kolathoor mani 283பெரியார் ஆரியரை, பார்ப்பனரைப் பிரித்துப் பார்த்தது கூட, அவரே கூறியுள்ளதைப் போன்று இரத்தப் பரிசோதனை செய்தல்ல; அவர்களின் ஆச்சார, அனுஷ்டானங்களை, பழக்க வழக்கங்களை கொண்டுதான் பெரியார்கூறியுள்ளார்.

“நாங்கள் மக்களை ஒன்று சேர்க்க வந்தவர்களே தவிர, பிரிக்க வந்தவர்கள் அல்ல. நாளை பார்ப்பானே எங்களோடு சேரவந்தால் கூட உனக்கு மட்டும் பூணூல் எதற்காக என்று கேட்போம். அதை அகற்றிவிட்டால் நமக்கென்ன தடை? அதற்கப்புறம் கேட்போம், உனக்கு தமிழ் உயர்ந்ததா? சமஸ்கிருதம் உயர்ந்ததா? என்று. கீதை உயர்ந்ததா? குறள் உயர்ந்ததா? ..... வேதம் உயர்ந்ததா? என்று கேட்போம். தமிழ்தான் உயர்ந்தது, குறள்தான் உயர்ந்தது என்போரை அரவணைத்துக் கொள்வதில் எங்களுக்கென்ன பிரச்சனை?”....

இதுதான் பெரியாரின், பெரியார் இயக்கத்தின் நிலைப்பாடு. ஆனால், ‘நாம் தமிழர் கட்சி’யோ “தமிழ் உயர்ந்தது, குறள் உயர்ந்தது” என்போரைப் பிற மொழியாளர் என்று கூறி விலக்கி வைக்கிறது; அதேவேளை “சமஸ்கிருதம் உயர்ந்தது, வேதமும் கீதையுமே சிறந்தவை” என்போரைத் தமிழ் பேசுகிறார்கள் எனக் கூறி ஆரத்தழுவி அரவணைக்கிறது.

மற்றொருபுறம், ஆதிக்கத் திமிரோடு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்படுகிற தாக்குதல்கள் குறித்துக் கள்ளமவுனம் சாதிக்கிறது. அதிலும்கூட தாக்கப்படுபவர், தாக்குகிறவர் ஆகியோர் பேசுகிற மொழி குறித்த ஆராய்ச்சியில் இருந்துவிடுவார்களோ என்னவோ? சுரண்டப்படுபவர், ஒடுக்கப்படுகிறவர் பக்கம் நிற்காத, தமிழை, குறளை ஏற்காதவர் பக்கம் நிற்கிற, ஒரு கட்சியை, - சமத்துவத்தை, சகோதரத்துவத்தை விரும்புகிற ‘தமிழர்கள்’ எப்படி ஆதரிக்க முடியும்? இதுதான் எமது சுருக்கமான பதில். விரித்தால் பெருகும்.

Comments

1 comment

1
பா. மொா்தெகாய்
விாித்திருக்க வேண்டும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.