இவர்கள் ஏன் இப்படி ஒரு பெண்ணைத் தாக்குகிறார்கள் என்றுதான் நானும் அந்த லீனாவின் கவிதைகளைப் படித்துத் தொலைத்தேன். உலகின் சகல பிரச்சனைகளுக்குமே ஆண்குறிதான் காரணம் என்பது போலவும் உபரி மதிப்பு, உழைப்பு, புரட்சி எல்லாமே ஒரு புணர்தலில் அடங்கியிருக்கிற்து என்பது போலவும் லீனாவின் கவிதை இருந்தது. இதைப் படிக்கிற மாத்திரத்தில் வினவு தோழர்களின் எதிர்வினையை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்குக் கூட கோபம் வரும். அப்படியான மூன்றாம் தரமான கவிதை. ஒரு மார்க்சிஸ்ட் இக்கவிதையை வாசிக்கும்போது தார்மீக ரீதியில் கோபமடைவதுதான் அவரது அரசியல் நேர்மையாக இருக்க முடியும். வினவு கட்டுரையை அப்படித்தான் என்னால் பார்க்க முடிகிறது.

லீனா மணிமேகலைலீனாவின் கவிதைக்கு மறுப்பாக கடினமான வார்த்தைகளுடன் எழுதப்பட்ட வினவு கட்டுரை எழுப்பிய கேள்வி இதுதான்... புரட்சிகரத் தோழனும், மார்க்சும் எல்லாமும் ஆண் குறிதான் என்றால் அக்கவிதையில் ஏன் சேரன் பெயரோ, பாரதிராஜா பெயரோ, சி.ஜெரால்ட் பெயரோ இல்லை என்று கேட்டார்கள். லீனாவின் கவிதையில் அரசியல் இல்லை மிக மோசமான ஆபாசமான கவிதை என்பதை அம்பலப்படுத்திய கேள்வியே இதுதான் என்னும் போது இந்தக் கேள்வியை எப்படி நாம் உதாசீனப்படுத்தி விட முடியும். வினவின் கட்டுரைக்கு பதில் எழுதிய லீனாவும் சரி அவரது ஆண் நண்பர்களும் சரி வினவின் இக்கேள்வியை எதிர்கொள்ளவே இல்லை. மாறாக அவதூறு என்றும் தனிப்பட்ட தாக்குதல் என்றும் கூறினார்கள். இருக்கலாம் தனிப்பட்ட தாக்குதல் இருக்கலாம். ஆனால் அதையே கம்யூனிஸ்டுகள் மீது லீனா செய்யக் கூடாதில்லையா? கவிதைக்குக் கவிதை லெனின், மார்க்ஸ், புரட்சி என்றெல்லாம் எழுதும் லீனா இந்த லிஸ்டில் திராவிடத் தலைவர்களின் பெயர்களையோ, தமிழ்த் தேசியவாதிகளின் பெயர்களையோ சேர்த்திருந்தால் அவர்கள் இவரை விட்டு விடுவார்களா? இவர்களை எழுதினால் எதிர்ப்பு இருக்காது அரசின் ஆதரவையோ கம்யூனிச எதிர்ப்பாளர்களின் ஆதரவையோ பெறலாம், எதிர்வினை வந்தால் கருத்துச் சுதந்திரம் என கூட்டம் போடலாம் என்று தெரிந்து வைத்துக் கொண்டு இப்படி கவிதை எழுதுவது என்ன மாதிரி பெண்ணியம் என்று தெரியவில்லை.

பெண் எழுத்தில் யோனி, முலை போன்ற சொற்களை பிரயோகிப்பது தவறல்ல. குடும்பம், சினிமா, சீரியல் என பெண்கள் மீது இவைகள் நிகழ்த்தும் ஆபாச வக்கிரத் தாக்குதல்களை எல்லாம் விட, இம்மாதிரியான கவிதை வரிகள் ஒன்றும் பெண் வாழ்வை பண்பாட்டு ரீதியில் சிதைத்து விடுவதில்லை. பாலியல் சார்ந்த தனது இச்சைகளை கவிதையாகவோ, கட்டுரையாகவோ எழுதவும், அதை விற்கவும் ஒருவருக்கு உரிமையுள்ளது, நாட்டில் எத்தனையோ சரோஜா தேவி புத்தகங்கள் வரத்தான் செய்கின்றன. ஆனால் அதை எல்லோரும் எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ, எந்த விமர்சனமும் வரக்கூடாது என்று நினைப்பதோ எந்த விதத்தில் சரி? அதையெல்லாம் விடக் கொடுமை, அதற்கான எதிர்வினையை அவதூறு என்று சொல்வதும், ஆணாதிக்கச் சிந்தனை என்று சொல்வதும். யோனி, முலை, புணர்ச்சி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால் பெண்ணியக் கவிதைக்கான அந்தஸ்து கிடைத்து விடும் என்ற மயக்கம் லீனாவுக்கு இருக்கும்போல் தெரிகிறது. இந்த வார்த்தைப் பிரயோகங்களை மற்ற பெண் கவிஞர்கள் எத்தகைய புரிதலுடன், எத்தனை வலியுடன் கையாளுகிறார்கள் என்பதிலிருந்து பார்த்தால், லீனாவின் பிரச்சினை புரிந்து விடும்.

ஈழத்துக் கவிஞர் கலா எழுதிய ‘கோணேஸ்வரிகள்’ கவிதையில் 'சிங்களச் சகோதரிகளே! உங்கள் யோனிகளுக்கு இப்போது தேவையில்லை' (http://viduthalaivengaigal.blogspot.com/2010/03/blog-post_08.html) என்பதைப் படிக்கும்போது வாசகனுக்குக் கடத்தப்படும் வலி, கோபம் இருக்கிறதே அங்கேதான் கவிஞரின் படைப்பு தக்க வைக்கப்படுகிறது. ஆனால் லீனாவின் கவிதையைப் படிக்கும்போது எரிச்சல்தான் வருகிறது. இப்படிப்பட்ட கவிதைகளை எழுதுவதன் மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறாரோ என்று தோன்றுகிறது.

மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி என எல்லோருமே கலாசாரக் காவலர்களிடமிருந்து பல்வேறுவிதமான குற்றச்சாட்டுகளைச் சந்தித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் லீனாவைப் போல், அதிகாரத்தின் தொனிகளையும் அதன் திசை வழிப் போக்கையும் புரிந்து, தனது மனவக்கிரங்களை அதன்மேல் ஏற்றி எழுதியவர்களில்லை. குடும்பம், சமூகம், தன் மீது நிகழ்த்தும் வன்முறைகளின் வெளிப்பாடுகளாகவே அவர்களின் கவிதைகள் இருந்தன; இருக்கின்றன. உடல்ரீதியாக பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்து, பெண்ணுடலைக் கொண்டாடுகிற, அதேநேரத்தில் ஆண்மையப் புணர்தலை எதிர்த்து அவர்கள் எழுதினார்கள். காட்டாக, மாலதி மைத்ரி ஆசிரியராக இருந்து வெளிவரும் அணங்கு இதழில் வெளியான சுகிர்தராணியின் இந்தக் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1676:2009-12-16-01-38-35&catid=962:09&Itemid=216) கவிதையைப் படித்துப் பாருங்கள். அவர்கள் இருவரது பெண்ணியப் புரிதலும் தெளிவாக விளங்கும். ஆண்மைய வாழ்க்கை எப்படி ஒரு பெண்ணின் தனித்துவத்தை சிதைக்கிறது என்பதை இக்கவிதை காட்ட, அதற்கு நேர்மாறாக ஆண்மையப் புணர்தலையே கொண்டாடும் கவிதையாக லீனாவின் கவிதை இருக்கிறது. அரைகுறை பெண்ணிய அரசியல் அறிவுடன் ஒரு கவிதையையும் எழுதிவிட்டு, அதற்கு சப்பைக்கட்டு கட்ட, தனது நண்பர்களையும் ஏவிவிடுகிறார்.

அவரது இருத்தல் தொடர்பாக அவரது நண்பர்கள் எழுதுபவற்றைப் படிக்கும் போது ‘ஒரு பெண் என்றும் பாராமல் இப்ப‌டி எல்லாம் எழுதுகிறார்களே’ என்று கவலைப்படுகிற மனோபாவம் தெரிகிறது. இந்தக் கழிவிரக்கம் பெண்விடுதலைக்கு எதிரான ஒன்றல்லவா? லீனா குழுவினர் ஏன் ஆணிடத்தில் இத்தகைய கரிசனத்தை எதிர்பார்க்கிறார்கள்?

இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் நம் வாழ்வின் எல்லா தார்மீக உரிமைகளையும் இழந்து கொண்டிருக்கிறோம். கொடூரமான போர் ஒன்றை இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து இலங்கையில் நடத்தி முடித்திருக்கிறது. இந்தப் போரிலும் அதிகம் பாதிக்கப்பட்டது பெண்களும், குழந்தைகளும்தான். இன்று வரை அந்த இழப்பின் ரணத்திலிருந்து மீளவே முடியவில்லை. இந்தக் கட்டுரை எழுதும் இந்த நேரத்தில் வடகிழக்கில் இந்திய அரசின் போர் வெறிக்கு ஏதோ ஒரு பழங்குடிப் பெண் பலியாகிக் கொண்டிருக்கிறாள். நிரந்தரமாக தங்களின் வாழ்விடங்களில் இந்திய இராணுவத்தின் தேடுதல் வேட்டையில் கொட்டப்படும் குண்டுகள் அவர்களை நிலங்களில் இருந்து துரத்திக் கொண்டிருக்கிறது. சம காலத்தில் நாம் பார்க்கும் வீர மகளிராக பழங்குடிப் பெண்கள் ஆயுதமேந்தி ஆக்ரமிப்புப் போருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகமயச் சூழலில் நிரந்தரமான வறுமையும் வேலையிழப்பும் ஒரு பக்கம் என்றால், பெண் என்றாலே திருமணம் செய்து குழந்தை பெற்று குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் சேவை செய்து வாழ்வதே பாக்கியம் என்கிற ஆணாதிக்க நெறியை வைத்து ஒரு கூட்டம் காசு பார்த்துக் கொண்டிருக்கிறது. திருமணச் செலவுகளுக்கு பணம் தருகிறோம் என்று சுமங்கலித் திட்டத்தில் வருடக்கணக்கில் ஆயிரமாயிரம் பெண்கள் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகி நிற்கிறார்கள். குடும்பம் ஒரு வன்முறையான நிறுவனம் என்பது உண்மைதான். ஆனால் ஆணாதிக்கத்தின் வேர்... ஆண் வாரிசு சொத்துரிமையிலும் ஆண் வழி மரபுரிமையிலும் தங்கியிருக்கிறது எனும்போது இந்த அடிமைத்தனமே பெண்ணுக்கு ஒரு அடிமைப் பாதுகாப்பையும் வழங்குகிறது என்பது கசப்பான உண்மை இல்லையா?

குடும்பம் என்னும் நிறுவனம் சிதைய வேண்டும். ஆண் வழிச் சொத்துரிமை அழிக்கப்பட வேண்டும். பாலியல் பிண்டங்களாக பெண்களை மோகிக்கும் போக்கு மறைய வேண்டும் என்பது தான் சரியான பெண்ணியமாக இருக்க முடியும். குடும்பம் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை. சரி வெளியில் வரலாம். ஆனால் குடும்பத்தை உதறித் தள்ளுகிற பெண்களுக்கு என்ன விதமான பாதுகாப்பு இங்கே இருக்கிறது? அதுவும் ஏழைப் பெண்களுக்கு - தலித் பெண்களுக்கு? பெண் விடுதலை சிந்தனை என்று வரும்போது அதை முன்னெடுக்கிறவர்களின் வர்க்க நிலையையும், சாதீய இருத்தலையும் இங்கே கேள்விக்குள்ளாக்கியாக வேண்டும். ஏனென்றால் ஒரு தலித் பெண்ணும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண்ணும் சந்திக்கும் பிரச்சனைகள் ஒன்றானவை அல்ல; வெவ்வேறானவை. இம்மாதிரியான பிரச்சனையின் ஒரு தொடர்ச்சி தான், லீனா நடத்திய வால்பாறை கவிதைக் கூட்டத்தில் தலித் படைப்பாளிக்கு நேர்ந்தது.

பணம், செல்வாக்கு, சமூக அந்தஸ்து என்கிற நிலையில் ஒடுக்கப்பட்டு சேரிகளில் வாழும் பெண்களுக்காக சென்னையில் ஏசி அறைகளில் அமர்ந்து கவிதை எழுதலாம்; ஆனால் சேரியில், ஊரின் ஒதுக்கி வைக்கப்பட்ட குடியிருப்புகளில் வாழ்கிற அவஸ்தையைப் போலல்ல கவிதை என்பது. சும்மா ஒரு கவிதைக் கூட்டம் நடத்தவே நமக்கு இயற்கை எழில் கொஞ்சும் - மனித நடமாட்டம் இல்லாத அமைதிப் பிரதேசம் தேவை இருக்கிறது. வாழ்க்கை அப்படியில்லை தோழர்களே! இந்த நெருக்கடிகளில் இருந்து எங்கு தப்பிச் செல்ல முடியும்? எல்லையோர மக்களை துரத்தி விட்டு விஸ்தரிப்புக் கனவுகளோடு மக்கள் வளங்களை சூறையாடிக் கொண்டிருக்கும் இந்த முதலாளித்துவ நெருக்கடியில் ஒரு பழங்குடிப் பெண் எங்கு தப்பிச் செல்ல முடியும்?

சமீபத்தில் ஒரு பெண்கவிஞருடன் பேசியபோது அவர் சொன்னார், ‘லீனா இப்படி எல்லாம் எழுதுவதால் உண்மையாகவே பிரச்சனைகளை எழுத முனையும் பெண்கள்தான் கலாசார பாசிசத்தை சந்திக்க நேரிடும்.’ மற்றபடி பரபரப்புக்காக இப்படி எல்லாம் எழுதி விட்டு எல்லாப் பெண்களுக்குமான பிரச்சனையாக இதை சிலர் மாற்ற முனைவதும் வேடிக்கையான ஒன்றுதான். எல்லாப் பெண்களுக்குமான பிரச்சனையும் லீனாவின் பிரச்சனையும் ஒன்றா? லீனாவுக்கு அப்படி என்னதான் பிரச்சனை? கூலி கொடுக்காத தொழிலாளியை கூட்டுச் சித்திரவதைக்குள்ளாக்குவதும் பின்னர் அடி வாங்கியவரையே கருங்காலி என்று எழுதுவதும், விருதுகளுக்காக சினிமா எடுப்பதும், எல்லோரும் பாராட்ட வேண்டும் என்று கலவரக் கவிதை எழுதுவதும், தமிழ் சினிமாவில் பெண்களை ஆக மோசமாக இழிவுபடுத்தி தேவர் சாதி பெருமை பேசும் படங்களை எடுக்கும் பாரதிராஜாவை பாராட்டுவதும், இவைகள் எல்லாமே விமர்சனத்திற்குள்ளாகும் போது வரிந்து கட்டி பெண் இனத்திற்கே இழுக்கு என்று லபோ, திபோ என்று அடித்துக் கொள்வதும்.... இதெல்லாம் என்ன வகையான பெண்ணியம் லீனா?

leenamanimekalai‘நித்தம் ஒரு பொண்ணு வேணும் எனக்கு; வாரத்துக்கு ஏழு நாளு, வந்தவளோ நாலு பேரு; மூணு பேரு குறையுதடி கணக்கு’ என்ற பாடல் வரிகளை தனது படத்தில் சேர்த்துக்கொண்ட பாரதிராஜா, உங்களது கவிதைகளைப் படித்து புருவம் உயர்த்துவது (லீனா பேட்டி, புத்தகம் பேசுது ஏப்ரல் 2010) தங்களுக்கு உறுத்தலாகப் பட்டிருக்க வேண்டும். ஆனால் பெருமிதத்துடன் அதைச் சொல்கிறீர்கள். தினம் ஒரு பெண் தேடி அலைவதும், அந்தளவிற்கு வசதியில்லாதவர்கள் இரண்டு பொண்டாட்டி கட்டிக்கொண்டு திரிவதும், பெண்களை காக்க வேண்டும் என்பதற்காக அல்ல; பெண்ணை போகப் பொருளாக பார்க்கும் கழிசடைத்தனத்தின் வெளிப்பாடு. அதை நீங்கள் எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்வதோடு, அத்தகைய ஆணாதிக்கவாதிகளின் பாராட்டில், அரவணைப்பில் மெய்மறப்பது எந்த வகையான பெண்ணியம் லீனா?

இப்படி எல்லாம் கேட்டால் உடனே உங்களை தனிப்பட்ட ரீதியில் தாக்குவதாகக் குறைபட்டுக் கொள்கிறீர்கள். இடது வலது அடிப்படைவாதிகள் என்று ம.க.இ.க.வினரையும் இந்துப் பாசிஸ்டுகளையும் ஒன்றாகச் சேர்த்து எழுதுகிறீர்கள். இது யுத்த தந்திரமா? அல்லது பிழைப்புவாதமா? தமிழகமெங்கிலும் இந்துப் பாசிஸ்டுகளுக்கு எதிராக முற்போக்கு சக்திகள் தொடர்ந்து போராடுகிறார்கள். திராவிட இயக்கம், முற்போக்கு என்றெல்லாம் பேசிய கருணாநிதி அரசு அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கிறது. ராயப்பேட்டையில் பெரியார் திக அலுவலகத்தையும் தாக்கி அங்கிருந்த பெரியார் சிலையையும் உடைத்து வீசியது ஒரு ரௌடிக் கும்பல். நியாயமாக பெரியார் சிலையை இந்து மக்கள் கட்சிக்காரன் தானே உடைக்க வேண்டும். ஆனால் இங்கே உடைத்தது திமுக தொண்டர்கள். பெண்களை இரவோடு இரவாக அடித்து இழுத்துச் சென்று ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகளில் போட்டு உள்ளே தள்ளினார் கருணாநிதி........ தெரியுமா லீனா உங்களுக்கு? யோனி....... தூமை இப்படியான சில வரிகளைப் போட்டு கவிதை எழுதினால் அது முற்போக்கு என்று தெரிகிறது. ஆனால் இந்த வார்த்தைகளை கூச்சமான ஒன்றாக நினைத்து பிரயோகிக்கத் தயங்கும் பெண்கள் ரோட்டிற்கு வந்து போராடத் தயங்குவதில்லை. அவர்கள் சிறைக்குச் செல்லவும் அஞ்சுவதில்லை. நீங்களோ இம்மாதிரி வார்த்தைகளில் கபடியாடி விருதுகளுக்காக படம் எடுத்து வசதியாக வாழ்ந்து.......... ஆனால் சமூக நோக்கங்களுக்காக போராடுகிறவர்களைக் கொச்சைப்படுத்துகிறீர்கள்.

கருத்து சுதந்திரத்தில் அக்கறை உள்ளவர்களாக திடீரென்று இன்று களத்தில் குதித்திருக்கிறீர்களே, நீங்களும் அ.மார்க்சும்? கடந்த ஆண்டு ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோது - போரை நிறுத்தச் சொல்லியும், இந்திய அரசின் உதவிகளைக் கண்டித்தும் பேசிய கொளத்தூர் மணி, சீமான், பெ.மணியரசன் மற்றும் எண்ணற்ற பெரியார் தி.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்களே, அது கருத்துச் சுதந்திரத்திற்கான மறுப்பு இல்லையா? அப்போது நீங்கள் இருவரும் எங்கே போனீர்கள்? கேரள சிபிஎம் கட்சியினரால் பால் சக்காரியா தாக்கப்பட்டபோது, கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்று - ஒரு கண்டனக் கூட்டம் வேண்டாம் - குறைந்தபட்சம் ஒரு கட்டுரையாவது எழுதினீர்களா? உங்களது கருத்து சுதந்திரத்திற்காக இன்று போராடுபவர்கள் மக்கள் தொலைக்காட்சியைத் தாக்கியபோது, ஒரு முக்கல் முனகலாவது தங்களிடமிருந்து வந்ததா? தங்கள் கவிதை மீது விமர்சனமும் புகாரும் வருகிறது என்றதும், பணி ஓய்வு பெற்று வீட்டில் இருப்பவரை கூட்டம் நடத்தச் சொல்லி, இத்தனை களேபரம் பண்ணுகிறீர்கள்.

நீங்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த தமாசுக் கூட்டம் எப்படி சிரிப்பாய் சிரிக்கிறது பாருங்கள்! இதை நீங்கள் முன்கூட்டியே - அதாவது நீங்கள் அழைத்தும் பல எழுத்தாளர்கள் இதில் கலந்து கொள்ள மறுத்தபோதே - எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனால் தனக்குத்தானே கோபுரம் கட்டும் அவசரம் உங்களது கண்ணை மறைத்து விட்டது. இப்போது என்றில்லை, எப்போதும் இப்படித்தான் இருக்கிறீர்கள். நான் சில வருடங்கள் பத்திரிக்கைத் துறையில் வேலை பார்த்திருக்கிறேன். உங்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தாலே, சக பத்திரிக்கையாள நண்பர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார்கள். நீங்கள் வந்துவிட்டுப் போனாலோ, உங்களுக்குப் பின்னால் வெடித்துச் சிரிப்பார்கள். வேறு எந்த பெண் படைப்பாளியைப் பார்த்தும் அவர்கள் இப்படி சிரிப்பதில்லை. எப்போதும் self marketing செய்வதில் தாங்கள் காட்டும் முனைப்புதான் பலரது கேலிக்கும் ஆளாக்குகிறது. இதை கீற்று குழுமத்தில் சேர்ந்தபின்பு, உணரும் சந்தர்ப்பம் எனக்கும் வாய்த்தது. லயோலா கல்லூரிப் பிரச்சினை தொடர்பாக நீங்கள் அனுப்பிய கட்டுரையுடன் 2 பக்க சுயவிளம்பர கேட்லாக்கும் வந்தது. அத்துடன் விதவிதமான புகைப்படங்கள் வேறு. கீற்றுவுடனான எனது மூன்று வருடப் பயணத்தில் வேறு எந்த ஆண்/பெண் படைப்பாளியோ இப்படி கேட்லாக் அனுப்பியதை நான் பார்த்ததில்லை.

உங்களுக்கான கட்-அவுட்டை நீங்களே சுமந்து திரிவது எல்லோருக்கும் சிரிப்பாகத்தான் இருக்கிறது (இப்போது உடன் சுமப்பதற்கு அ.மார்க்சும் வந்திருக்கிறார்). கவிதை, ஆவணப்படம் ஆகியவற்றை தங்களை விளம்பரத்திக் கொள்ளும் முயற்சியாக நீங்கள் கைக்கொண்டால் அதற்கான எதிர்வினை வரத்தான் செய்யும். அதைத்தான் வினவு தோழர்கள் எழுதினார்கள். நீங்களும் அ.மார்க்சைப் போலவே, தனிமனித அவதூறு என்று சொல்கிறீர்கள்.

ஜீன்ஸ் பேண்ட் போட்டு, டீ. ஷர்ட் போட்டு, தலைமுடியை ஹெர்லிங் பண்ணி வெள்ளை ஹூண்டாயில் வந்திறங்கும் போது நவீனமாகத்தான் இருக்கும். உடுத்தும் உடையில், மணக்கும் முடியில், காஸ்டிலியான வாழ்வில் நாம் காண்பது நவீன தோற்றமாக உங்களைப் போன்றோருக்குத் தோன்றலாம். ஆனால் சிந்தனை? அதற்கும் இந்தச் சமூகத்திற்கும் எத்தனை பெரிய இடைவெளி..?. கொஞ்சம் மாடிப்படிகளில் இருந்து இறங்கி ரோட்டிற்கு வாருங்கள் லீனா. தெருக்கோடியில் சீமாட்டிகளிடம் ஒரு முழம் பூவை விற்க படாதபாடு படுகிற ஏழைத் தாயின் வாழ்க்கையை கொஞ்சமேனும் புரிந்து கொள்ளுங்கள்.... அதை வைத்து ஆவணப் படம் எடுத்து விற்று விடாதீர்கள். அந்த வாழ்க்கைக்கும் கண்ணாடி அறைகளுக்குள் மினுங்கும் வாழ்வுக்குமான முரணைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

தமிழ் இலக்கிய உலகில் பெண்ணிய எழுத்துக்களுக்கான பாதை இன்று இராஜபாட்டையாக இருக்கிறது என்றால், அது அம்பை தொடங்கி, மாலதி மைத்ரி, இளம்பிறை, குட்டி ரேவதி, சுகிர்தராணி உள்ளிட்ட பெண் படைப்பாளிகளின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பால் நிகழ்ந்தது. புதிதாக எழுத வரும் என் போன்ற பெண் எழுத்தாளர்களுக்காக அவர்கள் அந்தப் பாதையை செப்பனிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். தயவு செய்து அந்தப் பாதையில் முட் கற்கள் போடும் வேலையை உங்களது படைப்புகளின் மூலம் செய்யாதீர்கள்.

பெண்ணியப் படைப்பு என்னவென்பதை முன்னோடிகளைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இன்னும் காலம் இருக்கிறது. நல்ல படைப்புகளைத் தாருங்கள்! வாழ்த்துக்கள்!!

-     மினர்வா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

84 comments

84
மதி
ஆனாலும் லீனாவ இம்புட்டு பெரிய ஆளா நினைச்சு இத்தன பெரிய கட்டுரையும் இம்மாம்பெரிய போட்டோவும் போட்டிருக்க கூடாது. அதுக்குதான் வேற கூட்டம் இருக்குதே..
வதனன்
நல்ல கட்டுரை தோழர். உண்மையிலேயே லீனா விசயம் குறித்த தெளிவற்ற நிலையிருந்தது. விரிவாக அதைத் தெளிவுற வைத்த கட்டுரையிது. அடுத்தெவரையும் மதிக்கத்தெரியாத போக்கும், தன்னைம்ட்டுமே முன்னிலைப் படுத்திக்கொள்கிற பண்பும், தான் கவனிக்கப்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும் என்கிற சுயதம்பட்டமும் கொண்ட லீனாவின் முகத்திரை கிழித்த கட்டுரை. குறும்படத் துறையில் அவர்களின் அளப்பறியா நேர்மையற்ற போக்கையும் கடந்த பத்தாண்டுகளாக கவனித்துவருகிற எமக்கு, யோனி கவிதை குறித்த எதிர்வினையில் ஒரு பரிதாபம் கூட தோன்றியது. கலாச்சாரக் காவலர்களின் தாக்குதலுக்கு ஆளான லீனாவுக்கு ஆதரவு நிலை குறைவாக உள்ளதே என்று. சரிதான் அன்றாடம் வன்புணர்ச்சிக்கு ஆளாகின்ற சராசரி பெண்களின் யோனிக்கும் / விரும்பிப்போய் புணர்ச்சியில் ஈடுபடுகிற பெண்களின் யோனிக்கும் வித்தியாசம் தெரியாத மேட்டுக்குடி கவிஞர்களுக்கு ஆதரவாக யார் வருவார்? அ.மார்க்ஸ் போன்றோரைத்தவிர. சித்திரைத்திருநாளின் முதல்கட்டுரையாக ஒரு நல்ல கட்டுரை படித்த மன நிறைவுடன்....
ramani
ிணாவுக்கு சில கேள்விகள்

1. இணையதளத்தில் தாக்குதல் பரவியிருக்கிறது என்ற சொல்லாடலின் மூலம் யாருக்கு என்ன செய்தியை சொல்ல வருகிறீர்கள்

2. பத்திரிகை அல்லது கூட்டம் அல்லது சினிமா போன்ற ஏதோ ஒரு ஊடகத்தில் அல்லது அதன்மீது வைக்கப்படும் விமர்சனம் அல்லது அவதூறு இவற்றை செய்வதற்கு ஒருவருக்கு உரிமை கிடையாதா... அப்படி எழுதும் தனிநபர்களை கூட சைபர் கிரைம் போலிசிடம் போட்டுக் கொடுக்கும் வேலையைத்தானே இந்த கண்டன கூட்டம் செய்யப் போகின்றது. உரிமையின் பெயரால் மற்றவர்களின் உரிமையை பறிப்பதற்கு என்ன நியாயம் உள்ளது. இது படித்தவர்கள் செய்யும் பாதகம் இல்லையா.. பாரதி உங்ளுக்கு இதில் எப்படி துணை வர முடியும்

3. அல்லது இணையத்தில் இன்னார்தான் எழுதுகிறார்கள். அவர்களுக்கு எதிராக என்றால் அது தனி விசயம் ... அவதூறோ அல்லது விமர்சனமோ எழுதும் அவர்களையும் இந்து மக்கள் கட்சி போன்ற வலதுசாரிகளையும் கலாச்சார அடிப்படை வாதிகள் என வரையறுத்து உள்ளீர்களே அது சரியா.. சரி எனில் எப்படி என விளக்கவும்.

4. பெண்ணெழுத்து சம்பந்தமாக நடக்கும் இந்தக் கூட்டத்தில் ஈராக் பெண்களை இழிவுபடுத்திய கவிதையை எழுதிய சங்கர ராம சுப்ரமணியன் கலந்து கொள்வதோ, கேரளத்தின் காங்கிரசு பிரமுகரின் வீட்டில் புகுந்து அவரது வேலைக்கார பெண்ணை டெமூத்தை விடவும் இழிவுபடுத்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தோழர்களின் கலை இலக்கிய பிரிவை அதாவது கலாச்சார படையை கலாச்சார அடிப்படைவாதிகள் இல்லை என்று வரையறுத்து, அதற்காக அவர்கள் பால் சக்காரியாவை பேச வந்த இடத்தில் தாக்கியதையும் சரி என ஏற்றுக் கொண்டு அந்த பொதுமேடையை பகிர்ந்து கொள்வதில் உங்களது நேர்மை இடம் கொடுக்கிறதா..

5. பெண்கள் எழுத்துரிமைக்காக நடக்கும் இக்கூட்டத்தில் மனித உரிமைப் போராளியாக தாங்களோ அல்லது அஜிதாவோ தலைமையேற்காமல் அ.மார்க்சின் தலைமையில் இது கூடுவதற்கு உங்களது அடிமைத்தனம் உதவுகிறதா என சந்தேகமாக மாத்திரமே விமர்சன அவதூறாக அல்ல கேட்கிறேன். கவின்மலர் போன்ற தமுஎகச பெண் தோழர்கள் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது இல்லை என தமுஎகச அமைப்பு முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பில் பொதுசெயலாராக உள்ள உங்களது பேச்சாளர்களில் ஒருவரும் எல்லாவற்றுக்கும் மேலாக ஆணுமான ச• தமிழ்செல்வன் கடந்த ஞாயிறு அன்று 11.04.2010 இல் ஞாநி வீட்டில் நடந்த கேணி சந்திப்பில் குறிப்பிட்டார். இதுபற்றி தமுஎகச வில் உள்ள பெண் தோழர்களுக்கும் உங்களுக்கும் ஏதேனும் கருத்து உள்ளதா
Guest
அன்புள்ள ப்ரியா (மினர்வா)

லீனா பற்றிய உங்கள் கட்டுரை படித்தேன்.

கடந்த ஒருவாரமாகவே மிகுந்த மனவுளைச்சலோடிருந்தேன். கண்ணெதிரே ஒரு கொலை நடந்து கொண்டிருக்கிறபோதும் அதைக் கைகட்டிப் பார்த்திருப்பதான குற்றவுணர்வில் சோர்ந்திருந்தேன். காரணம், லீனா எத்தகையவர் என்பதை நம்மில் பெரும்பாலானவர்கள் அறிந்துவைத்திருக்கிறோம். ஆனாலும், சுயதம்பட்டத்திற்காக அவர் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்; அதை அறிவுஜீவிகள் என்று சமூகத்தினால் சொல்லப்படுகிற (?) எழுத்தாளர்கள் ஒருங்கிணைந்து நடத்துகிறார்கள்; உண்மையறிந்தும் அதைப் பற்றி நாம் வாய்திறக்கவியலாமல் இருக்கிறோமே என்ற எரிச்சல் என்னைச் சூழ்ந்திருந்தது. ஆனால், நான் அதற்கு எதிர்வினையாக ஒரு கட்டுரையை எழுதினால் அதைத் திரிப்பதெப்படி என்று அவருக்குத் தெரியும். (ஆம். எல்லாம் அறிந்தவர்தான்) 'பெண்ணெழுத்துக்கு எதிராக பெண் ஒருவரே குரலெழுப்புகிறார்.... இவரை நாம் புறக்கணிக்க வேண்டும்'என்று புரளியைக் கிளப்பிவிடக்கூடிய அறமற்ற மனசுதான் அது.

அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக எங்கெங்கோவிருந்தெல்லாம் அவருடைய நண்பர்கள் கிளம்பிவந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் என்ன அறம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை நான் அறியவிரும்புகிறேன். ஒரு பெண்ணாக, கொஞ்சம் பார்க்கக்கூடிய அழகிய பெண்ணாக இருப்பதொன்றே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறதா? ஆக, கவிதை முக்கியமில்லை; கவிதை எழுதுகிற பெண்ணின் கடைக்கண் முக்கியம்.

அந்தக் கூட்டத்திலே ஆதவன் தீட்சண்யாவும் கலந்துகொள்கிறாராம். சமூக அநீதிகளுக்கெதிராகக் குரல்கொடுப்பதாகத் தனது பத்திரிகை வழியாகப் பீற்றிக்கொள்ளும் ஆதவன், சுயமோகமும் விளம்பரமுமே முதல் நோக்கமாகக் கொண்டு நடத்தப்படவிருக்கும் இந்தக் கூட்டத்திலே எப்படித்தான் கலந்துகொள்கிறாரோ?

யார் யார் இதில் முன்னிலை வகிக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்... ஷோபா சக்தி, லீனா மணிமேகலை, அ.மார்க்ஸ், கவின்மலர், சுகுணா திவாகர்... ஆதவன் தீட்சண்யா.... இவர்கள் ஒரு கூட்டம் நடத்தினால் அது எத்திசையில் செல்லும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

'அதிகாரங்களுக்கெதிராக உண்மையைப் பேசுவதாக' எழுதிக்கொண்டிருக்கும் அ.மார்க்ஸ், ஒரு உதவி இயக்குநர் மீது ஷோபா சக்தி, லீனா கூட்டணி பிரயோகித்ததை வன்முறையாகப் பார்க்க மறுத்தது ஏன்? நண்பர்கள் என்பதனாலா? பெண் எழுத்துக்கு எதிரானவர்களுக்கு எதிரான கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிற அ.மார்க்ஸ், ஈழத்தில் இத்தனை ஆயிரம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்டபோது, இத்தனை இழிவுசெய்யப்பட்டபோது, கொலையுண்டபோது எங்கிருந்தார்? அதிகாரங்களுக்கெதிராகப் பேசுவது என்பது என்ன? நண்பர்கள் மீது செலுத்தப்படும் அதிகாரங்களுக்கு எதிராகப் பேசுவது மட்டுந்தானா ப்ரியா? அவருக்குள் எத்தனை பாரபட்சமான மனது இயங்கிக்கொண்டிருக்கிறது!!!!!

பெண்ணாகப் பிறந்ததை ஒரு துருப்புச்சீட்டாக, சமூகத்தில் எல்லாவற்றையும் பெறக்கூடிய கருவியாக, சலுகைகளுக்கான நுழைவுச்சீட்டாகப் பயன்படுத்துகிறவர்கள் பெண்களாகவே இருக்கிறபோதிலும், சாதாரணமாக அவர்களில் பெருகக்கூடிய கனிவுகூட அற்றுப்போகிறது.

நான் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவர்கள் வாழ்த்துச் சொல்லிக்கொண்டிருக்கிற புத்தாண்டு அதற்குக் காரணமல்ல. உங்கள் கட்டுரைதான் அதற்குக் காரணம். உண்மையும் தெளிவும் மிக்க இளையவர்களான நீங்கள் முன்வந்து இப்படிக் கட்டுரைகளை எழுதும்போது உண்மையில் குளிர்ந்துபோகிறது நெஞ்சம்.

ஒப்பனைகளில் மினுங்கிக்கொண்டிருந்த ஒரு போலியை நீங்கள் வெளிக்கொணர்ந்திருக்கிறீர்கள். நன்றி உங்களுக்கு.
மு.வி.நந்தினி
அனானி ​தோழிக்கு(உங்களுடைய ​தொனி​யைப் பார்த்தால் நீங்கள் ​பெண்ணாகத்தான் இருக்கும் என்கிற நிச்சயத்தில் ​தோழி என்கிறேன்)

இப்பவாவது எதிர்வி​னை ​செய்யும் துணிவு வந்த​தைக் கண்டு மகிழ்ச்சி​யே... லீனா குறித்த உங்களது பார்​வை​யை பகிர்ந்து​கொண்டீர்கள். நன்று...

லீனாவுக்கு ஆதரவாக யார்யா​ரெல்லாம் வந்து​கொண்டிருக்கிறார்கள் என்கிற விவரத்​தையும் அவரின் க​டைக்கண் பார்​வைக்காக ஏங்கிக் கிடக்கிற எழுத்தாளர்கள் பற்றியும் விரல் நுனியில் ​தகவல் வைத்திருக்கும் உங்களுக்கு, நிச்சயமாக ஆதவன் தீட்சண்யா குறித்தும் ​தெரிந்திருக்கும் என்று உறுதியாக நம்புகி​றேன். அப்புறம் எதற்கு...
//சமூக அநீதிகளுக்கெதிராகக் குரல்கொடுப்பதாகத் தனது பத்திரிகை வழியாகப் பீற்றிக்கொள்ளும் ஆதவன்// என்கிற வார்த்​தைகள்?

பத்திரி​கை நடத்துகி​றேன் என்கிற ​பெயரில் ஆதவன் தீட்சண்யா என்ன இலக்கிய லாபி​யையா ​செய்து​கொண்டிருக்கிறார்?

எந்தவித பீற்றுதலும் இல்லாமல் தன்னால் என்ன ​செய்ய முடியு​மோ, அ​தை புதுவி​சை ​செய்து​கொண்டுதான் இருக்கிறது. விளம்பரத்துக்கும் பீற்றுதலுக்கும் அப்பாற்பட்ட விஷயம் அது. புதுவி​சை​யை விமர்சிக்க இதுவல்ல தளம். ​போகிற ​போக்கில் எ​தை ​வேண்டுமானாலும் ​சொல்லிவிட முடியாது.

யார், என்ன எழுதுகிறார்கள்? என்ன அரசியலில் எழுதுகிறார்கள் என்ப​தைவிட, யார் யாருடன் நட்பு பாராட்டுகிறார்கள் என்பதில் நீங்கள் அதிகம் அக்க​றை காட்டுகிறீர்கள் என்ப​தை உங்களு​டைய பின்னூட்டம் ​தெரிவிக்கிறது. இனி ​கொஞ்சம் படிப்பதிலும் அக்க​றை காட்டுங்கள்.
manivannan
கவன ஈர்ப்பு முயற்சிக்காகவும் , அடையாள படுத்திக்கொள்வதற்காகவும் ,மலிவான விளம்பரத்திற்காகவும் சில படைப்பாளர்கள் இது போன்ற பெண்ணியப்படைப்புகளை வெளிக்கொண்டுவருகிறார்கள். இது வரவேற்கத்தக்கதல்ல .
sudhamagan
நந்தினி, நீங்க சொல்றபடி தர்ம நியாயமா நடந்துக்கிற ஆதவன், தன்னோட புதுவிசையிலே 'பின் தொடரும் நிழலின் குரல்' நாவலை தமிழின் முதல் வக்கிர நாவல் என்று சொன்னாரு. ஆனா அதே போல மார்க்சியத்தைக் கொச்சைப்படுத்துற லீனாவோட கவிதையை வக்கிர கவிதைன்னு எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா?

பால் சக்காரியா, மக்கள் தொலைக்காட்சிக்காக பேசாத ஆதவன், லீனாவுக்காக் பேசுறாருன்னா அது ஏன்னு நீங்களாவது சொல்வீங்களா?

இதுலே எல்லாம் தன் விருப்ப வெறுப்பு சார்ந்துதான் அவரும், அவர் சார்ந்த புதுவிசையும் நடந்துக்குது. இது புரியறதுக்கு லைப்ரரி போய் பெரிய பெரிய புக்கெல்லாம் படிக்க வேண்டியதில்லை.

லீனாவைக் கண்டிச்சா, தன்னை வெளிநாட்டுக்கு கூட்டிட்டுப் போன ஷோபா சக்தி கோச்சுக்குவாரு. பால் சக்காரியா, மக்கள் தொலைக்காட்சிக்காக பேசுனா கட்சி கோச்சுக்கும். இதுக்கு இடையிலேதான் இருக்குது ஆதவனோட கோபமான பேச்சும், எழுத்தும். ரொம்ப சிம்பிள்மா!
sundaresan
//தினம் ஒரு பெண் தேடி அலைவதும், அந்தளவிற்கு வசதியில்லாதவர்கள் இரண்டு பொண்டாட்டி கட்டிக்கொண்டு திரிவதும், பெண்களை காக்க வேண்டும் என்பதற்காக அல்ல; பெண்ணை போகப் பொருளாக பார்க்கும் கழிசடைத்தனத்தின் வெளிப்பாடு. அதை நீங்கள் எந்தக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்வதோடு, அத்தகைய ஆணாதிக்கவாதிகளின் பாராட்டில், அரவணைப்பில் மெய்மறப்பது எந்த வகையான பெண்ணியம் லீனா?//

அ.மார்க்ஸ் இரண்டு பொண்டாட்டிக்காரர் என்பதைச் சொல்கிறாரா?
siva
எங்கே கவின்மலரின் பதிலைக் காணோம். கடந்த இரண்டு நாட்களாக வரிந்து கட்டிக்கொண்டு, இது ஆண், இது பெண் எனப் பதில் சொல்லிக்கொண்டிருந்தாரே. கட்டுரை எழுதியவர் பெண்ணாக இருப்பதால் என்ன பேசுவது என தெரியாமல் இருக்கிறாரா? இல்லை சொன்னது போலவே கீற்று படிப்பதை நிறுத்தி விட்டாரா?

:-) :-)
anani
இங்கு அனானியாக கருத்துச் சொல்லியிருக்கும் பெண்ணின் மொழிநடை அச்சு அசலாக தமிழ்நதியின் மொழிநடைப் போலவே இருக்கிறது. ஆதவன் பற்றிய விவரணைகளும், ரொமாண்டிசைஸ் செய்யப்பட்ட அரசியற்ற மொழி நடையும், புலி விமர்சன கருத்துக்களை மூர்க்கமாக எதிர்க்கும் போக்கும் அவ்வாறாக எண்ண வைக்கிறது. இருந்தாலும் அது தமிழ்நதியாக இல்லாமலும் இருக்கலாம்.
பாரதி
சரியான கட்டுரை. தான் பெண் என்பதை காரணம் காட்டி தனக்கு தேவையான காரியங்களை சாதித்துக் கொள்வது எப்படி பெண்ணியமாகும். பெண்ணின் உடலுக்கு மதிப்பளித்து அவளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் கேவலமானதில்லையா? இவர்களைப் போன்ற பெண்களால் தான் தன் திறமை மூலம் முன்னேறும் பெண்களையும் அவ பொண்ணு ஈஸியா முன்னுக்கு வந்துடலாம் என ஆண்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

லீனா பத்தி நிறைய பேருக்கு தெரிந்திருக்கிறது. ஆனாலும் அவருக்கு ஓ போடவும் கொஞ்சம் பேர் இருக்கத்தான் செய்யிறாங்க. என்ன தான் நடக்குதோ தெரியலை!
Anonymous fan
மு.நந்தினி அம்மாவுக்கு..

நந்தினியோட அம்மாவுக்கு இல்லீங்கோ.. நந்தினியைத்தான் மரியாதையா விளிச்சேனுங்க..

ஒரு எழுத்தை வைத்து அது ஆண் எழுதினதா, பெண் எழுதினதா என நீங்கள் முடிவு பண்ணியது அபாரம்.. தோழமைக்குரிய திருநங்கைகள் எழுத்தை எப்படி இனம் காண்பீர்கள்?

லீனா நடாத்துகிற கூட்டம் பற்றி வைக்கப்பட்ட கேள்விகளுக்கு எந்த பதிலுமற்று ஆதவனுக்காக கொதித்தெழுந்ததில் உங்களின் ஆர்வமும் ஆர்வ கோளாறும் புரிந்துவிட்டது. உண்மையில் லீனா மீதும் லீனாவில் செயல் பாடு[!] மீதும் உங்களுக்கு உடன்பாடென்றால் நீங்கள் எடுத்த பேட்டிக்கான எதிர்வினை லீனா தந்தபோது அதனை எடிட்டிங் செய்ய ஏன் அனுமதிச்சீங்க.. லீனா எதிர்வினையை எடிட்டிங் செய்தது உங்களுக்கு உடன்பாடு என்றால் லீனா கவிதைகளை எடிட் செய்ய சொல்லுவதற்கும் மற்றவர்க்கு உரிமை உள்ளதுதானே..

இரண்டில் ஒன்றில் நீங்கள் இருந்தால்தான் சரியானவர்..

அப்புறம் நான் எந்த பாலினம் என கண்டிபிடிச்சிங்கன்னா..
உங்களுக்கு ஒரு வருட புதுவிசை சந்தா இலவசம் [கர்ணா கையெழுத்துடன்]
Guest
மு.வி.நந்தினிக்கு,

அந்தப் பின்னூட்டத்திலேயே பெண் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்போது,

"(உங்களுடைய தொனியைப் பார்த்தால் நீங்கள் பெண்ணாகத்தான் இருக்கும் என்கிற நிச்சயத்தில் தோழி என்கிறேன்)"

என்ற வார்த்தைகள் அநாவசியம்.

நான் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அதை நீங்கள் சொல்லித்தான் நான் செய்யவேண்டுமென்றில்லை. எனக்குச் சுயஅறிவு இருக்கிறது. நீங்கள் பிறக்கும்போதே அரசியல் தெரிந்துகொண்டு பிறந்தவர் போல பேசவேண்டியதில்லை. அதிமேதாவித்தனங்கள் என்னிடம் காட்டவேண்டாம். அரசியல் தெரிந்தவர்களாகக் காட்டிக்கொண்டவர்களெல்லாம் எப்படி எல்லாம் அவிழ்ந்து அம்மணமாக நிற்கிறார்கள் என்பதை வரலாறு காட்டியிருக்கிறது; இன்னும் காட்டும்.

நான் உங்களைப்போல மற்றவர்களின் நிலைப்பாட்டைக் கடன்வாங்குவதில்லை. சொந்தமாகச் சிந்தித்துத்தான் எழுதுகிறேன். 'ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியத் தமிழர்கள் அதிக உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதாக ' நீங்கள் தமிழ்மணத்தில் கட்டுரை எழுதி வாங்கிக் கட்டியது உட்பட நான் படித்துத்தான் இருக்கிறேன். அதில் குறிப்பிடப்பட்ட வாசகங்களில் பல ஆதவன் தீட்சண்யாவிடமிருந்து கடன் வாங்கியது.

ஆம். புதுவிசை நிறையச் செய்துகொண்டுதான் இருக்கிறது. 'ஈழத்தில் நடக்கும் யுத்தத்தை விடுதலைப் புலிகள் மிகைப்படுத்திக் காட்டுகிறார்கள்'என்று வாய்கூசாமல் பொய்சொன்ன ஜேர்மனி சுசீந்திரனின் பேட்டியைப் புதுவிசையில் பிரசுரித்தது உள்ளடங்கலாக பீற்றுதல் இல்லாமல் புதுவிசை நிறையவே செய்துகொண்டிருக்கிறது. ஒரு கட்டுரையில் இந்த விடயத்தைப் பற்றி மட்டுந்தான் பேசலாம் என்ற எழுதாத சட்டம் ஏதாவது இருக்கிறதா? கீற்றில் வெளிவந்த கட்டுரைகளையும் அதற்கு இடப்பட்ட பின்னூட்டங்களையும் நீங்கள் மீண்டுமொரு தடவை படித்துப் பார்ப்பது நல்லது.

அவரவர் அரசியல் நிலைப்பாடு சார்ந்துதான் நட்புப் பாராட்டுகிறார்கள் என்பதுகூடவா உங்களுக்குத் தெரியவில்லை? நான் மேலே குறிப்பிட்டிருக்கும் பெயர்களுக்கும் அவர்களுடைய அரசியலுக்கும் ஒரு தொடர்பிருக்கிறது. அதை நான் நூல்பிடித்துக் காட்டாமலே நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.
சங்கர ராம சுப்ரமணியன்
அன்புள்ள ஆசிரியருக்கு,
லீனா மணிமேகலை தொடர்பான பிரச்னையில் நானும் விவாத த்துக்குள்ளாகியுள்ளேன். அதுகுறித்த எனது அனுபவம் என்ன என்பதை உங்கள் முன் வைக்கிறேன். சங்கர ராம சுப்ரமணியன் எழுதிக்கொள்வது. விக்ரமாதித்யன், லக்ஷ்மி மணிவண்ணன் மற்றும் நான் எழுதிய கூட்டுக்கவிதை குறித்த எனது விளக்கத்தை முதலில் சொல்லிவிடுகிறேன். இந்த கூட்டுக்கவிதை என்ற வடிவத்தை மிகவும் உற்சாகத்துடன் நடைமுறைப்படுத்தியவர் கவிஞர் விக்ரமாதித்யன். குறிப்பிட்ட சர்ச்சைக்குள்ளான கவிதை ஒரு நள்ளிரவுக் குடியில் சொல்லச் சொல்ல எழுதப்பட்டது. அக்கவிதை, விக்ரமாதித்யனால் பத்திரமாக சேமிக்கப்பட்டு மற்ற இருவரின் ஒப்புதல் எதுவும் இன்றி சரிபார்க்கப்படாமல் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து பிரசுரிக்கப்பட்டது. எனது கவிதைகளைப் படிக்கும் ஒருவர் அந்த கூட்டுக்கவிதையின் எந்தப் பகுதியை நான் எழுதியிருப்பேன் என்பதை தெளிவாக உணரமுடியும். அதில் மணிவண்ணன் எழுதிய வரிகளையும் விக்ரமாதித்யன் எழுதிய வரிகளையுமே ஒரு வாசகன் கண்டுபிடிக்க முடியும். விக்ரமாதித்யனின் பொறுப்பற்ற வரிகள் அவை. ஆனால் அவர் பொறுப்போடு எழுதிய கவிதைகள் 30 ஆண்டுகளாக கேட்பாரற்றுக் கிடப்பதையும் நான் உங்களுக்கு சொல்ல வேண்டும். அதை உங்களுக்கும் சொல்வதில் எனக்கு சங்கடம் இல்லை. அதில் ஒரு சிறுவன் தொடர்பாக வரிகளை மட்டும்தான் நான் எழுதினேன். கிட்டத்தட்ட அது ஒரு அபத்த நிகழ்வு அது. அக்கவிதை சர்ச்சைக்குள்ளாகாமல் புகழ்பெற்றிருந்தாலும் இதையேதான் சொல்வேன். விக்ரமாதித்யனிடன் அதை பிரசுரிக்க அனுப்பியதற்காக சங்கடமும் பட்டேன்.

இக்கவிதை எழுதப்பட்டு ஒரு வருடத்தில் எனக்கு திருமணமானது. இக்கவிதை குறித்த எந்த ஞாபகமும் அற்று ஒரு பெண்ணோடு வாழும் சந்தோஷங்களையும், அபத்தங்களையும், பொறுப்புகளையும் எதிர்கொண்ட பொழுது அது. அப்போது நான் மின்பிம்பங்கள் நிறுவனத்தில் ஒரு டாக் ஷோ நிகழ்ச்சியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அப்போது தீராநதியில் நான் மொழிபெயர்த்த டோக்கியா நகரத்தில் காகங்களின் பழக்கத்தில் ஏற்பட்ட மாறுதலைப் பற்றிய கட்டுரை தொடர்பாக ஒரு அலுவலகத்துக்கு போன் வந்தது. காகங்கள் பற்றி எழுதப்பட்ட கட்டுரையை அந்த அழைப்பு கதை என்று தப்பாக புரிந்து கொண்டு விசாரித்தது. அது ஒரு கட்டுரைதான் என்று கூறினேன். அடுத்தநாள் அக்கட்டுரையில் வரும் காகங்கள் வேறு ஏதாவது ஒன்றை குறிக்கிறதா என்று கேட்டது. இல்லையென்றேன். அதற்கு அடுத்தநாள் இந்த கட்டுரை தொடர்பாக என்னிடம் விவாதிக்கலாமா என்று கேட்டது. வீட்டு முகவரி கேட்டது. நான் அலுவலகத்துக்கு வரச்சொன்னேன். அவர்கள் வரவில்லை. இதன் பின்னணியில் என் உள்ளுணர்வில் ஏதோ சிக்கலான ஒன்று என்னைத் தொடர்வதை உணர்ந்தேன்.

அப்போது, அதே குரல் எனது மனைவியின் எண்ணை அறிந்துகொண்டு, அவரிடம் புத்தகம் அனுப்பவேண்டும் என்று முகவரி கேட்டுள்ளது. எனது மனைவியும் முகவரியைத் தந்துவிட்டாள். நான் எழுத்தாளராச்சே.

ஒரு நாள் காலை எனது ஆதம்பாக்கம் வீட்டின் படுக்கையறையில் எனது மனைவியுடன் காலை 6 மணிக்கு தூங்கிக்கொண்டிருந்தேன். அப்போது அழைப்பு மணி அடித்தது. நான் கதவைத் திறந்தபோது செல்வராஜ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் உள்ளே நுழைந்தார். வீட்டின் முன்பிருந்த ஹாலில் எந்த இருக்கையும் இல்லை. திருமணமான புதிது என்பதால் கட்டில் உட்பட எந்த பொருள்களும் இல்லை. சாம்பல் பத்திரிக்கையில் வெளிவந்த கவிதையைக் காட்டி நீங்கள் தான் எழுதினீர்களா, யோனி என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டார். அதற்குள் கூடுதலாக மூன்று நான்கு பேர் வீட்டிற்குள் புகுந்தனர். எனது மனைவி ஏதோ விபரீதம் என்று உணர்ந்து வெளியே வந்தாள். நான் சிக்கலை உணர்ந்து அவளை படுக்கையறைக்குள் தள்ளி கதவை சாத்திவிட்டு என்ன பிரச்னை என்று கேட்டேன். அப்போது பல்தேய்க்கக் கூட இல்லை. உங்களை பொதுவில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று சொல்லி கைது செய்யதது போல் லுங்கியுடன் அழைத்து சென்றனர். போகும்போது, முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திடம் சொன்னால் காலை எடுத்துவிடுவார்கள் என்றும் சொன்னார்கள். அபார்ட்மெண்டில் இருந்த ஒரு வீட்டில் கவிதையின் ஜெராக்ஸைக் கொடுத்து, இப்படியெல்லாம் இவர் எழுதுகிறார். இதைப் படித்துப் பாருங்கள் என்று கூறினார்கள். அவர்கள் அதை வாங்கிப்பார்த்துவிட்டு வெளியே வரவே இல்லை. என்னை தெருவுக்கு லுங்கியைக் கூட சரியாக கட்டவிடாமல் கூட்டி வந்தார்கள். அங்கு கூடுதலாக ஐந்துபேர் இருந்தனர். எண்ணிக்கையை துல்லியமாக சொல்ல முடியவில்லை. யோனிக்கு என்ன அர்த்தம் என்று தெருமுனையில் நின்று கேட்டார்கள். நான் அர்த்தத்தை சொன்னேன். செல்வராஜ் என்று சொல்லப்பட்டவருடன் இருந்தவர்கள் ப்ளாட்டில் இருக்கிறான் ,....பிளாட்டில் இருக்கிறான் என்று கொதித்தார்கள். அதற்குப்பிறகு என்னை மெயின் சாலைக்கு கூட்டிச்சென்றவர்கள், ஆட்டோக்காரர்களிடம் கவிதையின் ஜெராக்சை கொடுத்து எனது குற்றத்தை விளக்கினார்கள். எனக்கு மிகவும் அபத்தமாக இருந்தது. அதற்குள் எட்டு மணி ஆகியிருந்தது. செல்வராஜ் என்று சொல்லப்பட்டவருடன் வந்தவர்கள் வேலைக்குப் போகவேண்டும் என்று கூறி ஒவ்வொருவராக கிளம்பி விட்டார்கள். என்னிடம் ஒரு மன்னிப்பு கடிதத்தையும் பெற்றுக்கொண்டு கோடம்பாக்கத்தில் இருக்கும் அவர்களின் அலுவலகத்துக்கு விக்ரமாதித்யனையும் அழைத்து வரச்சொன்னார்கள்.
கிட்டத்தட்ட கண்ணுக்குத் தெரியாத சிறை வளையத்துக்குள் மாட்டிய போதத்தில் வீட்டுக்குத் திரும்பியபோது என் மனைவி கண்ணீருடன், ஏன் இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள் என்று கேட்டாள். திருமணத்திற்கு பின்பு என்மேல் விழுந்த முதல் நம்பிக்கையின்மை அது.

திருவல்லிக்கேணியில் ராஜமார்த்தாண்டன் அறையில் தங்கியிருநத விக்ரமாதித்யனை அழைத்துக் கொண்டு, துணைக்கு எனது நண்பன் தளவாய் சுந்தரத்தையும் அழைத்துக்கொண்டு புதிய கலாச்சாரம் அலுவலகத்துக்கு சென்றோம். வீராசாமியும் இருந்தார். அவரும் செல்வராஜ் என்று சொல்லப்பட்டவரும் விக்ரமாதித்யனையும் என்னையும் அமரவைத்து விசாரணையைத் தொடங்கினார்கள். செல்வராஜ் இருக்கையின் பின்புறம் ஸ்டாலின் படம் எங்களை முறைத்துக் கொண்டிருந்தது. செல்வராஜ், எங்களிடம் வேறு வேறு கேள்விகளைக் கேட்டார். ஏன் பூடகமாக எழுதுகிறீர்கள் என்று கேட்டார். நான் எளிமையான கவிதைகளை எழுதுபவர்களின் ஒருவன் என்றேன். இது மாலை நான்கு மணிவரை கழிந்தது. அப்போது கீழைக்காற்று பதிப்பகத்தில் இருந்து வந்தவர் ஒருவர் இவன்களையெல்லாம் விடக்கூடாது என்றார்.
நாங்கள் காவல் அதிகாரி திலகவதியிடம் பேசினோம். அவர் எங்களை ம.க.இ.க வினரிடம் என்ன கேட்கிறோர்களோ அதை சொல்லிவிட்டு வாருங்கள். வீட்டுக்கு எத்தனை நாள் பாதுகாப்பு தரமுடியும் என்றார். வேறு எதுவும் செய்ய முடியாது என்று கூறினார். தளவாயும் வீராச்சாமியுடன் பேசிப்பார்த்தான்.
அவர் ஈராக் பிரச்னையை நாங்கள் கேவலப்படுத்துகிறோம் என்றே கூறினார்கள். நான் பாக்தாத் எரிகிறது என்று துயரத்தில் தானே தொடங்குகிறது என்று விளக்கினேன்.

பிறகு நாங்கள் சாயங்காலம் வீடு வந்து சேர்ந்தோம்.

இன்று இந்த சம்பவத்தை எண்ணினாலும், நான் மிக மோசமாக வேட்டையாடப்பட்ட உணர்வு இருக்கிறது. நான் ஒரு எழுத்தாளன். அவன் பொதுமனிதன் தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் கலைஞர், நரேந்திர மோடி, நித்யானந்தா, சுப்ரமணிய சுவாமி, ப.சிதம்பரம், எண்கவுண்டர் புகழ் பிரேம்குமார் என்று அனைவருமே பொதுமனிதர்கள் தானே.
நான் ஒரு ஊறுபடுத்தக் கூடிய பின்னணியில் அநாதை எழுத்தாளனாக, நகரத்தில் இருப்பதால் ம.க.இ.க வினர் தங்கள் அரசியலை முன்னிறுத்தி தங்கள் வன்மத்தை அதிகபட்சமாக செயல்படுத்தலாம். அதுதானே அவர்களது வீரம்.
இதில் இன்னொரு சந்தேகமும் உள்ளது. நவீன இலக்கியவாதிகள் இயங்கும் வெளிக்குள் தலையீடு செய்வதற்கு, கவன ஈர்ப்பு நடவடிக்கையாகவும் அது எனக்குப் படுகிறது.
இப்போதும் சொல்கிறேன். அச்சம்பவம் தொடர்பாக எனக்கும் இன்னமும் வலி இருக்கிறது.

நான் என்னும் ஒரு சமூகஉயிர் மதச்சார்பின்மையை அனுசரிக்க கூடிய, கடவுள் என்று சொல்லக்கூடிய எந்த உருவத்தையும் கும்பிடக்கூடியது. ஆண்,பெண் சமத்துவத்திலும், சமநீதி நிலவ வேண்டும் என்பதிலும் நம்பிக்கை உள்ளவன். மற்றதை புரிந்துகொள்வதற்கான அறிதல் என்றே நான் இலக்கியத்தை நினைக்கிறேன். நானும் எனது நண்பன் சண்முக சுந்தரமும் நடத்தும் மணல் புத்தகம் இரண்டு மட்டும் மூன்று இதழ்களை வாங்கிப் பார்த்துக் கொள்ளலாம்.

ஆனால் எழுத்தில், நான் என்னுடனேயே போராடுவதையும், அதிகாரம் அனைத்து இடங்களிலும்- பலவீனமான இடங்களிலும் கூட - கொந்தளிப்பதையும், விடுதலை, மீட்சி என்பதற்கான பேச்சுகளெல்லாம் திரும்பவும் சடங்குகளாகவும், ஒடுக்கும் அமைப்புகளாகவும் மாறுவதையும் எழுத நினைக்கிறேன்.

காமமும் வன்மமுமே மொழியோ தர்க்கமோ அற்று அனைத்து இடங்களிலும் பிரவகித்துக் கொண்டிருப்பதைத்தான் நான் காண்கிறேன். விளிம்பிற்கும் விளிம்பிலும் ஏற்றத்தாழ்வு உள்ளது. ஒருவன் மற்றவனை அழிக்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தர்க்கங்கள். இதைவிட தர்க்கமற்ற கொலை ஒரு காதலைப் போல நிகழ்வதையே நான் விரும்புகிறேன். இதுதான் என்னுடைய சிக்கல்கள். அதை சரியாக நீங்கள் உணரும்போது , உங்களுடன் ஏதாவது ஒரு அம்சத்திலாவது என்னை அடையாளம் காண்பீர்கள். இல்லையெனில் காகம் தொடர்பான ஒரு எளிமையான கட்டுரையில் காகம் எதைக்குறிக்கிறது என்பதை ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டியதுதான்.
எதையும் அழுத்திப்பேசும்போது அது அருவறுப்பாகி விடுகிறது. எதையும் உரத்துப் பேசும்போது பொய் நுழைந்துவிடுகிறது. எழுத்தாளன் இதற்கு நடுவில் சிக்கலான பாதைகளில் பயணிப்பவன். அதை ம.க.இ.கவினர் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு ஆண்நாய் வீட்டில் புகுந்து ம.க.இ.கவினர் சரியான நடவடிக்கையில் ஈடுபட்டதாக நந்தன் என்பவர் வினவில் எழுதியிருந்தார்.

நான் என்னை ஒரு ஆண் என்றோ, சாராம்சமான மனிதன் என்றோ உணரவில்லை. நான் ஒரு வாதை. வெயிலில் திரியும் ..விதி வந்தால் மரணிக்க இருக்கும் ஒரு ஆசை ...அவ்வளவே....


நன்றிகள்

சங்கர ராம சுப்ரமணியன்
சங்கர்
சங்கர ராம சுப்ரமணியன்,

உங்கள் மீது இறக்கம் வருவது போல எவ்வளவு அருமையாக, உருக்கமாக எழுதுகிறீர்கள். உங்கள் பின்னூட்டத்தில் உள்ள கழிவிறக்கத் தோனியை தவிர்த்துப் பார்த்தால் மிஞ்சும் கேள்விகள் இவைதான்
1. குடி போதையில் கூட்டுக்கவிதை எழுதியது ஒரு குற்றமா?
2. இதற்காக வீடு தேடி வந்து விளக்கம் கேட்கலாமா?
3. நான் எழுதிய கவிதையை என் பக்கத்து வீட்டுக்காரருக்குப் பிரதியெடுத்துக் கொடுக்கலாமா?
4. சாலையில் போவோர் வருவோரிடம் பிரதிகளைக் கொடுத்து திருடனைப் போல நடத்தலாமா?

இதனை நேரடியாகக் கேட்டால் உங்கள் சாயம் வெளுத்துவிடும் என்று முக்காடு போட்டுக்கொண்டு புலம்பியிருக்கிறீர்கள். நல்ல முயற்சி.
சர்வதேசியவாதிகள்
சரியான முறையில் தனது எதிர்வினையை இங்கு முன் வைத்திருக்கும் பிரியாவுக்கு வாழ்த்துக்கள். இன்றைக்கு மொத்த‌ நாடும் மறுகாலனியாகிக் கொண்டிருக்கும் இன்றைய புதிய‌ சூழலில் ஏற்கெனவே பல்லாயிரம் ஆண்டுகளாக‌ சுரன்டலிலும், ஒடுக்குமுறைக்குள்ளும் தினிக்கப்பட்டிருக்கும் நமது உழைக்கும் வர்க்கத்து பெண்கள் புதிதாக பல ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்கிறார்கள். இது பற்றி இந்த சீமாட்டி லீனாவுக்கு தனது பால் என்கிற வகையில் கூட இந்த பெண்களிடம் எந்த அக்கரையோ பரிவோ கூட‌ இல்லை என்பதை தான் அவருடைய பகட்டும் விளம்பர மோகமும் 'ஆபாசமாக' பல்ளிளித்துக் காட்டுகிறது. லீனா ஒரு விளம்பர பிரியை அ. மார்க்ஸ் அவருக்கான விளம்பரப்படத்தை எடுக்கிறார் அவ்வளவே. இதைத் தாண்டி இவருடைய கவிதைக்கும், எழுத்துக்கும், நடக்கப் போகிற கூட்டத்திற்கும் எந்த‌ அரசியல் முக்கியத்துவமும் இல்லை. இவ்வளவு தரங்கெட்டத்தரத்தில் நடத்தப்படும் ஒரு கச்சேரிக்கு 'கம்யூனிஸ்ட் கட்சி' என்று பெயரை வைத்துக் கொண்டிருக்கிற சி.பி.எம் என்கிற‌ ஒரு வெட்கம்கெட்ட கும்பல் பக்க வாத்தியம் வாசிக்கிறது.

மார்க்ஸை பற்றியும், பாட்டாளி வர்க்கத்தை பற்றியும், உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்கிற பாட்டாளி வர்க்கத்தின் முழக்கத்தை பற்றியும், முதலாளி வர்க்க சுரண்டலை பற்றிய மார்க்சின் மாபெரும் கண்டு பிடிப்பான உபரி மதிப்பின் மீதும் சிறுநீர் கழிக்கும் இந்த சீமாட்டியின் செயலை பற்றி அ.மார்க்சுக்கு ஒன்றும் ஆட்சேபமில்லை ஏனெனில் அ.மார்க்ஸ் ஒரு கம்யூனிச விரோதி, ஆனால் நானும் கம்யுனிஸ்ட் தான் என்று நூறு ஆண்டுகளாக கட்சி நடத்திக் கொண்டிருக்கும் சி.பி.எம் போலிக் கம்யூனிஸ்டுகள் இதற்கு பதில் கூறியே ஆக வேண்டும்.

இதை நாங்கள் அனைத்து இடங்களிலும் இந்த போலிக் கம்யூனிஸ்டுகளிடம் கேட்போம் அவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

மற்றபடி கட்டுரை சிறப்பான முறையில் இந்த சீமாட்டியின் போலி பெண்ணியத்தை சரியான முறையில் எதிர் கொண்டுள்ளது, தொடர்ந்து எழுதுங்கள். துவக்க எழுத்து எனினும் உங்கள் சொல்முறை சிறப்பாக இருக்கிறது. மீண்டும் வாழ்த்துக்கள்.

http://vrinternationalists.wordpress.com/
Kaargi
//செல்வராஜ் இருக்கையின் பின்புறம் ஸ்டாலின் படம் எங்களை முறைத்துக் கொண்டிருந்தது.//

அடடா.. பாத்ததும் ரொம்பத்தான் பயந்துட்டீங்களாக்கும். எதுக்கு இந்த வெட்டி சீன் போடற வேலை?

உங்கள் பிரச்சினையை எளிமையாய் போலித்தனமில்லாமல் சொல்லத் தெரியாதா? கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகத்துடனும் வன்மம் கொண்ட
அரசியலுடனும் ஒரு கவிதையை எழுதினீர்கள் - அதை பிரதியெடுத்து உங்கள் மனைவிக்கும் அக்கம் பக்கத்து மக்களிடமும் ம.க.இக தோழர்கள் காட்டினர்.

அப்படி காட்டியது உங்களுக்கு வலிக்கிறது என்றால் - உங்கள் எழுத்தின் தரம் அத்தனை கேவலம் என்று தானே அர்த்தம்?
மு.வி. நந்தினி
அனானிக்கு,
நான் அதி​மேதாவி​யோ அற்ப​மோ என்னுட​யை ​சொந்த ​பெயரி​​லே​யே எழுதி வாங்கிக் கட்டிக்​கொள்கி​றேன். ​சொந்தமாக சிந்தித்து எழுதும் நீங்கள் ​சொந்தப் ​பெயரி​லே​யே பின்னூட்டம் ​போட்டிருக்கலா​மே?
அரசியல் ​தெரிவதாக காட்டிக்​கொள்ளும் அவசியம் எனக்கு இல்​லை. கவி​தை, கட்டு​ரை பிரசுரத்துக்காக​வோ, புத்தக மதிப்பு​ரைக்காக​வோ யா​ரையும் அணுகப்​போவதும் இல்​லை. எனக்கு எது சரி​யென்று படுகிற​தோ அ​தை ​செய்​கி​​​றேன்.
எனக்கு ஒரு பிரச்சி​னையில் ஒரு குறிப்பிட்ட நி​லைப்பாடு இருக்கிறது. அந்த நி​லைப்பாட்​டோடுதான் ஆதவன் தீட்சண்யா ​போன்ற ஆளு​மைகளும் இருக்கிறார்கள் என்று அறியும்​போது அவர்களின் ​​மேற்​கோள்க​ளை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்​லை என்​​றே நி​​னைக்கி​றேன்.
நான் எழுதி​ய கட்டு​ரைக்கு மாற்றுக்கருத்துக்கள் வந்தால் அதற்கு ​பெயர் வாங்கிக்கட்டிக்​கொள்வதா? இப்​போதும் நான் என்ன நி​லைப்பாட்டில் அந்தக் கட்டு​ரை எழுதி​னே​​னோ அ​தே நி​லைப்பாட்டில் தான் எழுதுகி​றேன். எழுது​வேன். வாங்கிக்கட்டிக்​கொண்டு எழுதுவ​தை​யே விட்டுவிட்​டேனா? அல்லது உங்க​ளைப்​போல அனானி ​பெயரிலா எழுதிக்​கொண்டிருக்கிறே​ன்?

//ஆம். புதுவிசை நிறையச் செய்துகொண்டுதான் இருக்கிறது. 'ஈழத்தில் நடக்கும் யுத்தத்தை விடுதலைப் புலிகள் மிகைப்படுத்திக் காட்டுகிறார்கள்'என்று வாய்கூசாமல் பொய்சொன்ன ஜேர்மனி சுசீந்திரனின் பேட்டியைப் புதுவிசையில் பிரசுரித்தது உள்ளடங்கலாக பீற்றுதல் இல்லாமல் புதுவிசை நிறையவே செய்துகொண்டிருக்கிறது//
இலங்​கை பிரச்சி​னை உங்களின் நி​லைப்பாட்​டுக்கு எதிர் நி​லைப்பாட்​டில் புதுவி​சையும் ஆதவன் தீட்சண்யாவும் இருப்பதுதான் உங்களின் ஆ​வேச நி​​லைக்குக் காரணம் என ​தெரிகிறது. அதில் எனக்​கொன்றும் பிரச்சி​னை இல்​லை. ஆனால் எந்த இலக்கிய லாபி பத்திரி​​கைகளும் எழுதாத தலித்,சிறுபான்​மையினர்,ஒடுக்கப்பட்ட மக்கள் பிரச்சி​னைகளைத்தான் புதுவி​​சை அதிகம் ​பேசியிருக்கிறது. இ​தை நீங்கள் அறிந்திருக்காவிட்டால் கீற்றில் கி​டைக்கும் ப​ழைய புதுவி​சை கட்டு​ரைக​ளை ​​தேடிப்படிக்கவும் என்கிற ​தொனியி​லே​யே ​'கொஞ்சம் படிக்கவும் ​செய்யுங்கள்' என்​றேன்.
மாற்றுக்கருத்துக்க​ளை ​சொன்னால் பீற்றுதல், வாங்கிக்கட்டிக்​கொள்வது என்று கட்டம் கட்டும் நீங்கள் எப்படி சுயமாக சிந்தித்து எழுதும் எழுத்தாளராக ​சொல்லிக்​கொள்கிறீர்கள் என்று ​தெரியவில்​லை! உங்களு​டைய வார்த்​தைகளி​லே ​சொல்லப்​போனால் வரலாறுதான் காட்ட ​வேண்டும்.
மு.வி. நந்தினி
அனானி ஃ​பேனுக்கு,
அனானி ​மேல உள்ள ரசிக பாசத்தால என் அம்மா​​வை இழுத்திருக்கீங்க...ஒன்னும் ​சொல்றதுக்கு இல்ல. ​பொதுவாழ்க்​கைன்னு வந்துட்டா இதெல்லாம் சகஜமப்பான்னு நி​னைச்சுக்க​றேன். அப்புறம் தூரத்துல இருக்கிற என அம்மா​வை இந்த ​நேரத்துல நி​னைச்சுப்பார்க்க வச்சதுக்கு ​தேங்க்சும் ​சொல்லிக்க​றேன்.

லீனாவின் ​செயல்பாட்டில் உடன்பாடு இல்​லை என்று வினவு கட்டு​ரைக்கான பின்னூட்டத்தி​ல் ​தெரிவித்திருக்கி​றேன். அதற்கு ​மேல் ​சொல்ல என்ன இருக்கிறது?
நான் நிருபராகத்தான் இருக்கி​றேன். ஆசிரியராக அல்ல... ஒரு ப​​டைப்​பை, கடிதத்​தை சுருக்குவதற்கான முடிவு எல்லா பத்திரி​கைகளிலும் ஆசிரியர் அல்லது உதவி ஆசிரியர் எடுப்பார். நிருபர் அல்ல...

சுதாமகன்,
உங்களு​டைய ​கேள்விகள் நியாயமானதே. அதற்கு ஆதவன் தீட்சண்யாதான் பதில் ​சொல்ல ​வேண்டும். ​பொதுவா புதுவி​​​​சை பற்றி​யோ ஆதவன் தீட்சண்யா என்கிற எழுத்தாளர் பற்றி எனக்கு என்ன அபிப்ராய​மோ அ​தைத்தான் ​சொல்ல முடியும். அவ​ரைப் பற்றி அவர் என்ன ​சொல்கிறார் என்பது அவரவரது ​சொந்த கருத்து. அ​தை அவரவர்தான் ​சொல்ல முடியும்.
rudhran
//தமிழ் இலக்கிய உலகில் பெண்ணிய எழுத்துக்களுக்கான பாதை இன்று இராஜபாட்டையாக இருக்கிறது என்றால், அது அம்பை தொடங்கி, மாலதி மைத்ரி, இளம்பிறை, குட்டி ரேவதி, சுகிர்தராணி உள்ளிட்ட பெண் படைப்பாளிகளின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பால் நிகழ்ந்தது. புதிதாக எழுத வரும் என் போன்ற பெண் எழுத்தாளர்களுக்காக அவர்கள் அந்தப் பாதையை செப்பனிட்டுக் கொடுத்திருக்கிறார்கள். தயவு செய்து அந்தப் பாதையில் முட் கற்கள் போடும் வேலையை உங்களது படைப்புகளின் மூலம் செய்யாதீர்கள்.//

best wishes
ளிமாகோ
///நான் ஒரு ஊறுபடுத்தக் கூடிய பின்னணியில் அநாதை எழுத்தாளனாக, நகரத்தில் இருப்பதால்/////

கேட்பதற்க்கு ஆள் இல்லை என்று நினைத்து தானே உங்கள் கழிசடை அரசியலை முன்னிறுத்தி குடிகார கூட்டுகவிதை எழுதினீர்கள்??

அதை தோழர்கள் அம்பலப்படுத்தினால் வலிக்கிறதா?
வடிவேலு பாணியில் சொல்கிறீர்களே?
வலிக்குது, அழுதுடுவேன்....

////நான் ஒரு எழுத்தாளன். அவன் பொதுமனிதன் தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால் கலைஞர், நரேந்திர மோடி, நித்யானந்தா, சுப்ரமணிய சுவாமி, ப.சிதம்பரம், எண்கவுண்டர் புகழ் பிரேம்குமார் என்று அனைவருமே பொதுமனிதர்கள் தானே.////

என்ன தாம்பா சொல்ல வர்றே??
இது வார்த்தை ஜாலமா? நம்பிட்டோம் பா...

உங்கள் கழிவிரக்கத்தை விட்டு தள்ளுங்கள்... இப்போது லீனா கவிதை மேட்டருக்கு வாருங்கள், கூட்ட மேட்டருக்கு வாருங்கள்...

அதை பற்றி உங்கள் கருத்தென்ன???

இதை சொல்வதற்க்கும், கணவில் ஸ்டாலின் வந்து முறைத்தார் ன்னு சொல்ல மாட்டீங்கன்னு நம்புறோம்!
R.Vanitha
singathukku pal vilakiya kavithai yezhuthiya sankara rama subramaniyana ithu? pallu, yoni ....... maruthuva kavinngara ivru?? stalin foto kizhe utkarnyhiruntha selvarai yendru sollapadugiravarai paraattugiren. leenaavukku oru selvarani vara vendum.
eazh thamizarkalai ethirpathu, thamozh unavai kochai paduthuvathai perumai pesum marx vazhiel m.v.nanthini?
அருணா
மதிப்புக்குரிய நந்தினி அக்கா
ஈழத்தில் எனது உடன்பிறப்புக்கள் இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்டதை உலக மக்களுக்கு தெரிந்திருந்தும் உங்கள் ஆதவன்தீட்சநயாவுக்கு மட்டும் தெரியாமல் போய்விட்டது. இல்லாவிட்டால் பிழைப்புவாதி சுசீந்திரன் சொன்ன இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்ற விடயத்தை ஆதவன்தீடசநயா ஆமோதித்து தன்னடைய புதுவிசையில் போட்டிரக்கமாட்டார். ஆதவன் தீட்சநயா எப்படி இலங்கைக்கு போனார், யார் யாரையெல்லாம் சந்தித்தார், யாரெல்லாம் உதவி செய்தார்கள் என்பதை உங்களுக்குத் தெரிந்த கொழும்பு நண்பர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள். பிழைப்புவாதிகளுக்கு ஆதரவு காட்டாதீர்கள் புலிகளுக்கும் இந்தப் பிழைப்பு வாதிகளுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. என்னவெனில் சுயநலவாழ்வுக்காக எதையும் செய்வார்கள் இவர்களோடு கூட்டுச்சேர்ந்து உங்கள் நல்லபெயலை கெடுத்துக்கொள்ளவேண்டாம்.
அருணா
கும்தலக்கடி கும்மாவா
கொஞ்ச நாட்களாக இலக்கிய கூட்டங்களிலும் சர்ச்சைகளிலும் சேர்த்து கொள்ளப்படாமல் தனிமைப்பட்டிருக்கும் தமிழ்நதி பாவம் அனானிமஸாக வந்து தன்னுடைய இருப்பை காட்டிகொள்கிறார். அதுகூட பொறுக்கலையே இன்னொரு ஆணாதிக்க அனானிக்கு.

ஆளாளுக்கு ஆவி கணக்கா அனானியா வந்தா தாங்குமாய்யா கீற்று. ஏதோ பார்த்து பண்ணுங்க கண்ணுகளா.
கும்தலக்கடி கும்மாவா
அய்யய்யோ கடைசியில் பார்த்தால் இந்த வினவு கும்பல் தெலுங்கு சினிமாவில் வருகிற ரவுடி கும்பலை ஒத்ததாக இருக்கிறதே?

ஏனய்யா பக்கத்து பிளாட்காரனிடம் போய் இந்த ஆளு யோனி என்று எழுதியிருக்கான்னு சொல்றது என்னய்யா புரட்சி? என்னய்யா அரசியல்?

இந்த **** பயலுங்களுக்கு கீற்று வேற சப்போர்ட். நல்லா பண்ணுறீங்கய்யா புரட்சியும், தேசியமும்.
siva
கும்தலக்கடி கும்மாவிற்கு...

எந்த இலக்கியக் கூட்டத்தில் தமிழ்நதியைச் சேரச் சொல்கிறீர்கள்?

வால்பாறைக் கூட்டத்தில் அ.மார்க்ஸ் தலைமையில் ஒரு எழுத்தாளக் கும்பல் 'புல் மப்பில்' தலித் எழுத்தாளரை கெட்ட வார்த்தைகளில் திட்டி கலாசார அராஜகம் புரிந்ததே, அந்தக் கும்பலுடன் சேரச் சொல்கிறீர்களா?

அல்லது...

சாராய போதையில், கூலி கேட்ட தொழிலாளியை அடித்துவிட்டு, ஆமாம் அடித்தேன் என்று வெட்கமில்லாமல் எழுதுகின்ற ஷோபா சக்தியுடனும், அவர் இந்தியா வரும்போது வாங்கித் தருகிற பாட்டிலுக்காக பின்னாடியே அலைகின்ற ஒரு கும்பலுடன் சேரச் சொல்கிறீர்களா?

அல்லது...

மேற்கூறிய நிகழ்வுகளையெல்லாம் ஒரு இடத்தில்கூட கண்டிக்காமல், பால் சக்காரியா என்று ஒருவர் தங்கள் கட்சியினரால் தாக்கப்பட்டதை வசதியாக மறந்துவிட்டு, லீனாவுக்காக மட்டும் கருத்துசுதந்திரம் கோரி அறிக்கை விடுகிறார்களே த.மு.எ.ச.க., அந்தக் கூட்டத்தில் சேரச் சொல்கிறீர்களா?

அல்லது...

பெண்ணிய எழுத்து என்பதையே கேவலப்படுத்தி எழுதி, அதற்கு விமர்சனம் வந்ததும், வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் லீனாவுடன் சேர்ந்து அவர் நடத்தும் கருத்து சுதந்திரத்திற்கான கூட்டத்தில் சேரச் சொல்கிறீர்களா?

தமிழ்நதி மேடம்! முடை நாற்றமடிக்கும் இந்தக் கும்பல்களுட‌ன் சேர்ந்து இருப்பதை விட தனித்து இருப்பதை கம்பீரமாக உணருங்கள்!!
gunasekar
இந்தக் கவின் பொன்னு கூட்டத்தலயும் போய் சொல்லிக்கொடுக்கிறதை அப்டியே ஒப்பிக்கிதுப்பா. லீனா ஆதரவு கூட்டத்தில ஆதவனோட கட்டுரையை வாசிச்சவங்க அப்படியே அதை வழிமொழிஞ்சிட்டு மேடையில் இருந்து இறங்கிட்டாங்க. ஏன் கவின் சொந்தமா இரண்டு வார்த்தை கூட பேசத்தெரியாதாமா?
குட்டி
அப்பாவி சிவாவிற்கு...

//எந்த இலக்கியக் கூட்டத்தில் தமிழ்நதியைச் சேரச் சொல்கிறீர்கள்?

வால்பாறைக் கூட்டத்தில் அ.மார்க்ஸ் தலைமையில் ஒரு எழுத்தாளக் கும்பல் 'புல் மப்பில்' தலித் எழுத்தாளரை கெட்ட வார்த்தைகளில் திட்டி கலாசார அராஜகம் புரிந்ததே, அந்தக் கும்பலுடன் சேரச் சொல்கிறீர்களா?//

இலங்​கை பிரச்சி​னை​ ​​​பேசி முடிவித்துவிட்ட க​​ளைப்பு தீர்த்துக் ​கொள்வதற்காக தமிழ்நதியும் வால்பா​றை கூட்டத்திற்கு ​சென்றிருந்தார். கவின்மலரும் கூட்டத்தில் இருந்தார்.

​​​​​மு​டை நாற்றமடிக்கும் அ​தே கும்ப​லுடன் ​இருந்தவர்தான் தமிழ்நதி. விட்டால் தமிழ்நதிக்கு புனிதர் பட்டம் கட்டிவிடுவீர் ​போலும்...
புரச்சி
ஜனநாயகவாதிகளின் ஜனநாயகம்:

மனித உரிமைவாதி அ.மார்க்ஸ் முன்னிலையில் தோழர்களை அடிக்கப் பாய்ந்த லீனா மணிமேகலை.

புரட்சிகரத் தோழர்களையும் மார்க்கிசியப் பேராசான் மார்க்சையும் மிக மோசமான முறையில் இழிவு படுத்தி லீனா மணிமேகலை மட்டகரமான கவிதை ஒன்றை எழுதியிருந்தார். அதற்கு வினவு தோழர்கள் எதிர்வினையாற்றியிருந்தார்கள். இதற்கிடையில் இந்து மக்கள் கட்சி லீனாவுக்கு எதிராக தமிழக காவல்துறையிடம் புகார் மனு ஒன்றை வழங்கியது. பாசிச இந்து மக்கள் கட்சிக்கு தமிழகத்தில் செல்வாக்கு ஏதும் இல்லை. இந்நிலையில் லீனா மணிமேகலைக்கு ஆதரவாக மனித உரிமை வாதி என்று தன்னைத் தானே கூறிக் கொள்ளும் அ.மார்க்ஸ் ஒரு அரங்கங்கக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்த நிலையில் ராஜன்குறை, அ.மார்க்ஸ், சுகுணாதிவாகர், லீனா உட்பட இன்னும் சிலரைத் தவிற வேறு எவரும் லீனாவுக்காக வரவில்லை.

மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் நாற்பது பேர் அக்கூட்டத்திற்குச் சென்றிருந்தனர். கூட்டம் தொடங்கியதும் அ.மார்க்ஸ்சிடம் ஜனநாயக ரீதியிலும் அமைதியாகவும் தோழர்கள் சில கேள்விகளைக் கேட்டனர். கேள்வி கேட்கும் உரிமையை மறுத்த மார்க்ஸ். தொடர்ந்து பேசுமாறு ராஜன்குறையை அழைத்தார். ஆபாசக் கவிஞர் லீனாவிடம் சில தோழர்கள் கேள்வி எழுப்பியதுமே அவர் பயங்கர உஷ்ணமாகி விட்டார். கடுமையான ரத்தக் கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள லீனாவுக்கு பிளட்பிரஷர் எகிற அ.மார்க்ஸ் முன்னிலையில் தோழர்களை கையோ ஓங்கியபடி அடிக்கப் பாய்ந்து விட்டார். ஜனநாயக ரீதியில் கேள்விகளை எழுப்ப வந்த தோழர்கள் அதிர்ந்து போய் அமைதியாகி. ராஜன் குறையை நோக்கி சில கேள்விகளை வீச அ.மார்க்ஸ் உடனே அரங்கத்தை விட்டு வெளியே போங்கள் என்று டென்ஷனாகி கத்த ஆகப்பெரிய ஜனநாயகவாதியின் அஹிம்சை முகத்தைக் கண்ட தோழர்கள் ஜனநாயக ரீதியில் கோஷமிட்டபடி அரங்கை விட்டு வெளியேறினார்கள்.

http://inioru.com/?p=12299
அருள்
//சங்கர ராம சுப்ரமணியன் எழுதிக்கொள்வது.//

//சர்ச்சைக்குள்ளான கவிதை ஒரு நள்ளிரவுக் குடியில் சொல்லச் சொல்ல எழுதப்பட்டது.//

அய்ய்ய்ய்யையோ!

நள்ளிரவுக் குடியில் சொல்லச் சொல்ல எழுதுவதுன்னா என்னாங்க? குடிக்கும் கவிதைக்கும் என்னாங்க உறவு ? குடிச்சாதான் கவிதை வருமா?

சின்னப் பசங்கள கெடுக்காதீங்க, ப்ளீஸ்
siva
குட்டி,

தமிழ்நதிக்கு நான் ஏன் புனிதப்பட்டம் சூட்டவேண்டும்? இங்கு யாரும் புனிதர்கள் அல்ல.

தமிழ்நதி வால்பாறைக் கூட்டத்துக்குப் போனது மட்டுந்தான் உங்களுக்குத் தெரியும். அங்கு தமிழ்நதி, அனார், இளம்பிறையின் கவிதைத் தொகுப்புகள் விமர்சிக்கப்படாமல் புறமொதுக்கப்பட்டது உங்களுக்குத் தெரியாது. செல்மா பிரியதர்ஷன் இன்னபிற லீனாவின் அடிவருடிகளின் தொகுப்புகள் விமர்சிக்கப்பட்டன. அதைச் சமாளிப்பதற்காகவே லீனா ஈழத்தமிழ்க் கவிஞர்களின் தொகுப்புகளை விமர்சிக்கவென அவசரமாக ஒரு கூட்டம் நடத்தியதும், அதில் தமிழ்நதி கலந்துகொள்ளாமல் தவிர்த்ததும், அந்தக் கூட்டத்தில் மேன்மைமிகு சுகன் அவர்கள் இலங்கையின் தேசியகீதத்தை இசைத்ததும் இணையத்தில் பதியப்பட்டிருக்கின்றன.

நேரமிருந்தால் தேடிப் படித்துப் பார்க்கவும்.
வசுமித்ர
தோழி மினர்வாவுக்கு......

லீனா மணிமேகலை பற்றி நீங்கள் எழுதியுள்ளவை... மற்றும்..... புரட்சி... பெண்ணியம்...பற்றி படித்தேன். நல்லது. மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் இவர்களை நீங்கள் படிக்கிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி கொள்கிறேன். உங்களுக்கு மார்சியம் போதிக்கும் ஆசான்களுக்கு என் அன்பு. எல்லாவற்றையும் பேசிவிடலாம்தான் என்ன செய்ய. உங்கள் சென்னை வரவை நானும் அறிந்தவன். வந்த புதிதில் உங்கள் நண்பர்கள் என் நண்பர்கள். லீனா கவிதையை நீங்கள் விமர்சனம் செய்த முறை எனக்குப் புரிகிறது. அந்த கவிதையின் மேல் உங்களுக்குள்ள அறிவைப் புரிந்து கொள்ள முடிகிறது. நிற்க. அது உங்கள் புரிதல். உங்கள் விமர்சனம். அதை நான் மதிக்கிறேன். ஆனால் .....

‘அரைகுறை பெண்ணிய அரசியல் அறிவுடன் ஒரு கவிதையையும் எழுதிவிட்டு, அதற்கு சப்பைக்கட்டு கட்ட, தனது நண்பர்களையும் ஏவிவிடுகிறார்.’

நீங்கள் ஏற்பாடு செய்திருக்கும் இந்த தமாசுக் கூட்டம் எப்படி சிரிப்பாய் சிரிக்கிறது பாருங்கள்! இதை நீங்கள் முன்கூட்டியே - அதாவது நீங்கள் அழைத்தும் பல எழுத்தாளர்கள் இதில் கலந்து கொள்ள மறுத்தபோதே - எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனால் தனக்குத்தானே கோபுரம் கட்டும் அவசரம் உங்களது கண்ணை மறைத்து விட்டது. இப்போது என்றில்லை, எப்போதும் இப்படித்தான் இருக்கிறீர்கள். நான் சில வருடங்கள் பத்திரிக்கைத் துறையில் வேலை பார்த்திருக்கிறேன். உங்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தாலே, சக பத்திரிக்கையாள நண்பர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார்கள். நீங்கள் வந்துவிட்டுப் போனாலோ, உங்களுக்குப் பின்னால் வெடித்துச் சிரிப்பார்கள். வேறு எந்த பெண் படைப்பாளியைப் பார்த்தும் அவர்கள் இப்படி சிரிப்பதில்லை. எப்போதும் self marketing செய்வதில் தாங்கள் காட்டும் முனைப்புதான் பலரது கேலிக்கும் ஆளாக்குகிறது. இதை கீற்று குழுமத்தில் சேர்ந்தபின்பு, உணரும் சந்தர்ப்பம் எனக்கும் வாய்த்தது. லயோலா கல்லூரிப் பிரச்சினை தொடர்பாக நீங்கள் அனுப்பிய கட்டுரையுடன் 2 பக்க சுயவிளம்பர கேட்லாக்கும் வந்தது. அத்துடன் விதவிதமான புகைப்படங்கள் வேறு. கீற்றுவுடனான எனது மூன்று வருடப் பயணத்தில் வேறு எந்த ஆண்/பெண் படைப்பாளியோ இப்படி கேட்லாக் அனுப்பியதை நான் பார்த்ததில்லை.

நீங்கள் எழுதிய இவ்வார்த்தையை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் முதன்முதலாக சென்னை வந்த போது நானறிந்து சிரித்தவர்களை நானறிவேன்.. நீங்களும் அறிவீர்கள். உங்களிடம் பழகிய ஆண்கள், அவர்கள் நடந்து கொண்ட விதம், அதற்கு நீங்கள் எதிர்வினை ஆற்றிய விதங்கள்...புன்னகைகள்..... இதை ஒரு குறிப்பிட்ட அளவில் நானும் எழுதமுடியும். ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாறிப் பூசிக்கொள்வதற்கு என்ன செய்ய முடியும். படைப்பை படைப்பால் (அது குப்பையாக இருந்தாலும்) எதிர்கொள்வதே முறை என நான் நினைக்கிறேன். லீனாவின் கவிதைக்கு விமர்சனம் எழுதுவதற்குப் பதில் லீனாவின் தனிப்பட்ட வாழ்க்கையை உங்கள் புரிதலின் படி எழுதியிருக்கிறீர்கள். நல்லது. அதே புரிதலோடு நானும் உங்களைப் பற்றி எழுதலாம்தான். என்ன செய்ய மார்க்சியத்தில் குறை அறிவு கொண்டவன் நான். அதுவே என்னை தடுக்கிறது.

இன்னொன்று அ.மார்க்ஸ் பற்றி எழுதியுள்ளீர்கள். எனக்கு புன்னகை வருகிறது. உங்கள் குழந்தைத்தனம் இன்னும் மாறவில்லை. லீனாவுக்கு சப்போர்ட் செய்பவர்கள்தான் நாளை உங்களுக்கும் சப்போர்ட் செய்வார்கள். அவர்கள் லீனாவின் கவிதைக்கு ஆதரவு அளித்திருக்கலாம். அளிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் யாரும் மார்க்சியத்திற்கு எதிரானவர்கள் கிடையாது. அதை உறுதியாக என்னால் சொல்ல முடியும்.

நீங்கள் குறைந்த பட்ச காலம் சீரியல், சினிமா வாய்ப்புகள் தேடி அலைந்தது எனக்குத் தெரியும். அப்போது நீங்கள் சந்தித்த ஆண்கள் எப்படி நடந்து கொண்டார்கள் தோழி.... உங்கள் கவிதைகளை சிவப்புக் கம்பள வரவேற்பாடுடனா வரவேற்றார்கள். யோசித்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் நான் விவாதிக்கத் தயார்.

ஆதியில் வார்த்தை இருந்தது – பைபிள்.
-வசுமித்ர
mathivathani
தோழர் வசுமித்ர, உங்கள் மீது கொஞ்சம் மதிப்பு இருந்தது. அதுவும் கிழிந்து தொங்குகிறது. எது தோழர் தனிப்பட்ட வாழ்க்கை? ஊடகங்களில் தன்னைப் பற்றிய செய்திகள் தொடர்ச்சியாக வர வேண்டும் என்பதற்க்காக பத்திரிக்கை அலுவலகங்களுக்கு போர்ட்போலியோக்களுடன் ஏறி இறங்குவதா? லீனாவைப் பற்றிய மினர்வாவின் எந்தக் குற்றசாட்டுக்கும் பதில் சொல்லாமல் மினர்வாவைப் பற்றி பேசுவேன் என்று பயமுறுத்துகிறீர்கள். எல்லோருக்கும் ஊடகங்களில் இடம் பெற வேண்டும் என்கிற விருப்பம் இருக்கும். மினர்வாவிற்கும் அப்படி இருந்திருக்கலாம். அதற்கு நியாயமான, நேர்மையான வழிகள் உண்டு. ஆனால் லீனாவின் விருப்பம் அலாதியானது. எந்த வழியிலாவது எப்படியாவது ஊடகங்களில் இடம்ப்பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். சர்ச்சைகளை அதனால்தான் அவர் தொடர்ந்து உருவாக்குகிறார். இது ஒருவிதமான மனநோய். அவரைச் சுற்றி இருக்கும் ஆண்கள் இத்தனை பெரும் லீனாவின் இடத்தில் ஒரு ஆண் இருந்தால் இருப்பார்களா? லீனா பாலியல் புரட்சி பேசும் பெண். அதனால்தான் அவரைச் சுற்றி இத்தனைக் கூட்டம். மார்க்சியத்துக்கு எதிரானவர்கள் கிடையாது என்று யாரைச் சொல்கிறீர்கள்? உங்கள் கூட்டத்தில் மார்க்சியத்தின் மிகப்பெரிய எதிரி லீனா மணிமேகலை. பெருந்தேவி-ஜமாலனின் கவிதைகள் குறித்த நேர்மையான பதிவிற்கு லீனாவின் பதில் இது.
It is well known that the Marxists, despite, the treatises by Engels on private property and family, have not bothered to pursue any revolutionary thinking in these lines. The family, not only was destroyed, but became strengthened. This is so everywhere. Women have become pretty mascots all over the communist world, one example being China during the Olympic Games. The women who thought socialism would be their natural ally have been disappointed. This is the basic idea of this poem. இதில் இவர் மார்க்சியவாதிகளின் பிற செயல்பாடுகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், வெறுமனே அவர்களை ஆண்குறிகளாக ப்பார்க்கிறார். அதுவும் யாரை? உ.ரா.வரதராஜனை தற்கொலைக்குத் தூண்டிய பிரகாஷ் கரத்தையோ அல்லது டி.ராஜாவையோ அல்ல. பிடலை, சேவை, எங்கெல்ஸைதான் அப்படி பேசுகிறார். இப்போதைய மார்க்சியவாதிகள் ஆண்கள் இல்லையா? லீனாவிற்கு தெரியும் யாரை விமர்சனம் செய்யலாம் யாரை செய்யக்கூடாது என்று. இதையெல்லாம் கேட்டால் தனிப்பட்ட வாழ்வு என்கிறீர்கள். என்னப் பொறுத்தவரை லீனாவின் கருத்துரிமைக்கு ஆதரவாக களத்தில் நின்ற தோழர்கள் யாருக்கும் ஒருவேளை கவிதை புரியவில்லை, அல்லது மார்க்சியம் புரியவில்லை.
david chinnasamy
தொடர்ந்து அவதூறாக எழுதுவதும், எழுதியவற்றுக்கு விளக்கம் கேட்டால் அது கலாச்சார அடிப்படைவாதம் என்று சொல்வதும் வெட்கக்கேடு. லீனாவுக்கும், அ.மார்க்சுக்கும் தமிழ்நாட்டில் என்ன அடக்குமுறை வந்துவிட்டது? எதிர்வினைகளை நேர்மையாக எதிர்கொள்ளாமல் தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தால், யாரும் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். அந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லத் துப்பில்லாமல், கேள்வி கேட்பவர்களை அராஜகவாதிகளாக சித்தரிப்பது என்ன நியாயம்?

கேள்வி கேட்பவர்களைப் பார்த்து அஞ்சி நடுங்குவதும், அவர்களை அடிக்கப் பாய்வதுமான நடவடிக்கைகளை, ஏதோ கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டம் போல அ.மார்க்சும், லீனாவும் என்.டி.டி.வி.யில் பேசியிருக்கிறார்கள். விளம்பரத்தின் மீதான இவர்களின் மோகம் இந்தளவிற்கு நாறுகிறது. இதில் என்னடாவென்றால், வசுமித்ர போன்றவர்கள் லீனாவுக்காக தாம்தூம் என்று குதிக்கிறார்கள். எல்லாம் வெட்கக்கேடு!!
Guest
ஒட்டுமொத்த மார்க்சியத்தையே புறங்கையால் ஒதுக்கும் கவிஞனைக்கூட மார்க்ஸால் அணைத்துக்கொள்ள முடியும்.
- ஷீலா ரௌபாத்தம்
தோழமை மதிவதனிக்கு....

வேசியையும் பாலியல் தொழிலாளி என்றுதான் அழைக்கவேண்டுமென மார்க்சியம் கருதுகிறது. போர்ட் போலியோக்களுடன் ஏறி இறங்கினால் அது தவறான ஒன்றா என்ன. எனக்குப் புரியவில்லை. நான் யாரையும் மிரட்டவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. தனிப்பட்ட வாழ்க்கையை யாரேனும் மனம் திறந்து பேசினால் அது பிறரைக் கூச செய்யும் ஒன்றாகவே இருக்குமென நான் நம்புகிறேன்.

மேலும்....

எல்லோரும் மனந்திறந்த விவாதத்திற்கு வரும் பட்சத்தில், இனம், மொழி, ஜாதி, யுத்தம் இப்படி எதுவுமே இருக்காதே.
பின் ஏன் இத்தனை பிரிவுகள், பிளவுகள். தோழமையே... இரு கவிதை எழுதுவதன் மூலம் மார்க்ஸையோ, கம்யூனிஸத்தையோ கறை படுத்திவிடமுடியும் என நாம் நம்புவது எதைக் குறிக்கிறது, மர்க்ஸியத்தின் மீதான நம் சந்தேகத்தையா.

எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் குறிப்பிடும் போலிக் கம்யூனிஸ்ட்டுகளான cpi, cpm எந்த மேடையிலும் எந்தப் பெண்ணையும் விபச்சாரி என விமர்சித்ததில்லை. ஒரு பெண் பாலியல் சுதந்திரம் பற்றி பேசுவதென்பது அப்பெண்ணின் பாலியல் அலைச்சல் எனக் கூறுவது என்னால் சகிக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது. வருத்தம் கொள்கிறேன். அப்படியானால் மார்க்ஸ் பற்றி சே பற்றி பேசுபவர்கள் அனைவரும் கம்யூனிஸ்டுகள், புரச்சியாளர்கள் அப்படித்தானே. இதற்கும் மேலும் என்னால் விளக்கமுடியும். சே வின் தனிப்பட்ட வாழ்க்கையையும், அவரது அர்ப்பணிப்பையும் நம்மால் ஒன்றாக வைத்துப் பார்க்க முடியுமா தோழமையே. ஆண்டர்சன் எழுதிய (CHE GUEVARAA Revolutionary Life ) சே சரிதையில் சே பலமுறை பெண்களை விபச்சாரி என்றழைத்ததைப் பதிவு செய்திருக்கிறார் அதற்காக சேவை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிடமுடியுமா என்ன. ஹெலன் டெமூத்துக்கும் மார்க்ஸ்க்கும் இருக்கும் உறவை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறதே. எல்லாவற்றிற்கும் மேலால ஒரு கருத்தை விவாதக்களத்துக் கொண்டு வரும்பொழுது கருத்தை ஆதரிப்போர் எல்லாம் அதுவேதான் என்பது என்ன வகை.

இறுதியாக...நான் எந்தக் கூட்டத்தையும் சேர்ந்தவன் கிடையாது மதிவதனி.
மதி
தோழர், பதிலுக்கு நன்றி. நமக்குள் என்ன முரண்பாடு என்று தெரியவில்லை. நீங்கள் சொல்வது போல சே பற்றி இன்னும் மோசமான விஷயங்களை நான் படித்திருக்கிறேன். லெனின், கொலண்டாயின் ஒரு கோப்பை தண்ணீர் தத்துவத்தை நிராகரித்தார் என்பதற்காக நாம் லெனினை நிராகரிக்க முடியுமா? மார்க்ஸ், ஹெலன் டெமூதை கடைசிவரை ரகசியமாகவே வைத்திருந்தார் என்பதற்காக மார்க்ஸை ஒதுக்க முடியுமா? ஆனால் லீனாவின் கவிதைகள்தான் அதைச் செய்கின்றன. மர்க்ஸ், லெனின், சேவின் பிற ஆக்கக்ங்களை கருத்தில் எடுக்காமல் அவர்களை ஆண்குறி என்று சொல்கின்றன. நான் மேல் சொன்ன லீனாவின் விளக்கமும் அதையே செய்கிறது உண்மையில் நீங்கள் பேசவேண்டியது லீனாவிடம். பாலியல் சுதந்திரத்தை பேசும் பெண் பாலியல் அலைச்சல் கொண்டவள் என்று நான் சொல்லவில்லை. அதனால்தான் அவரைச் சுற்றி ஆண் கூட்டம் இருக்கிறது என்று மட்டுமே சொல்கிறேன். உண்மையைச் சொல்லுங்கள், லீனா பாலியல் சுதந்திரம் பேசும் போது ரசிக்கும் எத்தனை பேர் தங்கள் குடும்பங்களில் பெண்கள் பாலியல் சுதந்திரம் பேசுவதை அனுமதிப்பார்கள். இந்த இரட்டை நிலைப்பாடு நோக்கியே எனது கேள்வி. பாலியல் தொழிலாளிகள் மீது எனக்கு நிரம்ப மதிப்பு உண்டு. ஆனால் அதற்கும் நீங்கள் சொல்லும் போர்ட்போலியோவை தூக்கிக்கொண்டு அலைவதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. லீனாவின் பின்புலம் தெரிந்தும் நீங்கள் இதை சொல்வது ஆச்சரியம். ஒரு மார்க்சிய பின்புலத்தில் வந்த ஒருவர், பெண்ணிய அக்கறைகள் கொண்டவர் தன்னை அதித்தீவிரமாக முன்னிலைப்படுத்திக்கொள்ள முனைவது முரண். இதைதான் நான் சொல்கிறேன். போர்ட்போலியோ தூக்கிக்கொண்டு படக்கம்பெனிகளாக ஏறும் எத்தனையோ பேர் மீது எனக்கு அன்பும் அனுதாபமும் உண்டு. இறுதியாக ஒன்று சொல்கிறேன். லீனாவின் எழுத்தை தடை செய்ய வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. ஆனால் அது குறித்த விமர்சனங்களே எழக்கூடாது என்பது என்ன வகை என்று புரியவில்லை.
அன்பு
லீனாவின் விளம்பர மோகத்தைப் பற்றிப் பேசினால் 'நீ மட்டும் ஒழுங்கோ?'என்று வசுமித்ர பதிலுக்குக் கேட்டிருக்கிறார். கட்டுரை எதைப் பற்றிப் பேசுகிறது என்பதை அவர் புரியவில்லையோ...? தன்னை அதீதமாக முன்னிறுத்துவதற்காக லீனா எதையும் செய்யக்கூடியவர்... தன் முதுகின் பின் மற்றவர்கள் தன்னைப் பார்த்துச் சிரிக்கிறார்கள் என்ற அறிவே இல்லாமல் நடந்துகொள்கிறார் என்பதையே மினர்வா எழுதியிருந்தார்.

லீனாவைத் திருப்திப்படுத்துவதற்காக முன்னாள் தோழி என்றும் பார்க்காமல் மினர்வாவை இப்படித் தாக்கியிருப்பது அற்பமான செயலாகத் தோன்றுகிறது. விஜய்-அஜித் ரசிகர் பாணியில் இருந்தது வசுமித்ரவின் வக்காலத்து.
சரவணன்
நாகராஜன்

"நிஜமாலுமே வசுமித்ர மாதிரியான‌வங்களுக்கு கருத்து சுதந்திரத்துலே அக்கறை இருந்துச்சின்னா, மதுரையில அகராதி என்ற பெண் ஈழப்போராட்டத்துக்கு ஆதரவா பேசுறாங்கங்கறதுக்காக போலீசாராலே கடுமையா தாக்கப்பட்டாரே, அவங்களுக்காக பேசியிருந்திருக்கணும். ஏன் பேசலைன்னா அவங்க லீனா மாதிரி அழகிய பெண் இல்லை. பாலியல் புரட்சி பேசுறவங்க இல்லை."

'லீனா மாதிரி அழகிய பெண் இல்லை...'இன்னமுமா அப்டிச் சொல்றீங்க....? புகைப்படத்தைப் பாத்துட்டுப் பேசாதிங்க. தப்பு. அகராதி மிக அழகான பெண்ணாக இருப்பாங்க என்கிறதுல எனக்கும் சந்தேகம் கிடையாதுங்க.
nagarajan
அப்படி போடுங்க மதிவதனி...

இந்த சூரப்புலிங்க எல்லாம் லீனா அக்காவை சப்போர்ட் பன்றாங்கன்னா, அதுக்கு காரணமே அவங்க உலகின் அழகிய முதல் பெண்ணாவும், பாலியல் புரட்சி பெசுறதும்தான். சும்மா லீனாவுக்கு பக்கத்துலே நிக்கிறோம்னு சொல்ல முடியாதில்லையா. அதான் கருத்து சுதந்திரம் அது இதுன்னு பிலிம் காட்றாங்க...

நிஜமாலுமே வசுமித்ர மாதிரியான‌வங்களுக்கு கருத்து சுதந்திரத்துலே அக்கறை இருந்துச்சின்னா, மதுரையில அகராதி என்ற பெண் ஈழப்போராட்டத்துக்கு ஆதரவா பேசுறாங்கங்கறதுக்காக போலீசாராலே கடுமையா தாக்கப்பட்டாரே, அவங்களுக்காக பேசியிருந்திருக்கணும். ஏன் பேசலைன்னா அவங்க லீனா மாதிரி அழகிய பெண் இல்லை. பாலியல் புரட்சி பேசுறவங்க இல்லை.

வசுமித்ர கோச்சுக்கலைன்னா, இன்னொன்னும் சொல்றேன். லீனா மாதிரியானவங்களை விட, அந்தத் தாக்குதலுக்குப் பிறகும் போராடிக்கிட்டு இருக்கிற அகராதிதான் உலகின் அழகிய பெண்.
வசுமித்ர
என்னைப் பொறுத்த வரை கவிதையில் லீனா கொச்சைப்படுத்தியது மார்க்ஸியம் பேசும் ஆண்களை. புரட்சி பேசும் ஆண்களின் தனி மனித வேட்க்கையை. ஆனால் நீங்கள் விமர்சனம் பண்ணியது லீனாவின் தனிப்பட்ட வாழ்க்கையை.... அதே போல் மார்க்ஸ்க்கும் ஏங்கெல்ஸ்க்கும், சேவுக்கும், தனிப்பட்ட வாழ்க்கை இருக்கும். மேடைகளில் எங்கும் அவை பேசப்படுவதில்லை. மார்க்ஸியம் பேசுபவர்கள் அனைவரும் மார்க்ஸ்ஸாய் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. அதேபோல் யார் வாழ்வையும் யாரும் அந்தரங்கமாய் பேசலாம் என்றால் அது கொஞ்சம் கஷ்டம்தான். அதை என்னாலும் பேச முடியும் என நான் நினைப்பதே என்னை அறுவெறுப்பானவனாக எண்ணச்செய்கிறது.

லீனா தன் கவிதையில் அவர் எங்கும் மார்க்ஸ் அப்படிப்பட்டவன், சே இப்படிப்பட்டவன் என சொல்லவில்லை. ஆனால் அப்படிச் சொன்ன பெரும் படைப்பாளிகள் தமிழில் உண்டு. என்னால் எடுத்துக்காட்ட முடியும். இப்பொழுது எதிர்க்கிறவர்கள் அப்பொழுது மௌனமாய் இருந்தது ஏன் என்பதும் எனக்கு புரிகிறது.

சிறு குறிப்பு....

என்னை நான் இத்தளத்தில் அறிமுகப்படுத்திக்கொண்டதே வசுமித்ர என்றுதான். உரிமையோடு வசுபாரதி என அழைத்திருக்கிறீர்கள் Anonymous உங்கள் அழைப்புப் பெயரைச் சொன்னால் களி கூர்வேன். நிறைய விவாதிக்கலாம்.
- வசுமித்ர

அன்புவுக்கு....
தோழிகளில் முன்னால் தோழி ,இந்நாள் தோழி என்று நான் வரையறுப்பதில்லை. நான் நீ மட்டும் ஒழுங்கோ என மினர்வாவைக் கேட்கவில்லை. தட்டையாகப் புரிந்து கொள்ள வேண்டாம். எல்லோரின் அந்தரங்கமும் ஏன் எல்லோருக்கும் பிடிப்பதில்லை. அப்படியெனில் உங்கள் வாழ்வை நான் பேசலாமா அது உங்களுக்கு உகந்ததாக இருக்குமா..நானும் பேசலாமா என கேட்பதுதான்.. பதறவேண்டாம். அஃது மிரட்டல் அல்ல.
Guest
கவிதைகளின் மூலம் மார்க்ஸ் அல்லது மார்க்சியத்தையும் களங்கப்படுத்தி விட்டார்கள் என்று கூறுவது மார்க்சியத்தின் மீதான நமது சந்தேகத்தைக் காட்டும் என்று கூறும் வசுபாரதி...

பிறகு ஏன், லீனாவை விமர்சித்து கட்டுரை எழுதுவதை மட்டும் குறை கூறுகிறீர்கள், கண்டனம் தெரிவிக்கிறீர்கள்? கூட்டத்தில் கலந்துகொண்டது போதாது என்று இங்கேயும் லீனாவுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். கட்டுரைகள் மூலம் லீனாவைக் களங்கப்படுத்துகிறார்கள் என்று கூறுவது லீனாவின் மீதான் உங்களது சந்தேகத்தைக் காட்டுகிறதே!!

மார்க்சுக்கு ஒரு நியாயம், லீனாவுக்கு ஒரு நியாயமா? மார்க்ஸ் மீதான லீனாவின் கவிதை குற்றமில்லை என்றால், லீனா மீதான விமர்சனமும் குற்றமில்லைதான்.
அன்பு
வசுமித்ர,

"நான் நீ மட்டும் ஒழுங்கோ என மினர்வாவைக் கேட்கவில்லை. தட்டையாகப் புரிந்து கொள்ள வேண்டாம்."

அப்படியா? நீங்கள் அப்படிக் கேட்கவில்லையா?

"எல்லாவற்றையும் பேசிவிடலாம்தான் என்ன செய்ய. உங்கள் சென்னை வரவை நானும் அறிந்தவன். வந்த புதிதில் உங்கள் நண்பர்கள் என் நண்பர்கள்."

"நீங்கள் முதன்முதலாக சென்னை வந்த போது நானறிந்து சிரித்தவர்களை நானறிவேன்.. நீங்களும் அறிவீர்கள். உங்களிடம் பழகிய ஆண்கள், அவர்கள் நடந்து கொண்ட விதம், அதற்கு நீங்கள் எதிர்வினை ஆற்றிய விதங்கள்...புன்னகைகள்..... இதை ஒரு குறிப்பிட்ட அளவில் நானும் எழுதமுடியும்."

"
நீங்கள் குறைந்த பட்ச காலம் சீரியல், சினிமா வாய்ப்புகள் தேடி அலைந்தது எனக்குத் தெரியும். அப்போது நீங்கள் சந்தித்த ஆண்கள் எப்படி நடந்து கொண்டார்கள் தோழி...."

மேற்கண்டவற்றில் எல்லாம் 'நீ மட்டும் ஒழுங்கோ...?'என்ற கேள்வி தொக்கிநிற்கவில்லை என்று நீங்கள் சொன்னால்... 'சரிதாங்க'என்று நான் கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனென்றால், நீங்க கவுஞ்ஞ்ஞ்ஞர் ஆச்சே...! ஒங்க அளவுக்கு இல்லைன்னாலும் நாங்களும் பள்ளிக்கூடம் போயிருக்கோம் சாரே.

தட்டை, கட்டம் கட்டிப் பேசுறது, மொண்ணை இப்டிக் கொஞ்சம் வார்த்தை வைச்சுக்கிட்டு வெள்ளாட வராதீங்க.
Minerva
வசுமித்ரவுக்கு,

லீனா மணிமேகலையின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுதியிருப்பதாக சொல்கிறீர்கள். தன்னுடைய சொந்தப் பிரச்சனையை மொத்த பெண்களின் பிரச்சனையாக்கி அதை எப்படி தன்னுடைய விளம்பரத்திற்குப் பயன்படுத்தலாம் என்று ஒருவர் யோசிப்பது எப்படி அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையாக இருக்க முடியும் என எனக்குத் தெரியவில்லை.

குப்பையில் போடப்பட்ட இந்து மக்கள் கட்சியின் புகாரை வைத்துக் கொண்டு தனக்கு ஆதரவாக கூட்டத்தைத் திரட்டுகிறார். ஏதோ தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக மிகப்பெரிய அடக்குமுறை இருப்பதுபோல் தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிறார். ஆனால் அந்தக் கவிதை குறித்த விமர்சனத்துக்கு இதுவரையில் அவர் பதில் சொல்லவில்லை. அவரை ஆதரிக்கும் - மார்க்சியத்தைக் கரைத்துக் குடித்த அறிவாளிகளும் பதில் சொல்லவில்லை. அவர் மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களை ஆணாதிக்கம் என்ற ஒற்றைச் சொல்லில் கடந்து விட்டனர் லீனாவும் அவரது ஆதரவாளர்களும். பெண் எழுத்தை விமர்சனம் செய்தாலே அது ஆணாதிக்கக் கருத்தா? இது என்ன விதமான அறம் என்றே தெரியவில்லை.

தனக்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், தன் பெயரை யாரும் மறந்து விடக்கூடாது என்பதற்காகவும் லீனா நடந்து கொள்வதை பத்திரிகை நண்பர்கள் எப்படி கேலி செய்வார்கள் என்பதைத் தான் என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எவ்வளவோ இருக்க லீனா போன்றவர்களின் நடவடிக்கைகளால் உண்மையிலேயே பிரச்சனைக்குரிய பெண்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதைத் தான் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

யோனி, முலை போன்ற வார்த்தைகள் உழைக்கும் பெண்களுக்கு ஒருபோதும் விடிவைத் தராது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வசு, அந்த வார்த்தைகளின் கிளர்ச்சியிலேயே நீங்கள் அதைக் கடக்க முடியாமல் தடுமாறுகிறீர்கள் போலும். அதனால் தான் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறது. கவிதை குறித்த என்னுடைய புரிதலை கேலி செய்திருக்கிறீர்கள். சரி என்னுடைய அறிவிற்கு எட்டியவரை புரிந்ததை வைத்து நான் விமர்சித்திருந்தேன். ஆனால் நீங்கள் அதை எப்படி புரிந்திருக்கிறீர்கள்? ‘லீனா கொச்சைப்படுத்தியது மார்க்ஸியம் பேசும் ஆண்களை . புரட்சி பேசும் ஆண்களின் தனி மனித வேட்கையை’ என்று சொல்கிறீர்கள்.

இதைத்தான் எதிர்க்கிறோம். மார்க்சியம் பேசும் ஆண்கள் எல்லாம் பாலியல் வக்கிரம் பிடித்தவர்களா? சென்னைக்கு வந்த நாட்கள் முதல் த.மு.எ.ச.க., ம.க.இ.க. கலை இலக்கிய விழாக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சென்று வருகிறேன்.கல்லூரி நாட்களில் இருந்தே அவர்களுடன் இணைந்து வேலையும் செய்திருக்கிறேன். பெண் வேட்கை பிடித்த எந்த கம்யூனிஸ்டையும் நான் இதுவரை சந்திக்கவில்லை. ஆனால் லீனா அப்படியொரு குற்றச்சாட்டை வைக்கிறார். யார் யாருடன் பழகிய அனுபவத்தில் இப்படியொரு குற்றச்சாட்டை முன்வைக்கிறார்? அவருக்கு அத்தகைய அனுபவங்களே இருந்தாலும், அது அவர் பழகிய நபர்கள் சார்ந்த பிரச்சினை; அதை எப்படி ஒட்டுமொத்த மார்க்சிஸ்ட்களின் மீதான குற்றச்சாட்டாக, ஒட்டுமொத்த பெண்களின் பிரச்சினையாக பேசுகிறார்?

தன்மீதான விமர்சனங்களை எப்படி தந்திரமாக கருத்து சுதந்திரத்திற்கான போராட்டம் என முன்வைக்கிறார். இது முழுக்க முழுக்க லீனாவின் விளம்பரத்திற்காக அ.மார்க்ஸ் நடத்திய கூட்டம். இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர்களிடமும் பதில் இல்லை. உங்களிடமும் பதில் இல்லை. என்னை விமர்சிக்க கிளம்பி விட்டீர்கள். பரவாயில்லை வசு, கேள்விகளை சந்திக்க உங்களைப் போல் எனக்கு பயமேதும் இல்லை.

நான் சென்னை வந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. எப்படியாவது சென்னைக்குப் போய் சினிமா இயக்குனராகி, சமுதாயத்தைத் திருத்தி என்பன போன்ற எந்தக் கனவுகளோடும் நான் நாகர்கோயிலில் இருந்து சென்னைக்குக் கிளம்பி வரவில்லை. (அப்படி வருவது தவறு என்று சொல்வதல்ல இதன் நோக்கம்). மலையாள சேனல் ஒன்றின் செய்தியாளராக நான் கேரளாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். (அங்கே மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பில் வேலையும் செய்திருக்கிறேன். உங்கள் அளவிற்கு இல்லையென்றாலும் ஒரளவிற்காவது மார்க்சியப் பரிச்சயம் இருக்கிறது என்பதற்காக இந்தத் தகவலை சொல்கிறேன்.)

மலையாளத்தோடு தமிழும் தெரிந்தவள் என்கிற அடிப்படையில் நிறுவனம் என்னை சென்னைக்கு மாற்றியது. தமிழ் சீரியல்கள் பற்றிய ஒரு செய்திக்காக தொலைக்காட்சித் தொடர் இயக்குனர் திருச்செல்வம் அவர்களைச் சந்திக்க சென்றபோது தான் வசு நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள். அந்தத் தொடரில் நீங்கள் உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருந்ததாக நினைவு. அதன்பிறகு நண்பர் பாஸ்கர் சக்தியின் வீட்டில் வைத்து அடிக்கடி உங்களை சந்தித்திருக்கிறேன். 2005ல் திருவண்ணாமலையில் நடைபெற்ற த.மு.எ.ச.மாநாட்டிற்கு நாம் எல்லோரும் இணைந்து தான் சென்றோம், இல்லையா? அங்கு வைத்து இலக்கியம் குறித்தும் கவிதைகள் குறித்தும் அதிக நேரம் என்னிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள். இலக்கியம் படிக்கிறவர் என்கிற முறையில் உங்கள் மீது எனக்கு மரியாதை இருந்தது. ‘ஜெயமோகன் என்னமா எழுதறார், எடுத்தா விஷ்ணுபுரத்தை சினிமாவா எடுக்கணும்’ என்றெல்லாம் பேசினீர்கள். நானும் ரசித்து கேட்டுக்கொண்டு இருந்தேன். ஏனெனில் எனக்கும் அப்போது ஜெயமோகன் எழுத்தின் மீது ஒரு மயக்கம் இருந்தது. (இப்போது இல்லை. நீங்கள் இன்னமும் ஜெயமோகனைத்தான் படிக்கிறீர்களா?)

நான் என்னுடைய சேனல் வேலையை விட்டபிறகு, தமிழ் நாளிதழ்களில் வேலைக்குச் சேர முயற்சித்துக் கொண்டிருந்தேன். இடைப்பட்ட காலத்தில் நீங்கள் பணிபுரிந்த தொலைக்காட்சித் தொடரின் படப்பிடிப்பிற்கு பலமுறை வந்திருக்கிறேன். தொடரின் இயக்குனர் திருச்செல்வம் எனக்கு (உங்களுக்கும்) நண்பர் என்ற முறையில் அதில் இணைந்து பணியாற்றலாம் என்றும் நினைத்திருந்தேன். ஆனால் அதற்குள் பத்திரிகையில் வேலை கிடைத்ததால் அதற்குச் சென்றுவிட்டேன்.

ஆனால் படப்பிடிப்புக்கு வந்த கொஞ்ச நாட்களில் என்னை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள்? ‘இயக்குனர் முன், நடிகர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறாள், திமிர் பிடித்தவள்’ என்று இருவருக்கும் பொதுவான நண்பர்களிடம் சொன்னீர்கள். எனக்கு நண்பர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாய் மற்றவர்களிடம் புலம்பினீர்கள். நாகர்கோவில் மாதிரியான மிகவும் பிற்போக்கான ஒரு பகுதியில் இருந்து வந்திருப்பவள், நிறைய படிக்கிறவள், புதிய கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறவள், கொஞ்சம் எழுதத் தெரிந்தவள் என்கிற அடிப்படையில்தான் எனக்கு நண்பர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆனால் இதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் என்னைப் பற்றி அவதூறுகளை பரப்பிக் கொண்டிருந்தீர்கள்.

“நீங்கள் முதன்முதலாக சென்னை வந்தபோது நானறிந்து சிரித்தவர்களை நானறிவேன், நீங்களும் அறிவீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தது இந்தப் பின்னணியில் தான் எனப் புரிந்து கொள்கிறேன். அந்தக் கூட்டத்தில் நீங்கள் தான் பிரதானமாக இருந்தீர்கள் என்பதையும் நான் அறிந்தே இருந்தேன். பொதுவாக ஆண்களே நிறைந்திருக்கும் ஊடகங்களில் புதிதாக ஒரு பெண் வரும்போது, அவர்களை உங்களைப் போன்றவர்கள் சற்று எள்ளலுடன் தான் எதிர்கொள்கிறீர்கள். அவளை உங்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற்ற என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்வீர்கள்.

என்னைப் பார்த்து பிறர் சிரித்த்தாய் நீங்கள் சொல்வதற்கும் (ஒருவேளை சிரித்திருந்தால் எந்த அடிப்படையில் என்பதையும் நீங்களே கூறிவிடுங்கள் வசு) லீனா குறித்து நான் சொன்ன கருத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. என் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காய் என்னுடைய தோற்றத்தையோ, நான் ஒரு பெண் என்பதையோ நான் முன்னிறுத்தியதே இல்லை. என்னை யாராவது விமர்சித்தால் ஒப்பாரி வைத்துக் கொண்டு கூட்டணிக்கு ஆள் தேடவும் இல்லை. என்னை பிறர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கவும் இல்லை. யாரிடம் பழகினால் நமக்கு இலாபம் வரும் என்று யோசித்துப் பழகவும் இல்லை. எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளுக்காக என் சுயமரியாதையை விட்டுக்கொடுத்து ஒருபோதும் நடந்து கொண்டதுமில்லை. நான் நண்பர்களை நண்பர்களாகத் தான் பார்க்கிறேன்.

ஆனால் இதையெல்லாம் சொன்னால் உங்களுக்குக் கோபம் வருகிறது. உங்களுக்குப் பெண் என்பவள் பாலியல் புரட்சி செய்பவளாக இருந்தால் வசதி. இல்லையென்றால் திமிர் பிடித்தவள் என்று கதை பரப்புகிறீர்கள்.

கடைசியாக ஒன்று, நான் சந்தித்த ஆண்கள் என்னிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்று கேட்டிருந்தீர்கள். யாரும் எனக்கு சிவப்புக் கம்பள வரவேற்பெல்லாம் கொடுத்து விடவில்லை. நான் பெண் என்பதைக் காரணம் காட்டி அதை நான் எதிர்பார்க்கவுமில்லை.

இன்னொன்றும் குறிப்பிட்டிருந்தீர்கள், “உங்களது குழந்தைத்தனம் இன்னும் மாறவில்லை” என்று. கொஞ்சமேனும் குழந்தைத்தனத்தோடு இருப்பதால் தான் உங்களை போன்றவர்களை இயல்பாக கடந்து செல்ல முடிகிறது வசு.

மினர்வா
வசுமித்ர
தோழி மினர்வாவுக்கு….

நல்லது நான் சொன்னதாய் நீங்கள் நிறைய சொல்லியிருக்கிறீர்கள். பேசலாம். நான் கால்மேல் கால்போட்டு அமர்ந்ததிற்கெல்லாம் குறை சொன்னேன், போகவிட்டு சிரித்தேன் என்றெல்லாம் கூறியுள்ளீர்கள், இன்னும் விளக்கினால் நல்லது. காத்திருக்கிறேன்.

சொந்தப்பிரச்சினையை ஒரு பெண் எழுதினால் நீங்கள் ஏன் உங்கள் தளத்தில் விளம்பரப்படுத்துகிறீர்கள். லீனா பிரச்சினை கீற்று தளத்தின் வியபாரத்தை பெருக்குகிறதா....

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கின்றன....நல்லது அன்றாடம் வந்துகொண்டிருக்கிற நாளிதழ், பத்திரிக்கைகள், செய்திகள் அனைத்தையும் பாருங்கள் பெண் எதிர் கொள்ளும் பிரதான பிரச்சினை என்னவென்று தெரியும்.

முலை யோனி போன்ற வார்த்தைகளில் கிளர்ச்சியடைந்து அதைத் தாண்டமுடியாமல் இருக்கிறேன் எனக் கூறியுள்ளீர்கள். நன்றி. ஒரு பெண் பாலியல் பற்றி எழுதினால் விபச்சாரி. ஆண் அது பற்றி பேசினாள் பொறுக்கி நன்றி தோழி.

பெண்வேட்க்கை பிடித்த எந்தக் கம்யூனிஸ்டையும் நீங்கள் சந்திக்காமல் இருந்தது உங்கள் கொடுப்பினை. பாக்கியம்.

உங்களுக்குப் பெண் என்பவள் பாலியல் புரட்சி செய்பவளாக இருந்தால் வசதி. இல்லையென்றால் திமிர் பிடித்தவள் என்று கதை பரப்புகிறீர்கள்.

நல்லது மினர்வா. எனக்கு வருத்தமாக இருக்கிறது. பாலியல் புரட்சி பேசுபவர்களெல்லாம் அலைகிறார்கள். என்ற உங்கள் எண்ணம் இன்னும் அப்படியே இருப்பது உங்கள் மார்க்ஸிய அறிவைக் காட்டுகிறது. ஒரு பால் உறவுக்குக் கூட நான் ஆதரவளிப்பேன். இன்னும் தாங்கள் எழுத்துக்கூட்டி எழுதுங்கள். கவலையில்லை.

விஷ்ணு புரம் பற்றி பேசினேன், படம் எடுக்கவேண்டும் என்று சொன்னேன் இதில் நீங்கள் குறையாகக் கண்டது என்னவென தெரியவில்லை. என் பேச்சை ரசித்துக் கேட்டதாக பதிந்திருக்கிறீர்கள். நன்றி. ஆனால் தோழி ம. க. இ. க., த. மு. எ.ச, போன்ற இயக்கங்களில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சென்று வருகிறேன், பங்கெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளீர்கள். ஆனால் தோழி ஓசூர் த. மு. எ. ச. மாநாடு முடிந்ததும் பேருந்தில் வரும்போது நீங்கள் சொன்னது... ஒரே போர்....என்று....

நல்லது அது உங்கள் இயக்கம் பற்றின அறிவு. அப்பொழுதே அது குறித்து நான் உங்களிடம் விவாதித்தேன். நண்பரும் அறிவார். அப்போது ஜெயமோகன் எழுத்தில் உங்களுக்கு மயக்கம் இருந்ததாக பதிவுசெய்துள்ளீர்கள், நல்லது மயக்கம் காலமாற்றங்களில் மாறக்கூடும். நான் இன்னும் ஜெயமோகனையும் சேர்த்துத்தான் படிக்கிறேன். அதில் தவறில்லை என்பதையும் பதிவு செய்கிறேன்.


நீங்கள் முதன்முதலாக சென்னை வந்தபோது நானறிந்து சிரித்தவர்களை நானறிவேன், நீங்களும் அறிவீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தது இந்தப் பின்னணியில் தான் எனப் புரிந்து கொள்கிறேன். அந்தக் கூட்டத்தில் நீங்கள் தான் பிரதானமாக இருந்தீர்கள் என்பதையும் நான் அறிந்தே இருந்தேன். பொதுவாக ஆண்களே நிறைந்திருக்கும் ஊடகங்களில் புதிதாக ஒரு பெண் வரும்போது, அவர்களை உங்களைப் போன்றவர்கள் சற்று எள்ளலுடன் தான் எதிர்கொள்கிறீர்கள். அவளை உங்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற்ற என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்வீர்கள்.”
நீங்கள் இப்பொழுது சொலவதைத்தான் லீனாவுக்கு செய்துகொண்டிருக்கிறீர்கள் தோழி.

’ லீனா குறித்து நான் சொன்ன கருத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. என் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காய் என்னுடைய தோற்றத்தையோ, நான் ஒரு பெண் என்பதையோ நான் முன்னிறுத்தியதே இல்லை. என்னை யாராவது விமர்சித்தால் ஒப்பாரி வைத்துக் கொண்டு கூட்டணிக்கு ஆள் தேடவும் இல்லை. என்னை பிறர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கவும் இல்லை. யாரிடம் பழகினால் நமக்கு இலாபம் வரும் என்று யோசித்துப் பழகவும் இல்லை. எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளுக்காக என் சுயமரியாதையை விட்டுக்கொடுத்து ஒருபோதும் நடந்து கொண்டதுமில்லை. நான் நண்பர்களை நண்பர்களாகத் தான் பார்க்கிறேன்.’

நீங்கள் யாரையும் தேடிப்போகவில்லை. உங்களுக்கு அந்தளவுக்கு தைரியம் இருந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக அதற்கு உங்களுக்கு அவசியமும் ஏற்படாமல் இருந்திருக்கலாம்.லீனாவுக்கு இல்லை என்றே கொள்கிறேன்.

”ஆனால் படப்பிடிப்புக்கு வந்த கொஞ்ச நாட்களில் என்னை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள்? ‘இயக்குனர் முன், நடிகர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறாள், திமிர் பிடித்தவள்’ என்று இருவருக்கும் பொதுவான நண்பர்களிடம் சொன்னீர்கள். எனக்கு நண்பர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாய் மற்றவர்களிடம் புலம்பினீர்கள். நாகர்கோவில் மாதிரியான மிகவும் பிற்போக்கான ஒரு பகுதியில் இருந்து வந்திருப்பவள், நிறைய படிக்கிறவள், புதிய கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறவள், கொஞ்சம் எழுதத் தெரிந்தவள் என்கிற அடிப்படையில்தான் எனக்கு நண்பர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆனால் இதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் என்னைப் பற்றி அவதூறுகளை பரப்பிக் கொண்டிருந்தீர்கள்.’

கால் மேல் கால் போட்டு அமர்வதை நான் குறை கூறி புலம்பியதாக நண்பர்கள் சொன்னதாக சொல்கிறீர்கள். அப்படி சொன்ன நண்பர்களுக்கு என் புன்னகை. ஏன் தோழி இவ்வளவு முரண். நாகர்கோவில், மிகவும் பிற்போக்கான பகுதி, நிறைய படிக்கிறவள், புதிய கருத்துக்கள், கொஞ்சம் எழுதத்தெரிந்தவள்.....இதெல்லாம் என்ன தோழி...உண்மையா.

நான் உங்கள் முகத்திற்கெதிறாய் பேசாமல் அவதூறுகளைப் பரப்பியிருந்தால். மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்...நான் உங்களைப் பற்றி பிறர்கூறியது எதையும் பேசப்போவதில்லை. நீங்கள் கூறியதையே கூறுகிறேன்.

தோழி நிறைய படிப்பதாக சொல்லும் நீங்கள்...புத்தகத்திருவிழாவில் ஞாநி ஸ்டாலில் நாம் இருவரும் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு பெண் தனது ஆண் தோழனுக்காய் காத்திருந்தாள். நீங்களும் அப்பெண்ணைப் பார்த்தீர்கள். அவளது ஆண் தோழன் வந்து அப்பெண்ணை அழைத்துச் சென்றதும் நீங்கள் கூறியது என்ன தெரியுமா...இந்த அஜித்துக்குத்தான் இவ இவ்வளவு நேரம் காத்திருந்தாளா என்ன....

ஏன் தோழி அஜித்துக்குத்தான் ஒரு பெண் காத்திருக்க வேண்டுமா......உங்கள் அறிவு அப்பொழுது நானறிந்தவரை அப்படித்தான் இருந்தது. இல்லையென்றால் ஒரு கவிஞன் என்ற முறையில் என்னிடம் உங்கள் கவிதைகளைக் கொடுத்து கருத்துக் கேட்டிருக்க மாட்டீர்கள் தானே. அப்பொழுதும் சொன்னேன். கவிதைகளை விட்டு விட்டு கட்டுரை எழுதுங்கள் என்றேன். சற்று மனவருத்தத்தோடு ஏற்றுக்கொண்டீர்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக நான்தான் உங்களைக் கேலி பேசியதில் பிரதானம் என்று கூறியுள்ளீர்கள். மறுபடியும் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.

தன்னெஞ் (சு) அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

உங்கள் வீட்டுக்கு தோழி என்ற உரிமையில் பொருட்கள் சுமந்தவன் நான். அப்பொழுது சென்னையில் உங்களுக்கு தெரிந்த 3 பேர் பாஸ்கர் சக்தி, திருச்செல்வம், வசுமித்ர....

இன்று.....................................

நன்றி
தோழி....நண்பர்கள் பகைவர்கள் எல்லோரும் மாறுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு உறவையும் மகிழ்ச்சியோடு சந்திக்கிறேன்.
மினர்வா
வசுமித்ர,
ஓசூர் த.மு.எ.ச.மாநாடு முடிந்து வரும்போது நிகழ்ச்சி போர் என நான் கூறியதாக கூறியுள்ளீர்கள். நிகழ்ச்சி அப்படி இருந்தால் அப்படித்தானே கூற முடியும். இதிலொன்றும் தவறு இருப்பதாக தோன்றவில்லை. அது இயக்கம் பற்றின அறிவல்ல, நிகழ்ச்சி பற்றிய ஒரு கருத்து அவ்வளவேதான். மற்றொன்று ஞாநி ஸ்டாலில் ஒரு பெண்ணை கிண்டல் செய்ததாக கூறியுள்ளீர்கள். நினைவில் இல்லை வசு. அப்படி நான் பேசியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். ஒரு விமர்சனம் மூலம் யாரும் பகைவர்களாகி விட முடியாது.
மினர்வா
மதி
மார்க்சியம் பேசும் ஆண்களைதான் அவர் கொச்சைப்ப்டுத்துகிறார் என்றால் அவர்களது பெயர்களை போட வேண்டியதுதானே. மார்க்ஸ், பிடல், சே பேரை ஏன் போட வேண்டும்? இன்று அவருக்கு ஆதரவாக நிற்கும் மார்க்சியம் பேசும் பல ஆண்கள் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட வேண்டியவர்கள்தான். அதில் சந்தேகம் இல்லை. நான் ஒத்துக்கொள்வேன். ஆனால் அவர்கள் லீனாவுடன் நிற்கிறார்கள். லீனா அவர்களைதான் கொச்சைப்படுத்தினார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். என்ன முரண்?
வசுமித்ர.
மினர்வா....
நான் கொடுத்த விளக்கத்திற்கு எந்த சரியான விளக்கமும் தாங்கள் கொடுக்கவில்லை. நல்லது. புரிந்து கொள்கிறேன். 3 நாள் நடந்த த. மு. எ.ச மாநாடு முழுதும் உங்களுக்கு போரடித்திருக்கும். அது உங்கள் விருப்பம் அதே போல் அவரவர் கருத்தை அவரவர் சொல்ல விருப்பம் உண்டு இல்லையா...

நிற்க..

நினைவில்லை என்று கூறியிருக்கிறீர்கள். இப்படி நினைவு படுத்த நிறைய விசயங்கள் உண்டு மினர்வா...என்ன செய்வது. வருத்தமாகத்தான் உள்ளது. ஒரு விமர்சனம் மூலம் யாரும் பகைவர்களாகி விடமுடியாது... இல்லையா....

உங்களுக்கு என் புன்னகை
லீனா எழுதியது இரு கவிதைகள்தான்.

சிறு குறிப்பு;
நிகழ்ச்சி வேறு, இயக்கம் வேறு. நல்ல பதில்.
அப்படியே இருக்கட்டும் வாழ்த்துக்கள்
உங்களுக்கு என் அன்பு. வசுமித்ர.
காத்தவராயன்
ம.க.இ.க கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக இருக்கிறது தமிழகத்தில். தெருவுக்கு தெரு யாரையாவது வசை மாறி பொழிந்து அசிங்கப்படுத்ததை தவிர, உருப்படியாக எதுவும் செய்தது கிடையாது. ம.க.இ.க என்றால் பொது மக்களுக்கு எதுவும் தெரியாது. முப்பது வருடங்களாக வெட்டி அரட்டை, வீண் புரளி, அவமரியாதை செய்வது என்று தொழில் செய்து வரும் ம.க.இ.கவை எந்த கட்சிக்காரனும் மதித்தது கிடையாது. சிவப்பு இயக்கங்களை லீனா அவமானப்படுத்தி விட்டாராம். ஆண் குறி, யோனி என்று ஆபாச வார்த்தைகளை உபயோகித்துவிட்டாராம். கலாச்சார காவலர்கள் படை எடுத்து வந்து விட்டார்கள். இவர்களின் வண்டவாளங்களை லீனா உடைத்ததும், இவர்களுக்கு பொத்துகொண்டு வந்துவிட்டது. வேத்துவேட்டுகள்.
முருகப்பன்
ஆண்குறி, யோனி, தூமை போன்ற வார்த்தைகளை உபயோகித்த லீனா மணிமேகலை காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் வரை மக்கள் கலை இலக்கிய கழகம் போராடும். குஷ்பூவை மன்னிப்பு கேட்கவைத்து மண்ணை கவ்வினோம்.
கடைசியில் கற்பு எந்த நாய்க்கு வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் சொல்லி விட்டது. சும்மா பயமுருத்தறது தான் நம்ம வேலை. ஏன்னா கொஞ்சம் கூலிப்படை அனுப்பி தெருவில சலம்பல் செஞ்சா, தெருவே நடுங்கி மன்னிப்பு கேட்கும் பாருங்க. வடிவேலு காமெடி தான் போங்க.
Nagarajan
First you answer to our questions...

//நிஜமாலுமே வசுமித்ர மாதிரியான‌வங்களுக்கு கருத்து சுதந்திரத்துலே அக்கறை இருந்துச்சின்னா, மதுரையில அகராதி என்ற பெண் ஈழப்போராட்டத்துக்கு ஆதரவா பேசுறாங்கங்கறதுக்காக போலீசாராலே கடுமையா தாக்கப்பட்டாரே, அவங்களுக்காக பேசியிருந்திருக்கணும். ஏன் பேசலைன்னா அவங்க லீனா மாதிரி அழகிய பெண் இல்லை. பாலியல் புரட்சி பேசுறவங்க இல்லை. //

//மார்க்சியம் பேசும் ஆண்களைதான் அவர் கொச்சைப்ப்டுத்துகிறார் என்றால் அவர்களது பெயர்களை போட வேண்டியதுதானே. மார்க்ஸ், பிடல், சே பேரை ஏன் போட வேண்டும்? இன்று அவருக்கு ஆதரவாக நிற்கும் மார்க்சியம் பேசும் பல ஆண்கள் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட வேண்டியவர்கள்தான். அதில் சந்தேகம் இல்லை. நான் ஒத்துக்கொள்வேன். ஆனால் அவர்கள் லீனாவுடன் நிற்கிறார்கள். லீனா அவர்களைதான் கொச்சைப்படுத்தினார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். என்ன முரண்? //
kavunthi adikal
இன்று தமிழ் இலக்கிய உலகத்தின் கைப்புள்ளையாக செயல்படும் அ மார்க்ஸ் ஒரு நாளும் எந்த புரட்சிகர இயக்கத்திலும் இருந்ததில்லை புரட்சிப்பண்பாட்டு இயக்கத்தின் சில கூட்டங்களில் கலந்து கொண்டார் அவ்வளவுதான்.

புரட்சிப் பண்பாட்டு இயக்கத்திலிருந்த பலர் தனித்திறமைகள் கொண்டவர்கள். கேசவன் சிறந்த ஆய்வாளர், தமிழரிஞர். இன்குலாப் போன்றவர்கள் புரட்சிக்கவிஞர்கள் பலர் களப்போராளிகள்.

இது போன்ற எந்த தகுதியுமில்லாதவர் அ மார்க்ஸ். களப்பணி அனுபவமோ அதற்க்கான துணிச்சலோ ஆழமான அறிவோ எதுவுமில்லாதவர் எனவே அவர் பெரிதாக மதிக்கப்படவில்லை

சோவியத் யூனியன் வீழ்ச்சி இவருக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தது. மார்க்ஸியத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்றெல்லாம் பேசத்தொடங்கினார்.

ம லெ அமைப்புகளுக்கு சோவியத் யூனியனின் வீழ்ச்சி பெரிய அதிர்ச்சியெல்லாம் கொடுக்கவில்லை. நக்சல்பாரி இயக்கம் தோன்றியதிலிருந்தே ஸ்டாலினுக்குப்பிந்திய ரஷ்யாவை சமூக ஏகாதிபத்தியம் என்றுதான் வரையறுத்தன. மீண்டும் ஒரு முறை அ மார்க்ஸ் அலட்சியப்படுத்தப்பட்டார். சொந்தமாக ஒரு ஜோக் கூட எழுதும் திறமை பெற்றிறாத அவரை தமிழ் அறிவுலகம் கண்டுகொள்ளவில்லை.

இந்தக்கட்டத்தில்தான் மேற்க்குலக நாடுகளில் குவிந்திருந்த புலி எதிர்ப்பு கும்பல்கள் அ மார்க்ஸை தத்தெடுத்துக்கொண்டன. இவை புலி எதிர்ப்பை மட்டுமல்லாமல் கம்யூனிச எதிர்ப்பையும் தங்கள் குறிக்கோள்களாக கொண்டிருந்தன. இவற்றில் பலர் அரசுடனும் அரசு சார்ந்த நிறுவனங்களுடனும் தொடர்பு கொண்டிருந்தன. இதை அழகாக அருள் எழிலனும் வளர்மதியும்அம்பலப்படுத்தியிருந்தனர் அவர்களின் திட்டவட்டமான ஆதாரங்களுக்கு சோபா சக்தியோ சுகனோ சுசீந்தரனோ இதுவரை பதிலளிக்கவேயில்லை

தமிழ் அறிவுஜீவிகள் மத்தியில் புலி எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்க, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்ய ஆள்தேடிக்கொண்டிருந்த இவர்களுக்கு அகப்பட்டவர் அ மார்க்ஸ். கற்றதை அப்படியே வாந்தியெடுக்கும் செயலை மிகச்சிறப்பாக செய்யும் அவர் வாந்தியெடுக்கத் தொடங்கினார்

அ மார்க்ஸ் ஐரோப்பாவுக்கு அழைக்கப்பட்டு குளிப்பாட்டப்பட்டார். திரும்பி வந்து இந்தியாவுக்கு மார்க்ஸியம் பொருந்தாது, அம்பேத்காரியம்தான் பொருந்தும் என்றார். இந்தியாவில் இதுவரை வர்க்கப்போராட்டமே நடக்கவில்லை என்றார். ஒரு கட்சி என்ற பேச்சே கூடாது அது அதிகாரம் என்றார். சிறு சிறு அமைப்புகளே தேவை என்றார்.

கூடவே பாலியல் சுதந்திரம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தார்.

வளர்ந்து வந்துகொண்டிருந்த புதிய தமிழகம், விடுதலைச்சிறுத்தைகள் போன்ற அமைப்புகளோடு இணைந்து நிற்பதாக காட்டிக்கொண்டார். இவ்வமைப்புகள் கிருத்துவ தன்னார்வ நிறுவனங்களால் விழுங்கப்பட்டன; இலக்கிலிருந்து விலகிப்போயின. ஆனால் இளைஞர்கள் பொதுவுடமை அமப்புகளுக்கு போவதை தடைசெய்த திருப்தியில் அ மார்க்ஸ் எந்த எதிர்ப்புக்குரலும் எழுப்பவில்லை.

பெருங்கதையாடல்களுக்கெல்லாம் பெருங்கதையாடலான கிருத்துவ மதத்தொண்டு நிறுவங்களுக்கு எதிராக வாயே திறக்கவில்லை.

அ. மார்க்ஸின் வெட்டிவாய்ச்சவடால்கள் தங்களுக்கு எந்த விதத்திலும் உதவியாக இருக்கவில்லை என்பதை கண்டுணர்ந்த தலித் அமைப்புகள், நமது கைப்புள்ளையை அலட்சியப்படுத்திவிட்டு முன்னேறிச்சென்றன. விடுதலைச் சிறுத்தைகளுக்குப் பயந்து அ மார்க்ஸ் ஒளிந்து திரிந்தது தனிக்கதை. கண்ணீரும் கம்பலையுமாக சிறு புத்தகம் பினாமி பெயரில் வெளியிட்டது கிளைமேக்ஸ்.

‘சீ’ என்று கைப்புள்ளயை சிறுத்தைகள் விட்டுவிட்டனர்

அடுத்து வந்தது குடிக்காண்டம் தமிழகம் முழுவதும் சுற்றியலைந்து குடித்தார். ஒரு நூறுபேரை சாராயத்தில் மூழ்கடித்தார். அவரது இலங்கை எஜமானர்களுக்கு அ.மார்க்ஸ் ஒரு மண்குதிரை என்பது தெரிந்தே இருந்தது. அவர்கள் ஒரு நல்ல குதிரையை தேடிக்கொண்டிருந்தனர்.

அகப்பட்டவர் ஆதவன் தீட்சண்யா. தலித் கவிஞர், படைப்பாளி கட்சியில் கலகக்காரர் என்று பெயரெடுத்தவர் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு சிறு பத்திரிக்கையின் ஆசிரியர். எனவே ஈழப்போர் உச்ச கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்த நேரத்தில் மண்குதிரையான அ.மார்க்சை விட, சுயமான படைப்பாளியும் ஒரு பலம்வாய்ந்த கட்சியின் இலக்கிய அமைப்பான த மு எ ச வின் செல்வாக்குப்பெற்றவரான ஆதவன், அவர்களுக்கு ஒரு பிரைஸ் கேட்ச்.

எளிமையான நேர்மையான படைப்பாளியான ஆதவனுக்கு தலித் அரங்கில், கட்சியின் நிலைப்பாடுகள் குறித்து சந்தேகம் இருந்திருக்கவேண்டும். இதை நம் புலி எதிர்ப்பாளர்கள் பயன்படுத்திக்கொண்டுவிட்டனர்.

கட்சிக்கல்வியின் போதாமையால் இவர்களிடம் தான் கற்றுக்கொள்ள ஏதோ இருப்பதாக ஆதவன் கருதியதுதான் வேடிக்கை. சி பி எம் மின் புலி எதிர்ப்பு அரசியலை மட்டுமே சுற்றிச்சுற்றி பார்த்திருந்த ஆதவனுக்கு, தமிழ் அறிவு ஜீவிகளுக்கு விடுதலைப்புலிகள் மக்கள், மீதிருந்த அன்பு புரியவே இல்லை.

திரும்பவும் ஐரோப்பா பயணம் குளிப்பாட்டல்

குளிப்பாட்டல் என்றால் பணமோ மதுவோ அல்ல. புகழ்ச்சி, ஆதவனுக்கு அது போதுமானதாயிருந்தது. போய்விட்டு திரும்பிவந்தார், சுசீந்திரன் பேட்டி. இதுவரையில் புனிதப்பசுவாக இருந்த ஆதவனுக்கு கல்லடிகள். இதெல்லாம் பழக்கமில்லாத ஆதவன் தடுமாறினார். ஈழம் அவரது ஏரியாவே அல்ல

செஞ்ச்சோற்றுக்கடன் கழிக்க கர்ணனாக மாறினார், தமிழ் நதியை திட்டித்தீர்த்தார். செஞ்சேனையை திட்டித்தீர்த்தார்

அப்புரானியான த மு எ ச வையும் இதில் இழுத்துவிட்டார். அரசியல் ரீதியாக இலங்கை எட்டப்பர்களுக்கும் சி பி எம் முக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. மென்மையான தமிழ்செல்வன் தலைமை வளைந்துகொடுக்க த மு எ ச வை அதற்க்குச் சம்பந்தமில்லாத குப்பை விவகாரங்களில் இறக்கிவிட்டு செருப்படி வாங்கிக்கொடுத்தார்.

லீனா மணிமேகலையின் மீது ஆதவனுக்கு அப்படியொன்றும் மரியாதை இருக்க முடியாது. துப்பட்டா விவகாரத்தில் ஆதவன் தலையிட்டது இல்லை. இப்போது பின்னணியில் சோபாசக்தி, எனவே ஆதவன்

எட்டப்பர்கள் ஈழத்தை தற்போதைக்கு கொன்றுவிட்டார்கள் இருந்தாலும் இன்னொரு அமைப்பு வந்துவிடவும் கூடாது என்பதிலும், தமிழக அறிவுலகில் தங்களுக்கு ஒரு இடம்வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்கள்.

எனவே லீனாமணிமேகலை விவகாரம் அவர்களால் துக்கிப்பிடிக்கப்படுகிறது.

கவிதையை அங்கீகரிக்கிறீர்களா? இல்லை கருத்துரிமையை அங்கிகரிக்கிறீர்களா, என்றால் சக்காரியா ???

இலங்கை எட்டப்பர்கள் கொள்கைவாதிகள் அல்ல காரியம் நிறைவேறினால் போதும் அவர்களுக்கு.. எனவே அவர்கள் பதில் சொல்லப்போவதில்லை

கைப்புள்ள அ மார்க்ஸுக்கு இதெல்லாம் சகஜம் இதைவிட்டால் அவருக்கு கவனம் கிடைக்க வேறு வழியில்லை. இருண்டுபோனது ஆதவன்தான்

இதே புதிய ஜனநாயகம் ஆதவன் கட்டுரையை எடுத்தாண்ட காலம் இருந்தது. (சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்) அன்பும் அக்கறையும் கொண்ட வலிமையான ஆதவன் இப்போது இல்லை

புதுவிசை இப்போது இருக்கும் இடம் ஆதவனுக்கே தெரியும். அவரது கவிதை அவரது இருண்மை நிறைந்த மனநிலையை காட்டுகிறது

காலங்காலமாக தொடர்ந்துவரும் தலித்துகளின் சோகத்தோடு தனது பிரச்சினைகளையும் இணைத்துக்கொள்ள விரும்புகிறார் அவர்

அவர் வெறுக்கப்படுவது தலித் என்பதால் அல்ல

அவர் தலித் மக்களின் ரத்தம் குடித்தவர்களின் கைக்கூலிகளோடு கூட்டு வைத்திருப்பதால் தான் வெறுக்கப்படுகிறார்.

இது ஆதவனுக்கு தெரியும். தெரிந்தே தன்னை தானே ஏமாற்றிக்கொள்ள முயல்கிறார் அது சாத்தியமில்லை அவர் எட்டப்பர்களை கைகழுவாதவரையில் அவர் இந்த இருண்மையிலிருந்து விலகப்போவதில்லை

பழைய ஆதவனை இந்த எட்டப்பர்களிடம் இழந்தது வருத்தம்தான். ஆனால் புதிது புதிதாக ஆதவன்களை உருவாக்காமல் இருக்க இந்த விவாதம் துணைசெய்யவேண்டும்.

லீனா மணிமேகலை கவிதை, என்பதோடு முடியாமல் இந்த எட்டப்பர்களின் அரசியல் தொடர்புகள், நோக்கங்கள் குறித்து, ஏழுமாதங்களுக்கு முந்திய ஆரோக்கியமான விவாதம் உயிர்பெறவேண்டும்.
கவின் மலர்
புதுவிசை ஆசிரியர் குழுவில் ஒருவரான கீற்று ரமேஷ்!

கீற்று தளத்தில் பின்னூட்டமிடக்கூடாது என்றுதானிருந்தேன். ஆனால் உங்கள் அவதூறுகளின் மூலம் மீண்டும் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்.

இந்தக் கீற்று உருவாவதற்கு ஆதவனும், தமிழ்ச்செல்வனும் முக்கிய காரணம் என்ற பழைய உண்மையை எல்லாம் மறந்து விட்டீர்கள் போலும். 'கீற்று' என்ற பெயர் உங்களுக்கு சொன்னதே இவர்கள்தானே? புதுவிசையை இணையத்தில் ஏற்றும் பணிக்கு நீங்கள் உழைத்ததை நன்றியோடு நாங்கள் நினைவுகூர்கிறோம்.

ஆதவனை எட்டப்பனாக சித்தரிக்கும் ஒரு பின்னூட்டத்தை வெளியிட்டுள்ளீர்கள். ஆதவனுடைய அறநேர்மை குறித்து பிறருக்கு சந்தேகம் வரலாம். உங்களுக்கு எப்படி வரலாம? எப்படி நீங்கள் இந்த பின்னூட்டத்தை வெளியிட்டுள்ளீர்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை 'கொடுத்த காசுக்கு மேலே கூவுறாங்கொய்யாலே..” என்ற அருள் எழிலனின் கட்டுரையை பிரசுரித்த உங்களுக்கு இது சாதாரண விஷயமாக இருக்கலாம்.

உங்களுக்கு ஆதவன் குறித்தும் புதுவிசை குறித்தும் மிக நன்றாகவே தெரியும். ஏனெனில் நீங்கள் புதுவிசையின் ஆசிரியர் குழுவில் இருக்கிறீர்கள்.

யாரை வேண்டுமானாலும் எட்டப்பன் என்று சொல்லிவிடலாம். யார் யாரிடம் காட்டிக்கொடுத்தார்கள், பணம் வாங்கினார்கள் என்று வரலாறு சொல்லும்.

எங்களுக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. நாங்கள் மிகவும் நம்பிய, நம்பிக்கை ஒளிக்கீற்றாகத் தெரிந்த ரமேஷ் இப்போது இல்லை. அவரை நாங்கள் இழந்துவிட்டோம் என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்ய ரமேஷ்? இழப்புகளுக்காக வருந்தினாலும் அது உண்மை என்று உறைக்கும்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டி இருக்கிறது. இயங்க வேண்டி இருக்கிறது.

அவதூறுகளுக்காக இயங்கிய இணையதளம் என்று கீற்றையும் எட்டப்பன் என்றும் உங்களையும் வரலாறு சொல்லாமலிருக்க வேண்டுவது என்பதே எங்கள் கவலை.
அன்பு
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு எடுபிடி இருக்கவே செய்றாங்க... லீனாவுக்கு வசுமித்ர, ஆதவனுக்கு கவின்மலர்... என்னமோ நாசமாப் போங்க.
அனானி
இன்ன பிற என்கிற வலைத்தளத்தில் வந்த மொழிரீதியான விமர்சனத்திற்கு லீனா மணிமேகலையின் பதில் அதே தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. கவிதைகளை எழுதத்தூண்டியதாக அவர் சொல்லும் இரண்டு காரணங்களும் அவருடைய கவிதைகளோடு முரண்பட்டு நிற்கின்றன. ஒரு காரணம், அவருடைய சிறுவயது சோவியத் யூனியன் தோழன் புரட்சி பற்றிய கனவுகளை தொலைத்தது. இதில் பாலியல் இல்லை. இரண்டாவது காரணம், ஜெர்மனியில் ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்கு செல்வதற்காக தனது கன்னிமையை ஒரு அதிகாரிக்கு பலியிட்ட பெண். இதில் மார்க்சிய ஆண் இல்லை. பிறகு மார்க்ஸ், பிடல், சே என்றெல்லாம் ஏன் சொல்கிறார் என்று புரியவில்லை.

http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html
Ananthan
நன்றி கவின்மலர்

கீற்றீன் வரலாறு குறித்து அறிந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்கு

ஆனால் இவ்வளவு உதவிகள் பெற்ற பின்னும் தான் கொண்டிருக்கும் அரசியலை விட்டுக் கொடுக்காமல் தாட்சண்யம் பார்க்காது இயங்குவது ஆரோக்கியமானது தானே

கவுந்தியடிகள் எங்கும் இதில் ஆதவனை எட்டப்பர் பட்டியலில் இணணைத்த மாதிரி தெரியவில்லை ஆனால் நீங்கள் ஏன் அவரை அப்பட்டியலுக்குள் இழுத்து விடுகிறீர்கள்
கவின் மலர்
எல்லோரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள்தான். ஆனால் சேற்றை வாரி இறைக்கும் முன் அது உண்மைதானா என்று உறுதிப்படுத்துங்கள். அதன் பின் விமர்சியுங்கள். ஹேஷ்யமாக யார் மீது வேண்டுமானாலும் அவதூறுகளை அள்ளி வீசலாம்.

ஆதவனை செருப்பால் அடிக்க வேண்டும் என்று ஒருவர் பின்னூட்டம் போட்டார். அதையும் கீற்று வெளியிட்டது. இப்போது ஐரோப்பாவில் அழைத்து குளிப்பாட்டியதால் நன்றிக்கடனுக்காக ஆதவன் ஏதேதோ செய்கிறார் என்று எழுதினால் அதையும் வெளியிடுகிறார்கள். ஈழமோ அல்லது வேறு எதுவோ, ஆதவனுடைய கருத்துக்கு மாற்றுக்கருத்து இருந்தால் விமர்சிக்கலாம். தப்பே இல்லை. ஆனால் ஆதாரமின்றி குற்றச்சாட்டு வைப்பது எந்த வகையில் சரி? விமர்சனத்திற்கும் குற்றச்சாட்டிற்கும் இடையே வேறுபாடு உள்ளது.

/ 'ஆதவன் பாவம் தலித். அவரை விமர்சனம் செய்யக்கூடாது' என்றீர்கள். //

அப்படிச் சொன்னவரின் பெயரைச் சொல்லுங்கள். அப்படி கழிவிரக்கம் தேடிக்கொள்ளும் தாழ்ந்த நிலையில் இங்கு யாரும் இல்லை. தலித்தாக பிறப்பது பாவம் என்ற நினைப்பில் நீங்கள் இருப்பதைத்தான் இந்த வாசகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. யார் அப்படி சொன்னார்கள் என்று உங்களால் குறிப்பிட்டு சொல்ல முடியுமா? போகிற போக்கில் எதை வேண்டுமானாலும் சொல்வீர்களா? நாங்கள் எப்போது எங்கே எபப்டி அப்படி சொன்னோம் என்று சொல்ல முடியுமா?

//'கீற்றுக்கு ஆதவன் எவ்வளவு பண்ணியிருக்கிறார். அதைக்கூட பார்க்காமல் இப்படி விமர்சிக்கலாமா' 'கீற்றுக்கு ஆதவன் எவ்வளவு பண்ணியிருக்கிறார். அதைக்கூட பார்க்காமல் இப்படி விமர்சிக்கலாமா' //

கீற்றுக்கு தாஜா பண்ணி இங்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. அதற்கான அவசியமும் இல்லை. ரமேஷ் அடிக்கடி சொலவதைபோல பெரியாரிஸ்டுகளும், இடதுசாரிகளும், அம்பேத்காரிஸ்டுகளும் சந்திக்கும் புள்ளியாக இருந்த கீற்று தளம் இன்று தமிழ்தேசியவாதிகளின் கைகளில் போய் சுருங்கி அவர்களுக்காக மட்டுமே நிற்கிறது என்பதை சுட்டிக்காட்ட மட்டுமே பழைய கதை பேச வேண்டி இருந்தது. அனைவரும் விவாதிக்கும் ஒரு சந்திப்புப்புள்ளியாக கீற்று இருக்கும் என்ற நம்பிக்கை நிறைய பேருக்கு இருந்தது. அந்த நம்பிக்கையினால் தான் கீற்றை ஆதரித்தனர். அந்த நம்பிக்கை இன்று சிதறடிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டவே தொடக்ககால கீற்று குறித்து பேச நேர்ந்தது.

//எவ்வளவு பேர் இதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியலையா? //

அதனால்தான் அவதூறு பரப்பாதீர்கள் என்கிறோம். விமர்சனங்களை நேர்மையான முறையில் வைத்தால் எதிர்கொள்ளலாம்.அவதூறுகளை வைத்தால்..? எதை வேண்டுமானாலும் பேசிவிட்டு போங்க என்று விட்டுவிட முடியாது.
அனானி2
வசுமித்ர
உங்களிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம். மினர்வா இன்னும் யாரைப் பற்றி என்னவெல்லாம் கதைத்தார் என்பதையும் இங்கே சொல்லிவிடுவது கிசுகிசு சுவாரஸ்யத்தை கூட்ட உதவும்.

இடுகைக்கும் உங்களது பின்னூட்டங்களுக்கும் என்ன தொடர்பு என்பதே புரியவில்லை. தோழர் புர்ச்சி போன்ற நீர்த்து போன வார்த்தைகளில் தோழியையையும் சேர்த்து விடலாம் போலிருக்கிறது. தோழி தோழி என்றபடியே அந்தரங்க தகவல்களை பொது வெளியில் உளறிக் கொட்டுகிறிர்கள். அஞ்சாப்பு படிக்கும் இரண்டு சிறுவர்கள் சண்டை போட்டுக்கொண்டால் கூட ஒருவனை பற்றி இன்னொருவன் பொதுவில் புகார் கூற தயங்குவான் நீங்கள் எப்படி கூசாமல் உளறிக் கொட்டுகிறீர்கள் என்பது புரியவில்லை.

உங்களின் பின்னூட்டங்களுக்கு சென்னைத் தமிழில் ஒரு சொல் இருக்கிறது. உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்.
kathirvel
என்னதாம்பா உங்க பிரச்சினை? முதலில் 'ஆதவன் பாவம் தலித். அவரை விமர்சனம் செய்யக்கூடாது' என்றீர்கள். இப்போ 'கீற்றுக்கு ஆதவன் எவ்வளவு பண்ணியிருக்கிறார். அதைக்கூட பார்க்காமல் இப்படி விமர்சிக்கலாமா' என்று தாஜா பண்னுகிறீர்கள்.

ஏன் இப்படி உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்கீறிர்கள்? எவ்வளவு பேர் இதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியலையா? முடிவா என்ன சொல்ல வருகிறீர்கள்? ஆதவன் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா? அல்லது விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயங்குகிறீர்களா?
sokkathangam
ஏய் கீற்றுக்காரங்களா! இந்த கவின் மலரோட காமெடி தாங்க முடியலைப்பா! தயவு செஞ்சு அவங்க சொல்ற மாதிரி கேளுங்க... சிபிஎம் ஆளுங்களோட கட்டுரைகளைப் போடுங்க.. லீனாகிட்ட கவிதை வாங்கி போடுங்க.. சமாதானம் ஆனாலும் ஆவாங்க..
Rengaraj
கவுந்தி அடிகள் சொல்வது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. அ.மார்க்ஸ் நுட்ப மதி கொண்டவர் என்பதை அவர் எழுதிய பல புத்தகங்களிலிருந்தும், சமூக அக்கரை கொண்டவர் என்பதை அவரது உண்மை அறியும் குழு நடவடிக்கைகளிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.
kannan
கீற்றில் அக்கப்போர் கட்டுரைகல் பல வருகின்றன என்பது உண்மைதான் என்றாலும் ஒரு செய்தி மகிழ்வு அளிக்கிறது. கவின் சொல்வதிலிருந்து... ஆதவன் இவ்வலவு உதவிகள் கீற்றுக்கு செய்திருக்கிறார். அவரது புதுவிசை குழுவில் கீற்று ரமேஷு இருக்கிறார். ஆனாலும், ஆதவன் மீதான விமர்சனங்கலை வெளியிடுகிறார்கள். நட்புக்காக எந்த சமரசமும் செய்யாத கீற்று குழுவிற்கு ஒரு சல்யூட்
கவின் மலர்
வெற்றி!

கீற்றில் யாருடைய கட்டுரைகளை வெளியிடுகிறார்கள் என்பது குறித்து எந்த விமர்சனமும் இல்லை.

கீற்றை தொடர்ந்து வாசித்து வருவதாகச் சொல்கிறீர்கள். சற்று கவனித்தீர்களானால் சிலரை விமர்சனம் செயது கட்டுரைகள் வருகின்றன. ஒரு தெளிவான மொழிநடையில், நியாயமான விமர்சனங்களோடு வருகின்றன. உதாரணத்திற்கு சீமான் குறித்து விமர்சித்து கட்டுரை வந்தால், “சீமான் மீதான கருத்தியல் சமர்” என்று அவருக்கு ஆதரவான ஒரு ஒன்றுமில்லாத கட்டுரையையும் கீற்று வெளியிடுகிறது.

இந்தப்போக்கு தமிழ்தேசியவாதிகள் அல்லாத மற்றவருக்குக் கிடையாது. ஒன்லி அவதூறுகள் தான். நீங்கள் உற்று கவனித்தால் தமிழ்தேசியவாதிகளை விமர்சிக்க ஒரு தரமான நாகரிகமான மொழிநடை. ஆனால் ஆதவன் போன்றவர்களை விமர்சிக்க “பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக்கு” போன்ற நக்கல் மொழி நடை. இந்த மொழி நடையில் எந்த தமிழ்தேசியவாதியையாவது விமர்சனம் செய்து சீமானையோ, நெடுமாறனையோ, திருமாவளவனையோ குறித்து ஒரு கட்டுரை வந்திருக்கிறதா? இந்த லிஸ்டில் திருமாவளவன் எப்படி வந்தார்? அவர் இந்திய தேசியத்தை ஏற்றுக்கொண்டு எம்.பி. ஆனவர். நெடுமாறன் ஈழ தேசியவாதி. த்மிழ்நாட்டில் என்ன நடந்தாலும் கவலைப்படமாட்டார். சீமான்...வேண்டாம்... மேட்டருக்கு வருவோம். கண்ணெதிரே பார்த்த ஒரு விஷயத்தை வைத்து ஓவியர் புகழேந்தி குறித்து எழுதியபோது கூட என்ன டீச்ண்டான மொழியில் இருந்தது அந்தக்கட்டுரை. இந்த டீசன்சி ஏன் ஆதவன் போன்றவர்களைப் பற்றி எழுதப்படும் கட்டுரையில் இல்லை?

ஏப்ரல் 15 ஆம் தேதி கூட்டம் குறித்த அறிவிப்பினை திரித்து அறிவ்ப்பு செய்ததைப் போல ஒரு தமிழ்தேசியவாதக் கூட்டத்திற்கு இவர்களால் செய்ய முடியுமா? தமிழ்நாட்டு சிவசேனா படையினரும், பால்தாக்கரேக்களும் வீடு தேடி வந்து விட மாட்டார்களா? இந்த அழைப்பிதழை திருத்துவது போன்ற திருகு வேலைகளை மற்ற யாரிடமாவது கீற்று காட்டியிருக்கிறதா? ஏப்ரல் 15 கூட்டம் நடத்தப்படுவதில் அவருக்கு மாற்றுக்கருத்து உண்டு. அப்படிப்பட்ட ஒரு கூட்டத்திற்கு எதற்காக கீற்றில் அறிவிப்பு வெளியிட வேண்டும்? லீனாவின் கவிதைகளை விமர்சனம் செய்யாமல், லீனாவின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து விமர்சிக்கும் வினவு தளத்திற்கு கீற்று ஆதரவளிக்கிறது. ஜெரால்ட், பாரதிராஜா - இவர்களின் குறிகள் குறித்து ஏன் எழுதவில்லை என்று அநாகரிகமாகக் கேட்ட வினவு தளத்தின் கேள்வியை கீற்று நியாயப்படுத்துகிறது. அதைப் பார்த்த போது அதிர்ச்சியாகத்தானிருந்தது. அமுதனின் கட்டுரை போன்ற ஒரு மட்டமான மொழியில் உள்ள கட்டுரையை எந்த தமிழ்தேசியவாதியை விமர்சித்தும் வெளியிட்டார்களா?

ஆரோக்கியமான விமர்சனங்கள் வந்தால் தாராளமாக வரவேற்கலாம். அதை விவாதிக்கலாம். ஆனால் அவதூறுகள்? ஒரு சிலர் மேல் விமர்சனம் மட்டும். ஒரு சிலருக்கு அவதூறுகள் மட்டும், ஒரு சிலருக்கு தனிப்பட்ட வாழக்கையை விமர்சனம் செய்வது மட்டும் என்று பிரித்துக்கொள்வது எந்த வகை நியாயம்?

கீற்று தொடர்ந்து நீங்கள் வாசிக்கிறீர்கள் என்றாலே இந்த சாய்வுத்தன்மையும், காழ்ப்புணர்ச்சியும் உங்களுக்குப் புரிந்திருக்குமே.. எனினும் நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்.
Guest
அனானி ரெண்டுக்கு.....

வணக்கம்.

கிசுகிசுக்களுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கும் உங்கள் ஆர்வத்திற்கு என்னுடைய மதிப்பை தெரியப்படுத்துகிறேன். மினர்வா அவர்களின் விமர்சனத்தை ஒருமுறை படித்துப் பாருங்கள். அவர்கள் எந்தத் தமிழில் முழு விமர்சனமும் எழுதியிருக்கிறார் என்று புரியும்.

’ தோழி தோழி என்றபடியே அந்தரங்க தகவல்களை பொது வெளியில் உளறிக் கொட்டுகிறிர்கள். அஞ்சாப்பு படிக்கும் இரண்டு சிறுவர்கள் சண்டை போட்டுக்கொண்டால் கூட ஒருவனை பற்றி இன்னொருவன் பொதுவில் புகார் கூற தயங்குவான் நீங்கள் எப்படி கூசாமல் உளறிக் கொட்டுகிறீர்கள் என்பது புரியவில்லை.’

அந்தரங்கத்தை பேசுவது சரியா நானும் பேசலாமா என்று கேட்டதற்கு எதற்கு அனானி 2 பீதியைடைகி்றீர்கள்.

ஒன்று; லீனா ஹெர்லிங் பண்ணுவது கூட மினர்வாவுக்கு பிரச்சினை. இன்னும் நாகரீக உடைகள் எல்லாம் பேசுகிறார்கள். மினர்வாவுக்கு உங்கள் சப்போர்ட் இருக்கிறது மகிழ்ச்சி. ஆனால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. லீனாவின் கவிதைக்காக பேசியதற்கு என்னை கவர்ச்சியின் பால் ஈர்க்கப்படுகிறேன் என்று மினர்வா குற்றம் சாட்டியுள்ளார்கள். இப்பொழுது நீங்கள் மினர்வாவுக்காக பேசுகிறீர்கள்....நீங்கள் ஆணா பெண்ணா என எனக்குத் தெரியாது....வருத்தமாக இருக்கிறது... லீனாவுக்கு சப்போர்ட் பண்ணும் ஆண்கள் அலைபவர்கள், மினர்வாவுக்கு சப்போர்ட் பண்ணும் ஆண்கள்......................?
வசுமித்ர
சிறுகுறிப்பு

மினர்வாவின் கட்டுரைக்கு விமர்சன மேடை ஒன்று அமைத்துக் கொடுத்தால் அங்கு வந்து கிசுகிசுக்களை உரத்த குரலில் சொல்லுவேன். அப்பொழுது அது கிசு கிசு அல்ல விமர்சனம். சரியா அனானி 2.
கவின் மலர்
வெற்றி!

இறுதியாக ஒரு விஷயம்.. புதுவிசை 25ஆவது இதழ் நிகழ்வில் பலரும் த்மிழ்நதி குறித்து ஆதவன் அப்படி எழுதியது தவறு என்று சுட்டிக்காட்டியபோது அப்படி தான் எழுதியது தவறு என்று மேடையில் பகிரங்கமாக ஒத்துக்கொண்டு வருத்தம் தெரிவித்தார். இனி இது போன்ற தவறுகள் நிகழாமல் கவனமாக இருப்பேன் என்றும் உறுதியளித்தார். அந்த நேர்மை நீங்கள் தூக்கிப்பிடிக்கும் யாருக்காவது இருக்கிறதா?

உங்களுக்கு பதில் சொல்வதில் நேரத்தை வீணடித்தது என் தவறுதான். காமெடி பீஸ், பெரியவங்களை வரவழைக்கச் சொல்வது போன்றவற்றிற்கு... நோ கமெண்ட்ஸ்.

உங்கள் வாசிப்பனுபவம் மற்றும் ரசனையின் மட்டம் தெரிகிறது உங்கள் எழுத்துக்களில்..

பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. உங்களுக்கேற்ற பெரியவர்கள் வருவார்கள்.. அவர்களோடு பேசுங்கள்..

குட் பை..
வெற்றி
கவின்!! நாங்களும் கீற்றை தொடர்ந்து வாசித்து வருகிறோம். எல்லா தரப்பு கட்டுரைகளும் அதில் வரத்தான் செய்கின்றன. சீமான், நெடுமாறன், திருமாவளவன் உள்ளிட்ட தமிழ்த் தேசியவாதிகளை விமர்சித்து வந்த கட்டுரகளை அண்மையில்தான் நான் கீற்றில் படித்தேன். ஆனால் அவர்கள் கீற்று இருப்பதாக சொல்கிறீர்கள்? எந்த அடிப்படையில் அதைச் சொல்கிறீர்கல் என்பதைக் கூறினால் என்னைப் போன்றவர்கல் புரிந்து கொள்வோம். உங்கல் தரப்பு கட்டுரைகளை கீற்று வெளியிடாமல் விட்டிருக்கிறதா? அல்லது எதிர்வினைகளை/ பின்னூட்டங்களை வெளியிடவில்லையா? விளக்கினால் நன்றாக இருக்கும். இல்லையென்றால் பொது வாசகர்கல், ஆதவனை விமர்சிப்ப்தால் மட்டுமே கவின் இப்படிக் கூறுகிறர் என்று புரிந்து கொள்ளக்கூடும்.
வெற்றி
என்னம்மா, இப்படி சொதப்புகிறீர்கள்? நான் என்ன கேட்டேன், நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள்? ஆதவன் மீதான விமர்சனங்களுக்கு நீங்கள் யாராவது பதில் எழுதி, அதை வெளியிட கீற்று மறுத்ததா? அல்லது உங்களது எதிர்வினைகளை வெளியிட கீற்று மறுத்ததா? அதை நிரூபித்தால் கீற்றின் யோக்கியதையை நாங்கள் அறிந்து கொள்வோம். அதைவிட்டுவிட்டு, அவர்களை விமர்சித்த கட்டுரையில் மொழிநடை அப்படியிருக்கிறது, இவர்களை விமர்சித்த கட்டுரையில் மொழிநடை இப்படி இருக்கிறது என்று சொல்கிறீர்கள். எல்லோரும் உங்களை காமெடி பீஸ் என்று சொல்வதை நீங்களே நிருபித்ஹ்து விடுவீர்கள் போல‌!

ஆதவனின் கரடுமுரடான, நக்கலான‌ மொழிநடை கொன்ட கட்டுரைகளும் கீற்றில் வந்தடே! மொழிநடையெல்லாம் எழுதுபவரின் மனநிலை சார்ந்தது. இந்த அடிப்படை கூடவா உங்களுக்குத் தெரியவில்லை! தமிழ்த்தேசியவாதிகளை கடுமையாக விமர்சித்து ம.க.இ.க.வினர் எழுதிய கட்டுரைகளையும், பின்னூட்டங்களையும் நான் கீற்றில் படித்திருக்கிறேன்.

தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறைகளை முதலில் தொடங்கியது யார்? ஆதவன் தானே! தமிழ்நதி மீதான அவரது விமர்சனம் முழுக்க கிசுகிசுவாகவும், ஆணாதிக்க குரலிலும் ஒலித்ததே! அதற்குத்தானே 'பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு' என்று வாங்கி கட்டிக்கொண்டார். நீங்கள் எழுதினால் கட்டுரை, மற்றவர்க்ள் எழுதினால் அவதூறா?

கவின், உங்களுக்கு விவாதிக்கத் தெரியவில்லை. மறுபடியும் மறுபடியும் வந்து காமெடிதான் பண்ணுகிறீர்கள். உங்களது விவாதங்கள் பலருக்கு சிரிப்பத்தான் வரவழைத்துள்ளது. போய், வீட்டிலே பெரியவங்க யாராவது இருந்தா வரச் சொல்லுங்க...
Suppan
Dont you guys have no other job? Why this idle talk about revolution and nonsense. Why dont you really do some service instead of talking BS about stupid literature. Whatever you guys are doing is neither revolution nor litreature.

The people of tamil nadu dont even have latrines. Can you guys form an association to educate the people and do something to change these real problems. Talking about revolution / litreature wont help at all.
புரச்சி
//
இறுதியாக ஒரு விஷயம்.. புதுவிசை 25ஆவது இதழ் நிகழ்வில் பலரும் த்மிழ்நதி குறித்து ஆதவன் அப்படி எழுதியது தவறு என்று சுட்டிக்காட்டியபோது அப்படி தான் எழுதியது தவறு என்று மேடையில் பகிரங்கமாக ஒத்துக்கொண்டு வருத்தம் தெரிவித்தார். இனி இது போன்ற தவறுகள் நிகழாமல் கவனமாக இருப்பேன் என்றும் உறுதியளித்தார். அந்த நேர்மை நீங்கள் தூக்கிப்பிடிக்கும் யாருக்காவது இருக்கிறதா?
//

இவ்வாறு தனது தவறை ஒத்துக் கொண்டதை வெளிப்படையாக கட்டுரையாக அறிவித்தார ஆதவன் தீட்சன்யா?

ரகசியமாக அல்லது தெரிந்த சிலரின் மத்தியில் சுயவிமர்சனம் எடுப்பதன் பெயர் சுயவிமர்சனமோ அல்லது நேர்மையோ அல்ல அதன் பெயர் வேறு.
நானும் ஸ்டாலின் தான்...
லீனா, சங்கர ராமசுப்ரமணியன், இவங்கெல்லாம் பிரச்சினைக்குரிய நபர்கள் தான் தெளிவா விபரமா சொல்லீட்டிங்க... ஆனா பஜ்ரங் தள் , சிவசேனா, எனும் கலாச்சார போலிஸ் வேலையை செய்யச்சொல்லி உங்களுக்கு யாரு லைசென்ஸ் கொடுத்ததுனு சொன்னா நல்லா இருக்கும்.. ஏன்யா கலாநிதி மாறன் ,தயா நிதி மாறன் கருணாநிதி, ஜெயா, ராமதாஸ் திருமா இவங்கள நேரடியா சந்திச்சி (வீட்டுக்கு போய் கதவ தட்டி அவங்கிட்ட இதே அமர்க்களம் பண்ணனும்) இந்த காரியத்த செய்யனும்னு எதிர்பார்க்கிறேன். அதற்கு அப்பறம் நீங்க ஸ்டாலினோட படத்த நீங்க மூஞ்சிலேயோ சுவத்திலேயோ கூட ஒட்டிக்கலாம்...
எதிர் புரச்சி
//ரகசியமாக அல்லது தெரிந்த சிலரின் மத்தியில் சுயவிமர்சனம் எடுப்பதன் பெயர் சுயவிமர்சனமோ அல்லது நேர்மையோ அல்ல அதன் பெயர் வேறு.
//

புரச்சி,

ஒரு மேடையில் பகிரங்கமா சொல்றதைப் போய் ரகசியம்னு சொல்றீங்களே! வெயில் அதிமாயிடுச்சோ..?

உங்க காமெடிக்கு ஒரு அளவில்லாம போச்சே!

போங்க! போய் வேலையைப் பாருங்க!
thangam
ஆதவனை செருப்பாலடிக்க வேண்டும் என்று யாராவது சொன்னார்களா என்ன? புரச்சி எழுதிய பின்னூட்டம் இது: "ஆதவன் தீட்சன்யா போன்ற முரன்பாடுகளின் மூட்டைகள் தெரிந்தே தமது முரன்பாடுகளை பேணுகிறார்கள். ஒரு பக்கம் புரட்சிகர வாய்ச்சவடால்கள் மூலம் தமது சமூக அரிப்பை சொரிந்து விட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் தமது நடுத்தர வர்க்க சுக வாழ்வை பேணும் வாய்ப்பளிக்கும் சிபிஎம் போன்ற கட்சிகளை விட்டு செருப்பால் அடித்தால் கூட வெளியேற மாட்டார்கள். அதற்குப் பதில், ஈழப் பிரச்சினை போன்ற விசயங்களில் தமது கட்சி சார்ந்த பித்தலாட்ட நிலைப்பாடுகளை தலித்திய இன்னபிற முகமூடிகள் கொண்டு புனிதப்படுத்தும் கீழ்த்தரமான வேலைகளில் இறங்குவர்."

அனேகமாக இந்த புரச்சி என்பவர் ம.க.இ.க.வைச்ச் சேர்ந்தவராக இருப்பார் என எண்ணுகிறேன். அதான் இந்த சாத்து சாத்தியிருக்கிறார். தனது கொள்கைக்கு முரணான கட்சியிலிருந்து ஆதவன் போன்றவர்கள் விலகாமல் இருப்பது குறித்த அரசியலை புரச்சி கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதைத்தான் கவின்மலர் 'செருப்பால் அடிக்க வேண்டும்' என்கிறாரா? எட்டப்பன்களுடன் ஆதவன் இருப்பது குறித்து ஒருவர் பின்னூட்டமிட 'ஆதவனை எட்டப்பன் என்பதா' என்று சொன்னவர்தானே இவர். இவரது புரிந்துகொள்ளும் திறனுக்கு யாராவது விருது கொடுக்க வேண்டும்.

"சுந்தரராம‌சாமியின் செத்த‌ பிண‌த்தைத் தூக்கிக் கொண்டு ஊர் ஊராக‌ அலைகிறார்க‌ள்"

"ஜ‌க்கைய‌னின் வார்த்தைக‌ளை உள்வாங்காத‌ சமூக‌த்தின் மீது பீயைக் க‌ரைத்து ஊற்ற‌வேண்டும்"

"முறித்துப் போட‌டா பேனாவை முட்டாக்..."

இவையெல்லாம் உங்க‌ ஆத‌வ‌ன் எழுதின‌ வ‌ரிக‌ள்தான். நீங்க‌ எழுதினா மணக்குது. ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எழுதினா நாறுதோ...
புரச்சி
எதிர்புரச்சி,

//ஒரு மேடையில் பகிரங்கமா சொல்றதைப் போய் ரகசியம்னு சொல்றீங்களே! வெயில் அதிமாயிடுச்சோ..?//

தமிழ்நதி குறித்து தான் எழுதியது தவறு என்று ஒரு மேடையில் சொன்னவர். ஏன் எழுதவில்லை? கவின் மலர் குறித்து நான் கூட அவதூறு பேசி ஒரு பத்தாயிரம் பிட் நோட்டீஸ் மக்களிடம் கொடுக்க முடியும். கொடுத்த பிறகு ஏதோ ஒரு மேடையில் சிலர் முன்பு அது தவறு என்று சொல்வதன் பெயர் சுயவிமர்சனம் அல்ல.

அதன் பெயர் மொசடி, மொள்ளமாறித்தனம். நியாயமாக, கவின் மலரை நான் அவதூறு செய்து விட்டேன். அது தவறு என்று உணர்கிறேன் என்று இன்னொரு பிட் நோட்டிஸ் அடித்து மக்களிடம் வினியோகிக்க வேண்டும்.

புது விசை என்ற பெயரில் பத்திரிகை நடத்தும் ஆதவன் தீட்சன்யாவுக்கு இந்த சின்ன சுயவிமர்சனத்தை(??) வெளியிட வேறு இடமே கிடைக்கவில்லையென்பதை நம்ப இயலவில்லை.

குறைந்தபட்சம் தமிழ்நதியிடமாவது இதைச் சொல்லியிருக்க வேண்டுமே? அதைக் கூட செய்யாவில்லை அவர்.
வறட்சி
புரச்சி என்ற பெயரில் எழுதிவரும் நண்பரின் மொன்னையான நடையை பார்த்தால் தமிழ்நதி நினைவுக்கு வருகிறார். ஏனெனில் தமிழ்நதியை பற்றி தமிழ்நதி தவிர வேறெவரும் கவலையுறுவதில்லை
வறட்சி
தோழி புரச்சி. ஆக நீங்கள் தமிழ் என்பதை ஒப்புகொள்கிறீர்கள். ஆனால் நான் சுகுணா அல்ல.
புரச்சி
வறட்சி எழுதுவதைப் பார்த்தால், இது அமார்க்ஸின் அல்லக்கை சுகுணா போல் தெரிகிறதே!! ம.க.இ.க. தோழர்கள் வீட்டுக்கு வருவோம் என்று சொன்னதும் தொடைநடுங்கிப் போய், ஒவ்வொரு எழுத்தாளருக்கும் போன் பண்ணி புலம்பிக் கொண்டிருந்தீர்களே, என்னவாயிற்று?
anandkumar
இந்த வாரம் யூத் விகடனில் கீற்று ரமேஷ் பேட்டி வந்திருக்கிறது. அதில் ஆதவன், புனிதபாண்டியன் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். பேச வேண்டிய இடத்தில் ஆதவனின் உதவியைக் குறிப்பிட்டே பேசியிருக்கிறார். நட்புக்காக விமர்சனத்தை மூடிமறைக்காமலும் இருக்கிறார். பண்பட்ட மனிதராகவே தெரிகிறார்.

http://youthful.vikatan.com/youth/Nyouth/keetruRamesh270410.asp
sankara
போங்கப்பா, போய் வேலைவெட்டி இருந்தா பாருங்கப்பா
போடா போடி
கப்பித்தனமா பேசாம போய் புள்ளக்குட்டிங்களையாவது படிக்க வைங்கப்பா..............................!
vina
vanakkam. vimarsanangal leenavukku pudhusa enna? Idhu ellame leenavukku vilamparamdhaan. Alatchiya paduthi vittu, veru nalla padaipugalai paaraattum muyarchiyil iranguvom..
soundar
/ 'ஆதவன் பாவம் தலித். அவரை விமர்சனம் செய்யக்கூடாது' என்றீர்கள். // அப்படிச் சொன்னவரின் பெயரைச் சொல்லுங்கள். அப்படி கழிவிரக்கம் தேடிக்கொள்ளும் தாழ்ந்த நிலையில் இங்கு யாரும் இல்லை.

கவின்மலர், கழிவிரக்கம் தேடிக்கொள்ளும் தாழ்ந்த நிலையில் இன்று இருப்பது உங்களது குரு ஆதவன்தான். தூற்று.காம் என்ற அவரது கவிதை முழுக்க கழிவிரக்கம் தேடிக்கொள்ளும் ஒன்றுதான். உங்களுக்கு சொந்தபுத்தி என்று ஒன்று இல்லாததால்தான், அந்த கவிதை என்ன பேசுகிறது என்பது கூடப் புரியாமல், உங்க வலைப்பக்கத்தில் அதைப் போட்டிருக்கிறீர்கள். அடுத்தவர் சொல்லுவதை சொல்லும் கிளிப்பிள்ளையா நீங்கள்? தாம்தூம் என்று குதிப்பதற்குமுன் எதையும் பகுத்துணர்ந்து பேச வாருங்கள்...
j.k
மிக அருமை
kannan
இலக்கியவாதிகள் இவ்வளவு கேவலமாக குழுச்சண்டைகளில் ஈடுபடிகிறீர்களே... உங்களையெல்லாம் பற்றி இலக்கிய வாசகன் அறிவுஜீவிகள் என்று நினைத்துகொண்டிருப்பனே...
Raj
Hi all,
This leena is an engineeering graduate from madurai university. She could have to be an great engineer. Alas it is sad that she write such vulgar poems.
puthuvai Yugbharathi
Yoni. Mulai pondra sorkalai payanpaduthithan penniatthai velipaduttha mudiyumnu ninaikkirathu sariyanathaga irukka mudiyathu. minarvavin katturaiyil maalathi maithri, kutti revathi, sukirtharani potta nalla pathaiyil mutkalai podathe leena endru kattirunthar. maalathi maithri, kutti revathi, sukirtha rani pondror potta pathaiyilathan leenavum ezhuthararnnu enakku thondrugirathu. Eanendral, avargal kavithaigalil velipaduvathu kavithaiyum kidaiyathu; penniyamum kidaiyathu; adhu oru vagaiyana sitrinpam. - Pudhuvai Yugabharathi

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.