தமிழ்த் திரைப்படங்களின் அசத்தலான ஃபார்முலாக்களில் ஒன்று ஒரே பாடல் காட்சியில் கதாநாயகன் பேப்பர் போடுவதில் ஆரம்பித்து ஊறுகாய் கம்பெனி தொடங்கி, வியர்வை சிந்தி கடுமையாக உழைத்து பெரும் பணக்காரனாகிவிடுவது. இந்த ஃபார்முலா விளம்பரங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. "நான் வளர்கிறேனே ம்ம்மி" காம்ப்ளான் விளம்பரம், "குடிக்க வேணாம், அப்படியே சாப்பிடுவேன்" ஹார்லிக்ஸ் விளம்பரம் இரண்டும் வெற்றிகரமான உதாரணங்கள்.

Leena Manimekalai - Image thanks to The Hinduதமிழ் இலக்கிய உலகத்திலும் இந்த ஃபார்முலா வெற்றி பெற்றிருப்பதைக் கவனிக்கும்போது, தமிழ் நாட்டிற்கே உரிய இந்த ஸ்பெஷாலிட்டியை பாராட்டியே ஆகவேண்டும் என்ற பரவசம் ஏற்படுகிறது. இன்று பெரிய இலக்கியவாதிகளாக பெயர் பெற்றிருக்கும் பலர் சினிமாப் பாட்டைப் போட்டு அந்த கேப்பில் இலக்கியத்தில் முன்னுக்கு வந்தவர்கள். அவர்களை எல்லாம் ஏப்பம் விட்டு ஒரு சில விளம்பரப் படங்களால் முன்னுக்கு வந்தவர் என்ற பெருமை லீனா மணிமேகலையையே சேரும்.

"பறை" பட சர்ச்சை, லயோலா கல்லூரி துப்பட்டா தகராறு, தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த யாரோ ஏற்பாடு செய்திருந்த இரண்டு ரயில் பெட்டிகளை கடத்திச் சென்ற The Great Train Robbery துணிகரக் கொள்ளை, யோனியில் மசிர் கவிதை, கூலி கேட்ட தொழிலாளியை கடல் கடந்து வந்த எழுத்தாளரை அடியாளாக ஏவி விட்டு அடித்த "செங்கடல்" படம் என்று அடுத்து அடுத்து வெற்றிகரமான சுயவிளம்பரப் படங்களைத் தந்த லீனா மணிமேகலையின் அடுத்த விளம்பரப் படமான இந்துத்துவா எதிர்ப்புப் படமும் ஒரு வாரம் வெற்றிகரமாக "ஏ" சென்டர்களில் ஓடும் என்று நம்பலாம். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

வெற்றிகரமான விளம்பரப் பட நடிகை லீனாவின் சளைக்காத இந்த படைப்பு முயற்சிகளில் ஏப்ரல் – 15 அன்று ரிலீசாக இருக்கும் இந்துத்துவா எதிர்ப்பு, கலாச்சார அடிப்படைவாதிகளின் தாக்குதலுக்கு எதிரான கருத்துச் சுதந்திர போர்ப் பிரகடனப் படம் இரண்டு வகையில் முக்கியமான மைல் கல்.

வருடத்திற்கு ஒருமுறை தமிழ் நாட்டின் கேந்திர மையங்கள் எங்கும் "கலை இலக்கிய இரவு" விழாக்கள் நடத்தி தமிழ் கலாச்சாரப் பரப்பில் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சிபிஎம் – மின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ச. தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, பிரளயன் போன்ற மூத்த ஃபிகர்களையும், தமிழ் அறிவுப் பரப்பின் சீனியர் அறிவாளிகள், கவிஞர்கள், எழுத்தாளர்களையும் வைத்து 5 மணி நேரத்தில் எடுத்து அன்றே ரிலீசாகப் போகும் படம் என்பது ஒரு சாதனை. தமிழ்நாட்டின் மிகப் பெரிய அறிவாளியாகவும், மனித உரிமைப் போராளியாகவும் மட்டுமே அறியப்பட்டிருந்த அ. மார்க்ஸ் அவர்களை, இந்த மெகா விளம்பரப் படத்தின் மூலம் ப்ரொட்யூசர் அந்தஸ்திற்கு உயர்த்தியிருப்பது அதைவிட பெரிய சாதனை. ஒரே படத்தில் இரண்டு மைல் கல்கள்.

லீனா மணிமேகலையின் இந்த விளம்பரப் படத்தின் கதைக் கருவும் திரைக்கதை அம்சங்களும் மணிரத்தினத்தின் பாணியில் மிக மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருப்பதும் கடந்த இரண்டு வாரங்களாக இலக்கிய வட்டாரங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பாடாவதி ஜர்னலிசத்திற்கு வாழ்க்கைப்பட்டுவிட்டால் எதையாவது எழுதித் தொலைக்க வேண்டும் என்பது விதி. மணிரத்தினத்தின் வாரிசு லீனா மணிமேகலை வாயில் இருந்து ஒரு தகவலும் கசியப் போவதில்லை. மணிரத்தினம் மேதை, அதனால் பேசுவதில்லை என்று சொல்கிறார்கள். லீனா மேதையா மக்கா என்ற கேள்வியும் எரிச்சலும் பொத்துக் கொண்டு வந்தது. மக்கு என்கிறார்கள் பலர். நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை. யோசனைக்கு நடுவே எடிட்டரின் ஏகவசனங்கள் பத்தி பத்தியாக மூளைக்குள் ஓட, மேசை முன்னே மல்லுக்கட்டி உட்கார்ந்ததும் பேனா வழியாக சிந்தனைகள் தானாக வழிய ஆரம்பித்துவிட்டது.

ஃபோக்கஸ் லீனா இல்லை. புதுப்பட ப்ரொட்யூசர் அ. மார்க்ஸ். இரண்டு விமர்சனக் கணைகள்.

விமர்சனக் கணை ஒன்று. லீனா மணிமேகலையை வைத்து அ. மார்க்ஸ் எடுக்கும் இந்த முதல் படத்தில், சிபிஎம் – மின் மூத்த மூன்று ஃபிகர்கள் ச. தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, பிரளயன் கட்டாயம் நடிக்க வேண்டும் என்று அ. மார்க்ஸ் ஒற்றைக் காலில் நின்றதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் சொல்கின்றன. கலாச்சார அடிப்படைவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக போராடுவதற்கும் சிபிஎம் – க்கும் ஏழாம் பொருத்தம். இந்த சிபிஎம் கட்சிதானே அவர்களுடைய சொந்த கட்சித் தலைவர் W. R. வரதராஜன் மீது ஒழுக்கக் குற்றச்சாட்டு வைத்து, கட்சியில் இருந்து ஒதுக்கி, தற்கொலை செய்து கொள்ள வைத்தது? W. R. வரதராஜன் தற்கொலைச் செய்தி தினசரிகளில் ஒரு வாரம் பரபரப்பாக பேசப்பட்டு, சிபிஎம் – மின் மானம் கப்பலேறிய பிறகு, எந்த கூச்சநாச்சமும் இல்லாமல் தோழர். வரதராஜனுக்கு செவ்வணக்கம் செலுத்தி பிரச்சினையை குழிதோண்டிப் புதைத்ததும் இதே சிபிஎம் தானே? W. R. வரதராஜன் மரணம் கொலையாக இருக்கலாம் என்று செய்தி வெளியிட்ட பாமக அலுவலகத்தை சூறையாடிய சிபிஎம் காம்ரேடுகள் கருத்துச் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? அதே சிபிஎம் – மின் லீடிங் ஃபிகர்கள் கலாச்சார அடிப்படைவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் எந்த முகத்தோடு கலந்து கொள்கிறார்கள்? அவர்களை புதுப் ப்ரொட்யூசர் அ. மார்க்ஸ் இந்த விளம்பரப் படத்தில் நடிக்க வைப்பதன் மர்மம் என்ன?

அ.மார்க்ஸ் படம் நன்றி: இனியொரு.காம்கணை இரண்டு. கேரளாவின் மூத்த எழுத்தாளர் பால் சக்காரியா கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி கேரளாவின் காஸர்கோடு என்ற மாவட்டம் பையனூரில் சிபிஎம் – மின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) உறுப்பினர்களால் தாக்கப்பட்டார். காரணம்? அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு கேரள காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் உன்னிதன், மல்லாபுரம் மாவட்டம் மஞ்சேரியில் தன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்தபோது, DYFI உறுப்பினர்கள் அவருடைய வீட்டிற்குள் புகுந்து இருவரையும் தாக்கி வீடியோ எடுத்ததை பால் சக்காரியா கண்டித்து அறிக்கை விட்டிருந்தார். அறிக்கை விட்டதற்கு பால் சக்காரியாவுக்கு கிடைத்தது உதை. இது சிபிஎம் கருத்து சுதந்திரத்திற்குத் தரும் ஜனநாயகம். விளம்பர நடிகை லீனோவோ புதுப்பட ப்ரொட்யூசர் அ. மார்க்சோ கேரள சிபிஎம் – மின் இந்த ரவுடித்தனைத்தைக் கண்டித்து ஒரு அறிக்கையாவது விட்டார்களா? கண்டனக் கூட்டம் நடத்தினார்களா? இல்லை இனிமேலாவது நடத்துவார்களா? அப்படி நடத்தினால் அதில் சிபிஎம்-மின் மூத்த மூன்று பிகர்களும் கலந்து கொள்வார்களா?

அப்படி எல்லாம் முடியாது என்றால், பிறகு என்ன எழவுக்கு இப்போது இந்த ஒப்பாரி விளம்பரப் படத்தை அ.மார்க்ஸ் அவசர அவசரமாக தயாரித்து வெளியிடுகிறார்?

விளம்பரப் பட நடிகை லீனா மணிமேகலை மீது இந்து மக்கள் கட்சி ஒரு போலீஸ் புகார் கொடுத்துவிட்டதற்காக போராட்டக் களத்தில் குதிக்கும் புதுப் ப்ரொட்யூசர் அ. மார்க்சுக்கு இந்த நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரம் இருக்காது. பெருஞ்சித்திரனார் முதல் மனுஷ்யபுத்திரன் வரை பலபேருடைய கோவணங்களை உருவி சேர்த்து வைக்கவே அவருக்கு நேரம் சரியாக இருக்கும். இப்போதான் தெரிகிறது, அடுத்து யார் கோவணத்தை உருவலாம் என்ற அவரசத்தில் இருந்த அ. மார்க்சின் கோவணத்தை யாரோ உருவி விட்டிருக்காங்க என்று.

-     அ.அமுதன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

25 comments

25
கவின் மலர்
இந்தக் கட்டுரை பேப்பர் புரட்சிக்காரர்கள் டைப்பில் இருக்கிறது. இந்த கட்டுரையை... கட்டுரை என்று சொல்லக்கூட கூசுகிறது... இந்த ஏதோ ஒரு கண்றாவியை வெளியிடும் அளவிற்கு கீற்று தரம் தாழ்ந்து விட்டதை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. இனி...! கீற்று தளத்தை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று முடிவெடுக்க வைத்த அமுதனுக்கும் கீற்று ஆசிரியர் குழுவிற்கும் நன்றிகள் முதலில்.

அமுதன்! என்ன சொன்னீங்க! உம்மா கொடுக்க ஆசைப்பட்டு விண்ணப்பம் போடுகிறீர்களா? எத்தனை திமிர்? ஆணாதிக்கம்? இது லீனாவை நோக்கி மட்டுமல்ல, பெண்கள் அத்தனை பேரையும் அசிங்கப்படுத்தும் வாக்கியங்கள்.

ஆண்களாகவே கட்டுரை எழுதுவது, ஆண்களாகவே பேசுவது, ஆண்களாகவே உண்பது, ஆண்களாகவே சுவாசிப்பது...இதைத்தான் இந்த வாக்கியங்கள் நிரூபிக்கின்றன.

தனிமனித வன்மமும், ஆம்பிளைத்திமிரும் பொங்கிப் புரையோடிப் போயிருக்கும் ஒரு மனதின் வக்கிர வெளிப்பாடு. வெட்கமாக இல்லை???

கீற்று ஆசிரியர் குழுவிற்கு இத்தனை கீழ்த்தரமான வக்கிர வாக்கியங்களைக்கூட தணிக்கை செய்ய தோன்றாத அளவிற்கு என்ன காழ்ப்புணர்ச்சியோ?

“இன்னுமா இந்த ஊர் உங்களை நம்புது...?” என்று கேட்கத் தோன்றுகிறது...!

முதலும் கடைசியுமாய் ஒரே வார்த்தை..

சீ.........
keetru Ramesh
கவின், கட்டுரை பிரசுரமான ஐந்தாவது நிமிடத்தில் அந்த வரிகள் எங்களாலேயே நீக்கபப்ட்டது. அந்த ஐந்து நிமிட நேரத்தில் கூட கீற்றில் வரும் ஒரு கட்டுரை படிக்கப்படுகிறது என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது.

லீனா மணிமேகலையின் கவிதை வரிகளை விட அமுதனின் வரிகள் ஒன்றும் வக்கிரமானவையாக நான் கருதவில்லை. இருப்பினும் கீற்று குழுவில் இருப்பவர்களும் ஆட்சேபத்ததால் அவை நீக்கப்பட்டன. நீங்கள் கீற்றைப் பார்க்க மாட்டேன் என்ற முடிவைக் கேட்டதும் எனக்கு மாரடைப்பே வந்துவிட்டது. இனி எப்படி எனக்கு சோறு இறங்கும் என்றே தெரியவில்லை.
கவின் மலர்
நீங்களும் ஆண் என்பதை நிரூபிக்கிறீர்கள் ரமேஷ் !இங்கே யாருக்கு வக்கிரம் அதிகம் என்கிற பட்டிமன்றம் நடக்கிறதா என்ன? அவன் திருடன் என்றால். ‘இல்லை.. இல்லை.. அவனை விட அவன் தான் அதிகம் திருடினான். அதனால் இவன் திருடனில்லை..” என்பீர்களோ? இது ஆண்களின் உலகம்! வேறென்ன சொல்ல?

கீற்றுக்கு உலகெங்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கலாம். என்னைப் போன்ற ஒரு நபரின் புறக்கணிப்பால் உங்களுக்கு எந்த இழப்பும் ஏற்படாதுதான். உங்களுக்கு மாரடைப்பு வந்துவிடாதுதான். உங்களுக்கு சோறு இறங்கிவிடும்தான். உங்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்... சிறுதுளி.. பெருவெள்ளம்.. உங்கள் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு சில வாக்கியங்களால் பெண்களை கேவலப்படுத்தியதுமில்லாமல் அதனால் புறக்கணிப்பேன் என்று ஒருவர் சொல்லும்போது அதை நக்கல் அடிக்கும் நீங்கள் இனி முற்போக்கு முகமூடி போடாதீர்கள்! இத்தனை பேசும் நீங்கள் வெளியிடுமுன் அதை தணிக்கைசெய்து வெளியிட்டிருக்கலாமே? எதற்கு ஐந்து நிமிடங்கள் கழித்து தணிக்கை செய்தீர்கள்?

முடிந்தால் அந்த அமுதன் என்ற நபரை அப்படி எழுதியதற்கு மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கள். அதைச் செய்துவிட்டு உங்கள் முற்போக்கு முகமூடியை எடுத்து திரும்பவும் மாட்டிக்கொள்ளுங்கள்!
ramani
இன்றுதான் கலாச்சார போலிசுக்கு எதிரான உங்களது அமைப்பு வெளியிட்ட கருத்தை பத்திரிக்கை செய்தி வழியாக அறிந்தேன். லீணா மணிமேகலை தனது அரிப்புக்காக எழுதியதை இந்து மக்கள் கட்சி போலிசில் காட்டிக் கொடுப்பதை ஏற்க வேண்டாம் என அறிக்கை கொடுத்துள்ளீர்கள். ஏற்கெனவே போலிசு அதனை எல்லாம் ஒரு குற்றச்சாட்டாக ஏற்கவில்லை என்பதை உங்களது பொது செயலருக்கு கேணி சந்திப்பில் சுட்டிக்காட்டிய பிறகும் இதனை அவரது பெயரில் வெளியிட்டு உள்ளீர்கள். இது சீப் பாலிடிக்சு இல்லையா.

அப்புறம் லீணா எழுதிய அவதூறுக்காக இதுவரை யாரும் அவரது வீடு இருக்கும் பகுதிக்கு சென்று எல்லாம் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. இருந்தும் இதுபோல அவதூறு செய்வது சரியா... சிறுகுழு என்று தாங்கள் குறிப்பிடும் அமைப்பினர் யார் என்றும், வாயில்தானே முதலில் புரட்சியைப் பற்றிப் பேசுவதற்கு மார்க்சும், ஏங்கல்சும், லெனினும் சொல்லித் தந்தார்கள் என்பதை மறைக்க காரணம் என்ன என்றும் அறிய ஆவல்.

மார்க்சை, லெனினை வசை பாடிய ஒரு கவிதைக்கு ஆதரவாக நடக்கும் கூட்டத்திற்கு போகப் போகிறோமா இல்லையா என்பதைப் பற்றி அறிக்கை ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் கட்சி போவது இல்லை என முடிவு செய்து உள்ளதாக கடந்த கேணி சந்திப்பில் உங்களது பொதுச்செயலர் சொல்லி உள்ளார். கட்சிக்கும் தமுஎகச வுக்கும் மாறுபட்ட நோக்கு உள்ளதா எனவும் அறிய ஆவல்

லீனா பாரத மாதவையும் லெனின், மார்க்சை அவமதித்த்து போல அவமதிக்க முடியுமா என்ற கேள்விக்கு அந்த அம்மையார் பதிலளிக்காமல், கவிதையை புரிந்து கொள்ளத் தெரியாதவர்கள் என்று சாமான்ய வாயில் புரட்சி பேசும் கம்யூனிஸ்சுடுகளை திட்டி உள்ளார். இந்தக் கூற்றில் பாசிசம் இல்லையா. அறிவுத்திமிரை உரிமை என கொண்டாட கம்யூனிஸ்டுகள் என தங்களை சொல்லிக் கொள்ளும் தமுஎகச வும் கிடைக்கும் போது பின் நவீனத்துவ செட்டுகளின் சேட்டைகளுக்கு கேட்கவா வேண்டும்.

கலாச்சார போலிசு வேலையை பால் சக்காரியா பிரச்சினையிலும், தஸ்லிமா பிரச்சினையிலும் வைத்துப் பார்த்துதான் உங்களது அமைப்பு முடிவு செய்த்தா....

வீடு தேடிப் போய் அவதூறாக எழுதும் எழுத்தாளனை அவனது எழுத்தின் அடிப்படையில் அம்பலப்படுத்துவது ஒரு அரசியல் நடவடிக்கைதான். ஏன் தான் எழுதியதற்கு அவன் பொறுப்பு இல்லையா... இப்போ உங்கள அம்மாவின் நடத்தை கேடுகெட்டது என எழுதி விட்டு இப்படி சொன்னதற்காக என்னை நேரில் வந்து திட்டுவது ஜனநாயக உரிமைக்கு எதிரானது என்றால் புரட்சியை நீங்கள் பின்புறம் வழியாகத்தான் பேசுவது சரியாக இருக்கும்.
மதி
கவின் மலர், இந்த தர்ம ஆவேசம் லீனாவின் மீது உங்களுக்கு ஏன் ஏற்படவில்லை? இந்த கட்டுரையின் உள்ளர்த்தமான கூட்டத்தின் நோக்கம் விளம்பரம்தான் என்பதை குறித்து உங்கள் கருத்து என்ன? கீற்று குறைந்த பட்சம் தன்னை நோக்கி எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது. ஆனால் சக்காரியா குறித்தோ இந்த கட்டுரையில் நீங்கள் ஆதரித்து கூட்டம் நடத்தும் லீனா குறித்தோ நீங்கள் இன்னமும் மௌனம் காக்கிறீர்கள். இந்த மௌனத்தின் நோக்கம், அர்த்தம் என்ன? ஒரு வேளை அதை மறைக்கதான் இந்த தர்ம ஆவேசமா?
ramani
அ. மார்க்சு ஆயிரம்தான் இருந்தாலும் ஒரு ஆண். ஒரு பெண்ணிற்கு எதிராக எழுப்ப்ப‍டும் கேள்விகளுக்கு பெண்கள் தலைமையில்தானே கண்டன கூட்டம் நடத்த வேண்டும். அஜிதா விற்கு அந்த தகுதி கிடையாதா...
amaran
மதி, இது தெரியாதா உங்களுக்கு? கவின் உள்ளிட்ட தோழர்கள் கட்சியின் முடிவுக்காக காத்திருக்கிறார். கட்சியானது, சக்காரியாவை தாக்கியது சரியென்றால், ஆமாம் சரி என்று சொல்லி சக்காரியாவின் பழைய தவறுகள் ஏதேனும் இருந்தால் அதையேல்லாம் தோண்டி இதனால் சக்காரியாவை ஆதரிக்க முடியாது என சப்பைக்கட்டு கட்டவும், சக்காரியாவை தாக்கியது தவறு என்று கட்சி முடிவெடுத்தால், “நாங்கள் மனுநீதி சோழன் பரம்பரை, தவறு செய்தது எங்கள் கட்சியே ஆனாலும் கண்டிக்கிறோம்” என்று சொல்லவும் ஆக இருபக்கத்திற்குமான ஆதாரங்களை திரட்டும் பணியில் இருப்பார்கள் என நம்புகிறேன்.

என்னங்க, கட்சியின் கொள்கை முடிவுக்காக காத்திருக்க இது என்ன சேது சமுத்திர திட்டப் பிரச்சனையா? இட ஒதுக்கீடா? இல்ல வேறு ஏதாவது பொது மக்களின் மீது நேரடி பாதிப்பை உண்டாக்ககூடிய பிரச்சனையா? இதுபோன்ற சிறு நிகழ்வுகளின் மீதே சொந்தக் கருத்தை தெரிவிக்க 3 நாள் ஆகியும், கவின், ஆதவன் தீட்சண்யா, தமிழ்செல்வன், பிரளையன், பிரபஞ்சன்,etc.. போன்றோர்கள் கள்ள மௌனம் சாதித்துக்கொண்டிருந்தால், நாங்கள் கண்டிப்பாக நம்பவேண்டியிருக்கும் “ஹோட்டல் நடத்திக்கொண்டிருக்கும் தோழர் சாம்பார் வைக்க கட்சியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும் என்று”.
tvs
ayyakale, ammakale... intha visayathai vitu veliye varungal. thandagarunyam thahikirrathu.
tvs
thkirathu kaadu. idhu thevaya?
கவின் மலர்
தோழர் ரமணி!

//உங்களது பொது செயலருக்கு கேணி சந்திப்பில் சுட்டிக்காட்டிய பிறகும் இதனை அவரது பெயரில் வெளியிட்டு உள்ளீர்கள். இது சீப் பாலிடிக்சு இல்லையா.
//

தமுஎகச ஒன்றும் வெறும் சில நூறு பேர்களைக் கொண்ட அமைப்பல்ல. ஆளாளுக்கு அறிக்கை விட்டுஅதில் பொதுச்செயலாளர் பெயரைப் போட்டுக்கொள்வதற்கு. இது அமைப்பின் அறிக்கை.

//அப்புறம் லீணா எழுதிய அவதூறுக்காக இதுவரை யாரும் அவரது வீடு இருக்கும் பகுதிக்கு சென்று எல்லாம் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. இருந்தும் இதுபோல அவதூறு செய்வது சரியா... சிறுகுழு என்று தாங்கள் குறிப்பிடும் அமைப்பினர் யார்//

லீனாவின் விட்டிற்குச் சென்று எதுவும் செய்யவில்லைதான். ஆனால் வேறு யார் வீட்டிற்கும் செல்லவில்லையோ இந்த வாய்ச்சவடால் வீரர்கள்? குற்றமுள்ளவர்கள் நெஞ்சு குறுகுறுக்கும். உங்களுக்கேன் குறுகுறுக்கிறது?

// இப்போ உங்கள அம்மாவின் நடத்தை கேடுகெட்டது என எழுதி விட்டு இப்படி சொன்னதற்காக என்னை நேரில் வந்து திட்டுவது ஜனநாயக உரிமைக்கு எதிரானது என்றால் புரட்சியை நீங்கள் பின்புறம் வழியாகத்தான் பேசுவது சரியாக இருக்கும்.//

வாங்க! ஏன் உங்களுக்கு அப்போதுகூட அப்பாவை நடத்தை கெட்டவர் என்று சொல்லத் தோன்றவில்லை? அங்கேயும் பெண் தான் இளிச்சவாய். அப்படித்தானே? என் அம்மாவின் நடத்தை என்பது அவர் சம்பந்தப்பட்டது. அது என் அம்மாவின் இஷ்டம். நீங்கள் யார் அதை கெட்ட நடத்தை என்று சொல்ல? ஏன் என் அம்மாவை அப்படி திட்டினீர்கள் என்று கேட்கமாட்டேன். அதைக் கேட்க உங்களுக்கென்ன உரிமை இருக்கிறது. அது என் அம்மாவின் இஷ்டம் என்று உங்களை திட்டுவேன். அதையும் வீடு தேடி வந்து அநாகரிகமாக சொல்ல மாட்டேன். அடுத்தவர் வீட்டுக்குள்ளும் படுக்கையறைக்குள்ளும் எட்டிப்பார்க்கும் உரிமை உங்களுக்கு யார் கொடுத்தது? யார் நடத்தை கெட்டால்தான் உங்க்ளுக்கென்ன? அது அவரவர் பாடு. உங்களுக்கெல்லாம் வேறு வேலையில்லையா என்று கேட்பேன்.

ஒரு மனிதரை திட்டும்போது கூட உங்களுக்கெல்லாம் அந்த நபரை திட்டமுடியாது.. அவருடைய அம்மாவைத்தான் திட்டுவீர்கள்! நல்ல புரட்சி! நல்ல முற்போக்கு சிந்தனை. இயக்கவாதிகளுக்கு இப்படிப்பட்ட பேச்சோ எழுத்தோ வராது. வரக்கூடாது. இயக்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் ஆண்களுக்கு வரும். உங்களுக்கு வருகிறது. உறுப்பினர் அட்டை மட்டும் வாங்கி வைத்திருக்கிறீர்களோ? அல்லது எல்லோருமே இப்படித்தானா? அப்ப மொத்த இயக்கமுமே ஆண்களின் இயக்கமா?
semmanal
கவின்மலர் இது நீங்களா எழுதினதா அல்லது தோழர்கள் எழுதித் தந்ததா?
பத்திரிகைகாரன்
லீனாவின் கவிதைகள் வழக்கொழிந்து போய்விட்டன. அதைக் காரித்துப்பி விட்டார்கள். துப்பிய இடத்திலேயே மீண்டும் மீண்டும் துப்பி ஏன் தோழர்களே உங்கள் வாய்களை நாறடித்துக்கொள்கிறீர்கள். 'கீற்று' - ஒரு இணைய பத்திரிகை. அதில் பி.ஜே.பி. கம்யூனிஸ்ட், தலித், பார்ப்பான் எல்லார் கருத்துகளையும்தான் வெளியிடுவார்கள். இது என்ன தீக்கதிரா..? கம்யூனிஸ்ட் காம்ரேட்டுகளின் கருத்துகளை வெளியிடுவதற்கு..? கீற்று ரமேஷ் முற்போக்காளராக இருக்கலாம். ஆனால், அவர் நடத்திவரு்ம் இணைய இதழுக்கு எல்லார் கருத்துகளையும் கூவிக்கூவி சொல்ல உரிமை இருக்கிறது. இதை யாரும் கேள்வி கேட்க முடியாது. இப்படி கேள்வி கேட்பவர்கள் எப்படி பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசி பிதற்றுகிறார்கள் தெரியவில்லை. கவின் மலர் போன்றவர்கள் லீனாவின் செக்ஸ் கவிதைகளை அங்கீகரிப்பது கம்யூனிஸ்ட் கட்சியி்ன் அனுமதியோடுதான் நடக்கிறது என்று வைத்துக்கொண்டால், பின் எதற்கு டபிள்யூ.ஆர்.வரதராஜன் மீது மாதர் சங்க பெண்'மணி'கள் கூட்டு சேர்ந்து கட்சியிடம் அவதூறு புகார் அளித்து, அவரை தற்கொலைக்குத் தூண்டினார்கள் யாமறியேன் பராபரமே!
மதி
எனக்கு ஒன்னு தெரிஞ்சாகணும். கவின் மலர் அடுத்தவங்களுக்கு பதில் சொல்லுவாங்களா? இல்ல எஸ்கேப்பா?
ramani
கவின்

ஆத்திரத்தில் அறிவு இழப்பது சரியல்ல• இப்போ அம்மாவின் நடத்தை தவறு என்றால்தான் ஆணோ அல்லது பெண்ணோ அவரது பிறப்பை இழிவுபடுத்துவதாக அமையும். இது ஆணாதிக்க பார்வையாக எனக்கு படவில்லை. அடுத்து இப்போ லிணா மீதுதான் ஆணாகிய எனக்கு காதல் வர வாய்ப்பு இருக்கிறது. பதிலாக ஜெரால்டு மீது காதல் வர வாய்ப்பில்லை (எனது நிலைமைதான் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்).

அடுத்து அறிக்கை வெளியிட்ட ச•தமிழ்செல்வன்தான் கேணி கூட்டத்திலும் அமைப்பு சார்பாக அறிவித்தவர். 150 பார்வையாளர்களும் ஞாநி போன்ற பத்திரிக்கையாளர்களும் கூடியிருந்த கூட்டத்தில் அறிவித்தார். கூட்டத்தில் உங்களது அமைப்பு கலந்து கொள்ளாது என்று. அவரை அமைப்பிற்கு எதிராக சொன்னதற்காக வெளியேற்ற உங்கள் அமைப்பில் உள்ள ஜனநாயகத்திற்கான பெண்கள் கோர மாட்டீர்களா... அல்லது இந்த ஆணாதிக்க திமிரை எதிர்த்து வெளியேற மாட்டீர்களா..

அடுத்தவன் படுக்கையறையில் கூட இல்லை. காங்கிரசு பிரமுகரின் வீட்டு வேலைக்காரப் பெண்ணுடன் இருந்த்தாக கூறி உங்களது வாலிபர் சங்க தோழர்கள் கேரளாவில் ஆடிய போலிசில் பிடித்துக் கொடுத்த் வேலையும், அதைக் கண்டித்த கூட்டத்தில் உரையாற்ற வந்த பால் சக்காரியாவை தாக்கியதும் சங்கர ராம சுப்ரமணியனை மக்களிடம் அம்பலப்படுத்தியதை விடவும் நாகரிகமான செயலா. அம்பலப்படுத்துவது உங்களுக்கு குற்றமாக படுவது வெடிக்கையாகத்தான் உள்ளது. மக்களது பணத்தை திருடுபவனுக்கும் தான் எழுதிய கவிதையின் சமூக பொறுப்பை மறுதலிப்பவனுக்கும் என்ன வேறுபாடு.

சங்கர ராமசுப்ரமணியனுக்கும் விக்ரமாதித்யனுக்கும் வரிந்து கட்டி வரும் உங்களுக்கு லிணாவின் பெண்மையை கேள்வி கேட்டால் தவறாகவும், ஈராக் பெண்களின் பெண்மையை அவமானப்படுத்துவதற்கு தமிழ் அறிவாளி ஆண் கவிஞர்களுக்கு உரிமை இருப்பதாகவும் பிதற்றுவதில் முசுலிம்களை இழிவுபடுத்தும் போக்குதான் வெளிப்படுகிறது. கம்யூனிஸ்டுகள் உலகில் எந்த மூலை முடுக்கில் யார் ஒடுக்கப்படுகிறார்களோ அவர்களுக்காக போராடுபவர்கள் என கேள்விப் பட்டிருக்கிறேன்.

சங்கர, விக்கிர, மணிவண் குருப்பால் இழிவுபடுத்தப்பட்ட ஈராக் மக்களை விடவும் நடுத்தர வர்க்க அறிவுஜீவுயும் நாளெல்லாம் மார்க்சியத்தை மார்க்சிய மூலவர்களை காரணமேயில்லாமல் அவதூறு செய்பவரும், மார்க்சிய சொல்லாடல்களை பாலியல் சொல்லாடல்களாக மாற்றி அதனை தங்களது வாழ்க்கையின் விடிவாக நினைக்கும் கோடிக்கணக்கான பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் ஒரு சோ கால்டு கலக்காரிக்கு வக்கலாத்து வாங்குவதற்கு பெண்ணியம் என்ற முகமூடியை சிபிஎம் சரியாகத்தான் பயன்படுத்துகிறது. அதற்கு வகைமாதிர் தாங்கள்.

பால் சக்காரியா தாக்கப்பட்டதற்கு முன் பிடித்து தரப்பட்ட காங்கிரசு பிரமுகரின் வீட்டு வேலைக்கார பெண் ஒரு தொழிலாளி வர்க்க பெண். லிணா வோ நடுத்தர வர்க்க பெண். முதலவள் மார்க்சிஸ்டுகளின் அரசியல் சித்து விளையாட்டுக்காக அல்லது சில சில்லறை ஓட்டுக்காக பலியாக்கப்பட்ட அப்பாவிப் பெபண். லிணாவோ மூலவர்களை திட்டி பெயர் பெற நினைத்த ஒரு மூன்றாந்தர பிரஜை. ஒரு வேளை மூன்றாந்தர ஜெயாவுக்கு தங்களது கட்சி காவடி தூக்கும் அரசியல் வேலையை கலாச்சார தளத்தில் தாங்களும் துவங்கி விட்டீர்களோ என்னவோ
பின்குறிப்பு;
நான் நாளை நடக்கும் கூட்டத்தில் எனது தனிமனித உரிமையை பயன்படுத்தி லிணாவுக்கு ஒரு காதல் கடிதம் தர உள்ளேன் என்பதை இதன்மூலம் அறிவித்துக் கொள்கிறேன். இதனை மறுப்பது அல்லது ஏற்பது அவரது உரிமைதான் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.
nagasundaram
அமுதனின் அபத்தமான கட்டுரை(?)மற்றவர்களைக் குறிவைத்துத் தாக்குவதில் அற்ப சுகம் காண்கிறது. பேப்பர் புரட்சியைத் தாண்டி மக்களுடன் சேர்ந்து செயல் படும் இடதுசாரிகள் சேர்ந்து செயல் படும் போக்கை அமுதன் போன்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதாவது காரணங்கள் கண்டுபிடித்து அவர்கள் மீது சேற்றைத் தெளிக்கவேண்டும். ஆனால் சேறு தெளிப்பவர்கள் வரலாற்றில் இடம் பெறுவதில்லை. சேறுகளையும் பொருட்படுத்தாமல் செயல்படுபவர்களே சாதிக்கிறார்கள்
ஏகலைவன்
///////nagasundaram
அமுதனின் அபத்தமான கட்டுரை(?)மற்றவர்களைக் குறிவைத்துத் தாக்குவதில் அற்ப சுகம் காண்கிறது. பேப்பர் புரட்சியைத் தாண்டி மக்களுடன் சேர்ந்து செயல் படும் இடதுசாரிகள் சேர்ந்து செயல் படும் போக்கை அமுதன் போன்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏதாவது காரணங்கள் கண்டுபிடித்து அவர்கள் மீது சேற்றைத் தெளிக்கவேண்டும். ஆனால் சேறு தெளிப்பவர்கள் வரலாற்றில் இடம் பெறுவதில்லை. சேறுகளையும் பொருட்படுத்தாமல் செயல்படுபவர்களே சாதிக்கிறார்கள்//////

அய்யா நாகசுந்தரம்,

மக்களோடு சேர்ந்து வேலை செய்வது என்றால் என்ன ஐயா?

சிங்கூர், நந்திகிராம், லால்கார் அக்கிரமங்கள் உலகுக்கு கூறிய உண்மைகள் வேறாகவல்லவா இருக்கிறது. அங்கெல்லாம் நீங்கள் முதலாளிகளுக்கு நாக்கைச் சுழற்றி வாலாட்டிக்கொண்டே மக்கள் மீது பாய்ந்து பிடுங்கிக் கொண்டிருக்கிறீர்களே இதற்கு என்ன பெயர்?

பேப்பர் புரட்சி, என்றெல்லாம் நீங்களும் கவின்மலரும் வாய்கிழியப் பேசுகிறீர்களே, முதலாளிகள் வீசியெறிந்த கரன்சிப் பேப்பருக்காகத்தானே நந்திகிராமில் ஏழை-உழைப்பாளி மக்களின் உயிர்குடித்தீர்கள்! அந்த கரன்சி பேப்பர்களுக்காகத்தானே ப.சிதம்பரத்தோடு கூடிக் கொண்டு ‘காட்டு வேட்டை’ நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்!

லீனாவின் கவிதைக் கழிவுகளைச் சுமந்து வரும் பேப்பரின் மதிப்பு குறித்து புளகாங்கிதப் பெருமை பேச, கூச்சமின்றி படையெடுக்கும் உங்களது தலைவர்களான ச.தமிழ்ச்செல்வன், ஆதவன், பிரளயன் போன்றவர்களுக்கு சிறிதளவேனும் மான உணர்ச்சி இருந்தால், லீனாவின் அந்த கவிதைக் கழிவுகளை தயக்கமின்றி மேடையில் நின்று அனைவருக்கும் முன்பாக வாசித்துக் காட்ட வேண்டும்.
amuthan
கீற்று ஆசிரியர் குழுவிற்கு,

கட்டுரையை வெளியிட்டதற்கு நன்றி. ஆனால், அந்த வரியை அனுமதி பெறாமல் நீக்கியதற்கு கண்டனம்.

கவின்மலர்,

//அவர்களை எல்லாம் ஏப்பம் விட்டு ஒரு சில விளம்பரப் படங்களால் முன்னுக்கு வந்தவர் என்ற பெருமை லீனா மணிமேகலையையே சேரும் வரி இது// என்ற வரியைத் தொடர்ந்து வந்த இந்த இரண்டு வரிகளை ஆசிரியர் குழுவினர் நீக்கிவிட்டார்கள். அந்த வரிகள் //அதற்காக லீனாவுக்கு ஒரு உம்மா கொடுக்க ஆசையாக ஆசையாக இருக்கிறது. பாலியல் புரட்சியில் பெரும் நம்பிக்கை வைத்து பரப்புரை செய்துவரும் லீனா கோபித்துக் கொள்ள மாட்டார், அவருடைய சகாக்கள் பொறாமைப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இந்த விண்ணப்பத்தை போட்டு வைக்கிறேன்.//

நீங்கள் இதில் உள்ள முதல் வரியை மட்டும் துண்டாக எடுத்துக் கொண்டு ஆவேசப் பெண்ணிய நடனம் ஆடியிருக்கீங்க. “அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ அம்மனூர் நீலியோ” பாட்டை ஞாபகப்படுத்துகிறது உங்கள் ஆவேசம்.

ramani இன்று நடக்க இருக்கும் கூட்டத்தில் தன் தனி மனித உரிமையைப் பயன்படுத்தி லீனாவுக்கு காதல் கடிதம் கொடுக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார். வாங்குவதும் வாங்காததும் லீனாவின் இஷ்டம் என்கிறார். இது ஆணாதிக்கமா ஜனநாயக ரீதியாக ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தும் முறையா?

அதே போன்றுதான் நானும் “ஒரு உம்மா கொடுக்க ஆசையா இருக்கு” என்று எழுதினேன். விண்ணப்பம் போடுவதாகவே சொன்னேன். அப்படி நக்கல் செய்தேன். பாலியல் புரட்சி பேசும் லீனாவுக்கோ உங்களுக்கோ இதில் ஏன் கோபம் வரவேண்டும்?

லெனினின் “ஒரு கோப்பை தண்ணீர்” பாலியல் கோட்பாடு பேசும் லீனாவுக்கும் அதை ஆதரிக்கும் உங்களுக்கும் இதில் கோபம் வர என்ன நியாயம் இருக்கு? உடனே ஒட்டுமொத்த பெண் குலத்தையே அசிங்கப்படுத்திவிட்டதாக ஏன் இந்த ஆவேச வேஷம்?

இப்போ இந்தக் கட்டுரையை நான் அமுதினி என்ற பெயரில் எழுதி லீனாவுக்கு முத்தம் கொடுக்க ஆசைப்பட்டேன் என்று எழுதினால் உடனே நான் லெஸ்பியன் ஆகிவிடுவேனா? அமுதன் என்ற பெயரில் லீனாவுக்கு பதிலாக லேனா தமிழ்வாணனுக்கு முத்தம் கொடுப்பதாக எழுதினால் ஹோமோ செக்சுவல் ஆகிவிடுவேனா? அப்படித்தானே இருக்கு உங்கள் லாஜிக்.

இது மட்டும்தான் உங்களுக்கும் லீனாவுக்கும் பெண்ணியமா? எல்லோரும் உங்கள் தரப்பு ஆட்களைப் பற்றி கேட்கும் கேள்வி இதுதான். புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்க.

நான் எழுப்பிய இரண்டு கேள்விகளுக்கு, ரெண்டே ரெண்டு கேள்விகளுக்கு பதிலே சொல்லாமல் இந்த ஒரு வரியைப் பிடித்துக் கொண்டு ஆவேசம் காட்டினால் எல்லோரும் பயந்துவிடுவாங்களா என்ன?

கடைசி கடைசியாக இல்லாமல் திரும்பவும் கேட்கிறேன். சிபிஎம்மை யார் புரட்சிகர கட்சி என்று சொன்னது? எல்லா ஓட்டுப் பொறுக்கி கட்சி போல இன்னொரு கட்சி சிபிஎம். அப்படி இருக்கும்போது நீங்கள் மற்றவர்களைப் பார்த்து பேப்பர் புரட்சிக்காரர்கள் என்று அடிப்பது இன்னொரு காமெடி பீஸ்.

உங்க சிபிஎம் கேரளாவிலும் மேற்கு வங்காளத்திலும் அடிக்கிற கூத்தை தமிழ்நாட்டில் யாரும் பேசுவது கிடையாது என்பதால் யாருக்கும் விஷயமே தெரியாது என்று நினைத்து விடாதீர்கள். அதெல்லாம் உங்களுக்கே தெரியுமோ என்ன கண்றாவியோ?

சில மாதங்களுக்கு முன்பாக சிபிஎம் மேற்கு வங்கத்தில் ஒரு சட்டம் போட்டிருக்கு தெரியுமா? காதல் திருமணம் செய்ய விருப்பப்படும் காதலர்கள் இனிமேல் அப்பா அம்மா பெர்மிஷன் வாங்கிக்கிட்டுத்தான் கல்யாணம் கட்ட முடியுமாம்!

என்ன கொடுமை சாமிடா இது!

நீங்க இங்க கலாச்சாரக் காவல்காரர்களை எதிர்த்து போராட்டம் நடத்துறதா சொல்லிக்கிறீங்க.

வெக்கமாயில்லை?

திரும்பச் சொல்றேன் ...

ஐய்யே ...
ஏகலைவன்
சி.பி.ஐ.க்கு ஒரு லீனா என்றால், சி.பி.எம்.க்கு ஒரு கவின்மலர்!

ஒரு சில வித்தியாசங்களைத் தவிர இவர்களுக்குள் வேறுபாடு எதுவும் கிடையாது. ஆணாதிக்கத்தை எதிர்ப்பதற்கும், பெண்ணியத்தைக் காப்பதற்கும் பிறப்பெடுத்த ‘வீர மகளிர்’ தான் இவர்களிருவரும். கொஞ்சம் நெருக்கிப்பிடித்து இவர்களுடைய செயல்பாடுகளைப் பார்த்த எல்லோருக்கும் தெரியும் அவற்றின் கழிசடைத்தனம்.

இங்கே வந்து பெண்ணியம் பேசும் கவின்மலர் அவர்களே, மினர்வா எழுதியுள்ள கட்டுரையின் பக்கமும் சற்று ஒதுங்கிவரலாமே! வினவின் பக்கம் நீங்கள் தலைவைத்தும் படுக்கமாட்டீர்கள். ஏனெனில் அது தீவிரவாதிகள் ஏ.கே.47-ன் மூலம் எழுதிக் கொண்டிருக்கும் பயங்கரமான தளம் போலும்! கீற்றுவின் மினர்வாவின் கட்டுரை ஏன் உங்களை அச்சமூட்டுகிறது. லீனாவின் முகமூடியோடு சேர்த்து உங்களுடையதும் கிழிந்து தொங்குவதாலா?! நிற்க.

நாங்க எல்லோரும் கஷ்டபட்டு அம்பலப்படுத்த வேண்டிய வேலைகளைக் குறைத்து தம்மைத்தாமே அம்பலப்படுத்திக் கொண்டு சந்தி சிரித்துக் கொண்டிருக்கும் போலி கம்யூனிஸ்டுகளுக்கும் அவர்களின் கலாச்சார அமைப்பான த.மு.எ.க.ச. போன்ற கச.முச.க்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்!
ஏகலைவன்
இது தோழர் மாதவராஜ் தளத்தில் கருத்து பதிந்திருந்த கவின்மலருக்காக நான் பதிந்த பின்னூட்டம், இப்பதிவுடன் தொடர்புடையதாக இருப்பதால் இங்கும் பதிவிடுகிறேன்.

Kavin Malar
ஒரே ஒரு தகவல்... இந்த குறிப்பிட்ட இரு கவிதைகளும் “உலகின் அழகிய முதல் பெண்” தொகுப்பில் இடம்பெறவில்லை. ஆனால் தொடர்ந்து இணையதளங்களில் இந்தக் கவிதைகள் அந்தத் தொகுப்பில்தான் இருப்பது போன்ற மாயையை தோற்றுவிக்கின்றன. தொகுப்பு வெளியாகி பல மாதங்கள் கழித்து எழுதப்பட்ட இக்கவிதைகள் இரண்டும் ஹரிகிருஷ்ணனின் “மணல் வீடு” இதழில் வெளியானவை.

கவின்மலர் அம்மையாரே, பெண்ணியக் காவலரே!

அந்த கழிசடைக் கவிதைகள் எந்த இதழில் வெளிவந்தது என்கிற புள்ளிவிபரங்களெல்லாம் கிடக்கட்டும். அந்த கவிதைகள் குறித்தும் அதில் கம்யூனிச ஆசான்கள் அவமதிக்கப்பட்டிருப்பது குறித்தும் உங்களது கருத்தென்று ஏதாவது இருந்தால் முதலில் பதிந்துவிட்டு நியாயம் பேச வாருங்களேன்; கேட்போம்!

ஈராக் போரும், ஆப்கானிய, பாலஸ்தீனிய, ஈழப் போர்களும் வெறும் ஆண்குறிகள் நடத்தும் போர்தான் என்று ‘கட்டுடைத்த’ கவிதைவரிகளுக்காக, கம்யூனிச முகமூடியணிந்து வெட்கமின்றி வாதிட வருகிறீர்களே, அப்போருக்கான உண்மையான நோக்கம் குறித்து ஏதேனும் அறிந்திருந்தால் இங்கே பதியுங்களேன் பார்க்கலாம்!!

அமெரிக்காவின் பச்சையான ஆக்கிரமிப்புப் போர்களை வெறும் ஆண்குறி செய்யும் வேலைதான் என்று சித்தரித்திருக்கும் லீனாவை, அதே அமெரிக்காவின் ஆண்குறியை ஒத்தவர்கள்தான் சமூகமாற்றத்திற்காகப் போராடும் புரட்சியாளர்களும் என்பதாகச் சித்தரித்திருக்கும் அவரது கவிதையை விமர்சித்துவிட்டார்கள் என்பதற்காக பாய்ந்து பிடுங்க வருகிறீர்களே, ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளும் உங்களுக்கு சொந்தமான அறிவு நாணயமென்று ஏதும் இருக்கிறதா?!

தோழர் மாதவராஜ் இங்கு தமுஎகச விற்கு வைத்திருக்கும் கேள்வியினை புரிந்துகொள்ள முடியவில்லையென்றால், மீண்டும் மீண்டும் படித்துப்பாருங்கள். முடிந்தால் அவற்றுக்கான நேர்மையான பதிலைப் பதியுங்கள் என்று மிகத் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன், அம்மையாரே! நன்றி!!
amuthan
நல்ல காலம் இன்னைக்கு ஆபீசில் வேலை அதிகமாகிவிட்டதால் லீனா விளம்பரப் பட ரிலீஸுக்கு போக முடியவில்லை. போயிருந்தால் அடி விழுந்திருக்கும் போலிருக்கே.
R. Shankar
Dont you guys have no other job? Why this idle talk about revolution and nonsense. Why dont you really do some service instead of talking BS about stupid literature. Whatever you guys are doing is neither revolution nor litreature.

The people of tamil nadu dont even have latrines. Can you guys form an association to educate the people and do something to change these real problems. Talking about revolution / litreature wont help at all.
நந்தா
கவின் மலருக்கும், அமுதனுக்கும் நடந்த விவாதமும், இடையில் குறிப்பாய் கீற்று ரமேஷின் பதிலும் கீற்று தளத்தின் மீதிருந்த மரியாதையை போக்கியிருக்கிறது.

இவ்வளாவு புரட்சி பேசும் நீங்கள் ஆண் என்ற புள்ளியில் ஒன்றிணைந்த அவலத்தை கேவலமாய் பார்க்க வேண்டியிருக்கிறது.
sathish
kathavai thira kattru varatum
முத்துக்குமார்
கீற்று ஆசிரியர் குழுவுக்கு வணக்கம் , உங்கள் பணி பாராட்டப்பட வேண்டியது தான், ஆனால் கீழ்தரமான -தரம்கெட்ட லீணாவை ஒரு பொருட்டாக முக்கியத்துவம் கொடுத்து கீற்றில் எழுதுவது தான் தர்மசங்கடமா இருக்கு.. உங்களுக்கு சமூகப்பணி ஆற்ற இந்த யோனி கவிதை புகழ் லீணா தான் கிடைத்தாரா? அவரோடு மார்க்ஸ் கூட்டு சேர்ந்தால் யாருக்கு என்ன நஷ்டம்? உங்கள் தரத்தை நீங்களே குறைத்து கொள்ள வேண்டாம்

முத்துக்குமார்
sooriyan
ayyaa shankar avargale, ezhuththaalargal endraal ungalukku avvalavu ilakkaaramaaga poai vittatha enna.... naangal makkal vaazha poaraadavaa piranthom illaye, naangal ilakkiyam vaazha piranthavargal, naangal mozhi vaazhvatharkaaga piranthavargal, ungal makkalukku kakkoosu illai endraal enna engal puththagangalai kaasu koduththu vaangi athil paper kizhiththu thudaiththu kolla sollungalen... nee engalukku sonna velayai nee thaan seyyen yaar venamnu sonnathu... sei senju thaan paaren...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.