இலங்கையின் யுத்த முடிவுக்குப் பின் சிறுபா ன்மை சமூகங்களான முஸ் லிம்களும், தமிழர்களும் கடந்த கால கசப்புணர்வு களை மறந்து புரிந்துணர் வின் அடிப்படை யில் அரசியல் ரீதியாக கைகோர்த் துள்ளன.
இலங்கையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இதற்கான களமமைத்து அரசியல் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் இந்த இணைப்பை விரும்பாத சிங்கள அரசு - அதில் பிளவை உண்டு பண்ணி விட வேண்டும் என்று தொடக்கம் முதலே காய் நகர்த்தி வருகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிர திநிதிகள் சிங்கள அரசின் இந்தச் சதி முயற்சியை பலமுறை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், இனப்பிரச்சினைத் தொடர்பான தீர்வுத் திட் டப் பேச்சுவார்த்தைகள், ஸ்ரீல ங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் - தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கும் மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவித்திருப்பதாக இலங்கை அரசியல் வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு டனான எங்களது உறவில் எவ் வித முரண்பாடும் இல்லை என்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தாலும் இரு தரப்பின ருக்கு மத்தியில் முரண்பாடுகள் தோன்றியிருப்பதை இலங்கை அரசியல் நகர்வுகள் வெளிப்படுத் துவதாகவே உள்ளது.
அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமிடையே தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் தொடர்பான விபரங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரி வருகிறது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் தரப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்களை வெளியிட வேண் டும் என்கிறது முஸ்லிம் காங்கி ரஸ்.
ஆனால், "அரசுடனான அடுத் தகட்ட பேச்சுவார்த்தைகள் இம் மாதம் 4ம் தேதி நடைபெறவுள்ளது. முஸ்லிம் தரப்புடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கெனவே பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. தேவைப்பட்டால் மீண்டும் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும். அரசுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளை பகிரங்கப்படுத்த முடியாது..'' என்கிறார் கூட்டமைப் பின் பிரதிநிதியான சுரேஷ் பிரமேச்சந்திரன்.
அதே சமயம், பிரமேச் சந்திரனின் பேச்சுக்கு பதிலளித்துள்ள ஹசன் அலி, “கூட்டமைப்புக்கும் எங்களுக்குமிடையில் புரிந்துணர்வு இருக்கிறது. ஆயினும், கூட்டமைப்பு அரசுடன் நடத்திய முந்தைய பேச்சுவார்த்தைகளுக்கும், ஆகஸ்டு 4ல் நடத்த இருக் கும் பேச்சுவார்த்தைக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இதுவரையில் அவர்கள் எங்களுடன் பேசவில்லை.
முஸ்லிம்கள் விஷயத்தில் அரசு தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறது. எங்களை பேச்சு வார்த்தை மேசையிலிருந்து புறக்கணிக்கிறது அரசு. முஸ்லிம் தரப்புடன் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து எவ்வித உறுதியும ளிக்கப்படவில்லை...'' என்கிறார்.
அரசுக்கும், தமக்குமிடையேயான பேச்சுவார்த்தைகள் குறித்து பகிரங்கப்படுத்த முடியாது என்று கூட்டமைப்பு தெரிவித்திருப்பது சந்தேகத்தை உண்டு பண்ணுவதாகவே உள்ளது. இதுவே முஸ்லிம் காங்கிரசுக்கும், கூட்டமைப்புக்குமிடையே அரசியல் ரீதியான பிளவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் இலங்கை அரசியல் நோக்கர்கள்.
இனப்பிரச்சினை தொடர் பான பேச்சுவார்த்தைகளில் புலிகள் ஈடுபட்ட காலகட்டங்களிலும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டே வந்தனர். அந்த நிலை தற்போதும் நீடிப்பது என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் பாதையில்தான் பயணிக்கிறதோ என்ற ஐயப்பாட்டை எழுப்புகிறது.
அரசுடனான புலிகளின் பேச்சுவார்த்தைகளின்போது முஸ்லிம் சமூகம் மூன்றாவது தரப்பாக பேச்சுவார்தைகளில் பங்கெடுப்பதை புலிகள் இயக்கம் விரும்பவில்லை. இதனை அண்டன் பால சிங்கம் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்.
வடக்கு - கிழக்கு மீதான தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதும் முஸ்லிம்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் இருக்க வேண்டும். அவர்களுக்கு அதிகாரப் பரவலில் பங்கிருக்கக் கூடாது என்பதும் புலிகளின் எண்ணமாக இருந்தது.
வட கிழக்கு முஸ்லிம்களின தும் தாயகம் என்பதை சர்வதேச செய்தியாளர்கள் மாநாட்டில் பகிரங்கமாக புலிகளின் தலைவர் அறிவித்திருந்தாலும் அதை செயல்படுத்துவதில் புலிகளுக்கு தயக்கம் இருந்தே வந்தது.
அந்தத் தயக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இருக்கிறதோ என்கிற எண்ணத்தைத்தான் பிரேமச்சந்திரனின் பேச்சு ஏற்படுத்துகிறது.
வடக்கு மற்றும் கிழக்கில் அதிகாரப் பரவல் என்பது இரு சமூகங்களுக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். இதை நோக்கித்தான் தீர்வுத் திட்டத்தின் முன்னெடுப்புகளும் அமைய வேண்டும்.
இரு சமூகமும் இணைந்து அரசியல் களமாடும் நிலையில் ஒரு தரப்பினரின் உரிமைகளும், அபிலா ஷைகளும், பாதுகாப்பும் பாதிக்கும் வகையில் இருக்கும் என்றால் அது நிரந்தரத் தீர்வாக - அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வாக அமையாது.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் தரப்பை புறக்கணிப்ப தன் மூலம் கூட்டமைப்புக்கும், முஸ்லிம் கட்சிகளுக்குமிடையேயான உறவில் விரிசலை உண்டு பண்ண திட்டமிடுகிறது சிங்கள அரசு. அதற்கு கூட்டமைப்பு இடம் தரக்கூடாது. தங்களைப் போன்றே சிறுபான்மை சமூக மான முஸ்லிம்களின் கோரிக்கை களும் தீர்வு திட்டப் பேச்சுவார்த்தைகளில் விவாக்கப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை கூட்டமைப்பு அரசுக்கு கொடுக்க வேண்டும் என்பதே வடகிழக்கு முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- ஃபைஸல்