நம் தமிழினத் தாய்மார்களை கருத்த எருமை போன்ற தடிச்ச தமிழச்சி என காறித் துப்பிய மலையாளத்துப் பார்ப்பான் ஜெயராமனுக்கு ஆதரவாக சில முற்போக்கு அங்குலி மாலாக்கள் கிளம்பி இருக்கின்றன. ஊரில் எதுவும் நடந்து விடக் கூடாது. நடந்து விட்டால் இந்த அங்குலிமாலாக்களுக்கு எப்படித்தான் அலாரம் அடிக்குமோ தெரியாது. உடனே மார்க்சையும் அழைத்துக் கொண்டு பாசிசத்தினை கழுவ வந்து விடுவார்கள். நல்லவேளை கார்ல் மார்க்ஸ் உயிருடன் இல்லை. இருந்தால் இந்த வெங்காயத் தோல்களை கூட்டி அள்ளிக் கொட்டியிருப்பார் குப்பையில்...

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த ஈழத்தின் பேரழிவு உலகத் தமிழ் சமூகத்தின் மீது மிகப் பெரிய சோக அவலமாக கவிழ்ந்திருக்கிறது. உலக வல்லாதிக்க நாடுகளும், இந்தியாவும் குறிப்பாக மலையாளிகளும் காத்திருந்து நம் இனத்தினை காவு கொடுத்து அழித்தார்கள். நம் கண்ணெதிரே நாடு கட்டி வாழ்ந்த நம்மினம் நாதியற்று கம்பி வேலி சிறைகளுக்குள் வெம்பிக் கிடக்கிறது. உயிரைக் காத்துக் கொள்ள உறவைத் தேடி வந்த மீதி சனம் அகதி முகாம் என்ற பெயரில் செங்கல்பட்டு போன்ற இடங்களில் சின்னாபின்னப்படுத்தப்பட்டு சிதைந்து கிடக்கிறது. தமிழர்கள் மிகப் பெரிய உளவியல் போருக்கு மத்தியில் கண்கலங்கி நின்று கொண்டிருக்கிறார்கள். இத்தனை அவலங்களுக்குப் பிறகும் மீள் எழுவதற்கான சாத்தியங்கள் குறித்து பல கேள்விகளோடு தமிழினம் இன்று நின்று கொண்டிருக்கிறது. தாயகத் தமிழர்களை விட இனமான உணர்விலும், வீரத்திலும், தொன்ம இனம் வழி வந்த அறத்திலும் நின்ற ஈழத் தமிழர்களே இன்று தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இங்கோ ஏற்கனவே மார்வாடிகளும், சேட்டுகளும், மலையாள சேட்டன்களும் தமிழகத்தினை தொழில் ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும் ஆக்டோபஸ் விழுங்குவது போல விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் வீதிகளில் தமிழுக்கு இடம் இல்லை. நீதிமன்றங்களில் தமிழ் இல்லை. கல்விக் கூடங்களில் தமிழ் இல்லை. சமூக வாழ்வியலில் தமிழ் இல்லை. பேச்சிலோ,எழுத்திலோ தமிழ் இல்லை. இளைஞர்கள் மீது கவிழும் புதுப்புது பண்பாட்டு வேர்களில் தமிழ்ப் பண்பாட்டிற்கும், மொழிக்கும் இடமில்லை. சென்னை நகரம் மார்வாடிக்களின் கைகளிலும், ஆந்திர, மலையாளிகளின் கைகளிலும் சென்று கொண்டே இருக்கிறது. நடைபாதைகளில் நாதியற்றுக் கிடக்கிறான் விவசாயத்தினை விட்டு, கிராமத்தை விட்டு, பட்டணத்திற்கு பிழைக்கப் போன தமிழன்.

 அதனால் தான் தன்னைக் காத்துக்கொள்ள, தன் பண்பாட்டை காத்துக் கொள்ள தமிழ் தேசிய அமைப்புகள் செயல்படத் துவங்கி உள்ளன. ஜெயராம் வீடு தாக்கப்பட்டது வன்முறை என்றால், அதைத் தாண்டிய வன்முறை மலையாள ஜெயராம் உதிர்த்த சொற்கள். பொருட்கள் மீதான வன்முறையின் தாக்கத்தினை விட கருத்துக்கள் மீதும், ஓட்டு மொத்த இனத்தின் அடிப்படை உருவகங்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை. அவை சொற்களாக இருந்தாலும் கூட அவை மூர்க்கமானவையே. வெகு நாட்களாக ஒடுக்கப்பட்டவன் திமிறி எழுவது அவ்வளவு சுமூகமாக இயல்பாக இருக்காதுதான். அதனால் எதையும் எதிர்த்துக் கேட்காதே, மலையாளத்தான் உன் தாயின் முகத்தில் காறி உமிழ்ந்தால் கூட கண்டன ஆர்பார்ட்டம், மனிதச் சங்கலி, உண்ணாவிரதம் ஆகியவை செய்! காறி உமிழப்பட்ட எச்சிலைத் துடைக்காதே! நீ துடைத்தால் அது மலையாளத்தானுக்கு எதிரான வன்முறை என்று அங்குலிமாலா உள்ளீடான வார்த்தைகளில் அறிவுஜீவித்தனம் பேசுகிறார்.

ஜெயராமின் கருப்பின கருத்தியல் அவரின் ஆரிய மனவியலின் சின்னம். ஆரிய புளுகுப் புராணங்களில் தமிழர்களை அரக்கர்களாகவும், குரங்குகளாகவும் படைத்த ஆரிய படைப்பு மனம் தான் இன்றளவும் உயிருடன் இருந்து தமிழச்சியை கருத்த எருமை என எகத்தாளம் பேச வைக்கிறது.

தமிழ் தேசியவாதிகளுக்கு கருத்தியல் பலம் இல்லையாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கிய இலக்கண வளமையைக் கொண்டு, மொழியியல், பண்பாட்டியியல், அரசியல் என அனைத்து சமூகவியல் கூறுகளையும் உலகிற்கு கற்பித்த ஒரு தேசிய இனத்தின் பிள்ளைகளுக்கு கருத்தியல் பலம் இல்லையென்பது ஜெயராம் இழிவுபடுத்திய சொற்களுக்கு நிகரான அரசியல் தன்மை கொண்டவை. என்ன செய்வது எமக்கு எதிராக உதிர்க்கப்பட்ட சொற்களின் ஊடாக இருந்துதான் எங்களுக்கான கருத்தியல் பலத்தினை நாங்களே உண்டாக்கி கொள்ள வேண்டி இருக்கிறது.

 இனம் அழியும்போது கூட எதிர்த்துக் கேள்வி கூட கேட்க முடியாத இயலாத அச்ச மன நிலையை அரசு இயந்திரங்கள் மிகச் சரியாக ஏற்படுத்தி இருக்கின்றன. ஏனெனில் மத்திய அரசின் உயர் பதவிகளில் உளவுத் துறைகளின் உச்சப் பதவிகளில் இன்று மலையாளிகளே இருக்கின்றார்கள். முல்லைப் பெரியாறு போன்ற தமிழகத்தின் வாழ்வாதார சிக்கல்களில் நமக்கு மிகப்பெரிய எதிரிகளாக மலையாளிகள் இருக்கின்றார்கள். வேறு எந்த இனத்தினைக் காட்டிலும் நம் ஈழ இனத்தின் ரத்தம் மலையாளிகளின் கரங்களில் தான் படிந்திருக்கிறது. ஜெயராமின் சொல்லாடல்களுக்குள் எங்களை ஈழப் போரில் வீழ்த்திக் காட்டிய மலையாள இனத் திமிர் ஒளிந்திருக்கிறது. மலையாளப் பார்ப்பானை நேரடியாக ஆதரிக்க கூச்சப்பட்டுக் கொண்டு “சும்மா இருந்தவன அவன் காறி துப்புனது தப்புதான் ஆனா இவன் திருப்பி அடிச்சது ரொம்ப ரொம்ப தப்பு” என்று கருணாநிதி பாணியில் அங்குலி மாலா முரசொலித்திருக்கிறார்.

பிரச்சனை இவர்களுக்கு என்னவென்றால், மலையாளத்தான் திட்டியது அல்ல தமிழன் தட்டிக் கேட்டதுதான். இந்த லட்சணத்தில் மலையாளத்தானுக்கு ஒரு கையில் குடை பிடித்துக் கொண்டு மறு கரத்தால் உழைத்துச் சோர்ந்த கரங்களோடு கைக் கோர்ப்பார்களாம் இவர்கள்.

 நம் இனம் அழியும் போது நாம் அசாதாரணமாக கடைப்பிடித்த மவுனம் தான் இந்த மலையாளப் பார்ப்பான் ஜெயராமின் வாய்க் கொழுப்பிற்கு காரணம். ஜெயராமின் கொழுப்பு மிகுந்த வார்த்தைகளை தமிழன் வழமைப் போல மவுனமாக கடந்திருந்தால் இந்த அங்குலிமாலாவிற்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. தட்டிக் கேட்கிறானே என்ற அச்சமும் தவிப்பும் அங்குலிமாலாக்களை வார்த்தைகளை மாற்றிப் போட்டு வித்தை காட்ட வைக்கின்றன. கேட்டால் வன்முறையாம். இப்போது புதிதாய் புறப்பட்டிருக்கும் இந்த அகிம்சை (?) மார்க்சியவாதி சொல்கிறார். இந்த கொழுப்பினை தட்டிக் கேட்டால் அங்குலிமாலா நாம் தமிழர் இயக்கத்தினையும் சிவசேனாவையும் ஒப்பிடுகிறார். நாம் வெகு தீவிரமாக எதிர்க்கக் கூடிய மதவாத அரசியலின் மராட்டிய முகமான சிவசேனாவிற்கு கூட மராட்டிய மக்களினத்தின் வரலாறு குறித்தும் பண்பாடு குறித்தும் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அங்குலிமாலா போன்ற முற்போக்கு முகமுடிகளுக்கு எவ்விதப் புரிதலும் அறிதலும் இல்லை.

தமிழ்ப் படங்கள் மலையாளப் பெண்களை இழிவுப்படுத்துகின்றன என அங்குலிமாலா வெகுவாக வருந்துகிறார். அதனால்தான் ஜெயராமும் நம்மினப் பெண்களை இழிவுபடுத்த உரிமைப் படைத்தவராகிறார் என சொல்ல வருகிறார் அங்குலிமாலா. இந்தியா முழுவதும் தேசிய இனங்களின் தன்னுரிமை குறித்தான சிந்தனை செழுமைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் தான் பல்வேறு மாநிலங்களில் அந்தந்தப் பகுதி மக்கள் தங்களுடைய மொழியையும், பண்பாட்டினையும் காக்க போராடத் துவங்கியுள்ளார்கள். அதனுடைய ஒரு வடிவம் தான் ஜெயராம் வீட்டு மீதான தாக்குதல்.

தமிழகத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். வந்து எங்களோடு சகோதரர்களாக அமைதியாக வாழலாம். ஆனால் எங்களை இழிவு படுத்தவும், சிறுமைப்படுத்தவும் எவருக்கும் உரிமை இல்லை. சர்வதேசியம் பேசியவர்களும் பொதுவுடைமை உலகை உருவாக்கக் கிளம்பியவர்களும் சேர்ந்து கொண்டுதான் ஈழப் போரில் தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுத்தார்கள். இனி எங்களுக்கான அரசியலை எங்களுக்கான தத்துவங்களை நாங்கள் எங்களின் தொன்ம இலக்கிய மரபின் ஊடாகவே அடைய வேண்டிய அவசியம் இருக்கிறது.

நாங்கள் வீழ்ந்தவர்கள்; தோற்றவர்கள். எங்கள் காயத்தின் ரத்தம் கூட இன்னும் உலரவில்லை. எங்களிடம் அறம் பேசும் அங்குலிமாலாக்கள் முதலில் மலையாளிகளிடம் போய் பேசி, கொடுப்பதை வாங்கிக் கொண்டு வரட்டும். எதற்கெடுத்தாலும் எம் தந்தை பெரியாரை இழுப்பதை இந்த மார்க்சியவாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று தனித்தமிழ் நாடு கேட்ட தந்தை பெரியார் இன்று உயிருடன் இருந்தால் திராவிடத்தின் பேரால் மலையாள பார்ப்பனுக்கு மன்னிப்பு வழங்கி விட்டு தமிழனை தூக்கி சிறைக்குள் போடும் பிழைப்புவாத அரசியல்வாதிகளை தடி கொண்டு அடிப்பார்.

 மலையாளிகள் பல்வேறு நிலைகளில் இன்று தமிழர்களின் உழைப்பையும், ஆற்றலையும் சுரண்டும் மிகப் பெரிய சக்தியாக விரிந்திருக்கின்றனர். ஊருக்கு ஊர் ஜோஸ் ஆலுக்காஸ் கிளை பரப்புகிறது. அரசு அதிகாரங்களில், மத்திய அரசின் முடிவெடுக்கும் பதவிகளில் இன்று மலையாளிகளின் கரமே ஒங்கி இருக்கிறது. அதனால் தான் ஜெயராமை வீட்டினை தாக்கியதாக சொல்லப்படும் நாம் தமிழர் இயக்கத் தோழர்களின் கைதுகளுக்குப் பிறகும் எவ்வித முன்னுதாரணங்களும் இல்லாமல் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானை எப்படியாவது கைது செய்து விட அரசு துடிக்கிறது. ஒரு இயக்கத்தினரின் செயல்களுக்காக அதன் தலைமையும் கைது செய்யப்பட வேண்டுமென்றால் மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலக எரிப்பினில் முதலில் கைது செய்யப்பட வேண்டியவர் யார் ?

திரைப்படங்களில் பெண்களின் நிலை குறித்த பார்வையை மலையாளத்தானுக்கு ஆதரவாக சீமான், தங்கருக்கு எதிரான முரணாக முன் நிறுத்துவது அபத்தம். ஒட்டு மொத்த இனத்திற்கான இனமானக் குரலுக்கு எதிராய் உள் சமூக முரண்களை பெரிதாக்கிக் காட்டும் போக்கு இனத்தின் மேன்மையை இன்னும் வீழ்ச்சிக்கே தள்ளும்.

என் இனம் வீழ்ந்ததும், அழிந்ததும் எனக்கு வலிக்கிறது. எம் தாய்மார்களைப் பற்றி பேசினால் எனக்கு சுடுகிறது. என் நிலமும், வாழ்வும், என் மீதான அதிகாரம் செலுத்தும் உரிமையும் மலையாளத்தான் கரங்களில் சிக்கும்போது நான் பாதிக்கப்படுகிறேன். எம் இனத்தினை எள்ளலுக்கும் கேலிக்கும் மாற்றான் உட்படுத்தும் போது நான் அவமானத்தால் தலைகுனிகிறேன். என் துயரையும், வலியையும் பொறுத்து என் எதிர்வினை அமைகிறது. இதுவும் அறச் சீற்றம் தான்.

வன்முறையை தனது திமிரால் விதைத்தவன் அந்த மலையாளத்துப் பார்ப்பான் ஜெயராம்தான். மலையாளிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது. முடிந்தால் அதை எதிர்த்துக் கேளுங்கள். நாங்கள் வெறும் வன்முறையாளர்கள் அல்ல என்பதை முத்துக்குமாரர்களாக, திலீபன்களாக நிருபித்து இருக்கிறோம். ஏற்கனவே வரலாற்றில், கையில் விமானம் இருந்தும் பொது மக்களை தாக்காமல் ராணுவ நிலைகளை மட்டுமே தாக்கிய தமிழர்களின் அறம் உலகம் அறிந்தது. அங்குலிமாலாக்கள் அறியாதது ஏனோ.?--

- மணி.செந்தில் 

Comments

31 comments

31
Sivakumar
சபாஷ்...மணிசெந்தில் அவர்களே... வீரத்தால் உலகளந்த தமிழர்கள் தடுமாறும் வேளையில் இதுபோன்ற கட்டுரைகள் வரவேற்க்கப்பட வேண்டியவை...
Srinivasan
வெகு நாட்களாக ஒடுக்கப்பட்டவன் திமிறி எழுவது அவ்வளவு சுமூகமாக இயல்பாக இருக்காதுதான்//

நச் நச் நச்...

அதனால் எதையும் எதிர்த்துக் கேட்காதே, மலையாளத்தான் உன் தாயின் முகத்தில் காறி உமிழ்ந்தால் கூட கண்டன ஆர்பார்ட்டம், மனிதச் சங்கலி, உண்ணாவிரதம் ஆகியவை செய்! காறி உமிழப்பட்ட எச்சிலைத் துடைக்காதே! நீ துடைத்தால் அது மலையாளத்தானுக்கு எதிரான வன்முறை என்று அங்குலிமாலா உள்ளீடான வார்த்தைகளில் அறிவுஜீவித்தனம் பேசுகிறார்//

அங்குலிமாவிற்கு நெத்திஅடி, தமிழின துரோகிகளுக்கு செருப்பு அடி ! !
பரமு
இது அங்குலி மாலா எழுதியதற்கு மறுப்பு என்று சொன்னால் சின்னப்புள்ளகூட சீரியசா நம்பாது.

ஏன்னா.. இதை படப்பவரின் மனதில் ஒரு செண்டிமெந்த் ரியாக்சனை உருவாக்கவேண்டும் என்பதற்காக ஈழவிசயத்தை வலுக்கட்டாயமாக திணித்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. ஈழபோரில் மலையாளிகள் துரோகம் செய்யாமல் இருந்திருந்தால் அவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வரா என்ன?

இதில் அங்குலிமாலா சீமான், தங்கர் பற்றி சொன்ன குற்றச்சாட்டுகளை மிகவும் தந்திரமாக மறந்ததுபோல எழுதியுள்ளார். ஒருவேளை அந்த தந்திரத்தை கண்டுபிடிக்காமல் செய்யவே ஈழ செய்திகள் போல.

மேடையில் ஏறி முழங்கிவிட்டாலே ஈழத்திற்கு போய் துப்பாக்கி ஏந்தி வீரமரணம் அடைந்த போராளிகளுக்கு சமமான ஈகையை செய்ததை போல எண்ணிக்கொண்டதன் விளைவே இறுதி பகுதியில் புலிகளின் குரலாக எழுதியிருப்பது.

மாபெரும் காமடியும் இருக்கு..

தந்தை பெரியார் இன்று உயிரோடியிருந்தால் கருணாநிதியை தடியால் அடித்திருபார் சரி ஒத்துக்குவோம்.

பெரும்மதிப்புமிக்க பெருமகனார் என பால்தாக்கரேயை புகழ்ந்தவரை என்ன செய்திருப்பார்,,,

தேவர் ஜெயந்தியில் பட்டையோடு பூசித்தவரை என்ன செய்திருப்பார் என்றும் சொல்லிருக்கலாமே ..

இது அங்குலி மாலாவுக்கு எதிர்வினைய்யாக அல்லாமல் சீமான் படம் போடுவதற்கு எழுதப்பட்டதாகவே நாம் கருதவேண்டும்

விரைவில் பின்னூட்டத்தின் வழியே ஈழத்து துரோகி பட்டம் வாங்க போகிற,,
-பரமு
R. Kanthasamy
அது சரி அய்யா.. அடிச்சா கூட திருப்பி அடிக்க முடியாத செயராம் என்கிற மலையாளப் பாப்பான்னு சொல்றிய.. ஆனா நான் பாப்பாத்திதான்னு சட்டசபையில சொன்னவங்கள உங்க சீமான் போன தேர்தல்ல வர வைக்க பிரயத்தனப் பட்டாரே..
அப்போ தேவப் பட்டா பாப்பாங்கறத கையல எடுக்கறதே அரசியலா...?
Manoharan
There are 30Lakhs MALAYALI PEOPLE living in tamilnadu. So far tamilnadu asking water for agriculture less then they are consuming.
Hitherto even a single word not coming from AUNGLUIMALAKAL mouth for our fellow farmers.
But one ANGULIMALAKAL will open their mouth only a MALAYALI house attcked.
What a tragedy?.
vijayan
தமிழன் என்றும் இனம் என்றும் சொல்லிக் கொண்டே ஆட்சி அதிகாரம், தொலைக்காட்சி, சினிமாக்கள் மீது ஆதிக்கம், ரியல் எஸ்டேட் கொள்ளை என்று தமிழர்க்ளின் தலையில் கண்ணுக்கு முன்னே மிள்காய் அரைத்துக் கொண்டிருப்பவர்களை எதிர்க்க வக்கில்லாமல், ஜெயராம் என்னும் ஒரு சினிமாக்காரனை தாக்குவதுதான் தமிழன் வீரமா?

வாய்ப்புத் தேடி வரும் தமிழ்ப்பெண்களை தமிழ்த் திரை உலகத்தின் ஜாம்பவான்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பது இந்த தமிழ் வீரர்களுக்குத் தெரியாதா?
elagnairu
மலையாளி தமிழச்சியை கேவலமாக பேசியதை யதார்த்தமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தேசிய முற்போக்காளர்கள் நினைக்கிறார்களா? தொழில் வாரியாக தவறுகளை பிரித்துப் பிரித்து களைந்தெடுக்கும் வேலையை செய்ய கையாலாகாத தேசிய சிந்தணையாளர்கள் தமிழன் மீது தாக்குதல் நடக்கும் போதெல்லாம் அதற்கான எதிர் வினையை மழுங்கடிக்க அங்குலிமாமாக்களாக அவதாரம் எடுக்கிறார்கள்.. பிரபாகரன் மரணம் என்றவுடன் புலிகளின் போக்கு தவறானது என்று பிரச்சாரம் செய்வார்கள்.... இப்படி தமிழ்தேசிய சிந்தனைகளை முனை மழுங்கடிப்பதில் இவர்கள் தமிழனின் போக்கை காரணம் காட்டியே... இதுபோல் மற்ற இனங்கள் செய்வதில்லை என்று காட்ட முயற்சிக்கிறார்கள்.. இவர்களை கருத்தியல் முட்டால்களாக ஒதுக்க வேண்டும்
Sampath
அங்குலிமாமா வுக்கு யாரும் தமிழர் நலன் சார்ந்த விசயங்களை பேச கூடாது, குறிப்பாக மலையாளிகளுக்கு எதிராக பேசிவிட கூடாது. அங்குலிமாமாவுக்கும் அவருக்கு ஆதரவாக பின்னூட்டம் கொடுத்திருப்பவர்களின் அம்மாவை யாரேனும் எருமை போல் உள்ள தமிழச்சி என்று சொன்னால், தமிழன் என்றும் இனம் என்றும் சொல்லிக் கொண்டே ஆட்சி அதிகாரம், தொலைக்காட்சி, சினிமாக்கள் மீது ஆதிக்கம், ரியல் எஸ்டேட் கொள்ளை என்று தமிழர்க்ளின் தலையில் கண்ணுக்கு முன்னே மிள்காய் அரைத்துக் கொண்டிருப்பவர்களை எதிர்த்து் அடித்து கொன்று்விட்டு வந்துதான் என்னவென்று கேட்பார்கள். இவர்களுக்கு எல்லாம் தமிழன் இப்படியே அடிவாங்க்னும், அவமானப்படனும், அப்பதான்் இவனுங்களும் வீட்டில படுத்துகிட்டு "ஐயோ வன்முறை" " அக்கார்டிங் டு மார்க்சிசம் " என்று எழுத முடியும்.
raja
First everyone must know one thing. we are getting a good man seeman. very rare this kind of people in our land. we begging to indian government past days. so we only get our freedom seeman way otherwise write a letter to central and state whole life.

please understand tamil brothers. please encourage seeman. next against cho and subramaniaswamy.
durai ilamurugu
ச்யரம் சொன்னது தவறு அதில் அய்யம் இல்லை அத்ர்கு எதிப்பு அடிப்பதுதனா?
அ தைசெய்ய சீமான் தனடியதலை எவிவிட்டால் ஜெயா வை அடிக்க யரை அனுப்புவர்ர்?
காசுவஙிக்கொன்டு வொட்டு கெட்பவ்ர்கள் எல்லம் தமிழ் தேசியர்கள் என்ரல் தமிழுக்கு அழிவுநெருஙுகிரது என்ரு பொருள்.பப்பாதிக்கு வோட்டு கெட்ட சீமானை கைது செய்தல் அம்மா எத்ர்து ஒஉ அறிக்கையாவது விடுவரா? பண்ம் பத்தும் செய்யும் .அன்னியனட்டு பண்ம் அதர்கு மேலும் செய்யும
all colour தமிழன்
சிறுவர்மலருக்கு செல்லகூடிய கட்டுரை தவறாக இங்கே வந்துவிட்டது !!
elagnairu
சீமான் கைதை நியாயப்படுத்தும் முட்டாள்கள்.. சன் தொலைக்காட்சியில் ரெளடி என்றும் மூன்று கொலைக்கு இவர் கும்பல்தான் காரணமென்றும் சொல்லப்பட்ட அழகிரிக்கு சொல்லும் காரணம் என்ன? கருணாநிதி & சன் குடும்பம் இணைந்துவிட்டால் கொலை இல்லையென்று ஆகிவிடுமா? பார்ப்பானை ஆதரிக்கவோ அல்லது அவன் காலை நக்கிக் கிடந்தவன் கிடப்பவன் செய்தால் தவறல்ல. தமிழச்சியை எருமைத்தோல் பெண் என்று சொன்னால் எருமையைப் போல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் யார்? தேசியம் பேசிக்கொண்டே தமிழனை காட்டிக்கொடுக்கும் கருங்காலிகள்.. அங்குலிமாமாக்கள்.. மார்க்சியம் பெரியாரியம் காந்தியம் எதையும் தமிழனுக்கு எதிராக சாதூர்யமாக நேரத்திற்கேற்ப பேசும் பச்சோந்திகள்.. இவர்கள் அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்பட வேண்டும். எனக்கு பதில் சொல்லுங்கள் நேர்மையிருந்தால்
பாஸ்கர்
//எம் இனத்தினை எள்ளலுக்கும் கேலிக்கும் மாற்றான் உட்படுத்தும் போது நான் அவமானத்தால் தலைகுனிகிறேன். என் துயரையும், வலியையும் பொறுத்து என் எதிர்வினை அமைகிறது. இதுவும் அறச் சீற்றம் தான்//

ஐயா, நானும் தமிழன் தான். ஜெயராம் சொன்னதை வன்மையா கண்டிக்கிறேன்.

நானும் என் இனம் எள்ளலுக்கும், கேலிக்கும் மாற்றானல் உட்படுத்தப்படும்போது அவமானத்தால் தலைகுனிகிறேன்.
எனக்கும் துயரும், வலியும் இருக்கிறது. ஆனா ஒன்னு மட்டும் குழப்பமா இருக்கு.
“துயரும், வலியும் பொறுத்து என் எதிவினை அமையும். இதுவும் அறச் சீற்றம் தான்”

இன்ன துயர்+வலி க்கு இன்னின்ன எதிர்வினை செய்யலாம்னு சொல்றமாதிரி தமிழ் கோனார் நோட்ஸ் ஏதும் வச்சிருக்கீங்களா. இருந்தா சொல்லியனுப்புங்க. எங்க ஊர்ல ஒரு நாலஞ்சு தேவைப்படுது.

நான் வந்து இப்படி சொன்ன ஜெயராம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கனும்; அதுவரை அவரின் தமிழ் சூட்டிங்களில் கறுப்புக்கொடு ஏந்தி கோஷம் போடலாம்னு என் எதிர்வினைய சொன்னேன்.

இன்னொரு நண்பன் சொன்னான், ஜெயராம் இப்படி சொன்னதுக்கு, அது நமக்கு ஏற்படுத்தின துயர்+வலி க்கு நாம எல்லாருமா சேர்ந்து ஜெயராம் வீடுப் பெண்களை பாலியல் பலாத்காரம் செஞ்சாதான் ஈடாகும்.

இன்னொரு நண்பன், அப்படி சொன்ன ஜெயராமை கடத்தி, அவன் நாக்கை துண்டித்து அனுப்பலாம்.

இன்னொருத்தன் கருத்து. நடிகர் சங்கத்தில் தன் சக தமிழ் நடிகைகளின் காலில் விழுந்து ஜெயராம் மன்னிப்பு கேட்டால்தான் தகும் னு சொன்னன்.

ஜெயராமை உயிரோட மண்ணெண்ணை ஊத்திக் கொளுத்தனும் (முடிஞ்சா குடும்பத்தோட) சொன்னவன் கடைசி நண்பன்.

நான் அவங்களுக்கெல்லாம் சொன்னேன், அண்ணன் மணிசெந்தில் ‘நாம் தமிழர்’ இயக்கமெல்லாம் நடத்துறாரு. சீமான் போன்ற தலைவருக்கு ரொம்ப நெருக்கமானவரு. இப்படி ஜெயராம் சொன்னதுக்கு வீடுபுகுந்து அடிப்பதுதான் சரியான எதிர்வினைன்னு சொல்லியிருக்கிறாரு. பிற்காலத்தில் இராஜபட்ஷே, மலேசியப் பிரதமர் னு யார் இதுபோன்று தமிழர்களை, தமிழ்ப் பெண்களை அவமதிச்சாலும் பாரபட்சம் காட்டாம இதே எதிர்வினைதான் ஆற்றுவார். அதனால மொத வேலையா அந்த கோனார் நோட்ஸ் எங்க கிடைக்கும்னு (அனேகமா நாம் தமிழர் தலைமை அலுவலகத்துல) முகவரி சொன்ன நாங்க அஞ்சு பேரும் வாங்கி பயனடைவோம்.

மேல சொன்ன நாலுபேரும், அவங்கவுங்களுக்கு ஏற்பட்ட வலியின் அளவைப் பொறுத்து ஆற்றவிருந்த எதிரிவினையை வரவேற்பீர்களா மணிசெந்தில்?
கதிரவன்
பாவம், சீமானின் பினாமி ஒருவர் வழியின்றிக் கீற்றில் பினாத்துகிறார், கீற்றுக்கு வேற கட்டுரைகள் கிடைக்க வில்லை போல.....
elagnairu
கதிரவன் போன்ற துரோகிகள் எப்போதும் நம்மைப் பார்த்து நகைப்பார்கள்... பாவம் என்று பார்க்காமல் இந்த கருங்காலிகளை ஒதுக்கிவிடுதல் நலம்.. மனிதனை மனிதன் கேவலப்படுத்தும் சாதிய முறையே ஒழியனும் எனும்போது .... பெண்ணிணத்தை கேவலப்படுத்தும் இந்துமதப் பாப்பானின் அடாவடிப் பேச்சை கண்டிக்க கூடாது என்பது தண்டிக்க கூடாது என்பது சரியா ? தன்மீதான அடாவடிப் பேச்சுகளை தண்டிக்க அனுமதித்தால் காலப்போக்கில் தமிழினம் தலை நிமிர்ந்து துரோகிகளை ஓட ஓட விரட்டி விடுவார்களோ என்ற பயத்தால் அம்புலி மாமாக்கள் பினாத்துகிறார்கள். கதிரவன் கள் காவடி தூக்குகிறார்கள்
S.Selvakumar
தம்பி மணி ரொம்ப உணர்ச்சிவசப்படாத கண்ணு. இதவிட உணர்ச்சிவசப்பட்டவங்க, உணர்ச்சிய தூண்டி விட்டவங்க எல்லாருமா சேர்ந்து கடந்த 40 வருசமா நம்ம அறிவ வளர்க்காம விட்டுட்டாங்க கண்ணு. நம்ம அறிவ மட்டும் இல்ல ஈல மக்கள் அறிவையும் கெடுத்துட்டாங்க கண்ணு. இனிமேலாவது அறிவு வளர்ற மாதிரி விசயம் இருந்தா சொல்லு கண்ணு. இல்லாட்டி மலயாளிகள் இன்னும் முன்னேறிடுவாங்க கண்ணு. அப்புறமா நீ மலயாளிகள திட்டீட்டே இருப்ப. நாங்க கேட்டுக்கிட்டே இருக்க வேண்டியது தான். கொன்ஷம் யோசி கண்ணு.

யேனுங்க கீற்று வேற கட்டுரையே இல்லயாப்பா?
arivu
//சர்வதேசியம் பேசியவர்களும் பொதுவுடைமை உலகை உருவாக்கக் கிளம்பியவர்களும் சேர்ந்து கொண்டுதான் ஈழப் போரில் தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுத்தார்கள்//

அப்படியா ? ஈழத்தாய்க்கு பால் குடம் தூக்கியவர்களே ! இப்போது ஈழத்தாய் காங்கிரசுக்கு காவடித் தூக்கிறார். யாரை ஈழத்திமிழர்களின் கொலைக்கு காரணம் என்று சொன்னாரோ, நீங்களும் கைதட்டி மகிழ்ந்தீர்களோ அந்த ஜெயலலிதா இப்போது அதே கொலைகார காங்கிரசோடு கூட்டணிக்கு அலைகிறார்.

உங்கள் செயல்தந்திரத்தின் லட்சணம்தான் இது. ஆனால், நீங்கள் சொன்ன அங்குலிமாமாதான் ராஜீவ் குலக்கொழுந்து ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அடிவாங்கினார்.
கதிரவன்
அட.. இங்க பாருடா..

பின்னூட்டம் போடுறவந்தான் ஃபேக்ல வருவானு பாத்தா..
பதில் சொல்றவரும் ஃபேக்கிலா நல்ல வளர்ச்சிதான் மாமே..
Ilamukilan
ஜெயராம் பிரஷனைக்கும் ஈழத்துக்கும் என்ன சம்பந்தம்?
ஜெயராம் பேச்சை யாரும் ஆதரிக்கவில்லை

""இளைஞர்கள் மீது கவிழும் புதுப்புது பண்பாட்டு வேர்களில் தமிழ்ப் பண்பாட்டிற்கும், மொழிக்கும் இடமில்லை.""

சீமான் என்ன தமிழ் உடைகளா பயன்படுத்துகிறார்?

தயவு செய்து தமிழ்செல்வன் இரங்கல் கூட்டத்தில் சீமான்
பேசியதை கேத்கவும். அதே வாயால் இலை மலர்ந்தால்
ஈழம் மலரும் என பேசி உண்மையான இன உணர்வாளர்களை கேவலபடுதிய சீமானை அடிக்கலாமா?

மலையாளிகள் பல்வேறு நிலைகளில் இன்று தமிழர்களின் உழைப்பையும், ஆற்றலையும் சுரண்டும் மிகப் பெரிய சக்தியாக விரிந்திருக்கின்றனர்.

பெருவாரியாக இங்குள்ள தமிழனும் தமிழட்சிகளும், ஆலைகளில் சுரண்டபடுகிரனே அதுக்கு என்ன சொல்லற? சுமங்கலி திட்டம் என்ற பெயரால் இளம் தமிழச்சி விற்கிரானே மானபங்கம் படுத்துகிரனே அவனை என்ன செய்த?

""இனி எங்களுக்கான அரசியலை எங்களுக்கான தத்துவங்களை நாங்கள் எங்களின் தொன்ம இலக்கிய மரபின் ஊடாகவே அடைய வேண்டிய அவசியம் இருக்கிறது. ""

அப்ப இதுவரை இல்லை????

சிவசேனவுக்கு தமிழ் நாட்டில் கிளை வைத்துள்ளானே அவனை அடிச்சையா? உங்களுக்கும் தக்கரேக்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை

இலங்கைல் வாழும் நம் மலையக தமிழனைப் பற்றி கவலை படாத இயக்கத்திற்கு நாம் ஏன் ஆதரவு தெரிவிக்க வேண்டும் அங்கு அடித்து விரட்டப்பட்ட தமிழ் முஸ்லிம் பற்றி கவலை படாத தமிழ் இன வாதத்தை என்ன சொல்வது, பெரியாரின் பகுத்தறிவு பற்றி பேச தகுதயுல்லதா?
chandru
i think u guys dont have any work.if seeman is real tamilan then he should have done somthing in eelam war.he was just shouting nothing else.neenga yellam poli.namma tamil makkal eppavume pavamthan ungala nambi nambi sagurathe polappa pocchu.unga yaralayavthu irantha uirgalai thirumba kodukka mudiuma?amma appa ellam pavam.
Noyyal nathi
ஜெயராம் பிரச்சினையும் ஈழப்பிரச்சனையும் வேறு வேறு.. ஆனால் கொல்லப்பட்டவனும் கேவலப்படுத்தப்பட்டவளும் தமிழர்கள்.. மலையக தமிழர்கள் அடிமை வாழ்வுதான் வாழ்கிறார்கள்.. அடிமைத்தனத்துக்கு எதிராக ஏன் இணையவில்லை ? சிங்களனுக்கு கால் பிடிக்கும் சில மலையக தமிழ் தலைவர்களால் எதையும் சாதிக்க இயலவில்லை. சரியா இளங்குமரன்.. இந்திய தேசியவாதிகள் தமிழகத்தில் இருந்தாலும் இவர்களால் தமிழினத்துக்கு எதையும் செய்ய இயலவில்லை.. ( பெரியாரும் காமராசரும் செய்ததைப் போல ) அப்படி தமிழினத்துக்கு ஆதரவாக யாரும் வந்துவிடக்கூடாது என்பதில் பார்ப்பனர்களும் பனியாக்களும் கருணாநிதி குடும்பமும் எச்சரிக்கையாய் இருக்கிறார்கள்.. மலையாள பார்ப்பான் கேவலமாய் பேசுவான்.. கருணாநிதி மன்னிப்பான்.. ஏன் கருணாநிதி ஆந்திராவை சேர்ந்தவர்..( நான் சொல்லவில்லை எம்.ஜி.ஆர் சொன்னது தம்பி ) கருணாநிதி சார்ந்த இனப் பெண்களை சொல்லியிருந்தால் கோபம் வரலாம் வராமலும் போகலாம்..... கலைஞர் போன்றோர் இன்றைய ஈழச்சாவை வேடிக்கை பார்த்துவிட்டு பழைய போராட்டங்களையும் எதிரி ஜெயா சொன்னதைஞாபக்ப்படுத்தியும் தங்களை நியாயவான் என்று காட்டிக்கொள்ளலாம்.. சொல்லிக் கொண்டிருப்பவனைவிட செய்பவனே மேல்.. சீமானே மேல்.... சீமான் இடத்தில் யார் இருந்து செய்தாலும் அவர்களூம் மேல்.... இதற்க்கு பின்னும் இன துரோகிகள் திருந்தவில்லையென்றால் யாருடைய காலையோ நக்கி பிழைக்கிறார்கள் ஜெகத்கஸ்பர் நக்கீரன் போல்
தேவா
தோணிகளிலும் படகுகளிலும் இலங்கையைவிட்டு ஏதிலிகள் ஓடிவந்தகாலம். இந்தியக்கரையை உயிருடன் மிதித்தால் அகதிகள் முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டார்கள். முகாம்கள் பொலிஸ்,வி.ஓக்களின் அதிகாரத்தின் கீழ். பொலிஸ் குடித்துவிட்டும் குடிக்காமலும் நினைத்தநேரம் எல்லாம் அகதிகளை அடிப்பார்களாம். அடி என்றால் இலங்கை இராணுவம் பொலிஸ் எல்லாம் பிச்சை வாங்கவேண்டும் என்று அன்று அடி வாங்கி இன்று வெளிநாட்டில் இருப்பவர்கள் சொல்லுகிறார்கள். உயிரைத்தவிர இழக்க எதுவுமின்றி வந்த தமிழ் பெண்களிற்கு உடல் இருக்கிறதே. இந்த முகாம்களில் எல்லாம் இப்பெண்கள் வி.ஓ க்களினதும் பொலிஸ்களினதும் பாலியல் இச்சைக்கு இணங்கவேண்டிய கட்டாயம் இருந்ததே. எத்தனைப்பெண்கள் இந்த வன்கொடுமைக்கு ஆளானார்கள் என்றெல்லாம் அன்றிலிருந்து இன்றுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. வேட்டைக்காரன் பலம் பொருந்தியவன் இரை என்னதான் செய்யமுடியும். தமிழ் இன உணர்வாளர்களே அகதி அபலைகளுக்கு நேர்ந்த இந்தக்கொடுமைகள் ஏன் இன்றுவரை பேசாப்பொருளாகவே இருக்கிறது?
இளங்கோவன்
இந்தக் கட்டுரையின் சரி தவறுகளை விட்டுவிட்டு
தமிழனின் இன்றைய அடிமைத்தனங்களிலிருந்து அவன் விடுதலை பெற இந்தப்பார்வை உதவுமா எனும் கேள்விக்கான பதில்களைத் தேடத்தொடங்குவோம்.
இனவெறுப்பில் மையம் கொள்ளும் எந்தத்தேசியமும் அடித்தட்டு மக்களுக்கு பயனில்லா அரசியல் என்பதோடு அதற்கு எதிரான அரசியல் என்பதைப் புரிந்து கொள்வோம்.
முல்லைப்பெரியாறு போன்ற பிரச்சனைகளில் எளிய மலையாள மக்களிடம் தமிழர்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட தப்பெண்ணங்களை களைவதுதான் தமிழ்தேசியர்களின் கடமை. ஜெயராம் வீட்டில் வீரம்காட்டுவதல்ல. இந்திய எதிர்ப்பே தமிழ்த்தேசியத்தின் அடிநாதமாக இருக்கவேண்டும். இனவெறுப்பல்ல.
கூடுகட்ட வக்கற்ற குயில் காகத்தின் கூட்டிலே இனம் வளர்ப்பதுபோல் தமிழ்த்தேசத்தின் சிக்கல்களிலிருந்து நம் விடுதலைக்கு உரம் பெறுவதை விடுத்து அண்டைத் தேசங்களின்மீதான வெறுப்பிலிருந்து உருவாகும் தமிழ்த்தேச உணர்வு வெறும் நீர்க்குமிழிதான் என்பதற்கு மீண்டும் மீண்டும் வரலாற்றில் எடுத்துக்காட்டாகி அழியவேண்டாம்.
லிங்குசாமியின் சண்டைக்கோழி சாதி அரசியலைவிட ஜெயராமின் தமிழின வெறுப்பு தமிழர்களுக்கு அதிகம் ஆபத்தானதல்ல.
pinami
//அரசு அதிகாரங்களில், மத்திய அரசின் முடிவெடுக்கும் பதவிகளில் இன்று மலையாளிகளின் கரமே ஒங்கி இருக்கிறது. //

ஏன் தமிழன் அந்Tஹ பதவிகளில் அமரவில்லை.
நீ தமிழனை கல் அடிக்கவும் கபாலம் உடைக்கவும் அல்லவா தூண்டிவிட்டாய். அவர்களுக்கு கல்வியையும் தேவையான ஊக்கத்தையும் கொடுத்து படிக்க வைத்திருந்Tஹால் அவன் ஏன் வேலை வட்டி இல்லாமல் கல் அடித்துக்கொண்டிருக்க போகிறான்.

மலயாளி ஏ.சி அறைகளில் அமர்ந்து தமிழர்களுக்கு எதிராக தீர்மானம் போடுகிறார்களாம்.

புறம்போக்கு தமிழன் கல் அடித்து சிறையில் கக்கூஸ் கழுவிக்கொண்Dஇருக்கிறான். அதை புரட்சி என்று நீ சொல்கிறாய்.

தமிழர்களே பதவிகளை நாம் அடைவது கல்லடித்து அல்ல. யு.பி.எஸ்.சி எக்ஸாம் எழுதி.
durai ilamurugu
அய்யா இப்போ சீமான் விட்டிருக்கிற் அரிக்கைக்கு என்ன பொருள்? மன்னிப்பா/ சமதனாமா? உளமற செய்யவில்லை என்பத்ர்கு என்னபொருள்.
தமிழ் தேசியர்களின் ஆண்மை வ் இதுதானா? அதற்குள் Cஇமானை தியகி ஆக்கிவிட்டு இப்பொது தலைக்குனிவு தெவையா?
தமயந்தி கிருஷ்ணன்
மணி.செந்தில், உங்கள் கட்டுரையை விரும்பிப் படித்தேன். அங்குலி மாலா போன்ற தமிழ், தமிழர் எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும், அவர்களை இயக்கும், பிற்போக்கு வாதத்தை நன்கே வெளிச்சம் போட்டு காட்டினீர்.

அதே வேளையில், தமிழ் தேசியமானது மாற்றானை வெறுக்கும் ஒரு கோட்பாடாக உருவெடுக்காது இருத்தல் அவசியம். நம்மை நாம் வலுப்படுத்திக் கொள்ளல் வேண்டும். நமது சமூகச் சூழலில் ஊடுருவிக் கிடக்கும் சிக்கல்களை -- இதனை அங்குலி மாலா போன்ற தமிழர் எதிராளிகள் சுட்டிக்காட்டினாலும் -- களைய நாம் ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடல் வேண்டும்; நமது உறவுகளையும் தோழர்களையும் அவை நோக்கி ஊக்கப்படுத்தல் வேண்டும்.

அங்குலி மாலா முன்வைத்த ஒரு குற்றச்சாட்டு நினைவுக்கு வருகிறது. ஜெயராம் போன்ற ஒண்டவந்த ஜந்துக்கள் நமதின பெண்களைக் கேவலமாகப் பேசுவதற்கு நமது திரைப்படங்கள் மிகப்பெரிய பங்கை ஆற்றியுள்ளன. மேலே சிலர் குறிப்பிட்டது போல, எத்தனை தமிழ்ப்படங்களில் தமிழச்சிகளுக்கு -- அதுவும் கறுத்த தமிழச்சிகளுக்கு -- நாயகியாக நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது? அவள் சேரிப் பெண்ணாக இருந்தால் கூட அயல் மாநில இறக்குமதியாகத்தான் இருப்பாள். இதற்கு தமிழ் தேசியம் பேசும் சீமானோ, தங்கரோ, அமீரோ, சேரனோ விதிவிலக்கல்ல. ஏன்?

இந்நிலை மாறும் நிலை வேண்டும். அது இன்றே வேண்டும்.

உங்கள் காட்டத்தை அப்பக்கமும் காட்டுங்கள், தோழரே!
Manoharan
This is a right time to get awareness for tamils.
Jayaram hatred speech about tamils.(Jayaram living in tamilnadu.).
Bihar students beating tamils in chennai.
Tamil student beated by andhra students in Hyderabad.
Malayalist conquer Koodalur with the support of CPM.

Tamils be aware.
தியாகு
ஜெயராம்தான் இலங்கையில் தமிழர்களை
கொல்ல ஆயுதம் கொடுத்தார்னு கூட சொல்லுவாரோ
abdullah
தமிழர்கலுக்கு இன உனைர்வு,மொழி உனைர்வு, யெல்லம் செத்துவிட்டது. கட்சி விசுவாசம் மட்டுமெ உன்டு. ஒருவேலை மலையாலிகலின் மூத்திரத்தை குடித்தால் புத்தி வரலாம்.
tvs
வேலைப் பெண்ணை இழிவு படுத்துவது உலகெங்கும் இருக்கிறது. இதில் தமிழ், சிங்களம் என்பதெல்லாம கிடையாது.
சிங்களத்துக்கும் தமிக்கும் இருக்கும விவகாரம் வேறு. உலகம் முழுதும பெண்கள் அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள்.
இதைத் தடுக்க வேண்டும் .
தமிழன்
இன்னும் எவ்வளவு நாள் இப்படி தமிழ்ப் பெருமை பேசியே அழியப் போறீங்க. எவனோ எதுவோ உளர்றதுக்கெல்லாம் முக்கியத்துவம் குடுத்து ஆரிய வண்ணம் அடிச்சு என்ன பலன் கண்டீங்க... போய் முன்னேற வழியப் பாருங்க

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.