கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: புவி அறிவியல்
பெயர் நாடு பரப்பளவு (ச.கி.மீ)
காஸ்பியன் கடல் ஆசியா-ஐரோப்பா 3,71,000
சுப்பீரியர் வட அமெரிக்கா 82,100
விக்டோரியா ஆப்பிரிக்கா 69,500
ஹுரோன் வட அமெரிக்கா 59,600
மிச்சிகன் வட அமெரிக்கா 57,800
டங்கனிகா ஆப்பிரிக்கா 32,900
பெய்கல் ஆசியா 31,500
கிரேட் பீர் வட அமெரிக்கா 31,300
அரல் கடல் ஆசியா 30,700
மலாவி ஆப்பிரிக்கா 28,900
கிரேட் சால்வி கனடா 28,568
எரி வட அமெரிக்கா 25,667
வின்னிபெக் கனடா 24,387
ஒன்டாரியா வட அமெரிக்கா 19,529
பால்கஷ் கஸாக்ஸ்தான் 18,300
லடோகா ருஷ்யா 17,703
சாட் ஆப்பிரிக்கா 16,317
மராகைபோ வெனிசுலா 13,512
ஒனேகா ருஷ்யா 9,609
எரே ஆஸ்திரேலியா 9,324
நிகராகுவா நிகராகுவா 8,485
டிடிகாகா பெரு-பொலிவியா 8,303
அதபாஸ்கா கனடா 7,936
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: புவி அறிவியல்
பெயர் நாடு உயரம் (மீ)
ஏஞ்சல் வெனிசுவே லா 807
மோன்கிஃபோசன் நார்வே 774
குகேனம் வெனிசுலா 610
உதிகார்ட் நார்வே 600
ரிப்பன் அமெரிக்கா 491
கிங் ஜார்ஜ் VI கயானா 487
ரோரைமா கயானா 457
அப்பர் யோசிமிட் அமெரிக்கா 435
கொலம்போ தான்சானியா/சாம்பியா 426
காவர்னீ பிரான்ஸ் 421
துகேலா தென்னாப்பிரிக்கா 410
தகக்காவ் கனடா 365
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: புவி அறிவியல்
மலர்கள் மலர்வதும், அதன் பின் பிஞ்சாகி, காயாகி, கனியாகி, விதையாகி, மீண்டும் விதை முளைப்பதும் நமக்குத் தெரியும். ஆனால், ஆண் செடி/மரத்தின் மகரந்தமும் (ஆண் பூவிலுள்ள மகரந்தப் பொடி) , பெண் செடி/மரத்தின் சூலகமும் (பெண் பூவின் நடுவிலுள்ள குச்சி போன்றது) வேறு வேறு இடத்தில் இருக்கின்றன. அவை காற்று, பூச்சிகள், தேனீ மற்றும் பிற விலங்குகள் மூலம், தன் இனத்தை பெருக்குவதற்காக மகரந்த சேர்க்கை செய்து, காய் கனி உருவாகிறது. சில சமயம், ஒரே பூவில்கூட, மகரந்தமும், சூலகமும் இருக்கும். இதன் பின்னணியிலுள்ள அறிவியலை, தொடர் ஆராய்ச்சி நடத்தி கண்டறிந்துள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாக, போர்ச்சுகலின் ஒரு நிபுணர் குழு மகரந்தத் தாள்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது யார் என்ற தேடலில் ஈடு பட்டிருந்தது. மகரந்தத் தண்டு வளர்வதை நிர்ணயிப்பது நீரில் உள்ள புரோட்டான் அயனி களா, கால்சியம் அயனிகளா என தவித்துப் போயிருந்தனர். எது அதன் செயல்பாட்டு மூலக் கூறு கால்வாய் என்றும், அதன் ஆட்டம், செயல் பாடு போன்றவை எது என் அறுதியிட்டுச் சொல்ல முடியாததிலும், குழப்பமான சூழல் இருந்தது. ஆனால் போர்ச்சுகலின் லிஸ்பான் பல்கலையின் சர்வதேச ஆராய்ச்சிக் குழு இதனைப் பற்றி ஜோஸ் பெயஜோ (José Feijó) என்பவரின் தலைமையில் ஆராய்ந்தது. முடிவில் இது மகரந்தத் தாள்களின் வளர்ச்சிக்கு கால்சியம்தான் காரணம் என அறிந்தனர். இவை "குளூட்டமேட் வாங்கிகள்" என்ற வேதிப் பொருள் வாயிலாக தூண்டப்பட்டு, அரிதான அமினோ அமிலம் "D சீரின்" என்பதன் மூலமாக உள்ளே நுழைகின்றன என்பது தெரிய வருகிறது.
"குளூட்டமேட் வாங்கிகள்" மற்றும் அமினோ அமிலம் "D சீரின்" என்ற இரண்டு வேதிப் பொருட்களும்தான், விலங்குகளின் மைய நரம்பு மண்டலத்தில் பல்வேறு அளவில், இரு செல்களுக்கான தொடர்புகளை உருவாக்க, மூலக்கூறு அளவில் செயல்படுகின்றன. அது மட்டுமல்ல.. இவையே, மூளையின் கற்றல் திறன், நினைவகம், பல வகையான நரம்பியல் சம்பந்தமான நோய்களான Multiple sclerosi, Alzheimer, Huntington's disease போன்றவைகளிலும் தொடர்பு உள்ளவை. அதே குளூட்டமேட் வாங்கிகளும், D சீரினும்தான், தாவரங்களின் இனப்பெருக்கத்துக்கும் உதவுகின்றன என்ற ஆச்சரியமான தகவலை போர்ச்சுகலின் ஆய்வகக் குழு கண்டுபிடித்துள்ளது. இதனால் கடந்த 20 ஆண்டு காலமாக, தாவரவியலில் தேடிக் கொண்டிருந்த இரண்டு புதிர்களுக்கான விடையும் அறியப்பட்டுள்ளது.
அதுதான், செல்லின் வெளிச் சவ்வில்,கால்சியம் கால்வாய்களின் மூலக்கூறு பணி என்ன என்பதும், தாவரங்களில் குளூட்டமேட் வாங்கி மரபணுக்களின் வேலை என்ன என்பதும்தான். இதன் மூலம் மாதிரி தாவரமான Arabidopsisசின் முதல் மரபணு பட்டியலும் அமைக்கப்பட்டுள்ளது.
நகராத தாவரத்தின் இனப்பெருக்கம் கொஞ்சம் சிக்கலானது. இதன் மகரந்தத் துகள்கள்தான், ஆண் விந்தணுக்களுக்கு சமமானவை. இவற்றை, பெண் உறுப்பான சூலக முடிக்குக் கொண்டு சென்றால்தான், மகரந்த சேர்க்கை நடந்து, இனப்பெருக்கம் நடைபெற முடியும். இப்போதைய கண்டுபிடிப்பின் மூலம், குளூட்டமேட் வாங்கிகள் சரியாக செயல்படாவிட்டால், மகரந்தத் துகள்களின் பகுதி மலடுக்கு காரணமாகிவிடும் என்பதும் அறியப்பட்டுள்ளது. மேலும் D சீரின்தான், குளூட்டமேட் வாங்கிகளை தூண்டி கால்சியம் அயனி கால்வாயை மகரந்தத் தாள்களின் மேல் ஓட வைக்கிறது. த சீரின் சரியாக செயல்படவில்லை என்றால், மகரந்தத் தாள் உருவாக்கத்தில் குறைபாடு உண்டாகும்.
இந்தக் கண்டுபிடிப்பின் மூலமாக நமக்கு ஒரு உண்மை புரிய வந்துள்ளது. தாவர, விலங்குகளின் வளர்ச்சியில் மரபணுக்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் பணி புரிகின்றன. அதைவிட இன்றியைமையாத, பரிணாமத்தின் சாவியும் கிடைத்துள்ளது எனலாம்.
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: புவி அறிவியல்
அரோரா என்பது வடதுருவமான ஆர்க்டிக் மற்றும் தென்துருவ அண்டார்க்டிக் பகுதிகளில் ஏற்படும் இயற்கை ஒளியாகும். அரோரா என்பது ரோமனியர்களின் விடிகாலை பெண் கடவுளின் பெயராகும். கிரேக்கத்தில் போரியஸ் (Boreas) என்பது வடக்கு காற்று என்று பொருளாகும். இரண்டையும் இணைத்து வடதுருவத்தில் தெரியும் அசையும் வண்ண ஒளிக்கு பெயர் சூட்டி யுள்ளனர். இது புவியின் 60 டிகிரி அட்சரேகைக்கு மேலும், வானின் வளிமண்டலத் தில் மிக உயரத்தில் 80 கி.மி உயரத்துக்கு மேல் உள்ள வெப்பகோளத்தில் அழகான வண்ணத் திரையாக காட்சி அளிக்கிறது. புவியின் காந்தப் பரப்பி லிருந்து புறப்பட்ட மின்னூட்டம் பெறப்பட்ட துகள்களான ஆக்சிஜன் மற்றும் நைட்டிரஜன் அயனிகள், சூரியக் காற்றுடன் மோதும்போது வானில் வண்ணங்கள் தொடர்ந்து உண்டாகின்றன. இது பார்ப்பதற்கு வண்ணத் திரைகளைத் தொங்கவிட்டது போலிருக்கும். அவை அசையவும் செய்யும். இந்த வண்ண ஒளிப்பரப்பு பகலிலும் கூட நடக்கிறது. இரவில் இந்த ஒளியில் அமர்ந்து புத்தகம்/நாளிதழ் கூட படிக்கலாம்.
ஆர்க்டிக்கில் தெரியும் வண்ணத் திரைக்கு அரோரா போரியாலிஸ் (Aurora borealis) என்றும், அண்டார்க்டிக்கில் தோன்றும் வானின் வண்ண ஒளி ஆட்டத்திற்கு, அரோரா ஆஸ்த்திரேலிஸ் (Aurora australis) என்றும் பெயர். இந்த ஒளிகள் பெரும்பாலும் அழகான பச்சை, வயலெட், சிவப்பு வண்ணத்தில் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் காட்சி அளிக்கும். ஆக்சிஜனின் மின் னூட்டம் பெற்ற துகள் இருந்தால் அது பச்சை/பழுப்பு கலந்த சிவப்பாகவும், நைட்டிரஜன் துகள் எனில் நீளம்/ சிவப்பாக காட்சி தரும். அப்பகுதி மக்களால் இந்த ஒளிகள், கடவுளின் சமிக்ஞைகள் என்று நம்பப்படுகின்றன. அவற்றின் நிறங்கள் கணத்தில் மறைந்து மாறி அற்புதமாய் தெரியும். இந்த அற்புதத்தைக் காண கனடாவின் கடற்கரைக்கு மக்கள் பயணம் வருகின்றனர். இந்த அரோரா தெற்கே அன்டார்க்டிக்கா, தென் அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவிலும் தெரியும்.
- தென்கோடி உலகம் - அண்டார்க்டிகா
- துருவ உலகின் சொந்தக்காரர்கள்!
- துருவப் பகுதியில் 24 மணி நேர இரவும், 24 மணி நேர பகலும்
- அழிந்து.. அழிந்து... மீண்டு வரும் பூமி
- பழுப்பு நிறக்கண்கள் உண்டாவதேன்?
- மூலக்கூறும் மின்னணுக்களும்
- நுண்ணுயிரிகளை முதலாவதாகக் கண்டறிந்தவர் யார்?
- மூளை - நம்பிக்கைகளின் மூலம்
- எரடோஸ்தனிஸ்... உலகின் முதல் புவியியலாளர்
- ஓசோன் மண்டலப் பாதுகாப்பு - அவசியமும் வழிமுறைகளும்
- வன்னிப்பிரதேச குடித்தொகை வளர்ச்சியும் குடித்தொகைப் பண்புகளும். 1871 - 1981
- வானிலையும் ஒரு ஆயுதமாகும் அபாயம்
- வளங்களின் வரையறை, வகைப்பாடு, வள அபிவிருத்தி என்பதன் பொருள் மற்றும் தமிழர் நிலத்தின் வளங்களும் பயன்பாடும்.
- சூழல்பேண் புதுப்பொருளாதார ஒழுங்கும் இயற்கை வேளாண்மையும்.
- இலங்கையின் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் - விவசாயத் தொழிற்றுறைக்கான விரிவாக்கம்
- இலங்கைத் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் - விவசாய அபிவிருத்தியும் நீர்வளப் பயன்பாடும்
- இலங்கையின் தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் மாற்றுச் சக்தி வளங்கள்
- வானம் ஏன் நீல நிறத்தில் தோற்றமளிக்கின்றது?
- மார்கழி மாதம் ஓசோன் ரகசியம் - உங்களுக்குத் தெரியுமா?
- நிலாவினால் பூமியில் நிலநடுக்கம்