குடிசைகளுக்கும் கூடப் போயிருக்கிறேன். வந்தேறி திராவிடர்கள் எல்லாம் வளமாக வாழ, சொந்த தமிழ் மண்ணில், உண்மையான தமிழர்கள் வாழும் நிலையைப் பார்த்து மனம் கலங்கியதுமுண்டு. அங்கெல்லாம் கூட, கல்லால் ஒரு கட்டிடம் இருந்தால் அது ஒரு இந்துக் கோயிலாகத்தானிருக்கும். இதிலிருந்து என்ன தெரிகிறது. பெரியாரின் இந்து மறுப்பு அவர்களிடம் கூட எடுபடவில்லை. பெரியார் தமிழர்களின் மதவுணர்வை உணர்ந்து, பார்ப்பன ஆதிக்கத்தைக் கோயில்களிலிருந்து அகற்றி, தமிழர்களின் கோயில்களைத் தமிழாக்கியிருந்தால் பார்ப்பன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி, அவர்களின் பொருளாதார ஆதிக்கத்தையும் குறைத்திருக்கலாம். புலம்பெயர்ந்த தமிழர்களின் ஈழத்துக் கோயில்கள் மட்டுமல்ல, ஈழத்தின் பெரும்பாலான கோயில்கள் ஆகமவிதிகளுக்குக் கட்டுப்பட்டவை, அது சைவசித்தாந்தத்தின் அடிப்படையிலானவையேயல்லாமல், தமிழ்நாட்டின் பிராமணீயத்துக்கும் அதற்கும் தொடர்பு கிடையாது, தமிழ்நாட்டில் போல் சாதியும், சாதிச்சங்கங்கள் எதுவும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் கோயில்களில் கிடையாது. ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் அசட்டுத்தனமாக பார்ப்பன ஆதிக்கம் வளர உதவுகிறார்கள், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் ஆலயங்கள் பார்ப்பனர்களை வளர்த்து விடுகிறதோ என்ற பயம் என்னைப் போன்ற பல ஈழத்தமிழர்களுக்குண்டு. அதைப் பற்றி எழுதலாமென நினைக்கிறேன், ஆனால் அப்படியான பதிவுகளைக் கீற்று வெளியிடுமோ தெரியாது. அல்லது ஒரு வலைப்பதிவில் எழுதுகிறேன், மறக்காமல் திரு. ஷாலி அவர்கள் அங்கும் வந்து, இப்படி இடக்கு மிடக்காக ஏதாவது சொல்லி, என்னைப் பதில் எழுதத் தூண்டுவாரென நம்புகிறேன்.
viyasan
//அமெரிக்க,பிரித்தானிய,கனடிய புலம்பெயர் நாடுகளில் சுடலை மாடன்,முனீஸ்வரருக்கு கோயில் ஒன்றும் இல்லை.சைவவியாசன் இந்தக்குறையை தீர்த்துவைப்பாராக//
சுடலைமாடன் , முனீஸ்வரன் எல்லாம் காவல்தெய்வங்கள். காவல்தெய்வங்களுக்கு சொந்தக்கிராமங்களின் எல்லையில் கோயிலெழுப்புவது தான் தமிழர்களின் பாரம்பரியமே தவிர அடுத்தவன் ஊரில் கோயிலெழுப்புவதல்ல. இதைக் கூடத்தெரியாத ஷாலி நிச்சயமாக ஒரு தமிழனாக இருக்க முடியாது. யாழ்ப்பாணத்திலும் முனீஸ்வரனுக்கு, யாழ்ப்பாண எல்லையில், கோட்டைக்கருகில் பெரிய கோயிலுண்டு. அதை முனியப்பர் கோயில் என யாழ்ப்பாண மக்கள் வணங்குவர். அங்கும் சாதி வேறுபாடெல்லாம் கிடையாது. பார்த்தீர்களா, தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சாதியினர் அல்லது தாழ்த்தப்பட்டவர்கள் வணங்கும் முனீஸ்வரன், ஈழத்தில் சாதியில்லாத கடவுளாக மாறி விடுகிறார். இதிலிருந்து ஈழத்துச் சாதி முறையையும், தமிழ்நாட்டுச் சாதிக்கொடுமைகளையும் ஒப்பிடுவது வெறும் முட்டாள்தனம் என்பது புலனாகிறதல்லவா?
மெய்த்தேடி..
தமிழர் என்கிற அடிப்படையில் தமிழர்களை ஒன்று சேர்ப்பதை,சேருவதை பாராட்டுகிற் போது ,சாதியை மறந்தும் மறுத்தும் சேருகிறார்களா ?என்பது மிக முக்கியம்.

தமிழகத்தில் நடைபெறும் சாதிக்கொடுமைகளுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு குரல் கொடுக்க அஞ்சும் அரசியல் கட்சிகள் தமிழகதில் ஆட்சியை பிடிக்கும்.

சாதியை உயர்த்திப்பிடிக்காத ,மத போதையில்லாத தொண்டர்கள் தான் வேண்டும் என்கிற தலைமை தமிழகதில் சில மட்டும் தான்.

வளரும் '' நாம் தமிழர் '' கட்சி அறைகூவல் விடுக்காதது ஏன்?

ஈழத்தை வைத்து அரசியல் செய்தால்மட்டும் தமிழர்களாய்
சேருவதும்,ஊருக்கு திரும்பும் போது " நீங்க மட்டும் தனியாக பஸில் வான்க"யென்பது எத்தனை காலத்துக்கு நடப்பது.

மனித உரிமை வென்று ,பகுத்தறிவை ஊட்டி, சாதி,மதம் இல்லாமல் இனையும் நாள் ஒரு பொன்னாள்.

அது நடக்காது,னடக்க விடமாட்டோம் என்பது தானே பலரது
ஆசை .அவர்களுக்கு வெற்றியை தேடி தந்து கொண்டே நாமும் பிரிந்து கிடக்கிறோம் ,இது மாற்றப்படவேண்டும்.

கற்பிக்கப்பட்டதை நம்பும் நாம்.உணர்வுகளுக்கு மரியாதை தர மறுக்கிறோம்.திருமா,சீமான்,வைகோ,ராமதாஸை ,ஒன்று சேர விரும்பாத சக்திகளை வேறு படுத்தினால் போதும்.

விடுதலை அடையாதவர்கள் விலங்கிலும் கீழானவர்களே !
தமிழராக இனைவோம் - தமிழ் ஈழம் வெல்வோம்.
கருவிகள் செய்வோம் இங்கே-கள்ம் காண செல்வோம் அங்கே (ஈழம்)
தமக்கென ஒரு வீடு - வேண்டும்
தமிழற்கு தனி நாடு .

சாதியை துறந்த
உழைக்கும் வர்க்கம்
மட்டுமே - தமிழர்கள்.

வன்னிஅரசு வின் கலகத்துக்கு நன்றி !

---------- மெய்த்தேடி...
THANJAI VENKATRAJ
Unlike the worthless local leaders, Thirumavalavan is an incomparable fighter for the rights of Tamils living all over the world. Who is more courageous than Thiruma in voicing for justice to oppressed people Thirumavalavan proves to be the true follower of great revolutionary leaders like Babasaheb Ambedkar, Nelson Rolihlahla Mandela and Martin Luther King Jr.
Anbu
ஐயா வன்னியரசு,
புரட்சியாளர் அம்பேத்கர் "கற்பி, புரட்சி செய், ஒன்றுசேர்" என்றார். இதற்கும் தாங்கள் எழுதியதற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை முதலில் படிக்க வேண்டும். அப்புறம் அது புரிய வேண்டும். அப்புறம்தான் அடுத்தவர்களைத் திட்ட வேண்டும்.
Muthukumar
பொறாமை , வயிற்ரேரிச்சல் , தெலுங்கு இன பாசம் வேறு ஒன்றும் இல்லை..
சு.இளந்தமிழன்
திரு.வன்னி அரசு அவர்களே ,,,,,

தலித் என்றால் என்ன?
தலித் என்றால் என்ன என்றே தெரியவில்லை . என்னுடைய சாதி சான்றிதலிலே பறையர் என்ற சாதி இருக்கிறது.எனக்கு வினா தெரிந்த நாள் முதல் என்னுடைய தெரு பறை தெரு .நாங்கள் பறையர்கள் . தலித் அல்ல .தலித் தெரு அல்ல மேலும் எங்களது பகுதியிலும் எனக்கு தெரிந்த வரையில் இத்தமிழ் நாடு முழுமைக்கும் பட்டியல் இனத்தவர் என்றும் தாழ்த்தப்பட்டோர் என்றும் அறியப்படுவோர் பறையர்,பள்ளர்,அருந்ததியர் அல்லது சக்கிலியர் என்ற சாதி பெயரால் அழைக்கபடுகிறார்கள் .இதில் தலித் என்ற சாதீய அடையாளம் எங்கிருந்து வந்தது?எப்படி வந்தது ? யார் கொண்டு வந்தது ?
நானும் பறையர் இன வரலாற்று தேடலிலும் பறையர் இன விடுதலை பணியிலும் என்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறேன். எனவே தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் இதனைப்பற்றி தெளிவு படுத்த வேண்டுகிறேன் .

தலித் என்ற ஒரு போர்வைக்குள் அனைத்து ஒடுக்கப்பட்டோரையும் தாழ்த்தப்பட்டோரையும் எப்படி சேர்க்க முடியும் என்பதுதான் எனக்கு குழப்பம்.சாதி என்பது தொழில், பொருளாதார வசதி, இனம், போன்றவற்றின் அடிப்படையிலான சமூக தரப்படுத்தல்கள் என்று சொல்ல படுகிறது .சாதி என்ற ஒன்று தொழில் மற்றும் இன ரீதியில் வகைப்படுத்தப்பட்டது என்பதும் நாம் பேசுகின்ற மொழியினை வைத்து நாமெல்லாம் தமிழர்கள் என்பதும் உண்மை என்றால் ,நாமெல்லாம் ஒரு தாய் மக்கள்,புறநானூற்று தமிழர்கள் என்று வீர வசனம் பேசும் தமிழ் அறிஞர்கள் என்று தம்மை சொல்லிக்கொள்ளும் ஞான சூனியங்களுக்கு ஏனோ என் குல பெருமையை பற்றி மட்டும் பேச அவர்கள் நாக்கினில் தமிழ் நர்த்தண்டவம் ஆடவில்லை.தமிழ் அறிஞர்கள் என்று சொல்லும் அன்பிற்கும் பண்பிற்கும் மரியாதைக்கும் உரித்தான தமிழ் அறிஞர்களே உங்களுக்காக இதோ புறநானூற்று வரிகள் …!!!!
அடலருந் துப்பின் .. .. .. ..
.. .. .. .. குருந்தே முல்லை யென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே,
சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே. ….

இவ்வாறு நாகரீகத்தின் உச்சத்தில் வாழ்ந்த பறையர்கள் இன்று சமூகத்தால் புறந்தள்ளப்பட்டுள்ளனர்.இதனை படித்து இதனைப்பற்றி தெரிந்த அறிந்த தமிழ் அறிஞர்கள் வேண்டுமானால் இதனை மறந்து இருக்கலாம் அல்லது மறக்க முயற்சிக்கலாம்,மறைக்க முயற்சிக்கலாம்.புறநானூற்றிலே என் சாதியினைப்பற்றி மிக தெளிவாக எழுதப்பட்டு இருக்கிறது.இங்கே எந்த இடத்தில தலித் என்ற வார்த்தை இருக்கிறது என்று தெரியவில்லை .நான் எப்படி என்னை தலித் என்ற வட்டத்திற்குள் என்னை கொண்டு வர முடியும். இப்படி எல்லாம் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியாம் என் பறைக்குடியை ,பறையர் வரலாற்றினை திரித்து தலித் என்ற அர்த்தமற்ற ஒரு வார்த்தைக்கு கீழ் கொண்டு வர முயற்சிப்பதாலோ என்னவோ … அவனிக்கே ஆட்சி பொறுப்பினை கற்று தந்த அசோக சக்ரவர்த்தியின் வழி தோன்றல்கள்,நாடாண்ட நந்த வம்ச பறை குடிகள் இன்று ஏனோ சாவுக்கு தப்பு கொட்ட மட்டும் தான் என்ற நிலைக்கு தள்ளிக்கொண்டு செல்ல எடுக்கும் ஒரு சீரிய முயற்சி என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை .
பறையர் மகாஜன சபையினை தொடங்கிய தாத்தா இரட்டை மலை சீனிவாச பறையனாரோ அல்லது அயோத்திதாச பண்டிதரோ தலித் என்ற வார்த்தையினை பயன்படுத்தியதாக தெரிய வில்லை.
இன்று இருக்கின்ற அறிவார்ந்த சமுதாயமாக தன்னை காட்டிக்கொள்ள துடிக்கின்ற ,எங்கே பார்த்தாலும் பதாகைகளில் புன்னகைதுக்கொண்டும் இருப்பவர்கள் சிலரின் சொல்லாடல் தான் தலித் என்றே தோன்றுகின்றது.
இது போன்ற மிகப்பெரும் தியாகிகளின் பெயரையும் நிழற் படங்களையும் போட்டுக்கொண்டு நானும் சமூக விடுதலை போராளி என்று தன்னை அடையாளம் காட்டி கொள்ளும் எந்த தலைவர்களுக்கும் எங்கிருந்து கிடைத்தது இந்த வார்த்தை. ஏன் இது போன்ற ஒரு புதிய முரண்பாட்டை திணிக்க வேண்டும். வரலாறே தெரியாமல் வருமானத்திற்காக பறையர் விடுதலையை கையில் எடுக்கும் முயற்சியா ?
நானும் பள்ளனும் சக்கிலியனும் தலித் என்றால் எனக்கு , பள்ளர் சமூகத்திலோ சக்கிலியர் சமூகத்திலோ சம்பந்தம் வைத்துக்கொள்ள விருப்பம் .என்னால் சம்பந்தம் வைத்துக்கொள்ள முடியுமா ?
தலித் என்ற போர்வையில் நாம் அனைவரும் ஒன்று தான் எனும்போது சக்கிலியர்களுக்கு மட்டும் ஏன் உள் ஒதுக்கீடு?
மாநில அரசோ நடுவண் அரசோ எங்காவது தலித் நலத்துறை என்று வைத்து பார்த்து இருக்கிறோமா ? ஆதி திராவிடர் நலத்துறை என்று இருக்கிறது பழங்குடியினர் நலத்துறை என்று இருக்கிறது.அரசாங்கத்தாலோ அல்லது எதனால் ஏற்றுக்கொள்ளப்பட வார்த்தை அது ?
எந்த ஊரிலாவது அவன் பறையன் என்பதற்கு பதிலாக அவர் தலித் என்று சொல்கிறார்களா ?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.