இந்திய சமூகத்தில் சாதி அடுக்குமுறை என்பது ஒடுக்குமுறைகளுக்கும், சுரண்டல்களுக்கும் முக்கிய காரணியாக செயல்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல், ஆதிக்க சாதியினருக்கு சமூகப் பாதுகாப்பு அளிக்கும் கேடயமாகவும் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் பாலியல் புகாரில் சிக்கி கைதான நடிகை புவனேஸ்வரியும், வாய்க்கு வந்த‌தைப் பேசி வம்பில் மாட்டிக் கொண்ட நடிகர் விவேக்கும் உடனடியாக புகலிடம் தேடியது முக்குலத்தோர் சாதிச்சங்கங்களிடம்தான். 'எங்க சாதிசனங்களை மீறி என்னைத் தொட்டுற முடியுமா?' என்கிற மிரட்டலைத்தான் அவர்கள் மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்கள்.

சாதி அடுக்குமுறையில் பங்கேற்காது, அதை வெளியில் நின்று ஒழிக்க வேண்டிய தலித் சகோதரர்களே சமயங்களில், எல்லோரும் அல்ல, தங்களது சுயலாபங்களுக்காக சாதிக்குள் ஒளிந்து பாதுகாப்பு தேடுகின்றனர். 'நான் தலித்ங்கிறதாலத்தான் எனக்கு இந்த கதி' என்று கூறுவது ஆதிக்க சாதியினரதைப் போல் மிரட்டல் அல்ல, இது கழிவிரக்கம். இந்தக் கழிவிரக்கம் பாமர மக்கள் சிலரிடம் இருக்கலாம். ஆனால் மெத்தப் படித்த எழுத்தாளர்களே தங்கள் மீதான விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்ளாமல் 'நான் தலித், அதனால் தலித் விரோதத்துடன் நடந்துகொள்கிறார்கள்' என்று சொன்னால் அது எவ்வளவு பரிதாபகரமானது. ஆனால் அந்தப் பரிதாபத்தைத்தான் இரவிக்குமார் செய்தார், இப்போது அவரது பாதச்சுவட்டில் நமது ஆதவன் தீட்சண்யாவும் வந்து நிற்கிறார்.

aadhavan_340ஆதவனுக்கு அப்படியென்ன கொடுமை நேர்ந்தது?

ஈழப் பிரச்சினை தொடர்பான அவரது நிலைப்பாடும், செயல்பாடுகளும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின. பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் அது தொடர்பாக எழுதிய கட்டுரைகள் கீற்றிலும், இனியொரு, வினவு உள்ளிட்ட தளங்களிலும் வெளிவந்தன. விமர்சனங்களுக்கான பதிலை ஆதவன் எழுதியிருந்தால், அதை கீற்று நிச்சயம் வெளியிட்டிருக்கும். இது ஆதவனுக்கும் தெரியும். ஆனால் ஆதவன் எழுதவில்லை. அது அவரது உரிமை. ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் விவாதங்களையும், விமர்சனங்களையும் திசை திருப்பும் விதமாக அவர் கூறுகிறார், 'நான் தலித். அதனால் கீற்று குழுவினர் என்மீது தலித் விரோதத்துடன் அவதூறு பேசுகிறார்கள்'. (அவரது விமர்சனக் கவிதை கீழே தரப்பட்டுள்ளது.)

ஆதவன் மீது அப்படியென்ன விமர்சனங்கள் வைக்கப்பட்டன?

1. எழுத்தாளர் தமிழ்நதிக்கான எதிர்வினையில், ஆணாதிக்கம் மிகுந்த கருத்துக்களை எழுதியிருந்தார்.

2. ஈழத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில், கேரளத்தில், மேற்கு வங்கத்தில், இங்கிலாந்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிடத்தில் என எங்கெல்லாம் சாதி இந்துக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சாதி இருக்கிறது. அதனால்தான் ஈழத்தில் இந்தியத் தமிழர்களை வெள்ளாளத் தமிழர்கள் அவமானப்படுத்துகிறார்கள்; இங்கு இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கேட்டு, பார்ப்பன மார்க்சிஸ்ட் தலைவர்கள் குறுக்குசால் ஓட்டுகிறார்கள். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படாத, காலியாக உள்ள இடங்களை பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்னபோது அதை வரவேற்று அறிக்கை விட்ட ஒரே தமிழர் தலைவர் யார் தெரியுமா? சி.பி.எம் வரதராஜன்தான். வெள்ளாளத் தமிழர்களுக்காக ஈழப்பிரச்சினையை ஒதுக்கும் ஆதவன், கிரீமி லேயர் கேட்கும் சிபிஎம் கட்சியை ஒதுக்காமல் அண்டியிருப்பது ஏன்?

3. எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக பல மாநாடுகள், பொலிட்பீரோ கூட்டங்கள் நடத்திய பின்னர்தான், சாதியை ஒரு பிரச்சினையாகப் பார்க்கும் தெளிவு மார்க்சிஸ்ட்களுக்கு வருகிறதென்றால், அந்தத் தெளிவை உயிர் வாழ்வதற்கு உத்திரவாதம் இல்லாது, போராடிக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களிடம் ஆதவன் எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

4. புலிகள் சாதியைக் கணக்கில் எடுக்காததால்தான் ஈழப்போராட்டம் பலவீனமடைந்தது என்று கூறும் ஆதவன், சாதி குறித்து மௌனம் காத்துக் கொண்டே தொழிலாளர்களை ஒருங்கிணைக்க முயலும் மார்க்சிஸ்ட் பார்ப்பனர்களால்தான் இந்தியாவில் வர்க்கப்புரட்சி நடைபெறாமல் இருக்கிறது என்ற உண்மையை வெளிப்படையாகக் கூறமுடியுமா?

5. தேவேந்திர பூபதியின் கவிதைகளை யவனிகா ஸ்ரீராம்தான் எழுதிக் கொடுக்கிறார் என்று லீனா வால்பாறைக் கூட்டத்தில் பேசினார். தேவேந்திர பூபதி ஏற்பாடு செய்திருந்த மதுரை கடவுக் கூட்டத்தில் ஆதவனும், கா.சு.கண்ணனும் அதை மறுத்துப் பேசினார்கள். அந்த அரங்கத்திற்குத் தலைமை தாங்கிய ஆதவன், ‘வால்பாறை கூட்டத்தில் பகிரங்கமாக லீனாமணிமேகலையும், தமிழகம் முழுவதும் பல்வேறு எழுத்தாளர்களும் பேசி வருகிற இக்குற்றச்சாட்டைப் பற்றி பூபதியும், யவனிகாவும் முதலில் தெளிவுபடுத்த வேண்டும்’ என்றல்லவா பேசியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் தானாகவே முன்வந்து, தேவேந்திரபூபதி கவிதை எழுதுவதை நானே பார்த்தேன் என்று ஏன் சாட்சியம் கூறினார்? பிடித்து வரப்பட்ட சாட்சியத்திற்கு கொடுக்கப்பட்ட கூலி என்ன? காலச்சுவடுக்கும் கடவுக்குமான உயர்திணை மற்றும் அஃறிணை சம்பந்தமான கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் ஊரறிந்தது. ஆனால் புதுவிசைக்கும் கடவுக்குமான கொடுக்கல் வாங்கல்கள் இனிமேல்தான் ஊரறிய வேண்டியுள்ளது. எப்படியோ மனு ஆதரவாளனையும், மனு எதிர்ப்பாளனையும் மனுவின் மச்சினிச்சி லட்சுமி ஒன்றுசேர்த்து விட்டாள்.

6. தமிழ்நதி சேலத்திலிருந்து திருச்சி வரும் பயணத்தின் பொழுது, உங்களிடம் பூபதியின் நடவடிக்கைகள் குறித்து கூறியதாக நீங்கள் உங்கள் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதையே உண்மை என்று எடுத்துக் கொண்டாலும், தமிழ்நதியின் வார்த்தைக்குப் பின்னால் இருந்த வலியை, உங்களால் ஏன் உணர முடியவில்லை? எவ்வளவு தோழமையுடன் அவர், இவ்விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பார்? அதற்கு நீங்கள் எவ்வகையில் உண்மையாக நடந்துள்ளீர்கள்? உங்கள் ஆத்ம நண்பர் பூபதியிடம் இதைப்பற்றி என்றேனும் கேட்டதுண்டா? அல்லது உங்கள் கட்சியின் மாதர் அமைப்பில் சொல்லி போராடச் சொன்னதுண்டா? எதுவுமில்லை. சரி, உங்கள் பெண்ணுரிமைப் போராட்டம் அத்துடன் முடிந்துவிட்டால் கூட பரவாயில்லை. இன்று தமிழ்நதி உங்களைப் பற்றி விமர்சித்து விட்டார் என்றவுடன் அதைத் தூக்கிப் போடுகிறீர்களே, அருவருப்பாக இல்லை!

7. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உலக தன்னார்வ அரசு சாரா நிறுவனங்களின் (N.G.O.) எதிர்ப்புரட்சி அரசியல் பற்றி ஒரு நூலையே எழுதியிருக்கிறார். புரட்சியாளர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் ச.தமிழ்ச்செல்வனும் ஆதவன் தீட்சண்யாவும், இலங்கை அரசு சார்பான, N.G.O. நபர்களுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கும், அவர்கள் நடத்தும் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கும் என்னவிதமான நியாயத்தை முன்வைக்கிறார்கள்?

8. ஈழப் போர் இறுதியை அடைந்த காலகட்டத்தில் பிரபாகரனை கொச்சைப்படுத்தும் விதமாக, ஒரு புகைப்படத் தொகுப்பு ஒன்றை புலி எதிர்ப்பாளர்கள் மின்னஞ்சல் பிரச்சாரமாக செய்தனர். அதை தமிழகத்தில் பரப்பும் வேலையை ஆதவன் செய்தார். அந்தப் புகைப்படத் தொகுப்பில், பிரபாகரன் அவரது குடும்பத்துடன் விருந்து உண்பது போன்று ஒரு படம் - ஈழமக்கள் உணவுக்காக வரிசையில் நிற்பது போன்ற ஒரு படம், பிரபாகரனின் மகன் வெளிநாட்டில் படிப்பது போன்ற ஒரு படம் -ஈழக்குழந்தைகள் தெருவில் நிற்பது போன்ற ஒரு படம். இதே போன்ற ஒரு புகைப்படத் தொகுப்பை - ஏழை பாட்டாளிகளின் வாழ்க்கையை பிரகாஷ் காரத் அல்லது ஆதவனின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு தயாரிக்க முடியாதா? பிரகாஷ் காரத் விமானத்தில் பயணிப்பது போன்று ஒரு படம் - ஒரு தலித் காலில் செருப்பு கூட இல்லாது வெயிலில் நடப்பது போன்று ஒரு படம், பிரகாஷ் காரத் பெரிய பெரிய அரசியல்வாதிகளுடன் விருந்து உண்பது போன்ற ஒரு படம் - பாட்டாளி ஒருவர் ஒரு ரூபாய் அரிசி வாங்கி ஒரு வேளை உண்பது போன்று ஒரு படம். இதைத் தயாரித்து அனுப்பினால், அதை ஆதவன் எல்லோருக்கும் ‘forward’ செய்வாரா?

9. 'அரசு என்றால் வன்முறைக்கருவி என்பது வீ.அரசுக்கும் பொருந்தும்போல' என்று எழுதிய ஆதவன் தான், ஈழப்போரில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த இலங்கை அரசின் பிரதிநிதிகளோடு, அதே அரசின் செலவில் நடத்தப்பட்ட இலக்கிய விழாவின் மேடையை பகிர்ந்து கொண்டார். இது என்னவிதமான அறம்?

10. லீனா மணிமேகலையின் கருத்து சுதந்திரத்திற்கு இன்று குரல் கொடுக்கும் ஆதவன், பால் சக்காரியா, மக்கள் தொலைக்காட்சியின் கருத்து சுதந்திரத்திற்காக என்றாவது பேசியிருக்கிறாரா?

11. கம்யூனிசத்தையும், கம்யூனிச இயக்கங்களையும் கொச்சைப்படுத்தியதற்காக ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’நாவலை கடுமையாக சாடிய ஆதவன், அதே வேலையைச் செய்த லீனாவை மட்டும் கொண்டாடுவது ஏன்?

இவைதான் அருள் எழிலன், யமுனா ராஜேந்திரன், வளர்மதி, தமிழ்நதி, அமுதன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் ஆதவன் மீது விமர்சனங்களாக வைத்தவை. ஏதேனும் விடுபட்டிருந்தால் நண்பர்கள் தெரிவிக்கலாம். இவற்றில் எது தலித் விரோதமானது என்பதை ஆதவன் விளக்கினால் ந‌ல‌மாக இருக்கும்.

ஈழ ஆதரவு தொடர்பான விவாதங்களில் ஆதவன் மட்டும் விமர்சிக்கப்படவில்லை; கருணாநிதி, ஜெயலலிதா, நெடுமாறன், திருமாவளவன், ஜெகத் கஸ்பர், அ.மார்க்ஸ், தமிழ்ச்செல்வன், எஸ்.வி.ராஜதுரை உட்பட பலர் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன என்ப‌தையும் இங்கு குறிப்பிட‌ விரும்புகிறோம்.

தலித் இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான சரண்குமார் லிம்பாலே தலித் முரசுக்கு அளித்த பேட்டியில் தலித் இலக்கியம் குறித்து இவ்வாறு கூறுகிறார்: “...பக்தி இலக்கியங்களின் மறு உலக சிந்தனைகள், நடுத்தர சிற்றுடைமை வர்க்கத்தினரின் ஆசைகள் ஆகியவற்றில் தலித் இலக்கியம் பங்கேற்பதில்லை. தலித் இலக்கியங்கள் இன்ப உணர்ச்சிகளையோ, மென்மை உணர்வுகளையோ அல்லது தன்னைத்தானே வெறுத்து இரக்கம் கொள்கிற உணர்வுகளையோ கொடுப்பதில்லை. அவை ஒரு தலித்திடம் உள்ள சுயமரியாதை உணர்வை சுடர்விட்டு எரிய வைக்க வேண்டும். சுயமரியாதை என்பதைத்தான் முதல் கருத்தாகவும் முன் வைக்க வேண்டும். ‘நான் பிறந்தேன், வர்ணாசிரமத்தினர் தாக்கினார்கள், நான் பிச்சைக்காரனானேன்' என்று எழுதுவதில் கெட்டிக்காரத்தனம் இருப்பதாகத் தெரியவில்லை.”

என்ன செய்வது? ஆதவன் அதைத்தான் தனது கெட்டிக்காரத்தனமாகக் காட்டுகிறார்.

எவர் ஒருவர் மீதான விமர்சனங்களை வெளியிடும்போதும், அவரது சாதி பார்த்து கீற்று வெளியிடுவது இல்லை. கொலைவழக்கில் கைதான ஜெயேந்திரனும் சரி, அவனுக்கு கார் அனுப்பி மாமா வேலை பார்த்த இந்து ராமும் சரி பார்ப்பனர்கள் என்பதால் மட்டுமே நாம் விமர்சிக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை அங்கீகரிக்க மறுக்கிற, அதன் மீது அதிகாரம் செலுத்துகிற பார்ப்பானாக இருந்தாலும் சரி அல்லது சூத்திரனாக இருந்து கொண்டே தன்னிலும் கீழான மக்கள் மீது சாதித் தீண்டாமையை ஏவும் முதலியார், செட்டியார், நாய்க்கர், தேவர், நாடார், வன்னியர் என எந்த ஆதிக்க சாதியாக இருந்தாலும் கீற்று அதை ஆதரித்தது இல்லை; ஆதரிக்கப் போவதும் இல்லை. தலித்தா தலித் அல்லாதவர்களா என்ற பிரச்சனை வரும்போது தலித் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாடே கீற்றின் நிலைப்பாடு.

‘பிள்ளை கெடுத்தாள் விளை’சிறுகதை தொடர்பான விவாதங்கள், உத்தப்புரம் சுவர், கண்டதேவி போராட்டம், மேலவளவு வழக்கு, கயர்லாஞ்சி படுகொலை, அருந்ததியர் உள்ஒதுக்கீடு, சிறப்பு உட்கூறு திட்டநிதி, நிரப்பப்படாத தலித் பணியிடங்கள், உயர்நீதிமன்ற மாணவர்கள் மோதல், பழையகோட்டை அம்பேத்கர் சிலை விவகாரம் என தலித் மக்களின் பிரச்சினைகளை முன்னுரிமை கொடுத்து கீற்று தொடர்ந்து பிரசுரித்து வருகிறது. இதிலெல்லாம் ஆதவனுக்கு கீற்றுடன் உடன்பாடுதான். அவரே பல கட்டுரைகளை கீற்றிற்கு அனுப்பியிருக்கிறார். ஆனால் அப்போதெல்லாம் தோன்றாத கீற்றின் ‘தலித் விரோதம்’, அவர் மீதான விமர்சனங்கள் வந்தவுடன் அவருக்குத் தெரிகிறது. ஒன்று புரியவில்லை, தலித்தியக் கோட்பாட்டை ஆதவன் தன்னிலிருந்துதான் அணுகிறாரா?

பார்ப்பனியத்தின் மீதான, ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைக்கு எதிராக கோபம் கொப்பளிக்கும் படைப்புகளை முன்வைத்தபோது அதை கீற்று வெளியிட்டது. அதே ஆதவன், இங்கிலாந்து பயணத்திற்குப் பிறகு – தனது நண்பர்களுக்காக - ஈழப்போராட்டத்தை தலித் அரசியலை முன்வைத்து போக்கடிக்கும் வேலையைச் செய்தபோது, அவர்மீது எழுந்த விமர்சனங்களை நண்பர் என்றும் பாராமல் வெளியிட்டது. நண்பருக்காக முகதாட்சண்யம் பார்த்திருந்தால் ஆதவனுக்கு நாங்கள் என்றும் தலித் ஆதரவாளர்களாகவே இருந்திருப்போம்.

புரட்சிகர இயக்கங்களை, அதில் பங்குகொள்வோரைக் கொச்சைப்படுத்தும் விதமாக லீனா கவிதை எழுதியதையும், அதற்கான விமர்சனங்களை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாக சித்தரித்ததையும் கண்டித்து கீற்றில் கட்டுரைகள் வெளிவந்தன. லீனாவுக்கு ஆதரவாக ‘கல்வியறிவு மறுக்கப்பட்டிருந்த நிலையை முறித்துக்கொண்டு ஒரு பெண் எழுதுவதே ஆண்மைய வாதத்திற்கு எதிரானதுதான்’ என்று ஆதவன் எழுதுகிறார். ஒரு பெண் எழுதுவதெல்லாம் ஆணாதிக்கத்திற்கு எதிரானது என்றால், ரமணி சந்திரன், தமிழிசை சௌந்தர்ராஜன் எழுதுவதும், பேசுவதும் ஆணாதிக்கத்திற்கு எதிரானதுதானா? இதை இன்னும் கொஞ்சம் நீட்டித்துப் பாருங்கள். பொள்ளாச்சி மகாலிங்கம், ராஜேஷ்குமார் என பார்ப்பரனல்லாதோர் எழுதுவதெல்லாம் பார்ப்பனிய எதிர்ப்பு எழுத்து. நவீன காலனியாதிக்கத்திற்கு உள்ளாகும் இந்தியாவிலிருந்து எழுதும் ஜெயமோகன் எழுதுவதெல்லாம் ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுத்து! யோசிக்கும்போதே சிரிப்பு வரவில்லை?

இந்திய சமூகம் எதிர்கொள்ளவேண்டிய மிக முக்கிய பிரச்சினை சாதிதான் என்பதில் புதுவிசையுடன், கீற்றும் உடன்படுகிறது. அதே நேரத்தில் தலித் அரசியலை முன்வைத்து ஈழப்பிரச்சினையை காலி பண்ண முயலும் புதுவிசையின் நிலைப்பாடு கீற்றிற்கு ஏற்புடையதல்ல‌. சாதி பெரிய பிரச்சினை என்பதற்காக உலகமயமாக்கல், சுற்றுச்சுழல் சீரழிவு, ஈழ மக்கள் படுகொலை, மேற்குவங்கம், சட்டீஸ்கர் மாநிலங்களில் பழங்குடியின மக்களின் மீதான தாக்குதல்கள் இவற்றை ஒதுக்கித் தள்ளி விட முடியாது.

ஆதவன்! சாதிப்பிரச்சினையை ஒழித்துவிட்டு சம்பள உயர்வு கேட்டு போராடலாம் என்றோ, அர்ச்சராகும் உரிமையை அடைந்தபிறகு உற்பத்தியில் பங்கு கேட்கும் போராட்டத்தைத் தொடரலாம் என்றோ என்றாவது தொழிற்சங்கங்களிடம் பேசியிருக்கிறீர்களா? இரட்டைக் குவளை முறையை ஒழித்தபிறகு அணுசக்தி ஒப்பந்தம், சிறப்புப் பொருளாதார மண்டலம் இவற்றை எதிர்க்கலாம் என்று புதுவிசையில் எழுதியிருக்கிறீர்களா? ஆனால், ஈழப்பிரச்சினை என்று வரும்போது மட்டும் சாதியைத் தூக்கி முன்னே போடுகிறீர்கள்.

புதுவிசையை வெளியிட தேவேந்திர பூபதி உதவியதற்காக, யாரும் கேட்கமாலேயே அவருக்காக வாதாடுகிறீர்கள். ஷோபாசக்தியின் நட்புக்காக கம்யூனிஸ்ட்களைக் கொச்சைப்படுத்தும் லீனா மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து சுதந்திரம் என்று பேசுகிறீர்கள். ஆனால், ‘கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எதுவொன்றையும் எழுதிவிட்டுச் செல்லும் உரிமை எழுத்தாளனுக்கு இல்லை’ என்று முழங்கிய ஆதவனையும் எங்களுக்குத் தெரியும். கீற்றின் நிலைப்பாடும் அதுதான். ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ சிறுகதையில் தலித் பெண்ணைக் கொச்சைப்படுத்திய எழுத்தாளர் சுந்தரராமசாமியை நீங்கள் கடுமையாகக் கண்டித்தீர்கள். அது சரியானது என்பதால் நாங்களும் அதை முழுமனதுடன் வெளியிட்டோம். வி.பி.சிங்கை இந்தியா டுடே கொச்சைப்படுத்தியபோது அதை கடுமையாகக் கண்டித்து, கட்டுரை எழுதினீர்கள்; கீற்று ஏற்பாடு செய்த கூட்டத்திலும் கலந்து கொண்டீர்கள். இப்போது லீனா விவகாரத்திலும் கீற்று அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறது. ஆதவனும் அதே நிலைப்பாட்டில்தான் இருப்பார் என்று எதிர்பார்த்தால், இல்லை நீங்கள் மாறிவிட்டீர்கள். லீனாவுக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது என்கிறீர்கள். பால் சக்காரியாவிற்கு இல்லையா என்று கேட்டால், ‘நான் தலித், கீற்று அவதூறு செய்கிறது’ என்கிறீர்கள்.

உத்தப்புரம் தொடர்பான கட்டுரையில், எப்போதும் மீசை முறுக்கியபடி போஸ் கொடுக்கும் தலித் தலைவர்கள் குறித்து சாடியிருந்தீர்கள். சரி! கல்வி மறுக்கப்பட்ட பெண்கள் எழுதுவதெல்லாம், ஆணாதிக்கத்திற்கு எதிரானது என்றால், தோளில் துண்டு போடுவதற்கே மறுக்கப்பட்டிருந்தவர்கள் தற்போது மீசை முறுக்குவது சாதி அடக்குமுறைக்கு எதிரான செயல் அல்லவா? என்ன செய்ய? எதிரிகளை குத்திக் கிழிப்பதற்கு ஒரு பேனாவும், நண்பர்களை சொரிந்து கொடுக்க ஒரு பேனாவும் வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது.

கட்சியோ, நண்பர்களோ யார் தவறு செய்தாலும் அதை தவறு என்று சொல்லும் துணிவும், நேர்மையும் எழுத்தாளனுக்கு வேண்டும். மாதவராஜிடம் அந்த நேர்மை இருக்கிறது. அப்படி இல்லாத உங்களைப் போன்றவர்கள் மீது விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அந்த விமர்சனங்களையாவது நேர்மையாக எதிர்கொள்ளுங்கள்.

"யார் மனதும் நோகாமல், எல்லோருக்கும் பிடித்தமானதை எழுதிக் காட்டுகிற பபூன் டெக்னிக் எனக்கு கைவரவில்லை. எதை எழுதினாலும் கோவித்துக்கொள்ளவென்று ஒரு கூட்டமோ கோஷ்டியோ இருப்பதைப் பார்த்த பிறகுதான் திருவாளர்.வாசகரும் பொத்தாம்பொதுவானவரல்ல என்பது உறைக்கிறது" என‌ நீங்க‌ள் எழுதியதுதான் கீற்றின் நிலைப்பாடும்.

‘யாருடைய முதுகையும் சொறிந்து கொடுக்க நான் நகம் வளர்க்கவில்லை’ என்று எழுதியிருக்கிறீர்கள். படிக்க நன்றாகத்தான் இருக்கிறது. உங்கள் கைகளில் இருக்கும் அழுக்கு, நண்பர்களின் முதுகை சொறிந்து கொடுத்ததால் வந்தது என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். பிறகு இன்னொன்று, இந்தக் கட்டுரைக்காக கீற்றின் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்ட்த்தின் கீழ் வழக்கு தொடுக்கச் சொல்லி கேட்டுவிடாதீர்கள்!!

அனைத்து அமைப்பினருக்கும், வாசகர்களுக்கும்...

கீற்று இணையதளம், எந்த அமைப்பையும் சாராத நான்கு நண்பர்களால் நடத்தப்படுகிறது. இதில் எங்களுக்கு எந்த லாப நோக்கமும் இல்லை. எந்த ஆதாயத்திற்காகவும் யாரையும் அனுசரித்து இயங்க வேண்டிய அவசியமும் இல்லை. எந்தவொரு இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டி, அவர்களிடம் காசு வாங்கியதுமில்லை. சமூக மாற்றத்திற்காக இயங்கும் அனைத்து இயக்கங்களும், எழுத்தாளர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் இடமாகவும், விவாதிக்கும் தளமாகவும் கீற்று இருக்க வேண்டுமென விரும்புகிறோம். அந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் எங்களால் முயன்ற வேலையைச் செய்து வருகிறோம்.

கீற்று இணையதளத்தைத் தொடங்கியபோது, தலித்திய அமைப்புகள், இடதுசாரி இயக்கங்கள், பெரியாரிய இயக்கங்கள், தமிழ்த்தேசிய அமைப்புகள், அதிதீவிர இடதுசாரி இயக்கங்கள், சிறுபான்மையினர் இதழ்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு, அவர்களது கட்டுரைகளையும், இதழ்களையும் கீற்றில் பிரசுரிக்கக் கேட்டோம். பலர் ஒத்துக்கொண்டனர்; சிலர் மறுத்தனர். ஒத்துக்கொண்ட சிலர் சில மாதங்கள் மட்டும் அனுப்பினர்; பிறகு மறந்து விட்டனர். சில பத்திரிக்கைகள் நின்று போயின.

இதையெல்லாம் எதற்குச் சொல்கிறோம் என்றால் எந்தவொரு இயக்கத்தின் மீதும் எங்களுக்கு காழ்ப்புணர்ச்சி இல்லை என்பதற்காகவே. எங்களுக்கு எந்தவொரு மதத்தின் மீதும் விருப்பில்லை. மதங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட வேண்டியவையே. அதே நேரத்தில் இந்துமதத்தின் சாதியப்பிடியில் சிக்கியிருக்கும் தலித் மக்கள், சமூக விடுதலைக்காக மதம் மாறுவதை ஆதரிக்கிறோம். பெரும்பான்மை ம‌த‌ச் ச‌மூக‌த்தினரால் ஒடுக்குத‌லுக்கு உள்ளாகும் அப்பாவி சிறுபான்மையின‌ருக்கு ஆதர‌வாக‌ நிற்கிறோம். ஆர்.எஸ்.எஸ்., இந்துமுன்னணி உள்ளிட்ட இந்துமதவெறிக்கும்பலை எதிர்ப்பது போலவே, இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும், கிறிஸ்துவ அடிப்படைவாதிகளையும் எதிர்க்கிறோம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான விமர்சனம் கீற்றின் மீது வைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கீற்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு ஆதரவானது; ம.க.இ.க.வுக்கு எதிரானது என்றார்கள். இப்போது தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவானது; ம.க.இ.க.வுக்கு ஆதரவானது என்கிறார்கள்.

எந்தெந்த காலத்தில் எந்தெந்தப் பிரச்சினை மேலெழுகிறதோ அதற்கு கீற்று முகம் கொடுக்கிறது. அதற்காக மற்ற செய்திகளை புறந்தள்ளுவதில்லை. உத்தப்புரம் பிரச்சினையில் கூடுதல் கவனம் செலுத்தியபோதுதான், இடஒதுக்கீடு தொடர்பான கட்டுரைகளையும் வெளியிட்டோம். ஈழப்பிரச்சினை பற்றியெரிந்த காலத்தில்தான், சட்டக்கல்லூரி மாணவர் மோதல் தொடர்பான கட்டுரைகளையும் வெளியிட்டோம்.

கீற்று எங்களுக்கு முழுநேர வேலை இல்லை. பிழைப்புக்காக வேறு வேலை செய்வதால், கட்டுரைகளைப் பிரசுரிப்பதிலும், பின்னூட்டங்களை அனுமதிப்பதிலும் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் எந்தவொரு இயக்கத்தின் கருத்தையும் கீற்று பிரசுரிக்காமல் நிராகரித்ததில்லை, எங்கள் மீதான விமர்சனங்களையும் சேர்த்தே.

கட்டுரைகள், பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் எழுதுபவரது சொந்தக் கருத்துக்களே! அவை அனைத்துமே கீற்று ஆசிரியர் குழுவுக்கு உடன்பாடானது என்று யாரும் கருதவேண்டியதில்லை. பின்னூட்டங்களைப் பொறுத்தவரை, பொதுவெளியில் வைக்கத் தகுதியில்லாத வார்த்தைகள் ஏதும் இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்து அனுமதிக்கிறோம். விவாதங்கள் ஆரோக்கியமாக இருப்பதும், தரம் தாழ்வதும் அதில் பங்குகொள்பவர்களின் குணம், பண்பாடு சார்ந்த பிரச்சினை.

எங்களுக்கு இசைவான கட்டுரைகளை மட்டுமே வெளியிடுவதற்கான தனிச்சொத்தாக கீற்றை நாங்கள் பாவிக்கவில்லை. கீற்றில் வரும் கட்டுரைகளில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்ற தப்பெண்ணமோ, மாற்றுக்கருத்தை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்யும் குறுகிய எண்ணமோ எங்களிடம் இல்லை. ஏனென்றால் கருணாநிதி மீதான அல்லது திமுகவின் மீதான விமர்சனத்தை, திராவிடக் கருத்தியல் மீதான விமர்சனமாக நாங்கள் சுருக்கிப் பார்ப்பதில்லை. எந்தவொரு தனிநபரையும், அமைப்பையும் தாண்டி, கருத்தியல் இருக்கிறது என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.

இந்தத் தளத்தை அடிப்படைவாதிகள் யாரும் பயன்படுத்தாமல் தடுப்பதையும், தளத்திற்கான செலவுகளை ஈடுகட்டுவதையும், படைப்புகளை கூடியமட்டும் பிழைதிருத்தி வெளியிடுவதையும் மட்டுமே எங்கள் வேலையாகக் கருதுகிறோம். எல்லோரையும் திருப்திப்படுத்துவது எங்கள் வேலையுமல்ல; எல்லாருக்குமான இனிப்பும் எங்களிடம் இல்லை.

-     கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

76 comments

76
கீற்று நந்தன்
கீற்று மீதான ஆதவனின் விமர்சனக் கவிதை:

தூற்று.காம் - ஆதவன் தீட்சண்யா

ஊர்கூடி பார்த்திருக்க நடுத்தெருவில் வீழ்த்தி
எம் பெண்களை வல்லாண்ட உம்மைக் கண்டு
மறைவிடம் ஓடியொளிந்த நாய்கள்
பிறிதொருபோதும் உம்முன்னே வருவதற்கஞ்சிய குற்றத்திற்காக
கைகால்கள் கட்டப்பட்டு
பனிப்பாளத்தின் மீது கிடத்தப்பட்டிருக்கிறேன்
பிணமென விரைக்கும் உடலுக்குள் கடுத்தேறுகிறது சில்லிப்பு
நடுங்கிச் சரிகிறது உயிர்

தண்ணீர் கேட்டால் மூத்திரம் பெய்வதும்
வாயைத் திறந்தால் மலம் திணிப்பதுமே
நாகரீகக் கனவான்களாகிய உமது வாடிக்கையென்பதால்
பசிதாகம் குறித்து புகாரிடாமல் மயக்கத்தில் வீழ்கிறேன்

சித்திரவதைகளை உணராமலே செத்துவிடக்கூடாதென்ற பயத்தில்
பந்தம் கொளுத்தி என்தலையைத் தீய்த்து
பிரக்ஞையின் எல்லைக்குள் இழுத்துப் போடுகிறீர்கள் என்னை

விசேஷமாய் பயிற்சி எடுத்தக் காவலரைப் போன்ற ஒருவன்
என் கால்களில் லாடமடித்துக் கொண்டிருக்கிறான்
நகங்களைப் பிடுங்கி எடுத்துவிட்டு
என் பற்களையும் பிடுங்கும் அவசரத்தில்
குறடு ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது இன்னொருவன் கையில்
வன்மங்களை நவீனமாய் தணிக்கத் தெரிந்த மற்றையவன்
வயர்களை என்குறியில் சுற்றி மின்னதிர்ச்சிக் கொடுக்கிறான்

அடுக்களையிலிருந்து டப்பர்வேருடன் வந்த
உங்கள் மனைவி/மகள்/ சகோதரி/ யாரோ ஒருத்தி
இந்தக் கண்களா எம்மை ஏறெடுத்துப் பார்த்தவையென
பலவந்தமாய் இமைபிரித்துத் தூவுகிறாள் மிளகாய்ப்பொடியை

கொத்தியெறிந்தது போக நினைவில் எஞ்சியிருக்கும் என்னைத்தாளாது
புதிய கொலையாயுதங்களை தேடிக்களைத்த உமது வாரீசுகள்
கணினியின் விசைப்பலகை அதிர்ந்திடாத வண்ணம்
மென்மையாக பதிவேற்றத் தொடங்குகின்றனர்
என்மீதான அவதூறுகளை.
vellaisamy
படைப்புகளால் பெற்ற வெற்றியை, செயல்பாடுகளால் தோற்கடித்துக் கொண்டிருக்கிறார் ஆதவன்
venkat
இடஒதுக்கீடு யாசகமல்ல என்று கம்பீரமாக குரல் கொடுத்தவர் ஆதவன் தீட்சண்யா. ஆனால், அவரே தன்மீதான விமர்சனங்கள்க்கு இடஒதுக்கிடு கோருவது அதிர்ச்சியாக இருக்கிறது
சுந்தரம்
யமுனா அ.மார்க்ஸ் குறித்து எழுதியது.. "அவதூறு செய்கிறார்கள், என்னைத் திட்டுகிறார்கள், அறிவில்லாமல் எழுதுகிறார்கள், சதி செய்கிறார்கள்’. அ.மார்க்ஸ் தன்மீதான விமர்சனங்களை இப்படித்தான் எதிர்கொள்வார். பிறர் மீதான விமர்சனங்களை எவ்வாறு மேற்கொள்வார்? முதலில் எதிரியின் சாதி கண்டுபிடிப்பார்; வரவு செலவு பற்றிப் பேசுவார்."

சகவாசதோஷம் ஆதவனையும் தொற்றிவிட்டது போல...
கிருட்டிணன்
ஆதவனை இங்கிலாந்து பயணத்திற்கு முன், இங்கிலாந்து பயனத்திற்குப் பின் என பிரித்துப் பார்ப்பது நலம். பின்னான ஆதவனை குறை சொல்வது, திமுக கூட்டனியில் ஐக்கியமாகிவிட்ட திருமாவளவனை விமர்சிப்பது மாதிரி பிரயோஜனமில்லாதது. கசு செல்வழித்து தன்னை வெளிநாடு கூட்டிப்போனவர்கலுக்கு அவர் இப்போது நன்றி செலுத்திக்கொந்திருக்கிறார். அவரிடமிருந்து இனி இதுமாதிரியான திசைதிருப்பல்கல்களும், மழுப்பக்லும்தான் பதிலாக வரும்.
venumadhavan
நன்பர்களே! ஆதவன் தீட்ச்ன்யாவின் கவிதையில் இருக்கும் தலித்தியக் கோட்பாடுகளை விளக்கி, தனது புரட்சிகர வாதங்களால கவின்மலர் நம்மையெல்லாம் வாயடைக்கச் செய்யவரும்வ்ரை நண்பர்கள் கொஞ்சம் பொறுக்க வேண்டும். அவரசப்பட்டு நீங்கல் எழுதும் தீர்ப்புகள் அவங்களுக்குப் பிடிக்காது. அவங்க கோபப்பட்டா பிறகு புல்டைம் காமெடிதான்...
Suresh G
Nice stand by Keetru!!!!
இளங்கோவன்
பொதுவாக 'வார்க்கப்பட்டவர்கள்' என்று அரசியலில் ஒரு வகையினர் உண்டு. ஆதவன் சிபிஎம்மின் சற்றும் பிசகாத வார்ப்பு. சாதியொழிப்பு, மேட்டிமை எதிர்ப்பு, புரட்சி என என்ன பேசினாலும் அதில் சிபிஎம்மிற்கு சற்றேனும் முரண்படாத சாதுர்யத்தை பெற்ற தோழர் அவர்.

முதன்முதலில் அவருடன் பேசுபவருக்கு ' இந்த மனுசன் எப்படிப்போய் சிபிஎம்மில் இருக்கிறார்?' என்றுதான் தோன்றும். அவ்வளவு நேர்மையும் போர்க்குணமும் அவரிடம் தென்படும். இவர் மட்டுமல்ல பல நல்ல(!) சிபிஎம் தோழர்களிடமும்தான். ஆனால் நுட்பமாய்ப் பார்த்தால் சிபிஎம்மின் கள்ளத்தனம், ஆதிக்கப் போக்கு( கண்டவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது) கட்சி அரசியலுக்காக சுழற்றி சுழற்றி சொற்களைப் பயன்படுத்தும் சாதாரண கருணாநிதி விசுவாசியைப் போன்ற புத்திக்கேடு என எல்லாமும் சிபிஎம்காரர்களிடம் உண்டு.

ஆதவனைப் புரிந்துகொள்வதன்வழி சிபிஎம்மையும் தமிழக மக்கள் புரிந்துகொள்ளலாம்.
TVS ARUL
கீற்று வாசகர்களின் மனவோட்டத்தை பிரதிபலிக்கும் கட்டுரை.
sesu
தங்களுக்கு உவப்பில்லாத விசயங்களைப் பேசுகிறவர்களையெல்லாம் ‘சிறுமை கொண்டவர்கள்’ என்று மதிப்பீடு செய்யும் புலிகளின் புத்தி உங்களுக்கும் இருக்கிறது என்று ஆதவன் தமிழ்நதியை **** ***** விமர்சித்தார். இன்று கீற்று குழுவினரை அதேபொல் விமர்சிக்கிறார். ஆதவனுக்குள்தான் எத்தனை முரண்பாடுகள். எல்லாம் காலக்கொடுமை!
aadhavan-nesan
'ஒரு பெண்ணின் செயல்பாடுகளை ஒரு பெண் மட்டுமே விமர்சிக்க வேண்டும், தலித் மீதான விமர்சனத்தை தலித் மட்டுமே முன்வைக்க வேண்டும் இல்லையென்றால் ஆணாதிக்கவாதி, தலித் விரோதி பட்டங்கள் சூட்டப்படும்' என்ற பொன்மொழி ஆத்வன் பெயரால் வழங்கப்படுமோ?
syed
அரசாங்கங்களூக்கு எதிரான கருத்துடைய ஆதவன் எப்படி இலங்கை அரசின் விழாவில் கலந்துகொண்டார்? புலியெதிர்ப்பு இந்தளவிற்கா ஒருவரை கீழிறக்கும்? ஒன்ரு மட்டும் புர்கிறது. ஆதவன் என்ற நல்ல படைப்பாளியை புகலிட புலிஎதிர்ப்பாளர்கள் ஓரே ஒரு இலவச இங்கிலாந்துப் பயணத்தின் மூலம் தங்களது கிளிப்பிள்ளையாக்கி விட்டார்கள்.
siddharth
இவ்வளவு நீண்ட விளக்கம் தேவையில்லை. கீற்றுவின் நிலைப்பாடை நீண்டநாள் வாசகர்கள் அறிவோம். தன்னலமில்லாத உங்கள் பணி தொடர வாழ்த்துகள்
krishnakumar
சுந்தரராமசாமி தன்மீது விமர்சனஙக்ள் வரும்போதெல்லாம் கள்ளமவுனம் சாதிப்பார். அப்படி ஆதவன் இருந்திருக்கலாம். ஆனால், விமர்சனங்கள் வரும்போது, பதிலளிக்கிறேன் என்று நிதானமிழந்து எழுதிவிடுகிறார் ஆதவன். தமிழ்நதி விஷ்யத்திலும் அப்படித்தான் நடந்தது. இப்போது கீற்று விஷய்த்திலும் அபப்டித்தான் நடந்திருக்கிறது. இந்தக் கட்டுரைக்குப் பதிலளிக்கிறேன் என்று கிளம்பி, மேலும் அசிங்கபட்ட்டுவிடுவாரோ என பயமாக இருக்கிறது. ஒரு நல்ல படைப்பாளி இப்படி சின்னசின்ன தவறுகளால் அவதிப்படும்போது கஷ்டமாக இருக்கிரது.
பத்திரிகைகாரன்
ஒரு காலத்தில் கீற்று ரமேஷும் ஆதவன் தீட்சண்யாவும் கைப்புள்ளைகளாக இருந்தீர்களே... இப்போது உங்களுக்கு என்ன ஆச்சு ஆதவன் வெளிநாடு போய் வந்தது ரமேஷுக்கு பிடிக்கவில்லையா, அல்லது ரமேஷ் வெளிநாடுவரை பிரபலமாகப் போய்க்கொண்டு இருப்பது ஆதவனுக்கு பிடிக்கவில்லையா, அல்லது ஆதவனும் ரமேஷும் உட்டாலக்கடி பார்ட்டிகளா தெரியவில்லை. இந்த விமர்சனத்தை பிரசுரிக்காமல் போனால், நான் சொன்னதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை.
kamaraj
அன்பான ரமேஷ் வணக்கம். இந்தக்கட்டுரை அது பேசும் விஷயங்களோடு சின்னச்சின்ன தொடர்பிருப்பதாக உணர்கிறேன். சாதிசமயங்களற்ற பெருவெளியில் புளங்கவேண்டுமெகிற ஆசை ஏனையோரைக் காட்டிலும் தலித்துக்களுக்கு அதிகம் இருக்கவேண்டும். சரித்தானே. அப்படி அணுகுகிறபோது இந்தக்கட்டுரை தோழமை மிகுந்து காணப்படுகிற கோபம் பொதிந்தாகிறது.

தமிழ்நதியாகட்டும், லீனாவாகட்டும் பிராச்சினை மட்டும்தானே பேசவேண்டும்.'ஆதவனையும் அவன்போல ஆட்களையும் செருப்பால் அடிக்கனும்' என்கிற பின்னூட்டத்தை அணுமதிப்பது எப்படிச்சரி ரமேஷ்.

நாங்கள் யாரிடம் இதைச்சொல்ல. எப்படி பிரச்சினைக்கு பதில்சொல்லும்போது சாதிக்குள் ஒளிவது தவறோ அதே போல பிரச்சினையைப்'பேசும்போது சாதிய இழிவைத் தூக்குவதும் என்பதையும் சேர்த்துச் சொல்லுங்கள். தமிழ்நதி விவகாராத்தில் ஒரு இரவு முழுக்க மாறி மாறி உங்களிடம், ஆதவனிடம், தோழர் தமிழ்நதியிடம் பேசியவர்களில் விடுபட்ட நானும் ஒருவன்.

அங்கே குறுக்கிட்ட மாதிரி இங்கேயும் எனக்கு ஒரு சின்னக்கருத்து இருக்கிறது. மிகநீளமாக அளந்து அளந்து எழுதிய எழுத்தின் வலிமைக்கும் நேர்மைக்கும் 'பிசிஆரில் புக் பண்ணிவிடவேண்டாம்' என்கிற வார்த்தை சரியா என்பதை இன்னொரு முறை மறுவாசிப்புச் செய்து நீங்களே முடிவு செய்யுங்கள். நன்றி ரமேஷ்.
சுடலைமாடன்
கீற்றின் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறீர்கள்.

ஒருவருடைய வாசிப்பறிவையும், வாதத்திறமையுள்ள எழுத்துக்களையும், விட அவரவர் நேர்மையான செயல்பாடுகளே இறுதியில் உண்மையுடன் நிலைத்து நிற்கும்.

அ. மார்க்ஸ் வழியில் ஆதவனும் பொய்த்துப் போய்க் கொண்டிருப்பது நிக்ழந்து கொண்டிருக்கிறது.

நன்றி
சொ. சங்கரபாண்டி
thangam
லீனா கட்டுரைக்கு எழுதிய பின்னூட்டத்தை காமராஜுக்காக இங்கு மீள்பதிவிடுகிறேன்.

ஆதவனை செருப்பாலடிக்க வேண்டும் என்று யாராவது சொன்னார்களா என்ன? புரச்சி எழுதிய பின்னூட்டம் இது: "ஆதவன் தீட்சன்யா போன்ற முரன்பாடுகளின் மூட்டைகள் தெரிந்தே தமது முரன்பாடுகளை பேணுகிறார்கள். ஒரு பக்கம் புரட்சிகர வாய்ச்சவடால்கள் மூலம் தமது சமூக அரிப்பை சொரிந்து விட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் தமது நடுத்தர வர்க்க சுக வாழ்வை பேணும் வாய்ப்பளிக்கும் சிபிஎம் போன்ற கட்சிகளை விட்டு செருப்பால் அடித்தால் கூட வெளியேற மாட்டார்கள். அதற்குப் பதில், ஈழப் பிரச்சினை போன்ற விசயங்களில் தமது கட்சி சார்ந்த பித்தலாட்ட நிலைப்பாடுகளை தலித்திய இன்னபிற முகமூடிகள் கொண்டு புனிதப்படுத்தும் கீழ்த்தரமான வேலைகளில் இறங்குவர்."

அனேகமாக இந்த புரச்சி என்பவர் ம.க.இ.க.வைச்ச் சேர்ந்தவராக இருப்பார் என எண்ணுகிறேன். அதான் இந்த சாத்து சாத்தியிருக்கிறார். தனது கொள்கைக்கு முரணான கட்சியிலிருந்து ஆதவன் போன்றவர்கள் விலகாமல் இருப்பது குறித்த அரசியலை புரச்சி கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதைத்தான் கவின்மலர் 'செருப்பால் அடிக்க வேண்டும்' என்கிறாரா? எட்டப்பன்களுடன் ஆதவன் இருப்பது குறித்து ஒருவர் பின்னூட்டமிட 'ஆதவனை எட்டப்பன் என்பதா' என்று சொன்னவர்தானே இவர். இவரது புரிந்துகொள்ளும் திறனுக்கு யாராவது விருது கொடுக்க வேண்டும்.

"சுந்தரராம‌சாமியின் செத்த‌ பிண‌த்தைத் தூக்கிக் கொண்டு ஊர் ஊராக‌ அலைகிறார்க‌ள்"

"ஜ‌க்கைய‌னின் வார்த்தைக‌ளை உள்வாங்காத‌ சமூக‌த்தின் மீது பீயைக் க‌ரைத்து ஊற்ற‌வேண்டும்"

"முறித்துப் போட‌டா பேனாவை முட்டாக்..."

இவையெல்லாம் உங்க‌ ஆத‌வ‌ன் எழுதின‌ வ‌ரிக‌ள்தான். நீங்க‌ எழுதினா மணக்குது. ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எழுதினா நாறுதோ...
ப.கு.ராஜன்
.......சாதி குறித்து மௌனம் காத்துக் கொண்டே தொழிலாளர்களை ஒருங்கிணைக்க முயலும் மார்க்சிஸ்ட் பார்ப்பனர்களால்தான் இந்தியாவில் வர்க்கப்புரட்சி நடைபெறாமல் இருக்கிறது என்ற உண்மையை......

அன்புள்ள ரமேஷ்,
மார்க்சிஸ்ட் கட்சியினரோ அல்லது மார்க்சோ விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல. ஆனால் மேலேயுள்ளது போகிற போக்கில் கூறிய கருத்து அல்ல; அது நண்கு யோசித்து கீற்று வந்தடைந்திருக்கும் நிலைப்பாடுதான் என்றால் நீங்கள் அதனை விளக்கக் கடமைப் பட்டுள்ளீர்கள். இடதுசாரி,தலித்,தமிழ் தேசிய இயக்கங்கள் எதன் மீதுமில்லாத இந்த இறுதித் தீர்ப்பு வழங்கலை மார்க்சிஸ்ட் கட்சிக்கு மட்டும் நடத்தியிருப்பது நேர்மையான செயலல்ல. இது போன்ற அரை வேக்காட்டுத் தீர்ப்புகளை வழங்கிவிட்டு நாங்கள் இயக்கரீதியாக எந்தவித சார்புமற்றவர்கள் என்பது பாசாங்காகத்தான் இருக்க முடியும்.
ப.கு.ராஜன்.
சுந்தரலிங்கம்
என் பெயர் சுந்தரலிங்கம். காஞ்சிபுரம் பகுதி தலித் குடும்பத்தைச் சேர்ந்தவன். தலித் முரசு இதழினால் கொஞ்சம் அரசியல் அறிவும், தன்மான உணர்வும் பெற்று வருபவன். எனக்குத் தெரிந்த கொஞ்ச கொஞ்சம் தலித் அரசியல் அறிவை வைத்தே இதை எழுதுகிறேன். தவறு இருந்தால் திருத்தவும்..

பள்ளர், பறையர் அடையாளங்களை விடுத்து, தலித் அடையாளத்தில் நாம் எல்லோரும் சேரவேண்டும் என்று வ்லியுறுத்துவதற்குக்க் காரணம் அது விடுதலைக்கான ஒன்று என்பதால்தான். தலித் என அடையாளப்படுத்திக் கொள்வது சமூகம் நம்மீது சுமத்தியிருக்கும் இழிவான அடையாளங்களை புறந்தள்ள வேண்டும் என்பதற்காக. ஆனால் அந்த உன்னத அடையாளத்திற்கு இழிவு சேர்க்கும் வேலையை ஆதவன் செய்கிறார். ஒருவரிடம் காசு வாங்கிக்கொண்டு தனது பத்திரிக்கையில் கவிதைகளைப் போடுவது, அவருக்கு வக்காலத்து வாங்குவது, வெளிநாட்டுப் பயணத்திற்கு நன்றி விசுவாசமாக அவர்களது பிரச்சார பீரங்கியாக செயல்படுவது எல்லாம் என்போன்ற தலித் மக்க‌ளுக்கு நேர்மையற்ற விஷயங்களாகப் படுகின்றன‌. அதைவிடக் கேவலம் யாராவது விமர்சித்தால் அதை தலித் விரோதம் என்று சொல்வது.

தலித் மக்கள் சுயமரியாதைக்காகப் போராடும் தருணத்தில்தான் அவர்களை 'கவர்ன்மென்ட் அய்யர்' என்று கேலி பேசுகிறார்கள். 'கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டால் பறையன், பள்ளன் என்று திட்டியதாக சொல்லி பொய் வழக்கு போடுவேன்' என்று தலித்துகள் மிரட்டுவதாக ஆதிக்க சாதியினர் விஷமப்பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் எதிர்ப்பிரச்சாரம் செய்யாமல், ஆதிக்க சாதியினர் கூறுவது உண்மைதான் என்பதுபோல, ஆதவன் தீட்சண்யா தனது சொந்தப் பிரச்சினைகளுக்கு தலித் அடையாளத்தைப் பயன்படுத்துகிறார். விமர்சனங்களுக்கு பதில் சொல்லத் துப்பில்லாமல், விமர்சிப்பவர்களை தலித் விரோதி என்று பேசும் கேவலத்தைச் செய்கிறார். இது தலித் மக்கள் மீது மண்ணடிக்கும் வேலையில்லையா? இவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் எதுவும் தலித் விரோதம் இருப்பதாக எனக்குப் படவில்லை.

காமராஜ், நீங்கள் யாரென்று தெரியவில்லை. ஆதவன் உங்களுக்கு நண்பனாக இருக்கலாம். ஒரு தலித்தாக இருந்து பாருங்கள். அப்போதுதான் ஆதவன் செய்வது எங்களுக்கு எவ்வளவு அவமானகர‌மானது என்று புரியும். தன்மீதான விமர்சனங்களுக்கு தலித்விரோதிகள் என்று கீழிறங்கிய‌வ‌ர் நாளை வ‌ன்கொடுமைத் த‌டுப்புச் ச‌ட்டத்தை தவறாக கையாளமாட்டார் என்று என்பது என்ன நிச்சயம்?

உள்ள‌த்தில் உண்மை இல்லாத‌வ‌ர்க‌ள் எழுதிக் கிழிப்ப‌தால் எங்க‌ளுக்கு எந்த‌ விடிவும் கிடைத்துவிட‌ப்போவ‌தில்லை.
balu
ஆதவன் தீட்சண்யாவை அமைப்பில் இயங்கி வருபவன் என்ற் முறையில் எனக்கு நல்லாத் தெரியும். கொஞ்சம் முரட்டுத்தனமா பேசுவாரு தவிர ரொம்ப முற்போக்கான ஆளு. ஒரு சில படப்புகள்லே தப்பான் தொனி வர்றமாதிரி எழுதியிருந்தாக்கூட அதுக்காக அவரை செருப்பால் அடிப்பான் என்ர பின்னூட்டம் போடுவதா? முற்போக்குன்னு பீத்திக்கிட்டு திரியிற ரமேஷ் போடுவதா? ஆதவனை செருப்பால அடிக்கிறதுன்னா ரமேஷை பிஞ்ச் செருப்பால நாங்க அடிப்போம்.
thangam
காமராஜ்...

"இவ்விதழின் கட்டுரையாளர்கள் காலையில் டீ காபிக்குப் பதிலாக புஷ்ஷின் மூத்திரத்தைக் குடித்துவிட்டு எழுத உட்காருவார்கள் போலும்" என்று இந்தியா டுடே பத்திரிக்கையாளர்களை ஆதவன் இழிவாக எழுதியிருந்தார்கள். ஆதிக்கசாதிக்காரர்கள் மூத்திரத்தைத்தான் குடிக்கிறார்கள் என்பது மகாயோக்கியமான வாக்கியமா? பிறசாதிக்காரர்கள் குறித்து ஆதவனின் கருத்து இதுதானா? மற்றவர்களை நோக்கி விரல் நீட்டும்முன் உங்களது முகத்தில் கறை இல்லாமல் இருக்கிறதா என்பதைப் பாருங்கள்...
gnairu
jaathikkul ozhinthukollum mananilai ellorukkullum irukkirathu aanaal murppokku sinthanai vayappaddavarkal soolnilaikkearppa maarikkolkinranar
சுந்தர்ராஜன்
அன்புள்ள ரமேஷ்

இந்த கட்டுரை சரியான பாதையில் வந்துள்ளது. எனக்கு முன்னர் கீற்றின் மீது ஒரு சில விமர்சனங்கள் உண்டு, ஆனால் ஆதவன் போன்ற மனிதர்களை எவ்வளவு தோல் உரித்தாலும் தகும். அங்கே மக்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட பொழுது இங்க உட்கார்ந்து கொண்டு தலித்தியம் பேசுவது அடிப்படையில் மனிதராக இருக்க முடியாது. ஒரு உயிரை மதிக்க தெரியாத ஒருத்தர் நிச்சயமாக தலித் விடுதலைக்காக போராட மாட்டார்.

ஜெர்மனியில் இருந்து வந்த ராஜபக்சேவின் பிரசார பீரங்கி "சுசியின்" பேட்டியை மனித அவலம் நடந்த பொழுது பிரசுரம் செய்தவர் எப்படி மனித நேயம் மிக்கவர் ஆவார்? "புதுவிசையில்" அந்த பேட்டி வந்தவுடன் கொதித்து என்னை போன்ற நண்பர்கள் பலர் அவரிடம் பேசினோம். அவரிடம் இருந்து வந்த பதில் "இறுமாப்போடு" இருந்தது. எப்படி ஒரு கட்டுரை முன்னரே வந்து இருக்க வேண்டும். நிச்சயமாக நான் உட்பட எல்லோரும் தலித் முன்னேற்றத்திற்கு பாடுபடுபவர்கள் தான் அது ஆதவனை தாண்டிலும் அதிகம் பாடுபடுபவர்கள்
bhanuprakash
ஐயா ப.கு.ராஜ்

"புலிகள் சாதியைக் கணக்கில் எடுக்காததால்தான் ஈழப்போராட்டம் பலவீனமடைந்தது என்று கூறும் ஆதவன், சாதி குறித்து மௌனம் காத்துக் கொண்டே தொழிலாளர்களை ஒருங்கிணைக்க முயலும் மார்க்சிஸ்ட் பார்ப்பனர்களால்தான் இந்தியாவில் வர்க்கப்புரட்சி நடைபெறாமல் இருக்கிறது என்ற உண்மையை வெளிப்படையாகக் கூறமுடியுமா?" என்ற அருள் எழிலனின் வரிகளில் உங்களுக்கு வசதியாக, "சாதி குறித்து மௌனம் காத்துக் கொண்டே தொழிலாளர்களை ஒருங்கிணைக்க முயலும் மார்க்சிஸ்ட் பார்ப்பனர்களால்தான் இந்தியாவில் வர்க்கப்புரட்சி நடைபெறாமல் இருக்கிறது என்ற உண்மையை" வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு குதிக்கிறீர்கள்..

புலிகள் சாதியைக் கணக்கில் எடுக்காததால்தான் ஈழப்போராட்டம் பலவீனமடைந்தது என ஆதவன் இறுதித்தீர்ப்பு வழங்குவது மட்டும் அரைவேக்காட்டுத்தனமில்லையா? என்னே உங்கள் நேர்மை! ஒரு கேள்வி வந்தால் தெரிந்தால் பதில் சொல்லுங்கள். இல்லை பேசாமல் இருங்கள். அவனைக் கேட்டயா, இவனைக் கேட்டயா என்று கேட்ப‌தெல்லாம் உங்களிடம் பதில் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.

ம‌.க.இ.க., தமிழ்த் தேசியவாதிகள் மீதெல்லாம் கீற்Ru thalaththil நிறைய விமர்சனங்கள் வந்துல்ளன. நேரம் இருந்தால் தேடிப் படியுங்கள்.. சும்மா சாமியாடாதீர்கள்.
sundaresan
ஆதவனுக்கு பேஸ்மெண்ட் மட்டுமல்ல பில்டிங்கும் வீக்குதான் போல‌
thangaraj
செருப்பு ஆதிக்கசாதியினரின் கைகளீல் வியாபாரப் பொருளாகி ரொம்ப நாளாச்சு. செருப்புத் தொழிற்சாலைகள், செருப்புக் கடைகளீன் முதலாளிகளாக இருப்பது ஆதிக்க சாதியினரே! எங்க கிராமத்தில் செருப்பு தைத்துக்கொண்டிருந்தவ‌ர்கள் அதை போன தலைமுறையோடு விட்டுவிட்டார்கள். அவர்களின் பிள்ளைகள் படித்து வேறு வேறு வேலைகளுக்குப் போய்விட்டார்கள். ஓரிருவர் அதைத் தொடர்ந்து கொண்டிருக்கலாம். அசூயை, தீட்டு என்று நினைத்ததெல்லாம் இன்று லாபம் பார்க்கும் பொருளாகிவிட்டது. ஆனால் இன்னும் நீங்கள் செருப்பை விடாம்ல் பிடித்த்க் கொண்டிருக்கிறீர்கள்? விவாதிப்பதற்கு கைவசம் சரக்கில்லாதபோது வார்த்தைகளைப் பிடித்து தொங்காதீர்கள்!! பரிதாபமாக இருக்கிறது!! ஆதவனே 'பாட்டாலும், ஜோட்டாலும் அடித்தே துவைப்போம்' என்று எழுதியவர்தான்.

அவருக்கு ஒரு நியாயம், புரச்சிக்கு ஒரு நியாயமா? ஆதவனைப் போல் ஆளுக்கு ஒரு நியாயம் பேசாதீர்கள், காமராஜ். (இவர்தானே புதுவிசை ஆசிரியர் குழுவில் இருப்பவர்? நன்றி விசுவாசத்துக்காக இங்கு பேசுகிறாரா?)
anandkuamr
இந்த வாரம் யூத் விகடனில் கீற்று ரமேஷ் பேட்டி வந்திருக்கிறது. அதில் ஆதவன், புனிதபாண்டியன் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். பேச வேண்டிய இடத்தில் ஆதவனின் உதவியைக் குறிப்பிட்டே பேசியிருக்கிறார். நட்புக்காக விமர்சனத்தை மூடிமறைக்காமலும் இருக்கிறார். பண்பட்ட மனிதராகவே தெரிகிறார்.

http://youthful.vikatan.com/youth/Nyouth/keetruRamesh270410.asp
aadhavan\s reader
நான் ஒரு மநுவிரோதி என்று கம்பீரமாக பேசிய ஆதவனையும் பார்க்கிறேன்..
நான் ஒரு தலித்ங்க என்று இரக்கம் தேடும் ஆதவனையும் பார்க்கிறேன்...
எவ்வ‌ள‌வு பெரிய‌ வீழ்ச்சி இது!!
மாடன்
தலித் பேரை வச்சிக்கிட்டு பச்சாதாபம் தேடுற வேலையில ஆதவன் தீட்சன்யா இறங்கியிருக்காரு.. ஒரு தலித் என்கிறவன் முறையிலே இதை ரொம்பவும் கண்டிக்கிறேன். இவர் செய்யுற தப்புகளிலிருந்து தப்பிச்சு ஒளிஞ்சுக்கிற இடமா தலித் சமுதாயத்தை நினைச்சா அதை என்னைக்கும் அனுமதிக்க மாட்டோம்.. ஆண்டைங்க முன்னாடி கம்பீரமாக வாழனும்னு நினைக்கிறோம், இவர் இன்னடான்னா கூனிக் குறுகி நிக்கிறாரு. படிச்சவன் பாட்டைக் கெடுத்தாங்கிற கதையாத்தான் இருக்கு...
கந்தசாமி
//சாதிப்பிரச்சினையை ஒழித்துவிட்டு சம்பள உயர்வு கேட்டு போராடலாம் என்றோ, அர்ச்சராகும் உரிமையை அடைந்தபிறகு உற்பத்தியில் பங்கு கேட்கும் போராட்டத்தைத் தொடரலாம் என்றோ என்றாவது தொழிற்சங்கங்களிடம் பேசியிருக்கிறீர்களா?//

அதெப்படிங்க சொல்வாரு...? ஆதாயம் கிடைக்கிற இடத்துலே அதையெல்லாம் பேச அவர் என்ன விவரம் இல்லாதவரா? எங்க பேசினா புரட்சி எழுத்தாலர் பட்டமும், அரசு செலவுல வெலிநாட்டுப் பயணமும் கிடைக்குமோ அங்கதான் பேசுவாரு...
Dr.Thirumugam
தலித் அடையாளத்தை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி, தனது கயமையை கழிவிறக்கமாக கவிதை மூலம் மாற்றும் தந்திரம், நகைப்பூட்டினாலும் வியப்பூட்டவில்லை. ஈழத்தின் ரத்த சொந்தங்கள் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்பட்ட காலத்தில், மனித மனம் படைத்தவர்கள் எல்லாம் மனம் பதைத்த போதுகூட, கொச்சைப்படுத்தும் அளவு மனம் கொண்டவர் மனிதனாகவே அடையாளம் காணப்படக் கூடாது! என்னும் போது தலித்தாக தன்னை அடையாளம் காட்டி கழிவிறக்கம் தேடுவதை எப்படி ஏற்றுக் கொள்ள இயலும்?

தாய்த் தமிழகத்தை விட்டு பல்லாயிரம் மைல் தூரத்தில் பணியில் இருப்பதால் தற்கால அரசியல் நிலைப்பாடுகளை வழங்கும் கீற்று இணையத்தளத்தின் அரசியல் சார்பு, மற்றும் செயல்பாடுகளை நாம் மிக மிக கவனமாக அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறோம். கழிவிறக்கக் கவிஞர் போலல்லாமல் ஈழ மக்களின் ரத்தத்தை ஓவியமாக்கி காசாக்கிய ஒரு ஓவியரை கீற்று அம்பலப் படுத்திய போது நம்ப இயலாமல் இணைய முகவரியில் அவரிடம் விளக்கம் கேட்டபோது, பொறாமை, காழ்ப்புணர்ச்சி, என்னை வேண்டுமென்றே அவதூறு செய்கிறார்கள் என்பதைத் தவிர ஓவிய வியாபாரியால் ஒரு பதிலும் எமக்குத் தர இயலவில்லை. இன்றுவரை இதற்கான தன்னிலை விளக்கம் அவர் கீற்றுக்கு மட்டுமல்ல, எங்கும் அளிக்க வில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆக கீற்று, ஒரு பக்க சார்பு நிலை ஏற்று நடத்தப் படுவதாக கருத இடம் இருப்பதாக தோன்றவில்லை!
இரத்தினவேல்
//தலித்தா தலித் அல்லாதவர்களா என்ற பிரச்சனை வரும்போது தலித் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாடே கீற்றின் நிலைப்பாடு.

கீற்று நந்தன், பிரச்சனை என்ன என்பதை பொறுத்தே நிலை பாடு இறுக்க வேண்டும். தலித்தா தலித் அல்லாதவர்களா என்ற பிரச்சனை வரும்போது தலித் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாடே கீற்றின் நிலைப்பாடு என்றால் உங்கள் நடு நிலைப்பாடு கேள்விகுறியாகிவிடும்.
யாழன் ஆதி
எல்லாருக்குமான இனிப்பு எங்களிடம் இல்லை என்னும் உங்கள் கட்டுரையைப் படித்தேன். உங்களின் அறம் சார்ந்த கேள்விகளும் விமர்சனங்களும் யாரும் எதிர்கொள்ள முடியாதன.

ஈழ ஆதரவு என்பது ஏதோ புலிகள் ஆதரவு என்று எண்ணும் இந்திய தேசியத்தைப் போலவே நம்முடைய சக படைப்பாளிகளும் செயல்பட்டதும், இலங்கை அரசின் செல்லப்பிள்ளைகளாய் அவர்கள் மாறிப்போனதும் நாம் வருந்திய ஒன்றுதான். அதனால்தான் உங்கள் கட்டுரையின் ஒவ்வொரு வரியினூடும் இருக்கும் உண்மையோடு என்னையும் அடையாளப்படுத்திக் கொள்கின்றேன்.

ஒடுக்கப்படும் போர் நடக்கும்போது வலியுடையவர்களின் பக்கம் நிற்கும் நம் நம்பிக்கை வெல்லும். அது ஈழமெனினும் சாதி சண்டையெனினும்.
anandhakumar
uthapuram pirachanaiyil idathusaari kalidaiye karuthu verupaadu vantha pothu sila athimethavikal cipii kurithu thavarana karuthukalai thlithukalin peraal manam pona pokkil eluthinar. athai eppadi etrukollamudiyatho ... athupolathaan ithuvum
விடுதலை
ரொம்ப நடுநிலையான நிலைப்பாட்டில் இருந்து செயல்படும் தளம் கீற்று என்றால் நடுநிலை என்பதே மோசடிதனமானது என்பது நன்பர் நந்தன் தெரிந்து இருக்கும்.

ஆதவன் மீதான விமர்சனம் என்ற பெயரில் எந்த லட்சுமியை வாங்கி கொண்டு இப்படி முச்சு இரைக்க சிபிஎம் கட்சியின் மீது அதன் செயல்பாடுகள் மீது தனது உள்ளார்ந் வெறுப்பை கேள்விகள் என்ற பெயரில் ஓட்டுமொத்தமான அவதூறுகளை முன்வைக்க நந்தன் எதை அடகு வந்தீர்கள் என்று புரியவில்லை?

நீங்கள் யார் என்பதை முழுமையாக வெளிப்படுத்திற்கு ரொம்ப நன்றி. ஆதவன் மீதான உங்கள் அவதூறும், சிபிஎம் கட்சியின் மீதான தங்கள் வெறுப்பும் பலருக்கு இனிப்பாக இருக்கலாம். அந்த இனிப்புகடைகளை நடத்தும் எல்லா முதலாளிகளின் சங்கத்தில் சேர்ந்து நல்லா வியாபாரம் செய்து பிழைத்து வாழ கடவ!

எனது வாழ்த்துகள்

இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லாதீர்கள்ஒவ்வொரு வரிக்கும் ஆதாரபூர்வமான விளக்கங்களை கொடுத்தால் இந்த பின்னூட்டத்தை போடுவோம் என்று சொன்னாலும் ஆச்சிரிய படுதற்கு இல்லை

அன்புடன் விடுதலை
K V Siva
விடுதலை,

சி.பி.எம்.மும் ஆதவனும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவங்களா என்ன? ஒரு விமர்சனம் வைச்சா அதுக்கு நேர்மையா பதில் சொல்லணும். இல்லை பேசாம இருக்கணும்.

இந்தக் கட்டுரையின் எந்த குற்றச்சாட்டௌ நீங்க மறுக்கறீங்கன்னு சொன்னா நியாயம். அதுக்கு பதிலா எங்களை திட்டுனா நீ துரோகின்னு சொன்னா எப்படிங்க?

ஆதவனுக்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசம் இல்லை போங்க!
ஊர்வைத்தமிழ்
கீற்று உண்மையாகவே நடுநிலையாகவே செயல் படுகிறது.
கருணாநிதி பற்றியும் விமர்சிக்கிறது அதே நேரம் கம்யூனிஸ்ட் பற்றியம் தோலுரிக்கிறது. சாதி சார்புகளையும் சொல்கிறது, சாதி கொடுமைகளையும் கண்டிக்கிறது.
எனக்கு சில மாதங்கலாகத்தான் தான் கீற்றுவை தெரியும். இக்காலங்களிலேயே மேலே கூறிய அனைத்து விதமான வெளியீடுகளும் படைப்புகளும் பேதமின்றி
கீற்றுவில் வெளியிடப்பட்டதை நான் அறிவேன்.

ஆதவனின் கட்டுரைகள் சிலவற்றை நான் படித்து, அவர் மிகச்சிறந்த சிந்தனைவாதியாக,
சிறந்த ஆண்மகனாக , தன்மான தமிழனாக இருப்பார் என்று நினைத்திருந்தேன். ஆனால் சாதி மற்றும் ஈழம் பற்றிய தெளிவற்ற அவரின் செய்கைகள் மற்றும் இனம் அழிந்து கொண்டிருந்த போது சாதி பற்றி பேசியபோது நான் மிக்க வருத்தமடைந்தேன். சாதிய கொடுமைகளால் இவர் இவ்வாறு சட்று தடுமாற்றம் கொண்டுவிட்டார்போல என்று நினைத்திருந்தேன். ஆனால் என்று ஒரு அரைவேக்காட்டு *** கிறுக்கிய கிறுக்கல்களை பெண்ணுரிமை என்று
வரிந்து கட்டிக்கொண்டு வாதட வந்தாரோ , அதற்கான எதிவினைகளில் 'நான் தலித் என்பதால்'
ஒடுக்கப்படுகிறேன் என்று சொன்னாரோ, அதிலிருந்து அவரைப்பற்றிய நல்லெண்ணங்கள்
ம்ற்றிலும் மறைந்து போயின.

இன்று தமிழ் நாட்டில் 'தலித்' என்று வேசி மக்கள் வைத்த பெயர் கொண்டு அழைக்கப்படுகின்ற
பெரும்பான்மை இனம் மருத நிலத்து மள்ளரும்(பள்ளர்) நெய்தல் நிலத்து பறையரும் தான். இவ்விரு இனமும் தொல் தமிழர் இனம். இதில் மள்ளர் எனப்பட்டோர் சேர,சோழ,பாண்டிய குடிகள். தமிழே இவர்களால் படைக்கப்பட்டிருக்கின்ற போது இன்று இவர்களை தமிழன் என்றே சொல்ல ஒருவனுக்கும் மனமில்லை. இப்படிப்பட்ட தமிழ் இனத்தில் இருந்த வந்த ஏதும் அறியா பாமரன் கூட தன்னை தலித் என்று தெரியாமல் சொல்லலாம். ஆனால் ஒரு எழுத்தாளன் ஆன ஆதவன் அவ்வாறு கூறியிருப்பது அவர் எவ்வளவு பெரிய **** என்பதை காட்டுகிறது.

குறிப்பு : கீற்று ஆசிரியர், அறிவுசார் எழுத்தாளர்கள் மற்றும் கீற்று வாசகர்களுக்கு ஒரு அன்பான, பணிவான
மற்றும் உரிமையான(இது எம்மண் எம்மொழி எம்மக்கள் என்பதால்) வேண்டுகோள். இனிமேல்
மேலே கூறிய இவ்வினங்களைப்பற்றி குறிக்கும் போது தொல் தமிழர் என்று சொல்லுங்கள் அவ்வாறு இல்லையெனில் மள்ளர் அல்லது குடும்பர் என்றே அழையுங்கள் . இது இன்றைய பள்ளரின் சங்க இலக்கியத்தில் உள்ள உண்மையான பெயர்.
சட்டத்தில் கூட Depressed caste என்று தானே உள்ளது . பறையரை தொல் தமிழர் அல்லது பறையர் என்று அலையுங்கள் .
இம்மக்களின் பண்பாடு மற்றும் வரலாற்றை மறைக்கும் தலித், எஸ்சி என்று எவரும் அழைக்கவேண்டாம்.
thoppulkodiyedhiri
tamizh naatil indru maarks, aadhavan, leena, ravikumar, maalan, hinduraam, thukluk cho, innum pala kaikkooligal tamizhinam, tamizhmozhi, eezha poaraattam-ullittavatril vaazhnaal paniyaaga singalanidam vaalaattubavargalaaga thaan iruppaargal............ VASADHI VANDHAVUDAN YEVAN ORUVAN THAN MOZHIYAI, INATHTHAI, NAATTAI NEASIKKA MARUKKIRAANO... AVAN PIRAPPILE KOALAARU ULLAVAN-thiruvalluvar.
suriyanarayanana
சுயநலம்தான் மனிதனை என்னமாய்ப் படுத்துகிறது? இலவச வெளிநாட்டுப் பயணங்களே ஒரு சாதாரன எழுத்தாளனை இந்த அளவிற்கு பச்சோந்தியாக மாற்றி விடுமானால், கோடிகோடியாக பணம் கிடைக்கும்போது கருணாநிதி மாதிரியான அரசியல்வாதிகள் கொள்கைகளைத் துறப்பதில் என்ன ஆச்சரியம் இருந்து விட முடியும்? கருணாநிதிக்கும் ஆதவன் தீட்சண்யாவுக்கு ஒரு ஒற்றுமை இருக்கிறது.

கருணாநிதியின் சுயநல அரசியலை பத்திரிக்கைகள் விமர்சன்ம் செய்தால், 'சூத்திரனை அவாள் அப்படித்தான் ஏசுவார்' என்பார். ஆதவனும் அதேதான் சொல்கிறார். ஆதவனும் அரசியலில் இறங்கினால், வெளுத்து வாங்குவார் என்பது மட்டும் உறுதி....
கற்பககுமாரவேல்
எனக்கு நண்பனும் இல்லை. பகைவனும் இல்லை என்ற அரசியலைப் போல இலக்கியமும் மாறிவிட்டது. ஒரு குடும்பத்தில் இருப்பர்கள் அனைவரும் ஒரே கருத்தை உடையவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது போல ஒரு விஷயத்தில் கருத்த வேறுபாடு நண்பர்களுக்குள் எழவாய்ப்பு உள்ளது. இலங்கைப் பிரச்சனையில் ஆதவனின் கருத்துகள் சரியா, தவறா என பலமுறை இதே கீற்றில் விவாதிக்கப்பட்டுள்ளது.
ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்களின் குரலாக பல சமயங்களில் கீற்றும், ஆதவனும் இருந்துள்ளார்கள். ஆதவன் ஒரு கட்சியைச் சேர்ந்தவர் என்பதற்காக பலமுறை கீற்று பின்னூட்டங்களில், அக்கட்சிக்கு எதிரானவர்கள் மிகவும் தரம்தாழ்ந்த முறையில் பதிவுகளை ஏற்றியுள்ளனர்.
அதே போல ஆதவனின் தலித் குரலைப் பிடிக்காத சாதிதிமிர் பிடித்தவர்கள், பலமுகமூடிகளை அணிந்து கொண்டு அவரின் குரல்வளையை நெறிக்கும் நோக்கில் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். அத்தகைய நிலை தான் கீற்று நந்தனின் கட்டுரைக்கு பின்னூட்டம் என்ற பெயரில் ஆதவனுக்கு எதிராக கொட்டப்பட்ட வார்த்தைகள்.
அரசியல் நோக்கம் தனக்கு இல்லை என பலமுறை கீற்று சொன்னாலும் அதிதீவிர இடதுசாரி மனோபாவத்துடன் இயங்கி வருகிறது என்பதை அனைவரும் அறிந்தது தான். அத்தகைய நிலைபாடுகளின் ஊடே பயணித்தது தான் கீற்று நந்தனின் கட்டுரை.
உத்தப்புரத்தான்
ஊர் ரெண்டு பட்ட கூத்தாடிக்கு கொண்டாட்டமாம். அது போல இருக்கு ஆனந்தகுமார் என்பவரின் பின்னூட்டம். உலகமே காரித்துப்பிய உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் பிரச்சனையில் ஆதிக்கசாதியினரோடு தோளோடு தோள் நின்ற நமது காம்ரேட் தா.பாண்டியனின் வண்டவாளம் குறித்து கீற்றில் வந்த கட்டுரைகளை ஆனந்தகுமார் படிக்கவில்லை போல. அய்யோ. . . அய்யோ. .
selvakumar
அண்மையில் காலமான ஆந்திர மனித உரிமைச் சங்கத் தலைவர் கே. பாலகோபால் அவர்களும் “நானும் கூடப் பிறப்பால் பார்ப்பனர்தான். ஆனால் பார்ப்பனியத்துக்கு எதிராகப் போரிடும் உரிமை எனக்கு உண்டு என நினைப்பவன். இந்த உரிமையை நான் எடுத்துக் கொள்ளாவிட்டால் எனக்குரிய சமூகப் பங்கை, பணியை என்னால் நிறைவேற்ற முடியாது. இந்த உரிமை பார்ப்பனர்களுக்கு மறுக்கப்பட்டால் அது வேறொரு வகையில் சாதியமைப்பை நியாயப்படுத்துவதில்தான் முடியும்” என்று கூறியுள்ளார். (சமூக நீதித் தமிழ்த் தேசம் ஏப்ரல் 2010)

இங்கே என்னடாவென்றால், ஆதவன் அவர்மீதான விமர்சனங்களுக்காக, தலித் அல்லாதவர்களின் முற்போக்கு செயலபாடுகளை அங்கீகரிக்காமல், தலித் எதிரிகள் என்று சாடுகிறார். தலித் மக்களுக்கான ஆதரவு சக்திகளை நிராகரிப்பது எவ்விதத்திலும் தலித் விடுதலைக்கு உதவி சேர்க்காது. இதை உணராமல் இவர் என்ன மநுவிரோதியோ!!
subburaj
நேற்று, ஸ்பெக்ட்ராம் ஊழல் விவகாரத்தில் 'தலித்' என்பதால்தான் ஆ.ராசாவை எல்லோரும் குறை கூறுவ்தாக கருணாநிதி பேட்டி கொடுத்திருக்கிறார். ஆதவனும், நான் தலித் என்பதால் விமர்சிக்கிறார்கள் என்கிறார். இருவருக்கும் என்ன ஒற்றுமை பாருங்கள்!!
அசோகன் முத்துசாமி
"சாதிப் பிரச்சனையை ஒழித்து விட்டு சம்பய உயர்வு கேட்டுப் போராடலாம் என்றோ, அர்ச்சகராகும் உரிமையை அடைந்த பிறகு உற்பத்தியில் பங்கு கேட்கும் போராட்டத்தைத் தொடரலாம் என்றோ என்றாவது தொழிற்சங்கங்களிடம் பேசியிருக்கிறீர்களா" என்பதை மேற்கோள் காட்டி கந்தசாமி என்பவர் பின்வருமாறு எதிர்வினையாற்றியிருக்கின்றார்.
'அதெப்படிங்க சொல்வாரு....? ஆதாயம் கிடைக்கிற் இடத்தில் அதையெல்லாம் பேச அவர் என்ன விவரம் இல்லாதவரா? எங்க பேசினா புரட்சி எழுத்தாளர் பட்டமும், அரசு செலவுல வெளிநாட்டுப் பயணமும் கிடைக்குமோ அங்கதான் பேசுவாரு..'
திருவாளர் கந்தசாமி ஒன்று அப்பாவியாக இருக்க வேண்டும்; அல்லது அயோக்கியராக இருக்க வேண்டும்.
தொழிலாளர்கள் எல்லாம் தாங்கள் சுரண்டப்படுவதை மறந்துவிட்டார்கள் என்றலோ அல்லது அதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒதுக்கி வைத்துவிட்டார்கள் என்றாலோ, அதனால் யார் உடனடியாக ஆதாயம் அடைவார்கள் என்பதை மூடர்களும் அறிவர். முதலாளிகளே ஆதாயம் அடைவார்கள். தொழிலாளிகள் சம்பள உயர்வே கேட்கவில்லை எனில் அது முதலாளிக்குத்தான் லாபம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
மேலும், அது சாதியத்தை நீடிக்கச் செய்ய விரும்பும் ஆதிக்க சாதிகளுக்கே சாதகமாகவும் முடியும். ஏனெனில், முதலாளித்துவ உற்பத்தி முறை உருவாக்கியிருக்கும் சரக்கு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தேவையான மூலதனம் மேல்சாதியினரிடம் மட்டுமே இன்றும் பெரும்பாலும் இருக்கின்றது. இந்த நாட்டின் பெரும் முதலாளிகளில் பெரும்பகுதியினர் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பதும், நடுத்தர முதலாளிகள், சிறு முதலாளிகள், நிலப்புரபுக்கள், பணக்கார விவசாயிகள் ஆகியோரிலும் பெரும்பகுதியினர் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்கள்தான். இதை பல்வேறு ஆண்வுகள் நி%பித்திருக்கின்றன.
இன்னும் சொல்லப் போனால் உண்மையில் அது உடனடி ஆதாயமாக மட்டும் இருக்காது. நீண்ட கால ஆதாயமாகவும் இருக்கும். ஏனெனில், சாதிப் பிரச்சனையைத் தீர்த்துவிட்டுத்தான் சம்பளப் பிரச்சனைக்காகத் தொழிலாளர்கள் போராடுவார்கள் என்பது தெரிந்த உடன் முதலாளிகளும், நில உடமையாளர்களும் சாதித் தீயை மூட்டிவிட்டுக் கொண்டே இருப்பார்கள். அதை பல்வேறு சாதிக்கரவரங்கள் குறித்த ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
அப்படிப் பார்த்தால், கந்தசாமியையும் முதலாளிகளிடம் கையூட்டு வாங்கிக் கொண்டுதான் இப்படிப் பேசுகிறார் என்று குற்றம் சாட்ட முடியும்; அல்லது உலமறியாத அப்பாவியாக உளறுகிறார் என்கின்ற முடிவிற்குத்தான் வரவேண்டியிருக்கும்.
Guest
அய்ய்ய்யா,
ஆதவன் அய்யாவுக்கான கீற்று அய்யாவின் பதிலை, தனியே, ஆதவன் அய்யாவுக்கே அனுப்பியிருக்கலாம்.
வலை தளத்தின் வெளியே வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.... என்னைப் போன்ற பாமரர்கள்.
இது போன்ற தேவையற்ற பதிவுகளை தவிர்க்க முயற்சியுங்களேன்.
இதற்கான பதில் எழுதும் நேரத்தில் தகவல்களுடன் கூடிய கட்டுரை தயார் செய்யுங்கள்.
இன்னுமொரு விசயம், வாய்ப்பிருந்தால், கீற்றுக்கு குறைந்தபட்ச சந்தா வாங்குங்கள். வினவுக்கும எழுதியிருக்கிறேன்.
mukilan
ஈழபோராட்டம் பின்னடைவுக்கு சாதி தான் கரணம் என்பது எவ்வளவு அபத்தமானது. அதை விட அபத்தமானது //சாதி குறித்து மௌனம் காத்துக் கொண்டே தொழிலாளர்களை ஒருங்கிணைக்க முயலும் மார்க்சிஸ்ட் பார்ப்பனர்களால்தான் இந்தியாவில் வர்க்கப்புரட்சி நடைபெறாமல் இருக்கிறது//
கீழ்த்தஞ்சை புன்னபுர வயலார் எல்லாம் மறந்துவிட்டதா? வர்க்கப்புரட்சி நடைபெறாமல் மார்க்சிஸ்ட் பார்ப்பனர்களால்தான் இருக்கிறது எனில் மட்டற்ற இயக்க தோழர்கள் என்ன செய்கிறர்கள். அவர்களும் முழுநேரமாக முழு பூசணிக்காயை மறைக்கும் வேலையை செய்கிறார்கள்

//ஈழத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில், கேரளத்தில், மேற்கு வங்கத்தில், இங்கிலாந்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிடத்தில் என எங்கெல்லாம் சாதி இந்துக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சாதி இருக்கிறது//
அப்படி எனில் சாதி இந்துக்கள் குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக சாதியை எதிர்க்கும் தகுதி இல்லையா? சாதி ஒடுக்குமுறையை தலிதுக்கள் மட்டும் தான் எதிர்க்கவெண்டுமா?
அருந்ததியர் உள் ஒதுகிடு வந்தபோது எதிர்த்தவரை எல்லாம் என்ன செய்வது என்வென்று அழைப்பது?

மீசை முறுக்கினால் மட்டும் சதியா ஒடுக்குமுறைக்கு எதிரானது ஆகாது? உத்தபுரம் பிரட்சனை நடக்கும் போது, அந்த கிராமத்துக்கு அருகில் வந்து கூட அதைப்பத்தி பேசாதது, கடலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலையை அகற்ற ஆதரவு தெரிவித்தது... இதெல்லாம் என்ன?
அசோகன் முத்துசாமி
'எல்லோருக்குமான இனிப்பு எங்களிடம் இல்லை' என்கின்ற கட்டுரையில் பல்வேறு முக்கியமான பிரச்சனைகள் குறித்து தீர்ப்புகளும், முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் இதற்கு மேல் இல்லை என்பது போன்ற தொனி அதில் இருக்கின்றது. கீற்றுநந்தன் தன் கருத்தைச் சொல்லியிருக்கிறார். நாமும் நமது கருத்தைந் சொல்வோம்.

'ஈழத்தில் மட்டுமல்ல தமிழகத்தில், கேரளத்தில், மேற்குவங்கத்தில், இங்கிலாந்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிடத்தில் என்று எங்கெல்லாம் சாதி இந்துக்கள் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் சாதி இருக்கின்றது' என்று ஒரு தீர்ப்பு.

பிறப்பைக் கொண்டு ஒருவரின் குணநலன்களை மதிப்பிடும் 'பார்ப்பனீயம் பாணி சிந்தனை' சாதி எதிர்ப்பாளர்களையும் விட்டுவைக்கவில்லை என்பதையே இது காட்டுகின்றது. பார்ப்பன சாதியில் ஒருவர் பிறந்துவிட்டார் என்பதனாலேயே அவர் சாதி ஒடுக்குமுறையாளராகத்தான் இருப்பார் என்பது தலித்தாகப் பிறந்த ஒருவர் இழிவாகத்தான் இருப்பார் என்பதற்குச் சமம் என்று கருத இடமுண்டு. சாதி இந்துக்கள் இருக்கும் இடத்தில் எல்லாம் சாதி இருக்கும் என்றால் பெரியார் ஒரு சாதி இந்து; வீரமணி ஒரு சாதி இந்து; கொளத்து£ர் மணியும் ஒரு சாதி இந்து; பிரபாகரன் ஒரு சாதி இந்து...இப்படி நீடித்துக் கொண்டே போகலாம். அவர்களுக்கும் இந்த தீர்ப்பு பொருந்துமா?

ஒருவர் தன்னைப் பற்றி என்ன கூறிக் கொள்கிறார் என்பதை வைத்து அவரை மதிப்பிடுவது மார்க்சிய வழக்கமல்ல. ஒருவர் என்ன சாதியில், இனத்தில், மதத்தில், நாட்டில் பிறந்திருக்கிறார் என்பதை வைத்தும் மதிப்பிடுவது மார்க்சிய நெறியல்ல. அவர் உண்மையில் என்ன செய்கிறார் என்பதை வைத்துத்தான் அவரைப் பற்றிய மதிப்பீட்டிற்கு எவரும் வரமுடியும். அவர் தன்னைப் பற்றி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ எப்படிச் சொல்லிக் கொண்டாலும் சரி.

மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் கிட்டத்தட்ட சாதிக் கலவரங்களே இல்லையே ஏன் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட நிலச்சீர்திருத்தத்தின் மூலம் 2006 வரை 10.69 லட்சம் ஏக்கர் 26.43 லட்சம் நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 56% பேர் தலித்துகள் மற்றும் பழங்குடியினர் ஆவர். இது மக்கள் தொகையில் அவர்களது விகிதாச்சாரத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும். இதன்றி 15 லட்சம் குத்தகை விவசாயிகளின் உரிமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 42% தலித் மற்றும் பழங்குடியினராவர். இது ஒரு பகுதிதான். இன்னும் தலித் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது, சிறு தொழில் முனையும் தலித்துகளுக்கு மான்யத்துடன் கடன் வழங்குவது என்று ஏராளமான திட்டங்கள் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் பொதுத் தொகுதிகளில் தலித்துகளை போட்டியிடச் செய்து வெற்றி பெறவைத்திருக்கிறது இடது முன்னணி. இரு மாநிலங்களிலுமே மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பில் ஒதுக்கீட்டை விடக் கூடுதலான பதவிகளில் தலித்துகள், பழங்குடியினர் இருக்கின்றனர். (ஆதாரம்: சிபிஐஎம் இணையதளம்). சொல்வதற்கு ஏராளம் உண்டு. எனினும், கட்டுரையின் அளவு கருதி இந்த விவரங்களை இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன்.

பாராளுமன்ற ஜனநாயக முறையைப் பயன்படுத்திக் கொள்ளும் இடதுசாரிக்கட்சிகள் அம்மாநிலங்களில் வலுவாக இருப்பதும், தலித்துகளுக்கு நிலம் வழங்கப்பட்டிருப்பதும், அவர்கள் பிறரை அண்டி வாழ வேண்டிய நிலை ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவாக இருப்பதும் அல்லது அப்படி ஆக்கப்பட்டிருப்பதும்தான் அங்கு சாதிக் கலவரங்களே கிட்டத்தட்ட இல்லாதிருப்பதற்குக் காரணம் என்று சொல்லலாமா? இத்தனைக்கும் இந்தியாவில் சாதி ஒழிப்புதான் முதலில் செய்ய வேண்டியது, மற்றதைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்கின்ற அமைப்புகள் எதுவும் குறிப்பிட்டுச் சொல்கின்ற மாதிரி அம்மாநிலங்களில் இல்லை. இத்தனைக்கும் இடதுசாரிக் கட்சிகளின் சில முக்கிய தலைவர்களாக பார்ப்பன சாதியில் பிறந்தவர்கள் இருக்கின்றார்கள்.

மேலும், மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் பொதுத் தொகுதிகளில் தலித்துகளை போட்டியிடச் செய்து வெற்றி பெறவைத்திருக்கிறது இடது முன்னணி. இரு மாநிலங்களிலுமே மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பில் ஒதுக்கீட்டை விடக் கூடுதலான பதவிகளில் தலித்துகள், பழங்குடியினர் இருக்கின்றனர்.

ஆனால், சாதிதான் முதல் பிரச்சனை என்று வலியுறுத்திய, பார்ப்பனரல்லாத பெரியாரும், அவரது வழித் தோன்றல்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களும் வலுவாக இருக்கும் தமிழகத்தில் சாதிக்கலவரங்கள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பெரியார் உயிரோடு இருக்கும்போதே நடந்ததுதான் கீழவெண்மனி. உத்தப்புரங்களும், திண்ணியங்களும் தொடர்கதை. டாக்டர் அம்பேத்கர் பிறந்த, அதிகம் செயல்பட்ட மராட்டியத்திலும் அதுதான் நிலைமை. இதன் பொருள் அப்பெரியவர்களின் இயக்கங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது அல்ல. அவர்களும் இல்லை என்றால் இன்று இடதுசாரிகள் வலுவாக இல்லாத மாநிலங்களில் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கை இன்னும் 19ம் நு£ற்றாண்டிலேயே இருந்திருக்கும். ஆனால், அவர்கள் சாதிக்குள் ஏற்பட்டு, வளர்ந்து கொண்டிருந்த வர்க்கப் பிளவுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் பிரச்சனை.

-அசோகன் முத்துசாமி
ஏகாந்தன்
"பிறப்பைக் கொண்டு ஒருவரின் குணநலன்களை மதிப்பிடும் 'பார்ப்பனீயம் பாணி சிந்தனை' சாதி எதிர்ப்பாளர்களையும் விட்டுவைக்கவில்லை என்பதையே இது காட்டுகின்றது. பார்ப்பன சாதியில் ஒருவர் பிறந்துவிட்டார் என்பதனாலேயே அவர் சாதி ஒடுக்குமுறையாளராகத்தான் இருப்பார் என்பது தலித்தாகப் பிறந்த ஒருவர் இழிவாகத்தான் இருப்பார் என்பதற்குச் சமம் என்று கருத இடமுண்டு."

அய்யா அசோகன் முத்துசாமி அவர்களே இந்தக்கருத்தை முரண்பாட்டின் மொத்த உருவமான உங்கள் ஆஆஆதவன் தீட்சண்யாவிடம் முதலில் சொல்லுங்கள். அவர் தான் சொல்கிறார் . மாட்டுக்கறி சாப்பிடாதவர்கள் எல்லோரும் சாதிப்பித்தர்கள் என்றும், சைவ உணவு மட்டுமே உண்பவர்கள் சாதிவெறி பிடித்தவர்கள் என்றும் உரத்துச் சொல்கின்ற அவருக்கு உங்கள் கருத்தை அவர் காதில் ஓதுங்கள்.
ஏகாந்தன்
"சாதிதான் முதல் பிரச்சனை என்று வலியுறுத்திய, பார்ப்பனரல்லாத பெரியாரும், அவரது வழித் தோன்றல்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களும் வலுவாக இருக்கும் தமிழகத்தில் சாதிக்கலவரங்கள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பெரியார் உயிரோடு இருக்கும்போதே நடந்ததுதான் கீழவெண்மனி. உத்தப்புரங்களும், திண்ணியங்களும் தொடர்கதை. டாக்டர் அம்பேத்கர் பிறந்த, அதிகம் செயல்பட்ட மராட்டியத்திலும் அதுதான் நிலைமை. இதன் பொருள் அப்பெரியவர்களின் இயக்கங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது அல்ல. அவர்களும் இல்லை என்றால் இன்று இடதுசாரிகள் வலுவாக இல்லாத மாநிலங்களில் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கை இன்னும் 19ம் நு£ற்றாண்டிலேயே இருந்திருக்கும். ஆனால், அவர்கள் சாதிக்குள் ஏற்பட்டு, வளர்ந்து கொண்டிருந்த வர்க்கப் பிளவுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் பிரச்சனை."
கீழ்வெண்மணியில் 44 விவசாய கூலித்தொழிலாளார்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இதில் இரிஞ்சூர் கோபாலகிருக்ஷ்ண நாயுடு முதல் குன்னியூர் சாம்பசிவ அய்யர்வரை அனைத்து சாதி நில உடமையாளருக்கும் பங்கு உண்டு. இந்த படுகொலகளை அன்றிலிருந்து இன்றுவரை மார்க்ஸிஸ்ட் கட்சி வர்க்கப் போராட்டம் என்ற பார்வையின் மூலமாக வெறும் கூலிப்போராட்டமாக மட்டுமே பார்த்தது, இன்றும் பார்க்கிறது. அப்படியானால் இந்த வர்க்கப்போராட்டத்தில் தலித் விவசாய கூலித்தொழிலாளர்கள் மட்டுமே கொல்லப்பட்டது ஏன்? மற்ற விவசாய கூலித்தொழிலாளர்கள் போராடவில்லையா? ஆகவே இந்திய மார்க்ஸிஸ்ட்கள் வர்க்கப்போராட்டத்தை மட்டுமே இதுவரை முன்னிலைப்படுத்தியத்தின் மூலமாக இந்தியாவில் வர்க்கங்களுக்குள் பின்னி பினைந்த்துள மிக மோசமான சாதிப்பிளவுகளை கணக்கில் எடுக்கத் தவறியதுதான் இந்திய மக்களுக்கு(குறிப்பாக தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களுக்கு) பிரச்சினை.
குறிப்பு : இதை படித்தவுடன் மார்க்ஸிஸ்ட் நண்பர்கள் , தீண்டாமை ஒழிப்பு முன்னனி, உத்தப்புரம் என்று தங்களின் சமீபத்திய சாதிஒழிப்புப்போராட்டங்களை பட்டியிலடவேண்டாம். ஏனெனில் இதுவரை வர்க்கப்போராட்டத்தை மட்டுமே முன்னிறுத்திநீர்கள். சமீபகாலமாகத்தான் வர்க்கப்போராட்டத்தோடு சாதிஒழிப்பு போராட்டத்தையும் நடத்த முன் வந்து உள்ளீர்கள். இதற்கு காலத்தின் கட்டாயம் தான் காரணம் என்பதை நங்கள் அறிவோம்.
கந்தசாமி
யோக்கிய சிகாமணி அசோகருக்கு,

கந்த கந்த கந்த கந்தசாமி எழுதுறதுங்க... உங்களோட பாயிண்ட்ஸ் எல்லாம் அபாரம்ங்க... கூலி கேட்கிற இடத்துலே சாதிப் பிரச்சினையை பேசினா அயோக்கியத்தனம்ங்கிறீங்க, சரி!! குண்டு போட்டு கொல்றவனை எதிர்த்து, உயிரைக் காப்பாத்தறதுக்குப் போராடுவன்கிட்டே போய் சாதி பேசறதுக்கு பேரு என்னங்க...? அதைத்தானே அ.மார்க்ஸ் கூட்டமும், அவங்களுக்குப் புது ஸ்பீக்கராக வந்திருக்கிற ஆதவனும் பண்றாங்க.. இதுக்குப் பேரு பச்சை அயோக்கியத்தனம் இல்லைங்களா...?

கூலி கேட்கும்போது சாதி பேசினா முதலாளிக்கு லாபம் சரி, குண்டு விழுற இடத்துலே சாதி பேசினா யாருக்கு லாபம்? சிங்கள பேரினவாதத்துக்கு லாபம். இது உங்களுக்குப் புரியுதா, இல்லை ஆதவன் மாதிரி புரியாததுபோல‌ நடிக்கிறீங்களா?

அடுத்து, தொழிலாளிகள் சாதிப்பிரச்சினையைப் பேச ஆரம்பிச்சா முதலாளிங்க‌ கூலி கொடுத்து சாதித்தீயை மூட்டுவாங்கன்னு சொல்றீங்க... நானும் அதைத்தாங்க சொன்னேன். முதலாளிங்ககிட்ட சாதிப்பிரச்சினையை பேசாம, உயிரைக் கையிலே பிடிச்சிக்கிட்டு சனங்க போராடுற இடத்துலே போய், சாதிப்பிரச்சினையை ஆதவன் பேசுறதாலத்தான் அவருக்கு சிங்கள அரசு செலவுல இலங்கைப் பயணம் கிடைக்குது; சிங்கள அரசோட மேடையிலே இடமும் மைக்கும் கிடைக்குது.. ஆதவன்களையும் அ.மார்க்சுகளையும் சிங்கள அரசு தனக்கு ஆதரவான என்.ஜி.ஓக்கள் மூலமா ஐரோப்பிய நாடுகளுக்குக் கூட்டிப் போய் குளிப்பாட்டுது.

இவங்க எல்லாம் நெரடியா காசு (கையூட்டு) வாங்கலை, அவ்வளவுதான்.. இதெல்லாம் புரியாத அப்பாவியாத்தான் நீங்களும் கவின்மலர் மாதிரி வந்து காமெடி பண்றீங்க... அடுத்து ஆதவன் தன்காசுலேதான் வெளிநாடு போனாருன்னு ஆரம்பிச்சிறாதிங்க... இங்க இருக்கிற ஒசூருலேயிருந்து எங்கூரூ திருச்சிக்கு வந்துபோறதுக்கே டி.ஏ. வாங்குற ஆளுதான் அவரு...
anandha kumar
நிஜத்தை விட்டு அடுத்தவன் கூறிடும் கதைகளை பார்த்தும், படித்தும் பழகிப்போன முட்டாள்தனமான அதிமேதாவிகள் பலர் தங்களை பெரிய எழுத்தாளனாகவும், கவிஞனாய் நினைத்துக் கொண்டு அடுத்தவன் கூறுவதைக் கேட்டு நேரில் நடந்தது எது என அறிந்திடாமலும், அறிந்திட முயலாமலும் வழக்கமான கட்டுக் கதைகளை எழுதி தமக்கு பிடிக்காதவர்களையும், முக்குலத்தோராய் பிறந்த ஒரே குற்றத்திற்காகவும் விமர்சனம் செய்திடும் ஓநாய்களைப் பற்றியெல்லாம் யாருக்கும் கவலையில்லை. ஆனால் இணையத்தை பயன்படுத்தி நடத்திவரும் கொலைகளை எப்போதும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்னைப் போன்றவர்களால், உத்தபுரத்தானாக இருந்தாலும் சரி , அடுத்தவன் பேரை சொல்லி பிழைப்பு நடத்துபவனாக இருந்தாலும் சரி (அவன் பூராவும் அடையாளம் தெரியாத லீனாக்கள்) ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். தூ.பாண்டியன் உத்தபுரத்தை கேவலமான அரசியலாக பண்ண நினைத்திருந்தால் இப்போது நடந்ததை விட பெரிய அளவில் நடத்தியிருப்பார் அவரது திறமைக்கு. முதலில் உங்களைப் போன்றவர்கள் உண்மையை பெசி, உண்மையை எழுதி பழகுங்கள் விருப்பு வெறுப்பின்றி, உங்களது இடதுசாரி அரசியலக்குள் எங்களைப் போன்றவர்களை அழுக்காதீர்கள். நண்பர் உத்தபுரம் பற்றி எரிக்கப்பட்ட போது எந்த ஊரில், எந்த விடுதியில் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தாரோ தெரியவில்லை, ஆனால் நான் அப்படி அல்ல. உத்தபுரம் பிரச்சனை உருவாக்கப்பட்டதிலிருந்து முடித்து வைக்கப்பட்டது வரையில் அங்கு நேரடியாக சென்றும் தொடர்ந்தும் கண்காணித்துக் கொண்டிருந்தவன் என்பதை புரிந்த கொள்ளவும். ஏங்கோ உட்கார்ந்து கொண்டு நினைத்ததையெல்லாம் பேசுவதையும், எழுதுவதையும் இனியாவது தவிர்க்கவேண்டும். ஓன்றைமட்டும் நண்பர்கள் தெரிந்த கொள்ளவேண்டும் இப்போது உத்தபுரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பலரும் பலரின் வண்டவாளங்களை தண்டவாளங்களில் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர் சம்பந்தப்பட்டவர்களே. முதலில் சாதி எனும் மாயையில் இருந்து வெளிவாருங்கள்.
mukilan
ஏகந்தன் அவர்களே,
//அய்யா அசோகன் முத்துசாமி அவர்களே இந்தக்கருத்தை முரண்பாட்டின் மொத்த உருவமான உங்கள் ஆஆஆதவன் தீட்சண்யாவிடம் முதலில் சொல்லுங்கள்//
இந்த கட்டுரையே ஆதவனின் தவறான கருத்துக்களை எதிர்த்து எழுதியதுதான். அனால் ரமேஷ்ம் அதே தவறை தானே செய்கிறார்

//இந்த படுகொலகளை அன்றிலிருந்து இன்றுவரை மார்க்ஸிஸ்ட் கட்சி வர்க்கப் போராட்டம் என்ற பார்வையின் மூலமாக வெறும் கூலிப்போராட்டமாக மட்டுமே பார்த்தது, இன்றும் பார்க்கிறது//
இது தங்கள் பார்வை. வெண்மணியை வர்க்க போராட்டமாக மட்டும் பார்த்தது என எதை வைத்து சொல்கிறீர்கள்? பறையன் கட்சி என கீழ் தஞ்சையில் அழைக்கப்பட்டது வர்க்கமாக மட்டும் பர்ர்த்ததலா?
கந்தசாமி
//வெண்மணியை வர்க்க போராட்டமாக மட்டும் பார்த்தது என எதை வைத்து சொல்கிறீர்கள்? //

எல்லாம் உங்க கட்சிப் பத்திரிக்கைகளை தொடர்ச்சியா படிச்சதிலிருந்துதான் நான், ஏகாந்தன் மாதிரியானவங்க இந்த முடிவுக்கு வர முடியுது.. உங்க அமைப்புல நீண்ட நாள் உறுப்பினரா இருந்தவந்தான் இந்த கந்தசாமி. ஈழம் சார்ந்த உங்க நிலப்பாடு புடிக்காம விலகி வந்தவந்தான் நான்.

வெண்மணிப் பிரச்சினையில் சாதியும் இருக்குன்னு என்னைக்காவது உங்க கட்சி ஆவணத்திலே, கட்சிப் பத்திரிக்கையிலே எழுதியிருக்கீங்களா? 2000க்குப் பிறகு பாரதி கிருஷ்ணகுமார் எடுத்த ஆவணப்படத்திலேயும் அது ஒரு கூலிப்பிரச்சினையாகத்தானே சித்தரித்தீர்கள். கடந்த இரண்டு வருஷமாத்தான் சாதி பத்தி முனுமுனுக்க ஆரம்பிச்சிருக்கீங்க... அதுக்கு முன்னாடி பேசுனதா, எழுதுனதா ஒரு ஆதாரம் காட்டமுடியுமா?

//பறையன் கட்சி என கீழ் தஞ்சையில் அழைக்கப்பட்டது வர்க்கமாக மட்டும் பர்ர்த்ததலா?///

பறையன் கட்சின்னு சொன்னது யாரு? ஆதிக்க சாதிக்காரன். 'இது வர்க்கப்பிர்ச்சினை இல்லை; சாதிப் பிரச்சினை. தலித்துங்க எல்லாம் இருக்கிறதாலே இது பறையன் கட்சி'ன்னு ஆண்டைங்க எல்லாம் கூறினான். அவங்க எல்லாம் தெளிவாத்தான் இருந்தாங்க... ஆனா நீங்கதான் பாட்டாளிகளின் கட்சி, நிலப்பிரபுத்துவத்தை எதிர்க்கும் கட்சின்னு முழங்கிட்டு இருந்தீங்க.. வெண்மணியை வர்க்கப்போராட்டம்னு பேசிட்டு இருந்தீங்க..

பறையன் கட்சின்னு சொல்றதுலே உங்களுக்குப் பெருமைன்னா, - 'நான் பாப்பாத்திதான்'ன்னு உங்கலோட இப்போதைய காம்ரேட் ஜெயலலிதா அன்னைக்கு முழங்கினமாதிரி - உங்க கட்சித் தலைமையால் 'ஆமா நாங்க பள்ளு பறையர்களோட கட்சிதான்'னு ஒரு அறிக்கை விடச் சொல்லுங்க பார்ப்போம். அதை என்னிக்கும் உங்களாலே பண்ண முடியாது.. ஏன்னா வோட்டு விழாதுல்லே. கடைசிவரைக்கும் கட்சி 'பாட்டாளிகள், கூலியுயர்வு, போனஸ் பிரச்சினை, வர்க்கப்பிரச்சினை'ன்னு பேசிட்டு இருக்கப்போவுது.. கீழே இருக்கிற ஆதவன் மாதிர்யும், உங்களை மாதிர்யும் இருப்பவங்க, 'அண்ணே யாரு தெரியும்லே' என்று வடிவேலு கணக்கா மீசை முறுக்கிட்டு திரியுறீங்க... காமெடியாத்தான் இருக்குது...
கந்தசாமி
//பிறப்பைக் கொண்டு ஒருவரின் குணநலன்களை மதிப்பிடும் 'பார்ப்பனீயம் பாணி சிந்தனை' சாதி எதிர்ப்பாளர்களையும் விட்டுவைக்கவில்லை என்பதையே இது காட்டுகின்றது.//

ஏம்பா அசோகரு...

ஆதவனையும் சேர்த்துத்தானே சொல்றீங்க... தலித்தல்லாதவங்க என்பதாலே கீற்றுக்காரங்களை தலித் விரோதிகள்ன்னு அவர் சொல்றதை பார்ப்பனிய பாணி, மநுஆதரவு சிந்தனைதானே!! ஏன்னா உங்களுக்கு தூரத்துலே இருக்கிறது எல்லாம் நல்லா தெரியுது.. ஆப்கானிஸ்தான், கியூபா, வெனிசூலா, அமெரிக்கா NGOக்கள் எல்லாம் நல்லா பார்த்து பேசுறீங்க... பக்கத்துலே இருக்கிற ஈழம், முல்லைப் பெரியாரு, லால்கர், இலங்கை ஆதரவு NGOக்கள் இதிலே எல்லாம் அவுட் ஆப் போகஸ் ஆகி, கோட்டை விட்டுறீங்க...
சாமி
ஊர் ஊராகச் சென்று, முக்குலத்தோர் சாதிச் சங்க கூட்டங்களில் "வீர" உரையாற்றி வரும் "காம்ரேட்" பாண்டியனின் யோக்கியதை, அந்தக் கட்சியினரே காறித்துப்பும் சமாச்சாரம். அதுபற்றியெல்லாம் ஆனந்தகுமார் போன்ற போற்றி புகழ்பாடிகளுக்கு (எதற்காகவோ....) தெரியாது என்றால் வியப்புதான்.

திருநாவுக்கரசர், மா.நடராசன், மு.திரவியபாண்டியன், டாக்டர் சேதுராமன், நெல்லை சேதுராமபாண்டியன் போன்ற "பொதுவுடைமைவாதி"களோடு, தா.பாண்டியன் அடிக்கடி மேடையேறுவதும், ஆண்ட பரம்பரையான பாண்டியர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தாங்கள் என்று இவர்களோடு கைகோர்த்து, பாண்டியர்கள் பயன்படுத்திய "குத்துவாள்" இன்னும் எங்களிடம்தான் இருக்கின்றன என்று தா.பாண்டியன், உசிலம்பட்டியில் குத்துவாளை உயர்த்திக் காட்டியதும் இன்னும் எனது கண்ணில் தெரிகிறது.

இதே உசிலம்பட்டி பகுதியில்தான் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஊராட்சிகளில் 10 ஆண்டுகளாக தலித்துக்கள் தலைவர்களாக முடியாமல் இருந்தது. அப்போதெல்லாம் இந்த பாண்டியன் அங்கு எட்டிப் பார்த்திருப்பாரா? ஆனால், உத்தப்புரத்தில் சாதியக் கட்டுமானம் உடைகிறதே, தலித்துக்கள் எழுச்சி கொள்கிறார்களே என்று ஆவேசப்பட்டு ஓடோடி வந்தார். எப்படி, பிள்ளைமார்கள் தரப்பில் ஒரு சாமியார், தலித்துக்கள் சார்பில் இன்னொரு மதச் சாமியார், ஊடே இருந்து உசுப்பேத்தி விடும் சாதியின் தரப்பாக தான் என்று உத்தப்புரத்திற்கு சென்றவர்தான் இந்த பாண்டியன்...
உத்தப்புரத்தான்
நான் பேசிய விஷயங்களுக்குப் பதில் அளிக்காமல், ஆனந்தகுமார் உணர்ச்சிவசப்பட்டு பின்னூட்டம் செய்துள்ளார். நான் உத்தப்புரத்தின் தெற்குத் தெருக்காரன். ஆனந்தகுமார் வடக்குத் தெருக்காரராய் இருப்பார் போலிருக்கிறது. அதற்காகத்தான் பிள்ளைமார் சாதிக்கும், முக்குலத்து சாதிக்கும் வக்காலத்து வாங்கி வருகிறார். மே-15ந் தேதி பிள்ளைமார் சாதியைச் சேர்ந்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரை அழைத்து வந்து "நியாயம்" பேசவந்த தா.பாண்டியன், நடத்தியது என்ன அரசியல்?
"தான் திருடி பிறரை நம்பான்" என்பதை ஒப்புக்கொண்டுள்ளது போல தான் ஒரு எழுத்தாளன் இல்லை என்பதை நினைத்து குற்றமுற்ற நெஞ்சு குறுகுறுப்பது போல, என்னைப் பார்த்து, பெரிய எழுத்தாளனா, கவிஞனா என வினா எழுப்பியுள்ளார். நான் பெரிய எழுத்தாளன், கவிஞன் என என் பின்னூட்டத்தில் சொல்லவில்லை. இல்லாததை எப்போதும் இருக்கிறது என நான் சொல்வதில்லை. இல்லாத சாதிப்பெருமையைப் பேசி முக்குலத்தோராய் பிறந்த ஒரே குற்றமா என ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா போல ஆனந்தகுமார் ரத்தக்கண்ணீர் விட்டுள்ளார்.
முக்குலத்தோர் எனது எதிரி அல்ல. பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் தேர்தலை பத்து ஆண்டுகள் நடத்த விடாமல் சாதித்திமிர் பிடித்தவர்கள் கொடி பிடித்த போது கீரிப்பட்டியில் பாலுச்சாமி என்பவரை வேட்பாளனாய் நிறுத்தி வெற்றி பெற வைத்த தங்கராஜ், உத்தப்புரத்தில் காவல்துறை தலித் மக்கள் தாக்குதல் நடத்திய போது அதை எதிர்த்து உயர்நீதிமன்றம் போய் இழப்பீட்டுத்தொகை பெற்றுத்தந்த மாதர்சங்க பெண்மணி ஆகியோர் முக்குலத்தைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என ஆனந்தகுமாருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்குத் தெரியும். அப்படிப்பட்ட நல்லவர்கள் மீது என்னைப் போன்றவர்கள் வைத்திருக்கும் மரியாதை அளவிட முடியாது. இந்தக்களத்தில் தா.பாண்டியனுக்கு வாக்காலத்து வாங்கி எழுதியுள்ள ஆனந்தகுமார், அந்த சாதியைச் சேர்ந்தவரா அல்லது தா.பா. வின் கட்சியைச் சேர்ந்தவரா என எனக்குத் தெரியாது. ஆனால்,
எங்கேயே உட்கார்ந்து கொண்டு நினைத்ததையெல்லாம், எழுதுவதையெல்லாம் இனியாவது தவிர்க்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ள ஆனந்தகுமார், எங்கள் தொப்புள்கொடி உறவான ஈழம் குறித்து இந்தியாவில் இருந்து யாரும் எழுதாதீர்கள் என்பதைப் போல உத்தரவிட்டுள்ளார்.
ஏகாந்தன்
.... " ரமேஷ் !இங்கே யாருக்கு வக்கிரம் அதிகம் என்கிற பட்டிமன்றம் நடக்கிறதா என்ன? அவன் திருடன் என்றால். ‘இல்லை.. இல்லை.. அவனை விட அவன் தான் அதிகம் திருடினான். அதனால் இவன் திருடனில்லை..” என்பீர்களோ? இது ஆண்களின் உலகம்! வேறென்ன சொல்ல?"... கவின் மலர்.

நண்பர் முகிலன் அவர்களே உங்கள் பாசறையைச் சேர்ந்த கவின்மலர் பதில் தான் உங்களின் முதல் கேள்விக்கு என்பதிலும்.என்ன மகிழ்ச்சிதானே?.

” இது தங்கள் பார்வை. வெண்மணியை வர்க்க போராட்டமாக மட்டும் பார்த்தது என எதை வைத்து சொல்கிறீர்கள்? பறையன் கட்சி என கீழ் தஞ்சையில் அழைக்கப்பட்டது வர்க்கமாக மட்டும் பர்ர்த்ததலா?”
இது என் பார்வை இல்லை நன்பரே உங்கள் கட்சியின்பர்வைதான்.வெண்மணி சம்பந்தமான உங்கள் கட்சியின் பிரசுரங்களை படித்துப் பாருங்கள். அல்லது மீசையை முறுக்குபவர் என்று உங்களால் வர்ணிக்கப்படுபவர் சில ஆண்டுகளுக்கு முன் வெண்மணி தியாகிகள் நினைவிடம் செல்ல முற்பட்ட போது அவரை அனுமதிக்க மறுத்தது உக்கள் கட்சித்தலைமை. அதற்கு அவர்கள் சொல்லிய காரணம் ஒரு சாதிக்கட்சிகாரரை அனுமதித்தால் அவர் இந்த வர்க்கப் போராட்டத்தை சாதிப்போராட்டமாக திரித்து விடுவார் என்பதே. இதனை அந்த நேரத்தில் வந்த தீக்கதிர் நாளிதல்களிலும், அவர்கள்
வெளியிட்ட வெண்மணி சம்பந்தமான பிரசுரங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் நண்பர் கந்தசாமி அவர்களின் பதிலும் தங்களுக்கு போதும் என்று கருதுகிறேன்.
velmurugan
// அண்மையில் புதுடில்லி சென்ற முதல்வர் கருணாநிதி, ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சினைகளுக்கு பதில் கூறவில்லை. மாறாக, அமைச்சர் ஆ.ராசா தலித் என்பதால்தான் இந்தப் பிரச்சினையை எழுப்புகிறார்கள் என்று கூறியுள்ளார்கள். சாதியை வைத்து அரசியல் நடத்துவதை கம்யூனிஸ்ட் கட்சிகளாகிய நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் - டி.கே.ரங்கராஜன் மார்க்சிஸ்ட் எம்.பி. (தினமணி 7, மே 2010) //

ஆனால் ஆதவன் சாதியை வைத்துத்தான் இலக்கிய அரசியல் பேசுகிறார் என்பது இங்கு காமராஜுக்கோ, அசோகனுக்கோ, முகிலனுக்கோ தெரியவில்லை. உங்களிடம் நேரிடையாக ஒன்று கேட்க விரும்புகிறேன். பூசி மழுப்பாமல் பதில் சொல்லுங்கள். ஆதவன் செய்தது சரியா தவறா?
அசோகன் முத்துசாமி
கீழவெண்மனியில் கொல்லப்பட்டது தலித்துகள் மட்டும்தான். அவர்கள் தலித்துகள் என்பதற்காக மட்டும் கொல்லப்பட்டார்களா அல்லது கூலி உயர்வு கேட்டுப் போராடியதற்காகக் கொல்லப்பட்டார்களா? தலித்துகள் என்பதற்காக மட்டும்தான் கொல்லப்பட்டார்கள் என்றால் ஏன் அதே பண்ணையார்களிடம் வேலை பார்த்த மற்ற கிராமத்து தலித்துகள் கொல்லப்படவில்லை?
அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திய தலைவர்களில் தலித் அல்லாதவர்களும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்பதை அறிக. வெண்மனி கொடுமைக்கு முன்பே ராமச்சந்திரன் என்பவரும், அதற்குப் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வெங்கடாச்சாலம் என்பவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் விவசாயக் கூலிகளும் இல்லை. இது ஒரு உதாரணம்தான். (சமீபத்தில், ஈரோட்டில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்டார். கந்து வட்டிக் கொடூரர்களின் மீது புகார் கொடுத்த காரணத்திற்காக, புகாரைப் பெற்றுக் கொண்ட காவலர்களே காட்டிக் கொடுத்ததால், கொல்லப்பட்டார். வாங்கிய கடனுக்கான தவணையை தாமதமாகக் கொடுக்க வந்த 'குற்றத்திற்காக' ஒரு அருந்ததிய சாதி இளம்பெண்ணை வல்லாங்கு செய்தது மட்டுமின்றி, அதை படம் பிடித்து விற்ற பயங்கரவாதிகளைச் சுட்டிக் காட்டியதற்காக தலித் அல்லாத வேலுச்சாமி வெட்டிச் சாய்க்கப்பட்டார். கந்து வட்டிக்காரர்கள் சாதி இந்துக்களின் வீட்டுப் பெண்களையும் விட்டு வைப்பதில்லை என்பதையும் அறிக. விஷயம் என்னவென்றால், சுரண்டல்காரர்களின் வினையைத் தீர்மானிப்பது சாதியா அல்லது பணமா என்பதுதான்.)
பிற சாதிகளைச் சேர்ந்த விவசாயக் கூலிகளும் சேர்ந்துதான் போராடினார்கள். ஆனால், கோபாலகிருஷ்ண நாயுடு பண்¬ணையார்கள் சங்கத் தலைவராக இருந்தபோது ஒரு சூழ்ச்சி செய்யப்படுகின்றது. கீழ்தஞ்சையில் கிராமக் கோவில் பண்டிகைகள் சாட்டப்படுகின்றன. தலித்துக் ஊருக்குள் செல்ல முடியாது. மற்ற சாதிக்காரர்கள் எல்லாம், கூலி விவசாயிகள் உள்பட சென்று விடுகிறார்கள். வெண்மனி சேரியில் தனிமைப்படுத்தப்பட்ட தலித்துகளைச் சுலபமாகக் கொன்று விடுகின்றது பார்ப்பனரல்லாத மற்றும் பார்ப்பன சாதிகளைச் சேர்ந்த நிலஉடமை வர்க்கம். அவ்விதமாக தலித் அல்லாத சாதிகளைச் சேர்ந்த விவசாயக் கூலிகளை தலித் விவசாயக் கூலிகளிடம் இருந்து பிரிப்பதன் மூலம் தன்னுடைய வர்க்க நலனைப் பாதுகாத்துக் கொள்கின்றது நிலஉடமை வர்க்கம். சாதியை தற்காக்கும் ஒரு கேடயமாகவும், வர்க்க எதிரிகளான உழைக்கும் மக்களைத் துண்டாடும் ஒரு ஆயுதமாகவும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த உடமை வர்க்கத்தினர் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
மேலும், சாதி ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராட வேண்டும் என்கின்றோம். போராடிக் கொண்டிருக்கின்றோம்.
கீழவெண்மனி உதாரணத்தை மட்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட ஏகாந்தன் ஏன் மேற்கு வங்கம், திரிபுரா போன்ற மாநிலங்களின் உதாரணங்களை எடுத்துக் கொள்ளவில்லை? யார் புத்திசாலி என்பதல்ல இப்போது பிரச்சனை. இந்தக் கேடுகெட்ட தேசத்தை எப்படிச் சரி செய்வது என்பதுதான் பிரச்சனை.
அப்புறம் திருவாளர் கந்தசாமி அவர்கள்.
அவர் அப்பாவியா அல்லது அயோக்கியரா என்கின்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. சந்தேகத்திற்கு இடமில்லாமல் அவர் அப்பாவிதான். ஈழப் பிரச்சனைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு. அது ஆயுதந்தாங்கிய போராட்டமாக வடிவெடுத்தது 1970களின் பிற்பகுதியில். அது தீவிரமானது 1983க்குப் பிறகு. ஒன்றல்ல, பல குழுக்கள் ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்தின. அதில் தலித்துகள் முக்கிய பாத்திரம் வகித்த குழுக்களும் உண்டு. ஆனால், அவை உள்பட அனைத்து குழுக்களையும் விடுதலைப் புலிகள் ஒழித்துக் கட்டினர். அதைவிடவும் முக்கியம் ஈழ தமிழ்த்தேசியக் கோட்பாட்டிற்கு அடித்தளம் அமைத்தவரான ஆறுமுக நாவலர் தலித்துகளை ஒதுக்கியே வைத்தார். அது வேளாளர் தேசியமாகவே இருந்தது. கந்தசாமி கோவிலுக்குள் தலித்துகள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது என்கின்ற உண்மையை எவரெனும் மறுக்க முடியுமா? அனுமதிக்க மறுத்தது சிங்களர்கள் அல்ல; சாட்சாத் தமிழர்கள்தான். இன்னும் எழுதலாம். நிறைய உண்டு. கடிதம் என்பதால் சுருக்கிக் கொள்கின்றேன்.
விஷயம் என்னவெனில், சாதிப் பிரச்சனையை விடுதலைப் புலிகள் கடந்த நான்கைந்து ஆண்டுகளில் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பதல்ல விவாதம். கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே கணக்கில் அது எடுத்துக் கொள்ளப்டபவில்லை என்பதுதான். ஆதலால், கந்தசாமி அவர்களின் வாதம் ஏற்கத்தக்கதல்ல.
இலங்கை தலித்துகள் இன்று பெற்றிருக்கும் உரிமைகள் அனைத்துமே இடதுசாரி இயக்கங்களின், தலித் இயக்கங்களின் போராட்டங்களால் கிடைத்தவையே; தமிழ்த் தேசிய இயக்கங்களால் கிடைத்தவை அல்ல. (பார்க்க: இலங்கையில் சாதியமும், அதற்கெதிரான போராட்டங்களும். வெகுஜனன், இராவணா).
'சிலர் வேண்டுமென்றும், சிலர் அறியாமையாலும் சாதியம் ஒழிந்துவிட்டதென்றும் தமிழ்த் தேசியமே அதை முறியடித்தது என்றும் பேசுகின்றனர். இரண்டுமே பொய்யானவை. சாதியம் இன்னும் ஒழிய வில்லை. அதற்கான சான்றுகள் வெளிவெளியாகவே உள்ளன. ஆயினும் சாதிய ஒடுக்குமுறைக்கு சாவு மணி அடிக்கப்பட்டாயிற்று. தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். அந்த வெற்றிக்கு தமிழ்த் தேசியம் எந்த வகையிலும் பங்களிக்கவில்லை. அதை இயலுமாக்கியவர்கள் தாழ்த்தப்பட்ட வெகுசனங்களும் அவர்களோடு இணைந்து நின்று போராடிய நேர்மையான இடதுசாரி, சனநாயக, முற்போக்குச் சக்திகளுமேயாவர். அதை இயலுமாக்கியது மார்க்சிய லெனினியவாதிகளின் வழிநடத்தலின் கீழ் அவர்கள் முன்னெடுத்த வெகுசனப் போராட்ட பாதையே' என்று மேற்குறிப்பிட்ட நு£லுக்கான முன்னுரையில் சி.சிவசேகரம் கூறுகின்றார்.
எல்லாவற்றையும்விட முக்கியமான சான்று விடுதலைப்புலி ஆதரவாளர்கள் நடந்து கொண்ட விதத்தில் இருக்கின்றது. கடந்த வருடம் அவர்கள் காஞ்சி சங்கராச்சாரியரிடமும், இந்துத்துவவாதி அசோக் சிங்காலிடமும், இன்னபிற மதவாதிகளிடமும் ஆதரவு கேட்டார்களே அந்த நடத்தையில் அம்பலப்பட்டு நிற்கிறது அவர்களது சாதியம்.
ஒரு வேளை சாதிப் பிரச்சனையை கணக்கில் எடுத்துக் கொண்டிருந்தால் ஈழப்போராட்டம் வெற்றி பெற்றிருக்குமா என்கின்ற விவாதம் இப்போது பொருளற்றது. இப்போது செய்ய வேண்டியது முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் வீடு திரும்பவும், வீடில்லாதவர்களுக்கு வீட்டுக்கு வகை செய்யவும், மொத்தத்தில் சகல ஜனநாயக உரிமைகளுடன் வாழ்க்கை நடத்துவதற்கும் ஆவன செய்ய வேண்டும் என்று கோருவதும், அதற்காகப் போராடுவதும்தான்.

-அசோகன் முத்துசாமி
ஏகாந்தன்
" கீழவெண்மனியில் கொல்லப்பட்டது தலித்துகள் மட்டும்தான். அவர்கள் தலித்துகள் என்பதற்காக மட்டும் கொல்லப்பட்டார்களா அல்லது கூலி உயர்வு கேட்டுப் போராடியதற்காகக் கொல்லப்பட்டார்களா? தலித்துகள் என்பதற்காக மட்டும்தான் கொல்லப்பட்டார்கள் என்றால் ஏன் அதே பண்ணையார்களிடம் வேலை பார்த்த மற்ற கிராமத்து தலித்துகள் கொல்லப்படவில்லை?".....

நண்பர் அசோகன் முத்துசாமி அவர்களே..உங்கள் கேள்வியில் உங்களின் குரூரமான புத்திதான் வெளிப்படுகிறது. உங்களின் கருத்துப்படி மற்ற கிராமத்து தலித்துகள் யாரும் கொல்லப்படவில்லை, கீழ்வெண்மணி தலித் மக்கள் மட்டுமே கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஆகவே இது சுத்தமான அக்மார்க் கூலி உயர்வு போராட்டம்தான். இதில் சாதிப்பிரச்சினைக்கு இடமில்லை என்று எடுத்துக்கொல்லலாமா?.
அனைத்து தலித் மக்களும் அனைத்து சாதி நிலப்பிரபுக்களால் கொல்லப்பட்டிருந்தால் மட்டுமே இதில் சாதிப்பிரச்சினையும் உள்ளது என்று ஒப்புகொள்வீகள் என்று கருதலாமா?.

அப்படியும் நீங்கள் இதில் சாதிபிரச்சினை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளமாட்டீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். ஏனெனில் முதுகுளத்தூர் கலவரத்தில் உங்களின் அரசியல் நிலைபாடு பற்றிய முன் அனுபவம் எங்களுக்கு உண்டு.

” தலித் அல்லாத சாதிகளைச் சேர்ந்த விவசாயக் கூலிகளை தலித் விவசாயக் கூலிகளிடம் இருந்து பிரிப்பதன் மூலம் தன்னுடைய வர்க்க நலனைப் பாதுகாத்துக் கொள்கின்றது நிலஉடமை வர்க்கம். சாதியை தற்காக்கும் ஒரு கேடயமாகவும், வர்க்க எதிரிகளான உழைக்கும் மக்களைத் துண்டாடும் ஒரு ஆயுதமாகவும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த உடமை வர்க்கத்தினர் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.மேலும், சாதி ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராட வேண்டும் என்கின்றோம்.”

மேலே உள்ள உங்களின் கூற்றுப்படி ஆதிக்கசாதி நில உடமை வர்க்கம் தலித் அல்லாத விவசயக்கூலிகளை தலித் விவசாயக்கூலிகளிடம் இருந்து பிரிக்கிறது என்று ஒப்புக்கொள்கிறீர்கள். அப்படியானால் ஆதிக்கசாதியினால் இங்கு பிரிக்கமுடிந்தது பணத்தினாலா? அல்லது சாதிப்பாசத்தினாலா?. இங்கு நீங்கள் தடுமாற்றம் அடைவதால் தான் ”.. மேலும், சாதி ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராட வேண்டும் என்கின்றோம்.”..என்று பசப்புகிறீர்கள். நண்பரே மேற்குவங்கம் ,கேரளா, மற்றும் திரிபுரா பற்றியும் நான் விவாதிக்கத் தாயாராக உள்ளேன் என்பதையும் உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

சாதிப்பிரச்சினை பற்றி தமிழ்நாட்டில் , இந்தியாவில் முன்னிறுத்தி பேசினால் இல்லையில்லை வர்க்கப்பிரச்சினைதான் என்று இடிமுழக்கம் செய்யும் நீங்கள் ஈழம் என்று வந்தவுடன் சாதிப்பிரச்சினைதான் முதன்மையானது என்று கத்திக் கதறி சாமியாடுவது ஏன்?.
இந்தியாவிற்கு ஒரு அளவு கோல் ஈழத்திற்கு ஒரு அளவுகோல் என்று உங்கள் பொலீட்பீரொவில் வைத்திருக்கிறார்கள் போலும்.
ஆமாம் அதுதான் உண்மை. இறையாண்மை என்றால் தமிழ்நாட்டிற்கு ஒரு அளவுகோல், மேற்குவங்கம், கேரளாவிற்கு ஒரு அளவுகோல்.
நதிநீர்பிரச்சினை என்றால் கேரளாவிற்கு ஒரு அளவுகோல் தமிழ்நாட்டிற்கு ஒரு அளவுகோல் இப்படி அளவுகோல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஏகந்தன்
"..... எல்லாவற்றையும்விட முக்கியமான சான்று விடுதலைப்புலி ஆதரவாளர்கள் நடந்து கொண்ட விதத்தில் இருக்கின்றது. கடந்த வருடம் அவர்கள் காஞ்சி சங்கராச்சாரியரிடமும், இந்துத்துவவாதி அசோக் சிங்காலிடமும், இன்னபிற மதவாதிகளிடமும் ஆதரவு கேட்டார்களே அந்த நடத்தையில் அம்பலப்பட்டு நிற்கிறது ...."

தர்மாஆவேசம்கொண்டு பொங்கிஎழும் நண்பர் முத்துசாமி அவர்களே , கொலைக்குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரியை பாதுகாக்க முனைந்த இந்து ராம்.மேலும் இந்த மாபெரும் குற்றவாளிகளை, மக்கள் விரோதிகளை வீட்டுகாவலில் தான் வைக்கவேண்டும் என்று வக்காலத்து வாங்கிய உங்கள் கட்சியின் பொலீட்பீரோ உறுப்பினர் திரு.சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் மீது வராதது ஏன்?
அதற்கு என்ன காரணம். உங்கள் கட்சி பொலிட்பீரொவின் வர்க்கபாசமா?....அல்லது வர்ண பாசம?...இல்லை சாதிபாசம? .. சற்று விளக்கினால் நன்று.
இந்து ராம் எங்கள் கட்சிக்காரரில்லை என்று மழுப்ப வேண்டாம். அவர் கட்சிக்காரர் இல்லஎன்றால் உங்களின் ஆதரவாளர். அப்படியும் இல்லை என்றால் உங்கள் பொலிட்பீரோவின் “HIS MASTERS VOICE " இத்தகைய நடவடிக்கையினால் உங்கள் கட்சி அம்பலப்பட்டு அம்மணமாகி நிற்கிறது என்பதை உங்கள் கட்சியினரைத் தவிர மற்ற எல்லோரும் நன்கு அறிவார்கள்.
inian
thaazhththappattavar allathu thalih endra sollukkul pugalidam theda vendaam
அசோகன் முத்துசாமி
தலித்துகளின் விடுதலைதான் ஏகாந்தன் அவர்களின் நோக்கம் என்றால் அவர் முதலில் தலித்துகளையும் சாதி இந்துக்களையும் வேறுபடுத்திப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். ஏனெனில், மனு அதர்மம் தலித்துகளை இந்துக்களாகவோ, ஏன் மனிதர்களாகவோ கூட வகைப்படுத்தவில்லை. பொதி சுமக்கும் கழுதைகளாக மட்டுமே பார்க்கின்றது. அல்லது இழிவாக நினைக்கப்படும் அல்லது கருதப்படும் பிராணிகளாக மட்டுமே பார்க்கின்றது.
கீழவென்மணி தலித்துகளை மட்டும் கொல்லும் சாதி இந்துக்கள் போராடும் இதர கிராமத்து தலித்துகளை ஏன் கொல்லவில்லை என்கின்ற கேள்வியின் பொருள் கீழவென்மணி தலித்துகள் அவர்களுடைய சாதியின் காரணமாகவே கொல்லப்படவில்லை என்பதுதான். வர்க்கச் சுரண்டலை எதிர்ப்பவர்கள் அவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தொலைத்துக் கட்டப்படுவார்கள் என்பதை வலியுறுத்தத்தான் ராமச்சந்திரன், வெங்கடாச்சலம், வேலுச்சாமி போன்ற உதாரணங்கள் கூறப்பட்டன. லீலாவதி என்ன சாதி? நிச்சயமாக தலித் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். தலித்துகளின் மீதான ஒடுக்குமுறையின் ஊடகங்களில் ஒன்றாகப் பயன்படுத்தப்படும் தண்ணீருக்காகப் போராடியவர். அனைவருக்கும் பொதுவான தண்ணீருக்கு விலை வைக்காதே என்று போராடியவர். அவரைக் கொன்றவர்கள் என்ன சாதி?
இன்னும் சொல்லப் போனால் வென்மணி கொடுமைக்கு ஒரு அரசியல் கோணமும் இருக்கின்றது. விவசாயக் கூலிகள் கேட்ட கூலி உயர்வைக் கூட கொடுப்பதற்கு நிலப்பிரபுக்கள் தயாராக இருந்தார்களாம்; ஆனால், செங்கொடியை இறக்க வேண்டும் என்று, அதாவது, கம்யூனிஸ்ட் சங்கத்தை விட்டு விலக வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்ததார்கள். இது ஒரு அப்பட்டமான வர்க்க அரசியல் நிர்ப்பந்தம்.
தலித்துகளுக்கு வேலையும் கொடுக்க மாட்டார்கள்; வேலை பார்த்தால் கூலியும் கொடுக்க மாட்டார்கள்; குடிக்கவோ, குளிக்கவோ, துவைக்கவோ தண்ணீரும் கொடுக்க மாட்டார்கள்; சுத்தமற்றவர்கள் என்று பழிக்கவும் செய்வார்கள். வாய்ப்பே கொடுக்காமல் திறமையற்றவர்கள் என்று பழிக்கின்ற அதே சூழ்ச்சி.
காசு கொடுத்தால் சாதி பார்க்காமல் தண்ணீர் கொடுக்க ஆட்கள் இன்று இருக்கின்றார்கள். ஆனால், வேலையும் இல்லாமல், கூலியும் இல்லாமல் வாடும் தலித்துகளை து£ய்மை-தீட்டு கோட்பாடுகளால் ஒடுக்குவார்கள். கூலி இல்லாத தலித் தண்ணீரை எப்படி விலைக்கு வாங்க முடியும்? தலித் விடுதலை பேசுகிறவர்களில் எத்தனை கட்சிகள் அல்லது இயக்கங்கள் தண்ணீருக்கும் விலை வைத்த உலகமயத்திற்கு எதிராகப் போராடியிருக்கின்றன? தண்ணீருக்கு விலையும், சமூக நீதிக்கு உலையும் வைத்துள்ளது உலகமயம். இன்றுள்ள தலித் தலைவர்களில் எவர் உலகமயத்திற்கு எதிராகப் போராடியிருக்கின்றார்? திருமாவளவன், கிருஷ்ணசாமி, தமிழரசன், மாயாவதி, ராம் விலாஸ் பாஸ்வான்.........யார்?
ஆனால், பாருங்கள், யாராவது ஒரு நடிகரோ அல்லது நடிகையோ, ஏதோ சொல்லிவிட்டார் என்று (அவர் என்ன சொன்னார் என்பதே பெரும்பாலானவர்களுக்குத் தெளிவாகத் தெரிவதில்லை; தெரிவிக்கிற வேலையையும் பார்ப்பன மற்றும் பார்ப்பனரல்லாத ஊடகங்களும் செய்வதில்லை) ஆட்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த முடிகின்றது அவர்களில் சிலரால். அதிகாரம் கிடைத்தால் தலித்துகளின் இடடஒதுக்கீடு உள்பட எல்லா இடஒதுக்கீடுகளையும் காலி செய்கின்ற உலகமய, தாராளமய, தனியார்மளக் கொள்கைகளை அமல்படுத்துவார்கள், மாயாவதி போல.
சும்மா மீசையை முறுக்குகிறீர்களே, ஏன் உத்தபுரத்திற்கு வந்த அதைச் செய்யவில்லை என்பதுதான் ஆதவன் சில தலித் தலைவர்களைப் பார்த்து கேட்ட கேள்வி. ஆமாம், ஏகாந்தன் அவர்களே, ஏன் செய்யவில்லை?
விடுதலைப் புலி ஆதரவாளர்களின் சாதியத்தைச் சுட்டிக் காட்டினால் இந்து பத்திரிக்கை ராமின் பிரச்சனையை ஏகாந்தன் எழுப்புகின்றார். கேட்ட கேள்விக்கு பதிலையே காணோம். அப்படியானால், இந்து ராமும் இவர்களும் ஒன்று என்றாகின்றது. இந்து ராம் எந்தக் கட்சியில் இருந்தாலும் சரி, எந்தக் கட்சியிலுமே இல்லாதிருந்தாலும் சரி, அவரது செய்கை ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. அதுபோலத்தான் விடுதலைப் புலி ஆதரவாளர்களின் பார்ப்பன எதிர்ப்பு போலி நாடகமும்.
இதுவரை ஏகாந்தன் என்னுடைய பின்னு£ட்டங்களுக்கு ஐந்து முறை எதிர்வினை ஆற்றியுள்ளார். ஆனால், மேற்குவங்கம், கேரளம் பற்றி நான் விவாதிக்கத் தயாராக இருக்கின்றேன் என்று சொல்கிறாரே தவிர, செய்ய மாட்டேன் என்கிறார். ஏன், என்பது புரியவில்லை.

-அசோகன் முத்துசாமி
செல்வராஜ் ஜெகதீசன்
இத்தனைப் பணிவான
உங்கள் எதிர்வினையால்
இயல்பாக நீளும்
இந்தக் கைகளைப் பற்றி
இரண்டொரு முறை
யோசிக்கச் செய்கிறீர்கள்.
srinivasan
ஈழப்போராட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, அ.மார்க்ஸ், சோபா சக்தி, ஆதவன் கும்பலை எக்கச்சக்க‌ மகிழ்ச்சியில் தள்ளியிருக்கிற‌து. அதை கட்டுரைகள், நேர்காணல்களை வெளியிட்டு கொண்டாடி மகிழ்கின்றனர். உண்மையில் ஆதவன் தீட்சண்யாவுக்கு ஈழ மக்களின்மீது ஒரு அக்கறையும் கிடையாது. தமிழ்நாட்டில் எத்தனையோ ஈழ மக்கள் அகதிகளாக இருக்கிறார்கள். அவர்களிடம் பேட்டி எடுத்திருக்கலாமல்லவா? சரி, சுசீந்திரன், சுகன், கோவை நந்தன் இவனுங்க எல்லாம் எல்லாம் யார், இதுநாள் வரை எங்கிருந்தான்க? ஊர்பேர் தெரியாதவனெல்லாம் புது கதாநாயகன்களாக‌ அவதாரமெடுப்பது எப்படி? துட்டு மாமே துட்டு! இவனுங்ககிட்ட‌ துட்டு இருக்கிறது, வெளிநாடு கூட்டிப்போவதற்கு துட்டு இருக்கிறது... துட்டு காரணமாகத்தான் டகில்பார்ட்டி டக்ளஸ் தேவனாந்தாவும் ஆதவனுக்கு புனிதராகத் தெரிகிறான்.. புலி எதிர்ப்பு பலருக்கு முதலீடில்லா லாபமாக இருப்பது உண்மைதான்பா!!
கந்தசாமி
யோக்கியரு அசோகருக்கு....

கந்த கந்த கந்த கந்த கந்தசாமியோட‌ வணக்கமுங்க... விடுதலைப் புலி ஆதரவாளர்களின் பார்ப்பன எதிர்ப்பு போலி நாடகத்தைப் பற்றி பேசறீங்க... ஆனா விடுதலைப் புலி எதிர்ப்பாள‌ர்களின் தலித் அரசியல் போலி நாடகத்தைப் பற்றி எத்த்னை தடவை கேட்டாலும் பேசமாட்டீங்கறீங்க... எங்களோட கேள்விகளுக்கெல்லாம் பதில் இல்லை.. ஆனா மேற்கு வங்கம், கேரளா பற்றி நாங்க பேசாதது குறித்து ரொம்ப கவலைப்படறீங்க... உங்க ஆசையைக் கெடுப்பானேன். அதையும் பார்த்துடுவோம்...

கேரளா இன்னைக்கு இல்லைங்க சுதந்திரம் வாங்கினப்பவே, 80 சதவீதம் படிப்பறிவு இருந்த மாநிலம்ங்க... அங்க ஒப்பீட்டளவிலே சாதிப் பிரச்சினை குறைவாத்தான் இருக்கும்.. ஆனால் இல்லைவே இல்லைன்னு சொல்லாதீங்க.. இன்னைக்கும் நம்பூதிரிகளோட சமூக ஆதிக்கம் குறையல. எந்த கோயிலேயும் தலித் அர்ச்சகனாகலை.. ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் போகமுடியாது. மாந்திரீக பித்தலாட்டங்கள் குறையலை. ஏன் காம்ரேட்களே கோயிலுக்குப் போறாங்க.. எல்லா சடங்குகளோடவும்தான் கல்யாணம் பண்னிக்கிறாங்க... இன்னொன்னு எங்க அடங்க மறுக்கிறாங்களோ அங்கதான் சாதிப்பிரச்சினை சண்டையா வரும். தமிழ்நாட்டுலே சுயமரியாதை உணர்வை பெரியார் ஊட்டினார். தலித்துகள் போராடுறாங்க... கேரளாவில் அப்படி எதுவும் இல்லை... நின்னு போராடுற அளவுக்கு கேரளாவுலே யாரும் இல்லை.. அங்க வேலைவாய்ப்பே இல்லாம எல்லாம் வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளூக்கும் போய் டீக்கடை வச்சி பொழக்கிறாங்க...

மேற்கு வங்கத்திலே நீங்க நிலம் பிரிச்சிக் கொடுத்தது எல்லாம் சிபிஎம் தொண்டர்களுக்குத்தான். இன்னைக்கு வரைக்கும் நிலம், வேலை, அடிப்படை வசதிகள் இல்லாமத்தான் அதுக்காக பழங்குடி மக்கள் போராடுறாங்க.. தாழ்த்தப்பட்டவர்களிலும் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கிற பழங்குடி மக்கள்மீது சிபிஎம் குண்டர்கள் தாக்குதல் நடத்துவதாக தெகல்கா, அவுட்லுக், உங்களோட் ஈழ எதிர்ப்பு காம்ரேட் அ.மார்க்ஸ் எல்லாம் சொல்றாங்க... நீங்க என்னடான்னா மேற்கு வங்கத்தைப் பாருங்கன்னு சொல்றீங்க.. முதல்ல சிபிஎம் இணையதளத்தையும் கட்சிப் பத்திரிக்கையும் பார்க்கிற நிப்பாட்டிட்டு மத்ததையும் கொஞ்சம் பாருங்க.. இந்த ரெண்டு வருஷத்துலே வந்த தெகல்ஹா மொத்தத்தையும் பார்த்தாலே மேற்கு வங்க காம்ரேட்களின் லட்சணம் தெரியும்.. பழங்குடி மக்களை இவ்வளவு கொடுமைப்படுத்துற உங்களூக்கு தலித் அரசியல் பேச எந்த தகுதியும் கிடையாது...
அசோகன் முத்துசாமி
கந்தசாமி அவர்கள் விடுதலைப்புலி ஆதரவாளர்களின் ஆதிக்க சாதி குணத்தைப் பற்றி, பார்ப்பன எதிர்ப்பு நாடகம் பற்றி தன்னுடைய எதிர்வினையில் பதில் சொல்லவே இல்லை. ஏன், என்பதை அவர்தான் விளக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் மத்தியில் சாதியம் இருந்தது, இன்று அது மட்டுப்பட்டு இருக்கின்றது. ஆனால், அதற்குக் காரணம் தமிழ்தேசியவாதிகள் இல்லை என்றும், இடதுசாரி இயக்கங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து நடத்திய போராட்டம்தான் காரணம் எனது எதிர்வினையில் கூறப்பட்டிருப்பதற்கும் அவர் பதில் சொல்லவில்லை. ஏன்?
விடுதலைப்புலி எதிர்ப்பாளர்களின் தலித் அரசியல் நாடகமா? ஆதரவாளர்கள்தான் தலித் அரசியல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் என் வாதம். உத்தரபுரத்திற்கு வந்து மீசை முறுக்காதவர்கள், அதற்கு அருகிலுள்ள மதுரைக்கு வந்து மீசை முறுக்கின்றார்கள். எதற்கு? தலித்துகளுக்காக அல்ல. விடுதலைப் புலிகளுக்காக!
பார்ப்பனர்களுக்குச் சொந்தமான ஆனந்தவிகடனும், தினமணியும், செட்டியாருக்குச் சொந்தமான குமுதமும், இன்னும் இது போன்ற பிற பத்திரிக்கைகளும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இடைவிடாமல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன. அவற்றில் நீங்கள் சாதியைப் பார்க்கின்றீர்களா அல்லது விடுதலைப் புலி ஆதுரவு நிலைப்பாட்டை பார்க்கின்றீர்களா? விடுதலைப் புலி எதிர்ப்பாளர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் என்கின்ற வாதம் ஆதாரம் தேவையில்லாத இந்த உண்மையிலேயே அடிபட்டுப் போகின்றது.
கேரளாவைப் பற்றிக் குறிப்பிடும்போது, சுதந்திரம் வாங்கினப்பவே 80% மக்கள் படிப்பறிவு பெற்றவர்கள் என்று குறிப்பிடுகின்றார். அப்புறம் அவரே, அங்கு நம்பூதிரிகளின் ஆதிக்கம் இன்னும் குறையவில்லை என்கிறார். இதன் பொருள், படிப்பறிவிற்கும் சாதி ஒழிப்பிற்கும் சம்பந்தமில்லை என்பதாகும்.
#கல்வியறிவு சாதிய சிந்தனையை ஒழிக்கவில்லை என்பதுதான் பல்வேறு ஆய்வாளர்களின் கணிப்பு. இல்லை என்றால், நாம் இன்றும் கல்வி நிலையங்களிலும் பணியிடங்களிலும் நிலவும் சாதியம் பற்றி பேச வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது.
#எங்க அடங்க மறுக்கிறாங்களோ அங்கதான் சாதிப் பிரச்சனை சண்டையாகும் என்கிறார். உண்மைதான். மேற்கு வங்கத்திலோ, கேரளத்திலோ தலித்துகள் அடங்கிப் போவதால்தான் அங்கு சாதிச் சண்டைகளே இல்லை என்று சொல்ல வருகின்றார் என்று கருதுகின்றேன். முதலில், கேரளத்தில் படிப்பறிவு அதிகம் இருப்பதால்தான் அங்கு சாதிச் சண்டைகளே இல்லை என்று பொருள்படும்படி வாதிடுகின்றார். அதைச் சரியென்று வைத்துக் கொண்டால் 'எல்லோருக்கும் கல்வி எல்லோருக்கும் வேலை' என்பதல்லவா கந்தசாமியின் முழக்கமாக இருந்திருக்க வேண்டும்? அந்த முழக்கம் உண்மையானால் யாரும் யாரையும் ஒடுக்குகின்ற கேள்வியே எழாதே?
மேலும், பொதுத் தொகுதிகளில் தலித்துகள் போட்டியிட்டு வெற்றி பெறும் நிலை அடங்கிப் போகும் நிலையா? தலித்துகள் சாதி இந்துக்களுக்காகக் கடுமையாக உழைத்துவிட்டு, அதற்கான கூலியையும் பிச்சை போல் பெற வேண்டிய நிலையை போக்கி, சொந்தக் காலில் நிற்கின்ற, எந்த பேமானியின் தயவும் தேவைப்படாத நிலையை உருவாக்கிய நிலச்சீர்திருத்தத்தின் பலன்களை அனுபவிப்பது அடங்கிப் போகும் நிலையா? அல்லது ஆதிக்க சாதியினர் தலித்துகளை அடக்கி ஒடுக்க முடியாத நிலையை அங்குள்ள அரசாங்கம் உருவாக்கியிருப்பது அடங்கிப் போகும் நிலையா?
கடந்த சில மாதங்களாக தலித்துகள் மீதான வன்முறை என்கின்ற செய்திகள் எதுவும் ஊடகங்களில் வரவில்லை. தலித் தலைவர்கள் பலர் இருக்கின்றனர். விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பலர் இன்னும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களும் தலித் பிரச்சனை பற்றி எதுவும் பேசவில்லை. இதனால் தமிழகத்தில் தலித்துகள் அடங்கிப் போய்விட்டார்கள் என்று பொருள் கொள்ளலாமா? அல்லது தமிழகத்தில் தலித்துகள் நல்ல நிலையில் இருக்கின்றார்கள் என்றுதான் கொள்ளலாமா?
#மேற்கு வங்கத்தில் நீங்க நிலம் பிரிச்சுக் கொடுத்ததெல்லாம் சிபிஎம் தொண்டர்களுக்குத்தான் என்கிறார். ஒரு வாதத்திற்காக, அதை உண்மை என்றே வைத்துக் கொள்வோம். ஏற்கனவே குறிப்பிட்டபடி, இடது முன்னணி அரசாங்கத்தின் நிலச்சீர்திருத்தத்ததால் பயனடைந்திருப்பவர்களில் பெரும்பகுதியினர் தலித்துகள். தலித்துகளுக்கு நிலம் கொடுத்தது தவறு என்கிறாரா, கந்தசாமி?
#டெகல்காவும், அவுட்லுக்கும் ஏதோ பழங்குடியின மக்களுக்காகவே பிறப்பெடுத்துள்ள பத்திரிக்கைகள் என்று கந்தசாமி நினைத்தால் அது அவரது சொந்தக் கருத்து. இந்துத்துவ பாஜகவும் கூட இதே போன்ற குற்றச்சாட்டை சிபிஎம் மீது வைக்கின்றது. திரிணாமுர் காங்கிரஸ் கூறுகின்றது. அவை எல்லாம் ஈழ ஆதரவு கட்சிகள் என்று கந்தசாமி நினைக்கிறார் போல.
ஆனால், முதலாளித்துவம் ஒரு குறிப்பிட்ட நாட்டில் தன்னுடைய முதன்மையான எதிரியாக யாரைக் கருதுகின்றதோ அவர்கள் மீதுதான் தன்னுடைய தாக்குதலைக் குவி மையப்படுத்தும். அதற்காக அது மக்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசவும் செய்யும். இதெல்லாம் விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். இங்கே இடம் போதாது என்று கருகின்றேன்.
மேலும், அ.மார்க்ஸ் மட்டும் விடுதலைப் புலி எதிர்ப்பாளரல்ல. அவர் எங்களுடைய ஆளும் அல்ல. அவருக்கும் எங்களுக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால், மக்கள் நலன் என்பதுதான் ஒரே நோக்கம் என்றால், அப்படி நினைப்பவர்கள் அனைவருமே எங்களுடைய தோழர்கள்தான். கந்தசாமி உள்பட அனைவருக்குமே இது பொருந்தும். நாம் இப்போது எது சரியான பாதை என்றுதான் விவாதித்துக் கொண்டிருக்கின்றோம் என்று நான் கருதுகின்றேன்.

-அசோகன் முத்துசாமி
துரை இளமுருகு
அசோகன் அவர்களே, அதெல்லாம் சரி தேர்தல் எண்ரு வந்தவுடன் அம்ம காலில் அல்லது அய்யா காலில்விழுவதியே வழ்க்கமாக வைத்திருக்கிறீர்களே அது எந்த் மக்களிக் காபற்றுவதற்கு எண்ரு விளக்குவீர்களா? வழ்க்கம் போல் காங்கிறசு எதிர்ப்பு ஏன்ரு கதைக்க வேண்டாம்
ஏகாந்தன்
அன்புள்ள நண்பர் அசோகன்முத்துசாமி அவர்களே “…….கீழவென்மணி தலித்துகளை மட்டும் கொல்லும் சாதி இந்துக்கள் போராடும் இதர கிராமத்து தலித்துகளை ஏன் கொல்லவில்லை என்கின்ற கேள்வியின் பொருள் கீழவென்மணி தலித்துகள் அவர்களுடைய சாதியின் காரணமாகவே கொல்லப்படவில்லை என்பதுதான்.”..இதை நீங்கள் ஒப்புக்கொண்டதற்கு மிக்க நன்றி.அப்படியானால் உங்கள் தோழர் திரு.முகிலன் அவர்கள், ”..இது தங்கள் பார்வை. வெண்மணியை வர்க்க போராட்டமாக மட்டும் பார்த்தது என எதை வைத்து சொல்கிறீர்கள்? பறையன் கட்சி என கீழ் தஞ்சையில் அழைக்கப்பட்டது வர்க்கமாக மட்டும் பர்ர்த்ததலா?.. என்று கேட்டார். அவருக்கு உங்கள்கட்சியின் நிலைபாட்டினை உணர்த்தியமைக்கு நன்றி.
…” அதிகாரம் கிடைத்தால் தலித்துகளின் இடடஒதுக்கீடு உள்பட எல்லா இடஒதுக்கீடுகளையும் காலி செய்கின்ற உலகமய, தாராளமய, தனியார்மளக் கொள்கைகளை அமல்படுத்துவார்கள், மாயாவதி போல.”..

அய்யா அசோகன் முத்துசாமி அவர்களே தனியார் மய,தாராளமய,உலகமயக் கொள்கைகளை மிக ஆவேசத்தோடும்,ஆக்ரோசத்தோடும் எதிர்த்து போராடவேண்டும் என்று உங்கள் பொலிட்பீரோ அறைகூவல் விட்டது மாயாவதி,கருனாநிதி,போன்ற மார்க்ஸிஸ்ட் அல்லாத முதலமைச்சர்களுக்கு மட்டும் தானா?..மாயாவதி அரசாவது ரிலையன்ஸ் பிரக்ஷ் போன்ற சங்கிலித்தொடர் சூப்பர் மார்க்கெட்களை திறக்க அனுமதிக்க மறுத்துவிட்டது.ஆனால் மேற்குவங்க மார்க்ஸிஸ்ட் புத்ததேவ் அரசு அந்நிய நாட்டு வால்மார்ட்முதல் உள்நாட்டு அம்பானியின் ரிலையன்ஸ் பிரக்ஷ்,மோர் போன்ற அனைத்து சங்கிலித்தொடர் சூப்பர் மார்க்கெட்களை திறக்க அனுமதி அளித்தும், டாடா, சலீம் குழுமம் போன்ற உள்நாட்டு,வெளிநாட்டு ஏகபோக முதலாளிகளுக்கு ஏழை எளியமக்களின் நிலஙகளை பறித்துக்கொடுக்க முயன்றும் அந்நிய மற்றும் உள்நாட்டு ஏகபோகங்களுக்கு எடுபிடி வேலை பார்த்துக்கொண்டிருக்கிறது.
இதுதான் “நான் அடிக்கிறமாதிரி அடிக்கிறேன்,நீ அழுவதுபோல் அழு “என்பது.இதுபோன்றதுதான் உங்களின் தீண்டாமை ஒழிப்பு மற்றும் சாதிஒழிப்பு போராட்டமும் என்பது. இதனை அரசியல் அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள். இப்படித்தான் நீங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் அப்பாவிபொதுமக்களின் கண் துடைப்பிற்காக மட்டுமே என்பதை நாங்கள் அறிவோம்.

..... சாதிப்பிரச்சினை பற்றி தமிழ்நாட்டில் , இந்தியாவில் முன்னிறுத்தி பேசினால் இல்லையில்லை வர்க்கப்பிரச்சினைதான் என்று இடிமுழக்கம் செய்யும் நீங்கள் ஈழம் என்று வந்தவுடன் சாதிப்பிரச்சினைதான் முதன்மையானது என்று கத்திக் கதறி சாமியாடுவது ஏன்?. இந்தியாவிற்கு ஒரு அளவு கோல் ஈழத்திற்கு ஒரு அளவுகோல் என்று உங்கள் பொலீட்பீரொவில் வைத்திருக்கிறார்கள் போலும். ஆமாம் அதுதான் உண்மை. இறையாண்மை என்றால் தமிழ்நாட்டிற்கு ஒரு அளவுகோல், மேற்குவங்கம், கேரளாவிற்கு ஒரு அளவுகோல். நதிநீர்பிரச்சினை என்றால் கேரளாவிற்கு ஒரு அளவுகோல் தமிழ்நாட்டிற்கு ஒரு அளவுகோல் இப்படி அளவுகோல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.....நண்பர் அசோகன் முத்துசாமி அவர்களே நான் கேட்ட மேற்கண்ட கேள்விக்கு நீங்கள் இதுவரை பதில் சொல்லவில்லை.ஆனால் மீண்டும் மீண்டும் விடுதலைபுலிஆதரவாளர்களின் ஆதிக்கசாதி குணம் என்றும், பார்ப்பன எதிர்ப்பு நாடகம் என்றும் பசப்புகிறீர்களே தவிர என்னுடைய கேள்விக்கு பதில் அளிக்க மறுக்கிறீர்கள். உண்மையிலேயே என் கேள்வி உங்களுக்கு புரியவில்லையா?அல்லது புரியாதது மாதிரி நடிக்கிறீர்களா? ஆனால் ஒன்றும் மட்டும் தெரிகிறது உங்களுக்கு செலெக்டிவ் அம்னீசியா உள்ளது என்பது.

”......இலங்கை தலித்துகள் இன்று பெற்றிருக்கும் உரிமைகள் அனைத்துமே இடதுசாரி இயக்கங்களின், தலித் இயக்கங்களின் போராட்டங்களால் கிடைத்தவையே; தமிழ்த் தேசிய இயக்கங்களால் கிடைத்தவை அல்ல. (பார்க்க: இலங்கையில் சாதியமும், அதற்கெதிரான போராட்டங்களும். வெகுஜனன், இராவணா). 'சிலர் வேண்டுமென்றும், சிலர் அறியாமையாலும் சாதியம் ஒழிந்துவிட்டதென்றும் தமிழ்த் தேசியமே அதை முறியடித்தது என்றும் பேசுகின்றனர். இரண்டுமே பொய்யானவை. சாதியம் இன்னும் ஒழிய வில்லை. அதற்கான சான்றுகள் வெளிவெளியாகவே உள்ளன. ஆயினும் சாதிய ஒடுக்குமுறைக்கு சாவு மணி அடிக்கப்பட்டாயிற்று. தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். அந்த வெற்றிக்கு தமிழ்த் தேசியம் எந்த வகையிலும் பங்களிக்கவில்லை. அதை இயலுமாக்கியவர்கள் தாழ்த்தப்பட்ட வெகுசனங்களும் அவர்களோடு இணைந்து நின்று போராடிய நேர்மையான இடதுசாரி, சனநாயக, முற்போக்குச் சக்திகளுமேயாவர். அதை இயலுமாக்கியது மார்க்சிய லெனினியவாதிகளின் வழிநடத்தலின் கீழ் அவர்கள் முன்னெடுத்த வெகுசனப் போராட்ட பாதையே' என்று மேற்குறிப்பிட்ட நு£லுக்கான முன்னுரையில் சி.சிவசேகரம் கூறுகின்றார்.”..
நண்பர் அசோகன் முத்துசாமி அவர்களே இலங்கயில் சாதிய ஒடுக்குமுறைக்கு சாவு மணி அடிக்கப்பட்டாயிற்று. தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். அந்த வெற்றிக்கு தமிழ்த் தேசியம் எந்த வகையிலும் பங்களிக்கவில்லை.என்பது உங்களது வாதம்.சரி அப்படியானால் சாதிய ஒடுக்குமுறைக்கு சாவுமணி அடிக்க ஈழ (மன்னிக்கவும்,ஈழம் என்று சொல்வதையே உங்கள் உமாநாத்களும், போலிட்பீரோவும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்) ஆகவே இலங்கை இடதுசாரிகள் மட்டும்தான் காரணம் என்கிறீர்கள்.சரி ஒரு வாததிற்காக ஒப்புக்கொள்கிறேன். இப்போது என் கேள்வி என்னவென்றால் ஈழ(இலங்கை) இடதுசாரிகளல் சாதீய ஒடுக்குமுறைக்கு சாவுமணி அடிக்கமுடிந்தது என்றால் இந்திய இடதுசரிகளால் ஏன் இயலவில்லை.இந்திய இடதுசாரிகளுக்கும், ஈழ(இலங்கை) இடதுசாரிகளுக்கும் சாதியம் பற்றிய கோட்பாடுகளில் வேறுபாடு உள்ளதா? அல்லது ஈழ(இலங்கை) இடதுசாரிகளின் தலைமை பார்ப்பனர் அல்லாதவர்களாக இருப்பதும், இந்திய இடதுசாரிகளின் தலைமை பார்ப்பனார்களாக இருப்பதும் காரணமா?.கொஞ்சம் விளக்கம் தரவும்.
”..இதுவரை ஏகாந்தன் என்னுடைய பின்னு£ட்டங்களுக்கு ஐந்து முறை எதிர்வினை ஆற்றியுள்ளார். ஆனால், மேற்குவங்கம், கேரளம் பற்றி நான் விவாதிக்கத் தயாராக இருக்கின்றேன் என்று சொல்கிறாரே தவிர, செய்ய மாட்டேன் என்கிறார். ஏன், என்பது புரியவில்லை.” -

அசோகன் முத்துசாமி அவர்களே நான் மேற்குவங்கம், கேரளா பற்றி விவாதிக்கவரமாட்டேன் என்று
நிரம்ப விசனப்படுகிறீகள் போல் தெரிகிறது. நண்பரே மேற்குவங்கத்தைப் பற்றி, சிங்கூர்,நந்திகிராமம், லால்கர்,நான் முதலில் பிராம்னன் அதன் பிறகுதான் மார்க்ஸிஸ்ட் என்று கூறிய ஆதிக்கசாதி மார்க்ஸிஸ்ட் அமைசரை பற்றி, பிறகு கேராளாவில் பேட்டை ரவுடிகள் போல் சண்டையிட்டுக்கொள்ளும் திரு பிணராய் விஜயன், திரு .அச்சுதானந்தன் பற்றி, லாவ்லின் ஊழல் பற்றி,லாட்டரிஅதிபரிடம் ஒருகோடி பணம் வாங்கி திருப்பிக்கொடுத்தது பற்றி,தமிழ் தொழிலாளர்களை கேரளாவில் இருந்து வெளியேற்றுங்கள் என்று சி.ஜ.டி.யூ கூறியது பற்றி,
பால்சாகாரிய பற்றி,நெய்யாற்றில் குமரிமாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்துவிட மறுப்பதுபற்றி, இன்னும் ஏராளமாக விவாதிக்கவேண்டியுள்ளது. ஆனால் நண்பரே இவை பற்றியெல்லாம் விவாதிக்க இது தருணம் இல்லை.

இது முரண்பாட்டின் மொத்த உருவமான ஆஆஆதவன் தீட்சண்யா அவர்கள், எல்லோரையும் சகட்டுமேனியாக(தன் கட்சிமற்றும் சார்பு இயக்கத்தவரை தவிர)கூரை மீதேறி,வானமேறி,வைகுந்தம் ஏறி ஓங்கி,உரத்து விமர்சிக்க தனக்கு மட்டும் தான் தகுதி உள்ளது என்று சிங்கம் போல் கர்ஜிப்பார்.சாதி பித்தர்களையும்,சாதிவெறியர்களையும் சிங்கம் போல் கர்ஜித்து வேட்டையாடுவார்.ஆனால் அவர் மீதான அவரால் பதில் சொல்லமுடியாத விமர்சனங்கள் வந்தால் அவர் உடனே எந்த சாதியத்தை சாடினாரோ அந்த சாதிய வலைக்குள் புகுந்துகொண்டு எலியைப்போல் (வளைக்குள்)கீச் கீச் என்று கீச்சிடுகின்றார். ஒரு சிங்கம் எலியான கதையைத் தான் கீற்று விமர்சனமக வெளியிட்டிருக்கிறது.



”.. தமிழ்நதியாகட்டும், லீனாவாகட்டும் பிராச்சினை மட்டும்தானே பேசவேண்டும்.'ஆதவனையும் அவன்போல ஆட்களையும் செருப்பால் அடிக்கனும்' என்கிற பின்னூட்டத்தை அணுமதிப்பது எப்படிச்சரி ரமேஷ். நாங்கள் யாரிடம் இதைச்சொல்ல. எனக்கு ஒரு சின்னக்கருத்து இருக்கிறது. மிகநீளமாக அளந்து அளந்து எழுதிய எழுத்தின் வலிமைக்கும் நேர்மைக்கும் 'பிசிஆரில் புக் பண்ணிவிடவேண்டாம்' என்கிற வார்த்தை சரியா என்பதை இன்னொரு முறை மறுவாசிப்புச் செய்து நீங்களே முடிவு செய்யுங்கள்”.. கீற்றில் வ்ந்த புரட்சியின் பின்னூட்டத்தை சரியாகப் படிக்காமல் இதற்கு பின்னூட்டம் எழுதிய திரு,காமராஜ் அவர்களோ அல்லது திரு அசோகன் முத்துசாமி அவர்களோ, அவர்கள் அமைப்பைச் சேர்ந்த திரு பாலு
என்பவர் எழுதிய ’ ஆதவனை செருப்பால அடிக்கிறதுன்னா ரமேஷை பிஞ்ச் செருப்பால நாங்க அடிப்போம்.’ என்ற பின்னூட்டம் மிகவும் நயத்தக்க நாகரீகம் என்று கருதுகிறார்கள்.போலும். இந்த பாலு D.D.C.F.I அதாங்க இந்திய பிஞ்ச செருப்பால் அடிப்பவர் முன்னனி(DEMOCRADIC DAMAGE CHAPPAL FRONT OF INDIA) என்ற துணை அமைப்பை சேர்ந்தவர் போலும். இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தான் பால்சகாரியா மற்றும் மக்கள்தொலைக்காட்சியையும் தாக்கியவர்கள்போலும்.
இவற்றிற்கெல்லாம் நண்பர் அசோகன்முத்துசாமி பதில் அளிப்பார் என்று நம்புகிறேன்.
ஐ.மனோகரன்
போர் நடந்தபோது அனைவரின் விருப்பமும் போர் ஐ நிறுத்த வேண்டும் என்பதே.
ஆனால் அந்த நேரத்தில் பிரபாகரனை சொகுசு வாழ்க்கை வாழ்வதாக கட்டுவதன் மூலம் அவர்கள் சொல்ல வருவது என்ன?
அதன் மூலம் அவர்கள் அடைய விரும்பியது என்ன?.

மேற்கத்திய ஊடகங்களும் சொல்லி வைத்தாற்போல் அதை மட்டும் பெரிதாக காட்டுகின்றன.
இதுதான் நாகரீக மனிதர்களின் செயல் பாடா?
அதுவரைக்கும் சாகும் மனிதர்களை பற்றி அக்கறை இல்லை.

மக்கள் துன்புறும்போது ஒரு கலைஞன் ஒரு எழுத்தாளன் எந்த பக்கம் இருக்கிறான் என்பதில் இருந்தே அவரது யோக்கியதை
தெரிந்து கொள்ளலாம்.
அந்த நேரத்தில் ஜாதி யை வைத்து அரசியல் அரசியல் பண்ணும் அரசியல் வாதிகளையும், மிஞ்சி விட்டனர் இவர்கள்.
ஐ.மனோகரன்
தமிழ்நாட்டில் CPM என்று ஒரு கட்சி இருக்கிறது.
அது எதற்கு இருக்கிறது என்றே தெரியவில்லை.
சீனா வில் மழை வந்தால் இங்கு குடை பிடிபோருக்கு 18 கிலோ மீட்டர் தொலைவில் நடக்கும் இனபடுகொலை
தெரியாததுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
ஒரு செய்தியை தாங்கி கொள்ள முடியாமல் மக்கள் தொலைகாட்சியை தாக்கி வன்முறையில் ஈடுபட்டுவிட்டு, ஈழ தமிழர்களை ஒன்றுபட்ட இலங்கையில் வாழ அறிவுருதுவதுதன்
அவர்களின் உன்னதமான அரசியல் பார்வை.
moses prabhu
maarxistugalai vimarsikkalam aanal avathuru seiyya evanukkum thaguthi illai...nermaiyaaga paesungal keetru thozhargalae....
imam Jaffer
அ.மார்க்ஸ் தயாரித்து வெளியான 'கருத்து சுதந்திரம்' படத்தில் லீனா நன்றாகவே நடித்து சிறந்த நடிகை அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டார். அ.மார்க்ஸ் சிறந்த கதாசிரியராகவும், இயக்குனராகவும் புரமோஷன் வாங்கிக்கொண்டார். பாவம், ஆதவன்தான் காமெடியனாகி விட்டார்.
ஐ.மனோகரன்
ஒன்று பிரபாரகரனை சொகுசு வாழ்க்கை வாழ்வதாக காட்டுகின்றனர் அல்லது முல்லை பெரியார் அணை உடைந்து வெள்ளம் ஊருக்குள் வந்து மக்கள் இறப்பது போல் படமேடுகின்றனர். நாளைக்கே மார்க்சிஸ்ட்களுக்கு அரசியல் இல்லை என்றாலும் கைவசம் நல்ல தொழில் உள்ளது.

தற்பொழுது என்ன படம் எடுத்து கொண்டிருகின்றார்கள் என்று தெரியவில்லை.

வருங்காலத்தில் சினிமா துறையினருக்கு நிகராக பல புதிய படங்களை மக்களுகாக காண்பித்து மார்க்சிஸ்ட்களின் மக்கள் சேவையை பெருக்கி கொள்வார்கள் என்று கருதுகிறேன்.

வாழ்த்துகள்.
கேளன்
வணக்கம். கீற்று இணையம் மிக சரியான திசையில் செல்கிறது . வாழ்த்துக்கள் .

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.